Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Amuthangalaal Nirainthaen

Thazhampoo Vaasam Nee 22 2

அதற்காக எல்லாம் தன்னவனை அவள் தள்ளி வைக்கவில்லை… அவன், தன்  அருகில் அமர்ந்து… பழைய கதைகள் சொல்லும் போது… இவளுக்கும், விழி விரித்து கேட்கத்தான் தோன்றியது. 

அவனின் அருகாமை அவளை ஈர்த்தது… அன்றே, சொல்லிவிட்டானே… நான் அப்படி இருந்தேன் என… ஆக, அது இறந்தகாலம் என உறுதியாக நம்பினாள். அந்த நிச்சய தினம் மட்டுமே அவளின் குறை. 

மேலும், அவனுக்கு எப்படியோ… சக்திக்கு, அவனை பிடிக்கும்தானே… எனவே அவனின் பேச்சில்… அவனை தவிர வேறு தெரிவதில்லை அவளுக்கு.  அதுவும், தன் கைகளை விடாமல் பற்றிக் கொண்டு.. இரவில் தன்னை அவளுக்கு தெரியப்படுத்தும் போது… அந்த பேதை… கொஞ்சம் உருகித்தான் போனாள். 

நெருக்கத்தில் அவனிடம் உருகி கரையும் மனம்… அவன், தூரத்தில் இருக்கும் போது வேறு போல தெரிய தொடங்கினான்.. சில நேரம் தனிமையில் இருந்தாலோ… அறையில் அமர்ந்தாளோ சக்திக்கு… ‘என்ன, என்னாச்சு… ஏதோ தப்போ..’ என எங்கெங்கோ செல்லும் அவளின் மனம். ஆக, புரிந்தும் புரியாத நிலை… அவளுக்கு.



Advertisement

 

அன்று, லிங்கா தன் சங்கத்தின் சார்பாக ஒரு பார்டிக்கு கேட்டிருந்தனர் இவனை. ம்.. திருமணம் முடித்து.. செகரெட்ரியின் மகன்.. பார்ட்டி வைக்கவில்லை என்றால் எப்படி… எனவே அந்த வீக் எண்டு.. பார்ட்டியாக முடிவு செய்யப்பட்டது. எனவே லிங்கா தாமுவை பார்க்க வந்திருந்தான் கட்சி அலுவலகத்திற்கு.

தன் தேவையெல்லாம் கேட்டு… எங்கு எப்போது என பேசி முடிவு செய்து கொண்டனர் இருவரும். மதிய வேலை என்பதால்… தாமு “வாங்க சாப்பிடலாம் மாப்பிள்ளை” என்றார்.

Advertisement

லிங்கா “அங்க சக்தி வெயிட் பண்ணுவா… மாமா. நீங்க, இன்னிக்கு வீட்டுக்கு வாங்க மாமா… போலாம்.. “ என சொல்லி அழைத்து சென்றான். தாமுவும் ஏதும் சொல்லாமல்.. கார் சாவி வாங்கிக் கொண்டார்.. மாப்பிள்ளையிடமிருந்து.

Advertisement

வண்டி லிங்காவின் வீடு நோக்கி சென்றது. லிங்கா வீட்டில் போன் செய்து சொல்லிவிட்டான்.

லிங்காக்கு சக்தியின் முகம் இப்போதெல்லாம் நன்கு பரீச்சியமே… எனவே, அவள் அமைதியாக இருக்கிறாளோ… தன்னிடம்… என தோன்றியது இந்த இரண்டு மூன்று நாட்களாக. வந்தே ஒரு வாரம்தான் ஆகியிருக்க.. அப்படி ஒன்றும் அம்மா அப்பா ஏக்கம் என சொல்ல முடியாது.. எனவே, லிங்காக்கு.. அவளின் கேள்வி அவ்வப்போது உறுத்தும்… எனவே, இன்று… எப்போதும் போல… தாமுவிடம் கேட்டான்… “மாமா.. எப்படி சக்தி கிட்ட.. சம்மதம் வாங்குனீங்க… இல்ல சக்தி ரொம்ப ப்ரில்லியண்ட்… அதான்..” என்றான் ஏதோ எதார்த்தமாக கேட்பவன் போல கேட்டான்தான்.

 

Advertisement

[the_ad id=”6605″]

 

தாமு சிரித்தார் “மாப்பிள்ளை.. புள்ளைங்க நல்லதுக்காக… நாம ஒரு பொய் சொல்லலாம்… அதுவும் பெரியவங்க சொல்லி இருக்காங்களாமே… ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணுன்னு… நான் ஒரே பொய்தான் சொன்னேன். 

