Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

வரம் 💘 15

அத்தியாயம் – 15

 

 

“எங்க கிளம்பிட்ட வினய்???” என அன்றைய செய்தித்தாளில் பார்வையைப் பதித்தவாறு கணேசன் கேட்க, 



Advertisement

 

வெளியே செல்லக் கிளம்பிய வினய்யின் கால்கள் அங்கேயே தேங்கின. 

 

Advertisement

கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்த அகிலாவின் செவிகளும் மகனின் பதிலுக்காக காத்திருக்க, அதை உணர்ந்தாலும் அவன் கண்டுகொள்ளவில்லை.

Advertisement

 

“இனிமேலும் டைம் வேஸ்ட் பண்ண முடியாது டாட்!! ஆல்ரெடி அவளுக்கு அலையன்ஸ் பார்க்க ஸ்டார்ட் பண்ணிட்டதா அவளோட ஃப்ரெண்ட் சொன்னாங்க.. சோ, ஃபர்ஸ்ட் சங்கீதாவோட பேரண்ட்ஸ் கிட்ட பேச போறேன்.. அவங்க கொஞ்சம் அண்டர்ஸ்டான்டிங்கா தான் தெரியுறாங்க.. அவங்களை வச்சு அடுத்து மூவ் பண்ணிக்கலாம்” என அவன் நன்றாய் யோசித்தே இந்த முடிவுக்கு வந்திருக்கிறான் என்பது அவனின் பேச்சில் தெரிய, 

 

Advertisement

“இப்போதான் இந்த பிராப்ளம் வந்தது.. அதுக்குள்ள உங்க பொண்ணை லவ் பண்றேன்னு போய் நின்னா இன்னும் கோவப்படப்போறாரு வினய்.. பார்த்துக்கோ!!” என கணேசன், நாட்டரசனை எண்ணி இவ்வாறு கூறவும்,

 

“பார்த்துக்கலாம் டாட்!! ஃபர்ஸ்ட் இவங்க கிட்ட பேசுவோம்” என அவன் முடிவில் அவன் தெளிவாய் இருந்தான்.

 

அவனைக் குழப்ப வேண்டாம் என நினைத்த கணேசனும், “ஓகே மை பாய்!! ஆல் தி பெஸ்ட்!!!” என பெரிய புன்னகையுடன் அவனை வழியனுப்பி வைத்தார்.

 

“வீட்டுல நான் ஒருத்தி இருக்கேன்னு அப்பாக்கும் மகனுக்கும் கண்ணுக்கே தெரியாதே!!” என அகிலா கடுப்புடன் முணுமுணுக்க, 

 

“தெரியுறதும் தெரியாததும் உன் நடவடிக்கையைப் பொறுத்து தான் இருக்கும் அகி!!” என கணேசனும் அதற்கு பதிலடி கொடுத்துவிட்டு பணிக்கு கிளம்பச் சென்று விட, 

 

“அந்தாளைப் பத்தி தெரியாம ரெண்டு பேரும் ஆடிட்டு இருக்கீங்க.. போய் நல்லா அவமானப் பட்டுட்டு வந்த பின்னாடி தான் உங்களுக்கெல்லாம் புத்தி வரும்!!” என கணவனுக்கு கேட்குமாறு கோவமாய் கத்திச் சொல்லிவிட்டு அவர் கல்லூரிக்கு கிளம்பிச் சென்று விட்டார்.

 

இங்கே முன்பே சதீஷிற்கு அழைத்து நேரில் பேச வேண்டும் என வினய் கேட்டிருக்க, அவனும் மறுவீடு சம்பிரதாயம் என்பதால் சங்கீதாவின் வீட்டில் தான் இருப்பதாகக் கூறி அங்கே வரச் சொன்னான்.

 

வீட்டிற்குள் நுழைந்ததுமே அவனின் கண்கள் தன்னையும் அறியாமல், தன்னவளைத் தேடி அங்குமிங்கும் அலைபாய, 

 

“வாங்க வாங்க தம்பி!!! வந்து உட்காருங்க!!” என அவனை வரவேற்று உபசரித்த வைஜெயந்தி,

 

“சங்கீ!! யாரு வந்துருக்கான்னு பாரு” என உள்ளே குரல் கொடுத்தார்.

