Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

மயங்க தெரிந்த மனமே 4

அத்தியாயம் 4

‘தான் ஆடிய நடனத்தை தானே பார்த்து ரசிப்பது ஒரு வகை பிடித்தம். அதுவும் தனக்கு தானே ரசித்து சிலாகிக்கும் வகையிலிருப்பது ஆக சிறந்த போதை.

அப்படி ஒரு போதையில் போனில் கவனமாய் இருந்த லாவன்யாவிற்கு காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்க,

‘ஐய்யய்யோ.. மீனா வந்துட்டா’ மூளைக்குள் அலாரம் வெடித்தது.



Advertisement

போனை ஒரு பக்கமாய் விட்டெறிந்து, சரசரவென புடவையையும், ஏனைய உடைகளையும் அவிழ்த்தெறிந்து, அதை மூட்டையாய் சுருட்டி பீரோவினுள் திணித்து, தன்னையும் ஒரு நைட்டிக்குள் திணித்துவிட்டு, காற்றில் பறந்த கார்மேக கூந்தலை அள்ளி கொண்டையிட்டு, முகத்தில் இருந்த அத்தனை கோட்டிங் மோக்கப்பையும், வெட் வைப்ஸ்ஸினால் அழுந்த துடைத்து அதை தடயமே இல்லாமல் ஜன்னல் வழியே தூக்கி எறிய,

அதுவோ வெளியே நின்றிருந்த பானிபூரி காரனின் ‘பானி’யில் சென்று விழ, ’ஐய்யய்யோ’ என பதறி ஜன்னலை விட்டு விலக, அங்கே திடுக்கிட்டு போனவனோ, பதறிப்போய் சுற்றி சுற்றி பார்வையை ஓட்ட,

“ஐய்யோ இவனோட ஒரு நாள் வியாபாரம் என்னால போச்சே” புலம்பியபடி ஜன்னலின் வழியே மீண்டும் பார்வையை ஓட்ட, பானிபூரிகாரனோ எட்டுதிசைக்கும் எட்டி போட்ட விழிகளின் வழியே யாருமில்லை என்பதை உணர்ந்து, ‘பானி’யில் கிடந்த வைப்ஸ்ஸை எடுத்து கீழே போட்டுவிட்டு, அவ்விடத்தை விட்டு இவன் நகர்ந்தான், என் தொழிலை எதுவும் பாதிக்காது என்பதை போல்.

Advertisement

“அட பாடையில போற பானிபூரிகாரா” நெஞ்சில் கைவைத்தவளுக்கோ ‘அதே பானிபூரிகாரனிடம் தினம் தினம் வேலைமுடிந்து ஆறு மணி போல் களைத்து வருபவளுக்கு, தெருமுனையில் இருக்கும் இதே பானிபூரிகாரனின் ஆறு பூரிகளை, ஏழு நாளும் வாரி வழங்க, வழங்க அதை வாங்கி ‘பே’ வென ஒன்றையடி அகலத்திற்கு வாய் திறந்து, உள்ளே தள்ளுபவளுக்கு, இத்தனைநாளும் தின்ற அத்தனை பூரிகளும் வெளியே வருவது போல் இருக்க, ‘ஓஹ்….’ என ஓங்கரித்து கொண்டு வந்தது.

Advertisement

ஆனால் ஆம்புலன்ஸ் சைரன் போல் தொடர்ந்து அடித்து கொண்டிருந்த காலிங் பெல் சத்தம், பத்ரகாளியான மீனாவை நினைவுக்கு கொண்டுவர, தொண்டை வரை வந்த வாந்தி அப்படியே நின்றது.

“மம்மி, நீ ஒன் மேன் ஆர்மினு நினைச்சேன், இப்போ தானே தெரியுது, ஸ்பீடா வர்ற வாந்தியை கூட அதே ஸ்பீடுல நிப்பாட்டுற டிராபிக் போலீஸ்னு..” மனம் வாந்தி நின்றதில் குதுகளிக்க, துள்ளளுடன் ஓடினாள் வாசலுக்கு, அரக்கபறக்க கதவை திறந்தவளிடம்,

பத்ரகாளி, ருத்ரகாளியாய் முறைத்து நின்றாள் மீனா.
“வயசுப்புள்ளை கதவை பூட்டிக்கிட்டு என்னடி பண்ற, அதுவும் கதவை திறக்க இம்புட்டு நேரம்” அவள் மேலிருந்து கீழாக பார்வை ஓட
லாவா.. அலர்ட் ஆகுடீ… மீனா உன் வாயை புடுங்குறா…, ம்ம்ம்.. அலர்ட் அலர்ட்.. மனசாட்சியை தயார் செய்து

Advertisement

“திறந்து கிடந்தா.. ஏழு கழுதை வயசாச்சு, கதவை பூட்டனும்னு அறிவில்லையான்னு கேட்ப.. பூட்டி வச்சா, பூட்டிகிட்டு என்ன பன்ற? அறிவில்லையானு கேட்குற.. உன் பிரச்சனை தான் என்ன?

நான் உனக்கு மக தானே.. மருமக இல்லைல்ல.. ஆகாத மருமக கைப்பட்டா குத்தம், கால்பட்டா குத்தம்னு, மருமக மாதிரி தான் ட்ரீட் பண்ற..

நீ எனக்கு அம்மாவா? இல்லை மாமியாவா?
எல்லா பொண்ணுகளுக்கும் கல்யாணத்துக்கு பிறகு தான் மாமியா வருவா.. ஆனால் எனக்கு பிறக்கும் போதே அனுப்பிவிட்டுட்டான், அதுவும் தாய் ரூபத்துல..

இந்த டிக்‌ஷனரியில எல்லாம் அம்மான்ற வார்த்தைக்கு டெபனிஷன் இருக்கும்ல.. அதுக்கும் உனக்கும் ஏணி இல்லை ஏரோ பிளேன் வச்சாகூட எட்டாது” அஸ்டகோனலாய் மாறியது முகம்.

