Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorizedமனவீணையின் புதுராகமே

ராகம் – 9

‘ஹாய் பிரெண்ட்ஸ் நான் உங்கள் யாழி’ என்று விஷ்ணு பைக்கை ஒட்டி கொண்டிருக்க அவன் பின்னே  அமர்ந்திருந்தவள் ட்ரைப்பாடில் பொருத்தி இருந்த மொபைல் மூலமாக சுற்றுபுறத்தை படமாக்கி கொண்டே வந்திருந்தாள்.

“இப்போ நாம எங்க போயிட்டு இருக்கோம்ன்னு உங்களுக்கு ஏதாவது கெஸ் இருக்கா..??” என்று கேட்டவாறே  தூரத்தில் தெரிந்த கோவிலை காட்டியவள்,

“உங்களால கெஸ் பண்ணவே முடியாது அப்படி ஒரு இடத்துக்கு தான் இப்போ நாம போக போறோம் அது எந்த இடம்ன்னு உங்களுக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல காமிக்கிறேன் அதுக்கு முன்ன இது வழக்கமா நாம செய்யற வ்லாக் மாதிரி இல்ல ஏன்னா இப்ப நான் கோவிலுக்கு போறதுக்கு ஸ்பெஷல் ரீசன் இருக்கு …” என்று நிறுத்தியவள் மீண்டும் சுற்றுபுறத்தை காண்பித்தவாறே,

“இப்போ ஏன் போறேன்ங்கிற காரணம் பத்தி உங்களுக்கு எதாவாது கெஸ் இருந்தா வீடியோவை பாஸ் (pause) பண்ணிட்டு எதுக்காக இந்த கோவில் விசிட்ன்னு  கமெண்ட்ஸ் செக்ஷன்ல லீவ் பண்ணுங்க இன்னும் கொஞ்ச நேரத்துல நானே சொல்றேன் அப்போ எத்தனை பேர் சரியா சொல்றீங்கன்னு பார்க்கலாம் ” என்றவாறு வண்டியில் இருந்து இறங்கியவர்கள் எதிரே இருந்த ஆற்றை படமாக்கியவாறே, 



Advertisement

‘நாம இப்போ பழமை வாய்ந்த பைரீஸ்வரர் கோவிலுக்கு வந்திருக்கோம்..’ என்றவாறே அவள் கரையில் நிற்க விஷ்ணு எதிரே இருந்த ஆற்றில் இறங்கி நடக்க  தொடங்கி இருந்தான். 

என்னடா இது கோவில்ன்னு சொல்லிட்டு ஆத்தை (ஆறு) காட்டுறேன்னு பார்க்குறீங்களா..??அது தான் சர்ப்ரைஸ் ஏன்னா இந்த ஆற்றுக்குள்ள நடந்து போனா தான் நாம தரிசிக்க வேண்டிய சிவன் கோவில் இருக்கு’

‘இந்த கோவிலுக்கு என்று  ஒரு வரலாறு இருக்கு அதை இப்போ நான் உங்க கூட ஷேர் பண்ணிக்க போறேன்’ என்று ஆரம்பித்து பேசிக்கொண்டே வந்தவள்.,

Advertisement

“இப்போ சொல்லுங்க பிரெண்ட்ஸ் நான் ஏன் இப்போ கோவிலுக்கு வந்திருக்கேன்னு யாராவது கெஸ் பண்ணீங்களா..?? என்று கேட்டவள்,

Advertisement

“நிச்சயம் முடியாது.. ஏன்னா நான் இந்த முறை இங்க வந்திருக்கிறது ஒரு ஸ்பெஷல் ரீசனுக்காக  அதுவும் எங்க அம்மாக்காக அவங்க  உடம்பு குணமாக வேண்டிக்கிறதுக்காக.. சோ முதல்ல சாமி கும்பிட்டுட்டு வந்து உங்களுக்கு இந்த இடத்தை சுத்தி காட்டுறேன்” என்றவள் இப்போது கைபேசியை பாக்கெட்டில் வைத்து கொண்டு ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக இருக்கவும் விஷ்ணுவை அழைத்து அவன்  கரம் பிடித்து நடக்க தொடங்கினாள்.