 

தன்னவளைக் காணாமல் ஏமாற்றமடைந்த வினய், முகத்தை சாதரணமாக வைத்துக் கொண்டு, “எங்க ஆண்ட்டி இப்போதான் வெட்டிங் முடிஞ்சது ரிலேட்டிவ்ஸ் யாரையும் காணோம்??” என பொதுவாய் விசாரிப்பது போல் கேட்க,

 

“எங்கப்பா!! எங்களோட சொந்தம் எல்லாம் வயலூரு பக்கம் தான்.. இங்க சும்மா தெரிஞ்சவங்க தான.. அவங்க கல்யாணம் முடிஞ்சதும் கிளம்பிட்டாங்க.. சம்பந்தி வீடு அரசியல்வாதி அப்படின்னதும் மிச்ச சொச்ச இருந்த சொந்தமும் நேத்து சாயங்காலமே கிளம்பிட்டாங்க.. எப்பவும் எங்களுக்கு எல்லாம் கூடவே இருந்து பாக்குறது இளவரசி தான்.. அவளும்..” என பேச்சுவாக்கில் இயல்பாய் சொல்லிக் கொண்டே வந்தவர், இறுதியில் தான் வினய்யிடம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதே உரைக்க, சட்டென பேச்சை நிறுத்தி விட்டார்.

 

அவர் சொல்ல வந்ததை உணர்ந்து கொண்ட வினய்க்கும் நேற்றைய நிகழ்வை எண்ணுகையில் முகம் ஒரு நொடி இறுகினாலும், தன்னவளை எண்ணுகையில் அந்த அவமானம் கூட பின்னுக்குச் சென்று விட, அடுத்த நொடியே முகத்தை இயல்பாக்கி, லேசாய் புன்னகைத்தான்.

 

‘ச்ச!! எவ்வளவு நல்ல புள்ளை!! இதைப் போய் அவர் என்னென்னலாம் பேசிட்டாரு’ என நினைத்த வைஜெயந்திக்கு இன்னும் மனது ஆறவில்லை.

 

அதற்குள் வெளியே சென்றிருந்த அறிவழகனும், சந்தோஷும் வந்துவிட அவர்களும் இன்முகமாய் அவனை வரவேற்று பேசியபடி, நேற்று நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பும் கேட்டிருந்தனர்.

 

அவன் இயல்பாய் அதை மறுத்துவிட்டு பொதுவாய் பேசிக் கொண்டிருக்க, ஒருவழியாக புதுமணத் தம்பதிகளும் தங்களின் அறைக்கதவைத் திறந்து வெளியே வந்தனர்.

 

சங்கீதாவிற்கு அங்கே அனைவரும் கூடியிருந்ததைக் கண்டு வெட்கம் வேறு வந்து தொலைத்தது.

 

“எல்லாம் உன்னால் தான்!! எல்லாரும் என்னை கேவலமா பார்ப்பாங்க” என சதீஷின் காதைக் கடித்தவாறு பொய்க் கோபத்துடன் சங்கீதா வர, 

 

“அதெல்லாம் ஒன்னும் நினைக்க மாட்டாங்க.. மாப்பிள்ளை பொண்ணை நல்லாஆஆ பார்த்துக்கிறாரு போலன்னு தான் நினைப்பாங்க” என அவன் கேலி பேசி சிரிக்க, சங்கீதாவிற்கும் சிரிப்பு வரப் பார்த்தது.

 

அவர்களைக் காண்கையில் வினய்க்கும் தன்னாலே ஒரு ஏக்கம் எழ, இப்படி ஒரு நாள் தங்கள் வாழ்க்கையில் எப்போது வரும் என நினைத்து பெருமூச்சு விட்டுக்கொண்டான்.

 

“ஹாய் வினய் சார்!!! சாரி வெய்ட் பண்ண வச்சிட்டோமா??” என கேட்டுக்கொண்டே சதீஷ் அவனுக்கு கை கொடுக்க, 

 

வினய்யும் பதிலுக்கு புன்னகையுடன், “அதெல்லாம் இல்லை.. இப்போதான் வந்தேன்” என கை குலுக்கினான்.

 

“வாங்க சார்!!” என சங்கீதாவும் வரவேற்றாலும், அவளிடம் இன்னும் நேற்றைய சம்பவத்தின் தாக்கம் மீதமிருந்தது.

