Skip to content
Post Views: 125
“வாங்கம்மா.. உள்ளே வாங்க. ஊஞ்சலில் ஆடணுமா? போய் ஆடுங்க” என்று சிறுமிகளை உள்ளே அழைத்தாள் கவி.
ஆசையாக ஓடி வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து ஆட தொடங்கினர் இருவரும்.
“ஏதாச்சும் சாப்பிட்டீங்களாம்மா ரெண்டு பேரும்?”
“இல்ல டீச்சர். எங்கம்மா ரெண்டு பேருக்கும் முறுக்கு கொடுத்தாங்க. இவ சாப்பிடவே மாட்டேன்னு சொல்லிட்டா”. என்று மீனுவைக் கை காட்டினாள் சிவானி.
Advertisement
“ஏன்மா.?”
“எங்கம்மா யார்கிட்டயும் எதுவும் வாங்கி சாப்பிடக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க”.
“இவ உன்னோட பிரன்ட் தானே? அவங்க வீட்டுல சாப்பிட்டா என்ன?”
Advertisement
“இல்ல.. எனக்கு பிடிக்கல.. அவளோட அம்மா.. என்னோட அம்மா வேற ஒருத்தரோட ஓடிப் போய்ட்டாங்க. நான் என்ன பண்ணுவேன் பாவம்னு சொல்லுவாங்க. அப்படி சொல்றது எனக்கு பிடிக்கல அதான்!”
Advertisement
“ஆமா டீச்சர்..இவங்க அம்மா ஓடிப் போய்ட்டாங்க. இப்ப இவங்க வீட்டில் இல்ல. அத்தை தான் இருக்காங்க”. என்றாள் சிவானி.
வேற ஒருத்தருடன் ஓடிப் போவது என்றால் என்னவென்று சரியாக கூட தெரியாத அந்த சிறுமி, பெரியவர்கள் பேசுவதைக் கேட்டு விட்டு தானும் அதையே சொன்னாள்!
“ஹேய்.. அப்படி எல்லாம் சொல்லக் கூடாது சிவானி. அவங்க அம்மா ஊருக்கு ஏதாச்சும் வேலையா போய் இருப்பாங்க. அதான் வீட்டில் இல்ல. நீ இனிமே இப்படி எல்லாம் பேசக் கூடாது சரியா?”
Advertisement
“இல்ல.. டீச்சர். அப்படி ஊருக்கு போய் இருந்தா வீடியோ காலில் ஆச்சும் பேசுவாங்க இல்ல? அவங்க பேசவே இல்லையே?” என்றாள் சிவானி விடாமல்!
“எங்கப்பா கூட தான் வெளியூர்ல இருக்காரு. அவரும் தான் என் கூட வீடியோ காலில் பேசுறது இல்ல. அத்தை கிட்ட மட்டும் பேசிட்டு வச்சுருவார். அவரை மட்டும் ஒண்ணும் சொல்லல. ஆனா எங்கம்மாவை மட்டும் இப்படி திட்டிக் கிட்டே இருக்காங்க எல்லோரும். எங்கம்மா ரொம்ப நல்லவங்க தெரியுமா?” என்று சொன்ன மீனுவின் கண்கள் கலங்க தொடங்கியது!
அதைப் பார்த்த கவிக்கு மனம் பதறியது!
அய்யோ.. என்ன இது எல்லோருமா சேர்ந்து இப்படி இந்த பிஞ்சு மனசைக் காயப்படுத்துறாங்களே! பதறிய அவள்,
“சிவானி.. மீனு உன்னோட திக் பிரன்ட் தானே?”
“ஆமாம்.”
“அவ அம்மாவைப் பத்தி இப்படி பேசினா அவ அழறா பாரு. உன் பிரண்டை நீயே இப்படி அழ வைக்கலாமா?”
“கூடாது.. தான்! சாரி மீனு நான் இனிமே இப்படி பேச மாட்டேன். சாரி..” மீனுவின் தாடையைப் பிடித்து சாரி கேட்டாள் சிவானி.
