Skip to content
Post Views: 11,780
‘டேய் என்னடா பண்றீங்க..??’
‘ஆங்கிள் பிக்ஸ் பண்றோம்மா’
‘ஆங்கிள்ளா எதுக்குடா..??’
Advertisement
‘ம்மா நாளைக்கு யாழியை பொண்ணு பார்க்க வராங்கள்ல அப்போ ஒவ்வொரு மொமேன்ட்டும் காப்ச்சர் பண்றதுக்கும்மா…’ என்றான் விஷ்ணு.
‘என்னது பொண்ணு பார்க்கிறதை வீடியோ எடுக்க போறீங்களா..?? என்று முறைத்தவர்,
‘டேய் கிறுக்கு இதை உங்க அப்பா கிட்ட எது சொல்லி வச்சிடாத உன்னை வெளுத்து கட்டிடுவாரு’
Advertisement
‘தாயே என்ன உன் பிரச்சனை..?? இப்போல்லாம் பொண்ணு பார்க்கிறதை வீடியோ எடுத்து போடுறது தான் ட்ரென்ட்… அதுவும் மாப்பிள்ளையும் பெண்ணும் முதல் முறை பார்க்கிறப்போ ஏதோ ஒன்னு வருமே..’ என்று நெற்றியை தட்டி யோசித்தவள் என்ன என்று பிடிபடாமல் தம்பி புறம் திரும்பி,
Advertisement
‘டேய் விஷ்ணு அது பேர் என்ன..??’
‘எது பேருடி..??’
‘அதான்டா மாப்பிள்ளை பெண்ணை முதல் முறை பார்க்கிறப்போ அந்த அக்கா மூஞ்சில ஒன்னு வந்ததே அதுடா…’
Advertisement
‘ஓஓ அதுவா..?? அது பேர் வெட்கம்டி..!!’ அப்படி தான் நாம பார்த்த வீடியோல இருந்த அக்கா அவங்க எக்ஸ்பீரியன்ஸ் சொன்னாங்க.., அதுவும் அந்த அக்கா எதிர்பாராத நேரத்துல திடீர்ன்னு மாப்பிள்ளை அவங்க எதிர்ல வந்து நின்னப்போ சர்ப்ரைஸ்ல முகமெல்லாம் சிவந்து அழகா வெட்கபட்டாங்களாம் அது தான் மாப்பிள்ளைக்கு ரொம்ப பிடிச்சதாம், வேற லெவல் பீல்ன்னு சொன்னாங்கடி’ என்றவன்,
‘ஆமா யாழி நாளைக்கு உனக்கு மாப்பிள்ளையை பார்க்கிறப்போ வெட்கம் வருமா..??’ என்று சந்தேகத்தோடு கேட்க,
‘டேய் நானே வீடியோல தான் பார்த்திருக்கேன், என்னை கேட்டா எனக்கு எப்படி தெரியம் சத்தியமா தெரிலடா..’ என்று உதட்டை பிதுக்க,
‘ஏய் மாப்பிள்ளையை பார்க்கிறப்போ அது வரலன்னா ரொம்ப தப்புடி, எப்படி வெட்கபடறதுன்னு முதல்ல கத்துக்கோ இல்ல உனக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்காது’ என்று அவன் எச்சரிக்கவும் யாழி அவசரமாக கைபேசியை எடுத்து எதையோ தேடினாள்.
‘என்னடி பண்ற..??’
‘வெட்கப்படறது எப்படின்னு கூகிள் பண்றேன்டா’
‘ஓஒ சரி சரி கத்துட்டு நல்லா ப்ராக்டிஸ் பண்ணு, அதுவும் அந்த அக்கா கேமராவை பார்த்தும் பார்க்காத மாதிரி ஒரு லுக் கொடுத்தாங்கலே அது மாதரியே வரணும் அப்பதான் அழகா கேன்டிட் போட்டோவா (candid photo) இருக்கும்’ என்று கூற,
‘சரிடா’ என்றவள் கூகிள் மட்டும் இன்றி யூடியூபிலும் பெண் பார்க்கும் வைபவத்தின் போது எப்படி சிரிக்க வேண்டும் , எப்படி நடக்க வேண்டும், எந்த அளவு வெட்கப்பட வேண்டும் என்று ஒவ்வொன்றையும் கற்க ஆரம்பித்தாள்.
