நிலவை வரவேற்க கருநீல மேகங்கள் வானத்தை முழுவதும் ஆக்கிரமித்திருந்ததால் அவ்விடம் முழுவதும் இருட்டில் மிதந்து கிடைந்தது…
Advertisement
அந்த நேரம் “நவி…நவி…” என்று மேற்கிலிருந்து ஒரு குரல் பதட்டாமாய் எதிரொலித்து கொண்டிருந்தது… அந்த இருட்டில் காற்றில் மிதந்து வந்த குரலுக்கு சொந்தக்காரர் வேறு எவருமில்லை நம் வாசுதேவன் தான்…
மலைக் காட்டை நோக்கி வேகமாக சென்றவள் மாலையாகியும் வீட்டிற்கு திரும்பவில்லை என்றதும் பெரியவர்களுகிடையில் பதட்டம் நிலவியது.
Advertisement
Advertisement
இன்றைக்கென்று ஊரில் அம்மனுக்கு சிறப்பு பூஜை என்பதால் அக்கம் பக்கத்து தோட்டார்க்கரார்கள் முதற்கொண்டு காட்டிற்கு வேலைக்கு வந்த வேலையாட்கள் அனைவரும் ஊரில் தான் இருந்தனர். அதில் நவியின் பெற்றோர்களும் அடக்கம்.
இந்நேரம் பார்த்து இதயாவை அழைத்துக் கொண்டு பக்கத்து ஊரிலுள்ள மருத்துவமனைக்கு சென்றிருந்தான் ஹரிஹரன்.
Advertisement
தற்போது அவசரத்திற்கு எவரும் இல்லாமல் போக, வேறு வழியில்லாமல் உறங்கி கொண்டிருந்த மகனை எழுப்ப சென்றார் ஜானகி.
அந்த நேரம் நிஜத்தில் நடந்த கொடூரங்கள் அனைத்தும் கனவில் வந்து வீறிட்டு எழுந்தான் அவரின் மகன்.
இளையவன் கத்தியதும் பிடித்த கைகளில் அழுத்தம் கூட்டி “வாசு. என்னாச்சு டா தங்கமே…” என பதட்டமாக கேட்டார் ஜானகி. இவரின் குரல் அவனுக்கு கேட்டது போல் தெரியவில்லை மேலும் அலறினான்…
அவனின் அலறல் மற்றதை மறக்க வைக்க, கனத்த இதயத்துடன் அவ்வறையை விட்டு நகர்ந்தார். கண்கள் தானாகவே கலங்கியது ஜானகிக்கு. யார் என்ன செய்தார்கள்? என்ன நடந்திருக்கும் என்ற கேள்விகள் எதுவும் அவருக்கு எழவில்லை. விடை தெரிந்த பின் கேள்விகளுக்கு அங்கென்ன வேலை.
அக்கணம் பல வித உணர்வுகள் அவரைத் தாக்கியது.முற்றத்திலிருந்த சாய்வு நாற்காலியில் பொத்தென அமர்ந்தார்.
மனம் முழுக்க வெறுப்பில்,கோபத்தில் மிதந்தது. ஒரு பக்க மனம் மகனின் அன்றைய நாட்களை ஓட்டிப் பார்த்தது. அவனது அதீத பயமும், மற்ற ஆண்களிடம் அதிகம் பேசாது விலகி சென்றது என்று அனைத்தும் கண்முன்னே மின்னி மறைந்தன.
இதுவரையிலும் மகளாக, காதலியாக, மனைவியாக நான் தோற்று இருக்கலாம் ஆனால் ஒரு தாயாக நான் தோற்கவில்லை என்ற எண்ணத்தில் இருந்தவருக்கு தற்பொழுது ஒரு தாயாகவும் தோற்று விட்டோம் என்ற எண்ணமே வலியை கொடுத்தது. இதயத்தை யாரோ காலில் மிதிப்பது போன்ற வலி எழுந்தது. கண்களை இறுக மூடி அமர்ந்து விட்டார்.
