Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorizedவெண்ணிலவை விழியில் பிடித்தாய்

வெண்ணிலவை விழியில் பிடித்தாய் – 25 (Final)

பரத், அவன் நண்பன் மூலம் போலிஸ் நிகிலை அரெஸ்ட் செய்ய வந்துக் கொண்டிருப்பதை அறிந்து கனகுவிடம் சொல்லியிருந்தான்.

ஜகது வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளி ஒருவனை ஜகது வீட்டில் வைத்து போலிஸ் அரெஸ்ட் செய்யக் கூடாது என்றும்,

மேலும் ஊர்த் திருவிழா நடந்துக் கொண்டிருக்கும் போது, இதற்காக போலிஸ் ஊருக்குள் வர வேண்டாம் என்றும் நினைத்தே கனகு நிகிலின் கையை உடைத்து ஹாஸ்பிட்டல் அனுப்பி விட்டார்!

மேலும் மணியின் ஆசைக்காகவும்!



Advertisement

ஆனால் அவன் வலியில் துடிக்கும் போது அவருக்கே கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது!

ஆனால் இரக்கம் காட்டும் அளவு அவன் தகுதியானவன் இல்லையே!

நிகிலை போலிஸ்,  ஹாஸ்பிட்டலில் வைத்து அரெஸ்ட் செய்து கொள்ளட்டும்.

Advertisement

ஹாஸ்பிட்டல் சென்றவுடன் பரத்திற்கு அதை தெரிவித்தான் மணி.

Advertisement

பரத் போலிசை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லவும், அவர்கள் அங்கு சென்று அவனை கைது செய்து விட்டார்கள்.

அதே நேரம் அங்கு இந்தூர் போலிஸ் சந்தீப்பையும், அவனது சகாக்களையும் கைது செய்து விட்டது.

இது விவரம், திருச்சிக்கு வந்து கொண்டிருந்த ஜகதீஸ்க்கும் அவரது பிஏ தெரிவிக்க, அவர் ஹையர் லெவல் போலிஸ் ஆபிசர்களை தொடர்பு கொண்டு தன் ஹாஸ்பிட்டல் பெயர் இதில் அடிபடாமல் இருக்கும்படி பார்த்துக் கொண்டார்!

Advertisement

சந்தீப் அவரது மைத்துனன் என்பதால்,  அவருடைய ஹாஸ்பிட்டலையும் இந்த மீடியாக்காரர்கள் தொடர்புபடுத்தி வைரல் ஆக்கி விடுவார்கள் என்ற எண்ணம்!

கூடவே சென்னை போலீசிலும் அதே மாதிரி அவர் இன்ப்ளுயன்சை பயன்படுத்தி, விஜியின் ஹாஸ்பிட்டல் பெயர் அடிபடாத வண்ணம் பார்த்துக் கொண்டார்.

பின்னே, அவரது ஆசை மகள், பொறுப்பேற்கும் போது, இந்த மாதிரி பிரச்சினைகள் எல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்குமே!

இந்திய முழுக்க பரந்து விரிந்து இருக்கும் ஒரு ஹாஸ்பிட்டல் சாம்ராஜ்யத்தின் சொந்தக்காரர், அனுபவம் மிக்க டாக்டர், நிறைய படித்தவர், அவர் இந்த மாதிரி முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்வது ஒன்றும் பெரிய ஆச்சர்யம் இல்லை!

ஆனால் பெரியதாக படிக்காத, ஏன் பள்ளிப் படிப்பைக் கூட முழுதாக முடிக்காத, இந்த கனகுவும் அவரை மாதிரி யோசித்து செயல்பட்டது தான் ஆச்சர்யம்!

கனகுவெல்லாம் படித்து இருந்தார் என்றால், இந்த ஊரையே விலை பேசியிருப்பார்!

நிகில் கணக்கை எல்லாம் முடித்து விட்டு கனகுவும் ஜகதுவும் பரத்தோடு ஜானு வீட்டிற்கு சென்ற கொஞ்ச நேரத்தில் தான் ஜக்தீசும் ஊர்மிளாவும் வந்திருந்தார்கள்!