பிள்ளைகளின் அறிவீனமான பேச்சை கேட்டு கொண்டிருந்த சுகமதியோ ‘வாயை மூடுங்க அறிவு கெட்ட எருமைகளா..!! எதை எதை கூகிள் பண்றதுன்னு விவஸ்த்தை வேண்டாம் வெட்கப்படறது எப்படின்னு கூகிள் பண்ணுவியாடி நீ..??’ என்று ஆவேசத்துடன் அவளிடம் இருந்து கைபேசியை பறித்தவர்,
‘ஏன்டி அரைவேக்காடு உனக்கு சந்தேகம் கேட்க இந்த அரைகுறை தான் கிடைச்சானா..?? இயல்பா வர வேண்டிய உணர்வை ப்ராக்டீஸ் பண்ணி செய்றதுக்கு இது என்ன சினிமாவா நாடகமா..??ஆக்கம் கெட்ட கூவைகளா இனி ஏதாவது வாய் திறந்தீங்க இருக்க கோபத்துக்கு ரெண்டு பேரையும் இழுத்து வச்சி அறைஞ்சிடுவேன் பார்த்துக்கோங்க.. ‘ என்று ஆற்றாமையுடன் கத்தியே விட்டார்.
பின்னே அவரும் எத்தனை தான் பொறுப்பார்..!! எது சரி எது தவறு என்று புரியாமல் இயல்பான நிகழ்வுகளை கூட செயற்கையாக சித்தரிக்க நினைக்கும் பிள்ளைகளின் மனபோக்கை மாற்றும் வழி அறியாமல் விழி பிதுங்கி போய் நிற்ப்பவர் ஆயிற்றே..!!
‘ம்மா இப்போ எதுக்கு இப்படி கத்துறீங்க, பாடத்துல சந்தேகம் வந்தா கூகிள்ல ரெபர் பண்ணியே பழகிட்டோம்மா வேற என்ன பண்ண சொல்றீங்க..??’
”அதான்டா அதான் நாங்க பண்ண தப்பு, ஸ்கூல்ல சொன்னாங்களேன்னு படிக்க போன் வாங்கி கொடுத்தா அதை எதுக்கு பயன்படுத்தனுமோ அதை தவிர மத்த எல்லாத்துக்கும் பயன்படுத்துறீங்க.., யாரை கேட்டு நீங்க சோஷியல் மீடியால ஜாயின் பண்ணீங்க ..??
“ம்மா யாரை கேட்கணும்..?? எங்களுக்கு என்ன வேணும்ன்னு முடிவு எடுக்கிற சுதந்திரம் கூட எங்களுக்கு இல்லையா..?? எல்லாத்துலயும் நீங்க தலை இடுவீங்களா…?? அது என்ன எப்பவும் நீங்க நெனச்சத தான் நாங்க பேசணும் நீ சொல்றதை தான் நாங்க பண்ணனும்ன்னு ஏன் எங்களை ரெஸ்ட்ரிக்ட் பண்றீங்க..?? நாங்க என்ன சின்ன குழந்தைகளா..?? சொல்ல போனா நானும் யாழியும் ஒண்ணுமே இல்லை, வெளியே மத்த பசங்களை போய் பாரு ..” என்றவனை தடுத்து,
‘மத்தவங்களை எதுக்குடா நான் பார்க்கணும்..??’
‘பார்த்தா தான் உனக்கு எங்க அருமை புரியும்..!! மத்த பசங்க எல்லாரும் எந்த அளவுக்கு டெக்னாலஜில அட்வான்ஸ்டா இருக்காங்க தெரியுமா..?? ஆனா நாங்க இன்னும் ஏ,பி,சி,டிலயே இருக்கோம் எல்லாரும் எங்களை எவ்ளோ கேவலமா பார்பாங்க தெரியுமா உனக்கு..??”
