Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

மஞ்சள் நிலவே கொஞ்சல் மொழியே – அத்தியாயம்-8

முகத்தை சற்று உர்ரென்று”  வைத்துக் கொண்டு வந்து பைக்கை எடுத்தான் பிரபு!

இருக்காதே பின்னே! எல்லாம் அவன் நேரம்!

“ஓகே” என்று அவன் blouse அளவு எடுக்க, டேப்பை கையில் வாங்கிய போதா, வெளியில் சென்றிருந்த, வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகும் என்று சொல்லப்பட்ட அந்த டைலர் பெண்மணி, எதையோ மறந்து வைத்துவிட்டுப் போன பொருளை எடுக்க என்று பாதி வழியிலேயே, திரும்பி கடைக்குள் நுழைய வேண்டும்!

“இதோ அம்மாவே வந்துட்டாங்க” என்று பிரபுவிடமிருந்து டேப்பை வாங்கி, தன் அம்மாவிடம் கொடுத்து விட்டான் அந்த  இளைஞன்!



Advertisement

அது தான் அய்யாவிற்கு கோபம்!

இதைக் கண்ட அபிக்கோ சிரிப்பு வந்தது. அவள் சிரிப்பதைப் பார்த்து மேலும் காண்டான பிரபு, வேண்டும் என்றே பைக்கை மாற்று வழியில் ஓட்டிச் சென்றான்.

பஜார் லிமிட் வரை மெதுவாக ஓட்டியவன், அதை தாண்டியதும் வேகமாக ஓட்டினான்.

Advertisement

ஏற்கனவே பைக்கில் சென்று அவ்வளவு பழக்கமில்லாத அபி,  அதுவும் இந்த வண்டியில், இந்த ஸ்பீடில் போகும் போது கொஞ்சம் பயந்து விட்டாள். எனவே, அவன் முதுகில் பல்லியை போல ஒட்டிக்கொண்டு போனாள்.

Advertisement

தோளைக் கூட பிடிக்காமல் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த அவளுக்கு இப்படி செல்ல நேர்ந்ததால் கோபம் வந்து, அது அழுகையாக வெளிப்பட்டது!

பை பாஸ் ரோட்டில் பாதி தூரம் போய்க் கொண்டிருந்த போதுதான், பிரபு அவள் அழுவதைக் கண்டான்!

உடனே பைக்கை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு, “ஏய் ஏன் இப்ப அழற?” என்றுக் கேட்டான்.

Advertisement

“இப்படி ஸ்பீடா ஓட்டி நீங்க தான் என்னை இப்படி பயமுறுத்துறீங்க” என்றாள் அபி கோபத்துடன்.

சட்டென தன் தவறை உணர்ந்த பிரபு, அவள் அழுவதை காண சகிக்காமல்,

“சாரி சாரி ப்ளீஸ் என்னை மன்னிச்சுடு , இனி மெதுவா ஓட்டறேன்” என்றான்.

“நான் ஆன்ட்டிகிட்ட சொல்லி ,இது மாதிரி உங்க கூட எல்லாம் பைக்கில் இனி போக மாட்டேன் என்று சொல்லப் போறேன்!” என்றாள் சிறு பிள்ளையை போல!

“ஏய் அப்படி எதுவும் செஞ்சுடாதே! ,நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன், நீ கேட்டத வாங்கி கொடுக்கிறேன். ப்ளீஸ்.. ப்ளீஸ்”  என்று அவசரத்தில் வாக்கு கொடுத்தான் பிரபு!

இதைக் கேட்டு ஒருவாறு சமாதானமான அபி, “அப்படின்னா நான் சொல்றத எல்லாம் கேப்பீங்களா?”

“ம்ம்” என்றான் பிரபுவும்

“இப்ப நாம் ஒரு கடைக்குப் போறோம். நான் கேக்குறது எல்லாம் வாங்கி தரனும். பெரிசா ஒண்ணும் கேட்க மாட்டேன். snacks தான்!” .

