Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

மாய பூ இவள் 1 (1)

கணபதியே துணை


பரந்து விரிந்து இருக்கும் பூஞ்சோலை கிராமத்தின் பிரதான சாலையில் தனது அமிகோ உடன் பறந்து கொண்டு இருந்தான் ஆதித்யன். பூஞ்சோலை கிராமத்தின் முக்கிய விஷேசமான அம்மன் கோயில் திருவிழா இந்த ஆண்டு  நடைபெற உள்ளதால் அதற்கான ஏற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்காக சென்று கொண்டு இருக்கிறான்.கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா தொற்று நோய் காரணமாக நின்று போய் இருந்த திருவிழாவை வெகு விமரிசையாக கொண்டாட உள்ளனர்.இந்த ஆண்டு கோவில் திருப்பணிகள் ஆதித்யன் குடும்பத்தின் பொறுப்பு என்பதனால் கரும சிரத்தையுடன் பார்த்துக் கொள்கிறார்கள். ஊரில் மதிப்பு மிக்க பெரிய குடும்பம் ஆதியின் குடும்பம். ஊரில் உள்ள இவர்களுடைய விவசாய நிலங்களை  சுற்றி பார்த்தாலே பூஞ்சோலை கிராமத்தின் கால் வாசி பகுதி முடிந்து விடும். இது மட்டும் இல்லாமல் இன்னும் பிற தொழில்களும் செய்கின்றனர்  . ஆதியின் தாத்தா ராஜன் அவரது மனைவி தெய்வானை. இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள். மகளை பக்கத்து ஊரில் திருமணம் செய்துக் கொடுத்துள்ளார். மூத்த மகன் வரதன் அவரது மனைவி சந்திரா இவர்களுக்கு ஒற்றை மகன் ஆதித்யன்.ஆதி பொறியியல் முடித்து விட்டு மூன்று ஆண்டுகளாக தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தான்.அப்போது நடந்த விபத்திற்கு பிறகு வீட்டில் உள்ளவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க இங்கேயே வந்து விட்டான். இப்போது அனைத்து தொழில்களையும் அவன் தான் பார்த்து கொள்கிறான்.இரண்டாவது மகன் நந்தன் அவரது மனைவி சாந்தி இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள்.மகள் மித்ரா மருத்துவம் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள்.மகன் ஆதர்ஷ் பொறியியல் கடைசி ஆண்டு படிக்கிறான். ராஜனின் மகள் ராதா மற்றும் கணவர் வாசு இவர்களுக்கும் ஒரு மகன் ஒரு மகள்.மகள் சங்கவியும் மித்ராவும் ஒன்றாக படிக்கிறார்கள்.மகன் சஞ்சய் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படிக்கிறான். கோயில் வேலைகள் மேற்பார்வை பார்த்து விட்டு சில திருத்தங்கள் சொல்லி விட்டு அங்கே இருந்து அவர்களின் தோப்பு வீட்டுக்கு சென்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!