Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

pon maazhai pozhuthu

பொன் மாலை பொழுது – 28

பல மாதங்களுக்கு பின்

“ஏன்பா? உன்னை நான் எப்போ ஸ்வீட்ஸ் எடுத்துட்டு வரச் சொன்னேன், நீ என்னப்பா இவ்ளோ லேட் ஆக்குற? சரி சரி, சீக்கிரம் வா” போனில் பேசிவிட்டு மதிவதனியை அழைத்தார் சூரியநாராயணன்.

“அம்மாடி, மதி! இந்த கேடரிங் ஆளுங்களுக்கு போன் பண்ணி பாத்தியா? டிபன் எப்பதான் வருமாம்?

“மாமா! போன் பண்ணினேன். அவங்க எடுக்கல. நீங்க டென்ஷன் ஆகாதீங்க. அது பெரிய கம்பெனி தான். கண்டிப்பா கரெக்ட் டைம் வந்துடுவாங்க”



Advertisement

மனோரஞ்சன் அவர்கள் அருகில் வந்து,”என்னப்பா?என்னாச்சு?”

“மனோ! நீ ஏன் இங்க வந்த? வரவங்களை வரவேற்க யாராவது ஒருத்தர் வாசல்ல நிக்கணும் மனோ”

“ரஞ்சன்! நீங்க அந்த கேட்டரிங் ஆளுங்களுக்கு மறுபடியும் போன் பண்ணி விசாரிச்சு பாருங்க. நான் வரவேற்புல போய் நிக்குறேன்”

Advertisement

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அங்கு வந்து நின்ற நிலா, ஊதா நிறத்தில் தங்க சரிகை நெய்யப்பட்டு அங்கங்கே தங்க காசுகள் வைத்து தைக்கப்பட்ட பட்டுபுடவையில் அழகாகத் தெரிந்தாள்.

Advertisement

“பாருடா! என் தங்கச்சி நிலாவா இது?! பெரிய பொண்ணு மாதிரி தெரியுதே?! அப்பா நாம நிலாவுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்க்க வேண்டிய நேரம் வந்துடுச்சுன்னு நினைக்கிறேன்”

“ஆமா மனோ. நான் கூட அதை தான் யோசிச்சிட்டு இருந்தேன். நீயே சொல்லிட்ட!” என்றார் சூரியநாராயணன்.

“அய்யோ! அப்பா. நீங்க எதுக்கு பா கஷ்டப்பட்டுட்டு, அந்த வேலையை என் கிட்ட விட்டுடுங்க. நானே ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கட்டிக்கிறேன்” என்றாள் நிலா.

Advertisement

“அடி போடுவேன்! படவா” என்று செல்லமாக திட்டிவிட்டு அவர் செல்ல, மதிவதனி நிலாவை பார்த்து,” நிலா! இந்த சாரில நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்க!” என்றாள்.

“பின்ன இந்த சாரியை டிசைன் பண்ணினது யாரு? பேமஸ் டிசைனர் மிசஸ். மதிவதனியாச்சே அதான் சூப்பரா இருக்கு” என்றாள் நிலா.

“ஆமா பின்ன, மேடம் இப்போ யாரு? மதி பொடிக் (Botique) ஓனராச்சே. மேடம் வளர்ச்சியை பார்த்தா எனக்கே பொறாமையா இருக்கு!”

“ச்சு! போங்க ரஞ்சன், எப்ப பாரு என்னை ஓட்டிக்கிட்டு. நான் போய் வேலையை பாக்குறேன்”

சிறிது நேரத்தில் மேடையில் ஏறினர் ரிதுநந்தனும், தாமரையும். அவர்கள் பின்னால் முழுக்க முழுக்க பூ அலங்காரத்தால் ரிதுநந்தன் தாமாரை வரவேற்பு விழா என்று எழுதியிருந்தது. ரிதுநந்தனும், தாமரையும் முகம் கொள்ளா சிரிப்புடன் நின்றுக் கொண்டிருந்தனர்.

தாமரை என்ற பெயருக்கேற்றார் போல தாமரை வண்ண பட்டுப்புடவையில், வெள்ளையும் பச்சையும் ஒன்றோடொன்று பின்னி படர்ந்த கொடி போல புடவை முழுவதும் நூல் வேலை செய்து, மின்னும் வெள்ளி கற்களை பதித்திருந்தாள் மதிவதனி. பார்பதற்கு தேவதை போல இருந்தாள் தாமரை.