“அப்புறம்..  நீங்க இனிமே என்னை அபி மேடம்ன்னுதான் கூப்பிடனும்! என்னை யாருமே அப்படிக் கூப்பிட மாட்டேன்றாங்க. நானும் ப்ரநிக்காவும் ஒரே வருஷம் தானே படிக்கிறோம், நானும் அவளும் எங்காவது  சேர்ந்து சென்றால், அவளை மட்டும் வாங்க மேடம் என்பார்கள், என்னை வாங்க பாப்பா என்பார்கள். நானும் தான்  காலேஜ் படிக்கிறேன்! என்னை மட்டும் இப்படி இன்னும் கூப்பிடறாங்க. அதனால் நீங்க என்னை மேடம்ன்னுதான் கூப்பிடனும்” என்றாள் அபி!

“இது வேறா!” என்று உள்ளுக்குள் சிரித்தவன், “ஓகே அப்படியே கூப்பிடறேன். யாரவது இதை comment பண்ணினால் நான் பொறுப்பல்ல” என்றான்.

வீட்டிற்குள் நுழைந்த அபி, தான் வாங்கி வந்தவற்றை, பிரித்து வீட்டில் இருந்த எல்லோருக்கும் கொடுத்தாள். ப்ரநிதாவுக்கு பிடித்த பக்லவா, விஸ்வநாதன் காஞ்சானவுக்கு மில்லெட் குக்கீஸ், ராணிம்மாவுக்கு இலந்த வடை, விஷ்ணுவுக்கு பெங்காலி ஸ்வீட், அர்ச்சனாவுக்கு நெய் முறுக்கு, விஜய்க்கு கடலைமிட்டாய் காவ்யாவுக்கு கச்சோரி, தனக்கு சாக்லேட் ப்ரௌனி என்று வாங்கி வந்திருந்தாள். கூடவே பிரபுவுக்கு பிடித்த மக்ரூன்!

அதோடு இல்லை ஆறுமுகம் அண்ணாவிற்கு மினி ஜாங்கிரியும் watchman தாத்தாவிற்கு கூட கார்ன் பப்ஸ் வாங்கி வந்திருந்தாள்!

எல்லோருக்கும் எது பிடிக்கும் என்று தெரிந்து வைத்திருந்தாள் அதற்குள்!

எல்லோரும் கொஞ்சம் ஆச்சர்யப்பட்டுக் கொண்டு சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, அபி விஷ்ணுவை பார்த்து கேட்டாள்

“ஏபி அண்ணா, இந்த ப்ளானில் ஒரு விஷயம் add பண்ணிக்கலாமா?”

“என்னம்மா”

“நான் பாட்டிகிட்ட கேட்டேன், திருக்கடையூர் போய்விட்டு வரும் வழியில் அப்படியே திருக்கருகாவூர் போலாமா அர்ச்சனா அக்காவிற்காக” என்று.

பாட்டி சொன்னார்கள், முதலில் கருவளர்சேரி என்ற கோவிலுக்கு தான்  போகணுமாம். அப்புறம் தான் திருக்கருகாவூர் போகணும் என்று.

“நம்ம ப்ளானில் இந்த ஊரை இன்க்லூட் பண்ணிக்கலாம். நான் பாட்டியிடம் கோவில் நம்பர் வாங்கி தர கேட்டிருக்கேன். அவங்க வாட்சப் க்ரூபில் கேட்டு இருக்காங்களாம் வந்தவுடன் பேசி செட்யூல் பண்ணிக்கலாம்” என்றாள் அபி.

‘ஆமாம்மா நான் கூட நம்ம ஆன்மீக குரூப்பில் போஸ்ட்களைப் பார்த்துருக்கேன். முதலில் கரு உண்டாக கருவளர்சேரி, கருவைக் காக்க திருகருகாவூர் , நல்ல படியாக பிரசவம் ஆக நம்ம தாயுமானவர் கோவிலுக்கும் செல்ல வேண்டும்” என்று ராணிம்மாவும் கூறினார்.

“நீங்க என்னம்மா சொல்றீங்க?” என்று தன் அம்மாவைக் கேட்டான் விஷ்ணு.

