Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

உனக்கென இருப்பேன்-24

உனக்கென இருக்கேன்-24

ஆன்ட்டிஇது என்ன ரசம் ?

தக்காளி ரசம்….சிரித்துக் கொண்டே இன்னும் ஊற்றினார் மஞ்சளா .

  தக்காளி ரசம் சான்ஸே இல்லை . எங்கம்மா இதெல்லாம் செய்ததே இல்லை …உறிந்து குடித்தாள் .



Advertisement

எப்படி வைக்கிறதுன்னு எனக்கு சொல்லி கொடுங்க ப்ளீஸ் ! 

சிலாகித்து சாப்பிடும் அவளை வாஞ்சையுடன் பார்த்தார் மஞ்சுளா 

சிரிப்பை அடக்கிக் கொண்டே சாப்பிட்டான் சரவணன் .

Advertisement

ஆன்ட்டி கீரைக்கு மிளகாய் வத்தல் போட்டீங்களா ? எங்கம்மா பச்சை மிளகாய் தான் கீறி போடுவாங்க.

Advertisement

இது அரிசி அப்பளமா ? இவ்வளவு பெருசா இருக்கு ! நீங்க பண்ணினதா ?

இந்த பெண்ணுக்கு வாயே ஒயாதா ? சிரித்துக் கொண்டான் சரவணன் .

தொணதொணவென்று பேசிக் கொண்டே சாப்பிடுபவளை சிரிப்புடன் அவன் ஓரவிழியில் பார்க்க …. மகனை முறைத்து அடக்கினார் மஞ்சுளா .

Advertisement

இப்படி பேசிக்கிட்டே சாப்பிட்டா எவ்வளவு சாப்பிடறோம்னு அளவு தெரியாம போயிடும் ! குபீர் என்று பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

டேய் உன் காலடி மண்ணை எடுத்து சுத்தி தான் போடணும் ! பிள்ளை சாப்பிடறதை கண்னு வைக்கிற ….அதட்டினார் 

பிள்ளை ஒழுங்கா சாப்பிடல …கொஞ்சம் பருப்பும் நெய்யும் சேர்த்து இடுப்பில் வைத்து ஊட்டி விடுங்க என்று சிரித்துக் கொண்டே கைகழுவ போனான் .

ஆண்ட்டி பாருங்க ! அவள் வெட்கத்தில் சிணுங்கினாள் .

அவன் கிடக்குறான்….நீ கொஞ்சம் தயிர் போட்டுக்கோம்மா … உருகி விட்டார் .

ம்மா ,,,குழந்தை குண்டான சோத்தை காலி பண்னண போகுது ! போய் இன்னொரு ஒரு உலை வைங்க உங்களுக்கு சோறு வடிக்கணுமே ….அவள் கண்ணை பார்த்து அப்படி கலாய்த்தான் .

ஹலோ ஆன்ட்டி எனக்காக ஆசையாய் சமைத்தது ….வேஸ்டட்டா போயிடக்கூடாதுன்னு கஷ்டப்பட்டு சாப்பிடறேன் !

அப்படிங்களா மேடம் ….ஆண்டிக்கு நல்லா ஹெல்ப் பண்ணுங்க  !

டேய் உனக்கு நேரமாகலையா ? கிளம்பு இங்கிருந்து …..சிரிப்புடன் விரட்டினார்.

சரவணன் எந்த பெண்ணிடமும் இப்படி உரிமையாய் சீண்டி பேசியதில்லை.

மஞ்சுளாவுக்கு மகன் நகை முகம் கண்டு அவ்வளவு ஆனந்தமாக இருந்தது .அவன் கலகல ரகம் இல்லை கொஞ்சம் அழுத்தமான ஆள். ஏதோ ஒரு நினைப்பு சடுதியில் அவருக்குள் ஒடி மறைந்தது .

“…………………..”

ரெடியா பீச்சுக்கு போகலாமா ?

ம்ம்ம்ம் நாங்க ரெடி…..ஷாலை பின் பண்ணிக் கொண்டு வந்து நின்றாள் அச்சு .

மஞ்சுமா சரவணன் கூட வராங்க ? என்று உடை மாற்ற சென்றான் .

அனைவரும் காரில் கிளமினார்கள் .

தேவனாம்பட்டினம் சில்வர் பீச் …..

சரவணன் குழந்தையோடு அலையில் கால் நனைத்து கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தான். அக்ஷ்யா மணலில் வீடு கட்டிக் கொண்டிருந்தாள்.

காலாற நடந்து வருவதாக மஞ்சுமா நடக்காத தொடங்கிவிட்டார் .

அஸ்வின் அருகில் கீர்த்தி நின்று கொண்டிருந்தாள் .

ஏன் நீ அலையில் விளையாடலையா ?

எனக்கு அலைனா பயம் …..அவள் கண்களை மூடினாள் .

நான் இருக்கேன் வா ! அவள் கரம் பற்றினான் .

ஐயோ வேண்டாம் ….கையை உருவிக் கொண்டு ஓட முயன்றாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!