Skip to content
Post Views: 13,139
‘டேய் விஷ்ணு அங்க பாரு இடுக்கு பிள்ளையார் கோவில் வந்துடுச்சிடா’ என்று யாழி அவர்களுக்கு வலப்புறம் ஒரு இடத்தை சுட்டி காண்பிக்க
‘யாழி நீ சொன்ன வித்யாசமான கோவில் இது தானா..??’
‘ஆமாடா நல்லா இருக்குல..?? எங்கயும் இந்த மாதிரி ஒரு இடம் பார்க்க முடியாது திருவண்ணாமலை வ்லாக்ல போடாம இந்த கோவில் பத்தின எபிசொட் தனியா போடணும்டா கண்டிப்பா வியூஸ் டபுள் ஆகும்’
‘நீ சொல்றதும் சரி தான்டி அப்ப என்ன பண்ணலாம் முதல்ல இங்க இருக்கிறவங்களை கவர் பண்ணிடலாம் அப்படியே அவங்க எக்ஸ்பீரியன்ஸ் எப்படின்னும் கேட்டுடலாம்.., அப்புறம் நான் உள்ள போறேன் நீ நான் நுழையறதுல இருந்து வெளியே வர வரைக்கும் டீடெயில்டா டைட் க்ளோஸ்அப்ல எடு’ என்று கூறியவன் அங்கிருந்த வரிசையில் சென்று நின்றான்.
Advertisement
அவனுக்கு முன் ஆராதனா, மரகதம் மற்றும் ப்ரித்வியின் மனைவி சாருலதா இருந்தனர்.
சாருலதா ஒல்லியான உடல்வாகு என்பதால் எளிதாக முதல் வாசலில் நுழைந்து இரண்டாம் வாசலை கடந்து குறுகிய மூன்றாம் வாசல் வழியாக எளிதாக வெளியே வந்துவிட்டாள் அடுத்து மரகதம் செல்ல முயலவும் ஆராதனா அவரை பிடித்து,
‘ம்மா உங்களால போக முடியுமா..?? எதுக்கு ரிஸ்க் எடுக்குறீங்க..??’
Advertisement
“நீ அமைதியா இருடி உனக்கென்ன தெரியும்..?? எங்க இந்த அஞ்சு மாசம் முடிஞ்சிட்டா என் பையனுக்கு கல்யாண யோகமே இல்லாம போயிடுமோன்னு மனசு கெடந்து அல்லாடுது.., இவ்ளோ தூரம் கூட்டிட்டு வந்த ஈசன் என்னை இதையும் நல்ல படியா செய்ய வைப்பாருன்னு நம்பிக்கை இருக்கு” என்று கூறியவர் மகள் பேச்சை கேட்காமல் உள்ளே நுழைந்தார்.
Advertisement
ஆனால் அவர் உடல் பருமனுக்கு முதல் வாசலை கடக்கையிலே அவருக்கு பதட்டம் கூடி அச்சம் அதிகரித்திட அதை கண்ட ஆராதனா, ‘ம்மா என்னம்மா இது உங்கள க்ஷ்டபடுத்திட்டு எதையும் செய்ய வேண்டாம் முதல்ல வெளில வாங்க’ என்று அவரை அழைக்க அங்கு வந்த சாருவும்,
‘வெளில வாங்க அத்தை’ என்றிருந்தாள்.
‘அண்ணி நான் அண்ணாக்கு கால் பண்ணி சொல்றேன் நீங்க அம்மாவை வெளில கூட்டிட்டு வாங்க’ என்றவள் அதிர்துடியனுக்கு அழைத்து பேசி அவன் அன்னையிடம் கொடுக்க சொல்லவும்,
Advertisement
‘அம்மா அண்ணா பேசுறாங்க’ என்று தன் அருகே வந்து நின்ற மரகதத்திடம் கொடுத்தாள்.