“அவள் சொல்றதும் சரி தான். ஆனா டைம் ஒத்து வருமா? ஒரே நாளில் ரெண்டு கோவிலுக்கும் போக?” கேட்டார் காஞ்சனா.

உடனே விஸ்வநாதன் தன் பஸ் டிரைவர் ஒருவரை அழைத்து விசாரித்து விட்டு வந்து சொன்னார்.

“முடியும் காஞ்சனா, ஆனா, எங்கேயும் டிபன் காப்பிக்கு

வண்டியை நிறுத்தாம, போனா, போகலாம். நான் நல்லா அந்த பக்கம் ரூட் தெரிந்த டிரைவரோடு ஒரு வண்டி ஏற்பாடு பண்றேன். அதில் விஷ்ணுவும் அர்ச்சனாவும் கல்யாணம் முடிந்தவுடன் முதலில் கிளம்பட்டும். நாம் அவர்கள் பின்னால் செல்வோம்.”

“விஜயும் காவ்யாவும் கூட போங்க அந்த கோவிலுக்கு” என்றார் காஞ்சனா

‘பரவாயில்ல அங்கிள் , நாம் எல்லாரும் ஒரு நாள் தானே breakfast ஸ்கிப் பண்ணிடலாம்”.என்றாள் அபி.

‘அது கூட தேவையில்ல அபி. நான் எல்லாருக்கும் இட்லி மிளகாய் பொடி கட்டி, தனித்தனியா pack பண்ணி எடுத்துட்டு வந்துடுறேன். நாம் எல்லாம் காரிலேயே சாப்பிட்டு விடலாம். ஹோட்டல் சென்று ஆர்டர் பண்ணிக் கொண்டிருந்தால் தான் லேட் ஆகும்” என்றார் ராணி.

அபியும் தன் பாட்டியிடமிருந்து வந்த கோவில் காண்டாக்ட் வைத்து பேசி தகவல் அறிந்து வந்தாள்.

பின் எல்லாம் ஒருவாறாக முடிவு செய்யப்பட்டது.

அவரவருக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்குகளை செய்ய ஆரம்பித்தனர்.

ப்ரனிதா ஒரு இன்விடேசன் டிசைன் செய்தாள்.

அதை அனுப்ப வேண்டியவர்கள் லிஸ்ட் விஸ்வநாதனிடம் கேட்டு அனுப்பினார்கள் விஷ்ணுவும் விஜயும்.

உள்ளூரில் உள்ள முக்கிமான சொந்தக்காரர்கள் மற்றும் தன் ஊழியர்களுக்கு மட்டுமே மாலை நடக்கவிருக்கும் அந்த எழுபதாவது பிறந்தநாள் விழாவுக்கு அழைப்பு அனுப்ப சொன்னார் அவர்.

முக்கிமாக அர்ச்சனாவையும் விஷ்ணுவையும் சங்கட கேள்விகள் கேட்க கூடும் என்று நினைத்தவர்களை அவர் தவிர்த்து விட்டார்.

காஞ்சனா, அர்ச்சனா மற்றும் காவ்யா பேங்க் சென்று லாக்கரில் தேவைப்பட்ட நகைகளை எடுத்து வந்தனர்.

ஆறுமுகத்தின் துணையுடன், ரெண்டு கோவிலுக்கும் தேவையான எல்லாவற்றையும் வாங்கி, பிரித்து வைத்துகொண்டார். உடனே எடுக்க ஈசியாக.

பிரபு, மாலை விருந்திற்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டான் தன் அப்பாவின் துணையுடன்.

விஸ்வநாதன், நல்ல ரூட் தெரிந்த, வேகமாகவும் அதே சமயம் விவேகமாகவும் டிரைவ் பண்ணக் கூடிய அனுபவம் மிக்க டிரைவர் ஒருவரை போட்டு ஒரு கார் ஏற்பாடு செய்தார். தங்கள் காரை ஆறுமுகம் ஓட்டுவார்.