மதிவதனி அங்குமிங்கும் ஓடி எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்துக் கொண்டிருந்தாள். அவள் மணமகள் அறையை கடக்கும் போது மனோரஞ்சன், அவள் கையை பிடித்து உள்ளே இழுத்து கதவை சாத்தினான்.

நிலா இதை கவனித்துவிட்டாள்.”ஹ்ம்ம்….அண்ணனும் அண்ணியும் ரொமான்ஸ் ஸ்டார்ட் பண்ணிடாங்க! ரித்துவும் தாமரையும் சுத்தி முத்தி என்ன நடக்குதுனே தெரியாம கடலை போட்டுட்டு இருக்காங்க! மறுபடியும் நான் மட்டும் தனியா இருக்கேன். ஹ்ம்ம்”

“தனியே தன்னந் தனியே நான் காத்து காத்து நின்றேன்….” பாடிக்கொண்டே சென்றவள் கீழே கிடந்த தண்ணீரை பார்க்காமல் கால் வைக்க இடறி விழப்போனவளை இரு வலிய கரங்கள் பிடித்தன.

“ஹலோ! பார்த்து போங்க! இந்நேரம் விழுந்துருப்பீங்க” என்று அந்த கரங்களுக்கு சொந்தக்காரனான அந்த அழகான வாலிபன் சொல்லிக்கொண்டிருக்க, நிலாவோ தன் வாழ்நாளிலேயே முதல் முறையாக வாயடைத்து போய் நின்றாள்…….

அங்கே மணமகள் அறைக்குள், மனோரஞ்சனின் பிடிக்குள் திமிறிக் கொண்டிருந்தாள் மதிவதனி.

“விடுங்க, ரஞ்சன். யாராச்சும் வந்துட போறாங்க”

“ஏய்! அம்பாசமுத்திரம் ஏஞ்சலு! இவ்ளோ அழகா டிரஸ் பண்ணி என்னை கொல்றடி!”

“ம்ம்க்கும்….இந்த லவ்ஸ் எல்லாம் அப்புறம் வச்சிக்கலாம். எனக்கு நிறைய வேலை கிடக்கு. என்னை ஆளை விடுங்க”

“அதெல்லாம் விட முடியாது. ஏண்டி பொண்டாட்டி? என்னைக்காவது ஒரு நாள், ஒரு நாள், என்னை பார்த்து ஐ லவ் யூ சொல்லியிருக்கியாடி?”

“நீங்க மட்டும் என்னவாம்? பெரிய ரொமான்ஸ் ஹீரோனு நினைப்பா? சரியான ரோபோ?எனக்காக வாங்குன மோதிரத்தை கூட இன்னும் எனக்கு குடுக்கல”

“அடிபாவி அப்போ நான் உன் பர்த்டே அன்னைக்கு மோதிரம் தான் குடுக்க வந்தேன்னு தெரியுமா? அப்புறம் ஏன் கோவிச்சிட்டு போனியாம்?”

“அது வேற டிபார்ட்மன்ட்! அதை விடுங்க, எங்க அந்த மோதிரம்?”

அவன் சட்டைப்பையில் இருந்து ஒரு மோதிரத்தை எடுத்துக் காட்டினான்.

“அடப்பாவி! சட்டையிலேயே வச்சிகிட்டா சுத்துறீங்க? ஏன் என்கிட்டே குடுக்கல?”

“சரி, மேடம் எப்பவாது என் கிட்ட கேப்பீங்க, அது என்ன கிஃப்டுனு? அப்போ குடுக்கலாம்னு இவ்ளோ நாள் வெயிட் பண்ணிட்டுருந்தேன். கையைக் காட்டு”

அவள் விரல்களில் அவன் மோதிரம் போட, அவள் காதல் பொங்க அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஹ்ம்ம்….உனக்கு இன்னொரு கிஃப்டு வச்சிருக்கேனே!”

“என்ன கிஃப்டு?”

மனோரஞ்சன் அவள் அருகில் மேலும் நெருங்கி வந்து இருகைகளையும் சுவர் மேல் ஊன்றி அவளை சிறைபடுத்தி, அவள் செவ்விதழ் நோக்கி குனிய……..

வெளியே சூரியன் தன் கதிர்களை உள்ளடக்கிக் கொண்டிருந்தது. பறவைகள் தங்கள் கூட்டை நோக்கி பறந்துக் கொண்டிருந்தன.அந்த பறவைகள் எழுப்பிய ஒலியும்,அந்த கல்யாண மண்டபத்திலிருந்து எழுந்த சிரிப்பொலிகளும் ஒன்று சேர்ந்து காற்றில் பரவியது.