“ம்ம்.” என்று சொல்லி மூக்கை உறிஞ்சியவளின் அருகே கவி வந்து, அவளின் அவிழ்ந்து இருந்த ஜடையை மீண்டும் மடக்கி கட்டி விட்டவள்,
“சரி.. மீனும்மா. உனக்கு பசிக்கும் இல்ல. டீச்சர் டீ போட்டு தரட்டுமா?” என்றாள்.
“நான் டீ காபி குடிக்க மாட்டேன் டீச்சர்.”
“அப்போ பாலா குடி.” என்று பாலை எடுக்க அவள் திரும்ப,
“இல்ல வேண்டாம்” என்றாள் மீனு.
“ஏண்டி வேணாம்னு சொல்ற? நீ லஞ்சும் சரியா சாப்பிடல. கொண்டு வந்த தேங்காய் சட்னி ஊசிப் போய்டுச்சு. மேலே இருந்த இட்லியைத் தூக்கிப் போட்டுட்டு அடியில் இருந்த ஒரே ஒரு வெறும் இட்லிய மட்டும் தானே சாப்பிட்ட! இப்ப பாலும் வேணாம்னு சொன்னினா, அப்புறம் டீச்சர் இந்த வீட்டில் ஊஞ்சல் ஆட விட மாட்டாங்க.. அப்படி தானே டீச்சர்?” எடுத்துக் கொடுத்தாள் சிவானி.
“ஆமா.. ஆமா” என்றாள் கவியும் வேகமாக தலையை ஆட்டியபடி!.
“சரி கொடுங்க” என்று கையை நீட்டினாள் மீனு. பால் கூடவே நான்கு ரஸ்க்கையும் கொடுத்தாள் கவி.
அவற்றை சாப்பிட்டு முடித்த பின் தான் மீனுவின் முகம் கொஞ்சம் தெளிவானது!
அச்சோ.. இப்படி சின்ன பிள்ளைய இப்படி பசியோட விட்டுட்டு அப்படி என்ன அந்த ரஞ்சிதாவுக்கு டவுனில் வேலை? கவிக்கும் கோபம் வந்தது.
உடனே தன் போனை எடுத்து ரஞ்சிதாவின் எண்ணிற்கு அழைப்பு விடுத்தாள்.
போனை எடுக்கவில்லை.
ஆனால் வாசலில் வெகு அருகில் போன் அடிப்பது தெரிந்து, வாசலை நோக்கினாள் கவி.
ரஞ்சிதா தான்!
உள்ளே வந்தவள், “ஏய்.. மீனு.. நீ இங்கயா இருக்க? ஸ்கூல் விட்டவுடன் வீட்டுக்கு வராம, இங்க என்ன பண்ணிட்டு இருக்க?” என்று மீனுவின் தலையில் ஒரு குட்டு குட்ட, சிறுமியின் கண்களில் குபுக்கென்று கண்ணீர் வந்தது!
“அம்மா.. தாயே.. உடனே பைப்பை திறந்து விட்டுடாதே.. அப்புறம் உன் அப்பனுக்கு பதில் சொல்ல முடியாது! அதான் போட்டு விட இங்க நிறைய பேர் இருக்காங்களே” என்று திட்டி விட்டு, அவள் கையைப் பிடித்து இழுத்து வைத்துக் கொண்டு, “ரொம்ப தாங்க்ஸ் டீச்சர். சிவானி அம்மா சொன்னா.. இங்க தான் ரெண்டு பேரும் விளையாடிட்டு இருக்கிறதா!
இனிமே இங்க வந்து இவ உங்களை தொல்லைப் பண்ணாம பாத்துக்கறேன்” என்றாள் ரஞ்சிதா கவியிடம்.
“அச்சோ.. அப்படி எல்லாம் இல்லங்க. நானே ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்து போரடிச்சுகிட்டு தான் உட்கார்ந்து இருக்கேன்.
நாலு பசங்களுக்கு டுயுஷன் எடுக்கலாமான்னு பார்க்கிறேன். உங்க பர்மிசன் வேணும்”.