“ஏய் என்னடி, வாய் நீளுது.. என்னை பேசவிடாமல், நீ பக்கம்பக்கமா டயலாக் அடிக்குறதை பார்த்தா சிறப்பா ஏதோ சம்பவம் பண்ணிருக்க போல, நான் இல்லாத நேரத்தில் என்ன பண்ணின? சொல்லுடி” என சரியாய் லாவாவின் கேடிதனத்தை கண்டு கொண்டார் மீனா.

“எ..என்ன.. சி.. சிறப்பான.. சம்..பவமா.. அதுவும் நா..நானா… இஇஇ.. இல்லையே” ஈ.. என இளித்து வைத்தவளிடம் அதுவரை பத்து சதமிருந்த சந்தேகம் நூறு சதமாய் உறுதியாய் மாறியது.

“ம்மா.. மாமியா மருமக சண்டையை அப்புறமா போடுங்க.. கொஞ்சம் வழி விடுறீங்களா?” என மகாவின் குரல், சண்டையிட்டு கொண்டிருந்த இருவரின் மனநிலையை திசை மாற்ற.
முந்தி கொண்டாள் லாவா..

“ஏய் வாடி மகா.. வா உள்ள வா.. அம்மா அப்படி தான்.. நீ அதைல்லாம் கண்டுகாத” ஈ என இளித்து கொண்டு ‘யப்பா.. மீனாவோட என்க்வ்யரில இருந்து கிரேட் எஸ்கேப்..

மகா நீ வாழ்க

நூறாண்டு காலம் வாழ்க,

என் விஜயை விட்டு மத்த எவனா இருந்தாலும் அவன் கூட வாழ்க,

சந்தோஷமாக வாழ்க

சண்டை போட்டு வாழ்க

சாகுற வரை நல்லா வாழ்க’ மனதில் இருந்ததை பாட்டாகவே படித்தாள் லாவான்யா மனதினுள்.

‘இன்னைக்கு தப்பிச்சுட்ட.. மவளே ஒரு நாளைக்கு மாட்டுவல்ல..’ முறைத்து கொண்டிருந்த மீனாவை ஓரக்கண்ணால் பார்த்தபடி, மகாவை உள் அழைத்து சென்று சோபாவில் அமரவைக்க, அந்த கேப்பில்

“டீ லாவா.. வெளியே போகனும்.. சீக்கிரமா டிரெஸ மாத்திட்டு வா” மகா குரலே வராத ஒரு குரலில் கூறிவிட்டிருக்க,

‘இத இத தான் எதிர்பார்த்தேன்’ என அவளது அறைக்குள் உடை மாற்ற ஓடினாள் லாவா.

மீனாவோ கையில் இருந்த பைகளை எல்லாம் டேபிளில் வைத்துவிட்டு “என்ன மகா.. கல்யாணத்தை நாளைக்கு வச்சுட்டு இங்க என்ன பண்ற? உங்க வீட்டில் எப்படி தனியா விட்டாங்க” என கேட்க

“தனியா எப்படி விடுவாங்க ம்மா.. அண்ணா கொண்டு வந்து உங்க வீட்டு வாசல்வரை விட்டுட்டு, உங்களையும் பார்த்ததுக்கு பிறகு தான் போனான். பர்சனலா கொஞ்சம் திங்க்ஸ் வாங்கனும்மா.. அதான் லாவாவை கூட்டி போகலாம் வந்தேன்” என மகா கூற

“மகா, அப்படி என்ன பொருள் வாங்கனும்” என வாயை கிளறியவரின் முன்பு சுடிதாரில் தயாராகி, தனக்கு தேவையான இரண்டு பொருளையும் ஹேண்ட் பேக்கினுள் போட்டபடி வந்த லாவா..

“ம்மா.. அதெல்லாம் பர்சனலா கல்யாண பொண்ணுக்கு நிறைய பொருள் தேவைப்படும். அதெல்லாம் உனக்கெதுக்கு. அரை மணிநேரத்தில் வந்துடுவேன், போகும் போது திட்டாத, எங்க போற எப்படி வருவன்னு கேட்டு கொல்லாத.. பிறகு விழுந்து வாரிட்டு வந்துடுவேன். அப்புறம் நீ்தான் எனக்கு பெட் பேனெல்லாம் வச்சு கவனிச்சுக்கனும். வந்தபிறகு வச்சுக்கோ உன் சுப்ரபாதத்தை” லாவா பேசியது மீனாவிற்கு உச்சபட்ச எரிச்சலை மூட்ட

வந்ததே மீனாவுக்கு கோபம் “என்னடி வர வர வாய் வாடிவாசல் வரைக்கும் நீளுது. இவ்வளவு வாய் பேசிட்டு நீ் இங்க இருந்து போய்டுவியா.. போயேன் பார்க்கலாம்” விளக்குமாரை கையில் எடுத்தபடி இவளை நெருங்க,

‘அய்யோ வெளக்கம் செல்றதுக்கு பயந்து வெளக்குமாத்துகிட்ட மாட்டிகிட்டனே.. ஏ.. கோதை கிழவி.. பொண்ணயா பெத்து போட்டுருக்க.. இருக்கு உனக்கு ஒரு நாளைக்கு, தரமான சம்பவமா வச்சு செஞ்சுவுடுறனா இல்லையான்னு பாரு’ கவலை, பயம் கோபம், ஆத்திரம் என பலவகை ரசங்களையும் கொட்டிய லாவாவை காக்கும் பொருட்டு.

“ம்மா ப்ளீஸ்மா.. எனக்கு இவளை விட்டா வேற யாரு இருக்கா.. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடுறோம், இப்போவே அம்மா கொடுத்த டைமில் கால்மணி்நேரம் போய்டுச்சு, இனியும் லேட்டா போனால் பாவம் அம்மா.. பயந்து டென்சன் ஆகிடுவாங்க” முகத்தை குழந்தை போல் வைத்து, கெஞ்சி, கொஞ்சி கேட்பவளிடத்தில் யாருக்கு தான் கோபம் வரும்.

