Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Vinmeengalin Sathiraattam

விண்மீன்களின் சதிராட்டம் – 19

அத்தியாயம் – 19

வேதாவின் கவனிப்பும் அவள் அருகாமையும் சேர்ந்து, நீண்ட  நாள் கழித்து ஒரு ஆழ்ந்த தூக்கத்திலிருந்தான் விக்ரம். பட்டென்று முகத்தில் ஒரு அடி விழுந்தது. அடித்து பிடித்து எழுந்தான் விக்ரம்.

“ஆஆ …அம்மா… இழுக்குதே.”,  என்று வேதா முனகிக்கொண்டிருந்தாள்.

“என்னாச்சு வேதா ?”,படபடப்பாய் எழுந்து அமர்ந்தான்.



Advertisement

“கால்ல க்ராம்ப்ஸ்…பாதத்துல…அடியில…. பிடிச்சு விடு, எத்தன வாட்டி கூப்பிடறது ? அப்படி தூங்கற ?”, வலியிலும் சண்டை பிடித்தாள்.

அவசரமாய் அவள் காலை மடியில் வைத்து, பாதத்தை அழுத்தினான். வேதா கத்தவும். “இரும்மா, ரெண்டு நிமிஷம் பொறு. விட்டுறும்.”

“ம்ம் ம்ம்..அப்பிடித்தான், அழுத்து..ம்ம்ம்”

Advertisement

“ஷ்…யாராச்சம் கேட்டா, தப்பா நெனப்பாங்கடா..உங்கண்ணன் ஹால்லதான் தூங்கறான்.”, அவசரமாய் அதட்டினான் விக்ரம்.

Advertisement

வலி விடவும், அவன் கூறியதைக் கேட்டவள் குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்தாள். சிரித்துக்கொண்டே, ‘என்ன தூக்கு சீக்கிரம்” எனவும்,

“என்ன என்னாச்சு ?”,  என்று எழுப்பி உக்கார வைக்க, உக்காராமல், எழுந்து பாத்ரூமுக்கு விரைந்தாள். பின்னாடியே சென்றவன் முகத்தில் கதவை மூடவும் , முழித்தான்.

“என்ன வேதா, என்ன பண்ணுது ? உங்கம்மாவைக் கூப்பிடட்டுமா ?”,

Advertisement

“ஒண்ணுமில்லை, இப்ப வரேன். இரு.” அவள் வெளியே வந்ததும், “என்ன, வாந்தி எடுத்தியா ?”

“இல்லைபா…சிரிக்கவும் அவசரமாய் மூச்சா போகவேண்டியதா போச்சு. அதான் ஓடினேன். இப்பல்லாம் கண்ட்ரோல் பண்ணமுடியறதில்லை. அடிக்கடி போகவேண்டியதா இருக்கு.”. பாவமாய்ச் சொன்னாள் வேதா.

“என்னவோ, ஏதோன்னு பயந்துட்டேன். சரி வா.”

“தண்ணி வேணுமா ?” “ம்ம்”, வாங்கி குடித்துவிட்டு பாட்டிலை அவனிடம் கொடுத்தாள். மணி மூன்றுதான் ஆகியிருந்தது.

“நல்லா தூங்கிட்டேன் தேனு, நாளைக்கு வேணா, உங்கம்மாகூடவே படுத்துகறயா ?”

ஒருக்களித்துப் படுத்தவள், வேண்டாம்,  நீயே இரு. இன்னும் ஒரு  நைட்தான கூட இருப்ப. அருகில் படுத்தவன் கையை எடுத்து அவள் வயிற்றை சுற்றிப் போட்டுக்கொண்டாள். “இப்படி போட்டு தூங்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. நானும்  நம்ம பாப்பாவும் உன் அணைப்புக்குள்ள.”

அவன் தலையை மெல்ல அவள் தலையில் முட்டி, நெருங்கி அணைத்துக்கொண்டான். அந்தபுறம், அவன் குழந்தை உதைப்பதை உணர்ந்தான்.