அதற்கு பிறகு வரும் வழியில் தோப்பில் கொஞ்ச நேரம் ரொமான்ஸ் பண்ணி விட்டே ஜான்வியை அழைத்துக் கொண்டு அங்கு வந்திருந்தான் பரணி!

அன்று அவன் மிஸ் செய்து விட்ட ஜான்வியுடனான அந்த பம்ப் செட் குளியல்!

அவளை அந்த தோப்பிற்கு அழைத்து சென்ற போது, ஜான்விக்கு அவளின் கல்யாணம் நடக்க காரணமாக இருந்த, அந்த நிகழ்வு நினைவிற்கு வந்தது!

இருவரும் அதைப் பற்றி பேசிக் கொண்டே, அந்த பம்ப் செட் தண்ணீர் தொட்டியில் இறங்கி ஆட்டம் போட்டார்கள்.

ஜான்வியின் மனநிலை முழுவதும் இப்போது பழைய மாதிரி ஆகி விட்டிருந்தது!

அவளை அப்படி மாற்றிய பின்னரே, அவன் ஜானுவின் வீட்டிற்கு அவளைக் கூட்டி சென்றான்.

“என்ன மாப்பிள்ளை, உங்க ஹனிமூனுக்கு அப்ராட் போறீங்களா, இல்ல இங்கயே எங்காச்சும் போய்ட்டு வர்றீங்களா?” என்றார் ஜகதீஸ்!

“இல்ல மாமா, அப்ராட் இப்ப போக முடியாது, கொஞ்சம் வேலை இருக்கு. இங்க பக்கத்துல எங்காச்சும் போலாம்”. என்றான் பரணி.

“அப்ப கேரளாவில் வாகமான் போங்க. நான் எல்லா அரேஞ்சுமெண்ட்ஸ் பண்றேன். என்னம்மா உனக்கு ஓகே தானே?”  என்றார் ஜகதீஸ்!

“உங்க இஷ்டம் பப்பா” என்றாள் ஜான்வி வெக்கத்துடன்!

பிறகு எல்லோரும் சேர்ந்து அமர்ந்து சந்தோசமாக பேசி சிரித்தபடி  ஜானகியின் கை மணத்தில் செய்த விருந்து சாப்பாட்டை ரசித்து சாப்பிட்ட படியே மனம் விட்டுப் பேசினார்கள்.

 ஊர்மி போனில் சுஷில் சுனிலை அழைத்து அவர்களுடன் பரணியை தனியே பேச வைத்தாள்.

எல்லோருமே ஜான்விக்கு, இதுவரை  நடந்த எதுவும் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள், நிகில் சந்தீப் கைதை தவிர!

அவர்களின் பின்னே ஒரு பெரிய மனித உறுப்புகள் திருடும் கும்பலே இருக்கிறது என்று அறிந்ததும், மிகவும் அதிர்ந்து போய் விட்டாள் ஜான்வி!

அவள் ஊர்மியின் முகத்தைப் பார்த்தாள்.

அவளுக்காக தானே அவள் இத்தனை நாள் அந்த நிகிலை சகித்துக் கொண்டது!

அவள் எண்ணம் புரிந்து ஊர்மி, “அவர்கள் எல்லாம் அப்படி செய்ற ஆள்கள் தான் ஜான்விம்மா!

 நீ, நான் வருத்தப்படுவேன்னு எல்லாம் நினைக்காதே!

இனி நீ உன் வாழ்க்கையை சந்தோசமா தொடங்கு!” என்று சொல்லி அவளை அணைத்துக் கொண்டாள்.

அவர்களை பூரிப்போடு பார்த்தார்கள் ஜகதீஸ், மற்றும் பாட்டிகள் மூவரும்!

———

இரு மாதங்கள் கழித்து.

“அய்யோ..பாம்பு..” என்று ஒரே சத்தம். வீட்டு வேலையாட்கள் ஆளுக்கொரு குச்சியை எடுத்துக் கொண்டு ஜான்வியின் அறையை நோக்கி ஓடினார்கள்.