வெளியில் காணொளி எடுத்து கொண்டிருந்த யாழி கைபேசி வழியே இதை பார்த்து கொண்டிருந்தவள் அடுத்து விஷ்ணு கோவில் உள்ளே நுழைவதில் இருந்து வெளியில் வரும் வரை அதை படமெடுத்தவள் அவனிடம் கைபேசியை கொடுத்து ‘விஷ்ணு அங்க ஒருத்தங்க எப்படி சின்ன இடத்துல போயிட்டு வரதுன்னு ரொம்ப பயந்து போய் இருக்காங்க நான் அவங்களை சமாதனபடுத்தி செய்ய வைக்கிறேன் அதையும் கவர் பண்ணுடா அப்பதான் வியூஸ் அள்ளும் ‘ என்று கூறி உடனே மரகதத்திடம் சென்றாள்,
அவனும் மரகதத்துடன் பேசிக்கொண்டு இருந்த யாழியை கைபேசியில் பதிவு செய்ய தொடங்கினான்.
‘அம்மா இப்போ உங்களுக்காக நான் அன்னதானம் செய்யலையா..??’ என்று அதி கேட்டு கொண்டிருக்க அதற்கு மரகதம் ஏதோ பிடிவாதமாக பதில் சொல்லி கொண்டிருந்தார்.
‘ஆன்ட்டி’ என்று அழைத்தவாறே மரகதத்திடம் வந்து நின்றாள் யாழி.
மறுபுறம் இருந்தவனோ “அம்மா நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க இப்போ நான் அங்க தான் வந்துட்டு இருக்கேன் அதுவரை எதுவும் செய்து சிக்கல் ஆக்கிகாம கொஞ்சம் பொறுமையா இருங்க” என்று கூறி வைத்தான்.
அவன் வைக்கவும் தன் எதிரே நின்றிருந்த யாழியை கண்கள் சுருங்க பார்த்தவர், ‘என்னம்மா..??’ என்றார்.
‘கொஞ்ச நேரமா நான் உங்களை பார்த்துட்டு இருந்தேன் ஆன்ட்டி உங்களுக்கு கோவிலுக்குள்ள போக ஆசையா இருக்கு ஆனா பயமாவும் இருக்கு அப்படி தானே..??’ என்று கேட்க,
‘ஆமாம்மா… ஆனா நீ யாரு..?? உனக்கு என்னை தெரியுமா…?? நான் இதுக்கு முன்ன உன்னை பார்த்தது இல்லையே’ என்று அவர் யோசனையுடன் கேட்க..,
‘நான் மெல்விண்யாழி ஆன்ட்டி, எனக்கு உங்களை தெரியாது, நீங்களுமே என்னை பார்த்தது இல்ல அதுக்காக ஒருத்தங்களுக்கு ஹெல்ப் பண்ணகூடாதா என்ன..?? என்றவள் புன்னகையுடனே அவர் முன் தண்ணீர் பாட்டிலை நீட்டி,
“இந்தாங்க முதல்ல தண்ணி குடிங்க .., அப்புறம் ஒரு ரெண்டு நிமிஷம் டீப் ப்ரீத் எடுங்க” என்றாள்.
மரகதம் வியப்புடன் அவளை பார்த்தார்.
“நிஜமா தான் ஆன்ட்டி என்னை நம்புங்க நான் உங்களை பயமில்லாம கோவிலுக்குள்ள போயிட்டு வர வைக்கிறேன்” என்று கூற,
யாழியை பார்த்து புன்னகைத்தவர் என்ன நினைத்தாரோ உடனே அவள் கூறியது போல தண்ணீரை குடித்து மூச்சை எடுத்து விட்டவர் கண்களை மூடி கடவுளை மனதார பிரார்த்திக்க தொடங்கினார்.