“தாராளமா எடுங்க. ஆனா இங்க ஒருத்தரும் ஒழுங்கா பீஸ் தர மாட்டாங்க அதையும் பார்த்துக்கங்க”. என்றாள் ரஞ்சிதா சிரித்தபடியே.
“அதெல்லாம் ஒண்ணும் வேணாங்க. நான் ப்ரீயாக தான் எடுக்க போறேன்”.
“அப்படின்னா.. வீடு கொள்ளாம பிள்ளைங்க வந்து சேர்ந்துடும். ஆளுங்கள பார்த்து சேர்த்துக்கங்க.
இங்க வந்து தோட்டத்தில் மாங்காய், கொய்யாக்கா அடிக்காம பார்த்துக்கணும். பூச்செடிங்கள பிச்சு போடாம பார்த்துக்கணும்!”
“அது நான் பார்த்துக்கிறேன். பெரிய பசங்ககளுக்கு மட்டும் தான் அதாவது நைன்த் டென்த் பசங்களுக்கு மட்டும் தான் எடுக்க போறேன். ஆனா உங்க பாப்பாவை மட்டும் வேணா அனுப்பி வைங்க”.
“அப்ப சரி. நானே கேக்கலாம்னு இருந்தேன். நீங்களே சொல்லிட்டீங்க. மீனுவை டுயுஷன் அனுப்பி வைக்கிறேன். பார்த்துக்கங்க” என்று சொல்லி விட்டு அவளை வீட்டுக்கு அழைத்து சென்றாள் ரஞ்சிதா.
“நீயும் வேணுமின்னா வாம்மா” என்றாள் கவி சிவானியைப் பார்த்து.
“இல்ல டீச்சர். எங்கம்மாவே சொல்லி தருவாங்க. நான் வரலை” என்று சொல்லி விட்டு அவளும் கிளம்பி போனாள்.
அவர்கள் எல்லோரும் போனவுடனே, அங்கிருந்த மஞ்சுவின் போட்டோவைப் பார்த்து மனதுள், “ஏம்மா .. உன்னோட ஆசைப் பொண்ணு இப்ப இங்க இப்படி சீரழியுது. நீ அப்படி எங்க தான் போன? சீக்கிரம் வா” என்று நினைத்துக் கொண்டே கவினுக்கு போன் செய்தாள் கவி.
“அது தான் நீ வந்துட்ட இல்ல. நீ பார்த்துக்கோ. நீ தான் இனிமே என் ப்ளேஸ்ல இருந்து எல்லாம் பார்த்துக்கணும். என்னால இப்ப அங்க திரும்ப வர முடியாது” என்றான் கவின் போனில்!
“டேய்.. டேய்.. போனை அட்டென்ட் பண்ணிட்டு அங்க யார்கிட்டடா பேசிட்டு இருக்க?”
“கொஞ்சம் இருக்கா. இங்க ஒரு பஞ்சாயத்து.. முடிச்சுட்டு வர்றேன்” என்று சொல்லி அவள் போன் காலை ஹோல்டில் வைத்தான் கவின்.
ரொம்ப நேரமாகியும் அவன் திரும்ப வராததால், சற்றே கோபம் வந்து போன் காலை கட் பண்ணி விட்டாள் கவி. அப்புறமா பேசிக்கலாம் என்று நினைத்து.
ஆனால் போனை வைத்த பின்னும் கவிக்குள் மீண்டும் அந்த குரல் கேட்டது.
“அது தான் நீ வந்துட்ட இல்ல. நீ பார்த்துக்கோ. நீ தான் இனிமே என் ப்ளேஸ்ல இருந்து எல்லாம் பார்த்துக்கணும். என்னால இப்ப அங்க திரும்ப வர முடியாது!” அதே பேச்சு! ஆனால் கவினின் குரலில் அல்ல!
இம்முறை ஒரு பெண்ணின் குரலில்!
———-
“சார். சார். போதும் சார். இப்பவே ஓவராகிடுச்சு. இதுக்கு மேல குடிச்சா நாளைக்கு மீட்டிங் அட்டென்ட் பண்ணவே முடியாது! ப்ளீஸ் சொன்னா கேளுங்க..” தினேஷ் தடுத்தான்.