“என்னாச்சு” என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தான் அது வரை வெளியே நின்றபடி போனில் பேசிக் கொண்டிருந்த பரணி.

அது ஜானுவின் பண்ணை வீடு!

அது தான் ஜான்விக்கும்  பரணிக்கும் இப்போது எல்லாம் எவர் ஹனிமூன் ஸ்பாட்!

ஜான்வி அவள் தம்பிகளுக்கும் சொத்தில் நியாயமான உரிமையை அவர்கள் வேண்டாம் என்ற போதும் கொடுத்து விட்டாள்.

ஜகதீஸ் ஹாஸ்பிட்டல் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டு விட்டாள், ஜகதீஸ் ஆசைப்படியே!

கூடவே விஜியின் ஹாஸ்பிட்டல் பொறுப்பையும்.

அனைத்து வேலைகளையும் ஒழுங்குப்படுத்தி, அவள் நிர்வாகம் பண்ணுவதற்கு ஏற்றவாறு மாற்றி, எல்லவாற்றையும் ஸ்ட்ரீம்லைன் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இங்கிருந்து கொண்டே, பரணியின் வீட்டில் இருந்து கொண்டே எல்லவாற்றையும் நிர்வகிக்க, ரொம்பவும் தேவைப்பட்டால் மட்டுமே அங்கெல்லாம் சென்று விட்டு வரலாம் என்றும் ஏற்பாடு!

அதற்காக,  அவள் அடிக்கடி இந்தூருக்கும், சென்னைக்கும் மாறி மாறி சென்று வந்தாள்.

பரணிக்கும் அவன் தொழில் காரணமாக அடுத்தடுத்து நிறைய பயணப்பட வேண்டியிருக்க, அவர்களுக்கான நேரத்தை, தனிமையை ரொம்ப சரியாக திட்டமிட்டுக் கொண்டார்கள்!

அப்படி அவர்களுக்கான நேரத்தில் அவர்கள் இங்கே வந்து விடுவார்கள்!

இப்போதும் வந்திருக்கிறார்கள்! இங்கு அவர்கள் தங்கி இருக்கும் போது யாருமே வர மாட்டார்கள்! வேலைக்காரர்கள் கூட!

எல்லா வேலைகளுமே அவர்களே பார்த்துக் கொள்வார்கள்! ஜான்வியே சமையல் செய்வாள். பரணி அவளுக்கு உதவுவான்.

உதவுகிறேன் என்கிற சாக்கில் அவன் செய்வது “உபத்திரவங்கள்” மட்டுமே!

அவர்கள் அங்கு வருவதற்கு முன்பு வேலையாட்களை வைத்து கனகு வீட்டை நன்கு சுத்தம் செய்து விடுவார்!

வீட்டைச் சுற்றிலும் மரங்கள், செடிகள், பின்னால் குளம் வேறு இருப்பதால் அடிக்கடி பாம்புகள் வருவது சகஜம் அங்கே!

ஜானகியும் இங்கே இருப்பதில்லை! சரவணனுடன்  பெங்களூர் போய் விட்டார்.

ஏதாவது விசேஷம் என்றால் மட்டுமே இங்கு வருவார். வீடு பெரும்பாலும் பூட்டியே தான் இருக்கும்.

“ஐய்யா.. ஜாலி, ஜான்வி ரூமுக்குள்ள பாம்பு வந்துருக்கு!

அப்ப அவ பயந்துட்டு இன்னிக்கும் பாத்ரூமை திறந்து வச்சுட்டு தான் குளிக்க போறா! நாமளும் சேர்ந்து ஜலக்க்ரீடை பண்ணலாம்!” பரணிக்கு ஒரே ஆசை!

ஆசையுடன் உள்ளே சென்றவன் அதிர்ச்சிக்குள்ளானான்!

ஏனென்றால், புடவையை அள்ளி சொருகிக்கொண்டு, அடித்த பாம்பினைக் கையில் பிடித்துக் கொண்டு வந்ததே ஜான்வி தான்!

அவளுக்கு இப்போது பாம்பு பயம் எல்லாம் போய் விட்டது!

“இது தான் நம்ம  ஊருன்னு ஆகிப் போச்சு!