மரகதம் கண்களை திறக்கவும், ‘இப்போ என் கூட வாங்க’ என்று அவரை அழைத்து சென்று கோவில் முன் வாசலில் நிறுத்தியவள்,
‘நீங்க இதுக்கு முன்ன இங்க வந்தது இல்லையா..??’ என்று கேட்க
‘இல்லம்மா இது தான் முதல் முறை இங்க கூட்டமா இருக்கவும் வந்தோம் அப்போதான் இந்த கோவிலுக்குள் போயி வருவது ரொம்ப சிறப்பு, நம்மோட வேண்டுதல் நிறைவேறும், தலை முதல் கால் வரையிலான பிரச்சனைகள் தீரும்ன்னு சொன்னாங்க ஆனா எனக்கு வேற எதுவும் தேவை இல்ல என் பையன் கல்யாணம் சீக்கிரம் நடந்தா போதும்மா’ என்று ஆரம்பிக்க,
‘ம்மா கொஞ்சம் அமைதியா இருங்க’ என்றாள் ஆராதனா.
‘உங்க பையன் கல்யாணம் நடக்கணும் அவ்ளோ தானே..??’ என்று மரகதத்தை பார்த்த யாழி
‘கவலையை விடுங்க அதுக்கு நான் பொறுப்பு ‘ என்று சாதாரணமாக கூற அருகே இருந்தவர்களிடம் ஆச்சர்யம்..,
‘என்னம்மா சொல்றே..??’
‘நிஜமாதான் ஆண்ட்டி..!!’ என்று மீண்டும் உறுதியாக சொன்னவள் ‘முதல் நீங்க நான் சொன்னது போல செய்ங்க’ என்று கூற இது தான் கடவுள் சித்தமோ என்று சில நொடிகள் சிலிர்த்து நின்றவர் பின் யாழியிடம்,
‘நீ இந்த ஊராம்மா..?? இவ்ளோ நம்பிக்கையா சொல்ற ..??’ என்றிட
‘இல்ல ஆண்ட்டி வெளியூர் ஆனா இங்க வரும் முன்ன இந்த கோவிலோட சிறப்பு , கிரிவல பாதை பத்தின குறிப்பெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு வந்தேன்’ என்றவள் அவரிடம் இந்த கோவிலோட மூணு வாசலும் நேர்கோட்டில் இருக்காது ஆன்ட்டி முதல் விட கடைசி ரொம்ப குறுகலா இருக்கும் இப்போ என்னை நல்லா கவனிங்க நான் எப்படி வெளில வரேன்னு தெரியும்’ என்று கூறியவள்
“பின்புறம் சென்று முதல் வாசலில் நுழைந்தவள் இது பிரஸ்ட் வாசல் ஆன்டி இதுல நாம தாராளமா நுழைய முடியும் அடுத்து இருக்க வாசல் இதை விட சின்னது சோ நாம முட்டிபோட்டு வர முடியாது அதனால் மெல்ல கால் நீட்டி படுத்த வாக்கில் நுழையணும் இதோ இப்போ உங்க எதிர்ல இருக்கிற வாசல் தான் மூன்றாவது இது இரண்டாவதை விட சின்னது கிட்டத்தட்ட அம்மாவோட கருவறையில இருந்து நாம வெளிவருவது போல… அதனால இப்போ நாம ஏதாவது ஒரு பக்கம் ஒருக்களிச்சி படுத்த வாக்கில் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி பயப்படாம, பதட்டபடாம முக்கியமா வெளில வந்துடுவோம் என்ற நம்பிக்கையோடு வெளில வரனும்..” என்று அவர் முன் வந்து நிற்க, மரகதம் இமை மூடாமல் யாழியை பார்த்து நின்றார்.
“அவ்ளோ தான் ஆன்ட்டி ஆனா பாருங்க சின்ன குழந்தை தவழ்ந்து வர அளவுக்கு இருக்க இடத்துல நாம வெளில வர முடியும்ங்கிறது சாதாரண விஷயம் இல்ல எல்லாம் கடவுளோட அனுக்கிரகம். உங்க பையனுக்கு கல்யாணம் ஆகணும்ன்னு மனசார கடவுளை வேண்டிக்கிட்டு உள்ள போங்க, நான் சொன்ன மாதிரி செய்ங்க ஈசியா வெளியே வந்துடுவீங்க” என்று கூற,
மரகதத்தின் முகத்திலோ இடுக்கு பிள்ளையாரை தரிசிக்கும் முன்னமே தன் வேண்டுதல் நிறைவேறிய பூரிப்பு..!! மறுவார்த்தை பேசாமல் அவளிடம் சரிம்மா என்று புன்னகைத்தவர் கோவிலின் பின் புறம் செல்ல ‘ஒரு நிமிஷம் ஆன்ட்டி’ என்று யாழி அவரை தடுத்து நிறுத்திட,
‘என்னம்மா..??’