“ஷ்..உதைக்கிறா..”,

“ம்ம்…நான் கொஞ்சம் அமைதியா இருந்தாப்போதும், உங்க பிள்ளை உள்ள ஃபுட்பால் ஆட ஆரம்பிச்சிடுவான்”

“கொஞ்சம் இடுப்பை  நீவி விடு வீரு… தூங்கறவரைக்கும்”

“மறுபடியுமா ? படுக்குமுன்னதான பண்ணேன் ?”

[the_ad id=”6605″]

“ம்ம்…இதுகெல்லாம் கணக்கு பார்ப்பியா ? உன் ஆடிட்டிங் எல்லாம் ஆபிஸ்ல வெச்சிக்கோ, இருக்கற ரெண்டு நாளு நீ பண்ணு, பாவம் எங்கம்மா கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.”

“நீ பண்ற அட்டகாசத்துக்கு நான் ரெண்டு நாள் தாங்குவேனா தெரியலையே ? நெஜமா வலிக்குதா, இல்ல என்ன சும்மா வெச்சு செய்யறயா ?”, சந்தேகமாய் கேட்டான்.

“ம்ம்… வயத்துல ஆறு கிலோ வாட்டர் பாக் கட்டிகிட்டு, நீ உன் வேலைய செஞ்சு பாரு, அப்ப தெரியும் என் கஷ்டம்.  “, கோபித்துக் கொண்டாள் வேதா.

“இல்ல தேனுமா, நான் பிடிச்சிவிடறேன். சும்மாதான் கேட்டேன்.”, உடனே வெள்ளைக்கொடி அசைத்து, எழுந்து உட்கார்ந்து அவள் சொல்லிக்கொடுத்தபடி நீவி விட ஆரம்பித்தான்.

“ம்ம்…குழந்தை வளர்றதை அனுபவிக்கமுடியலைன்னு வருத்தப்பட்டியே ? நல்லா அனுபவி.”, நக்கலடித்து வாகாகப் படுத்துக்கொண்டாள்.

‘சே…பாவம் ஒரு நாளைப்போல ராத்தூக்கம் கெட்டு, மறு நாள் எப்படி கிளம்பி காலேஜ் போறா, இதுல பரீட்சை வேற, அப்ப பண்ண கலாட்டாக்கப்பறம் கஷ்டமாயிருக்குன்னு ஒரு வாட்டி கூட சொல்லல. ம்.. என் பொண்டாட்டி வளர்ந்துட்டா..’, தூங்கும் அவளையே பெருமையாக பார்த்துக்கொண்டிருந்தவன், தானும் தூங்கிப்போனான்.

காலையில் அவர்களை சந்திக்க வைத்த அம்மன் கோவிலுக்குச் சென்று வந்தார்கள். சீனு ஐய்யர், விசேஷ அர்ச்சனை, தீபாராதனை, அம்மனிடமிருந்து மாலை, பூ  என்று அமர்களப்படுத்திவிட்டார். அவர் பார்த்துவைத்த ஜோடியாயிற்றே !

பதினொன்று மணிபோல், செக்கப்பிற்காக டாக்டரிடம் அமர்ந்திருந்தனர்.

“நீ வரணும்னுதான் இன்னைக்கு அப்பாயின்மெண்ட் வாங்கினேன். முதல் மாசம் வந்த, இப்போ கடைசி மாசம்.”

“ம்ம்…இன்னைக்கு நானே பாப்பாவ, ஸ்கான்ல பார்ப்பேன். சந்தோஷமா இருக்கு.”, மகிழ்ச்சியாய் இருந்தான் விக்ரம். தொடர்ச்சியாய் உட்கார முடியாமல், அவள் எழுந்து நடந்தால் அவளோடே நடந்து, பாத்ரூம் வரை சென்று காத்திருந்து கூட்டி வந்து என்று பின்னோடே சுற்றிக்கொண்டிருக்க, அங்கிருந்த நர்ஸ், இவளுக்கு பரிச்சயமான வேறு இரண்டு பெண்கள் எல்லோரும் இவர்களைத்தான் கிண்டலடித்துக் கொண்டிருந்தார்கள்.

