Alaiyil Pootha Malar 25 2
சூர்யாவின் கேள்வியெல்லாம் இவளின் புத்திக்கு எட்டவில்லை.. மாறாக எத்தனை வலியிருந்தாலும் இன்று கணவனுக்கு மறுக்கக் கூடாது என்று திடமாய் முடிவெடுத்தவள்.. ஏதோ யுத்தத்திற்க்கு தயாராவதுபோல் கண்களை இறுக மூடியவள்.. அத்தனை கெட்டியாக பிடித்தாள் தலையணையை.
மனைவியின் நிலையறிந்தவனாய்.. ‘உனக்கொன்னும் ஆகாது.. பயப்படாத.. உனக்கு கஷ்டமா இல்லாதமாதிரி நான் பார்த்துக்கிறேன்..” என்று அவளைத் தேற்றிக் கொண்டிருந்தவனின் குரல் அத்தனை மென்மையாக வெளிவர.. குரலுக்கேற்றபடி அவனின் செயல்களும் மென்மையாகவே தொடர்ந்தது..
இந்நிகழ்வென்பது வலி நிறைந்தது.. ஆண்களின் தேவைக்கானது.. பெண்கள் குழந்தை பெறுவதற்கான வழி.. மொத்தத்தில் திருமணம் நடந்தால் எல்லா பெண்களும் இந்த விசயத்தை பொறுத்துக்கொள்வார்கள் என்பதுதான் அவளறிந்தது. இன்னமும் அந்த பயம் இருந்தாலும்.. சூர்யாவிற்க்காக என்றுதான் தன் மனதை மாற்றினாள்.
Advertisement
ஆனால் தற்போது சூர்யாவின் மென்மையான பேச்சும்.. செயலும்.. திலகவதியை கொஞ்சம் கொஞ்சமாக வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்ல.. தனது வெக்கத்தை தவிர்க்க முடியவில்லை என்றாலும்.. முற்றிலுமாக தனது அச்சம் தவிர்த்தாள். அவளின் பயம் தெளிந்த முகம் செவ்வானமாய் சிவக்க.. அவளின் சிவந்த முகத்தையே சம்மதமாக எடுத்துக்கொண்டு.. அதற்குமேல் தாளமுடியாமல்.. திலகவதியை மெல்ல ஆக்ரமிக்க ஆரம்பித்தவன்..
தன் தேவையை திலகவதிக்கு உணர்த்துவதை விட.. திலகவதியின் தேவையை தன் செயலால் அவளுக்கு உணர்த்தி கொண்டிருந்தான். சற்று நேரத்திலேயே அவனின் தேவைகள் அவளின் தேவையாக மாற.. அதன்தாக்கம் அவளின் உடல்மொழியிலும் தெரிய.. பயத்தோடு தலையணையை பிடித்திருந்தவளின் பிடி தளர்ந்திருக்க.. முன்பு இறுகியிருந்த முகம் தற்போது மயக்கத்தில் இருக்க.. வெற்றி கொண்டவனாய் திலகவதியின் கைகளைப் பற்றி தன் வெற்றுடம்பில் போட்டுக்கொண்டு தன் பணியினை தொடர்ந்தவன்.. தனக்கான தேடலின் எல்லையை தொட முயல.. அதனால் திலகவதி அறிந்த உணர்வு புதிது.. அதுகொடுக்கும் அவஸ்த்தை புதிது.. அவஸ்த்தை என்றாலும் மீள முடியாத.. மீளவிரும்பாத சுகமான அவஸ்த்தையோடு முழுமனதுடன் அவனுள் கலந்தாள்.
சூர்யா விலகி அரைமணிநேரம் கழித்தும்.. அவள் கண்திறக்காமல் இருக்க.. அன்று போல் மயக்கமாகிவிட்டாளோ என்று பதறினாலும் அதை மறைத்து.. தனது சிறு செயலோ.. அல்லது வார்த்தையோ.. மறந்தும் திலகவதியின் முன்னாள் நினைவுகளை வரவைக்கக் கூடாதென எண்ணியவன்.. மென்மையாக.. ‘திலகா..” என்று அவளின் முகத்தை தன்புறம் திருப்ப..
Advertisement
கணவனை காணமுடியாமல் கண்மூடிய நிலையிலேயே ‘ம்ம்..” என்றாள்.