ஆம் இருவரும் சுகமதிக்காக வேண்டி கொள்ள வந்திருந்தனர்.

அதிர்துடியனை மறுக்க காரணமே இன்றி தேடி பிடித்து உப்பு சப்பில்லாத காரணங்களை அடுக்கி சமூக வலைதளங்களில் ஆங்காங்கே பார்த்த காணொளிகள் படித்த மேற்கோள்களை கொண்டு ஏதேதோ பிதற்றி தந்தையிடம் அடி வாங்கிய பின்பும் திருமணத்தை நிறுத்தி அவர்கள் செய்தது எத்தகைய தவறு என்று புரியாமல் பிள்ளைகள் இருவரும் ஹாலில் அமர்ந்திருந்தனர்.

Advertisement

பின்னே எந்த ஒரு விஷயத்தையும் யோசித்து ஆராயாமல், சாதக பாதகங்கள் குறித்த புரிதல் இல்லாமல் விளையாட்டு போக்கில் முடிவுகளை எடுப்பதும் அதை செயல்படுத்துவதும்..,  பின் தனக்கு ஏற்றார் போல மாற்றி அமைப்பதும் என்று வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சிக்கி தவிக்கும் பிள்ளைகளும் அதன் போக்கில் செயலாற்றி விட்டு இன்னும் அதை உணராமல் இருந்தனர். 

விஷ்ணு யாழி மட்டும் தான் இப்படியா..?? என்று பார்த்தால், இல்லையே ..!!  வளர்ந்து வரும் இளைய சமூகத்தில் குறிப்பிட்ட சதவிதத்தினரை ஆங்காங்கே நாம் பார்க்க, கடக்க வேண்டி இருப்பது தான் மறுக்க முடியாத நிஜம்.

இதோ இப்போதும் தாயின் நிலைக்கு அவர்களே காரணம் அவர்களது பொறுப்பற்ற, அர்த்தமற்ற பேச்சுக்கள் தான் காரணம் என்பதை உணராமல் நாம் என்ன தவறு செய்தோம்..?? லட்சியத்தை அடைய நினைப்பது தவறா..?? என் வாழ்வை முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லையா..?? என்று சமூக வலைதளங்களில் அவ்வப்போது கல்லூரி மாணவர்களிடையே எடுக்கப்படும் சர்வேயில் பெரும்பான்மையானோரின் கருத்தினை பின்பற்றி அதன் பின்னே இவர்கள் செல்கின்றனர்.. 

அவர்கள் வயதை ஒத்த பிள்ளைகளின் கருத்துக்கள் ஏற்படுத்தும் தாக்கத்தில் அது  தான் சரி என்று எதையும் அலசி ஆராயாமல் அவர்களை வழிமொழிந்து நமக்கு அது சரி வருமா..?? நமக்கு அது பிடித்தமா..?? என்று கூட யோசிக்காமல், தங்கள் விருப்பத்தை உணராமல் யாரோ எவரோ தொடங்கியதை தங்கள் வாழ்விலும்  பின்பற்றுகின்றனர்.

****************************************

பிள்ளைகளின் பேச்சில் மகள் எடுத்த முடிவின் அழுத்தம் தாளாத மகேஷ்வரன் சுந்தரத்திற்கு அழைத்து பேசினார். மகேஷ் கூறியதை கேட்ட சுந்தரலிங்கம் உடனே வீட்டிற்கு சந்திக்க வருகிறேன் என்று கூறவும் இங்கே பிள்ளைகள் முன்னிலையில் பேசுகையில் மீண்டும் ஏதேனும் கிறுக்குத்தனமாக பேசி அவரை நோகடித்து விடக்கூடாதே என்று மகேஷ் அவரை சந்திக்க அவர் அலுவலகத்திற்கு சென்று விட்டார்.

சுகமதி இருவர் மீதான மனத்தாங்களில் ரூமை விட்டு வெளியேறாமல் இருந்ததை கண்ட யாழி தம்பியிடம், 

‘டேய் நாம கோவிலுக்கு போகலாமாடா’ என்றாள்.

‘எதுக்குடி ..??’