‘நீங்க முதல் முறை போறதால கையில் இருக்க கண்ணாடி வளையல் கழட்டி வச்சிடுங்க இல்ல மூணாவது வாசல்ல வரப்போ உங்கள ஹார்ம் பண்ண வாய்ப்பு இருக்கு” என்று கூற,
என்னமோ அண்ணாமலையானே அவள் ரூபத்தில் தன்னை வழி நடத்துவதாக உணர்ந்தவர் யாழி சொன்னபடியே வளையல்களை கழற்றி மகளிடம் கொடுக்க,
‘ம்மா அண்ணன் வரேன் சொன்னாங்களே ஏன் அவசரபடுறீங்க’ என்றாள் அதிர்துடியனுக்கு அழைத்தவாறே,
‘அதான் என் கூட உன் அண்ணி இருக்காளே ஆரு அப்புறம் எதுக்கு உனக்கு பயம் ..??’ என்று புன்னகையுடன் கேட்க ,
‘ம்மா என்னம்மா இது யாருன்னே தெரியாதவங்களை…’ என்று திகைப்புடன் ஆராதனா அன்னையை பார்த்திட,
அவரோ முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன் முதல் வாசலில் கை கூப்பி நின்று உள்ளே செல்லவும் “நிச்சயம் உங்க வேண்டுதல் நிறைவேறும் அப்போ என்னை மறக்காம உங்க பையன் கல்யாணத்துக்கு கூப்பிடனும் ஆல் தி பெஸ்ட் ஆன்ட்டி” என்று யாழி அவருக்கு கை கொடுக்க அவரோ.
‘கண்டிப்பா யாழி நீ இல்லாம என் பையன் கல்யாணமா..??’ என்று கேட்டு வாஞ்சையுடன் அவள் நெற்றியில் முத்தமிட்டவர்,
‘நீ இல்லாம என் பையன் கல்யாணம் நடக்காதும்மா ஆனா இப்போ கோவில் முன் வாசல்ல வந்து நில்லுடா’ என்று கூற யாழி மூன்றாம் வாசலில் அவர் வெளிவரும் இடத்தில் வந்து நின்றாள்.
மரகதமும் அவள் கூறியது போலவே முதல் வாசலில் எந்த சிரமும் இல்லாமல் நுழைந்தவர் யாழி முகத்தை பார்த்தவாறே அவள் தன் மருமகளாக வேண்டும் என்ற வேண்டுதலுடனே அடுத்த வாசலை கடந்து வலப்புறமாக ஒருக்களித்து திரும்பிட அவர் அருகே வந்த யாழி ‘சூப்பர் ஆண்டி இன்னும் கொஞ்சம் தான் ட்ரை பண்ணுங்க வந்துடுவீங்க’ என்றாள் இடை வரை வெளியில் வந்தவர் அதன் பின் சற்று சிரமப்படுவதை கண்டு,
ஆனால் மரகதத்திற்கு யாழியின் வார்த்தைகளே யானை பலத்தை தந்திட, அவளை பார்த்து கொண்டே ‘ஓம் நமசிவாய’ என்ற மந்திரத்தை உச்சரித்து கொண்டே வெளியில் வந்திருந்தார்.
ஆராதனா சாரு இருவருக்குமே ஆச்சர்யம் தாளவில்லை.
