Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

5. நிழலே! என்னை தள்ளிபோகாதே

அந்த பெரிய மாலில் அனைத்து தரப்பு மக்களும் கூடியிருந்தனர். ஆதிரா பொம்மைகளை கைநீட்டவே தேவிகாவும், சௌந்தர்யாவும் அதை நோக்கி சென்றனர். கௌரி மற்றும் சிதம்பரம் கூட்டத்திற்கு இடையே போகாமல் இரு நாற்காலிகளை பிடித்துக்கொண்டு அதில் இருந்தனர். கௌதம் மற்றும் சூரியா பெண்களுக்கான ஆடை பிரிவில் நின்றுக்கொண்டிருந்தனர்.

சூரியா, தேவிகாவிற்கு சேலை தேர்வு செய்வதை மகிழ்ச்சியோடு பார்த்தவாறு நின்றிருந்தான், கௌதம்.

“கௌதம், அண்ணிக்கும், அம்மாவுக்கும் ஒரு சேலை தேர்வு செய். சும்மா வெட்டியா தானே நின்று கொண்டிருக்க,” என்றான் புன்னகை பூத்து.

“சொல்லுவ டா தம்பி,” என்றபடியே சூரியாவின் மாற்றத்தை கண்டு வியப்பாக நின்றான்.



Advertisement

பின் சற்று நேரத்திலேயே மூவருக்கும் பச்சை நிற சேலையை சூரியாவே தேர்வு செய்து முடித்தான். அதை பில் போட்டு முடிக்கும் வழியில் பச்சை நிறத்திலே தென்பட்ட பரிசு பொட்டலும் ஒன்று வாங்கிக்கொண்டான். என்ன! பச்சை நிறத்திலேயே எல்லாம் வாங்குகிறான், தம்பிக்கு பிடித்த நிறம் சிவப்பு அல்லவா என்று நினைத்தவாறே அவனை பின்தொடர்தான்.

கீழ் தளத்திற்கு சென்றவர்கள், சௌந்தர்யா, தேவிகா மற்றும் ஆதிராவை பார்த்தவுடன் அவர்கள் அருகாமையில் சென்றனர்.

“அப்பா! எனக்கு அந்த பொம்மை தான் வேணும்,” என்று சிவப்பு நிற பொம்மையை கை காண்பித்தாள். அதன் அருகில் பச்சை நிற பொம்மை இருக்க அதையே வாங்கி ஆதிராவுக்கு கொடுத்தான். பொம்மை கிடைத்த மகிழ்ச்சியில் அவள் நிறத்தை பெரிது படுத்தவில்லை.

Advertisement

பின் அனைவரும் பணம் கட்டும் இடம் நோக்கி நகர்ந்தனர். அங்கு அனைத்து பொருட்களையும் சரிபார்த்து பணத்தை கொடுத்தான், சூரியா.

Advertisement

“என்ன சூரியா ஒரே பச்சை நிறமா இருக்குது. உனக்கு சிவப்பு நிறம் தானே பிடிக்கும்,” என்று ஆச்சரியமாக கேட்டாள், சௌந்தர்யா.

அவன் தேவியை பார்க்க, “என்ன தேவி உனக்கு நீலம் நிறம் தானே பிடிக்கும் இப்போது பச்சைக்கு மாறிடியா?” என்று விளையாட்டாக கேட்டாள், சௌந்தர்யா.

தேவி இதழ் விரிந்து முகம் பொலியுபெறவே, “எனக்கு புரிந்தது. சூரியா, தேவிக்கு பச்சை கொடி காண்பித்து விட்டான் போலும்,” என்று சூரியாவின் பச்சை நிறத்திற்கு பின்னால் இருந்த ரகசியத்தை போட்டு உடைத்தான் கௌதம்.

Advertisement

“ஆமாம்!,” என்று அனைவரும் சிரிக்க. சூரியா தேவிகாவை பார்க்க அவளோ நாணத்தால் தரையை கால்களால் தடவ. பணம் கட்டும் இடத்தில், அவர்கள் முன்னே அவள் கணவன் மற்றும் குழந்தையோடு வந்து நின்றாள். அவள் தான் சூரியாவின் முன்னாள் காதலி ஜீவிதா. கல்யாணம் வரை வந்து இன்னொருவனை மணம்பிடித்தவள்.