‘என்னடா பேசுற அம்மாக்கு உடம்பு சரி இல்ல நாம கோவிலுக்கு போய் வேண்டிக்கிட்டா அவங்க சீக்கிரம் குணமாகிடுவாங்க இல்ல அதுக்கு தான்’ 

என்ன தான் தொழில் நுட்ப வளர்ச்சியின் பிடியில் சிக்கி கொண்டு அதில் வரும் கருத்துக்களை தங்களின் சொந்த கருத்தாக கொண்டு தான் தோன்றி தனமாக பேசி திரிந்தாலும்  பெற்றோரின் மீதான அவர்களின் பாசம் அவர்களை அறியாமல் வெளிவரத்தானே செய்யும்..!!

அதுவும் எப்போதும் சோர்ந்து படுக்காத சுகமதி இப்போது ஒரே இடத்தில் மகளின் வாழ்க்கை குறித்த அல்லாட்டத்தில் மனம் வெதும்பி ஒரே இடத்தில் சுருண்டு கிடப்பதை கண்டவர்களுக்கு மனதை ஏதோ செய்து கொண்டிருந்தது.

அதிலும் விஷ்ணுவிற்கு அன்னை மீது பாசம் அதிகம் யாழி கேட்கவும் சரி என்று தயாராகி வெளியில் வந்தனர்.

ஆனால் என்றும் போல இருவருக்கும் அப்படியே கிளம்பும் தைரியம் வரவில்லை அன்று தந்தையின் கோபத்தில் இனி எப்போதும் வெளியே செல்லும் போது பெற்றோரிடம் சொல்லிக்கொண்டு செல்வது நல்லது என்பதை உணர்ந்தவர்கள் உடனே அன்னையிடம், ‘ம்மா நாங்க கோவிலுக்கு போயிட்டு வரோம்’ என்று தகவல் தெரிவித்து விட்டே சென்றனர்.

சுகமதியும் கோவிலுக்கு சென்றாலாவது புத்தி வருகிறதா பார்ப்போம் என்ற நம்பிக்கையுடன் அவர்களை வழியனுப்பினார்.

அன்னைக்காக என்றாலும் பழக்கதோஷத்தை மாற்ற முடியாதே அதனால்  செல்லும் வழியிலேயே வழக்கம் போல அதையும் வ்லாக்காக எடுத்து கொண்டே சென்றனர்.

********************************************

‘அதி அம்மாக்காக இதை கூட செய்ய மாட்டியா..??’ என்று மரகதம் கேட்க,

‘ம்மா நான் சூளகிரி நெருங்கிட்டு இருக்கேன்ம்மா இப்போ எங்க இருந்தும்மா..’ என்று நெற்றியை நீவியவன்,

‘ம்மா நான் வேணும்ன்னா யாழியை பார்த்துட்டு …’ என்றவனை இடையிட்டவர்,

‘மருமகளை பார்க்க வேண்டாம்ன்னு உன்னை யார் தடுத்தா அதி ஆனா யாழியை  பார்க்கும் முன்னாடி ஈசனுக்கு ஒரு பூஜை பண்ணிட்டு போன்னு தானே சொல்றேன் ‘

‘ஏன் இதுவும் வேண்டுதலாம்மா..?? இன்னும் எவ்ளோ தான் வச்சிருக்கீங்க நீங்க..??’ என்று அவன் புன்னகையோடு கேட்க,

‘ஆமா அதி உனக்கு பொண்ணு முடிவானதும் கல்யாணத்துக்கு முன்ன உன் கையாள ஈசனுக்கு பூஜை பண்றதா வேண்டிக்கிட்டேன்., ஆனா நேத்து ராத்திரி ஒரு கெட்ட கனவு அதுல இருந்து மனசே சரி இல்ல..’ என்று  படபடத்த நெஞ்சை ஒரு கையால் பிடித்துகொண்டே,

‘அதான் நீ ஒரு பூஜை பண்ணிட்டு மருமகளை பாருன்னு சொல்றேன்’ என்றார்.

அவர் குரலில் இருந்த வருத்தத்தை உணர்ந்தவன் ‘சரிம்மா இங்க நான் பார்க்கிறேன், பக்கத்துல ஏதாவது சிவன் கோவில் இருந்தா பூஜை பண்ணிட்டு கிளம்புறேன்’ என்று அழைப்பை துண்டித்தவன் வண்டியை ஸ்டார்ட் செய்து வேகத்தை கூட்டினான்.

