Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

ராகம் – 23.2

‘என்னங்க..??’ என்று அழைத்த போதும் அவன் அசைவின்றி இருப்பதை கண்டவள் ‘நான் புரண்டு படுத்துட்டு இருந்தா இவருக்கு தூக்கம் வராதே அப்புறம் எப்படி இன்னைக்கு தூங்குறாரு’ என்ற சந்தேகம் பிறக்க,

‘நீங்க இன்னும் தூங்கலை தானே..??’ என்று கேட்கவும்,

‘ஆமாடி’ என்று அவனும் தன்னை மீறி உளற உடனே அவன் போர்வையை விலக்கி இருந்தாள் யாழி.

இதை எதிர்பாராதவன் அவளை அதிர்ந்து பார்க்க ,



Advertisement

யாழிக்கோ அவன் முழித்து கொண்டே தன்னிடம் பேசாமல் இருப்பதை கண்டு மனம் வெகுவாக கலங்கி போனது.., பல நாட்களாகவே அவனிடம் கேட்க வேண்டும் என்று எண்ணி இருந்தவள் இன்று ஒருவாறு தைரியம் வரபெற்றவளாக அவனிடம்,

‘நீங்க கோபமா இருக்கீங்களா..??’ என்றாள்.

அதை கேட்டு அதிர்துடியன் புருவங்கள் ஒரு நொடி மேலேறி இறங்கியது.

Advertisement

‘அப்போ நீங்க இன்னும் என் மேல கோபமா இருக்கீங்க அப்படி தானே..??’ என்றாள் மெல்லிய விசும்பலுடன்..,

Advertisement

‘கோபமா..?? எனக்கா..?? எதுக்கு..??’ என்று புரியாமல் பார்த்தவன் ‘இல்லையேடி’ என்றான்.

‘இல்ல நீங்க பொய் சொல்றீங்க உங்களுக்கு இன்னும் என் மேல கோபம் தான்..’ 

‘என்னடி சொல்ற..?? எதுக்கு கோபப்படனும்..??’

Advertisement

“எனக்கு தெரியும் என் மேல கோபமா இருக்கிறதால தான் என்கிட்டே சரியா பேசாம குட் நைட் கூட சொல்லாம தூங்கிட்டு இருக்கீங்க… இல்ல்லல தூங்குற மாதிரி சும்மா படுத்து இருக்கீங்க’ என்றாள் குரலை செருமி,

‘அப்படி எல்லாம் இல்..’ என்று அவன் முடிக்கும் முன்னமே, 

“அப்போ ஏன் இனிமேல் நீங்க தான் என்னோட டெட்டின்னு சொல்லிட்டு .., இப்.. இப்போ.. இதை…” என்று இருவருக்கும் இடையிலான டெட்டியை பார்த்தவளின் மௌனமே இதழ்களை மீறா வார்த்தைகளை அவனுக்கு கடத்திட அவளை உணர்ந்த அதிர்துடியனுக்கோ என்ன சொல்லி சமாதனபடுத்துவது என்று புரியாது அலமலந்து போனான்.

‘யாழி’ என்று அவளை பார்த்தவனோ அவள் விழிகளில் வழிந்த நேசத்தை கண்டு சில நொடிகள் கண்களை இறுக மூடி தன்னை நிதானித்தவன் பின் இருவருக்கும் இடையில் இருந்த டெட்டியை தூக்கி வீசிவிட்டு  மறுநொடியே அவளை இழுத்து தன் மீது போட்டுகொண்டு முதுகில் தட்டி கொடுத்து ‘தூங்கு’ என்றான்.

யாழிக்குமே எங்கே அவன் தன்னை வெறுத்து விட்டானோ என்ற அச்சம் ஏதேதோ சிந்தனையில் இழுத்து கொண்டு சென்று கொண்டிருந்த நிலையில் ‘இப்போது இல்லை அவன் தன்னை வெறுக்கவில்லை’ என்பது புரிய மகிழ்ச்சியில் கண்ணீர் வெளியேறி அவன் மார்பை நனைத்தது.