அது கூட இல்ல, உங்களுக்கு… அவளை பிடிக்குதுன்னுதானே.. சொன்னேன்” என்றார் சிரித்தபடியே.

மீண்டும் “ம்… எங்க சக்திய பிடிக்காதவங்க யாரு…. ம்… அமைதியான அறிவான பிள்ளை… அதான்… நீங்க விரும்பி கேட்குறீங்கன்னு சொன்னேன்….” என்றார் அதிர அதிர சிரித்தபடியே….

லிங்கா அப்படியே உறைந்து போனான்… நானும் அப்படிதான் சொன்னேன் என் வீட்டில்… என்பது இப்போதுதான் அவனின் மூளையில் ஏறியது. 

ஆனால், தன் மனையாளின் குழப்ப முகம் இப்போது தோன்றியது… அவனின் கண்களில்.. கூடவே அந்த நிச்சயத்தின் போது… அந்த டைனிங் ஹாலில் அவளின் பாவம்… காரில் மோதிரத்தை உருட்டியபடியே அவளின் முகம் என… அவளின் எல்லா ஏமாற்றத்தின் சாயலும் அவன் கண்முன் வந்தது… மெல்ல நெஞ்சில் சின்ன குண்டூசி குத்திய வலி… இதை தானும் அனுபவித்து இருக்கிறேனே… அ.. அப்படிதானே… வலித்திருக்கும்… அந்த குட்டி பெண்ணுக்கும்… ம் கூம்…. என் மனைவிக்கும் இருக்கும்… நோ சக்தி… நோ… எனக்கு புரியும்… அதன் வலி.. நான் ஏதோ டென்ஷனில் செய்துட்டேன்…’ என இங்கு அப்படியே அமர்ந்திருந்தான் கண்மூடி காரில்.. 

தாமு வண்டி ஒட்டிக் கொண்டிருந்தார். சிரித்து முடித்து.. ட்ராபிக் சிக்னலில், வண்டி நிறுத்தி பொறுமையாக “ஏன் மாப்பிள்ளை… சக்தி ஏதும் கேட்டாளா…” என்றார்.

லிங்கா “ம்கூம்… நான் சும்மா கேட்டேன்… இது நமக்குள்ளயே இருக்கட்டும் மாமா…. புரியுதா…” என்றான் திடமான குரலில். அவர்தான் ராஜ தந்திரி ஆயிற்றே… அதுவும் மாப்பிள்ளை சொல்லி கேட்காமல் இருப்பாரா… “விடுங்க மாப்பிள்ளை.. இன்னியோட இத மறந்துடுங்க” என்றார் அவரும் விவரமாய்.

லிங்கா எப்போதும் போல் வேலை செய்தான்தான்…போன ஷனம் வரை. ஆனால், இந்த முறை அவளின் உணர்வுகளை முழுவதுமாக உணர்ந்து கொண்டு.. அதை மதித்ததால்… அதை பொய்யாக்க விரும்பாமல் செய்தான்.. முன்பு ஒரு வேகமிருந்தது… நேற்று வரை ஒரு கர்வம் இருந்தது… அவனிடம். 

இது.. இப்படிதான்… இவளை நான் மாற்றுவேன் என்பதுதான் அது. ஆனால், இந்த ஷனம் அது இல்லை அவனிடம்… நான் உணர்ந்த வலி… எனக்காக என்னவள் உணர்ந்தாளா.. நானும்.. புரியாதவனாக அவளை வதைத்தேனா…என தோன்றியது… கண்கள் திறக்கவில்லை அவன்.

ஏமாற்றம் என்பதன் அர்த்தம் மொத்தம் தெரிந்தவனாயிற்றே அவன்… எனவே கண் திறக்க முடியவில்லை… கண்ணுக்குள்.. சக்தியின் குழப்ப முகம் நின்றது.. அதை தாண்ட முடியவில்லை அவனால்.

லிங்கா, முதல் முதலில் காதலின் வலியை உணர்ந்தவனாக… இருக்கலாம்… காதல் என்பது உணர்தல்தானே… ஒருவரை ஒருவர். அது கண்ணால் தேடுவதை விட… உணர்வால்… இதயத்தால் தேடுவதுதானே. அதுவும், வலிகளைதானே அது முதலில் உணரும்… லிங்கா உணர்ந்தான்… அவளின் முழுமையான வலியை. 