“வேண்டாம் விஷ்ணு வாழ்க்கை புரியாம உன் இஷ்டத்துக்கு பேசாத, முதல்ல உன் கூட இருக்கிறவங்க ட்ரென்ட்ன்னு எதை செய்தாலும் கண்ணை மூடிட்டு அதை செய்யறதை நிறுத்து.., எந்த விஷயத்தை பத்தியும் புரிதல் இல்லாம எக்ஸ்சைட்மென்ட்காக அதில் இறங்க கூடாது, முக்கியமா பெத்தவங்களுக்கு தெரியாம செய்றது கெத்துன்னு நினைக்கிற உங்க நினைப்பே தப்பு.., நான் எதை பேச வந்தாலும் உனக்கென்ன தெரியும் லேட்டஸ்ட் ட்ரென்ட் பத்தி , பூமரா பேசதம்மா நீ சொல்றது எல்லாம் ஓல்ட் பேஷன் காலத்துக்கு ஏத்த மாதிரி அப்டேட் ஆகுன்னு சொல்லி சொல்லியே அக்காவும் தம்பியும் என் பேச்சை காது கொடுத்து கேட்டதில்ல’ என்றவர் யாழியிடம்,
‘ஏன்டி அம்மா சொல்லி கொடுக்காததையா உங்களுக்கு கூகிள் சொல்லி கொடுத்திடும்..?? அதை நம்பறீங்களே பெத்தவங்களை நம்பறீங்களா..??’
‘ஏன்டா கிறுக்கு பயலே இங்க என்ன சினிமா ஷூட்டிங்கா நடக்குது எதை எதை எப்படி நடத்தனும்ன்னு தெரியாம ஏதோ ஒரு பைத்தியம் ட்ரென்ட்ங்கிற பேருல எல்லாத்தையும் வீடியோ எடுத்து போட்டா நீங்களும் அது சரியா தப்பா, செய்யலாமா கூடாதான்னு தெரியாம அப்படியே செய்வீங்களா..??’
‘இதோ பாருங்க ரெண்டு பேருக்கும் தெளிவா சொல்றேன் இன்னொரு முறை இந்த மாதிரி பைத்தியக்காரதனமா ஏதாவது கூத்து கட்ட நினைச்சீங்க நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்’ என்றவர்..,
‘பெருமாளே..’ என்று தோய்ந்து போய் அமர்ந்தார்.
“என்னன்னு தான் எனக்கு வந்து பிறந்தீங்களோ.., இது மட்டும் வெளியே யாருக்காவது தெரிஞ்சா உங்களை பேச மாட்டாங்க வளர்த்த எங்களை தான் பேசுவாங்க அதாவது புரியுதா இல்லையா மரமண்டைகளா..!!’ என்றவர்,
‘ஏய் நீ முதல்ல என் கூட வாடி நாளைக்கு எப்படி நடந்துக்கணும்ன்னு நான் உனக்கு சொல்லி தரேன்’ என்று மகளை கையோடு அழைத்து சென்றார்.
*********************
‘விஷ்ணு இந்த லவ் பத்தி என்னடா நினைக்கிற..??’
‘இப்போ எதுக்குடி அந்த கருமத்தை பத்தி பேசுற..??’
‘சொல்லுடா..’
‘அதான் சொன்னேனே அந்த கருமத்தை பத்தி என்கிட்டே பேசாதன்னு..’
‘டேய் கல்யாணம் பண்ண லவ் கட்டாயம் இருக்கனுமாடா…???’
‘எதுக்குடி கேட்கிற..??’
