Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

High on kaadhal

கெளதம் பேகனின் ” High on காதல் – 9″

June 2017,

ஸ்ருதியிடம் இருந்து வேண்டுமென்றே விலகி இருந்தான்.

 

இருவரும் ஒருவருக்கொருவர் செம்ம கடுப்பில் இருந்ததால் வலிய வந்து பேசிக்கொள்ள முயற்சிக்கவில்லை.



Advertisement

ஆனால் ego மட்டும்   நன்றாக வளர்ந்து வந்தது.

 

கொஞ்சமாவது மதிக்கிறாளா என்னைய??

Advertisement

கூட இருக்கவனை புரிஞ்சுக்க கூட முடியலனா அப்பறம் எதுக்கு காதல் கல்யாணம் எல்லாம்? Just ஒரு  social status –கு தான் போல!

Advertisement

 

அடுத்த ஜென்மம்னு இருந்தா சத்தியமா லவ் மட்டும் பண்ணிடவே கூடாது.

 

Advertisement

எப்படியாவது ஸ்ருதியிடம் தன் கோபத்தை, தன் ஆற்றாமையை  வெளிகாட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தான் ..

Whatsapp-ல் video status ஒன்று போட்டு விடலாம் என்று தோன்றியது.

 

பொண்டாட்டி குழந்தைங்க மாமன் மச்சான் னு உறவுல வேகுறத விட .

ஒரு கட்டு விறகுல வெந்துட்டு  போய்டலாம்

பாபா படத்தில் ரஜினி பேசும்  காட்சியை status ஆக போட்டான்…

 

போட்ட இரண்டாவது நிமிடத்தில் Seen by ஸ்ருதி.  ஒரு  sadist போல உள்ளுக்குள் துள்ளி குதித்தான்.

காண்டு ஆகட்டும்அப்போவாது  தெரியட்டும் என்னோட அருமை !!!

 

ஏன் இப்படி ஸ்டேட்டஸ் போடுற!!  ப்ளீஸ் அருண், கோவத்துல எதோ பேசிட்டேன் என்னை மன்னிச்சுடு..

கனவுல கூட இப்படில பேச மாட்ட அவ!!!

 

உடம்பு Fulla ego தான்.. அதை விட எனக்கும் காட்ட தெரியும்.. பாப்போம் நானா அவளானு!!

 

Status பார்த்து நண்பர்கள் பதறினார்கள்…

 மச்சான் ஏன்டா என்ன ஆச்சு? பாத்துக்கலாம்..விடு பேசி சரி பண்ணிக்கலாம் அவசரப்படாதே..

 

அட போங்கடா என்ன ஆனாலும் பரவலாபாத்துக்கலாம். கொக்கரித்தான் அருண்!!!

 

அடுத்த பத்தாவது நிமிடத்தில் இதே status-ஐ  copy செய்து போட்டிருந்தார் அருணின்  மாமா…

பாவம் அவருக்கு என்ன பிரச்னையோ !!!

 

 

ஸ்ருதியிடம் இருந்து நினைத்தது போலவே எந்த Replyயும் வரவில்லை.. ஆனால் அவளுக்கு கண்டிப்பாக இது உஷ்ணத்தை ஏற்படுத்திருக்கக்கூடும் என்று மட்டும் தெரிந்தது.

 

ஷிவா மட்டும் call செய்தான்

 

என்னடா பிரச்னை உங்களுக்குள்ள ?

 

யாரிடமும் சொல்லக்கூடாது என்று அடக்கி வைத்தவன் எல்லாவற்றையும் கொட்டி தீர்த்தான்…

 

டேய் உன் பிரச்னை என்னக்கு புரியுது. But அவ இங்க வரட்டும் அப்புறம் பேசிக்கலாம்!!

 

வந்தா மட்டும்??

 

 

[the_ad id=”6605″]

 

 

அவ உனக்கு கொஞ்சம் Comfortableness குடுக்கலாம் நெனைச்சா.. ஆனா அங்க எப்படி சூழ்நிலை னு நமக்கு தெரியாதுல..

 

இருந்துட்டு போகட்டும்டா… but நானும் மனுஷன் தானே!! என்ன பெருசா Expect பண்ணிட்டேன் பேசணும்னு தானே!!

 

மச்சான்.. நீ இவ்ளோல tension ஆகாத.. அவ இங்க வந்தா சரியாகிடும் நீ தான் இவ்ளோ stress ஆகுறே னு தோணுது!!

 

ஆமா, ஆமா அவ என்னை பத்தி நெனைச்சு பாக்க கூட மாட்டா!! But இந்த Exams அப்போ நான் கொஞ்சம் Disturb பண்ணிட்டேன்னு நெனைச்சா தான் அவளும் ஸ்ட்ரெஸ் ஆயிடுவாளோனு ஒரு மாதிரி இருக்கு

 

நீ இவ்ளோ சொல்றதுனால  சொல்றேன் அவ Instagram Profile fulla stories தான்!!  அங்க நீ சொன்ன அவளோட Friend கூட Restaurant, Cafe னு photos போட்டுட்டு இருக்காஎதுக்கு சொல்ல வரேன்னா She is very normal..  so, நீயும் இத பெருசு பண்ணிக்காதபோகிற போக்கில் கொளுத்தி விட்டான் ஷிவா..