கண் இமைக்கும் நோடியில் சூரியா ஜீவிதாவை பார்த்தவன் உடம்பெல்லாம் ஆட்டம் கண்டது. மறுபடியும் ஏக்கம் வந்து அவனை குடிகொள்ள நினைக்கையில், அவளோ! இவனை பார்த்து அதிர்ச்சியுற்றவளாய் அவளது கணவர் கூப்பிட அவள் இவனை கண்கள் இமைக்காது பார்த்தபடியே நடந்தாள். தன்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டாள் என்ற எண்ணம் அவனின் மனதில் உதித்தது.
அவனுக்கு அவள் மேலிருந்த பிரியம் போயி எரிச்சல் மேலோங்கி இப்படி இவளை நம்பி ஏமாந்து விட்டோமே என்று அவள் மேலே அவனுக்கு கோபம் உண்டாயிற்று. அவள் கையை பிடித்து நடந்த குழந்தையை பார்த்தவன், சரி போட்டும் நல்லா இருந்தா சரிதான் என்று எண்ணியபடியே கண்கள் சிவக்க அவன் தேவிகாவை பார்க்க அவளும் அவனது அசைவுகள் அனைத்தையும் கவனித்தவளாய் அவனை பார்த்தாள்.
தேவிகா, இவனது இந்த திடீர் படபடப்பு மற்றும் திடீர் மாற்றத்தை வைத்து கண்டுகொண்டிருப்பாளோ ?

அதை கவனித்த கௌதம் மற்றும் சௌந்தர்யா திடுக்கிட்டு போய்நின்றனர். நிலைமையை சுதாரித்து கொண்ட சௌந்தர்யா அவர்களை அங்கே அதிக நேரம் நிற்கவிடாமல் திசை திருப்ப முயற்சித்தாள். பின் ஒரு நொடி தாமதிக்காமல் வீடு வந்து சேர்ந்தனர்.

அன்று இரவு, நிலவு ஒளியும் குளிர்ந்த தென்றலும் ஒருசேர வீச, கௌதம் சூரியாவை தனியாக வெளியே அழைத்து சென்றான்.

“சூரியா, அந்த மால்லுல அவளை நீ மறுபடியும் பார்த்ததிலிருந்து உன் முகமே சரியில்லை டா. மறுபடியும் முருங்கை மரம் ஏறிவிடாதே பாவம், தேவிகா,” என்றான் கௌதம்.

சூரியா யோசித்தவாறே, “அவளால எல்லாம் மறந்துட்டு எப்படி அண்ணா இப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியுது?”

“டேய், இத தானே நாங்க எப்போதும் சொல்லுகிறோம் அவள் உன்னை விட்டுட்டு போயி மகிழ்ச்சியாக தான் குழந்தை குட்டினு இருக்கா. நீ தான் அவளை நினைத்து உன் வாழ்க்கையை கெடுக்குற. இன்னைக்கு பார்த்தாயா அவளை, மனதில் எந்த குற்றவுணர்ச்சி கூட இல்லை,” என்று கௌதம் சூரியாவிற்கு புரிய வைக்க முயற்சித்தான்.

“ம்ம்ம்ம்…. நீ சொல்றது சரிதான். என் காதலை அதன் ஆழம் அறியாதவளுக்கு காண்பித்துவிட்டேன்,”

“ஆமா, முற்றிலும் உண்மை. உன் காதலை தேவிகா மீது செலுத்து அதை அவள் புனிதமாக்குவாள்,” என்றான் கௌதம். சூரியா சரி என்றவாறே தலை அசைத்தான்.

சூரியா தன் அறையில் காத்திருந்த தன் மனைவியின் மீது காதல் பார்வை வீசினான். அவளோ நாணத்தால் கண்களை சிமிட்டி தரையை பார்த்தாள். அவள் அருகில் சென்றவன், “தேவி என்னை மன்னித்துவிடு இனிமேல் உன் பிறந்தநாளைக்கு நான் தான் முதலில் வாழ்த்து தெரிவிப்பேன்,” என்றான் சூரியா. தேவிகாவோ புன்னகையை உதட்டில் சுமந்து கொண்டு, “பரவாயில்லைங்க. நீங்கள் எனக்கு எடுத்த புடவை ரொம்ப பிடிச்சிருக்கு,” என்றாள் அவள்.

“அப்படியா?” என்றவாறு சிரிப்பை பறிமாறிக்கொண்டனர்.

சொல்ல மறந்துட்டேன் என்றவாறே தேவிகா, “நாளை மறுநாள் நீங்கள் இரண்டு நாட்கள் லீவு போட்டுவிடுங்கள். அண்ணணுக்கு திருமணம் உறுதி செய்வதனால் நாம அங்கே போகனும். சௌந்தர்யா அக்காவும் இதை பற்றி என்கிட்ட கேட்டாங்க. நாமளும் நாளை மாலை அவுங்க கூடவே போயிவிடலாமா?” என்று வினவினாள்.