“இல்லடா அம்மா நேத்து பேசும்போது காதல், வெட்கம் இதெல்லாம் நம்ம மனசுக்குள்ள இயற்கையா வரும் உணர்வு அது நம்ம மனசுக்கு பிடிச்சவங்களை பார்க்கிறப்போ அதுவா ஒரு மேஜிக் க்ரியேட் பண்ணி இயல்பா வெளிப்படும் அதனால அதெல்லாம் கூகிள்ல தேட கூடாதுன்னு சொன்னாங்க”
“அது எப்படிடா காதல் இயற்கையா வரும்..?? யாராவது நாம அழகா இருக்கோம்ன்னு சொல்லி நமக்கு ப்ரொபோஸ் பண்ணினா தானே வரும்” என்று அவனை பார்க்க,
‘எது காதலா..??’ என்று அவளை ஏற இறங்க பார்த்தவன்,
‘ஏன்டி உனக்கெல்லாம் வெட்கமே அதிகம் இதுல காதல் கேட்குதா..?? ஏய் யாழி அதெல்லாம் மனுஷங்களுக்கு தான்டி வரும் உனக்கு எப்படி வரும்..??’ என்று அவன் அவள் காலை வார,
‘அப்போ நான் மனுஷி இல்லையாடா..??’ என்று தப்பிக்க முற்ப்பட்டவனை உடனே வளைத்து பிடித்து நங்நங்கென்று அவன் தலையில் கொட்டி முடியை பிடித்து ஆட்ட ,
“ஏய் விடுடி விடு பிசாசே..!!” என்று அவளிடம் இருந்து தலையை விடுவித்தவன், நமக்கெல்லாம் லவ் செட் ஆகாது யாழி ஏன் யோசிக்கிற விடு என்று அவன் தலையை கோதிட,
“போடா காண்டாமிருகம் உன்னை போய் கேட்டேன் பாரு நான் கூகிள் ஆண்டவரையே கேட்டுக்குறேன்” என்று அவள் வெளியே செல்ல முற்ப்பட,
“எதை கேட்க போற உனக்கு லவ் வருமான்னா..??” என்று சிரித்து கொண்டே கேட்டவன் அவள் முறைப்பதை கண்டு, ‘யாழி ஆர் யு சீரியஸ்..??’ என்றான்.
‘எதுக்குடா..?’
‘இல்ல பியூச்சர்ல யாராவது உனக்கும் லவ் ப்ரொபோஸ் பண்ணுவாங்கன்னு நம்புறியா..??’
‘தெரியலையேடா’
‘தெரியலையா அப்போ ஏன்டி இந்த கேள்வி கேட்ட..??’
‘ஒரு ஜெனெரல் நாலேட்ஜ்க்கு தான்டா’
‘அப்படியா அப்போ சரி ஒருவேளை யாராவது ப்ரொபோஸ் பண்ணினா நீ என்னடி சொல்லுவ..??’
‘நானா..??’ என்று சிறிது நேரம் யோசித்தவள்,
‘டேய் அன்னைக்கு உனக்கு இன்ஸ்ட்டால ஒரு லவ் ப்ரோபோசல் காட்டினேனே ஞாபகம் இருக்கா..??’
‘எப்போடி..??’
‘அன்னைக்கு உன் பிரெண்ட்ஸ் கூட வீடியோ கால் பேசிட்டு இருந்தியே அப்போடா..’
‘நியாபகம் இல்லையேடி சரி என்னன்னு சொல்லு..??