“டேய்.. விடுடா.. அதெல்லாம் நான் பார்த்துப்பேன். இப்ப நான் தூங்கனும். இது இல்லாட்டி முடியாது” என்று தினேஷை தள்ளி விட்டு மீண்டும் அடுத்த ரவுண்டை தொடங்கினான் ரகு!
ரகோத்தமன்!
ரகோத்தமன் ஒரு வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர். பெரிய அளவில் இல்லையென்றாலும் அடுத்தவரிடம் கை கட்டி வேலை செய்யாது, தன் கீழ் நூறு பேர் கொண்ட டீம் வைத்து தன் தொழிலை நடத்தி வருபவன்.
அவனுக்கு இப்படி ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தவள் இப்போது அவனோடு இல்லை!
சாதாரண குடும்ப பின்னணியில் பிறந்து வெறும் டிப்ளமோ மட்டுமே படித்து இருந்த அவனை விடாது துரத்தி துரத்தி காதலித்து, அவனைத் தான் கல்யாணம் செய்வேன் என்று பிடிவாதம் பிடித்து, சாம பேத தான தண்டம் அனைத்தையும் உபயோகித்து அவள் அப்பாவை சம்மதிக்க வைத்து திருமணம் செய்தவள் அவனின் மஞ்சு!
அவன் நெஞ்சமெல்லாம் நீக்கமற நிறைந்து இருக்கும் அவனின் மஞ்சு!
வெறும் பிடிவாதம் மட்டுமில்லை! அவனின் தகுதியை கொஞ்சமேனும் வளர்த்து விட்டு தான் கல்யாணம் என்று, டிப்ளமோ படித்த அவனை பிஈ சேர வைத்து, தான் ஒரு ஜவுளிக் கடையில் வேலைப் பார்த்து அவன் படிப்புக்கு உதவி அவன் படித்து முடித்து ஒரு ஜப்பான் கம்பெனியில் வேலை வாங்கும் வரை வைராக்கியமாக காத்திருந்து கரம் பிடித்தவள்!
ஆசை ஆசையாய் அவனுடன் குடித்தனம் நடத்தி, தொழிலில் அவனை அடுத்த கட்டத்திற்கும் நகர்த்தியவள்!
அவன் மகவை ரசித்து ரசித்து சுமந்தவள்.
அப்படி சுமந்த அந்த சுகமான சுமையை ஒவ்வொரு நிகழ்வையும் தான் போனில் பதிவு செய்து பத்திரப்படுத்தியவள்!
அவள் தான் இப்போது அவனை வேண்டாம், அவன் குழந்தையை வேண்டாம் என்று வேறு ஒருவன் கரம் பற்றி சென்று விட்டாள்!
இன்னமும் ரகுவால் நம்ப முடியவில்லை!
இதெல்லாம் கெட்ட கனவாக இருந்திட கூடாதா என்று அவன் மனம் ஏங்கும்!
ஆனால் கனவில் கூட அவள் அப்படி செய்வாள் என்று ஒரு நாளும் அவன் நினைத்ததில்லை!
ஆனால் போய் விட்டாளே!
என்னையும் என் பொண்ணையும் வேண்டாம் என்று விட்டு விட்டு!
அதுவும் எப்படி?
மாமா வடிவேலை எனக்குப் பிடிச்சுருக்கு. நான் அவனோட என்னோட வாழ்க்கைய ஆரம்பிக்க போறேன்னு! எழுதி வச்சுட்டு!
அந்த வடிவேலை நான் எப்படி மரியாதையா நடத்தினேன்!
நம்ம வீட்டுல எத்தனை வாட்டி சாப்பிட்டுருப்பான்! பாவி!
இப்படி உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்ணிட்டானே!
அவன் மடியில வச்சு தானே மீனு குட்டிக்கு காது குத்தினோம்!
அப்படிப் பட்ட அவன் கூட போய்!
எப்படி மஞ்சு உனக்கு மனசு வந்திச்சு?
அக்கா கூட கேட்டுச்சே அது மஞ்சு ஹேன்ட் ரைட்டிங் தானான்னு!