அதுவும் அவளது தாய்க்காக கவலையோடு பேசுபவளிடத்தில் மீனாவிற்கு கோபம் அப்படியே அடங்க,

“உனக்காக மட்டும் தான் விடுறேன் இவளை. போறது சரி சீக்கிரம் அவளை கூட்டிட்டு வந்துடு மகா.. நீயும் சீக்கிரமா வீட்டுக்கு போ..” என அனுமதி வழங்க, ஓடி போய் அவர் கன்னத்தில் முத்தமிட்டு அங்கிருந்து ஓடியபடி,

“அடுத்த வீட்டு ஆளு மாதிரி முகூர்த்த நேரத்திற்கு வராமல் சாயந்தரமே மண்டபத்துக்கு வந்துடுங்கமா” என கூறியபடி பறந்தாள், ‘அப்பாடி கிரேட் எஸ்கேப், மீனா கிட்ட இருந்து’ என துள்ளி குதித்து தனக்கு முன்பே சென்ற லாவாவுடன்.

இவர்கள் ஸ்கூட்டியை எடுத்து கொண்டு சென்ற சில நிமிடங்களிலேயே, “ஏய் அப்படி என்னடி பொருள் வாங்கனும்.. என்கிட்ட எதுவுமே சொல்லையே, நானும் மீனாகிட்ட இருந்து தப்பிச்சா போதும்னு உன்கூட வந்துட்டேன்” என ஆரம்பிக்க, அதற்கு மகா பதில் சொல்லும் முன்பே, அவர்கள் முன் சடன் பிரேக் அடித்து தன் பல்சரை நிறுத்தினான் விஜய்.

அவ்வளவு தான் அதுவரை தாயினால் விளைந்த இறுக்கமெல்லாம் பறந்து, தன் எதிரில் தன் கனவு கண்ணன் நிற்பதை கண்டு ‘தந்தன தந்தன தந்தன தாளம் வரும்’ என மனம் பின்னனியில் தாளமிட்டுகொண்டு அப்படியே காதலோடு கலந்த புன்னகைக்கு மாறியது மகாவின் முகம் அல்ல, லாவாவின் முகம்.

அவளது அந்த மோனநிலை நீட்டிப்பதற்குள், “டீ லாவா ஹனுமான் கோவில்ல வெயிட் பண்ணு வந்துடுறேன்” என்ற மகாவின் குரலில் சட்டென தெளிந்தவள் கண்களில் கண்டது, பல்சரை ஓட்டி சென்ற விஜயும் இரட்டை காலிட்டு அவன் பின்னால் அமர்ந்து சென்ற மகாவும் தான்.

ஒரு வேளை கனவோ என முகம் பீதியோடு மாறி சட்டென திரும்பி தன் பின்பக்க சீட்டை பார்க்க, அதுவோ காலியாய் கிடந்தது.

‘அடிபாவி எனக்கு மேல நீ கேடியா இருப்ப போல.. அசந்த நேரத்துல ஆட்டைய கலச்சிட்டியேடி.. உன்ன போய் எங்கம்மா நம்பிட்டு திரியுது நல்லவன்னு.. என்ன பொய்யி.. என்ன நடிப்பு.. ஏ.. எப்பா.. ஏசப்பா’ எரிச்சலும் கடுப்புமாய் புலம்பியதில் முகத்தில் எள்ளும் கொள்ளுமா மட்டுமா வெடித்தது, பல நூறு வெடிகுண்டுகளே வெடித்து சிதறியது.

“டேய்.. விக்ரா.. இன்னும் என்னத்தடா புடுங்குற, என் கண் முன்னாடியே என் விஜய் கூட போறாளே, உன்னை.. இருடி இதே வரேன்” வாய்விட்டே அலறியவள், ஸ்கூட்டியை அவன் வீட்டுக்கே விட்டாள் படு வேகமாக.

நீண்டு வளைந்த பாதையில், வளர்ந்து வரும் நகரங்களில் தீப்பெட்டியை அடுக்கி வைத்தார்ப்போல் இல்லாமல், அதே தீப்பெட்டிகளை சிதறடிக்கப்பட்டார் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் காற்றோட்டமான வசதியுடன் கட்டபட்டு இருக்க, சில வீடுகள், தோட்டத்தை பராமறிப்பதற்காகவே கட்டபட்டு பின்னாளில் வசிப்பிடமாக மாறி இருந்தது.
அப்படிப்பட்ட தோட்டவீடுகள் நிறைந்த தெருக்களில், வளைந்து நெளிந்து சென்றாள் விக்ராவை பிடித்து வெளுக்கும் எண்ணத்தோடு.

அவனது வீட்டிற்கு செல்ல வேண்டுமானால் தோட்டத்தை சுற்றி கொண்டு தான் விக்ராவின் வீட்டிற்கு செல்ல முடியும். ஆனால் தோட்டத்தை தாண்டும் முன்பே கண்டுவிட்டாள், தோட்ட கிணற்றின் சுற்று சுவரில் நான்கு பாண்டிகளுமே அமர்ந்து, ஒரே பாட்டிலை நால்வரும் பகிர்ந்து கொண்டிருப்பதை.

‘எத்தனை நாட்களாய் தன் பிரச்சனையை தீர்க்க இவனிடம் கெஞ்சிகொண்டு கிடக்கிறாள், ஆனால் அதைபத்தி கொஞ்சமும் கவலை இல்லாதவனாய் இருந்தவனை உக்ரமாய் முறைத்து தள்ளியவள், “தண்ணியா அடிச்சிட்டு கிடக்க, இருக்குடா உனக்கு” என ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு, தோட்டத்து கம்பிகளின் இடுக்குகளில் புகுந்து அவர்களை நோக்கி இருந்த அந்த மண்பாதையில் நடந்தாள் பூனை போல்.

அங்கே அவர்களோ கிணற்றின் சுற்று சுவர்களில் அமர்ந்து, தலையில் இருந்து வடிந்த நீரை கூட கண்டுகொள்ளாது, ஈரம் சொட்ட சொட்ட, தண்ணீர. கலந்த ரம் பாட்டிலை அடித்து கொண்டிருந்தனர்.