“அதான்டா அந்த அண்ணா லவ் பண்ற அக்காவை கண்ணை மூடி கூட்டிட்டு போய் ஒரு பெரிய பூந்தோட்டத்துல நிறுத்தவும் அவரோட பிரெண்ட்ஸ் எல்லாரும் அந்த அக்காக்கு ஆளுக்கு ஒரு ஒரு கலர்ல பூ கொடுத்துட்டே வருவாங்க கடைசியா அந்த அண்ணா பூக்களுக்கு நடுவுல அவங்களை கொண்டு நிற்க வச்சு அந்த அக்கா முன்னாடி முட்டி போட்டு அவங்க உயரத்துக்கு பொக்கே கொடுத்து மோதிரம் போட்டு விட்டு .., நீ தான் என் லவ் நீ தான் என் லைப்ன்னு சொல்லி ப்ரொபோஸ் பண்ணுவாங்களே அதுடா…”,
“ஏய் எது நீ ஜெயம் ரவி படத்தை சொல்றியாடி அவர் கூட ஹன்சிக்காக்கு இப்படி தானே டான்ஸ் பண்ண வச்சு கடைசில போர்போஸ் பண்ணுவாரு” என்று குறிப்பிட்ட படத்தை பற்றி கேட்க,
“டேய் லூசு நான் படத்தை சொல்லலடா நிஜத்துல நடந்ததை சொல்றேன்.., என் பிரெண்ட்ஸ் எனக்கு லிங்க் அனுப்பினாங்க ட்ரீம் வெட்டிங் எப்படி இருக்கணும் ட்ரீம் ப்ரோபோசல் எப்படி இருக்கனும்ன்னு அதுல தான் தெரிஞ்சிகிட்டேன்..”
“அதுவும் அதுல அந்த அண்ணாங்க லவ் சொன்னதும் அந்த அக்காங்க மூஞ்சை நீ பார்த்து இருக்கணுமே.. ” என்று அவள் நிறுத்த,
‘ஏன்டி அவசரத்துல மேக்அப் போடாம வந்துட்டாங்களா..?? இல்ல லைட்டிங் ஆங்கில் சரியா பிக்ஸ் பண்ணாம போயிட்டாங்களா.., அதான் விடியோல ரொம்ப கேவலமா இருந்தாங்களா..??’
“டேய் அதில்லடா அவர் இப்படி பண்ணுவாருன்னு எதிர்பார்க்காம ஷாக்ல அவங்க கண்ணு பெருசா விரிஞ்சு ரெண்டு கையாலையும் வாயை பொத்தி அவரை கண்ணுல தண்ணியோட சிரிச்சிட்டே பார்ப்பாங்க பாரு” என்று சிலாகித்தவள்,
‘ஹப்பாஆஆஅ என்ன ஒரு லவ்டா சாமின்னு இருக்கும், அதை பார்க்கிறப்போ லவ்ன்னா இப்படி தான் இருக்கனும்ன்னு உனக்கே தோணும்’
‘நிஜமாவாடி’
‘ஆமாடா அதெல்லாம் வேற லெவல் பீல்..!! எப்படி இருக்கும் தெரியுமா..?? என்று பூரிப்போடு கூறியவள் தொடர்ந்து , அதெல்லாம் பார்த்தா உனக்கே லவ் பண்ண தோணும் அதுவும் ப்ரொபோஸ் பண்ணினதும் அவங்க அழறாங்களா இல்ல சிரிக்கிறாங்கலான்னு தெரியாதுடா..’
‘ஏன்டி அப்படி..??’
“ஏன்னு கேட்டா என்ன சொல்ல..?? லவ் விஷ்ணு லவ்.., அவ்ளோ லவ்டா…!! அதோட இதுவரை நாம ஒருத்தங்க சிரிச்சி பார்த்திருப்போம் இல்ல அழுது பார்த்திருப்போம் ஆனா சிரிச்சிட்டே அழறது இந்த மாதிரி ப்ரோபோசல்ல மட்டும் தாண்டா பார்க்க முடியும்..”
“ஆனா ஒன்னு விஷ்ணு எனக்கு அதை பார்த்தபோ மிஸ் இந்தியா, மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வாங்கறப்போ அவங்க பேர் சொன்னதும் நம்ம பியூட்டீஸ் எல்லாம் ஒரு ரியாக்ஷன் கொடுப்பாங்களே அதே மாதிரி இருந்ததுடா…”
“நான் உனக்கு காட்டுறேன் பாரு” என்று உலக அழகி.., பிரபஞ்ச அழகி பட்டம் பெற்ற சில வீடியோக்களையும் லவ் ப்ரோபோசல் வீடியோக்களையும் யாழி காட்டவும்,
அதன் ஒற்றுமையை கண்டு ‘ஆமாடி’ என்று விஷ்ணு அசந்து போனான்.