மரகதம் வெளியில் வருவது சாத்தியமே இல்லை என்று அவர்கள் நினைத்திருக்க எந்த பயமும் பதட்டமும் இல்லாமல் அவர் வெளியில் வந்ததை ஆரு அதிர்துடியனுக்கு தெரிவிக்க அவன் முகத்திலும் ஆச்சர்யம்..,
‘எங்கண்ணா இருக்கீங்க..??’
‘அங்கதான் வந்துட்டு இருக்கேன்’ என்று அழைப்பை துண்டித்து தன் வேகத்தை அதிகரித்தான்.
வெளியில் வந்த மரகதம் ‘என் ராஜாத்தி’ என்று யாழியை நெட்டி முறித்து
‘அண்ணாமலையானே உன்னை என் கிட்ட அனுப்பின மாதிரி இருக்கு.., சொல்லும்மா உன்னோட பேர் என்ன..?? எந்த ஊரு..?? என்ன பண்ற..?? படிக்கிறியா இல்ல வேலைக்கு போறியா..?? அப்பா அம்மா என்ன பண்றாங்க..??’ என்று விசாரிக்க அதேநேரம் அவளுக்கு சுகமதியிடம் இருந்து அழைப்பு,
‘ஒரு நிமிஷம் ஆன்ட்டி அம்மா கூப்பிடுறாங்க’ என்றவள் அழைப்பை ஏற்க,
‘யாழி எங்க இருக்கீங்க..??’ என்ற அவரின் பதற்ற குரலில் சற்று ஒதுங்கி அவரிடம் பேச தொடங்கியவள் மீண்டும் மரகதத்திடம் வர..,
சொல்லுமா நீங்க எத்தனை பேர் உங்க வீட்ல என்று மீண்டும் தன் கேள்வியை தொடுக்க,
‘சாரி ஆன்ட்டி தப்பா எடுத்துக்காதீங்க நான் அவசரமா கிளம்பனும் ‘ என்றவள் உடனே விஷ்ணுவிடம் சென்று அவனிடம் விஷயத்தை கூறி உடனே அங்கிருந்து சென்றாள்.
மரகதம் யாழி சென்ற வழியையே பார்த்து நிற்க அடுத்த இருபது நிமிடத்தில் அங்கு வந்து சேர்ந்தான் அதிர்துடியன்.
*******************************
‘ம்மா என்னமா சொல்ற..?? நிஜமாவா..??’ என்று கேட்ட விஷ்ணு யாழி முகத்தில் அத்தனை அதிர்ச்சி.
“வேற என்னடா சொல்லணும்ன்னு எதிர்பார்க்கிறீங்க அப்பவே எவ்ளோ சொன்னேன் கேட்டீங்களா நீங்க ரெண்டு பேரும்..?? படிக்கிறதை விட்டுட்டு எப்பபாரு பேஸ்புக், ட்விட்டர், யூடியூப்ன்னு போனை கையில வச்சி சுத்திட்டு இருக்கீங்க கொஞ்சமும் என் பேச்சை மதிக்கலை ” என்று அங்கலாய்த்தவாறே அவர்களுக்கு உணவை ஊட்டி கொண்டிருந்தார்.