“அவங்க” (அதான் பாம்புகள்) எல்லாம் இப்படி வர போக இருக்கிறவங்க தான்! அதுகெல்லாம்  பயந்தா முடியுமா” என்றாள் ஜான்வி!

“அப்படி சொல்லுடி என் ராசாத்தி! டேய்.. நாங்க எல்லாம் புலியையே முறத்தால் அடிச்சு விரட்டுன பரம்பரை!” என்றபடி உள்ளே வந்தார், கனகு!

“அய்யோ ஆத்தா, இங்க வந்தா, இவ காலையில தினமும் அவல் உப்புமாவா போட்டு என்னை கொல்றா! தயவுசெய்து எனக்கு இட்லி தோசை மாதிரி எதாச்சும் கொடுத்தனுப்பு!” என்று பரணி ஜகதுவிடம் சொல்லியதால் தமிழரசி டிபன் செய்து கனகுவிடம் கொடுத்து விட்டிருந்தார்.

“இந்தூரி போஹா எவ்வளவு பேமஸ் தெரியுமா?  அங்க எல்லாம் தினமும் இத தான் சாப்பிடுவாங்க!” என்றாள் ஜான்வி பிறந்த வீட்டுப் பெருமையாக!

ஜான்வி இங்கு வந்தால், அடியோடு மாறி விடுவாள் பரணியின் ஜானுவாக!

ஹாஸ்பிட்டலில் மரியாதைக்குரிய டாக்டர்! இந்தூர் சென்றால், மரியாதைக்குரிய எம்டி மேடம். வீட்டில் மூத்த மருமகள் இப்படி பல மரியாதைக்குரிய ரோல்கள் இருப்பதால், அவள் எப்போதும் காட்டன் சாரி சகிதம் தான் வலம் வருவாள்!

ஆனால், இங்கு இந்த ஜானகியின் பண்ணை வீட்டுக்கு வந்து விட்டால், அவள் அம்மா வாழ்ந்த அந்த வீட்டுக்கு வந்து விடும் தனிமைப் பொழுதுகள் அவளின் பரணிக்கு ஆக மட்டும்!

எனவே அவள் இங்கு ஸ்லீவ்லெஸ் பனியனும் தொடை வரை மட்டுமே உள்ள ஷார்ட்ஸ் அணிந்து, வலம் வருவாள்!

அதனால் யாருமே உள்ளே வர மாட்டார்கள்!

கனகு மட்டுமே வருவார், இப்படி சாப்பாடு கொண்டு வர என்று!

அவரை பைக்கில் கூட்டிக் கொண்டு வந்து விடும் மணியும் வெளியே தான் நின்று கொள்வான் அவர் வரும் வரை!

இன்று கொஞ்சம் முன்னதாகவே வந்து விட்டார்கள்! வேலையாட்கள் இன்னமும் வீடு சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்!

அப்போது தான் ஜான்வி இப்படி அவளே தைரியமாக பாம்பினை அடித்து கையில் கொண்டு  வந்தது!

“அது என்னமோ சரி தான் ஆத்தா. நான் கூட படிக்கும் போது, இத நம்பல, ஆனா உன்னைப் பார்த்த பிறகு நம்பிட்டேன்!

 பரத் தான் இப்ப போன் பண்ணினான் ஆத்தா, உனக்கும் மணிக்கும் பாராட்டு விழா நடத்த, கேட்டாங்களாமே? நீ ஏன் ஆத்தா அதெல்லாம் வேணாமுன்னு சொல்லிட்டியாம்?” என்று கேட்டான் பரணி!

“சும்மா பாராட்டு விழா, பாராட்டு விழானு சொல்லிட்டு, எதையாவது பண்ணி வச்சு, அத சோசியல் மீடியாவுலயும் போட்டு, எங்க நிம்மதியை ஏண்டா கெடுத்துக்கணும்!