“ஒரு செக்கப்தான வந்திருக்கார், அதான் சுத்தறார். மாசா மாசம், வாரா வாரம்னு வந்தா தெரியும். இந்த வாட்டி அம்மாகூட போ, அக்கா கூட போன்னு ஆளாளுக்கு கை மாத்துவாங்க.”, அங்கலாய்த்தாள் ஒருத்தி.

“இவளுக்கு என்ன கடுப்பு தேனூ”, விக்ரம் காதைக்கடித்தான்.

“அவ வீட்டுக்காரர் வர்றதே அபூர்வம் . அப்பவும் , கொண்டு வந்து விட்டுட்டு போய்டுவார். திரும்ப கூப்பிட்டா பிக்கப் பண்ண வருவார். ஒரு வாட்டியும் கூட இருந்ததில்லை. நீங்க இப்படி சுத்துனா காண்டாக மாட்டாளா செல்லம்”, நமுட்டுச்சிரிப்போடு விளக்கினாள்.

இவள் முறை வரவும், உள்ளே சென்றதும், டாக்டர் கீதாவும் விட்டுவைக்கவில்லை. “பாருங்க விக்ரம். என்னாமா ஜொலிக்கறாங்க உங்க வைஃப். சீமந்த ஜொலிப்பா இல்ல வீட்டுக்காரர் கூட இருக்க ஜொலிப்பா ?”

முகம் சிவந்தவள், “அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை டாக்டர்.”

அவளைப்பார்த்துச்  சிரித்தவன், “என்னாலன்னு நானே நென்ச்சிக்கறேன் டாக்டர்.”

“ சரி வாங்க, நானே வந்து உங்க குழந்தைய காட்றேன், என்று அவள் அறையின் உட்புறமாகவே ஸ்கான் ரூம் அழைத்துச் சென்றாள். விக்ரம் வேதா படுக்க உதவ, அங்கிருந்தவரை  நகர்த்திவிட்டு, கீதாவே ஸ்கான் செய்து, அவனுக்கு குழந்தையின் தலை, கை கால் என்று காட்டினாள். பரவசமாய்ப் பார்த்து, கேட்டுக்கொண்டான்.

‘அச்சோ, எவ்வளவு ஆசை அந்த கண்ல,’ என்று அவனைத்தான் பார்த்திருந்தாள் வேதா.

“அழகா தலை  பொசிஷன் செட் ஆகிருக்கு. நார்மலுக்கு நல்ல சான்ஸ். தினமும் நடக்கணும் வேதா. கால் வலி, இடுப்பு வலின்னு படுத்தே இருக்காதே. “, கவனம் டாக்டர்புறம் சென்றது. சரி என்று தலை அசைத்தாள்.

“இன்னும் காலேஜ் போறியா ?”

“இன்னும் ஒரு பரீட்சை இருக்கு டாக்டர்.”

“பத்தரம். கார்ல யார்கூடவாச்சம் துணையோட போ.” என்றவர் . அடுத்து டாப்ளர் கருவியை வைத்து, “விக்ரம், உங்க குழந்தையோட இதய துடிப்பு, உங்களுக்காகவே ஸ்பெஷல்.”, என்று கேட்க வைத்தாள்.

[the_ad id=”6605″]

கேட்டவனுக்கு கண்கள் பனித்தது. வேதாவின் கைகளை அழுத்திப் பிடித்துக்கொண்டான்.

“தாங்க்ஸ் டாக்டர். நான் மிஸ் பண்ணினதெல்லாம் எனக்கு குடுக்கறீங்க.”, கரகரப்பாய் வந்தது அவன் குரல்.

“ரிலாக்ஸ் விக்ரம். ஸ்கான் ப்ரின்ட் பண்ணித் தருவாங்க. நீங்க வாங்கிட்டு பொறுமையா வாங்க.  நர்ஸ் திரும்ப என்னை பார்க்க உள்ள கூப்பிடுவாங்க.”, புன்னகைத்து வெளியேறினார் டாக்டர். கீதா.