 

“ஐ அம் ரியலி சாரி சார்.. எங்க சித்தப்பா அப்படி பிஹேவ் பண்ணுவாருன்னு எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை” என உண்மையான வருத்தத்துடன் அவள் மன்னிப்பு வேண்ட, 

 

“அட இப்போதான் கல்யாணம் ஆகிடுக்கு.. அதை என்ஜாய் பண்ணாம இதை போய் நினைச்சு ஃபீல் பண்ணிட்டு இருக்கீங்க.. நியாயமா நான் தான் சாரி கேட்கணும்.. கை நீட்டி காசு வாங்கிட்டு ஃபுல்லா கம்ப்ளீட் பண்ணாம விட்டுட்டு போய்ட்டேன்.. ரியல்லி சாரி ஃபார் தட்.. ஹோப் யூ ஆர் சாட்டிஸ்ஃபைட் வித் ஸ்டெல்லாஸ் வொர்க்” என அவன் முதன்முதலில் தன் சொந்த விருப்பு வெறுப்பை தொழிலில் காட்டிவிட்டோமே என குற்றவுணர்வுடன் மன்னிப்பு வேண்ட, 

 

அங்கிருந்தவர்களின் மனதில் அவனின் மேல் மதிப்பு கூடியது.

 

“அட என்ன சார் நீங்க போய்!!.. ஸ்டெல்லா நல்லாவே பண்ணிருந்தாங்க..” என சங்கீதா சொல்லவும், 

 

பேச்சு சற்று நேரம் பொதுவாய் பயணித்தது.

 

பின் ஒரு ஆழ்ந்த மூச்சு எடுத்தவன், தன்னை நிலைப்படுத்திக் கொண்டு,

 

“உங்க எல்லார்கிட்டயும் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்!! அதுக்காகத்தான் இப்போ வந்தேன்” என அவன் தொடங்கவும்,

 

“அப்படி என்ன விஷயம்.. அதுவும் நம்மகிட்ட பேச!!” என்று தான் அனைவரும் அவனைப் பார்த்திருந்தனர்.

 

அவர்களை அதிகம் காக்க வைக்காமல், “எனக்கு உங்க வீட்டுப் பொண்ணு வந்தனாவை பிடிச்சிருக்கு.. கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன்” என பட்டென அவன் விஷயத்தைப் போட்டு உடைத்தான்.

 

காதலிக்கிறேன் என்று சொல்லாமல், திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என அவன் சொன்னதே, அவன் இதில் எவ்வளவு உறுதியாக இருக்கிறான் என அங்கிருந்தவர்களுக்குப் புரிந்தது. 

 

இருந்தாலும் இது எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செய்யக் கூடிய விஷயம் அல்லவே. எனவே இதற்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் அவர்கள் அமைதி காக்க, அங்கே அவனுக்கு ஆதரவாய் இருந்தது சதீஷ் ஒருவன் மட்டுமே.

 

 

“வர்ரே வா!! சூப்பர் ப்ரோ!! ப்ரோன்னு இனி கூப்பிடலாம் தானே!!” எனக்கேட்டு மறைமுகமாக அவனின் விருப்பத்தை சதீஷ் தெரிவிக்க, 

 

வினய்க்கு அவனின் துணை, பெரிதாய் பலமளிக்க, நன்றியுடன் சதீஷைப் பார்த்து புன்னகைத்தான்.

 

சங்கீதா மற்றும் சந்தோஷிற்கு இதில் விருப்பம் தான் என்றாலும், நாட்டரசனை எண்ணி அவர்கள் மௌனம் காக்க, 

 

பெரியவர்களுக்கோ இது எந்த அளவு ஒத்துவரும் எனும் எண்ணமே அவர்களைத் தயங்க வைத்தது.

 

நிச்சயம் நாட்டரசன் காதல் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள மாட்டார் என்பது ஒரு புறமிருந்தாலும், கிராமத்தில் அதுவும் நாட்டரசனின் வளர்ப்பான வந்தனா, இவனுடன் எப்படி ஒன்றி ஒரு மகிழ்வான வாழ்வை வாழ்வாள் என்பதே அவர்களின் கவலை. 

 

அவனின் தொழிலைப் பற்றி நன்றாய் புரிந்து அவனுக்கு பக்கபலமாய் இருக்கும் ஒரு துணை அமைந்தால் தான், அவர்களின் மண வாழ்வு சிறக்கும் என அனுபவஸ்தர்களாகிய அவர்கள் நம்ப, யோசனையாக அவனைப் பார்த்திருந்தனர்.