இந்த சந்தோஷத்தில் கலந்து கொள்ள வருண பகவானும் ஆசை பட, கருமேகம் மெல்ல தூறல்களை சிந்தியது. இதே மாதிரியான ஒரு பொன் மாலை பொழுதிலே ஆரம்பித்த மதிவதனியின் வாழ்க்கையானது, இனிமேல் சந்தோஷ சாரல்களையே சந்திக்கும்……

முடிவுரை

ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவுக்கு நிசப்தமான அந்த அறையில், படுக்கையின் பக்கத்தில் இருந்த மானிட்டரின் ‘பீப்,பீப்’ சத்தமும், ட்ரிப்ஸ் விழும் சத்தமும், மூச்சு விடும் சத்தமும் மட்டுமே கேட்டது.

கண்களை மூடி ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள் நித்யா. இறுகிய முகத்துடன், கைகளை கட்டிக் கொண்டு அவள் முகத்தை விட்டு பார்வையை அகற்றாது நின்றுக் கொண்டிருந்தான் விநோதன்.

வேகமாக அந்த அறைக்குள் நுழைந்தான் மனோரஞ்சன்.

“வினோ! டேய் மச்சான்” வந்து அவனை கட்டிக்கொண்டு அழுதான். விநோதன் அவன் முதுகில் தட்டி ஆறுதல் உரைத்தான்.

“என்னாச்சு டா? எப்படி இப்படி?”

“அவ்ளோ தாண்டா! இவ்ளோ நாள் இருந்ததே பெருசு! கடைசியா நீ ஒரு தடவை பார்க்கணும்னு தோனுச்சு. அதான்டா வரச் சொன்னேன்.”

“லாஸ்ட் மினிட் பிளைட் எதுவுமே கிடைக்கலைடா! அதான் ஒரு நாள் தள்ளி போச்சு. இந்த ரெண்டு வருஷத்துல ஒரு தடவையாவது என்னை கூப்பிட்டிருக்கலாம்லடா. இப்படி பண்ணிட்டியே!”

“இல்லடா! ஆரம்பத்துலேயே, அவ உன்னை கூப்பிட கூடாதுன்னு தீர்மானமா சொல்லிட்டா”

“இப்போ அவளுக்கு ஞயாபகம் எந்த அளவுக்கு இருக்கு டா?”

“தான் யாரு, தன் பேரு என்னனு தெரியாத அளவுக்கு இருக்கு டா!”

“உன்…உன்ன…உன்னை அவளுக்கு…..?”

“ஓ…..என்னை அவளுக்கு நல்லாவே ஞாபகம் இருக்கே! இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட கண் முழிச்சி பார்த்து…..பார்த்து….என்னை…..’மனோ’ னு கூப்பிட்டுட்டு கண்ண மூடிகிட்டா” அவன் குரல் எந்த மாற்றமும் இல்லாமல் ஒலித்தது.

“வினோ!” மனோரஞ்சனின் குரல் நடுங்கியது.

“இப்போ இல்லடா! கிட்டத்தட்ட ஒரு நாலஞ்சு மாசமாவே அவ என்னை ‘மனோனு’ தான் கூப்பிட்டுட்டு இருக்கா! அவ நினைவடுக்குல இருக்கிற ஒரே ஒரு விஷயம் ‘மனோ’ மட்டும் தான். என்னை அவ ‘மனோவா’ நினைச்சு தான் பழகிட்டு இருக்கா”

தான் உயிராய் நேசித்தவள், தன்னை அழைக்கும்போது, அவள் மனதிலிருக்கும் வேறொருவன் பெயர் சொல்லி அழைப்பது, என்ன மாதிரி கொடுமையான விஷயம்! அதை கேட்கும் ஒவ்வொரு நொடியும் அவன் இதயம் என்ன பாடு பட்டிருக்கும்!

விநோதனின் மனதின் வலி மனோரஞ்சனுக்கு புரிந்து அவன் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. ஆனால் விநோதனது கண்களோ ஒரு துளி நீரைக் கூட சிந்தவில்லை.

“டேய்! உனக்கு கஷ்டமா இல்லையாடா?”