“ஐயோ! இது பற்றி எனக்கு கொஞ்சம் கூட நியாபகம் இல்லையே. கம்பேனியை பார்வையிட மேல் அதிகாரிகள் வருவதால் யாருக்கும் இந்த வாரம் விடுப்பு கிடையாது என்று முதலிலேயே அறிவித்து விட்டார்களே,” என்றான் அவன்.

“அப்போ, நீங்கள் வரமுடியாதா?” என்றாள் முகம் சோர்ந்து, “கடினம் தான் இருப்பினும் முயற்சிக்கிறேன்,” என்றான்..அவளும் தலை அசைத்தாள்.

சூரியாவிற்கு தேவிகாவிடம் உரையாட வேண்டும் என்ற ஆசை அவளுக்கோ தூக்கம் கண்களை கலங்க செய்தது. அவள் மெத்தையில் படுத்த சில நமிடங்களிலேயே அயர்ந்து தூங்கி விட்டாள். அவனோ அவளை பார்த்தவாறே, “மன்னித்துவிடு தேவிகா. உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். இனி என்னுடைய காதலும் வாழ்க்கையும் உன்னோடுதான். எனக்கு அதை மெதுவாக எடுத்துரைத்து என்னை மாற்றியதற்கு நன்றி, தேவிமா,” என்றவன் அவள் அருகில் சென்று படுத்துக்கொண்டான்.

மறுநாள் மாலை, ஊருக்கு செல்ல அனைவரையும் பேருந்து நிலையத்தில் கொண்டு விட்டான். அவனுக்கு விடுப்பு கிடைக்கவில்லை அதனால் தேவிகாவை அவர்களோடே வழி அனுப்பி வைத்தான். அந்த நிமிடம் வரை அவனுக்கு தெரியவில்லை தேவிகாவை விட்டு பிரிந்திருக்கும் இந்த இரண்டு நாள் அவனை கொல்லாமல் கொன்று வதைக்கும் என்று.

வீட்டுக்கு சென்றால் எங்கு பார்த்தாலும் அவள் முகம். அவள் இல்லாமல் அவனுக்கு எதுவுமே ஓடவில்லை. அவளின் அழைப்பை எதிர் நோக்கி போனை கையிலேயே வைத்துக்கொண்டு இருந்தான். இரவு ஆகியும் அவளிடமிருந்து அழைப்பு வரவில்லை. அவள் இல்லாமல் மிகவும் சிரம்மபட்டான்.

அவளிடமிருந்து அழைப்பு வர மிகவும் சாதாரணமாக, “சாப்பிட்டிங்களா? பேருந்து இப்போது எந்த இடம் போய்கொண்டு இருக்கிறது?” என்றான் தன் காதல் அவஸ்தையை மறைத்தவாறு.

“மதுரை தாண்டிட்டோம். நீங்கள் சாப்பிட்டுவிட்டு தூங்குங்கள். போன் இப்போது ஸ்விட்ச் ஆப் ஆகிறும். இரவு வணக்கம்,” என்றாள் அவள்.

“சரி சரி,” என்றவாறே பேசி முடித்தான்.

அன்று இரவு முழுவதும் தூக்கத்தை தொலைத்தான். அவளின் நினைவுகள் அவனை துரத்த அவனால் இந்த பிரிவை தாங்கி கொள்ள முடியவில்லை.

காலை மறுபடியும் தேவிகாவிடமிருந்து அழைப்பு வந்தது. “அவள் தன் வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும், அனைவரும் சூரியாவை தேடி கொண்டதாகவும்,” ஆக ஒருநிமிடம் பேசினாள் அதற்காக சூரியா மணிகணக்கில் காத்துக்கொண்டிருந்தான்.

அன்று, அலுவலகம் சென்றும் அவனால் வேலையை கவனிக்க இயலவில்லை. போனையே அவ்வப்போது உற்று நோக்கி கொண்டிருந்தான். அவளிடமிருந்து மாலை வரை அழைப்பு வரவில்லை. எந்த அழைப்பு வந்தாலும் தேவிகாவோ என்று எதிர்ப்பார்த்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவள் நம்பரிலிருந்து அழைப்பு வந்தால் அதை எளிதில் கண்டுகொள்வதற்காக அவளுக்கேன தனி ரிங்டோன் வைத்தான்.