Advertisement
அவளின் சிவந்த முகத்தை பார்த்து சந்தோசமடைந்தவன்.. ‘நான் இன்னும் சாப்பிடவே இல்ல.. எனக்கு பசிக்குது..” என்றான் பாவமாய்.
பாத்ரூம் போய் உடைமாற்றி வரலாம் என நினைத்து தன்னை சுற்றியிருந்த போர்வையை இறுகப்பற்றி எழப்பார்த்தவள் அதிர்ச்சியில் உறைந்தவளாய் மீண்டும் கட்டிலிலேயே தலைகவிழ்ந்து படுக்க..
சிரிப்போடு.. ‘சாப்பாடு தரமாட்டியா..?” என்றான்.
Advertisement
‘போங்க.. எதுக்கு இப்படி செய்திங்க..?” என்றவளின் முகம் கோவைப்பழமாய் சிவக்க..
‘நான்தான கழட்டினேன்..? அப்போ நான்தான போட்டுவிடனும்..” என்று சூர்யா நியாயம் பேச..
‘நான் இதா போட்டிருந்தேன்..?” என்று சிணுங்க..
தான் போட்டுவிட்டது கூட தெரியாத அளவிற்க்கு என்மேல் மயக்கத்தில் இருந்தாயா என கர்வமாய் நினைத்தவன்.. ‘எனக்கு இதுதான் போட்டு விட தெரியும்.. பிடிக்கலன்னா கழட்டிகொடு..” என்றான் பொய்யான முறைப்போடு.
‘உங்களை..” என்று திலகவதி கண்களை சுழற்ற.. அவள் மீதிருந்த போர்வையை உருவியவன்..
‘எனக்கு பசிச்சது.. எழனும்னா லைட்டை போடனும்.. நீ வேற..” என்று மனைவியை கீழிருந்து மேல் பார்வையால் விழுங்கியபடி சூர்யா இழுக்க.. தான் இருந்த நிலையில் அவனின் முகம் காண முடியாமல் போகவே.. கணவன் அணிவித்த டிசர்ட்டோடும் சாட்சோடும் பாய்ந்தோடினாள் பாத்ரூமிற்க்கு.
சிரிப்போடு கிச்சன் சென்றவன் இருவருக்கும் ஒரே தட்டில் இட்லியை போட்டு எடுத்துவர.. அங்கு தன் மனையாளை காணவில்லை.. குளியலறையிலிருந்து தண்ணீர் சத்தம் கேட்கவும்..
‘ஏய்.. குளிச்சிட்டிருக்கியா…?” என்றான் சலிப்பாக.
சூர்யாவின் கேள்விக்கு பதிலளிக்காமல் பத்து நிமிடம் கழித்து.. ‘கொஞ்சம் வெளில போங்க..” என்றாள்.
‘அதெல்லாம் முடியாது..” என்றவன்.. கபோர்டில் இருந்து அனைத்தும் கலைத்து இறுதியில் ஒரு நைட்டியை கையிலெடுத்தவன்.. ‘கதவை திற திலகா..” என்றான்.
‘நான் டிரெஸ் போடனும்.. நீங்க வெளில போனாதான் நான் வருவேன்..” என்று பதிலளிக்க..
‘இந்த கதவுல வெளிலயிருந்து திறக்கிற மாதிரி ஒரு டிரிக்ஸ் இருக்கு.. நீயா திறந்தினா உனக்கு டிரெஸ் கொடுத்திட்டு அமைதியா இருப்பேன்.. இல்ல இந்த டிரெஸ்சையும் கொடுக்காம இங்கயிருந்தே கதவை திறந்திடுவேன்..” என்று சிரிப்பை உள்ளடக்கி மிரட்ட..
மெல்ல கதவை திறந்தவள்.. தனது ஒரு கையை மட்டும் வெளியே நீட்ட.. அவளின் கையில் நைட்டியை திணித்தவன்.. ‘சீக்கிரம்..” என்று கட்டிலில் வந்தமர்ந்தான்.
‘அச்சோ.. நான் நைட்டியெல்லாம் போட்டதே இல்ல.. சுடிதார் எடுத்து கொடுங்க..” என்று கெஞ்ச..