‘ஸ்டாப் கரையிங் யாழி..’ என்று அவள் கண்ணீரை துடைக்க,

‘நீ மட்டும் என்னை வெறுத்து விடாதே என்னால் தாங்க முடியாது’ என்பதாக நாசி விடைக்க அவனை பார்த்தவள், ‘தெ… தெரியல ஆனா நான் ஏதோ தப்பு..’, என்றவள் நடுங்கும் இதழ்களை பற்கள் கொண்டு கட்டுபடுத்தி ‘சா.. சாரி’ என்றிட, 

அவனோ ‘ப்ச் இனி டெட்டி நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல எப்பவும் வராது நீ எதை பத்தியும் யோசிக்காம அமைதியா தூங்குடி ‘ என்றான் அவள் முகத்தை தன் மார்பில் பதித்து,

அவனது அணைப்பே யாழிக்கு  இத்தனை நாட்கள் கொண்டிருந்த குற்ற உணர்வை போக்கி ஆற்றுபடுத்த போதுமானதாக இருக்க புன்னகையுடன் அவன் கழுத்தை கட்டிகொண்டவளுக்கு அவன் நெருக்கம் ஒரு புறம் இம்சித்தாலும் மறுபுறம் அவனை அவள் தொலைத்து விடவில்லை “இதோ அவன் தன் கைகளுக்குள்” என்ற எண்ணம் மேலோங்கி மனமெங்கும் இதம் பரப்ப  சுகமாக  கண்ணயர்ந்தாள்.

*****************************************

அடுத்த நாள் வழக்கம் போல யாழி படிக்க அமர அதிர்துடியனோ அவள் கையில் புது மொபைலை வைத்து அவளுக்கு படிப்பு சம்பந்தமாக  ஒவ்வொன்றின் லிங்கும் அனுப்பியவன் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும் தளங்களையும் அறிமுகபடுத்தி எப்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் எழுதுவது என்பதையும் அவளுக்கு கற்று கொடுத்தான்.

யாழிக்கோ முதலில் வேண்டா வெறுப்பாக தோன்றிய படிப்பு பின் அவன் காதலுக்காக, வீடியோ எடுக்க வேண்டி அதன் பின் அவனுடனான நிமிடங்கள் என்று இருந்திருந்தாலும் பின்னாளில் பாட புத்தகங்களோடு ஒன்றி போனவளின் மனம் அதை விட்டு வேறு எதிலும் லயிக்கவில்லை… இரவில் அவன் மார்பில் சாய்ந்து உறங்கும் நேரம் மட்டுமே படிப்பை மறந்திருப்பாளே தவிர அதிர்துடியன் கிளம்பியதும் புத்தகமும் கையுமாக அமர்ந்துவிடுவாள். 

தொழில்நுட்பத்தை எப்படி ஆக்கபூர்வமாக பயன்படுத்த வேண்டும் என்று தெரியாமல் தடுமாறி கொண்டு இருந்தவளுக்கு அதன் பயன்பாட்டை அழகாக கணவன் உணர்த்திட இப்போது அவள் இன்னுமே ஆர்வத்தோடு கற்க தொடங்கி விட்டாள்.

முதலில் இரவு மட்டும் சேர்ந்து படித்து கொண்டிருந்த ஆராதனாவும், யாழியும் காலபோக்கில் பகல் நேரத்திலும் யாழி அறையிலோ அல்லது ஆராதனா அறையிலோ அல்லது கீழே கணினி முன்போ ஒன்றாக சேர்ந்து விவாதம் செய்ய தொடங்கி இருந்தனர்… ஒவ்வொரு தலைப்பையும் படிக்கும் போதும் அது குறித்து விவாதிக்கும் போதும் ஆராதனாவிற்க்கு ஈடு கொடுக்க வேண்டும், அதிர்துடியன் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் இருமடங்கு வேகத்தோடு செயல்படுவாள் யாழி. படிப்பு படிப்பு என்று எந்நேரமும் புத்தகமும் கையுமாக ஒவ்வொரு தலைப்பையும் ஆழ்ந்து படிக்க துவங்கி இருந்தாள்.

