Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

பஞ்சமியில் விசாலாட்சி – 2 (2)

பஞ்சமியில் விசாலாட்சி 2(2)

“ஏனுங்க மாமா, ஊருல இருக்கற உன்ற அக்கா எப்ப வருவாளுங்க, எனக்குத்தேன் கூட பொறந்த அண்ணன் இல்லை ன்னு, உன்ற அக்காக்காரிகள விஷேசத்துக்கு அழைச்சா இன்னும் யாரும் வந்தப்பாடில்லை, அவளுங்க வந்தா உன்ற சின்னஅக்காக்கிட்ட நம்ம அபிக்கு அவங்க பையனை கேட்கலாம் ன்னு இருக்கேன் மாமா,நீ என்ன சொல்லுதிய? “என்று கணவரை பார்த்தார் செல்லாயி.

“மொதல்ல விஷேசம் நல்லப்படியா முடியட்டும்டி பொறவு கல்யாணம் பத்தி பேசிப்போம், இப்போ என்ன வயசாகிடுச்சு நடுவளுக்கு, பொறுமையா பார்ப்போம், அந்த பய செந்திலு வேற எப்படி பட்டவன் ன்னு தெரில, விசாரிச்சு பொறுமையா பேசிப்புடுவோம் என்ன நான் சொல்றது சரியா, அதுக்கு முன்னமே என் அக்காக்காரி கிட்ட இதை பத்தி மூச்சிவுட்டுப்புடாத, பொறவு அது சொத்து சொத்து சொத்து ன்னு அலையும் “என்று கணவன் கூறியதும் சரியென பட்டது செல்லாயிக்கு.

“சரிங்க மாமா நீங்க சொல்லுறது சரித்தேனுங்க, பொழுது விடிஞ்சி எம்மா நாழி ஆகுது, இன்னும் தூங்குறா பாருங்க நடுவளு, விதுன் கூட எப்போவே எழுந்து காணிக்கு கிளம்பிட்டான், காலையில வெள்ளனமே எழுந்து வாசலை சாணி தெளிச்சு பெருக்கி கூட்டி கோலம் போட்டா என்னவாம்லே அவளுக்கு, எப்போ பாரு தூக்கம், இப்படி தூங்கி தூங்கியே உடம்பு பூசினிக்காய் கணக்கா வளந்து கிடக்கா, “என்று அவர்களின் நடுமகள் அபிராமியை கரிச்சி கொட்டும் வேளையில் அவரின் முன் வந்து நின்றாள், இரண்டு கைகளை இடுப்பில் வைத்தப்படி தாயை முறைத்து கொண்டு.



Advertisement

மகள் தான் பேசியதை கேட்டு விட்டாளோ, என்று நினைத்து,”அது வந்து அபி மணி ஆகுதுல விஷேசம் நடக்கவோணமா, அதான் இன்னக்கி ஒரு நாளு மட்டும் வெரசா எழுந்தா என்னவாம் ன்னு தான் சொன்னேன் “, என்ற தாயை பார்த்து வாயை முறுக்கி கொண்டு,

“இதோ பாரு ஆத்தா நான் நேத்து இராவுல உறக்க  போவ போது உங்கிட்ட என்ன சொல்லிட்டு போனேன், என்னைய விடியறதுக்கு முன்னமே எழுப்பிவுடு ன்னு தானே உங்கிட்ட ஒரு பத்து தடவையாவது சொல்லிட்டு போனேன், பொறவு நான் வெரசா எழுந்து வரல ன்னு என்னைய என்னாதுக்கு குத்தம் சொல்றியாலே “என்று தாயை கடித்து கொண்டாள் அபிராமி.

“இந்தா டி, நீயே எழுந்து வர மாட்டியா, உன்னைய தூங்கு தூங்கு ன்னு சொல்றதுக்கு ஒரு ஆளு, எழும்பத்துக்கு ஒரு ஆளா, கல்யாணம் வயசுல நின்னுட்டு இருக்கறவளுக்கு ஒவ்வொரு வேலைக்கும் ஒரு ஆளு இருக்கணுமா, போ டி தூங்கி எழுந்தம்மா நேர பல்லை விளக்கி குடிச்சிட்டு வரணும்ன்னு எத்தனை வாட்டி உங்கிட்ட சொல்றது நானு, உன் அக்கா பாருவ பாரு, சமத்து அவ என் சொல்ற பேச்சை கேட்டு எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்வா, இப்போ தான் அவளுக்கு வேற வீட்டுல பொறுப்பு கூடி போச்சி, “என்று தனது ஆதாங்கத்தை கொட்டி தீர்ந்தார்.

Advertisement

“ப்ச் அப்பாயி என்ன தான் சொல்லுது உன்ற பொஞ்சாதி, ஆனா ஊனா என்னையே குத்தம் சொல்லிட்டு இருக்கு “என்று பெத்த தகப்பணை பார்த்து கேட்க அவரின் மனைவியோ “இந்தா டி வாயி ரெண்டு அப்புவேன் அப்பு, என்ன பெரியவங்க கிட்ட மருவாத இல்லாம பேசறியலே, உன் வாலு தனத்தை காட்ட இங்க நேரமில்லை, “என்று கூறும் போது “அம்மாயி, எனக்கு பசி எடுக்குது செத்த இங்க வாயேன் “என்று உள்ளே இருந்து குரல் கொடுத்தாள் விசாலாட்சி.