அன்று இரவு வீடு திரும்பும் நேரத்தில்,
“என்னை விட்டு எங்கும் போகதே!
என்னை விட்டு எங்கும் போகதே!
என்னை விட்டு என்றும் போகதே!” என்று கைபேசி ஒலிக்க, தேவிகாவின் பெயரை பார்த்ததும் மகிழ்ச்சி அவனை ஆட்கொண்டது.

“விட்டுக்கு போயிடீங்களா?” என தேவி கேட்க, “ஆமாம் தேவி. எல்லாம் நல்லபடியாக முடிந்ததா?”

“ஆமா. நீங்க தான் இல்லையே,” என்றாள் மெல்லிய குரலில்.

“பரவாயில்லை,” என்று இழுத்தான்.

“சூரியா இன்னும் இரண்டு நாட்கள் இங்கு நின்நிட்டு வரட்டுமா?” என்று பாவமாக கேட்க, ‘அடப்பாவி! இங்கே ஒருத்தன் நீ இல்லாமல் படும் பாடு அறிவாயா?’ என்று மனதில் நினைத்தவாறே பதில் கூறவில்லை.

“ப்ளீஸ் ப்ளீஸ்,” என்று கெஞ்சவே அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் “ம்ம்ம்,” என்றான்.

“நன்றி சூரியா,” என்று துள்ளி குதித்திருப்பாள் போலும் மகிழ்ச்சி அவள் குரலிலே தெரிந்தது.

அன்றைய தினமும் அவனுக்கு விரக்தியாகவே கடந்தது. மறுநாள் அவனுக்கு அலுவலகத்தில் பயங்கர வேலை ஒருபொழுதும் அசைய இயலாது. மிகவும் சோர்வுற்று வீடு திரும்பியவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தாள் தேவிகா. அவளை வீட்டிலே பார்த்த அடுத்த நிமிடமே அவளை கட்டி தளுவிக்கொண்டான். அவளும் அவனை தளுவவே இருவருக்கிடையிலான அன்பு அப்பட்டமாக வெளியானது. நேற்று அவனிடம் பேசியபிறகு தேவிகாவிற்கு சூரியாவை காணாமல் இருக்க முடியாது என்பதை உணர்ந்தவள் மறுநாள் காலையிலேயே தன் அண்ணணோடு சென்னை கிளம்பி வந்துவிட்டாள். ஊரில் முக்கியமான வேலை இருந்ததால் தங்கை கட்டாயப்படுத்தியும் நிற்க முடியாமலாயிற்று அவனுக்கு.

சூரியா, தேவிகாவின் மீது நாளுக்கு நாள் தன் காதலை செலுத்த, இணை பிரியாத தம்பதிகளாய் ஆயின. ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காமலும் அன்பை மேலோங்க செய்தனர். சூரியாவின் உலகமே தேவிகாவானாள். இருவரும் ஒரு உயிர் ஆயினர் அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அர்த்தமூட்ட தேவிகா கர்ப்பமானாள். சூரியாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் ஆனது. இரு வீட்டாரும் அவ்வப்போது வந்து தேவியை பார்த்து செல்வார்கள். மூன்று மாதமும் முழுக்க முழுக்க சூரியாவே தேவியை கவனித்துக்கொண்டான். அவளுக்கு பிடிக்கும் படி இவனே அவளுக்கு உணவு சமைத்து கொடுப்பான். அவளும் அதை விரும்பி சாப்பிடுவாள். மருத்துவர்கள் ஆலோசனை படி அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தான். இப்படி மகிழ்ச்சியான அவர்களின் வாழ்வில் பிரிவு எப்படி சாத்தியமானது?

##########

தேவிகாவுக்கு ஐந்தாவது மாதம் நடந்து கொண்டிருக்கும்போது சூர்யாவின் வாழ்வில் சூறாவளி காற்று வீச ஆரம்பித்தது. அதன் விளைவு இவ்வாறு வந்து நிற்கும் என்று சூர்யா கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை.