அதே நேரம் அவளுக்கான நாளில் அவனுடனே முழு நேரமும் கழிப்பதையும் அவள் தவறவிடுவதில்லை.

இப்போதெல்லாம் காலை தன் கையால் கணவனுக்கு பரிமாறி அலுவலகத்திற்கு கிளம்புபவனை புன்னகையோடு வழி அனுப்புபவள் சாப்பிடும் நேரத்தில் தவறாமல் வாட்ஸப்பில் ‘சாப்டீங்களா..??’ என்று அவனுக்கு மெசேஜ் அனுப்புவதையும் அவன் வீட்டில் இல்லாத போது இருவரும் குறிப்பிட்ட நேரத்தை தீர்மானித்து ஓரிருமுறை பேசுவதையும் வழக்கமாக்கி கொண்டிருந்தனர்.

யாழிக்கு இப்போதெல்லாம் கைபேசி என்றாலே அதிர்துடியனின் நினைவு மட்டும் தான்… அதை எடுப்பதே அவனது குறுஞ்செய்தியை பார்க்கவோ அல்லது அவன் அழைப்பை ஏற்க வேண்டியோ மட்டுமே..!!

கைபேசி மூலமாக கல்வியோடு காதலையும் சேர்த்தே வளர்த்து கொண்டிருந்தான் நம் நாயகன்.

அன்று மதிய உணவை முடித்து விட்டு கணினியோடு  அமர்ந்திருந்த அதிர்துடியன் முன்பு ‘எனக்கு நீச்சல் சொல்லி கொடுங்க’ என்றவாறு வந்து நின்றாள் யாழி.

கணினியில் இருந்து பார்வையை உயர்த்தியவன், ‘ஏன்..??’ என்றிட,

‘இது என்ன கேள்வி அன்னைக்கு ஸ்விம்மிங் தெரியாததாலே தானே நான் மாட்டிக்கிட்டு தண்ணி குடிச்சி மயங்கினேன்.., அதோட எப்பவும் படிச்சிட்டே இருந்தா மண்டை சூடாகுது….’

‘அதுக்கு எதுக்குடி உனக்கு ஸ்விம்மிங் ஒன்னு பாட்டு கேளு இல்ல தூங்கி எந்திரி சரியாகும்’

‘இல்லையே இப்படி மண்டை சூடாகும் போது ரிலாக்ஸ் பண்ண அப்பப்போ ஸ்விம் பண்ண சொல்லி நீங்க தானே சொன்னீங்க..’

‘நானா..??’

‘ஆமா நீங்க சொன்னீங்கன்னு ஆரு தான் சொன்னாங்க.., அதோட ஈவினிங் சில நேரம் அவங்க ஸ்விம் பண்றதை நானே பார்த்திருக்கேன், என்னையும் அவங்க கூட ஜாயின் பண்ண சொன்னாங்க எனக்கு தெரியாதுன்னு சொல்லிட்டேன் ஆனா இப்போ கத்துக்கணும் போல இருக்கு’

‘அப்போ ரிங் இருக்குமே அதை போட்டுட்டு தண்ணியில் இறங்க வேண்டியது தானே..?’

“என்னை மாதிரியே நாளைக்கு யாராவது தண்ணியில மாட்டிகிட்டா ரிங் எடுத்துட்டு போய் அவங்களை காப்பாத்துறதுக்குள்ள அவங்க உயிரோட இருப்பாங்களா.. நீங்களே சொல்லுங்க..??”

‘ஓகே நீ சொல்றதும் சரி தான், உனக்கு நாளையில் இருந்து பிமேல் ட்ரைனர் அப்பாயின்ட் பண்றேன் அவங்க வந்து சொல்லி கொடுப்பாங்க..’ என்றவன் கணினியில் பார்வை திருப்ப,

‘அவங்க எல்லாம் எதுக்கு..?? எனக்கு நீங்க தான் சொல்லி கொடுக்கணும்’ என்றாள் அடமாக..,

‘ஏன்..??’