 

“இப்படி பேசுறதுக்கு மன்னிக்கணும் தம்பி!!” என அறிவழகன் துவங்கவும், 

 

வினய்யின் மனம் லேசாய் நம்பிக்கை இழந்தாலும் முகத்தில் இன்னும் அதே புன்னகை, 

 

“எதுவா இருந்தாலும் ஃப்ரீயா பேசுங்க சார்!! நான் ஒன்னும் நினைக்க மாட்டேன்” என்றான்.

 

“நாங்க காதலுக்கு எதிரி எல்லாம் இல்லை.. எங்களைப் பொறுத்த வரைக்கும் பிள்ளைக சந்தோஷம் தான் எங்க சந்தோஷம்.. வந்தனாவும் எங்க பொண்ணு தான்.. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சா எங்களுக்கு ரொம்பவே திருப்தி.. நீங்க ரொம்ப நல்லவரு தான்.. அதுல சந்தேகமே இல்லை.. ஆனா அவ கிராமத்துல வளர்ந்தவ, உங்களோட வேலையை அவ புரிஞ்சுப்பாளான்னு தெரியலை.. நீங்க முக்கியமா பொண்ணுங்க, நடிகை அவங்களுக்கு தான் மேக்கப் போடுவீங்க.. அதை தொழிலா மட்டும் பார்க்குற பக்குவம் வேண்டும் அவளுக்கு.. அப்போதான் வாழ்க்கை நல்லா இருக்கும்.. அதான் எங்களுக்கு கொஞ்சம் யோசனையா இருக்கு” என அவர் அனைத்தையும் யோசித்து நீளமாக பேசி முடிக்க,

 

 “நீங்க சொல்றது ரொம்பவே கரெக்ட் சார்!! ஐ அக்ரீ!! பட் என்னைப் பொறுத்த வரைக்கும் லவ் இருந்தா போதும் சார்!! நம்பிக்கை தானா வந்துடும்.. என் வதனா என்னை நம்புவா சார்” என அவன் உறுதியாகக் கூறவும், 

 

ஒருவேளை வந்தனாவிற்கும் இவன் மீது விருப்பம் இருந்திருக்குமோ என அவர்களுக்குத் தோன்ற ஆரம்பித்தது.

 

அதுவும் வந்தனாவின் நடவடிக்கைகளை அருகில் இருந்து பார்த்த சங்கீதாவிற்கு, முன்பு புரியாததற்கெல்லாம் இப்போது அர்த்தம் விளங்க,

 

“அடி ஊமைக்குசும்பி!! என்கிட்டயே மறைச்சுட்ட பார்த்தியா!!! உன்னை வச்சுக்கிறேன் இரு” என மனதில் வந்தனாவை எண்ணி கறுவிக் கொண்டவளுக்கு, தங்கையின் வாழ்க்கை ஒரு நல்லவனோடு அமையப் போவதை எண்ணி பெரும் மகிழ்ச்சியே.

 

“தம்பி!! நீங்க சொல்றதைப் பார்த்தா வந்தனாவுக்கும் உங்க மேல இஷ்டம் போல இருக்கு.. அப்படியா??” என நம்பாமல் அறிவழகன் கேட்க, 

 

வினய்யின் முகம் அவனவளின் நினைவில் இப்போது மென்மையைத் தத்தெடுக்க, “அவளுக்கு என்னைப் பிடிக்கும் சார்.. அதை என்னால உறுதியா சொல்ல முடியும்.. பட் அவங்க ஃபேமிலியை நினைச்சு அவ என்னை வேண்டாம்னு சொல்லி, அவளை அவளே ஹர்ட் பண்ணிட்டு இருக்கா” என மலரின் மூலம் அறிந்தவற்றை அவர்களிடம் கூற, 

 

அவர்களுக்கு வந்தனாவை நினைத்து ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும், நாட்டரசன் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்த பின்பும் தன் காதலில் உறுதியாக இருக்கும் வினய்யை நினைத்து பெருமையாக இருந்தது.