அந்த டிரைவரை அறிமுகப்படுத்தி வைத்தவரோ, “இவர் நீங்க சொன்ன மாதிரி கரெக்டா கொண்டு போய் டயத்துக்கு விட்டுவிடுவார். ஆனா கொஞ்சம் சிடுமூஞ்சி. டக்டக்கென்று கிளம்ப வேண்டும். கொஞ்சம் உங்க வீட்டு லேடீஸ் கிட்ட சொல்லிருங்க. எங்காவாது ஷாப்பிங் என்று கோவில் பக்க கடைகளில் நின்று விடப்போகிறார்கள்”. என்றார்.

“ஓகே” என்று அவரையே புக் செய்தார் விஸ்வநாதன்.

மறுநாள் அதி காலை மூணு மணிக்கெல்லாம் எல்லோரும் எழுந்து குளித்து,, ஏற்கனவே பிரி ப்ளீட் செய்யப் பட்டிருந்த சேலைகளை உடுத்திக்கொண்டு கொஞ்சம் விரைவாகவே கிளம்பி விட்டார்கள்.

பெண்களே கிளம்பி விட்ட பிறகு, ஆண்கள் என்ன லேட் செய்யவா போகிறார்கள். அவர்களும் கிளம்பி விட்டார்கள்.

அண்ணன் தம்பி மூவரும் ஒரே மாதிரி வேஷ்டி சர்ட் அணிந்திருந்தார்கள்!

வேஷ்டி சர்ட்டில் பிரபுவை கொஞ்சம்’ ஆச்சர்யமாக பார்த்தாள் அபி!

பெண்கள் கிளம்பும் போது தான் காஞ்சனா கவனித்தார், அபி வெறுங்கழுத்துடன் இருப்பதை. அவளது செயின் தான் பிரபுவிடம் இருக்கே!

உடனே என்ன அபி உன் செயின் எங்கே என்று கேட்க அபியோ

என்ன சொல்வது என்று தெரியாமல் ஏதோ சொல்ல ஆரம்பிக்குமுன் அவரே,  “சரி இந்த செயின்ஐ போட்டுக்க” என்று அவர் பரம்பரை செயின், அவர் அம்மா அவருக்கு கொடுத்த, கொஞ்சம் ஆண்டிக் டிசைன் கொண்ட  கல் வைத்த மஹாலட்சுமி டாலருடன் கூடிய பெரிய செயின் மற்றும் ஒரு சின்ன நெக்லஸ் ஒன்றையும் போட்டு விட்டார்.

அபி ஏற்கனவே ஒரு பெரிய ஜிமிக்கி கம்மல், வளையல்கள் போட்டுருக்க, அதுவே போதும் என்று விட்டாள்!

தன் கையில் வைத்திருந்த செக் லிஸ்ட்டை வைத்துக் கொண்டு, ஏற்ற வேண்டிய பொருள்களையெல்லாம் செக் செய்து கொண்டிருந்த அபியிடம் வந்தான் பிரபு!

“என்ன அபி மேடம் என்னை ரொம்ப நேரம் சைட் அடிச்சுட்டு இருக்கீங்க போல!” என்று வம்பிழுத்தான்!

“எப்படி இருக்கேன் இந்த வேஷ்டி சட்டையில்?” என்று கேட்டான்

“ம்ம் அங்கிள்ன்னு கூப்பிட பத்து பொருத்தமும் பக்காவா இருக்கு!” என்றாள் குறும்புடன்!

“நீ மட்டும் என்னவாம்? .இந்த சாரி கட்டி, பாப்பாவாக இருந்த நீ இப்ப பீப்பா மாதிரி இருக்க!” என்றான் அவனும் விடாமல்.

“ம்ம் அப்ப எனக்கு சாரி நல்லா இல்லையா? நான் இன்னிக்கு தான் மொதமொதலா சாரி கட்டுறேன்.” அழற மாதிரி கேட்டாள் அபி!

உண்மையில் புடவை நகையெல்லாம் அணிந்து தேவதை மாதிரி தான் இருந்தாள் அபி!  சாரியில் கொஞ்சம் உயரம் போலவும் பெரிய பெண்ணாகவும் கூட தெரிந்தாள்!