‘ஏன்னா இன்னைக்கு என்னோட டே நான் சொல்றது எல்லாம் நீங்க கேட்டு தான் ஆகணும் இப்பவே வந்து எனக்கு சொல்லி கொடுங்க’ என்று அவன் கையை பிடித்திழுக்க,

‘இதெல்லாம் இவ தெரிஞ்சு செய்யறாளா இல்லை தெரியாம செய்யறாளா..??’ என்று மனைவியை பார்த்த அதிர்துடியன் அவள் கோரிக்கையை  தவிர்க்க வேண்டி.., 

‘எனக்கு டைம் இல்ல முக்கியமான ப்ராஜக்ட்…’ என்று ஆரம்பிக்கவும்,

‘என்னை விட எதுவும் முக்கியம் இல்ல சொன்னீங்க..??’

‘அடியேய்…’ என்று பல்லை கடித்து கொண்டு அவன் பார்க்க,

‘உங்களுக்கு மட்டும் இல்லை எனக்கும் வார்த்தை முக்கியம் வந்து சொல்லி கொடுங்க’ என்றவள் முன்னே செல்ல,

‘இன்னைக்கு இவ நம்மளை ஒரு வழி ஆக்காம விடமாட்டா போலேயே.., இதுக்கு பேர் தான் ஸெல்ப் ஆப்பாடா அதி’ என்று நொந்து கொண்டவன் எழுந்து செல்ல,

“எங்க போறீங்க பூஜை பண்ணிட்டு போலாம் வாங்க” என்று அவன் கையை பிடித்து அவள் தடுக்க,

‘ஏதே..!! பூஜையா..??’ என்று அவன் சிறு திடுக்கிடலுடன் மனைவியை பார்த்தான். 

***********************************************

“ஆமா நீச்சல் கத்துக்க போறதுக்கு முன்ன பூஜை பண்ணிட்டு போறது நல்லது நீங்க வாங்க” என்று அவனோடு அவள் கீழே இறங்க,

‘ச்சை இவளை பத்தி தெரிஞ்சும் தேவை இல்லாம ஜெர்க் ஆகிட்டியேடா அதி..’ என்று எண்ணிய  அதிர்துடியன் இதழ்களில் சத்தமில்லாத சிரிப்பு..,

அவனோடு நேரே பூஜையறைக்கு சென்றவள் கற்பூரமேற்றி கும்பிட்டு திருநீரை பூசிக்கொண்டவள் அவனுக்கும் பூசி விட்டு ‘இப்ப வாங்க போலாம்’ என்றிட,

அதிர்துடியனுக்கோ அவளை இப்போதே கொஞ்சி கொண்டாடிட ஆசை பிறந்தாலும்  முயன்று தன்னை கட்டுபடுத்தியவன் அதரங்களோ ‘cutest wife ever’ என்று சத்தமில்லாமல் சொல்லிகொள்ள,  அவளோடு மாடி ஏறினான்.

பெருகி வரும் தொழில் நுட்ப யுகத்தில் எங்கிருந்து எப்படி ஆபத்து முளைக்கும் என்று அறுதியிட்டு கூற முடியாத காரணத்தால் பெண்களின் பாதுகாப்பில் எப்போதுமே கவனம் கொள்பவன்… கீழே வீட்டின் பக்கவாட்டில் நீச்சல் குளம் இருந்தாலும் ஆராதனாவிர்க்காகவே மேலே மாடியில் உள் நீச்சல் குளத்தை உருவாக்கி இருந்தான். எவ்வித அச்சமும் இன்றி அவள் நீந்த தேவையான பாதுகாப்புகளை செய்திருந்தவன் இப்போது யாழியை அழைத்து கொண்டு உள்ளே நுழைந்து கதவை தாளிட்டு திரும்ப அங்கே  யாழியோ உடை மாற்றும் அறைக்குள் சென்றாள்.  

‘எங்கடி போற..??’ 