 

நிச்சயம் இவனுடன் வந்தனாவின் வாழ்க்கை மகிழ்வாக இருக்கும் என இப்போது அவர்களுக்கும் நம்பிக்கை பிறக்க,

 

“எங்க பொண்ணுக்கே உங்களை பிடிச்சிருக்கும் போது, எங்களுக்கு வேறென்ன வேண்டும் தம்பி!! நிச்சயம் நாங்க உங்களுக்கு உறுதுணையா இருப்போம்.. நாட்டரசன் அவ்ளோ சீக்கிரம் ஒத்துக்க மாட்டான்.. நிறைய போராடணும்.. அதுக்கெல்லாம் உங்க மனசை தயாராக்கிக்கோங்க” என அறிவழகன் தன் சம்மதத்தைக் கூறவும், 

 

“அப்பறம் என்ன பெரிய மாமனாரையே கவுத்துட்டீங்க!! இனி நாட்டு மாமாவை பாட்டு பாடியாச்சும் பணிய வச்சிடலாம் ப்ரோ!! டோண்ட் வொர்ரி” என சதீஷ் உற்சாகத்துடன் வினய்யை அணைக்க, அங்கே ஒரு அழகான நட்பு உருவானது.

 

“இப்படியெல்லாம் கனவு காணாதீங்க!! எங்க சித்தப்பா திமிங்கலம் மாதிரி!! உங்க வலையில எல்லாம் சிக்க மாட்டரு!!” என சந்தோஷும் அவர்களுடன் இணைந்து கொள்ள, 

 

“மச்சான் துணை இருந்தா மலை ஏறலாம்னு சொல்லுவாங்க தான!!! இந்த மச்சான் துணையை வச்சு நாட்டு மாமனாரை மலை இறக்கி நாங்க பொண்ணைத் தூக்கிடுறோம்.. என்ன ப்ரோ??” என சதீஷ் வினய்யுடன் ஹைபை அடிக்க,

 

“அதெல்லாம் இருக்கட்டும்.. முதல்ல அந்த வந்தனா வாயைத் திறந்து உங்க மேல இருக்க லவ்வை சொல்ல வைங்க.. அப்பறம் எங்க சித்தப்பாவை மலை இறக்கலாம்” என சங்கீதா இடைபுக,

 

அங்கே அடுத்த சில நிமிடங்களில் அனைவரும் ஏதோ பல வருட பழக்கம் போல் மிகவும் தோழமையுடன் ஒருவரை ஒருவர் கேலி செய்து மகிழ்வுடன் இருக்க, 

 

அறிவழகன் தம்பதிக்கு மனமே நிறைந்து போனது.

 

தங்களின் காலத்திற்கு பிறகு, ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாக இருப்பார்கள் என அவர்களுக்கு நிம்மதியாக இருக்க, புன்னகையுடன் அவர்களைப் பார்த்திருந்தனர்.

 

வந்தனா எனும் ஒரு உறவு, அவன் வாழ்க்கையில் இத்தனை உறவுகளையும் நண்பர்களையும் கொண்டு வந்ததை எண்ணி மகிழ்ந்த வினய், மானசீகமாய்,

 

“தேங்க் யூ ஏஞ்சல்!!! இத்தனை பேரோட சப்போர்ட் கிடைச்சதும் ஏதோ யானை பலம் வந்த மாதிரி இருக்கு.. கூடிய சீக்கிரமே வரேன்!!! நானா உங்க அப்பாவான்னு பார்த்துரலாம்!!!” என புன்னகையுடன் பேசிக்கொண்டான்.

 

 

***

 

“இந்தக் கல்யாணம் நடக்காது போலீசு.. அவ வேற ஒருத்தரை விரும்புறா” என வந்தனாவின் மனதை மலர் வெளிப்படுத்தி விட்டதைக் கேட்டதும் அவன் அமைதியாக இருக்க, 

 

“என்ன சாக்கா(ஷாக்) இருக்கா?? அதான் சொல்றேன்.. மரியாதையா இவளை விட்டுட்டு வேற பொண்ணைப் பாருங்க” என அவள் மீண்டும் வலியுறுத்தவும் பக்கென சிரித்து விட்ட ரஞ்சித், 

 

“எனக்கென்ன ஷாக்??? ஏங்க இந்தக்காலத்தில ஸ்கூல் படிக்குற பொண்ணே ஸ்கூல்ல ஒன்னு டியூஷன்ல ஒன்னுன்னு ரெண்டு லவ்வர் வச்சிட்டு சுத்துது.. இவங்க காலேஜ் ஃபைனல் இயர் படிக்கிறாங்க.. லவ்வர் இல்லாம இருந்தா தான அதிசயம்!!” என அவன் கிண்டலாகக் கேட்டு வைக்க, 

 

பெண்கள் இருவரும் ‘என்ன இவன் இப்படி பேசுகிறான்’ என்பது போல் ‘ஞே’ என விழித்தனர்.