“அவ என்னை விட்டு போனா தானேடா கஷ்டப்படனும்?! அவ எனக்குள்ள இருக்கா! அவ உடல் மட்டும் தான் இங்கிருந்து போகுது, அவளோட……அவளோட…..நினைவுகள்…..இங்க……இங்க……என் கிட்ட தானேடா….இருக்கு…..பின்ன எதுக்கு நான் அழனும்?”

“அவ கிட்ட நான் சொல்லிட்டே இருப்பேன் டா. நமக்கு கிடைச்ச இந்த ஒரு வாழ்க்கையை நாம ரசிச்சு வாழனும். கண்ணை மூடுற கடைசி நிமிஷம் வரைக்கும் நம்ம உதடு சிரிசுக்கிட்டே இருக்கனும்”

“அவளுக்கு என் கிட்ட பிடிச்ச விஷயமே என்னோட விளையாட்டுத்தனம் தான். அப்படி இருக்கிறப்போ நான் அழுதா அவளுக்கு பிடிக்காதுடா. அதனால நான் அழ மாட்டேன்…..நான் அழவே மாட்டேன் டா……”

அவன் ஆழ்ந்த மூச்சுகளை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தம் திருத்தமாய் சொன்னான். விநோதனின் கண்கள் அழாவிட்டாலும், அவன் இதயம் அழுவது மனோரஞ்சனுக்கு புரிந்தது.

மனோரஞ்சனிடம் பேசிக்கொண்டிருந்தாலும், அவன் கண்கள் ஒரு நொடி கூட நித்யாவின் முகத்தை விட்டு அகலவில்லை.அவள் முகத்தை கண்களால் பருகி மனதில் நிறைத்துக் கொண்டிருந்தான் விநோதன்.

பேச்சு சத்தம் கேட்டு மெல்ல கண் விழித்து பார்த்தாள் நித்யா.

அவள் கண்கள் அங்கு நின்றுக் கொண்டிருந்த இருவரையும் ஒரு முறை பார்த்தது. விநோதனை பார்த்துதும் அவள் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. வெகு சிரமப்பட்டு விநோதன், அவன் முகத்தை சிரித்தார் போல வைத்துக் கொண்டான்

ஒரு நிமிடம் அவனை உற்று பார்த்தவள், கண்களை திருப்பி பக்கத்தில் நின்றுக் கொண்டிருந்த மனோரஞ்சனை பார்த்தாள். மனோரஞ்சனால், விநோதனை போல சிரிப்பது போல் நடிக்க முடியவில்லை. அவன் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது.

அவனை பார்த்த அடுத்த நொடி, அவள் கண்கள் விரிந்தது. அவள் முகம் மெல்ல மலர்ந்தது. அவள் கண்களில் ஒரு அதீத ஒளி தெரிந்தது. அவள் உதடுகள் மெல்ல ஒரு புன்னகையை உதிர்த்தது. பின்பு மெல்ல ‘மனோ’ என்று முணுமுணுத்தது.

அடுத்த நிமிடம்……அடுத்த நிமிடம்……அவள் கண்கள் மூடியது……அந்த புன்னகை அவள் உதடுகளிலே உறைந்து நின்றது……அவள் சுவாசம் அவளை விட்டு பிரிந்தது……..அவள் நினைவுகள் ‘மனோவை’ சுமந்து கொண்டு அந்த அறை முழுவதும் வியாபித்தது…….அவள் உயிர் இந்த பிரபஞ்ச காற்றோடு கலந்தது……..

என்ன மாதிரியான காதல் இவர்கள் இருவரது காதல்?! இருவருமே உயிரையே உருக்கிக் காதலாக்கி அதை தாரை வார்கின்றனர், அந்த காதல் ஒருபோதும் திரும்ப வராது என்பது நிச்சயமாக தெரிந்த பின்பும்! அவர்கள் காதலுக்கு வாழ்நாள் என்பதே இல்லாத போது, அந்த காதலை மட்டுமே வாழ்வின் மூச்சாகக் கொண்டு எப்படி வாழ்ந்தார்கள்?!

அந்த அறையில் இருந்த இரு இதயங்கள், கிடைக்க போவதில்லை என்று தெரிந்தும், தேடிக் கொண்டே இருக்கிறது, அன்பை! மறந்தும், அந்த இரு இதயங்களும் நேசிப்பதை நிறுத்தவில்லை, அவள் (நித்யா), அவனையும் (மனோ), அவன் (வினோதன்), அவளையும் (நித்யா)……….

உலகில் மாறாதது மாற்றம் மட்டும் இல்லை, காதலும் தான்………

நட்புடன்

சக்தி பாலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!