யாழி அன்னை கொடுத்த அதிர்வில் வாய் திறக்காமல் போகவும் ‘வாயை திறடி’ என்று திட்டி அவளுக்கும் ஊட்டியவர்..,
“கோவிலுக்கு போயிருக்கீங்க அதுவும் உன் பிரெண்டோட பேமிலி கூட எப்படியும் காலைலயே வீட்டுக்கு வந்துடுவீங்கன்னு சொன்னேன் ஆனா மணி பதினொன்னு ஆகியும் நீங்க வரவே இல்ல ..??” முதல்ல உங்க அப்பா அவ்ளோ தூரம் யாரை கேட்டு அனுப்பினன்னு தாம் தூம்ன்னு குதிச்சார் அப்புறம் நான் தான் நீங்க குவாரில இருந்ததால சரியா டவர் கிடைக்கலை பசங்க ஒரு மணி நேரம் உங்க கிட்ட சொல்லிட்டு கிளம்ப காத்திருந்தாங்க உங்களுக்கு லைன் கிடைக்காம போகவும் கிளம்பிட்டாங்கன்னு சொல்லி அதுக்கும் உங்க அப்பா என்னை கேள்வி கேட்டு கடைசியா ஏன் நானா ஒரு முடிவு எடுக்க கூடாதான்னு அவர் கிட்ட என்னென்னமோ சொல்லி சமாளிச்சேன்”
‘ம்மா நாங்க அப்படியே அங்க ஒரு டேம் இருந்தது அதையும் வீடியோ எடுத்து…’
‘நிறுத்துடி’ என்று அதட்டியவர்,
‘திரும்ப திரும்ப அதையே சொல்லாத யாழி.., நீங்க உங்க போன்ல பார்க்கிற மாதிரி வாழ்க்கை கிடையாது எப்பபாரு இவ அதை சொன்னா அவன் அதை சொன்னான்னு எவன் எவளோ சொல்றதை நேரமெடுத்து கேட்குறீங்க பார்க்குறீங்க.., ஆனா பெத்தவ நான் சொல்றதை கேட்க மாட்டீங்குறீங்க..?? இன்னைக்கு உங்களால உங்கப்பாக்கும் எனக்கும் பேச்சு எவ்ளோ தூரம் போச்சுன்னு உங்களுக்கு தெரியுமா..?? விட்டா என்னை அம்மா வீட்டுக்கு பெட்டி கட்ட வச்சிருபாரு’ என்று பிள்ளைகளை பார்க்க அவர்களோ அவர் புரியாத பாஷை பேசுவது போலவே அவரை பார்த்து கொண்டிருந்தனர்.
யாழி அப்போதும் வியூஸ் எவ்வளவு போயிருக்குன்னு போனை எடுத்து பார்க்க ஆவேசத்துடன் அதை பிடுங்கிய சுகமதி, “ஏன்டி இங்க நான் என்ன பேசிட்டு இருக்கேன் அப்பவும் நீ போனை எடுத்தா என்ன அர்த்தம்” என்றவர் மகனிடம் திரும்பி,
‘காலம் எவ்ளோ கெட்டு கெடக்கு எங்க யார்கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லாம பர்மிஷன் கேட்காம இவளை கூட்டிட்டு திருவண்ணாமலை வரை பைக்ல போயிருக்க.., யார் உங்களுக்கு இந்த தைரியத்தை கொடுத்தா..??’
‘ம்மா என்னம்மா இது..?? எல்லாத்துக்கும் திட்டிட்டு இருக்கீங்க.. பைக்ல போறது எவ்ளோ த்ரில் தெரியுமா..?? நான் முன்னாடியே சொன்னது தான் இப்பவும் எங்களை சின்ன குழந்தையா நடத்தாதம்மா.. வீ ஆர் கிரோன்அப் ம்மா உங்களுக்கு புரியலையா..?? எதுக்கு நாங்க செய்யற எல்லாத்தையும் தடுக்குறீங்க போய் பாருங்க இன்ஸ்டா, பேஸ்புக்ன்னு எல்லா இடத்துலயும் எங்களை விட சின்ன பசங்க எல்லாம் எப்படி கலக்கிட்டு இருக்காங்கன்னு ஆனா இங்க எங்களுக்கு பிடிச்சதை செய்ய கூட இந்த வீட்ல உரிமை இல்லை..?? கொடுமை படுத்துறீங்கம்மா’ என்று அவன் சலிப்புடன் சுகமதியை பார்க்க,
‘எதுடா உரிமை..??’ என்று அதட்டலுடன் மகனை பார்த்தவர்,