*********************************************

‘யாழி ஆற்றுக்கு நடுவுல இருக்க இந்த கோவிலை லாங் ஷார்ட், டாப் ஆங்கிள்ல  எடுத்தா கேமரா வொர்க், எடிட்டிங்காகவே இன்னும் வியூஸ் அள்ளும்டி’ என்று விஷ்ணு கூற, 

‘இங்க எப்படிடா..??’ என்று அவள் சுற்றிலும் ஆற்று நீர் ஓடிக்கொண்டு இருப்பதையும் சில ஆபத்தான பகுதிகளில் பேரிகார்டுகள் போடப்பட்டிருப்பதையும் கண்டு அவள் கேட்க, 

‘இதே நம்ம கிட்ட ட்ரோன் இருந்தா ஈசியா நிக்கிற இடத்துல இருந்து நாம நினைக்கிற மாதிரி இதை கவர் பண்ணலாம் ஆனா நம்ம கிட்ட தான் இல்லையே அதனால அங்க பாருடி..’ என்று கொஞ்சம் தள்ளி இருந்த சிறு குன்றை சுட்டி காட்டியவன் அங்க இருந்து எடுத்தா நல்லா இருக்கும் நான் அங்க போறேன் நீ கோவிலுக்கு போற மாதிரியும் அங்க இருந்து வர மாதிரியும் சில ஷாட்ஸ் எடுத்துடலாம் அப்புறம் வாய்ஸ் ஓவர் கொடுத்துக்கலாம் ஓகேவா..??’ என்று கேட்க, 

‘ஓகே தான் ஆனா எனக்கு கொஞ்சம் பயமா இருக்கேடா’ என்றாள்.

“ஏய் நீ என்ன சின்ன குழந்தையா பயப்பட..??  இதெல்லாம் ஒரு த்ரில் யாழி என்ஜாய் தி மொமென்ட், ஆனா ஒன்னு நீ இப்படி பயப்படறது மட்டும் உன் ப்ரெண்ட்ஸ்க்கு தெரிஞ்சது உன் கெத்தே போயிடும்டி” என்று அவளை பயமுறுத்தியவன்..,

“இரு இரு நீ இப்போ பேசுறதையும் ஷூட் பண்ணிக்கிறேன் அதுவும் உன்னோட இந்த பீதியான மூஞ்சியை  தம்ப்நெயிலா (thumbnail) வைக்கிறேன் அப்போ தான் வியூஸ் பிச்சிக்கும்” என்று அவளிடம் கூற, 

‘டேய் வாயை மூடுடா காட்டெருமை இந்த யாழி எப்பவும் ஸ்ட்ராங் இப்பபாரு எப்படி தில்லா நடந்து வரேன்.., இட்ஸ் எ சேலஞ்’ என்று அவள் நிமிர்வுடன் கூறிட,

‘இந்தா ப்ளு டூத் கனெக்ட்ல இரு நான் கொடுக்குற இன்ஸ்ட்ரக்ஷன் படி செய்யணும் என்ன புரிஞ்சதா..??’ என்று கேட்டவன் குன்றை நோக்கி சென்றான்.

*************************

‘டேய் முடிச்சியாடா..?? இன்னும் எத்தனை முறை நான் நடக்க..??’ என்று ப்ளுடூத்தில் விஷ்ணுவுடன் பேசிக்கொண்டே வந்தாள்.

‘இருடி லைட்டிங்கே சரியா இல்ல’ என்று கொஞ்சம் நகர்ந்து இடையூறாக இருந்த இலைகளை ஒதுக்கியவன், 

‘சரி இப்போ நீ திரும்ப கோவில் கிட்ட போயிட்டு அங்க இருந்து நடந்து வா’ என்றான்.