 

“என்ன சைலண்ட் ஆகிட்டீங்க!! எனக்கு இதெல்லாம் பிராப்ளம் இல்லை.. உங்களுக்கு என்னைப் பிடிச்சா மட்டும் போதும்” என அவன் மலர் கூறியதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல் பேச, 

 

“ஏன் போலீசு.. உங்களுக்கு ஏதும் உடம்புல கோளாறா??” என மலர் சந்தகேகமாகக் கேட்டே விட,

 

“இல்லையே!!! ஐ அம் பெர்ஃப்க்ட்லி ஃபைன்.. ஐயாவோட சிக்ஸ் பேக் அன்ட் என் ஆர்ம்ஸை பார்த்துமா உங்களுக்கு இந்த டவுட்!!” என அவன் தன் புஜத்தை தூக்கிக் காட்டி வேறு கேட்க, 

 

“உடம்புல இல்லை மூளையில தான் அப்போ கோளாறு” என நினைத்துக் கொண்ட மலர், 

 

“எல்லாம் நல்லாத் தான இருக்கு .. அப்பறம் எதுக்கு எங்க உயிரை வாங்குறீங்க?? உங்களுக்கு என்ன பொண்ணா கிடைக்கலை.. அவ தான் வேற ஒருத்தரை விரும்புறான்னு சொல்றேன்.. நீங்க புரிஞ்சுக்காம நக்கல் பண்ணிட்டு இருக்கீங்க” என மலர் எகிறவும், 

 

“அட சவுண்டைக் குறைங்க!! எதுக்கு இவளோ கோவம்.. கூல் கூல்!! இதோ பாருங்க நீங்க நம்பலனாலும் இதான் நிசம்.. பொறுக்கிக்கு கூட இந்தக் காலத்துல பொண்ணு கொடுக்குறாங்க ஆனா போலீஸ்காரனுக்கு ஒரு பய கொடுக்க மாட்டேங்குறான்.. தெய்வமா பார்த்து ஒரு அழகான பொண்ணை என் லைஃப்ல கொண்டு வந்திருக்கு.. நீங்க ஏதாவது பேசி ஆட்டையை கலைச்சு விடாதீங்க.. அவங்களே கம்முன்னு தான் இருக்காங்க..” என ரஞ்சித் சிறுபிள்ளையென முகத்தை வைத்துக் கொண்டு பாவமாகக் கூற, 

 

மலருக்கு ‘இவன் நெஜமாவே போலீசா??’ என சந்தேகம் வலுவடைந்தது.

 

“ஹேய் அந்தாளு சொல்றதை கேட்ட தான!! வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருக்க .. வாயைத் தொறந்து பிடிக்கலைன்னு சொல்லித் தொலையேன்.. அப்பறம் இந்த வேதாளம் நம்மளை விடாம தொத்திக்கும்..” என வந்தனாவை மலர் இடித்துக் கூற, 

 

வந்தனாவும் இத்தனை நாளில், வினய்யைத் தவிர வேறொருவனை கனவில் கூட நினைத்தும் பார்க்க முடியாது எனும் உண்மையை உணர்ந்து விட, நாட்டரசனிடம் பேசும் தைரியம் இல்லாததால், இவனிடமே உதவி கேட்டு இந்த திருமணத்தை நிறுத்தி விடுவோம் என அவள் முடிவெடுத்து வாயைத் திறந்த சமயம்,

 

“வேண்டாம்!!! விட்டுருங்க!! இப்போ என்ன உங்க ஃப்ரெண்ட் சொன்னதை நீங்களும் சொல்லப் போறீங்க அதானே??” என அவன் பாவமாய் கேட்கவும், 

 

வந்தனாவும் தலையை ஆமாம் என்பதாய் மேலும் கீழும் ஆட்ட,

 

அடுத்த நொடி நெஞ்சைப் பிடித்துக் கொண்டு இரண்டடி பின்னால் நகர்ந்தவன், வராத கண்ணீரை சுண்டி விட்டுக் கொண்டு, “அவ்ளோதானா??” என்பது போல் பார்க்க, 

 

“யோவ் நீ நெஜமாவே போலீசு தானா?? இல்லை டிராமால போலீஸ் வேசம் கட்டுறியா??” என அவனின் நடிப்பைக் கண்டு அவனிடமே கேட்டுவிட்டாள் மலர்.