‘விஷ்ணு போதும் எப்பவும் உரிமை , புதுமைன்னு பேசிட்டு இருந்த நடக்குறேதே வேற, எல்லாத்துக்கும் மேல உங்க பாதுகாப்பு முக்கியம் இல்லையா..?? எப்பபாரு எங்க போனாலும் போனை எடுத்துட்டு திரிய வேண்டியது சுத்தி என்ன நடக்குதுன்னு கூட தெரியாத அளவு அதுலயே மூழ்கி போயிடறது.., நான் கூட ஏதோ சும்மா டைம் பாஸ்க்கு அக்கம் பக்கம் வீடியோ எடுக்குறீங்கன்னு அமைதியா இருந்தா நீங்க அவளோ தூரம் என்கிட்ட கூட சொல்லாம போற அளவுக்கு வந்திருக்கீங்க.. எதாவது கேட்டா நான் என்ன குழந்தையான்னு வியாக்கியானம் பேச வேண்டியது”, என்று கூறியவாறே அவர்களுக்கு உணவை ஊட்டியவர்,
“உங்க அப்பா நீங்க எங்கன்னு கேட்கவும் நான் தவிச்சது எனக்கு தானே தெரியும்.., அப்புறம் அவர் நம்புற மாதிரி நீ நிவி குடும்பத்தோட போயிருக்கன்னு சொல்லவும் தான் கொஞ்சம் அமைதியானார்.., அப்பவும் விஷ்ணு நம்பருக்கு கால் பண்ணி அவன் எடுக்காம போகவும் சைலேன்ட்ல போட்டிருப்பான் அது இதுன்னு சொல்லி காலையில அவர் உங்களுக்கு கால் பண்ண விடாத அளவுக்கு நானே பதில் சொல்லின்னு எத்தனை தான்டா நானும் சமாளிக்கிறது.. என்னை புரிஞ்சிக்க மாட்டீங்களா..??” என்று கேட்க இருவருமே அதை கூட காதில் கேட்காமல் யூடியூப், பேஸ்புக் என்று சமூக வலைதளங்களில் ஷார்ட்ஸ்சை பதிவேற்றி கொண்டிருந்தனர்.
‘இப்பவும் நான் சொல்றதை கேட்காம’ என்று சலித்து கொண்டவர்,
‘ஏய் அவர் கிளம்பும் முன்ன இப்போ எங்க வந்துட்டு இருக்கீங்கன்னு கேட்கவும் அதை தெரிஞ்சிக்க நீ திரும்ப லைவ் வந்திருக்கியான்னு பார்க்க வந்தேன் அப்போ உங்கப்பா என் பின்னாடி சத்தமே இல்லாம வந்து நின்னு என் போனை பார்த்துட்டார்டி.., கையும் களவுமா மாட்டின அப்புறம் வேற வழி இல்லாம நானும் உன் சேனல் பத்தி சொல்லிட்டேன்’ என்று கூறவும்,
இருவர் முகமும் உணர்வுகள் தொலைந்து அசைவற்று போனது.
‘எத்தனை நாளா இது நடக்குது..?? நீதான் பசங்க குட்டிசுவரா போக காரணமா அது இதுன்னு என்னை இஷ்டத்துக்கும் பேசிட்டு அப்போ கோபமா வெளியே போனவர் தான் இன்னும் ரெண்டு மணி நேரத்துல பசங்க வீட்டுல இருக்கனும் சொல்லி கிளம்பிட்டார்’ என்று அவர் கூறிக்கொண்டு இருக்கும் போதே அங்கு வந்து சேர்ந்தார் மகேஷ்வரன்.
*******************************
“எனக்கு தெரியாம எத்தனை நாளா இந்த திருட்டுத்தனம் நடக்குது..??” என்றார் கைபேசியில் அவர்கள் காணொளியை பார்த்தவாறே,
விஷ்ணு யாழி இருவரும் ஒருவர் கையை மற்றவர் பிடித்து கொண்டு நிற்க, ‘அப்பா அது ஒன்னும் திருட்டுத்தனம் இல்ல நாங்க..’ என்று விஷ்ணு ஆரம்பிக்கவுமே,
‘என்னடா இல்ல..??’ என்று ஆத்திரத்தோடு மகனை பார்த்த மகேஸ்வரன் ஒருகட்டத்தில் விஷ்ணுவை அறையவே சென்று விட்டார்.
error: Content is protected !!