மூவர் அடித்து, நாலாவதாய் சங்கரிடம் இவர்கள் நீட்டுவதும், அவன் மறுப்பதுமாய் இருக்க, “டேய் இப்போ நீ அடிக்க போறியா இல்லையா?” விக்ரா பத்தாவது முறையாய் குரலுயர்த்த

“இல்லை வேணாம்” என பதினோறாவது முறையாக மறுத்தவனோ

“நேத்து தண்ணியடிச்சிட்டு கிடந்தப்போ தான் பேயும் வந்தது, இன்னைக்கும் தண்ணியடிச்சா மறுபடியும் பேய் வரும்டா” சங்கர், தன் முகத்தில் பீதி ஏற கூற, அதே நொடி

“டேய்.. லகுட பாண்டிகளா” அலறிய லாவாவின் குரல், சங்கரின் இதயத்திற்கு சிறுதும் பெரிதுமாய் அதிர்வை கடத்த, மறுபடியும் பேய் என திடுக்கிட்டு பதறி துள்ளி கிணற்றினுள்ளே மடார் என விழ

“டேய்.. டேய்..” என அலறிக்கொண்டு ஏனைய மூவரும் பிடிக்க வர, அவர்கள் கைக்கு கிட்டியது என்னவோ பாதியாக இருந்த ரம் பாட்டில் தான். ஆக மொத்தம் மூவருமே காக்க நினைத்தது சங்கரை அல்ல, ரம்மை.

“ஹப்பா.. கொட்டலை” இருந்த பாதி அளவு ரம் வீணாகிவிடுமோ என்ற கவலை தீரந்த மகிழ்வு அப்படியே மூவரின் முகத்திலும் பிரதிபலிக்க,

“ஏண்டா எரும.. உள்ள ஒருத்தன் விழுந்தது கவலை இல்லை, இந்த கர்மம் பிடிச்ச பாட்டிலு மேல ரொம்ப அக்கரை தான் போல”

“ஆமாண்டி, தள்ளி விடுறது நீ.. காப்பாத்துறது மட்டும் நாங்களா.. போ.. அவ்வளவு கவலையா இருந்தா, நீயும் போய் விழு” என பிடித்து தள்ளிவிட, பட்டென லாவா விலகிட, அவளுக்கு பின் நின்றிருந்த செல்லபாண்டி விக்ராவின் அழுத்தத்தில் கிணற்றுக்குள் பெரும் அலரலோடு விழ,

“ஆத்தி அடுத்து நாம தான் போல” என இவர்களை விட்டு இரண்டடி தள்ளி நின்றான் வீரபாண்டி.

கிணற்றிற்குள் வாரி விழுந்து எழுந்து வந்த இருவரும், தலையில் இருந்த நீரை வழித்து போட்டபடி வந்து நிற்க, அவர்களது கண்களோ விக்ராவை கொலைவெறியோடு பார்த்திருந்தது.

“ஏலே உன் பஞ்சாயத்துக்கு நாங்க தான் சொம்பா.. இப்படி என்னையும் அவனையும் கிணத்துக்குள்ள உருட்டிவிட்டு விளையாண்டுட்டு கிடக்க.. செத்தபயலே” ஜிபி முத்து ஸ்டைலில் செல்லம் பேச
அவர்களது பேச்சை காதிலேயே வாங்காமல்

“இங்க எதுக்குடி நீ வந்த? உனக்கிங்க என்ன சோலி” குடிக்க விடாமல் தடுக்கும் கோபம் அவனிடம்..

“ஆமா ஏன் இங்க வந்திருக்கேன்னு உனக்கு தெரியவே தெரியாது.. ஏண்டா உன்னை நான் இரண்டு நாளுக்கு முன்னாடியே வர சொன்னால், திருவாரூர் தேரு மாதிரி ஆடி அசைஞ்சு இரண்டு நாள் கழிச்சு வர்ற..?” இவளது நிலையறிந்தும் எரிச்சலூட்டிக் கொண்டிருக்கிறானே என்ற கோபம் இவளிடம்..

“ஆமா.. உங்கொப்பன் தானே கம்பெனி வச்சு நடத்துறான்.. கேட்டவுடனே, கூட இரண்டு நாள் லீவ் எடுத்துகோன்னு கொடுக்குறதுக்கு, பட்டர் டாட்டர்”

“அப்படினா?” வீரா முந்தி கொண்டு விளக்கம் கேட்க

“வெண்ண மவளே” விக்ரா அர்த்தம் கூறினானா? இல்லை திட்டினானா என அவனுக்கே வெளிச்சம்

“நான் வெண்ண மவளேன்னா.. நீ வெண்ண மவன்” எகிறிக்கொண்டு வந்த லாவாவிடம், பதிலுக்கு இவன் எகிறும் முன்

“டேய்.. உங்க சண்டையை அப்புறமா போடுங்க.. அங்க பாரு அப்படா..” என தோட்டத்தின் மோட்டார் ரூமுக்குள் செல்லும் சமரசுவை கைகாட்டியபடி வந்த செல்லத்தின் நடுங்கிய குரலில், இப்போது பதறுவது விக்ரா, வீராவின் வேலையானது.

தபதபவென ஓடிப்போன வீரா, ஏதோ பச்சை இலைகளை பறித்து வர, ‘எனக்கு எனக்கு’ என பிடுங்கி, ஏன் ஏதற்கு என கேட்காமலேயே தங்களது வாயில் அமுக்கி மென்று சாறு முழுவதுமாய் தொண்டையில் இறங்கிய கனம் அதை துப்பிவிட்டனர்.
‘இந்த இலை திண்ணா கண்டுபிடிக்க முடியாதாக்கும்” இவர்களையே பார்த்த வண்ணம் இருந்த லாவா கிண்டலாய் கேட்க..