சூர்யாவின் முன்னாள் காதலி ஜீவிதா அவன் வேலை பார்த்த அதே இடத்தில் திரும்பவும் வேலைக்கு சேர்ந்தாள். முதலில் இருவரும் இங்கே தான் வேலை பார்த்தார்கள். ஏற்கனவே தேவிகாவிற்காக சூர்யா இடமாற்றத்திற்கு விண்ணப்பித்திருந்தான் ஆனால் ஜீவிதாவும் இங்கே வந்து சேர்ந்தபோது அதை இன்னும் துரிதப் படுத்தினான்.. தேவிகாவின் கர்ப்ப காலம் என்பதால் சூர்யா, ஜீவிதாவை பற்றி எந்த செய்தியையும் கூறவில்லை. தேவிகா அவன் மீது வைத்துள்ள காதலை புரிந்துகொண்டதனால் ஜீவிதா பற்றின செய்தி அவளை மன நிம்மதி இழக்க செய்துவிடும் என்று அவளிடம் சொல்லாமல் இருக்க, அவனுக்கு நாளுக்குநாள் மனபாரம் அதிகரித்துக்கொண்டே போனது . அவனுக்கு மனதில் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியும் தோன்றியது அதனால் அவனை அறியாமலே அவனிடம் மாற்றங்கள் உண்டாக ஆரம்பித்தது.

ஐந்தாவது மாதம் எப்படியோ ஒருவழியாக தட்டித் தட்டி கழித்து விட்டான்.
தேவிகாவிற்கு ஆறாவது மாதமும் பிறந்தது. சூரியாவால் முடிந்த வரை மிகவும் அக்கறையோடும் கரிசனையோடே தேவிகாவை பார்க்க முயற்சித்தான்.

அன்று மதிய உணவிற்கு சூரியா வரவில்லை தேவிகா அவனை கைபேசியில் தொடர்பு கொண்டாள். “தேவிகா மீட்டிங் இருக்கிறது” என்று கூறி அழைப்பை துண்டித்து விட்டான்.

இவளோ சில சமயங்களில் சூர்யாவிற்கு சாப்பாடு கொண்டு போய் கொடுப்பது வழக்கமாக வைத்திருந்தாள் எனவே அன்றும் மதிய உணவை எடுத்துக்கொண்டு அவனது அலுவலகத்திற்கு சென்றாள். அப்போது அந்த அதிர்ச்சியான சம்பவத்தை பார்த்து உறைந்து போனாள். அவள் பார்த்தது என்னவென்றால் சூர்யாவின் கைகளை பிடித்துக்கொண்டு கண்ணீரோடு ஜீவிதா அவனிடம், “என் வாழ்வில் நான் உன்னை தொலைத்துவிட்டேன், சூரியா. நான் உனக்கு பெரும் துரோகம் இழைத்து விட்டேன். நீ எனக்கு இப்போது தெய்வமாக தெரிகிறாய்,” என்று கூறிய ஒரு சில வார்த்தைகள் அவள் காதில் விழுந்தது.

அதற்கு அவனோ, “பரவாயில்லை!…….” அவன் வாயிலிருந்து உதிரும் வேறு வார்த்தைகளை தேவிகாவிற்கு கேட்கும் அளவுக்கு அவள் உதிரத்தில் தெம்பு இல்லை. அவளுக்கு ஜீவிதாவை ஏற்கனவே தெரியும் சூர்யாவின் டயரியினுள்ளே இருந்த போட்டாவில் பார்த்த அதே முகம், ஜீவிதாவை சரியாக அடையாளம் கண்டு கொண்டாள். முன்பு, அந்த மாலில் வைத்து பார்த்தப்போது அவள் தான் ஜீவிதா என்று உறுதி படுத்துக் கொண்டாள்.

அவள் உள்ளே செல்லாமல் வெளியே அவனது இருக்கையிலேயே மதிய உணவை வைத்துவிட்டு கண்ணீர் மல்க வீட்டுக்கு திரும்பி சென்றாள்.

சற்று நேரத்திற்கு பின், சூரியா தன் இருக்கைக்கு வந்த போது அங்கே சாப்பாடு இருந்ததை கவனித்தவன் தேவிகா தன்னை வந்து பார்க்காதது ஏன் என்று ஒருபுறமும், மன உறுத்தல் இன்னொருபுறமுமாக இருக்க தேவிகாவின் கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டான். அவளோ கண்கள் சிவந்து ஏங்கி ஏங்கி அழுது கொண்டிருந்தாள்.
மீட்டிங் என்று சொல்லிவிட்டு ஜீவிதாவிடம் பேசிக் கொண்டிருப்பதை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை…ஜீவிதா எப்போது இங்கு பணியில் வந்து சேர்ந்தாள்? சூரியா தன்னிடம் மறைத்ததற்கான காரணம் என்ன? என பல கேள்விகளை தன்னுள்ளே கேட்டு கேட்டு மனமுடைந்து போனாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!