டாக்டரை மறுபடி பார்த்து, அடுத்த வாரம் வருவதற்கு அப்பாயின்மெண்ட் போட்டு, ஒரு வழியாய் வீடு வந்து சேர மணி ஒன்றுக்கும் மேல். வேதா வீட்டில் மாப்பிள்ளைக்காக ஸ்பெஷல் விருந்து. அனைவரும் காத்திருந்தனர்.

ஒரு வழியாய் உண்டு முடித்து, வேதாவை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு, விக்ரம் தன் வீடு வந்து சேர்ந்தான்.

“வாடா, எங்க மாமியார் வீட்லயே இருந்துடுவியோன்னு நெனச்சேன். நான் கிளம்பறதுக்குள்ளவாவது வந்தியே.”, காயத்ரி வரவேற்றாள். கட்டுப்படுத்த கணவனோ அவன் வீட்டாரோ இல்லை என்றதும் அவள் ஆட்டம் ஆரம்பித்தது.

“நீ இன்னும் போகலியாக்கா ? தெரிஞ்சிருந்தா  நைட் வந்திருப்பேன்.”

ஷாக்காகி ஒரு  நிமிடம் முழித்தாள்.” மா… என்ன இன்னும் போகலியான்னு கேக்கறான் மா….”, அம்மாவை துணைக்கு அழைத்தாள்.

பர்வதம்மாவிற்கும் சங்கடம். “வந்ததும் வராததுமா அவனை நீதானே வம்புக்கு இழுத்த ?”, மகளை அடக்கினார்.

“நான் சும்மா கிண்டலுக்கு கேட்டேன், அதுக்கு அவன் இப்படியா மூஞ்சில அடிச்சாமாதிரி கேப்பான் ? அவன கண்டிக்காம நீ என்ன சொல்ற ?”, அம்மாவிடம் பாய்ந்தாள்.

சலனமே இல்லாமல் அவளையும், தன் அன்னையையும் பார்த்திருந்தான் விக்ரம்.

“ஏண்டா, நீதான் கொஞ்சம் விடக்கூடாதா ? அக்காதான ?”, பர்வதம்மா எப்பவும் போல் பெண்ணிற்குப் பரிந்து வந்தார்.

“ஏம்மா, அவ மட்டும்தான் கிண்டல் பண்ணணுமா ? அவ கிண்டலா சொன்னா, நானும் கிண்டலாத்தான் பதில் சொன்னேன்.”, தோளைக் குலுக்கினான் விக்ரம்.

“விடுங்க ரெண்டு பேரும். வேதா செக்கப்புக்கு கூட போனியா ? டாக்டர் என்னா சொன்னாங்க ?”, என்று பேச்சைத் திருப்பினார்.

அவன் சொல்லி முடிக்கக் காத்திருந்தவள், “விக்ரம் உன் பொண்டாடிக்கு போட்ட வளையல் எத்தன பவுன் ? நல்லா இருந்ததேன்னு பார்க்க கேட்டா, அவ அம்மாகாரி அந்த சலம்பல் பண்ணி, பத்தாதுக்கு என் மாமியார் கிட்டவேற போட்டுக்குடுத்துட்டா.”, ஆர்வமாய் ஆரம்பித்து அங்கலாய்ப்பாய் முடித்தாள்.

“இது எப்போ ?”, என்று பர்வதம்மா கேட்க, அங்கே அமர்ந்திருந்த மாலினி ராகவனுக்கும் இது புது விஷயம்.

“வளைகாப்புக்குன்னு  போட்ட வளையலை நீ கழட்டுவ, அத பார்த்துட்டு சும்மா இருப்பாங்களா அந்தம்மா ? அத்தோட விட்டாங்களேன்னு சந்தோஷப்படு. வேற யாரச்சம் அப்படி பண்ணிருந்தா சலங்கை கட்டி ஆடியிருப்பாங்க.”, நக்கலாய் பதிலளித்தான் விக்ரம்.

“என்னத்தடி பண்ணித் தொலச்ச ? சம்மந்தியம்மா கேவலமா நெனச்சிருப்பாங்களே ?”, பர்வதம்மா புலம்பினார்.