பிரபு சும்மா கலாய்ப்பதற்காக அப்படி கூறினான். அவள் மீண்டும் அவனை அங்கிள் என்றதற்காக.

இப்போது அவள் அழற மாதிரி ஆகவும் சட்டென, “சாரி சாரி அழாதே. நான் சும்மா சொன்னேன் நீ சாரியில தேவதை மாதிரி இருக்க!”. என்றான்

“நிஜமாவா? இந்த நகையெல்லாம் ஆண்டி தான் போட்டு விட்டாங்க. எப்படி இருக்கு?” என்று கேட்டாள் அபி.

“ஆண்டி உன் செயின் எங்கன்னு கேட்டப்போ, நான் உங்கள் மாட்டிவிட்டிருக்கணும்! போனா போகுதுன்னு விட்டுட்டேன்” என்றாள் மிதப்பாக!

“..ம்ம் சொல்லேன், நான் ஏணியில் ஏறி கீழே விழப் போனப்ப, இவர் தான் பிடித்துக் கொண்டார். பின் நான் தான் அவரை hug பண்ணி, இந்த செயின அவர் கழுத்தில் போட்டுவிட்டேன் என்று!” என்றான் அவன்

hug எல்லாம் பண்ணவேயில்ல திரும்ப திரும்ப பொய் சொல்றீங்க” என்றாள் அபி.

“சரி hug பண்ணல ஓகே, இந்த செயின் எப்படி என் கைக்கு வந்ததுன்னு சொல்வ?” என்று அவளை மடக்கினான் பிரபு.

“ம்ம்” என சிணுங்கிய படி உள்ளே சென்றாள் அபி. சிரித்துக் கொண்டான் பிரபு!

————–

ப்ளான் பண்ணியபடி திருக்கடையூர் சென்று கோ பூஜை, கஜ பூஜை உள்ளிட்ட அனைத்து பூஜைகளையும் செய்து நல்ல படியாக பீம் ரத சாந்தி எனும் அந்த எழுபதாம் கல்யாணம் நல்ல படியே நடந்தது.

வேம்பு சொன்ன அந்த ப்ரோகிதர் எல்லா ஏற்பாடுகளையும் பக்காவாக செய்து இருந்தார்.

காலையில் நான்கு மணிக்கெல்லாம் கிளம்பி விட்டதால், சரியான டயத்துக்கு வந்து சேர்ந்து விட்டார்கள்.

இடையில் ஒரு இடத்தில் நிறுத்தி கையில் கொண்டு வந்திருந்த இட்லியை வண்டியிலேயே சாப்பிட்டு விட்டு, காபி மட்டும் ஒரு ஹோட்டலில் quick ஆர்டர் செய்து குடித்து விட்டு வந்தார்கள்.

பரமேஸ்வரன் குடும்பத்தினரும் நேராக கோவிலுக்கு வந்து விட, எல்லாம் நல்ல படியாகவே நடந்தேறியது.

அபி அணிந்திருந்த நகைகள் மட்டும் மீனாட்சியின் கண்களுக்கு தப்பவில்லை!

ஏன் என்றால் அது அவள் மாமியார் நகைகள்! காஞ்சனா-பரமேஸ்வரனின் அம்மாவின் நகைகள்! மீனாட்சி கேட்டும் அவர் தர மறுத்து, தன் மகளுக்கு கொடுத்தவை!

அவள் மகன் செந்திலோ அபியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அதைக் கண்ட பிரபுவுக்கு பயங்கர கோபம் வந்தது.!

திருமணம் முடிந்தவுடன்  விஷ்ணு மற்றும் விஜய் தம்பதியினர் முதலில் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு அவசரமாக அங்கிருந்து கருவளர்சேரி கோவிலுக்கு செல்ல காருக்கு விரைந்தனர்.

கூடவே ராணிம்மாவை போக சொன்னார் காஞ்சனா. அவர்களுக்கு பூஜை சாமான்களை கரெக்டா எடுத்துக் கொடுக்கவென்று.