அந்த குழப்பமான முகம்… அத்தோடு நிச்சயத்தில்.. ஏனென்றே தெரியாமல் கண்களை துடைத்துக் கொண்டு… என்னை சிரித்தபடி பார்த்தாளே… என முழுதும் அவள் வந்தாள் அவனுள்… இது கணவன் காதலனாக மாறிய நேரம்… போல…. மெல்ல மெல்ல அவன் மனதை சக்தி ஆட்கொண்டது.

தாமு லிங்காவின் வீட்டிற்கு வந்ததும்தான் “மாப்பிள்ளை” என்றார். அதுவரை அவரும் ஏதும் பேசவில்லை.

லிங்கா தன்னை சுதாரித்துக் கொண்டு “வாங்க மாமா…” என வரவேற்றபடி உள்ளே சென்றான்.

எல்லோரும் இருந்தனர்.. சக்திக்கு சந்தோஷம்… தாமுவை பார்த்தும் “அப்பா…” என ஓடி வந்து கட்டிக் கொண்டாள் சிறுபிள்ளையாக… லிங்காக்கு முதல் முறை.. ஏமாற்றமானது.. சின்ன தடுமாற்றம் வந்தது ஏனென்று தெரியாமலே.

 

[the_ad id=”6605″]

 

எல்லோரும் பேசியபடியே உண்டனர். மதியம் உண்டு முடித்து லிங்கா படுப்பதில்லை.. கம்பெனி சென்றுவிடுவான். இளா சற்று ஓய்வெடுத்துதான் செல்வான். அப்படியே இன்றும், லிங்கா அலுவலகம் சென்றான். தாமு அப்போதே கிளம்பிவிட்டார்.

மாலையில் நேரமே வீடு வந்தான் லிங்கா… 

சக்தி, எப்போதும் போல, தீபக், அம்முவுடன் விளையாடியபடியே நின்றாள். அவளிடம் மாற்றமில்லை.. முகம் கலையாக இருந்தது… விளையாட்டு மும்முரத்தில் இருந்தாள். அவன் வந்ததை கவனிக்கவில்லை.

ஆனால், லிங்காவிடம் இப்போது மாற்றம்… வந்தவன் மேலே செல்லாமல்.. அமர்ந்து கொண்டான்.. 

சக்தி, இப்போது “அம்மு எங்க காணோம்..” என சொல்லியபடியே சோபாவின் பின் புறம் நின்றாள்.

அந்த குரல் இப்போது அவனை ஈர்க்க தொடங்கியது… அவனிடம் ஒரு ரசனை… கூடவே தடுமாற்றம். சக்தியை பார்த்துக் கொண்டே இருந்தான்… எதிர் சோபாவில் அமர்ந்தபடியே.

அம்மு சக்தியை கண்டுகொள்ளாது.. இப்போதுதான் வந்து அமர்ந்த தன் சித்தப்பாவிடம் தவழ்ந்தபடி சென்றாள்.. “ப்பா.. பா…” என.

சக்தி அழைத்து அழைத்து பார்த்து.. அவளின் கொலுசு சத்தம் கேட்காமல் போக… இவள் நிமிர்ந்து பார்க்க… எதிரில், கையில் அம்முவுடன்… தன் கணவன் அமர்ந்திருப்பதை பார்த்தாள்… 

சக்தி “அம்மு…. கட்சி மாறிட்டியா… வா…வா… வா…” என அழைக்க… 

அம்மு லிங்காவிடம் ஒன்றினாள்.. செல்ல சிரிப்பு சிரித்தபடியே…

சக்தி, அழகான சுடிதார் அணிந்திருந்தாள்… மெல்லிய நீல நிறம்… அடர் நீல ஷால் பேன்ட்… என அழகாக இருந்தது.. தலையில் ஜாதிமல்லி… கண்ணில் மை.. அவளின் தலை மட்டும் தெரிய.. அம்முவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.. 

லிங்கா அப்படியே பார்த்திருந்தான்.. ‘இவ்வளவு நம்பிக்கையா… என்மேல்…  நான் சொல்லி இருப்பேன் என்ற நம்பிக்கையா… ம்… அந்த முக வாட்டம் உணமையானதா… அந்த கண்ணீர்… உண்மையானதா… அதுவும் என்னாலா…’ என லிங்கா அவளையே பார்த்திருந்தான்.

சக்தி “அம்முமு….. என்னடா…” என சினுங்க… அதற்கு மேல்.. லிங்கா அமரவில்லை.

லிங்கா, அம்முவுடன் எழுந்தான் “பிடி அம்மு.. பிடி…” என சொல்லி அவளை கையில் வைத்துக் கொண்டே… தன் மனையாளை நெருங்கினான். அந்த வாடிய முகம்.. இப்போது துள்ளி குதித்து ஓடியது. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!