அடுத்த சில நிமிடங்களில் இளையவன் வந்துவிட, நடந்ததை மணியும், அய்யமாளும் கூறினார்கள். அடுத்த நிமிடம் மணியணின் அலைபேசியை வாங்கிக் கொண்டு மலைக்காட்டை நோக்கி நடந்தான் வாசுதேவன்.
இங்கு ஜானகிக்கோ மகன் கீழே வந்ததும் தெரியவில்லை,அவன் அங்கிருந்து புறப்பட்டு சென்றதும் தெரியவில்லை… அவரின் எண்ணங்கள் முழுவதையும் வாசு ஒருவனே ஆக்கிரமித்திருந்தான்.
அதே சமயம் வாசுவும் தாயை கவனிக்கவில்லை. அவரை கவனித்திருந்தால் தன் அறைக்கு வந்தவர் யாரென்று யூகித்து இருப்பானோ என்னவோ…
அக்கணம் அவன் மனம் முழுவதும் ஒருவளிடம் மட்டுமே இருக்க அன்னையின் மாற்றம் புத்தியில் பதிந்தாலும் அதனை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை…
வீட்டிலிருந்து அடுத்த கால் மணி நேரத்தில் மலைக் காட்டினுள் நுழைந்து இருந்தான் வாசுதேவன்… முன்பே ஜானகியும், வாசுவும் மலைக் காட்டிற்கு சென்று வந்திருந்ததால் எவ்வித பதற்றமும் இல்லாமல் காட்டில் தன் தேடலை தொடங்கினான்.
நிமிடங்கள் பல கடக்க வாசுவின் தேடல் அனைத்தும் பூச்சியமாகிப் போனது. எங்கு தேடியும் அவள் இல்லாமல் போக, இத்தனை நேரம் அவனை விட்டு விலகி நின்ற பயமும், பதட்டமும் ஆடவனுள் ஒட்டிக் கொண்டது. அதன்விளைவு அன்றைய இதயாவின் நிலை கண்களுக்குள் வந்து மறைந்தது.
படபடவென துடிக்கும் இதயத்தை தடவிக் கொண்டே “நவீஇஇ…” எனக் கத்தியப்படி முன்னால் நடந்து சென்றவனின் கண்களை விதி மறைத்ததுதோ? என்னவோ… கடும் இருட்டில் அவனுக்கு முன்னிருந்த அகழி தெரியவில்லை.. கால் இடறி அந்த குழியில் விழுந்தான்.
நிமிடம் என்ன நடந்தது என்றே வாசுவிற்கு புரியா நிலை… எதிர்பாராத நிகழ்வில் மறைவோன் இதயம் படபடவென துடித்தது.ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டவன் மெல்ல கண்களை சுழல விட்டான்.
விவசாய நிலத்தில் யானைகள் புகுந்து விடாமல் இருக்க அகழிகள் தோண்டப்படும்… அப்படியான அகழியில் மாட்டிக் கொண்டதை சில நொடிகள் கடந்தே உணர்ந்தான். கை ஊன்றி எழுந்து நின்றவனுக்கு அங்கங்கள் முழுவதும் செம்மண் ஒட்டிக் கொண்டது மட்டுமல்லாமல் சில இடங்களில் சிராய்ப்பும் இருந்தது.
அதனை பொருட்படுத்தாமல் சுற்றும் முற்றும் பார்வையை சுழல விட்டவனுக்கு அப்போது தான் அக்குழியில் இன்னொருவர் விழுந்து கிடந்தது தெரிந்தது. நிமிடம் திக்கென்றது அவனுக்கு. படபடவென அடித்த மனதினை தடவிக் கொண்டே
அந்த உருவத்தை நோக்கி நடந்தான். அதை நெருங்க நெருங்கவே
அது யாரென்று யூகிக்க நொடிகள் தேவைப்படவில்லை அவனுக்கு. அவசரமாக மங்கையின் அருகில் ஓடியவன் குப்புற விழுந்து கிடைந்தவளை நிமிர்த்தினான். நெற்றியில் லேசாக சீராப்பு இருந்தது..