‘டேய் எருமை இது என்ன சாதாரண ரோடா ஆத்துல நடந்து வந்துட்டு இருக்கேன் தண்ணி வேற சில்லுன்னு இருக்கு அதோட அது வர போர்ஸ்ல என்னால சரியா நடக்க முடியல தட்டு தடுமாறி வரேன் சீக்கிரம் முடிடா’ என்று அவள் கத்த, 

“ஏய் லூசு உன் பக்கத்துல பாருடி உன்னை விட சின்ன குழந்தை தைரியமா நடக்குது நீ சரியான பயந்தாங்கோலியா இருக்க”, என்று அவளை கிண்டல் செய்து உசுப்பேற்ற,

உடனே ‘நான் ஒன்னும் பயந்தாங்கோலி கிடையாது யாழி ரொம்பவே ஸ்ட்ராங் தம்பி நீ எடு நான் திரும்ப நடந்து வரேன்’ என்று மீண்டும் கோவிலை நோக்கி சென்றவள் சில தூரம் நடந்து வர…

‘யாழி இப்போ பாதில இருந்து வா’ என்றான்.

‘ஏன்டா’ என்று அவள் சலிப்பான குரலில் கேட்க,

‘பில்டர் போட்டு எடுக்குறேன்’ என்றவனின் கால்களில் எதுவோ ஊற திடுக்கிட்டு போய் கீழே பார்க்க அரவம் ஒன்று அவன் காலின் மீது ஏறிக்கொண்டு இருந்தது.

அதை கண்டவன் பயத்தில் பா.. பா.. என்று அலறியவாறு யாழியின் கேள்விக்கும் பதில் கூறாமல் ட்ரைப்பாட்டை தவறவிட்டவன் அடுத்த நொடியே தன் காலை உதறி திசை தெரியாத வகையில் தெறித்து ஓட்டம் எடுத்திருந்தான்.

இங்கு யாழியோ அவனிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போக ஆற்று நீரில் வேகத்தில் தடுமாறியவள் பின் ஒருவழியாக  கால்களை ஊன்றி வைத்து, ‘டேய் பதில் சொல்லுடா’ என்று பேசியவாறே ஆற்றின் ஓரத்தில் வந்து கொண்டிருந்தவள் அங்கே பா.. பா.. என்ற விஷ்ணுவின் அலறலில் நொடி நேர கவன சிதறல் ஏற்பட்டு எதிர்பாரா விதமாக கல் இடறி கால்கள் நழுவ பிடிமானமின்றி  நிலை குலைந்து சரிந்து ஆற்று நீரில் தவறி விழுந்தாள்.

அவள் விழவும் சுற்றிலும் செல்பி, மற்றும் வீடியோ எடுத்து கொண்டிருந்த அத்தனை பேரின் கவனமும் அடித்து செல்பவள் புறம் திரும்ப உடனே அவளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க தொடங்கினர்.

மறுகரையில்  தாயின் சொற்படி அங்கே வந்த அதியோ ஆற்றில் இறங்கும் முன் குனிந்து பேன்ட்டை மடித்து விட்டு நிமிர அவன் எதிரே யாழி வந்து கொண்டிருப்பதை கண்டான்.

அவளை கண்டதுமே முதலில் ‘விழிகள் பொய் உரைக்குமோ..??’ என்ற சந்தேகம் தான் எழுந்தது ஆணவனுக்கு.

இருக்காதா பின்னே..!!  வழி நெடுக அவளை பற்றிய சிந்தனையில் உழன்று கொண்டே வந்தவனுக்கு காணும் இடமெங்கும் அவளே நிறைந்திருக்கிறாளோ அது தன் காட்சிபிழையாக கூடுமோ அல்லது தான் காண்பது நிஜம் தானா..??’ என்று குழம்பி தவித்தவன் பின் தன் பார்வையை கூர்மையாக்கி அவள் மீதி பதித்திட இது கனவல்ல நிஜம் தான் என்பதை உணர்ந்தான்.

அவளை பார்ப்பதில் தாமதமாகும் ஒவ்வொரு நொடியையும் நிந்தித்து அதை சிறைபிடித்து சிதையில் இட்டு சித்ரவதை செய்யும் அளவு சீற்றத்துடன் வந்தவன் எதிர்பாராவிதமாக கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல, அவளை எதிரில் காணவும் இனிதாய் அதிர்ந்து நின்றது ஓரிரு கணங்களே..!!