எனக்கு தெரியாதா என் மஞ்சுவோட கையெழுத்தை!
காதலிக்கும் போது எத்தனை கிரீட்டிங் கார்ட்ஸ் அனுப்பி இருப்பா! அதுவும் அவ கையால வெட்டி ஒட்டி! அத்தனையும் பொக்கிஷமாக வச்சுருக்கேனே!
உன் காட்டுத் தனமான முரட்டு லவ்வால, என்னையும் உன்னை லவ் பண்ண வச்சியேடி!
ஆனா அப்படி லவ் பண்ணின உனக்கு நான் எப்போடி வேண்டாதவனா போனேன்?
அப்படி என்ன குறை வச்சேன்?
உனக்கு நேரம் ஒதுக்க முடியாம போனது என்னமோ உண்மை தான்!
அதுவும் கூட நீ ஆசைபட்ட இடத்துக்கு நாம முன்னேறனும் தானே! அதுவும் நீ சொல்லி தானேடி!
அப்புறம் என்னடி உனக்கு!
நான் உன் கூடவே இருக்கணும்னு நீ ஒரு வார்த்தை சொல்லி இருந்தா, எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு உன் சேலை முந்தானையைப் பிடிச்சு கிட்டு நம்ம வீட்டிலேயே இருந்தே நம் தொழிலை பார்த்துட்டு இருப்பேனே!
நீ அப்படி ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையே!
இப்ப நான் உன்னை மறக்க முடியாம, என்னை மறக்க மொடா குடிகாரன் ஆகிட்டு இருக்கேன்.
நம்ம பொண்ணை பார்த்தா உன்னோட நினைப்பு ரொம்ப வருது எனக்கு!
அதனால அவ பார்க்கனும்னு மனசு பூரா அடிச்சு கிட்டாலும் பல்லைக் கடிச்சுட்டு பார்க்காம அவாய்ட் பண்ணிட்டு இருக்கேன்!
ஏதோ ரஞ்சி இருக்கிறதால கொஞ்சம் நிம்மதி!
மீனுவைப் பத்தின கவலை இல்லை!
அவ கிட்ட இருந்தா மீனு அம்மாவைத் தேடாம இருப்பா!
அதுவுமில்லாம இப்படி அவ முன்னாடி, மீனு முன்னாடி நான் இப்படி குடிச்சுட்டு நிக்க முடியாதே!
அதனால தான் இப்படி ஊர் ஊரா சுத்திட்டு வீட்டுக்கே போகாம இருக்கேன்!
தான் போனில் இருக்கும் மஞ்சுவின் போட்டோவைப் பார்த்தபடியே பேசிக் கொண்டிருந்தான் ரகு!
மீண்டும் கையில் இருந்த மதுவை பாட்டிலோடு வாயில் கவிழ்த்துக் கொண்டவன், போனில் சேமித்து வைத்திருந்த மஞ்சுவின் பழைய வீடியோக்களை பார்க்க தொடங்கினான்!
எதிரில் டிவி ஓடிக் கொண்டிருந்தது!
ரகுவை தடுத்து தடுத்துப் பார்த்து விட்டு கடுப்பாகி அவன் அசிஸ்டெண்ட் தினேஷ் அங்கிருந்து கிளம்பி இருந்தான்.
அப்ப நீயும் என்னை அப்படி தான் நினைச்சுட்டு இருக்கியா மாமா? அப்ப நீ என்னை நம்பல இல்ல? தேடவே இல்லல? டிவியில் ஏதோ ஒரு தமிழ் சீரியல்!
அதில் ஒரு பெண் தன் கணவனின் சட்டையைப் பிடித்து உலுக்கி கேள்விக் கேட்டுக் கொண்டே அழுது அவன் காலடியில் சரிந்தாள்.
அவள் கண்களின் கண்ணீர் அந்த நடிகனின் பாதத்தில் தெறித்தது!
ரகு ஒரு கையால் பாட்டிலைப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையால் கசிங்கி போய் விட்டருந்த தன் சட்டைக் காலரை நீவி விட்டான்.
அவன் பாதங்களில் கூட ஈரம்!
error: Content is protected !!