அதைத் துடைத்துக் கொண்டே
“நவீ… ” என்றழைத்தவனின் குரலில் எவ்வளவு முயன்றும் ஒருவித பதட்டம் வெளிவர தான் செய்தது.
இது பதட்டம் கொள்ளும் நேரமில்லை என்று மனம் சொல்ல, கலங்கிய கண்களை அழுத்தி துடைத்து கொண்டே “நவி… நவி…” என்றழைத்தான்.
அவளிடம் துளியும் அசைவில்லை ‘நவி எழு மா, என்னாச்சு…” என்று மங்கையின் கன்னத்தை தட்டினான். ஹிஹிம் அவனின் குரல் துளியும் அவளின் செவிகளை தீண்டிடவில்லை. மங்கையிடம் அசைவில்லை என்றதும் அவனையும் அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வெளிவர ஆரம்பித்து இருந்தது.
அதே நேரம் ஆடவன் கண்களிலிருந்து வெளிவந்த கண்ணீர் சொட்டு சொட்டாக மங்கையின் கன்னத்தில் விழுந்தது…
அக்கண்ணீரின் ஈரம் அவளுள் என்ன மாயம் செய்ததோ? இறுக்கமாக பிண்ணிப் ப்பிணைந்திருந்த மங்கையின் இமைகள் இரண்டும் மெல்ல பிரிந்தது… “ஸ்…” என்ற முனகலை தொடர்ந்து இருமிக் கொண்டே எழுந்து அமர்ந்தாள்.
“ஒன்னுமில்லை… ஒன்னுமில்ல…” என்றவன் கைகள் பாவையின் முதுகை தடவிக் கொடுத்தாலும் கண்கள் என்னவோ மங்கையின் மற்ற பாகங்களில் காயங்கள் இருக்கிறதா என்பதை போல் ஆராய்ந்தது. நெற்றிலும் கைகளிலும் தவிர மற்ற இடங்களில் காயம் இல்லையென்ற பிறகு தான் அவனுக்கு உயிரே வந்தது…
“உப்…”என வாயில் காற்றை நிரப்பி வெளிவிட்டவன் “நவினா… ஆர் யூ ஒகே…” என கரகரத்த குரலை சரி செய்து கொண்டே கேட்டான்.
“ம்…” என்றவளின் பார்வை அவ்விடத்தை சுற்றியே வந்தது. மொத்த இடமும் இருள் சூழ்ந்திருக்க சட்டென்று எவ்விடத்தில் உள்ளோம் என்பதை யூகிக்க முடியவில்லை அவளால்.கண்களில் கேள்வியை தேக்கியப்படி பார்வையை சுழல விட்டாள்.
மங்கையின் கேள்வி நிறைந்த பார்வையை உணர்ந்தவன் “யானைக்காக தோண்டி இருக்கிற குழியில விழுந்துட்டோம்…” என்றான்.
“ம்ம்ம்…” என்றவளுக்கு அப்பொழுது தான் வாசுவின் அணைப்பில் இருக்கிறோம் என்றே புரிந்தது சட்டென அவனை விலகி அமர்ந்தாள்.
மங்கையின் அவசர விலகலில் புருவங்கள் சுருங்க பார்த்தவன் குரலை செருமிக் கொண்டே “இந்த நேரத்துல இங்க எதுக்கு தனியா வந்த? கொஞ்சம் கூட அறிவே இல்லையா உனக்கு…” எப்படி முயன்றும் அவனது குரலில் கோபம் வெளிவந்தது.
வாசுவின் கோபக் குரலில் சட்டென அவம் புறம் திரும்பினாள். தற்போது இருட்டு அவளுக்கு பழகியிருக்க ஆடவனின் கோப முகம் நன்றாகவே தெரிந்தது. அவனது முகத்தை ஆழ்ந்து பார்த்தவளுக்கு மாலையில் அவன் பேசிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் கேட்டது. கண்களை இறுக மூடித் திறந்தவள் அவனது கேள்விக்கு பதில் பேசாது அன்னார்ந்து குழியின் ஆழத்தை பார்த்தாள்.