மறுகணமே கோடி சூரிய பிரகாசத்துடன்  இதழ்களில் மலர்ந்து விரிந்த புன்னகையை ஏந்தி கொண்டு ஓட்டமும் நடையுமாக அவளை நோக்கி சென்றான்.

*******************************************

அவனுக்கும் அவளுக்கும் சில அடி இடைவெளியில் அதி இருக்க அதே நேரம் விஷ்ணுவிடம் பதில் இல்லாமல் போனதில் யாழி நொடி நேர கவன சிதறலில் கல் தடுக்கி சரிந்து  நீரில் தவறி விழுவதை கண்டான்.

பிடிமானம் இன்றி அவள் பின்புறமாக சரிவதை கண்டவனுக்கு தன் உயிரே சிதறி போகும் நிலை.., மறுநொடியே தாமதிக்காமல் இருந்த இடத்தில் இருந்து நீரில் பாய்ந்திருந்தான்.

நீச்சல் தெரியாத யாழியோ தவித்து தத்தளித்து நீரின் போக்கில் அதன் வேகத்தில் சென்று கொண்டிருந்தாள், சுற்றி இருந்தவர்களோ கரை ஓரமாக ஆளுக்கு ஒரு கேமரா, கைபேசி என்று அவளை துரத்தி படம் பிடித்து கொண்டே வர அதற்குள் அதிர்துடியன் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு கொண்டிருந்தவளை நோக்கி வேகமாக நீந்தி சென்றான்.

ஆற்றின் வேகத்தில் கைகால்களை ஆட்டி தத்தளித்து கொண்டிருந்தவள் ஒரு கட்டத்தில் மூர்ச்சையாகி மூழ்க தொடங்க அதை கண்டவன் நீரினுள் அமிழ்ந்து அதிவேகமாக அவளிடம் சென்றவன் அவள் ஆழம் செல்லும் முன் அவளை இழுத்து கொண்டு மேலே வந்தவன் தன்னோடு சேர்த்தணைத்து நீந்த தொடங்கினான்.., மூர்ச்சையாகி இருந்த யாழியோ அவன் கரங்களில் அசைவற்று கிடந்தாள்.

நீரின் வரத்து அதிகரித்து அவர்களை தன் போக்கில் இழுக்க அவளோடு இணைந்து கரை சேர்வது அதிர்துடியனுக்கு பெரும் சவாலாகவே இருந்தது .., பல நிமிட போராட்டத்திற்கு பிறகு அதிர் யாழியோடு கரை சேர்ந்திட அதற்குள்  அவர்களை பின்தொடர்ந்து வந்த கூட்டம் அவர்களை சுற்றிக்கொண்டு படம் பிடித்து கொண்டிருந்தது. 

ஆம் சுற்றி இருந்த கூட்டம்  இதோ இப்போதும் அவர்களுக்கு உதவாமல் அவர்களின் ஜீவமரண போராட்டத்தை நிமிடம் கூட விடுபட்டுவிடக்கூடாது என்ற முனைப்புடன் அனைத்தையும் வீடியோ எடுத்து கொண்டிருந்தது.

இத்தனை பேருக்கு நடுவில் இன்னும் மனிதம் மரித்து போகவில்லை என்பதை உணர்த்தும் வகையில் ஓரிருவர் கை கொடுத்து அவர்களை மேலே கொண்டு வந்தனர்.

கரை ஏறிய அதி ஆழ்ந்த மூச்சை எடுத்து அவனை நிதானபடுத்துவர்க்குள் அனைவரின் பார்வையும் (focus) ஆடை நெகிழ இருந்த யாழியின் மீது செல்வதை கண்டவனின் ஆத்திரம் அதிகரிக்க உடனே அவளை தூக்கி தோளில் போட்டு கொண்டவன் சுற்றி இருந்தவர்களை பார்த்து “ஸ்டாப் இட்” என்று கர்ஜித்து இருந்தான்.