‘பார்த்தியா சொல்லி வச்ச மாதிரி எல்லாருமே இந்த ரியாக்ஷன் தான் கொடுப்பாங்க நானும் நிறைய வீடியோஸ் ரெப்பர் பண்ணிட்டேன்..”
‘அப்போ நீயும் அப்படி தான் ரியாக்ட் பண்ணுவியா..??’
‘தெரிலடா ஆனா சில முறை நானும் கண்ணாடி முன்னாடி அப்படி ட்ரை பண்ணி பார்த்தேன் எனக்கு அந்த ரியாக்ஷனே வரல’
‘ஏன்டி எனக்கு தெரியாம யாராவது உனக்கு ப்ரொபோஸ் பண்ணாங்களா..?? அதான் ப்ராக்டிஸ் பண்ணியா..??’ என்று அவளை சந்தேகமாக பார்க்க,
‘இல்லடா நீ சொன்ன மாதிரி இன் பியுச்சர் யாராவது பண்ண வாய்ப்பு இருக்குல அப்போ எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியாம முழிக்கக் கூடாது பாரு, என் பிரெண்ட்ஸ் கூட அவங்களுக்கு ப்ரோபோசல் வந்தப்போ எக்ஸாக்ட்டா அதே ரியாக்ஷன் கொடுத்தாங்க’,
‘ஐ திங்க் இது தான் யுனிவர்சல் ரியாக்ஷன் போல..!!’
“இருக்கும்டி ஒருவேளை உன் மாப்பிள்ளை நாளைக்கு உனக்கு ப்ரொபோஸ் பண்ணினா நீயும் அதே போல கண்ணை விரிச்சி, வாயை பொத்தி அழுதுட்டே சிரிடி அப்போ தான் வீடியோல ரியலிஸ்டிக்கா இருக்கும் உன் லவ்வும் வேற லெவல்ன்னு எல்லாரும் கமென்ட் பண்ணுவாங்க”
‘கண்டிப்பாடா நீயே பாரு எப்படி பெர்பார்ம் பண்றேன்னு ஆனா மறக்காம அதையும் நீ வீடியோ எடுத்திடனும் எனக்காக எடிட் பண்ணி உடனே அப்லோட் பண்ணிடனும் என்ன சரியா..??’
‘சரிடி ஆனா நீ சொதப்பாம ரியாக்ஷன் கொடுத்தா சரி’
‘அதெல்லாம் ப்ராக்டிஸ் பண்ணி கரெக்ட்டா கொடுப்பேன்டா கவலையே படாத’
***************************************
இன்னும் அரை மணி நேரத்தில் அதிரனின் பெற்றோர் வந்துவிடுவார்கள் என்ற தகவல் கிடைக்கவும் அங்கேயே சுற்றி கொண்டிருந்த மகனை அழைத்த சுகமதி, ‘இன்னும் காலேஜ் கிளம்பாம இங்க என்ன பண்ற..??’ என்றார்.
“ம்மா யாழியை பொண்ணு பார்க்க வாராங்கம்மா தனியா என்ன பண்ணுவா..?? அவளுக்கு ஒரு மாரல் சப்போர்ட் வேணுமே கூட பிறந்த தம்பி இப்போ நான் கூட இல்லன்னா நல்லா இருக்காதுல்ல”
‘நீ கூட இல்லாம இருந்தா தான் நல்லா இருக்கும்’ என்று அவர் உடனே சொல்ல,
‘ம்மா, தாயே’ என்ற திகைப்புடன் இருவரும் அவரை பார்க்க,
‘ஏய் அடங்குடி நீ ஒரு அரைவேக்காடு அவன் ஒரு அரைகுறை மாப்பிள்ளை வீட்டார் வரப்போ நீங்க ரெண்டு பேரும் சேர்ந்தா என்ன ஆகும்ன்னு உங்களை பெத்த எனக்கு தான் தெரியும், அதனால நீ வாயை மூட்டிட்டு காலேஜ் கிளம்பு இல்லை உங்க அப்பாவை கூப்பிட வேண்டி இருக்கும்’ என்று எச்சரித்தவர் மகளிடம் திரும்பி அவள் அணிந்திருந்த உடையை கண்டு,
‘என்ன கோலம்டி இது..??’ மரியாதையா போய் சுடிதார் போடு இல்ல புடவை கட்டி விடறேன் வா, அதை விட்டுட்டு இப்படி கோமாளிதனம் பண்ண நான் மனுஷியாவே இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்’ என்றார்.