அதுவும் இல்லாம, இது மனித உறுப்பு திருட்டு சம்பந்தமான கேஸ்! நாம நடத்திட்டு இருக்கிற ஹாஸ்பிட்டலுக்கும் ஜான்வியோட அப்பா அம்மாவோட ஹாஸ்பிட்டலுக்கும் எதாச்சும் தொடர்பு படுத்தி விட்டுட்டாங்கன்னா, ரொம்ப பிரச்சினை ஆகிடும்!

காலில் அசிங்கம் என்றால், தலையில் அசிங்கம்னு சொல்ற ஊர் இது!

இதுல சம்பந்தபட்டிருப்பது, ஜான்வியோட சொந்த மாமாவும் அவன் மகனும்!

எல்லாத்தையும் ரோசிச்சு தான் சொல்றேன்! இதெல்லாம் வேணாம்!” என்றார் கனகு தீர்மானமாக!

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் பரணிக்கும் அது சரி என்றே பட்டது!

“உன் வரையில சரி. ஆனால் மணி! அவனுக்கு கிடைக்க வேண்டியது தட்டிப் போக கூடாதே ஆத்தா!”

“அதுக்கு தான், நான் பரத்தோட நண்பன் கிட்ட பேசி, அவங்க டிப்பார்ட்மென்ட்ல அவனை எப்படியாவது நுழைச்சு விட முடியுமான்னு பார்க்க சொல்லியிருக்கேன்! கொஞ்சம் நம்பிக்கையா தான் சொல்லி இருக்காங்க! இவனும் தான் படிச்சு இருக்கானே!” என்றார் கனகு!

“சூப்பர் ஆத்தா, நாம கண்டிப்பா அவனுக்கும் எதாச்சும் செய்யணும்!” என்றான் பரணி!

மணியும்,  தினகரனைப் பார்த்துக் கொள்ளும் வேலைக்கு என்று வந்திருந்தாலும், அவனும் குரூப் தேர்வுகள் எழுதிக் கொண்டு தான் இருக்கிறான்!

“அப்ப, பரத்தோட அந்த பிரன்ட் ஹெல்ப் பண்ணுவான் இல்ல ஆத்தா?” என்று கேட்க, கனகு ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்து விட்டு “கண்டிப்பாக பண்ணுவாள்!” என்றார்!

“என்ன ஆத்தா சொல்ற? பண்ணுவாளா? எனக்கு புரியல!” என்றான் பரணி!

“ஆமாண்டா, அது அவன் ஆண் நண்பன் இல்லை, நண்பி! ம்ஹும்.. இல்ல காதலி! அது ஒரு பொண்ணுடா! அவ அப்பா தான் போலிஸ்!

எப்படியும் பரத், அவன் வருங்கால மாமனாரை வைத்து வேலை வாங்கி விடுவான் மணிக்கு!”

உனக்கு தெரியாம நாங்க பாத்ரூம் கூட போக முடியாது, லவ் பண்ணிற முடியுமா என்ன! பரணி உள்ளுக்குள் ஆச்சர்யப்பட்டுக் கொண்டான்!

“சரியான கேடி ஆத்தா நீ!” என்றான் சிரித்துக் கொண்டே!

அப்போது சரியாக கனகுவுக்கு போன் பரத்திடமிருந்து!

“ஆத்தா, என் பிரன்ட் ஒருத்தன், யூ டுயுப் சானல் வச்சுருக்கான்.

ஆம்..மா ஆம்பிள பிரன்ட் தான்.

அவன் உன்னை பேட்டி எடுக்கணும்னு சொல்லி ஒரே பிடுங்கலா பிடுங்கறான்.

அங்க தான் ஜானு ஆத்தா வீட்டுக்கு வர வழியில மெயின் ரோட்டுக் கிட்ட  நிக்கிறான்.

நீ கொஞ்சம் பார்த்துக்கோ” என்று சொல்லி போனை வைத்து விட்டான்.

கனகு , பரணியிடம் சொல்லிக் கொண்டு மணியோடு கிளம்பினார்.

மணி, அவரை, அந்த யூடுயுப்பர் நிற்கும் இடத்தில் இறக்கி விட்டவன், “ஆத்தா, நான் கொஞ்சம் டவுன் வரை போயிட்டு வரேன். நீ வேலை முடிஞ்சவுடன் போன் பண்ணு வரேன்” என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டான்!