ஆனால் யாருமே படமெடுப்பதை நிறுத்தாமல் போக உடனே அவன் கைக்கு எட்டிய வரை இருந்தவர்களின் கைபேசிகளை  பறித்து ஆற்றில் தூக்கி போட்டான்,

“எவனாவது வீடியோ எடுத்தீங்க..??” என்று உச்சபட்ச கோபத்தோடு அதிர் விரல் நீட்டி எச்சரிக்க ஒருவன் அதையும்  வீடியோ எடுத்து கொண்டிருந்தான் அதை கண்ட அதிர்துடியன் உடனே அவனிடம் விரைந்து அவன் போனை பறித்து ஓங்கி அங்கிருந்த சிறு பாறையில் அடித்து சுக்கு நூறாக சிதற செய்தவன்,

“சொல்லிட்டே இருக்கேன் உன் இஷ்டத்துக்கு எடுத்தா என்னடா அர்த்தம்..??” என்று கேட்டு வீடியோ எடுத்தவனையும் ஓங்கி அறைந்திருந்தான்.

அவன் ஆக்ரோஷத்தில் சுற்றி இருந்த கூட்டம் முதலில் பின்வாங்கி பின் மெல்ல கலைய தொடங்கவும் அதிர் அவளோடு தன் காரை நோக்கி சென்றான்.

அவனை துரத்தி வந்த ஓரிருவரும் அவன் தீப்பார்வையில் வந்த வழியே திரும்பி நடக்க காரை திறந்து  பின்புறமாக அவளை படுக்க வைத்தவன் கண்ணாடிகளை ஏற்றி பாதுகாப்பை உறுதி செய்து பின் அசைவற்று கிடந்தவளின் தோள்களை பற்றி உலுக்க அவளிடம் எதிர்வினை இல்லை.

உடனே தாமதிக்காமல் அவள் நெஞ்சில் இருகரங்களையும் ஒன்றின் மீது ஒன்றை வைத்து  அழுத்தம் கொடுக்க தொடங்கினான்..

*******************************************

முதலில் மென்மையாக தொடங்கிய அவன் அழுத்தம் நொடிகள் நீளவும் வலுபெற்றுக்கொண்டே செல்ல யாழியிடம் அதற்க்கு எந்த பலனும் இல்லை.., உடனே அழுத்தத்தை நிறுத்தியவன் தாமதிக்காமல் அவளிதழோடு தன் அதரங்களை  பொருத்தி தன் மூச்சு காற்றை பலமாக உள்ளே செலுத்திட அப்போதும் அவளிடம் அசைவற்று போவதை கண்டு, 

‘யாழி ப்ளீஸ் டோன்ட் டூ திஸ் டு மீ..!!  கம் ஆன் டேக் எ ப்ரெத்..!!’ என்றவாறே,

மீண்டும் அவள் நெஞ்சில் பலம் கொண்ட மட்டும் அழுத்தம் கொடுக்க தொடங்கி மீண்டும் வேகமாக தன் உயிர்காற்றை அவளுக்கு செலுத்த தொடங்கி என்று அவன் தன் முதலுதவியை பல நிமிடங்களுக்கு தொடர்ந்து கொண்டிருந்தவன் ஒரு கட்டத்தில் அவள் கன்னத்தில் தட்டி, 

‘கண்ணை திறடி இல்ல கொன்னுடுவேன்’ என்று நடுங்கும் குரலில் மிரட்டியவாறே மீண்டும் அவள் நெஞ்சில் கரம் பதித்து தன் சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி அவளை உயிர்பிக்கும் வேகத்தோடு தன் அழுத்தத்தை முன்பை விட அதிகமாக அவன் கூட்ட  அடுத்த சில நொடிகளில் யாழி சிறிது அசைந்திருந்தாள்.

ஆனால் அவளை அறியாமலே பெண்ணவள் தன் சிறு அசைவின் மூலம் அதிரனின் காலியாகி போயிருந்த  உயிர்கூட்டில் துளி ஜீவனை நிரப்பி அவனை உயிர்பித்திருந்தாள்.

அவளை இழந்துவிட்டோமோ என்று அத்தனை நேரம் தவித்து கிடந்தவனிடம் ஆசுவாச மூச்சு வெளிப்பட்டாலும் இப்போது தன் மகிழ்ச்சியை கொண்டாடும் நிலையில் அவன் இல்லை அதனால் சிறிதும் தாமதிக்காமல் மீண்டும் அவள் இதழ்களை சேர்ந்து அவளோடு கலந்து அவளில் நிறைந்து அதிர்துடியன் மெல்ல முகம் நிமிர்த்த இப்போது யாழியின் கருவிழிகள் அசைந்து கொடுக்க மெல்ல கண் விழித்தாள்.