‘நீ சரிபட்டு வரமாட்டியாட்டங்குது.. நான் கதவை திறக்கிறேன்..” என்று தாழ்பாளை உருட்ட.. ‘வேணாம்.. வேணாம் திறந்துடாதிங்க..” என்று அவசரமாய் நைட்டி போட்டவள்.. ஷப்பா.. இவன் கதவைத்திறக்கறதுக்குள்ள நைட்டி போட்டுட்டோம்.. என ஆசுவாசப்பட்டு மெல்ல வெளியே வந்தாள்.
இன்றுதான் அவளை நைட்டியில் ரசனையோடு பார்க்கிறான்.. எப்பொழுதும் அவளின் கழுத்தை சுற்றியிருக்கும் துப்பட்டா இன்று காணாமல் போயிருக்க.. மனம் தாறுமாறாய் துடிக்க.. ஒரு வழியாக முயன்று அதற்கு கடிவாளமிட்டவன்.. எதுவும் சொல்லாமல் சாப்பிட உக்கார்ந்தான்.
இவள் கபோர்டில் எதையோ தேட.. அவளை அணைத்தவன் ‘இன்னுமென்ன..?” என்றான் கிசுகிசுப்பாக.
‘பா.. பாவாடை போடனும்.. விடுங்க..” என்று திணற..
‘அதெல்லாம் அப்புறம் போட்டுக்கலாம் வா..” என்று அவளை அணைத்தவாறே நடந்துவந்து கட்டிலில் அமர்ந்தவன்.. டிபனை காண்பிக்க..
மேலும் கீழும் என இழுத்துவிட்ட படியே திலகவதி பரிமாற.. இருவரும் சாப்பிட்டு முடிக்க.. தானே பாத்திரங்களை எடுத்து கிச்சனில் வைத்து வந்தவன்..
‘ஒரு வாரமா எனக்கு தண்ணிகாட்டிட்ட..” என்றான் கொஞ்சம் கோபமாக.
இவள் புரியாமல் பார்க்க.. ‘உன்னை கல்யாணம் செய்யும்போது எப்படியாவது உன்னை சரிசெய்யனும்னு மட்டும்தான் யோசிச்சேன்.. இப்படி எண்ணமெல்லாம் இல்லவே இல்ல.. அன்னைக்கு பார்ட்டிக்கு போய் வந்தன்னைக்கு.. என் சந்தோசத்துக்காக கடுமையான தண்டனைன்னிங்க..? அவ்ளோதானான்னு கேட்டியே.. நிஜமா அன்னைக்குதான் முதல்முறையா உன்னைவிட்டு விலகியிருக்க நான் ரொம்ப சிரமப்பட்டுட்டேன்..” என்று சூர்யா தாபக்குரலில் சொல்ல..
தவிப்பாய் தன் கணவன் முகம் பார்த்தவள்.. ‘ஏங்க.. அப்போ.. அன்னைக்கே..” என சொல்லி மீதியை முடிக்கமுடியாமல் தடுமாற..
‘அன்னைக்கே நான் கட்டாயப்படுத்தியிருந்;தா.. நீ எதுவும் மறுக்கமாட்டன்னு எனக்கு நல்லாவே தெரியும்..‚ தாம்பத்யம்.. எனக்கானதா இல்லாம நமக்கானதா இருக்கனும்..‚ அதனாலதான் ரொம்ப கஷ்டப்பட்டு அமைதியா இருந்துட்டேன். இன்னைக்கு கூட உன் கண்ல பயத்தை பார்த்ததும் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சி.. என்னாலதான் பொறுமை காக்க முடியலை.. நானும் மனுசன்தானே..?” என்றான் காதலோடு.
கணவனின் பேச்சில் நிலவின் பிரகாசத்தில் மின்னும் பொன்மேனியாய் ஜொலித்த மனைவியின் வெக்கம் கணவன் மீதான நேசத்தை உணர்த்த.. மீண்டும் திலகவதியை நாடத் துடித்த மனதை அடக்க வழிதெரியாமல்..
‘உனக்கொன்னும் கஷ்டமா இல்லையே..?” என்றான் முற்றிலும் தணியாத தாபத்தோடு.
‘ம்கூம்..” என்று சொல்லி.. சூர்யாவின் மார்பினில் முகம் புதைக்க..