ஆனால் அவர்,  தான் செல்லவில்லையென்று அபியை அனுப்பினார். சுப கார்யம், வளர்ற பொண்ணு கையால், அதுவும் தான் அதிர்ஷ்ட குழந்தை என்று நம்புகிற அபியை அனுப்பி வைத்தார்.

அபியும் வேகமாக அவர்களை நமஸ்கரித்து விட்டு காருக்கு ஓடினாள்.

அந்த செவென் சீட்டர் வண்டியில் பின் இருக்கையில் அவள் அமரப் போக, அங்கே ஏற்கனவே உட்கார்ந்திருந்தான் பிரபு!

விஷ்ணு தான் அவனை தங்களுடன் கூப்பிட்டிருந்தான்.

இவன் பக்கத்தில் எப்படி உட்காருவது என்று யோசித்துக் கொண்டிருக்கையில், சீக்கிரம் உட்கார் பாப்பா, என்று அவளை அவசரப் படுத்தி, உட்கார செய்து, கவிழ்த்து இருந்த நடு சீட்டை நேராக்கி, விஷ்ணு விஜய் தம்பதியினர் உட்கார்ந்தவுடன் வண்டியை வேகமாக கிளப்பினார் அந்த டிரைவர்!

———–

கருவளர்சேரி கோவில்.

கோவில் நடை சார்த்துவதற்குள் போக வேண்டும் என்று சற்று வேகமாகவே ஓட்டினார் அந்த டிரைவர்.

வண்டிக்குள் இருந்த அபியோ “முருகா முருகா, வில்லங்கத்தைப் பக்கத்துல உட்கார வைச்சு இருக்க! எந்த வம்பும் பண்ணாம வரணும்” என்று வேண்டிக் கொண்டாள்!

“என்ன வேண்டுதலா?” என்றான் பார்த்திபன் ஸ்டைலில் பிரபு!

“ஆமா! இல்லன்னா , நான் உங்க மடியில் தூங்கிட்டு வந்தேன் என்று கூட சொல்லுவீங்க” என்றாள் அபி மெல்லிய குரலில்!

“பரவாயில்ல.. நல்லா தான் மாமாவை புரிஞ்சு வச்சிருக்க! ” என்றான் பிரபுவும் குறும்புடன்!

நன்றாக தள்ளி ஜன்னலோரம் அமர்ந்துகொண்டு வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தாள் அபி.

கோவில் வந்து விட்டது.

எல்லோரும் இறங்கினர்.

“நாழியாயிடுத்து தம்பதிகள் மூணு பேரும் சீக்கிரம் வாங்கோ” என்றார் அவர்களுக்காக இந்த பூஜையை முன்னேற்பாடு செய்தவர்!

என்ன மூணு தம்பதிகளா?

கொஞ்சம் அதிர்ச்சியாகி திரும்பி பார்த்தனர் விஷ்ணு விஜய் ஜோடிகள்!

பின்னால் வேஷ்டி சட்டை பட்டுப்புடவையில் பிரபுவையும் அபியையும் பார்க்கும்போது அவர்களுக்கே அவ்வாறு தான் தோன்றியது! ஜோடிப்பொருத்தம் நல்லா இருக்கே என்பதாக!

“இல்லேங்க நாங்க ரெண்டு பேர் தான்” என்றனர் விஷ்ணுவும் அர்ச்சனாவும், விஜய் காவ்யாவையைக் காட்டி.

“சாரிங்க நான் தெரியாம சொல்லிட்டேன். சரி சரி சீக்கிரம் வாங்கோ. உள்ளே நடை சாத்துமுன் போகணும். மற்றவை எல்லாம் நான் ஏற்கனவே சொல்லி ஏற்பாடு செய்து இருக்கேன்”

“என்ன மூணு தம்பதிகளா?” என்ற அந்த கேள்வி அபியை என்னமோ செய்தது! இதெல்லாம் தானாக நடக்குதா இல்ல இந்த பிரபு ஏதும் இப்படி செட்டப் செய்து இருக்கானா எனபது போல் அவனைப் பார்த்தாள் அவள்.

அவனோ “நான் எதுவும் செய்யல. அவங்களா தான் சொல்றாங்க!”. என்றான் சிரிப்புடன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!