அவனின் பேச்சும் பல்லைக் கடிக்கும் விதமும் இவளுக்கு கோபத்தை கொடுத்திருந்தது… இருந்தும் அவனைப் போல கோபப்படவில்லை நிதானமாக திரும்பி ‘ எதுக்குன்னு தெரியாதா?…’ என்பதை போல் பார்த்தாள்.
அந்த பார்வை கூறும் செய்தி அவனுக்கு துளியும் புரியவில்லை. சொல்லப்போனால் நடந்த கலவரத்தில் மாலையில் இருவருக்குள்ளும் நடந்த வாக்குவாதத்தை மறந்து இருந்தான்.
“பார்வைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை…” என முணுமுணுத்தவன்
எழுந்து நின்றான். குழியிலிருந்து மேலே செல்ல முடியுமா என்று பார்த்தான்.
நிச்சியம் எவராவது வர வேண்டும் இல்லையென்றால் மேலேற முடியாது என நினைத்தவனுக்கு அப்பொழுது தான் மணியனின் அலைபேசியை வாங்கி வந்தது நினைவு வந்தது.
சட்டென பாக்கெட்டிலிருந்த மணியனின் அலைபேசியை எடுத்து அன்றைக்கு அழைத்த பக்கத்து வீட்டு பெண்மணிக்கு அழைத்தான். அவர் அழைப்பை ஏற்காது போகவும் கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டே நவியை பார்த்தான்.
இத்தனை நேரம் வாசுவின் செயலை பார்த்தபடி அமர்ந்து இருந்தவள் அவன்,இவள் புறம் திரும்பவும் சட்டென பார்வையை திருப்பிக் கொண்டாள். “ஆம்பளை எனக்கே மூச்சு முட்டற அளவுக்கு பார்த்து வைக்க வேண்டியது…” என முணுமுணுத்து கொண்டே “போன் எடுக்கல…” என்றான்.
மீண்டும் நொடிகள் மெளனமாய் கரைய, அக்கணம் தீடிரென யானை பிளுறும் சத்தம் கேட்டது.
வெடுக்கென நிமிர்ந்தவள் கண்களை விரித்து வாசுவை பார்த்தாள். அவனுக்குமே அதிர்ச்சியாக தான் இருந்தது. “தூரத்தில எங்கயோ இருக்கு போல… போயிடும் நீ பயப்படாத…” மெல்லியதாக பயத்தில் துடித்த மனதை அடக்கிக் கொண்டே கூறினான்.
அந்நேரம் படபடவென மரக் கிளைகள் உடையும் சத்தத்தோடு யானை பிளிரும் சத்தம் அருகில் கேட்பது போல் இருக்க பயந்தே போனாள் மங்கை…உடல் நடுங்க, கண்களை இறுக மூடி கொண்டவள் தரையில் கைகளை ஊன்றிக் கொண்டாள்.
மங்கையின் செயலை இமைக்காமல் பார்த்தது பார்த்தபடி அமர்ந்திருந்தான். மீண்டும் யானை பிளிரும் சத்தம் காதிலேயே கேட்க செவியை இறுக மூடியப்படி அம்மாயென்று கத்தினாள்.
நொடியும் யோசிக்காமல்
சட்டென அவளை இழுத்தணைத்து கொண்டான். அக்கணம் மற்ற அனைத்தும் மறந்து போக அவனது நெஞ்சில் கைவைத்து தள்ள முயன்று கொண்டே “என்னை விடு தேவ்…” என்றாள்.
அதே நேரம் யானை பிளிரும் சத்தம் இருவரின் காதுகளையும் துளைக்க, காரிகையின் உடல் தன்னாலேயே பயத்தில் நடுங்கியது.
இருந்தும் “தேவ்…என்னை விடு…” என்க, “ஸ்…கொஞ்சம் நேரம் அமைதியா இரு…” என்றவன் மங்கையை இன்னும் தன்னில் இறுக்கி கொண்டான்.