 

Insta யா? Photos Screenshot அனுப்பு.. நான் Line- இருக்கேன்.

 

Insta use செய்வதில்லை அருண்.. ஸ்ருதியிடம் பேச தான் Whatsapp இருக்கே அப்புறம் எதுக்கு இதெல்லாம் என்று limit செய்து கொண்டான். ஆனால் ஸ்ருதியோ பயங்கரமான insta Addict..

நெறய photos நெறய stories என்று தனது மனதுக்கு நெருக்கமானதை எல்லாம் post செய்வாள் அருணோடு இருந்த இரண்டு தருணங்கள் உட்பட!!!

 

See…நான் அனுப்பறேன். but நீ Freeya விடு.. இதெல்லாம் நெனைச்சு காண்டு ஆகாத.. அவ Actually happy a ஊரு சுத்திட்டு தான் இருக்கா. Stress ஆகுற மாதிரி எல்லாம் தெரியல. So நீயும் freeயா விடு..  

 

 

போட்டோக்களை பார்க்க பார்க்க பற்றி கொண்டு வந்தது அருணிற்கு..

 

ஒன்றுமே செய்ய முடியவில்லை அருணால்.. ஸ்ருதியை நினைத்து உள்ளுக்குள் புழுங்கி கொண்டே இருந்தான்…

 

பேசாம call பண்ணி அவளை கண்ணா பின்னான்னு திட்டி விடலாமா ??

 

என்கூட உன்னால ஒரு 10 நிமிஷம் spend பண்ண முடியாது. ஆனா Exams படிக்குறேன்னு சொல்லிட்டு ஜாலியா ஊரு சுத்திட்டு Photos போடற..

 

வேணாம் வேணாம் அப்புறம் அங்க இன்னும் வேற மாதிரி சீன் Create ஆகும்.. அந்த பையன் கூட இருக்கிறத பாத்தாலே எரிச்சல் a இருக்கு!!  இனிமேல் பேசவே கூடாது அவ கிட்ட.. வெறுப்பின் உச்சக்கட்டத்தில் அதே போல avoid- ம் செய்தான் அருண்!!!

 

இந்தியா வந்த பிறகு Fbயில் ஒரு status ஸ்ருதியிடம் இருந்து.

Back to india என்று…

 

சரி Safe  a வந்துட்டா என்பதை தெரிந்து கொண்டு எதுவும் கேட்காமல் விட்டு விட்டான் அருண்.

 

தொடர்ந்து calls, texts ஸ்ருதியிடம் இருந்து கிட்ட தட்ட ஒரு 4 முறை..

 

எதையும் respond செய்யவில்லை அருண் வேண்டுமென்றே.

 

தன் வலியை அவளுக்கு புரிய வைக்க வேண்டும் என எண்ணினான் கடைசியில் அவனுக்கும் வலிக்கும் என்று தெரியாமலே

 

[the_ad id=”6605″]

 

Hey there?

 

Please respond

 

Whatever we will talk and sort it out..

 

அவள் கொஞ்சம் இறங்கி வருவது போல் தெரிந்தது

 

அட்ரா சக்கை.. மனதிற்குள் சந்தோஷமாக அருண்..

 

Definitely will talk and DECIDE … இதற்கு மட்டும் reply செய்தான், decide என்பதை மட்டும் Bold இல் அனுப்பி  ….

 

இரண்டு நாட்கள் ஸ்ருதியிடம் இருந்து  பேரமைதி…

மாறாக அமைதிக்கு பிறகு மெல்ல புயல் அடிக்க தொடங்கியது.

 

Fb Messenger-இல் Ping செய்தாள் அவள்..

 

Arun can i talk to you for a min?

 

Finally u got some time to speak wit me shruthi

 

Ohh yeahh…Just to show that I exist in this world. Thanks for understanding arun!

 

அப்படியே தான் இருக்கா அவ இன்னும்.. எப்படி சண்டையை பெருசாக்கலாம்னு தான் இன்னும் பாக்கறா.

எரிச்சலோடு இருந்தான் அவன்..

 

பேசி sort பண்ணலாம்னு சொன்னியே என்ன decide பண்ணிருக்க அருண்??

 

நீ Decide  பண்ணிட்டல அதையே தான் நானும் decide பண்ணிருக்கேன்..

 

விரிசலை அதிகமாக்கும்  முயற்சியில் இருவரும்..

 

நீ என்கூட சந்தோஷமா இல்ல ஸ்ருதி. Like Literally am not worth உனக்கு எப்படி என் மேல Interest  இல்லையோ அதே மாதிரி தான் எனக்கும் இப்போ இருக்கு.