‘யானைப் பசிக்கு சோளப்பொறிதான் கிடைச்சது..” என்று அத்தனை ஏக்கத்தோடு சூர்யா சொல்ல..
‘என்ன..?” என்று இவள் இயன்றவரை தன் கண்களை அகல விரிக்க..
‘கொஞ்சம் முன்ன நடந்தது நமக்காக.. இப்போ எனக்கே எனக்காக.. ப்ளீஸ்..” என சூர்யா கெஞ்ச.. மிரண்டாலும் கணவனுக்கு பெரிதாய் எதிர்ப்பு காட்டமுடியாமல் போக.. அன்றைய இரவின் நீளம் மிகச்சிறிதாய் தோன்றியது சூர்யாவிற்கு.
திலகவதி கண்விழிக்க.. நேரம் ஒன்பதை காட்டியது. சூர்யா நன்றாக தூங்கிக்கொண்டிருக்க.. குளித்து வந்தவள் கதவைத்திறக்க.. அங்கு வாசலில் காத்திருந்தார் முத்து.
‘கொஞ்சம் வேலையிருந்துச்சி பாப்பா.. அதான் வரலேட்டாகிடுச்சி..” என்றார்.
நல்லவேளை லேட்டா வந்தார் என நிம்மதியோடு முத்துவிடம் டீ யை வாங்கிக்கொண்டவள்.. ஆதவனின் ரூமிற்குள் புகுந்து கொண்டாள்.
சூர்யாவின் கைப்பேசி அவனை எழுப்பிவிட.. எழுந்து முதலில் திலகவதியைத்தான் தேடினான். காணவில்லை என்றதும்.. குளித்து வெளியே வந்தவன்.. ஹாலில் அமர்ந்து டி.வி.யை ஆன்செய்ய.. முத்து கா‡பியோடு வரவும்.. அதை வாங்கி பருகிக்கொண்டிருந்தவனுக்கு திலகவதியின் பேச்சு சத்தம் கேட்கவும்..
கண்களை சுழல விட்டவன்.. ஆதவன் அறை நோக்கி போனான். அங்கே திலகவதி தன் அத்தையோடும்.. கீர்த்தியோடும் பேசிக்கொண்டிருந்தாள். அவள் பின்னால் போய் நின்றான்.
‘நல்லா இருக்கியா சூர்யா.?” என்று கீர்த்தி கேட்டதற்கு பிறகுதான் சூர்யாவைப் பார்த்தாள் திலகவதி.
‘ம்ம்.. பாருங்கண்ணி.. சூப்பரா இருக்கேன்.” என்று தன் உடலை சுழற்றி சுழற்றி காட்டிய சூர்யாவின் முகத்தில் அத்தனை சந்தோசம் குடிகொண்டிருக்க.. உடனே திலகவதியை பார்த்தாள் கீர்த்தி. திலகவதியின் முகத்திலும் காணப்பட்ட புதுப்பொலிவு.. கீர்த்திக்கு அனைத்தையும் விளக்கியது. அரைமணிநேரம் வரை பேசி முடித்ததும்..
‘ம்ம்.. நீயே கால்பண்ண கத்துகிட்ட போல..” என்றான் தன்னவளை அணைத்துக்கொண்டபடி.
திலகவதியிடம் பேச்சில்லை.. முகத்தில் வெக்கம் இருந்தபோதும்.. என்னவோ சூர்யாவை கடவுளைப் பார்ப்பது போல் பார்த்திருந்தாள். அவளின் பார்வையிலேயே உணர்ந்து கொண்டான் அவளின் எண்ணத்தை. அவளாக பேசும்முன் தானே ஆரம்பித்தான்..
‘நீ உள்பட எல்லாரும் நான் உனக்கு வாழ்க்கை கொடுத்ததா நினைச்சிட்டிருக்காங்க.. ஆனா உண்மை அதுயில்ல.. பொதுவாவே சின்ன வயசிலயிருந்தே எனக்கு ஒரு விசயம் பிடிக்கலைன்னா.. அது எப்பவுமே பிடிக்காமதான் போய்டும்.. எனக்கு ரொம்ப பிடிச்ச உன்னை விட்டுட்டு மனசுக்கு பிடிக்காம வேற யாரையாவது நான் கல்யாணம் செய்திருந்தா.. கண்டிப்பா என்னால சந்தோசமா வாழ்ந்திருக்கவே முடியாது.