“கண்டிப்பா கண்டுபிடிக்க முடியாது” என விக்ரா பார்க்க

“ஆனால் கண்டுபிடிச்சு கொடுக்க தான் நான் இருக்கேனே” புருவம் உயர்த்தி இவள் பார்க்க,

“என்னடா முறைக்குற.. எத்தனை நாள் உன் பின்னாடி நாய் மாதிரி சுத்திட்டு இருக்கேன். கொஞ்சமாச்சும் கண்டுகிறியா? உங்கொண்ணன் கல்யாணத்துக்கு இரண்டு நாள் முன்னாடி வான்னா.. ஆடி அசைஞ்சு, நாளைக்கு கல்யாணத்தை வச்சுகிட்டு, இன்னைக்கு வர்ற” கோபம் தெறித்தது இவள் பேச்சில்.

“இன்னைக்கா.. நான் நேத்து நைட்டே வந்துட்டேன், அது உனக்கும் தெரியும் தானே.. ஏன் பேயா வேசம் போட்டு வந்ததே எனக்காக தானா? சொன்ன நேரத்துக்கு வர்லைன்னற கோபத்தை காட்ட தான?” விக்ரா பிட்டு பிட்டு வைக்க

“என்னது பேயா வந்தது நீயா?” விக்ரா தவிர்த்து அத்தனை பாண்டிகளும் வாய் பிளக்க

“ஆமா அப்படியே பேய்னு நினைச்சு பயந்து தள்ளிட்ட.. அப்போவும் பாய வந்தவன் தானே நீ.. எல்லாரும் பேய்னு நினைச்சு பறந்துட்டு ஓடுனா, நீ மட்டும் எப்படிடா, பொண்ணுன்னு கண்டுபிடிச்ச? கண்டுபிடுச்சதும் இல்லாமல், காஞ்ச மாடு கம்புல பாய்ற மாதிரி என் மேல பாய வேற வர்ற? ச்சைய்.. கர்மம்.. கர்மம்” இவள் தலையிலடித்து கொள்ள

“இது வாலிப வயசு.. இந்த வயசுல பாயாம.. வயசான பிறகு பாஞ்சு பஞ்சர் ஆகி பரலோகம் போறதுக்கா” விக்ரா விட்டாலும் அவன் வாய் விடுவேனா என்றது.

“நீ பரலோகம் போ.. இல்லை பன்னி மேய்க்க போ… ஆனால் உன்னை உன் அப்பாகிட்ட கோர்த்துவிடாமல் நான் போக மாட்டேன்” உறுதிமொழியே எடுக்க

“நாங்க மாட்டுனா நீயும் மாட்டுவ..” வலது கையில் இருந்த பாட்டிலை இடக்கைக்கு மாற்றியபடி இவன் கூற

“நான் தான் சரக்கு அடிக்கலையே” என திமிராய் கூறிய கனம், அவனது வலது கை விரல்கள் அவள் மூக்கை அழுத்தமாய் பிடித்து உயர்த்த, அன்னாந்து இவன் முகம் பார்த்தவளின் செப்பு இதழ்கள் சுவாசத்திற்காக திறந்து கொள்ள, அதில் பாட்டிலை திணிக்க, மீதமிருந்த ரம் மொத்தமும் அவள் வயற்றுக்குள் கடகடவென இறங்கியது.

இறங்கிய பின்பே இவளது மூக்கை விட, வாண்டை வாண்டையாய் வார்த்தைகள் வந்தாலும், தஸ்புஸ்ஸென மூச்சு தான் வாங்கியது அவளுக்கு.

“இப்போ மாட்டுவல்ல” உதடு குவித்து இவன் விசிலடிக்க, விக்ராவின் இச்செயலில், வீராவிற்கும், செல்லத்திற்கும் ஏறிய போதையெல்லாம் நொடியில் இறங்க, அடுத்து என்ன நடக்க போகிறதோ என திக் திக் நிமிடங்கள் நொடிகளாய் கரைந்தது.

வீராவையும், சங்கரையும் ஒற்றை விரல் கொண்டு சுரண்டிய செல்லம் “டேய், அப்பாகிட்ட மாட்டுனா கூட சேதாரம் அதிகமா இருக்காதுடா, ஆனால் இவன்” என விக்ராவை கண்ஜாடையில் காட்டி “போற போக்குல போக்ஸோ ல்ல தூக்கி நம்பள உள்ள வைக்காமல் விடமாட்டான்டா” என பீதியோடு கூற, அடுத்த கனமே காற்றில் அடித்து செல்லும் இறகுகளாய் கலைந்து போயினர் மற்ற மூவரும்.

இதில் பெரிய ஹைலைட்டே இவர்கள் யாருக்காக பயந்தார்களோ அந்த சமரசு, மோட்டார் ரூமை விட்டு எப்போதோ சென்றிருந்தார்.

தஸ்புஸ்ஸென மூச்சுவிட்டு கொண்டிருந்தவளுக்கும் சுவாசம் சீராக சிறிது நேரம் எடுத்தது.

“வயிறு எரியும், இந்தா இதை தின்னு” என அலுமினிய பேப்பரில் சுற்றபட்ட கவர் ஒன்றை நீட்ட
வேண்டாம் என வேகமாய் தலையாட்டி மறுத்தவள் ஏதோ திட்ட வர, அதற்குள், அலுமினிய கவரில் இருந்த சிக்கன் தந்தூரியை பிய்த்து இவள் வாய்க்குள் திணிக்க
அதை துப்பிவிடும் எண்ணத்திலிருந்தவளுக்கு, அதன் சுவை நாபிகமலங்களில் சென்று நர்த்தனம் ஆட, லபக் லபக் என அவன் திணித்ததை விழுங்கியதோடு, அவன் கையில் இருந்ததையும் லபக் என பிடுங்கிகொண்டு, கிணற்றின் சுவரையொட்டி கால் நீட்டி அமர்ந்துவிட,

கிணற்றுக்கு பின்பாய் சென்றவன் ஒளித்து வைத்திருந்த இன்னொரு பாட்டிலை எடுத்து, அதை திறந்தபடி சிறு சிரிப்போடு இவனும் இவளருகில் அமர்ந்தான்.