“ அதைத்தான் அவ மாமியார் கிட்ட, உங்க புள்ளை  நகை எதுவும் வாங்கிகுடுக்கலையா ? இப்படி பறக்கறாளேன்னு கேட்டாங்க,”, இவன் பங்குக்கு போட்டுக்கொடுத்தான்.

“உன் பொண்டாட்டி அப்படியே ஒப்பிச்சிட்டாளா உங்கிட்ட ?”, தான் டாமேஜ் ஆவது தெரிந்து , திசை திருப்பப் பார்த்தாள் காயத்ரி.

“அவ சொல்லிருந்தா கூட பரவாயில்லை. என் மாமியார் சொன்னாங்க எங்கிட்ட. அவமானமா போச்சு எனக்கு. என்னா பதில் சொல்ல முடியு,ம் என்னால ?”, இன்னும் கொஞ்சம் ஸ்க்ரூவை டைட் செய்தான்.

பர்வதம்மாவுடன் சேர்ந்து இப்போது ராகவனும் முறைத்தான் காயத்ரியை. மாலினிக்கு விக்ரமை மெச்சாமல் இருக்கமுடியவில்லை. காயத்ரி மற்றவருக்கு செய்வதை இப்போது அவள் அனுபவித்துக்கொண்டிருந்தாள்.

பர்வதம்மா அவளை வறுத்தெடுத்தார். ரெடிமேட் கண்ணீர் டாங்க் திறந்தும் பர்வதம்மா நிறுத்தவில்லை.

“எல்லாம் உன் பிள்ளையினால தான். வாங்கிட்டு வந்தவன்  நம்மகிட்ட காட்டவேண்டியதுதான ? அதென்ன யாருக்கும் சொல்லாம மேடையில போடறது ?”, அம்பை திசைதிருப்பினாள் காயத்ரி.

“நான் கூட பாக்கலைடா ? “, அவள் எதிர்பார்த்தபடியே அம்பும் திரும்பியது.

“அவளுக்கு சர்ப்ரைஸ் குடுக்கணும்னு நெனச்சேன். ரெண்டாவது,  வீடு முழுக்க ஆளுங்க. எப்ப காட்ட சொல்றீங்க, அதுவும் அவளுக்கு தெரியாம ? எங்க போக போறா, பொறுமையாத்தான் பாருங்களேன்? ”, என்று அம்பை முடக்கினான் விக்ரம்.

“நமக்கெல்லாம் நகை வாங்கினானா பார்த்தியா ?  நேத்து வந்தவளுக்குதான் வாங்கித்தரான்.’, லாஜிக்கே இல்லாமல் குற்றம் சாட்டினாள் காயத்ரி.

“எல்லாம் உனக்கும் வாங்கித் தருவாண்டி.”, மகளை அமைதிப்படுத்தியும் அவளுக்கும் அவன் வாங்கித்தரவேண்டும் என்ற ஆசையிலும் பர்வதம்மா வாக்குறுதி கொடுத்தார்.

“இருந்ததெல்லாம் ஒட்ட வழிச்சி அக்காக்குதான் குடுத்தேன். இன்னும் என்ன குடுக்க சொல்ரீங்க ? அவளுக்கு நகை வேணும்னா, அவ புருஷனை கேட்க சொல்லுங்க. அங்க இருக்கற அதே நகை கடை இங்கயும் இருக்கு. மாடல் நம்பர் சொன்னா அதே டிசைன் இங்கயும் கிடைக்கும். ”

“நீ என்ன இனாமாவா குடுத்த, இடத்தை நீங்க எடுத்துகிட்டீங்க, எனக்கு பணமா குடுத்தீங்க.”

“கரக்ட். முன்ன பொண்ணுகளுக்கு சொத்து கொடுக்கலை, அதனால சீர் கொடுத்தாங்க. வருஷா வருஷம் பண்டிகை ,அது இதுன்னு எதாச்சம் செய்தாங்க. இப்ப நீதான் மொத்தமா வாங்கிக்கிட்ட. இன்னும் எதுக்கு  நாங்க செய்யணும் ?”, ஒரு முடிவெடுத்தவன் போல் கேட்டான் விக்ரம்.