 

வந்தனாவிற்கும் அந்த சந்தேகம் இருந்ததால், அவளும் பதிலுக்காக அவனையே பார்த்திருக்க, 

 

“ஹாஹாஹா!!! என்ன நம்பிட்டீங்களா???” என அடுத்த நொடி அவன் வெடித்துச் சிரிக்க, 

 

“அடியே புள்ளை!! முத்துன கேஸ் போல இது.. வா ஓடிரலாம்” என பயந்து போய் மலர் வந்தனாவின் கையைப் பிடித்து இழுக்க, 

 

“அட ரொம்ப ஓட்டாதீங்க ப்பா!!! சும்மா கொஞ்ச நேரம் ஃபன் பண்ணலாம்னு பார்த்தா இப்படி கலாய்ச்சுட்டு இருக்கீங்க” என புன்னகையுடன் அவர்களை நெருங்கிய ரஞ்சித், 

 

“சாரி இவளோ நேரம் உங்களை டென்ஷன் பண்ணதுக்கு!!” என வந்தனாவிடம் உணர்ந்து மன்னிப்பு கேட்க, 

 

மலர் இன்னும் அவனை நம்பாமல் தான் ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“நேத்து உங்களை வீட்டுல பார்க்குறப்போவே எனக்கு கொஞ்சம் டவுட் தான்.. அதான் அங்க உங்ககிட்ட பேச டிரை பண்ணேன்.. பட் குறுக்க இந்த கௌசிக் வந்தான்ற மாதிரி உங்கப்பா குறுக்க வந்து கெடுத்துட்டாரு.. சரி!! அதான் நேர்லயே உங்ககிட்ட பேசி உங்க மனசை தெரிஞ்சுகிட்ட பின்னாடி அடுத்து பிரோசீட் பண்ணலாம்னு இங்க வந்தேன்.. நான் நினைச்சது கன்பார்ம் ஆயிடுச்சு.. போலீஸ்னா சும்மாவா?? பார்வையாலே கண்டுபிடிச்சிட்டோம்ல??” என சீரியசாய் பேசிக் கொண்டு வந்தவன், இறுதியில் கேலியில் முடிக்க, 

 

“ரொம்பத்தான்!! ஏதோ சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிச்ச மாதிரி பெருமை வேற!!” என மலர் அதற்கும் வாயைக் கொனாட்டிக் கொள்ள, 

 

இப்போது ரஞ்சித்தின் பார்வை மலர் மீது ஆர்வமாக பதிய, 

 

அதைக் கண்டுகொண்ட மலர், “என்ன திரிஷா இல்லைனா திவ்யான்னு பார்வை என் பக்கம் சாயுது??? நானெல்லாம் அவளை மாதிரி இல்லை.. போலீசுன்னும் பார்க்க மாட்டேன்.. பொலந்துறுவேன் ஜாக்கிரதை!!” என அவள் துடுக்காக மிரட்ட, 

 

“ஷ்!! மலர்!! என்ன இது!!” என கடிந்துகொண்ட வந்தனா,

 

“சாரி சார்!! அவளுக்கு கொஞ்சம் வாய் ஜாஸ்தி!! தப்பா எடுத்துக்காதீங்க” என ரஞ்சித்திடம் மன்னிப்பு வேண்ட, 

 

“ஹாஹா!! நோ பிராப்ளம்.. எனக்கு இப்படி இருக்கது தான் பிடிக்கும்.. போலீஸ்ன்னு பார்க்குறவங்களாம் கொஞ்சம் எட்டி நின்னு தான் பழகுவாங்க.. பட் இவங்க தான் அதெல்லாம் கண்டுக்காம இயல்பா இருக்காங்க” என பெருந்தன்மையுடன் கூறியவன், 

 

“சரி உங்க லவ் ஸ்டோரி சொல்லுங்க!! எப்போ வீட்டுல பேசி கல்யாணம் பண்ணப் போறீங்க?? மறக்காம என்னையை உங்க மேரேஜ்க்கு இன்வைட் பண்ணனும்” என அவன் உற்சாகத்துடன் பேசிக் கொண்டு போக, 

 

வந்தனாவிடம் ஒரு விரக்திப் புன்னகை.