‘தாயே என்ன இது உன்னோட அராஜகம் அதிகமாகிட்டே போகுது நல்லா இல்ல’,
‘என்னடி நல்லா இல்ல, இவ்ளோ நாள் உங்க அப்பாக்கு பயந்து உங்களை விட்டுவச்சது தான் என் தப்பு இப்பதான் அவருக்கு தெரிஞ்சிடுச்சே இனியும் உங்களை விடறதா இல்லை.., சொல்றதை கேளு இல்ல உங்கப்பாவை கூப்பிட வேண்டி இருக்கும்’ என்று அதட்ட,
‘இட்ஸ் மை டே தாயே உனக்கு அது புரியலையா…??’
‘என்னடி மை டே..?? எங்க இருந்து கத்துகிட்ட..?? இதோ பாரு இது உனக்கான நாள் மட்டும் இல்ல வரப்போற மாப்பிள்ளை அவர் குடும்பம் அதுக்கும் மேல உன்னை பெத்த எங்களுக்குமான நாள் தான் புரியுதா..?? பெத்தவங்களை பத்தின கூட கவலை கிடையாது, பெரியவங்களுக்கு மரியாதை கிடையாது எப்ப பாரு நான் நான்னு உங்களை மட்டுமே உங்க விருப்பத்தை மட்டுமே பிரதானபடுத்தி பேச வேண்டியது’
‘என்ன தாயே இது நான் என்ன போடணும்ன்னு நீங்க முடிவு பண்ணுவீங்களா..?? டிரெஸ்ஸிங் கூட என் இஷ்டத்துக்கு பண்ண கூடாதா..??’
‘ஏய் அடங்குடி இது நாள் வரை வீட்ல நீ நெனச்சபடி தான் ட்ரெஸ் பண்ணி இருக்க எப்பவாவது உன்னை தடுத்திருக்கோமா..?? இல்ல நீ கேட்டதெல்லாம் வாங்கி கொடுக்காம போயிருக்கோமா..??’ என்று சுகமதி விழிகள் சிவக்க,
“அதான் தாயே நானும் சொல்றேன் நான் வீட்ல எப்படி இருக்கேனோ வரவங்க என்னை அப்படியே பார்க்க வேண்டியது தானே..?? ஏன் புடவை கட்டினா தான் நான் பொண்ணா தெரிவேனா..?? அப்பவே இன்ஸ்ட்டால அந்த அக்கா சொன்னாங்க பெண் அடிமைத்தனம் சொந்த வீட்ல இருந்து தான் தொடங்குதாம், அதுவும் புடவையில இருந்து தான் அது உனக்கு தெரியுமா..??’ என்று ஆரம்பிக்கவும்,
‘யாழி உங்கிட்ட பேச எனக்கு நேரமில்லை, இவ சொன்னா அவ சொன்னான்னு இனி நீ பேச்சு எடுத்த நான் சும்மா இருக்கமாட்டேன்’ என்று சுட்டு விரல் நீட்டி எச்சரித்தவர்,
‘ஏன்டி உன்னை பெத்து சின்ன வயசுல இருந்து ஒவ்வொரு விசெஷத்துக்கும் விதவிதமா டிரஸ் போட்டு அழகு பார்த்த எனக்கு என் உணர்வுக்கு கூட உன்கிட்ட மரியாதை கிடையாதா..?? உன் மேல எங்களுக்கு இல்லாத அக்கறை யூடியூப்ல, பேஸ்புக்ல வரவளுக்கு இருக்குமாடி..?? எவளோ சொன்னாளாம் புடவை கட்டினா பெண் அடிமைத்தனமாம்,..!!’ என்று ஆரம்பித்தவரின் ரத்த அழுத்தம் ஏகத்திற்கும் எகிறி இருக்க சில நொடிகள் தன்னை நிதானித்து மட்டுபடுத்தியவர்,