நிமிடங்கள் கரைய இருவருக்குள்ளும் இருக்கும் பிணைப்பும், இறுக்கமும் அதிகரித்ததே தவிர குறையவில்லை…
அக்கணம் கோவிலுக்கு சென்ற அக்கம் பக்கத்தினரை அழைத்து கொண்டு காட்டிற்குள் விரைந்து இருந்தார் மணியன். யானையை விரட்டியடிக்க அனைவரின் கையிலும் தீ பந்தம் இருந்தது.
அடுத்த சில நிமிடங்களில் யானையை காட்டில் விரட்டி விட்டவர்கள் இளையவர்களைத் தேடத் தொடங்கினார்.
காட்டை நோக்கி சென்றாலும் யானையின் பிளுறும் சத்தம் விடாமல் கேட்டுக் கொண்டு தான் இருந்தது. அதில் மற்றவர்கள் பேசும் சத்தம் இளையவர்களுக்கு கேட்காமல் போனது.
“அய்யா…எதுக்கும் குழிய ஒரெட்டு பார்த்திட்டு வருவோமாங்கய்யா?…” கூட்டத்தில் ஒருவன் கேட்கவும் அதுவும் சரியென்று தோன்ற அனைவரும் குழியை நோக்கி நடந்தனர்.
*******
அதே சமயம் இங்கு
பெரியதாக வாகன நெரிசல் இல்லாத அந்த கிராமத்து சாலையில் பயணித்து கொண்டிருந்தது சுதனின் நான்கு சக்கர வாகனம். சாலையின் இரண்டு புறங்களிலும் பெரியதாகவும் இல்லாமல் சிறியதாகவும் இல்லாமல் கட்டப்பட்டிருந்த மாடி குடியிருப்புகளை பார்த்தபடி வந்தாள் இதயா.
மறந்தும் கணவனின் புறம் திரும்பவில்லை அவள். ‘நீ இல்லாமல் தான் காய்ச்சல் வந்தது…’ என்று கூறிவிட்ட பிறகும் மருத்துவமனை அழைத்து செல்லும் கணவனின் மீது கோபம் அவளுக்கு. அதனாலயே அவன் புறம் திரும்பாது அமர்ந்திருந்தாள்.
வெகு நேரமாக ஆட்சி செய்து கொண்டிருந்த மெளனத்தை களைக்கும் விதமாக “ஒரு ஃபீயூ மினிட்ஸ் மா… ஹாஸ்பிடல் போயிடலாம்…” என்றான் மனைவியை பார்த்தபடி.
கணவனின் குரலில் சட்டென திரும்பி பார்த்தாள் இதய நிலா. அவளது பார்வையில் ‘என்னமா?…’ என்பதை போல் புருவத்தை உயர்த்தி கேள்வியாக கேட்டான். அவனது தலையிலேயே ஓங்கி தட்ட வேண்டும் போல் தோன்றியது. தன் மனதினை வெகுவாக அடக்கியப்படி கேள்வனை பார்த்தாள்.
மனைவியின் பார்வையில் புரியாமல் விழித்தவன் “என்ன நிலவே…” எனக் கேட்டான்
“என்ன நொன்ன நிலவே… எனக்கு காய்ச்சல் இல்லைன்னு சொல்லியும் ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்து இருக்கீங்க… எனக்கு நீங்க இல்லாம தான் காய்ச்சல் வந்ததுன்னு சொல்றேன் அதை கொஞ்சம் கூட காதுல வாங்கிக்காம ஹாஸ்பிடல் போலாம் வான்னு கூட்டிட்டு வந்தா என்ன சொல்றது நான். சரியான மண்ணு…” மற்ற அனைத்தையும் கோபமாக கத்தி பேசிவிட்டு ‘சரியான மண்ணு…’ என்றதை மட்டும் அவனைப் பாராது மெல்லியதாக முணுமுணுத்தாள்.
“என்ன நிலா? கேட்கலை…” எனக் கேட்டவனின் செவி அவளின் இதழின் ஓரத்தில் இருந்தது.
ஆடவனின் சூடான மூச்சுக் காற்று கன்னத்தில் மோதியதும் கண்களை அகல விரித்து “ஹான்…” என்று திரும்பியவளின் இதழ்கள் மன்னவனின் கன்னத்தில் அழுத்தமாக பதிந்தது.