“என்ன கோபமெல்லாம் கோழிய பார்த்ததும் பறந்துடுச்சு போல..?” விக்ரா இழுக்க

“என்ன பண்ண விக்ரா, வாழ்க்கையில தோழி இல்லாமல் கூட இருந்திடலாம் போல எங்க இந்த கோழி இல்லாமல் இருக்க முடியலையே” என தத்துவம் பேச

“போதை ஏற முன்னாடியே தத்துவம், ஏறின பிறகு என்னவெல்லாம் பண்ண போறியோ” என பாட்டிலை தன் வாய்க்குள் சரித்தான்.

“டேய் ஏண்டா இரண்டுநாள் முன்னாடியே வரலை” இவள் ஆரம்பிக்க

“அதான் இப்போ வந்துட்டன்ல்ல.. சொல்லு என்ன செய்யனும்” இவன் டீல் பேச

“நாளைக்கு விஜய்க்கும், மகாக்கும் கல்யாணம்.. எனக்கு விஜய் வேணும்.. அவனில்லாமல் என்னால வாழ முடியாது” கராராய் இவளும் கூற

“அது தெரிஞ்சது தானே, இத தான் ஆறு மாசமா என் காதுல போட்டு டெய்லி பஞ்சர் ஆக்குறியே.. அதுக்கு நான் என்னடி பண்ணனும், அத சொல்லு?” டென்சன் ஆனான் விக்ரா.

“ப்ச், அத தான்டா சொல்ல வரேன்.. நாளைக்கு விஜய்க்கு கல்யாணம் நடக்கனும் ஆனால் மகா கூட இல்ல, என்கூட” சடுதியில் வில்லியானாள் லாவா.

“அதெப்படி முடியும், இதென்ன சினிமான்னு நினைச்சியா” இவன் புருவம் உயர்த்த

“சினிமாவோ கதையோ.. எனக்கு பிடிச்சது மட்டும் தான் அங்க நடக்கனும். தோ பாரு.. கல்யாண வீட்டுக்கு இன்னைக்கு நைட்டே போறோம். நைட்டு புல்லா பிளான் பண்ணி” வெகுதீவிரமாய் இவள் பேசியதை

“பண்ணி” என இரட்டை அர்த்தத்தை இவன் உருவாக்க

“போடா… பன்னி” பற்களுக்கிடையில் வார்த்தைகளை கடித்து துப்பியவள், அவன் முதுகிலேயே படாரென ஒன்று வைத்து “சொல்றதை மட்டும் கேளுடா வக்ரம் புடிச்ச விக்ரா” உச்சஸ்தாயில் இவள் கத்த

‘ஸ் ஸ்…. ஸ்…’ என ஒற்றை விரலை தன் வாயில் வைத்து, ‘நான் பேசலை.. நீ சொல்லு’ என சைகை காட்டினான்.

“எனக்கு விஜயை விட்டு கொடுக்க மனசில்லை விக்ரா.. அதுக்காக என்னை மட்டும் தான் நீ கல்யாணம் செய்துகனும்னு அவனை என்னால் கட்டாயபடுத்தவும் முடியாது. அதே நேரம் அவனே என் கழுத்தில் தாலி கட்டனும். அதனால” என இழுத்தவளை, வைத்த விழி வாங்கமல் பார்த்தவன் மேலே சொல்லு என விழிவிரித்து பார்க்க

“மகாவை நீ கடத்திரு, தன்னால விஜய் என் கழுத்தில் தாலி கட்டிடுவான்” ஆசையாய் கூற

“ம்.. அப்படியே அவன் எனக்கு பாடையும் கட்டிடுவான்” இவனோ அசால்ட்டாய் நிலையை உரைக்க

“உனக்காக உயிரையே கொடுப்பேன்னு டயலாக்லாம் அடிச்சடா”

“ஓய்…” என எகிறியவன் “அதுக்காக உயிரை மட்டுமே கேட்பியா..” வடிவேலு மாடுலேஷனில் இவன் கேட்க

“தேவை இருக்குறத தானே கேட்க முடியும்? வேற என்னத்த கேட்குறதாம்” இவள் புருவம் சுளிக்க

“ம் இரண்டு புள்ள கேட்குறது? இரண்டுக்கு மூணா கொடுப்பேன்ல” பேசியவனின் தலையில் ‘டங்’ என வைத்தாள் ஒரு கொட்டு

“ஆ.. ஆ” வென அலறியவனை சிறிதும் கண்டு கொள்ளாமல்
“சும்மா வம்பிழுத்திட்டே திரியாமல், சொல்றதை பண்ணி தொலை.. எனக்கு தெரியாது, அந்த மகாவை தூக்குற, நான் விஜய்க்கு முறை பொண்ணு, எப்படியும் மகனோட கல்யாணத்தை அப்படியே நின்னு போகட்டும்னு நினைக்க மாட்டாங்க.

அத்தை கண்டிப்பா எங்கம்மா அப்பாகிட்ட பேசுவாங்க.. எப்படியும் என் கல்யாணம் நடந்திடும்” வெகு உறுதியாய் சொன்னவளை பார்த்து முற்றிலும் அதிர்ந்து

“அப்போ மகா” என கேட்டவனின் கையில், தன் ஹேண்ட் பேக்கில் இருந்து எடுத்த ஒரு லட்டரை திணித்துவிட்டு,

இவன் கையில் இருந்த பாட்டிலை பிடுங்கி மீண்டுமாய் மடமடவென தன் வாய்க்குள் இறக்கும் வேலையில் இவள் இறங்க,

இவனோ, அவளிடம் ஒரு கண்ணை வைத்தபடி, லட்டரை வேகமாய் பிரித்து பார்த்தான்.

அச்சு அசலாய் மகாவின் கையெழுத்து, ‘திருமணத்தில் விருப்பமில்லை, விருப்பத்தை தெரிவிக்க முடியாமல் விலகி செல்கிறேன், தேடவேண்டாம்’ என்ற எழுத்துகளுடனும், இறுதியாய் ‘அன்புடன்’ மகா, என்ற அவளது அக்மார்க் கையெழுத்தும் இருந்தது.