 

அதைக் கண்டுகொண்ட ரஞ்சித், “என்னாச்சு?? எனி பிராப்ளம்?? உங்களுக்கு எதுவும் இஷ்யூஸ் இல்லைனா என்கிட்ட சொல்லுங்க.. என்னால முடிஞ்ச ஹெல்ப் நான் பண்றேன்” என அவன் உண்மையான அக்கறையுடன் கேட்க, 

 

மலர் அவனை நம்பாமல் தான் பார்த்தாள்.

 

“அட நம்புங்க!! எனக்கு தான் லவ் செட்டாகலை.. அட்லீஸ்ட் மத்தவங்க லவ்வுக்காச்சும் ஹெல்ப் பண்ணி அந்த புண்ணியம் சேர்ந்தாவாச்சும் என் வாழ்க்கையில ஒரு ஒளி கிடைக்குதான்னு ஒரு நப்பாசை தான்” என அவன் கேலியாகச் சொல்லவும், 

 

வந்தனாவிற்கு அவனின் இலகுவான அணுகுமுறை அவனின் மேல் ஒரு தோழமை உணர்வை உண்டாக்க, மேலோட்டமாக அவர்களின் காதல் கதையைத் தெரிவித்திருந்தாள்.

 

“பார்ரா!! இரண்டு மூணு டைம் பார்த்ததுல இப்படி ஒரு டீப் லவ்வா?? இன்ட்ரெஸ்டிங்!!” என சிலாகித்தவன், 

 

“சோ உங்க அப்பா தான் உங்க கதைக்கு வில்லன் இல்லையா??” என அவன் தாடையைத் தடவி யோசிக்க, 

 

“பெரிய சி.ஐ.டி. சங்கர் இவரு!! ரொம்ப சீக்கிரம் கண்டுபிடிச்சிட்டாரு!!” என மலர் கவுண்டர் கொடுக்க, 

 

அவளைத் திரும்பி லேசாய் முறைத்தவன், “என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு!!! பட் அதுக்கு நீங்க ஒத்துப்பீங்களான்னு தெரியலை” என அவன் துவங்கவும், 

 

“சத்தியமா ஒத்துக்க மாட்டோம்!! நீங்க கெளம்புங்க” என மலர், வந்தனாவை இழுத்துக் கொண்டு முன்னே நடக்க, 

 

“அட கொஞ்சம் கம்முன்னு தான் இரேன்மா!!” என நொந்தே போனவன், 

 

“நான் இப்போ நிச்சயத்தை நிறுத்தினாலும் உங்க அப்பா அடுத்து ஒரு மாப்பிள்ளையை கொண்டு வரத்தான் போறாரு!! அதுக்கு தான் சொல்றேன்.. சும்மா உங்க வீட்டுல போய் எனக்கு ஓகே சொல்லிடுங்க.. பட் நிச்சயம், கல்யாணம் எல்லாமே இன்னும் ஒரு வருஷம் தள்ளி தான் வைக்கணும்னு என் ஜாதகத்துல சொல்லிட்டாங்கன்னு நான் எப்படியாவது உங்க அப்பாவை கன்வின்ஸ் பண்ணி டைம் வாங்கித் தரேன்.. இந்த ஒரு வருஷ கேப்ல உங்க ஆளை எப்படியாச்சும் உங்க அப்பாவை கரெக்ட் பண்ண சொல்லிடுங்க!! எப்படி என் ஐடியா??” என அவன் புருவத்தை ஏற்றி, இறக்கி கேட்க, 

 

‘இது எந்த அளவிற்கு நடைமுறைக்கு சாத்தியம்??’ என வந்தனா யோசிக்க,

மலர் அவனை சந்தேகமாய் பார்த்து வைத்தாள்.

 

“இல்லை வேண்டாம்” என மறுத்த வந்தனாவையும் அவன் பேசிப் பேசியே தன் வழிக்கு கொண்டு வந்திருக்க, 

 

மலரின் சந்தேகம் இன்னும் அதிகம் தான் ஆனது.

 

இருந்தும் பொறுமையாய் அவனை கவனித்திருந்தவள், ‘நீ மட்டும் ஏதாவது தில்லாலங்கடி வேலை பண்ணு!! மவனே நீ கைமா தான்’ என மனதில் கறுவிக் கொண்டவள், வெளியே அவனை முறைத்தபடி வந்தனாவை அழைத்துக் கொண்டு கிளம்பியிருந்தாள்.

 

செல்லும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சித்தின் முகத்தில் நீங்கா புன்னகை ஒன்று இடம் பிடித்திருந்தது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!