“என்னமோ சொன்ன மாதிரி இருந்தது. எனக்கு சரியா கேட்கலை…” எனக் கேட்டான். அவனது குரலில் குறும்பு கூத்தாடியது.
“ம்ம்…” என்றவளுக்கு பேச்சே வரவில்லை. கேள்வனின் குறுந்தாடியின் குறுகுறுப்பும், கன்னத்து ஸ்பரிசமும் அவளை ஏதோ செய்தது.
இதழ் முத்தத்தில் பிடிக்காத பித்தம் வெறும் தாடியின் குறுகுறுப்பிலும், கன்னத்து மென்மையிலும் பிடித்துக் கொள்ளும் போலிருந்தது. அடிவயிற்றில் பட்டாம்பூச்சி ஒன்று படபடவென பறக்க ஆரம்பிக்க, அது இளையாளின் இமைகளின் படபடப்பில் நன்றாகவே தெரிந்தது.
பெண்ணின் நிலை அவனுக்கும் புரிந்தது போல “என்னாச்சு நிலவே…” எனக் கேட்டவனின் கன்னங்கள் அவளது இதழ்களை அழுத்தி, கன்னத்தை தொட்டு, கழுத்து வளைவில் பதிந்து மீண்டது.
கேள்விக்கு பதில் சொல்லாமல் பார்வையை சுழல விட்டாள்.
அப்பொழுது தான் வாகனம் நிற்பது புரிந்தது மங்கைக்கு. “ஹாஸ்பிடல் வந்துடுச்சா?…” என ஜன்னலின் வழியே தெரிந்த சாலையைப் பார்த்தபடி கேட்டாள்.
இளையாளின் தடுமாற்றத்தை ரசித்து கொண்டே ” இன்னும் இல்லை… கொஞ்சம் தூரம் போகணும்..” என்றவன் வாகனத்தை உயிர்ப்பித்து இயக்கினான்.
அதற்கு பின்னான நிமிடங்கள் முழுவதும் மெளனம் மட்டுமே ஆட்சி செய்ய, மனைவியை பக்கவாட்டில் திரும்பி பார்த்தான். மங்கையின் செவியும், நாசியும், மங்கையின் கன்னங்களுக்கு போட்டியாக சிவந்து கிடந்தது.
ஒற்றைக் கையால் கேசத்தை கோதிக் கொண்டே “அது கிஸ் கூட இல்லை…” என்றான்.
கணவனின் பேச்சில் அத்தனை வெட்கம் வந்தது பெண்ணிற்கு. நெற்றியில் முத்தமிட்டு கொண்டிருந்த கேசத்தை செவியோரத்தில் ஒதுக்கி விட்டப்படி கீழ் இதழ்களை அழுத்திக் கடித்து கொண்டவள் மறந்தும் கணவன் புறம் திரும்பவில்லை. அதற்கு மேல் சுதனும் பேசவில்லை. இப்போதைக்கு இதுவே போதுமென்று நினைத்து விட்டானோ என்னவோ.
அடுத்த சில நிமிடங்களில் ஒரு பெரிய கட்டிடத்தின் முன் நின்றது அவர்களது வாகனம். ஆம் மருத்துவமனைக்கு தான் அழைத்து வந்திருந்தான். அவள் ‘ நீ இல்லாமல் தான் இந்த காய்ச்சல் வந்தது’ என்று கூறிவிட்டாலும் கொட்டும் மழையில் வெகுநேரமாக நனைந்து கொண்டிருந்தாள் என்று கேள்விப்பட்டதுமே மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று முடிவு செய்து விட்டான். அதன்படி அன்று மாலையே மருத்துவமனைக்கு அழைத்தும் வந்து விட்டான்.
அடுத்த அரைமணி நேரத்தில் மருத்துவமனையிலிருந்து இருவரும் கிளம்பி இருந்தனர். மீண்டும் அவர்களது பயணத்தில் மெளனம் மட்டுமே ஆட்சி செய்தது. அதனை இருவருமே களைக்க விரும்பவில்லை