Advertisement

மகளின் குரலை கேட்டு “இதோ வந்துட்டேன் சாலா, கொஞ்சம் பொறு இதோ முட்டையில நல்லெண்ணெய் கலக்கி கொண்டாரேன் “என்றதும், “அம்மாயி எனக்கு அது வேணாம், வாந்தி எடுத்துப்புடுவேன், நீ முன்னாடி கொடுத்தத்தை நான் குடிக்கவே இல்லை, இத்துண்டு கீழ ஊத்திட்டேன் தெரியுமா உனக்கு “என்று கூறிய மகளை முறைத்து பார்த்தார் செல்லாயி.

“அடியேய் போசகெட்டவளே, அது உடம்புக்கு நல்லது டி, நீ இப்படி பண்றது எனக்கு சுத்தமா புடிக்கல, முட்டையை அவுச்சி கொடுத்தா மட்டும் நல்லா தின்னுற, அதை பச்சையா கண்ணை மூடிகிட்டு கடகடன்னு குடிக்க தெரியாதா உனக்கு “என்று மகளை சாட்டினார் செல்லாயி.

“போ அம்மாயி,  எனக்கு அதெல்லாம் வேணாம், சாப்பிட சாப்பாடு வேணும், நீ இப்போல்லாம் கொஞ்சமா தான் சத்தம் போடுற, வர வர பசிவேற அதிகமா எடுக்குது,”என்றவளை பார்த்து “இந்தா டி ஒரு மூணுமணிநாழி பொறுத்துக்கோ டி, பொறவு சோறு திண்ணலாம் “என்று கூறி அவளுக்கு சிறிது சாம்பார் சாதம்  கொடுத்து விட்டு வெளிய வந்தார்.

Advertisement

சூரியன் புவிக்கு வந்து வெகுன்னேரம் ஆகிவிட்டது, வீட்டின் வெளியே பந்தலில் வந்த உறவினர்கள் அனைவரும் அமர்ந்து ஊர் கதை உலக கதை என பேசி கொண்டு இருக்க, வயலுக்கு சென்ற விதுரன் வீட்டுக்கு வந்துவிட்டான்.

இதோ பார்வதியும் வந்து இறங்கினாள் அவளின் பிறந்த இல்லத்திற்கு.

மகளை வரவேற்க வந்த செல்லாயி அவளின் மாமியாரை பார்த்து “வாங்க வாங்க சம்மந்தி,வாங்க மாப்பிள்ளை “என்று வெயெல்லாம் பல்லாக சிரித்த முகத்தோடு வரவேற்றார்.

மாட்டு வண்டியில் இருந்த சீர் தட்டுக்களை பார்த்து செல்லாயியின் முகம் புன்னகையால் மலர்ந்தது.

‘மகள் புகுந்த வீட்டுக்கு சென்றாலும், பிறந்த வீட்டை மறக்கவில்லை, தங்கையின் பூப்பெயற்தல் விழாவிற்கு இதை சீர் தட்டுக்கள், பித்தளை அண்டா, குண்டா, பழங்கள் எல்லாம் வாங்க ஆக மொத்தம் பத்தாயிரம் செலவாயிருக்குமோ ‘ என்ற பலத்த யோசனையின் மாட்டு வண்டியையே பார்த்துக்கொண்டு இருந்தவரை தோளில் இடித்து நகறவைத்தாள் பார்வதி.

“என்ன அம்மாயி, வாயிக்குள்ள பூச்சி போயி காது வழியா வெளியே வருது, உன் வாயை மூடு, என்ற மாமியார் இங்கையே தான் அது முட்டைக்கண்ணை வச்சி பார்த்துட்டு இருக்கு, இந்தா இந்த அண்டாவை தூக்கிட்டு போயி உள்ள வை, ஏலேய் விது, இங்கன வாடே நீ இந்த கட்டப்பை யை தூக்கிட்டு போயி உள்ள வச்சிட்டு வா, ஆமா எங்கே அத்தை யாரையும் காணோம் “என்று பேசிக்கொண்டே மாட்டுவண்டியில் இருந்த சீர் சாமான்களை எடுத்துகொண்டு உள்ளே வந்து வைத்தாள் பார்வதி.

அங்கு ஒரு மூலையில் அமர்ந்து இருக்கும் தங்கையை பார்த்தாள், பார்த்தவளின் விழிகள் சந்தோஷத்தில் மலர்ந்தது..

அவளும் அவளின் பெரிய அக்காவை பார்த்து ஓடி சென்று கட்டிக்கொள்ளலாம் என்று தோன்றியது விசாலாட்சிக்கு.

ஆனால் காலையில் இருந்து குளிக்க கூட விடாமல் இருக்கும் அவளின் தாய் செல்லாயியின் மீது அவளுக்கு கோவம் தான் வந்தது.

“மதனி மதனி, எங்கே இருக்கே, நான் வந்துட்டேன், என் மருமவ எங்கே இருக்கா “என்று கத்திக்கொண்டே உள்ளே வந்தார் கனகம் என்கிற கனகவள்ளி.

“அத்தே நான் இங்கன இருக்கே, ஸ்டார்ரூமுக்கு வாங்கோ “என்று விசாலாட்சி ஒரு குரல் கொடுக்க, அவளின் அத்தையோ ஸ்டோர் ரூமுக்கு சென்று “என்ன டி, உன்ற ஆத்தாக்காரிய காணோம், ஆமா நீயேன் இங்க வந்து உட்கார்ந்துட்டு இருக்குற, வேற ரூமூக்கா பஞ்சம் உன் வூட்டுல, எங்க டி உன் அப்பன் அவரையும் காணோம் “என்று கத்திக்கொண்டே பேசிய அவளின் அத்தை கனகத்தை பார்த்து முகம் சுளித்தாள் பார்வதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!