‘ஏங்க பார்த்தா தெரியலை, யாராவது இப்படி ஸ்கேர்ட் டாப்ஸ் போட்டுட்டு ஸ்விம் பண்ணுவாங்களா..?? ட்ரெஸ் சேன்ஜ் பண்ண போறேன்’ என்றவள் அறைகதவை சாற்றும் முன் அவனிடம்,

‘இவ்ளோ ஏன் அன்னைக்கு நீங்க மட்டும் என்ன பேன்ட் ஷேர்ட் போட்டுட்டா ஸ்விம் பண்ணீங்க..??’ என்று கேட்க சிறு திடுக்கிடலுடன் அவளை பார்த்தவன்,

‘ஏய் உன்னை படிக்க சொன்னா என்ன காரியம்டி பண்ணிட்டு இருக்க..?? நான் ஸ்விம் பண்றதை பார்க்கிறது தான் உன் வேலையா..??’ என்று அதட்டிட,

‘இப்போ எதுக்கு திட்டுறீங்க அன்னைக்கு நானும் ஆருவும் பால்கனில டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தப்போ நீங்க ஸ்விம் பண்றதை ஆரு தான் எனக்கு காட்டினாங்க..’ என்று அவள் முகத்தை சுருக்கி கொண்டு கதவடைக்க,

‘நம்மளை டிசைன் டிசைனா வச்சு செய்யவே தனியா உட்காந்து யோசிப்பாளோ..?? அப்படியும் சொல்ல முடியாதே கொடுக்குற போர்ஷன் எல்லாம் கரெக்டா முடிச்சிடுறா, அப்போ இனி சிலபஸ் மாத்த வேண்டியது தான்’ என்று எண்ணியவாறே அமர்ந்திருந்தவன்,

“அப்பனே முருகா எப்படியாவது இன்னைக்கு என்னை அவகிட்ட இருந்து காப்பாத்து..” என்று வேண்டுதல் வைத்து கொண்டிருக்கும் போதே டைட்ஸ், ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் சகிதம் அவன் முன் வந்து நின்று அவனை சோதிக்க தொடங்கி இருந்தாள் அவன் மனையாள்..!!

‘அதி உன்னை டெம்ப்ட் பண்ண பார்க்கிறா அசராதடா கண்ட்ரோல்ல்ல்ல்…’ என்று அதரங்களை குவித்து மூச்சை வெளியேற்றியவன், ‘அன்னிக்கு காப்பத்தினப்போ இருந்த மாதிரியே இதுவும் ஒரு உதவின்னு இப்பவும் அப்படியே இரு… சீக்கிரம் கத்து கொடுத்துட்டு இடத்தை காலி பண்ணு’ என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவன் அவளை திரும்பியும் பாராமல் முன்னே சென்று நீச்சல் குளத்தில் இறங்க போக…,

‘என்னங்க ஒரு நிமிஷம்..’ என்று தடுத்தவள், 

‘இப்படியேவா இறங்க போறீங்க நீங்க சேன்ஜ் பண்ணலையா..??’

அதிர்துடியனோ நெஞ்சை நீவியவாறு ‘அடேய் இன்னைக்கு இவ உன்னை மொத்தமா காலி பண்ணாம விட மாட்டா போலேயேடா அதி சிக்காத’ என்று கண்களை இறுக மூடி நிற்க,

‘என்னங்க உங்களை தான் ட்ரெஸ் நனைஞ்சிடுமே’ என்றிட,

‘என்னை என்ன இவளோட டெடின்னு நினைச்சிட்டு இருக்காளா..??’ என்ற சலித்து கொண்டே  கண்களை திறந்தவன்,

‘இப்போ இது ரொம்ப முக்கியம்.., அது நனைஞ்சா நனைஞ்சிட்டு போகட்டும் வாயை மூடிட்டு அமைதியா வாடி” என்றவாறு குளத்தில் இறங்கி நின்றவன், 

அவனையே பார்த்து நின்றவளிடம் ‘என்னடி பார்க்கிற..??  இறங்கி வா’ என்று சிடுசிடுக்க,

யாழியோ இரண்டு படிகள் இறங்கிய பின் கம்பியை பிடித்து கொண்டு காலை முன்னே நீட்டுவதும் பின்வாங்குவதுமாக இருந்தாள்.