‘அடங்கொப்பொத்தா டேய்.. நானே கேடி, இவள் கேடிக்கெல்லாம் கேடியா இருப்பா போலவே.. யப்பா, டேய் விஜய், எந்த ஜென்மத்துல பாவம் பண்ணியோ.. ம்ஹூம் எந்த ஜென்மத்திலேயோ இல்லை… நீ பிறப்பெடுத்த எல்லா ஜென்மத்திலயும் பண்ண பாவம்.. எப்படி வந்து இவ கிட்ட சிக்கியிருக்க பார்த்தியா’ வாய் பிளக்கவில்லை. மாறாய் விழிகள் பிளந்தது.

“எப்படி என் ஐடியா?” சுடிதாரில் இல்லாத காலரை தூக்கி விட.

“ம்.. டிவில சீரியல் பார்க்காத பார்க்காதன்னு எத்தனை முறை சொல்லியிருப்பேன். இப்போ பாரு.. வில்லிக்கே டப் கொடுப்ப போல, அப்படி இருக்கு உன் ஐடியா” என சிலாகித்தவன்
“எல்லாம் சரி, செலவுக்கு என்ன பண்றது” கேட்ட கனம்,

“எ.. எ.. ன்ன செலவு?” என கேட்டவளிடம் சிறிது குளறல்,

‘ம் சரக்கு வேலைய காட்டுது’ நினைத்து கொண்ட விக்ரா,

“மகாவை கடத்தனும்கிற? கையிலயா தூக்கிட்டு போக முடியும், எப்படியும் பொண்ண தூக்க இரண்டு பேரு, மண்டபத்தை கண்கணிக்க இரண்டு பேரு, ஊருக்குள்ள ஆள் நடமாட்டத்தை கண்காணிக்க இரண்டு பேரு, எப்படியும் போர்வீலர் வேணும், அதுக்கு டிரைவர் வேணும், ஆக மொத்தம் ஏழு பேரு, இவனுகளுக்கு மூனு வேளை சாப்பாடு, ஒரு நாள் சம்பளம்னு கொடுக்கனும்.
சரியா ஸ்கெட்ச் போட்டு பொண்ணை தூக்கனும், கடத்திட்டா பிரச்சனையில்லை.. ஒரு வேளை மாட்டிகிட்டா?” என இவன் நிறுத்த

குடிப்பதை அவளும் நிறுத்தி “மாட்டிகிட்டா?” என விழி பிதுங்க கேட்டாள்.

“பயப்படாத.. வகையா மாட்டிகிட்டா நம்பளை காட்டி கொடுக்காமல், போலீஸோ, பொரம்போக்கோ.. யார்கிட்டானாலும் அடி வாங்க தயாரா இருப்பானுங்க தான். ஆனால் அடுத்து அவனுகளுக்கு எக்ஸ்ட்ராவா மெடிக்கல், டியர்னஸ், டிராவலிங் அலவன்ஸ்னு , ஒரு பெலிய காம்பன்சேஷன் லிஸ்ட்டே கொடுக்கனுமே” என

“என்னடா.. ஏதோ நாம கடத்தல் கம்பெனி நடத்துற மாதிரியும், இவனுக எல்லாம் நம்ப எம்ப்ளாயீஸ் மாதிரியும், காம்பன்சேஷன் பத்திலாம் பேசுற” என கவலை கொண்டாலும், நாளைய கல்யாண கனவுகள் அவளை அப்படியே தேங்கிவிடாமல் பாதுகாக்க,

கையில் இருந்த பாட்டிலை விக்ராவின் கையிலேயே கொடுத்துவிட்டு ஹேண்ட் பேக்கில் இருந்து கத்தையாய் ரூபாய் நோட்டுகளை எடுத்து அவன் கையில் திணித்து

“என்னோட ஐஞ்சு மாச எக்ஸ்ட்ரா சம்பளம், போதுமா இன்னும் வேணுமா?” என கேட்க

கையில் இருந்த பணத்தை கண்களாலேயே எடை போட்டபடி “ம்.. போதும் போதும்” என

“வி..க் கி..ரா.. கரெக்ட்டா பண்ணி.. டு… வல்ல.. என்னோட மூனு வருச காதல்” குளறல் உளறலானது.

“ஆமாம் ஆமாம் உன் மூனு வருஷ காதல் இந்த ஐஞ்சு மாச சம்பளத்தில் தான் இருக்கு..” என கிண்டலாய் கூறியவன் “டோன்ட் வொரி பேபி.. விக்ரா இருக்க பயமேன்” முருகன் போல் கை வைத்து இவன் அருள் பாலிக்க, இவன் சொன்ன சந்தேஷ செய்தியிலோ, இல்லை வாய்க்குள் போன போதையாலோ கலகலத்து சிரித்தாள்.

“மகா பாவமில்லையா?” கேட்டுவிட்டு இப்போது குடிப்பது இவன் முறையானது.

“நீ கல்யாணம் பண்ணிக்க” பட்டென போட்டு உடைக்க

“நானா?” கையில் இருந்த பாட்டிலை இறுக்க பிடித்தான் விக்ரா.

“ஆமாம் நீ்தான்.. மகா மேல உனக்கு ஒரு கண்ணுன்னு எனக்கு தெரியுமே” என கேட்டு அதிர வைத்தாள் அவனை.

அதில் திடுக்கிட்டு, சுற்றிலும் பார்வை ஓட்ட, “ஹ..ஹ..’ பெரிதாய் சிரித்தவள்..
“என்ன மாட்டிகிட்டன்னு முழிக்கிறியா?” “எனக்கு தெரியும்.. நீ தனியா மொட்டமாடியில் மகா கூட போனில் எத்தனையோ தடவை, அவளோட கல்யாணத்தை சாக்கா வச்சு, அவகிட்ட பேசுறதை பார்த்திருக்கேனே” இவள் கண்ணடிக்க
முறைத்து பார்த்தவனை,

“சும்மா முறைக்காத சரியா. உண்மைய தானே சொல்றேன். சொன்னதை நியாபகம் வச்சுகிட்டு முடிச்சிடு” என சொல்லிவிட்டு மீதமிருந்த சிக்கனை ஒரு கை பார்த்தாள்.