‘இங்க பார் இதே மாதிரி பேசிட்டு இருந்த பொண்ணு பார்க்க வராங்கன்னு கூட பார்க்காம அறைஞ்சேன்னா கன்னம் பழுத்து சிவந்திடும் பார்த்துக்கோ.., இவ்ளோ நாளா உங்க அழிச்சாட்டியம் நம்ம வீட்டோட இருந்தது இப்போ இன்னொரு வீட்டுக்கு போகும் போதும் இதே கிறுக்கு தனம் பண்ணிட்டு இருந்தா என்னால பொறுக்க முடியாது ஒழுங்கா வந்து சேரு புடவை கட்டி ரெடி பண்றேன்’ என்று சீறிவிட்டு அவர் உள்ளே செல்ல,
‘டேய் என்னடா இது என் விருப்பத்துக்கு கூட ட்ரெஸ் பண்ண கூடாதா..?? இந்த லாங் கவுன்க்கு என்னடா குறை ஏன் இதை மாத்த சொல்றாங்க..?? அக்சுவலா இது தான் இப்போ லேட்டஸ்ட் ட்ரென்ட் நேத்து ஒரு சேனல்ல பொண்ணு பார்க்கிற வீடியோ அப்லோட் பண்ணி இருந்தாங்க எவ்ளோ அழகா இருந்தது தெரியுமா..?? அது கூட தெரியாம அப்டேட் ஆகாம பழைய பஞ்சாங்கமா ஏன்டா நம்ம உயிரை எடுக்குறாங்க ‘
‘எனக்குமே புரியலைடி ஆனா இவங்க கிட்ட ஏதோ மேனபெக்சரிங் டிபெக்ட் (Manufacturing defect) இருக்கு.., அப்பாவும் அம்மாவும் நிறைய மாறனும்’ என்றவன்,
‘சரி யாழி நான் காலேஜ் கிளம்பறேன், ஆனா மாப்பிள்ளை வந்ததும் போட்டோ எடுத்து எனக்கு வாட்ஸ்அப் பண்ணு’
‘உனக்கா உன் போன் தான் அந்த ரவுடி கிட்ட இருக்கேடா’
‘நான் அம்மா போன் எடுத்துட்டு போறேன்டி, ஆனா ஒன்னு யாழி உன் இஷ்டத்துக்கு முடிவு எடுக்க கூடாது நாம ஏற்கனவே பேசி வச்ச மாதிரி நான் ஓகே சொல்ற மாப்பிள்ளையை தான் நீ கல்யாணம் பண்ணிக்கணும் என்ன புரிஞ்சதா..??’
‘கண்டிப்பாடா நீ ஓகே சொன்னா தான் இந்த கல்யாணம் உனக்கு பிடிக்கலைன்னா எனக்கும் பிடிக்காது , அவங்க கிட்டேயே வேண்டாம் சொல்லிடுறேன்.., ஆனா அதே மாதிரி நீயும் நான் சொல்ற பொண்ணுக்கு தான் ஓகே சொல்லணும் என்ன டீல் ஓகேவா..??’
‘ஓகே ஓகேடி கண்டிப்பா நீ சொல்ற பொண்ணுக்கு தான் நான் ஓகே சொல்லுவேன், நீ மறக்காம மாப்பிள்ளையை போட்டோ எடுத்து அனுப்பு பேச முடியாது ஆனா நான் கிளாஸ்ல இருந்து மெசேஜ் பண்றேன் அப்புறம் ஓகே சொல்லு, பை’ என்று கிளம்பி இருந்தான்.
ராகம் தொடர்ந்து இசைக்கும் இணைந்திருங்கள்….
error: Content is protected !!