பொறுமை இழந்தவன் ‘என்னடி பண்ற..??? சீக்கிரம் இறங்கு எனக்கு வேலை இருக்கு’ என்று  உறும,

‘இப்போ எதுக்கு திட்டுறீங்க..?? திட்டாம சொல்லி கொடுக்க மாட்டீங்களா..??’ என்று யாழி முகம் சுருக்கிட,

‘இதோ பார் நான் ஏற்கனவே சொல்லிட்டேன் என்னால எப்பவும் கொஞ்சிட்டே இருக்க முடியாது கோபமும் வர தான் செய்யும் வேணும்ன்னா நீயும் கோபப்படு யார் வேண்டாம் சொன்னா..??’

“கோபமா அவனிடமா..?? அவளால் அது முடியுமா என்ன..?? வாய்ப்பில்லை ராஜா..!!” என்று தனக்கு தானே யாழி சொல்லிக்கொள்ள,

நொடிக்கு நொடி மாறிய அவள் முக பாவத்தை கண்டவன் மூச்சை இழுத்து விட்டு, “யாழி என்னை சோதிக்காத.., சீக்கிரம் தண்ணியில் இறங்கு’ என்று அவள் கைபிடித்து இறக்கியவன்,

இரு கைகளையும் நீட்டி ‘இப்போ என் கை மேல படு’ என்றான்.

*****************************************

அவளோ சில்லென்ற நீரில் உடல் வெடவெடுக்க தள்ளாடி கொண்டிருந்தவள் அவன் கையை பற்றி கொண்டு, ‘கைமேல படுக்கவா அது எப்படி..?? என்று புரியாமல் அவனை பார்த்தவள்,

‘எனக்கு பயமா இருக்குங்க தண்ணி வேற சில்லுனு இருக்கு’

‘ஸ்விமிங் பூல்ல இப்படி தான்டி இருக்கும் இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கே பழகிடும் கையை விடு’

‘ஹும்ஹும் முடியாது விட்டா நான் விழுந்திடுவேன் எனக்கு பயமா இருக்கு’ என்றவள் மேலும் அவனோடு ஒட்டிக்கொண்டு நிற்க, 

‘ஏய் பயமா இருக்குன்னா எதுக்குடி கத்துக்க வந்த..?? அப்பவே சொன்னேன் ரிங் போட்டுட்டு இறங்குன்னு கேட்டியா..?? பெரிய இவளாட்டம் இன்னைக்கே நீச்சல் கத்துட்டு நாளைக்கே நாற்பது பேரை காப்பாத்த போற மாதிரி அந்த பேச்சு’ என்று அவளை கடிந்து கொண்டே அவளோடு நீச்சல் குளத்தில் இருந்து மேலே ஏறியவன் அங்கிருந்த ரிங்கை எடுத்து அவளுக்கு போட்டு விட்டு,

“முதல்ல இதோட தண்ணிக்குள்ள இருக்க பழகு அப்புறம் சொல்லி கொடுக்குறேன்” என்று அவளை மீண்டும் தண்ணீரில் இறக்கி நீச்சல் குளத்தின் மையபகுதியில் கொண்டு சென்று அவளை விட்டுவிட்டு அவன் நீந்தி செல்வதை கண்ட யாழியோ மிதந்தவாறே,

‘என்னங்க வேண்டாம் ப்ளீஸ் தனியா விடாதீங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. எங்க போறீங்க நீங்களும் கூட வாங்க’ என்றவளின் பேச்சிற்கு செவி சாய்காதவன் மேலே ஏறி சென்றான்.  

‘என்னங்க’ என்று அவள் கத்தி கொண்டிருக்க அவனோ தலையை துவட்டி கொண்டே வெளியே செல்ல அடுத்த சில நிமிடங்களில் ஆராதனா அங்கே வந்திருந்தாள்.

நீச்சல் என்று மட்டுமல்ல அடுத்து வந்த நாட்களில் அவனை அவளோடு சேர்ந்து டான்ஸ் ஆட வேண்டும் என்று அவனுடனான தனிமை பொழுதுகளை அவள் நாட அதிர்துடியனோ அவளிடம் சிக்காமல் லாவகமாக அவளை திசை திருப்பி வெளியில் அழைத்து சென்றுவிடுவான். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!