“நீ சொல்லி செய்யாமலா? உனக்கு விஜய், எனக்கு மகா.. அங்க அவனுக கொண்டாடுறானுகளோ இல்லையோ, இங்க நாம நல்லா கொண்டாடுறோம்ல பேச்சுலர் பார்ட்டியை, அதுவும் பகல்ல” விக்ராவும் உளறியபடி கூற, கூடவே இருவரது கைக்கும் பாட்டில் கைமாறிக்கொண்டே இருந்தது.

நேரமாக நேரமாக போதை தலைக்கு ஏறியது இவளுக்கு. அதை உணர்ந்து “லாவா போதும்..” என அவளிடமிருந்து பாட்டிலை பிடுங்கி ஓரமாய் வைத்துவிட்டு,

“வீட்டுக்கு போய்டுவியா.. இல்லை நான் வரவா” இவன் கேட்க..

“வரவா வா..வா? நீ தான் வரனோம்.. அப்றம் ம்ம்மீனா.. சோத்துல்ல வெஷம் வச்சிருவாஆஆ” இழுவையாய் இழுத்தாள்.

“சரி வா…” என அவளுக்கு கை கொடுத்து தூக்கியவன், தோளிலிருந்து சரிந்த துப்பட்டாவை சரிசெய்ய,

“ஆனாலு இந்த ஆம்ளைக எல்லாம் ஏன் கஷ்டம் வந்தா குடிக்கானுவனு இன்னக்கு தான் தெர்து.. இல்லல்ல, கொஞ்ச நாள்..ளா தெர்து”

“என்ன தெர்து”

“ம் எல்லா..த்தையும் போதையி..ல்ல மற்ந்து.. வானத்லயு, காத்துலயு சொம்மா மித..ந்..துட்டு.. குஜாலாகீது டா..”

“இப்போ எப்டிருக்கு தெர்மா.. கன்னுகொட்டி தேடி வந்தே தண்ணி தட்டி நான்..னு பாட்டை பாடிகிட்டே இந்த கிணத்.. மேல ஒரு ரவுண்டு போவனும்.. போலக்குது”
பாட்டை தப்பு தப்பாய் பாடியதில் சிரித்து வைத்தவன்

“ஓய்.. அதென்ன பைபாஸ் ரோடா.. ரவுண்டு போவனுமாம்? கிணறுடி.. விழுந்தன்னு வச்சுக்க” இவன் இழுக்க

“பின்னாடியே குதிச்சு காப்பாத்த தான் நீ இருக்கியே”

“ம் இதெல்லாம் நல்லா தெளிவா பேசு..” என்றவனின் ஒரு கை இவளை கிணற்றின் சுற்று சுவரின் மேல் ஏற உதவி செய்ய.. மற்றொரு கையோ.. செல்போனை எடுத்து அவள் கேட்ட பாடலை ஒலிக்கவிட்டது.

“ஹேய்..” என கூச்சலிட்டவள் “நானே பாட..லம்னு இந்தேன்..” என குதூகலிக்க

“இப்போ மட்டும் என்ன சேர்ந்து பாடு” எனவும்

இன்னும் கூடிய குதூகலத்தோடு பின்பாட்டும் பாடதுவங்கினாள் ஒரு வரி விடாது.

“தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி”

கூடவே பாடியவளுக்கு அப்படி ஒரு அத்ம மகிழ்ச்சி அவளது குரலில் வெளிப்பட
அது விக்ராவையும் தூண்டிவிட, அவனும் இணைந்தான் அவளோடு..

“சாராயத்தை ஊத்து..

ஜன்னலைத்தான் சாத்து

சாரயத்தை ஊத்து..

ஜன்னலைத்தான் சாத்து”
அவனோடு பாடிக்கொண்டும், இடை வளைத்து ஆடிக்கொண்டும் கிணற்றின் சுற்று சுவரை இவன் கை பிடித்து கொண்டு வலம் வந்தாள்.

இன்னும் தொடர்ந்தது இந்த இரு இசைகலைஞர்களின் போதை கலந்த குரல் 
“புட்டி தொட்டதால புத்தி கெட்டு போனேன்

ஊறுகாய கொண்டா உன்னையும் தொட்டுக்கறேன்

அடடா ரம்மு வந்தா ராகம் வரும் கொண்டா

இதுவும் பத்தாதம்மா கொண்டாடி அண்டா” என காட்டு கத்தலில் கத்தினர்.

இருவரின் குரல் நன்றாக இருந்ததா எனகேட்டால் பதில் இல்லை தான்.

சந்தோஷ ஊற்றை கொப்பளிக்கும் அவள் குரலும், அவளது சந்தோஷத்திலேயே முக்குளிக்கும் இவன் குரலும், ஒரு வகையான உணர்வை, அதிர்வை உள்ளுக்குள் பிரவாகமாய் பொங்கி எழ செய்தது.

மகிழ்ச்சி என்பது மற்றவரை சார்ந்தது அல்ல.. உனக்கே உரித்தானது, உனக்குள் உதயமாவது, அதை நிரூபிப்பது போல்…

வானில் பறக்க வைக்கும் போதை,

மனம் நிறைய மிதக்கும் கல்யாண கனவு,

அதை வெளிக்கொணரும் இசை,

அதை எல்லாம் நிறைவேற்றும் நண்பன்

என சகல சந்தோஷமும் சேர, உலகின் ஒட்டு மொத்த சந்தோஷமும் எனக்கே எனக்கு என்பதை போல சத்தமாய் பாடிக்கொண்டும் கிணற்றின் மேல் ஆடிக்கொண்டும் அந்நிமிடங்களை அவளுக்குரியாதாக்கி கொண்டாள் லாவா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!