 

சும்மா எதாவது சொல்லாத அருண். நான் உங்கிட்ட மட்டும் அப்டி Behave பண்ணல இங்க எல்லார்கிட்டயும் அப்படி தான் இருந்தேன்..I was very much stressed and I expected you to understand me .

 

But.. என்கிட்ட அதைவிட அதிகமா பண்ணியே!! சந்தேகப்படுறேன், Trust இல்லனு சொன்னியே

 

yes what you did made me think like that only.. you kept checking on me and u did not trust me..dont say no.. U were not comfortable at all!

 

இதயத்தில் குத்திய ஊசியை வெளியே எடுத்து விட்டு பின் அதே இடத்தில் முள்ளை கொண்டு தைத்த வலியில்   துடித்தான் அருண்..

 

நீ மொதல்ல என்னை Comfortable வெச்சிருந்தீயா ??

 

என்ன நான் பண்ணலநீ தான் நான் இங்க வந்தது கூட கேக்கலநான் எப்படி இருக்கேன்னு தெரிஞ்சுக்கல.. U dint even care about me!

 

நீ நல்லா தானே இருந்தஉன் போட்டோஸ்ல பாத்தேனே insta .. என்கூட பேசாம ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தீயே!!!

 

நான் எப்படி இருந்தேன்னு உனக்கு தெரியுமா?? எவ்ளோ stress இருந்தேன் தெரியுமா? அப்போ எடுத்த photos தான் அது!   And that too i uploaded for Prashanth’s GF! Not for my sake!

 

பிரசாந்தின் காதல் கதை எல்லாம் கேட்கும் பொறுமையில் இல்லை அருண்.

 

எனக்கு அதெல்லாம் ஒன்னு தெரிய தேவை இல்லை!!

 

So.. அந்த photos மூலமா தானே நான் என்ன பண்றேன் எப்படி இருக்கேன்னு தெரிஞ்சுக்கறஇனிமேல் உன் Friends கிட்ட கேட்டு அதுலயே தெரிஞ்சுக்க என்னை பத்திஅதான் Interest இல்ல னு Decide பண்ணிட்டல அப்படியே இரு, நானும் அப்படியே இருந்துக்கறேன்.. இதுக்கு மேல சத்தியமா don’t expect me to come back! சும்மா பிடிச்சு தொங்கிட்டு இருக்க முடியாது!!

 

அவ்ளோ தான் விடு!! Dot!

 

 

[the_ad id=”6605″]

 

 

தங்களின் காதலை தோற்கடிக்கும் அத்தனை முயற்சிகளிலும் இருவரும் சரிசமமாக வென்றனர்!!!

 

என்ன சண்டை போட்டாலும் எங்க போனாலும் இங்க தானே திரும்பி வரணும் ஸ்ருதி எப்பொழுதும் போல் தனக்காக வருவாள் என்று தான் நினைத்தான் அருண்..

 

இரண்டு நாட்களுக்கு பிறகு…

சரி எதுக்கும் சும்மா call பண்ணி தான் பாப்போம்.

 

call செய்தான்!! நம்பர் Block செய்திருப்பது போல Ring விட்டு cut ஆனது

 

Text மெசேஜ் செய்தான்..

Whatsapp- லும் Block செய்திருப்பதாக தெரிந்தது!!

 

FB யை நோக்கி ஓடினான் அதிலும் Block!!

 

வீட்டில் இருக்கும் வேறொரு நம்பரில் இருந்து கூப்பிட்டான் attend செய்யவில்லை.. பிறகு மீண்டும் try செய்த பிறகு தான் தெரிந்தது இதுவும் blocked!!!

 

ஸ்ருதியை தவிர வேற எதை பற்றியும் யோசிக்க முடியாமல் அவனின் மூளையும் Blocked!

 

 

பேசாம ஸ்ருதி Friend நந்திதாவிற்கு call செய்யலாமா??

 

சண்டைனு சொன்னா But  அதெல்லாம் சரி ஆகிடும்.. You don’t worry எதோ கோவத்துல block செஞ்சிருப்பா.. நான் அவ கிட்ட பேசிட்டு கண்டிப்பா உனக்கு இன்னைக்கு call பண்ண சொல்றேன்…

 

நந்திதாவின் வார்த்தைகளில் ஓரளவு சமாதானம் ஆனாலும் உள்ளுக்குள் புழுங்கி கொண்டே இருந்தான் அருண்.

 

 

gowthambegan

An Entrepreneur!! கன்னி எழுத்தாளன்.. தவழ தொடங்கி இருக்கும் எனது எழுத்து நடையிலும் கதை சொல்லிய விதத்திலும் பிழைகள் இருந்திருந்தால் ஒரு குழந்தையை கைபிடித்து நடத்திச்செல்லும் வகையில் ஏற்றுக்கொள்ளுங்கள்.. உங்கள் கருத்துக்களுக்கும் கனிவுக்கும் தொடர்பு கொள்க .. https://www.facebook.com/gowtham.began

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!