“டேய், அதுக்குன்னு அவளுக்கு செய்யறத செய்யாம இருக்கமுடியுமா ?”, பர்வதம் பாய்ந்து வந்தார்.

“இன்னும் செய்யணும்னா, என்ன கணக்குலமா செய்யறது ? சொத்த நாங்க அனுபவிச்சா, நீங்க அதுலர்ந்து குடுக்க சொல்லலாம்.  இப்பதான், பைசா சுத்தமா பிரிச்சி குடுத்தாச்சு.  நியாயமா பார்த்தா, உங்களை பார்த்துகிற செலவுல அவளும் பங்கு தரணும். சொத்த எடுத்துக்குறவ, செலவுலயும் பங்கு தற்ரது முறைதான ?”, விக்ரம் நிதானமாய், அழுத்தமாய் கேட்டான்.

[the_ad id=”6605″]

‘என்னாச்சு இவனுக்கு ? இவ்வளவு வெவரமாயிட்டானே.’, என்றுதான் பார்த்திருந்தனர் ராகவனும், மாலினியும்.

“என்னண்ணா ? அவந்தான் சொல்றான் நீயும் சும்மா இருக்க ?”, ராகவனை இழுத்தாள் காயத்ரி.

“அவன் சரியாத்தான கேக்கறான் ? உன் புருஷன் உன் பேர்ல இந்த பணத்தைக்கொண்டு கடை வாங்கப்போறேன்னு சொன்னார். அந்த வாடகைப் பணம் மாசம் ஏழு,  எட்டாயிரம்னாலும் அதுவும் அம்மா வீட்டு சீதனம்தானே உனக்கு ?”

ராகவனும் கைகோர்த்ததில் பர்வதம்மா பயந்துவிட்டார்.

“ராகவா, பிறந்த வீடல செய்யறதுலதாண்டா, அவளுக்கு புகுந்த வீட்ல கௌரவம். இப்படி சொல்றீங்க ரெண்டு பேரும் ?”

“ வருஷத்துக்கு எண்பதாயிரத்துக்கும் மேல வருமானம் அவளுக்கு வரப்போகுதுமா. அதுவும் புகுந்தவீட்லர்ந்து செய்யற கணக்குதானே?  இதுக்கும் மேல செய்யறதுக்கு இங்க எங்க இருக்கு ? ரெண்டு பேருக்கும் வீட்டுக்கடன் இருக்கு, குடும்பம் குழந்தைன்னு ஆச்சு ? எல்லாம் மாச வருமானம்தானே ?”, ராகவனும் இன்றோடு இதற்கு முற்றுப்புள்ளி வைத்திட நினைத்தான்.

“அவன் பெண்டாட்டிக்கு அவன் செய்யறான். என்ன திமிர் இருந்தா உங்க பொண்ணு நேத்து வந்தவளுக்கு வாங்கித்தரான், நமக்கு வாங்கினானானு கேப்பா ? அதை தட்டி வெக்காம நீங்களும் , உனக்கும் வாங்கித் தருவான்னு சொல்றீங்க. எதுக்கு வாங்கிக்கொடுக்கணும் ?”, ராகவனின் குரல் அழுத்தமாக வந்தது.

“இங்க பாரு காயத்ரி. இனி எதுவும் எங்ககிட்ட எதிர்பாக்காதே. இல்லை எப்பவும் போல பொங்க சீர், தீபாவளி சீர்ன்னு வேணும்னா, வருஷத்துல நாலு மாச வாடகைய வாங்கி அம்மா அக்கௌன்ட்ல போடு. அவங்க அதுலர்ந்து செய்யட்டும். இல்லை நீயே மொத்த வாடகையும் வாங்கிக்கோ, அம்மா வீட்டு சீர்ன்னு சொல்லிக்கோ.”, கறாராக முடித்து, எழுந்து அவன் அறைக்குச் சென்றான். விக்ரம், வீட்டை விட்டே கிளம்பிவிட்டான்.

எங்கேயோ ஆரம்பித்து இப்படி முதலுக்கே மோசமாக விடிந்ததே என்று அம்மாவும் பொண்ணும் முழித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!