“ம்ம். சொல்லு தம்பி, என்ன பேசணும்?” அந்த யூடுயுப்பரைப் பார்த்துக் கேட்டார் கனகு.

“இல்ல.. ஆத்தா, நீங்க இங்க இந்த கிராமத்துல இருந்துகிட்டு, ஒரு பெரிய மனித உறுப்பு திருட்டுக் கும்பலை ரொம்ப சாதுர்யமா பிடிச்சுக் கொடுத்ததா டிப்பார்ட்மென்ட்ல பேசிக்கிட்டாங்க!

அதான், கிராமத்து சாதனை பெண்மணின்னு உங்கள் பேட்டி எடுத்துப் போடலாம்னு!..” அவன் இழுத்தான்!

“எல்லாம் சரி தான் தம்பி, ஆனா நான் இதப் பத்தி வெளியில பேச விரும்பல!

உனக்கு என்ன,  கிராமத்து சாதனை பெண்மணியை பேட்டி எடுக்கணும் அவ்வளவு தானே!

இதே கிராமத்துல இன்னொருத்தி இருக்கா! சத்தமில்லாம சாதனை செய்துகிட்டு!

அவளை பேட்டி எடுத்துப் போடு! அதன் மூலமா உனக்கும் லாபம்! அவளுக்கும் லாபம்!

அவ பிசினெஸ் உன்னால இன்னும் பிரபலம் அடையும்!

அவள்கிட்ட வேலை பார்க்கிற பொம்பளைங்களுக்கு வாழ்வாதாரம் பெருகும்! என்ன சொல்ற?” என்றார் கனகு!

“அது யாரு ஆத்தா?”

“அது எங்க சின்ன மருமக தாமரை! அவ புருசன இறந்த பின்னே, அழுதுகிட்டு வீட்டில் ஒடுங்கிடாம, மீண்டு வந்து, சிறுதானிய பொருட்கள் உற்பத்தி செய்ற நிறுவனம் நடத்திட்டு இருக்கா!

வெளிநாட்டுக்கு எல்லாம் அனுப்பிட்டு இருக்கா! அவளை தான் சொன்னேன்!”

“அப்படியா! அப்ப சரி. அவங்க எங்க இருப்பாங்கன்னு சொல்லுங்க!” அவன் ஆர்வமாக கேட்க,

“என்னை வண்டியில ஏத்திக்கிட்டு போ, நான் உனக்கு அவ தொழில் கூடத்துக்கு கூட்டிட்டுப் போறேன்! என்ன சரியா? வா போலாம்!” என்றார் கனகு!

“ஆத்தா.., நான் பிள்ளைக் குட்டிக்காரன்!” என்று அவன் இழுத்தான்!

“அதற்கு இது பதில் இல்லையே!” என்று புலிகேசி வடிவேலு போல கனகு பார்க்க,

“ஆத்தா, எனக்கு உன்னோட ஹிஸ்டரி தெரியும் ஆத்தா! என்னை கீழே தள்ளி விட்டு கையை காலை உடைச்சி விட்டுடாதே! மீ பாவம்!” என்று அவன் பரிதாபமாக கேட்க,

“போடா.. லூஸு.. அதெல்லாம் உன்னை மாதிரி ஆட்களை பண்ணுவேனா? நீ நல்ல நோக்கத்தோடு தானே வந்திருக்கே! உன்னை எல்லாம் அப்படி பண்ண மாட்டா இந்த கனகு!

இதுவே , நீ அடுத்தவங்க அந்தரங்கத்தை பத்தி வீடியோ போடுற ஆளா இருந்தா, கண்டிப்பா செய்துருப்பேன்!

உனக்கு அப்படி செய்ய மாட்டேன், தைரியமா வா!” என்று அவன் வண்டியில் ஏறி ஜபர்தர்சாக ஏறி சென்றார் கலக்கல் கனகு, கனடா ரிட்டர்ன் கனகுப் பாட்டி!

முற்றும்.

இல்லையில்லை.. கலக்கல்கள் தொடரும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!