அவள் கண்விழிக்கவும் தான் அதிரனுக்கு போன  உயிரே மொத்தமாக திரும்பி வர ‘யாழிம்மா’ என்று அவள் கன்னம் தட்டி அவள் முகத்தை கையில் ஏந்தி இருந்தான்.

கண் விழித்திருந்தாலும் சாவின் விளிம்பை தொட்டு வந்ததில் இன்னுமே அதிர்ச்சி குறையாத பெண்ணவளின் இதழ்களில் தொடங்கி அவள் உடலின் மொத்த பாகமும் குளிரில் நடுங்கி கொண்டு இருந்தது.

ஆம் நீரில் பல நேரம் இருந்ததில் விட்டால் குளிரில் ஜன்னி கண்டுவிடும் அபாயத்தில் இருந்தாள் நம் நாயகி.

அதை கண்டவன் உடனே கீழிறங்கி தன் பெட்டியை திறக்க  மேல்புறத்திலேயே  அதிர்துடியன்  அவளுக்காக எடுத்து வந்திருந்த பட்டுபுடவை வீற்றிருந்தது. அதை எடுத்து கீழே வைத்தவன் பெட்டியை துழாவி அதில் இருந்து துவாலையும் அவனது உடைகளையும் எடுத்து கொண்டு அவளருகே அமர்ந்து அவளை சாய்த்து  அமர்த்தி..,

“நத்திங் டு வொரி.., யு ஆர் ஆல்ரைட் ..!! எவ்ரிதிங் எஸ் பைன் ..!!” என்று அவளை தேற்றி கொண்டே முதலில் அவள் கூந்தலை பிரித்து  துவட்டியவன் பின் அவள் டாப்ச்சின் கொக்கிகளை கழற்ற முற்ப்பட,

அச்சத்தில் மூர்ச்சையாகி இப்போது கண்விழித்தாலும் மயக்கத்தில் இருந்து மீளாது எல்லாம் ஏதோ கனவில் நடப்பது போல இருந்தது யாழிக்கு.

ஆனாலும் பெண்களுக்கே உண்டான உள்ளுணர்வு உந்தி தள்ள என்ன நடக்கிறது என்பதை உணராமலே நடுங்கும் கரத்தால் அவன் கையை பிடித்தாள்.

என்ன என்பதாக அவளை பார்த்தவன் அப்போது தான் அவள் மறுப்பு எதனால்..?? என்பது  புரிய ஒரு நொடி கண்களை  இறுக மூடி திறந்தவன் ‘ப்ச் கை எடு யாழி, நான் தானே..!! தப்பில்லை இல்ல உனக்கு தான் கஷ்டம்’ என்றான் கட்டளையான குரலில்.

துவண்டு தளர்ந்து போயிருந்த பெண்ணவளுக்கு அந்நிலையிலும் ஏனோ அவன் குரலுக்கு கட்டுப்படாமல் இருக்க முடியவில்லை.

அவள் டாப்ஸை கழட்டி விட்டு தன் டீஷர்ட்டை அவளுக்கு போட்டு விட்டவன் அப்போது தான் தன் சட்டையின் ஈரம் இன்னுமே அவள் உடலில் குளிர் கூட்டுவதை உணர்ந்து அதை கழற்றி விசிறிவிட்டு,

மீண்டும் அவளை நெருங்கி அவள் அணிந்திருந்த லாங் ஸ்கேர்ட்டையும் கழற்றி எறிந்தவன் அவளை மற்றொரு துவாலையால் போர்த்தி மறுகணமே அவளை இழுத்து அணைத்திருந்தான்.

குளிரில் இன்னுமே வெடவெடத்து கொண்டிருந்த தன்னவளை இழுத்து இறுக அணைத்து நடுங்கும் அவள் இதழ்களை மீண்டும் அழுத்தமாக சேர்ந்தவனிடம் இப்போதே அவளை இரண்டாய் நான்காய் எட்டாய் மடித்து தன் உயிருக்குள் பொத்தி வைத்து பாதுகாத்து கொள்ளும் வேகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!