ஆனா.. என்னோட சேர்த்து எல்லாரோட வற்புறுத்தல்ல என்னை கல்யாணம் செய்துகிட்டு.. என்னை பிடிக்கலைன்னாலும் என் சந்தோசத்துக்காக உன்னை நீ மாத்திகிட்டு.. நீதான் எனக்கு வாழ்க்கை கொடுத்திருக்க..‚” என்று உள்ளார்ந்து சொன்னான்.
‘ஆமாமா நீங்க வாழ்க்கையில்லாம இருந்திங்க.. நான் வாழ்க்கை கொடுத்திருக்கேன்..” என்று முனுமுனுத்தாள் உரிமையாக.
‘ஏய்.. எதுவாயிருந்தாலும் சத்தமா சொல்லுடி..” என்று திலகாவை தன்புறம் திருப்பவும்.. அவள் கண்கள் கலங்கியிருந்ததை கண்டு பதறியவன்.. ‘என்னாச்சி..?” என்றான்.
‘நீங்க பயப்படாதிங்க இது ஆனந்த கண்ணீர்.. மத்தவங்க பார்வையில இருந்து என்னை காப்பாத்தத்தான் எங்கம்மா எனக்கு சின்னவயசிலயே கல்யாணம் செய்து வச்சாங்க.. கொஞ்ச நாள்லையே அந்த வாழ்க்கை இல்லன்னு ஆனதுக்கப்புறம் எங்கம்மா ரொம்ப நொடிஞ்சிப்போய்ட்டாங்க.. உனக்கு மட்டும் ஏண்டி இப்படி கடல் அலை மாதிரி.. ஓயாத துன்பம் வந்திட்டே இருக்குன்னு என்னை நினைச்சி நினைச்சி எங்கம்மா தினமும் அழுவாங்க..
நீங்க என்னை கல்யாணம் செய்துகிட்டதுக்கப்புறம்தான் எங்கம்மாக்கு நிம்மதியாச்சி.. போனவாரம்கூட.. உனக்கு இப்படியொரு நல்ல வாழ்க்கையை கொடுக்கத்தான் கடவுள் உன்னை ரொம்ப சோதிச்சிட்டாராட்டங்குது.. உன்னோட துன்ப அலை ஓய்ஞ்சிடுச்சின்னு ரொம்ப சந்தோசமா சொன்னாங்க.. இதுல நான் உங்களுக்கு வாழ்க்கை கொடுத்தேன்னு நீங்க என்னை சொல்றிங்க..‚ என்னை சந்தோசப்படுத்ததான இப்படி சொல்றிங்க..?” என்று கண்கலங்கினாள்.
‘நான் உண்மையைத்தான் சொன்னேன்..‚ ஆதவன் ஒரு வருசத்துக்கு முன்னாடியே… இப்பதான் உன் மனசில உண்மையான காதல் துளிர்த்திருக்கு.. இன்னும் கொஞ்ச நாள்ல அது அழகான மலரா மலரும்ன்னு சொன்னான். அவன் சொன்னதுபோலவே நடந்திடுச்சி..” என்றவன்..
எல்லா பூவும் பறிச்சவன் கையிலயே மலருறது இல்ல.. அதுக்கான நேரங்காலம் வரும்போதுதான் மலரும் என மனதில் நினைத்தவன்.. ‘நீ எனக்காகவே பூத்த மலர்.. இப்ப ரொம்ப அழகா பூத்து என் கைக்குள்ள இருக்க.. என் உயிர் இருக்கும்வரை இந்த மலரை வாட விடவே மாட்டேன்… உங்கம்மா சொன்ன மாதிரி உன்னோட துன்ப அலை ஓய்ஞ்சிடுச்சி.. என் பொண்டாட்டி என்னை முழுமனதா ஏத்துக்கிட்டதால என்னோட துன்பமும் காணாம போய்டுச்சி.. இனி நம் வாழ்க்கையில இன்ப அலைதான்..” என்று சேர்த்தணைக்க.. விருப்பத்தோடு அவனுள் அடங்கினாள் திலகவதி.
