Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Intersteller Love

Vinto’s Interstellar Kaadhal Episode 24

அத்தியாயம் – 24

 

நந்தினிக்குத் தலை மிகவும் பாரமாக இருப்பதைப் போல உணர்ந்தாள். மெல்ல சுயநினைவுக்கு வந்தவள், எழுந்து அமர்ந்தாள். தன்னை சுற்றிப் பார்க்க, ஏதோ ஒரு பனிப் பிரதேசத்தில் இருப்பதைக் கண்டாள். அந்த இடம் முழுவதும் பனியால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

மெல்ல மெல்ல அவளுக்கு அப்போது தான் சற்று முன் நடந்தது அனைத்தும் வரிசையாக ஞாபகம் வந்தது. வேகமாக எழுந்து ஆரியனையும் ஆதியையும் தேடினாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் தெரியாமல் போக, வேறு எங்காவது தேடிப் பார்க்கலாம் என்று தோன்ற நடக்கத் தொடங்கினாள்.



Advertisement

அவள் முதல் அடி எடுத்து வைப்பதற்குள், ஏதோ ஒரு பொருள் தடுக்கிக் கீழே விழுந்தாள். தன்னை எது தடுக்கி விட்டது என்று பார்த்தவள் அதிர்ந்தாள். அந்தப் பனி மழையால் உருவான சிறு பனிமலையில் ஆதி உறைந்து கிடந்தான். அதேபோல சற்று தூரம் தள்ளி ஆரியும் புதைந்து கிடந்தான்.

Advertisement

நந்தினி வேக வேகமாக அந்தப் பனியை ஒதுக்கி விட்டு, மற்ற இருவரையும் வெளியில் இழுத்துப் போட்டாள். அவர்கள் இருவரது உடலும் விறைத்திருக்க, “Rigor Mortisஆக ( மனிதன் இறந்த பிறகு அவன் உடலில் ஏற்படும் விறைப்பு) இருக்குமோ ?” என்று பயந்தாள்.

Advertisement

மறுபடியும் அவர்களது நாடித்துடிப்பைப் பரிசோதிக்க, அது அவர்களது உயிரற்ற நிலையையே பறைசாற்றியது. நந்தினியின் மனதிலிருந்த ஒரு துளி பயம், வெள்ளமாக மாற ஆரம்பிக்க, அதே நேரம் அங்கு இருந்த ஒரு பனிக்கட்டி உருவம் பெற்று பேசத் தொடங்கியது.

 “எனது பெயர் க்ரோனன். என்னுடைய கிரகத்தைக் கண்டறிந்து வந்து என்னுடைய கட்டத்தை வென்று விட்டீர்கள். ஆனால், உங்கள் அனைவராலும் அதை வெல்ல முடியவில்லை. மனதளவில் பலவீனமாக இருப்பவர்களால் அதை வெல்ல முடியாது. அது அவர்களது மரணத்திற்கு வழிகோலும். ஆனால் இந்தக் கட்டத்தை ஒருவர் வென்று விட்டதால், உங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. அதை எனது நண்பன் மெட்லடன் கூறுவான். இப்போதைக்கு இறந்தவர்களை உயிர்ப்பிப்பது உங்கள் கையில் தான் உள்ளதுஎன்று கூறி விட்டு அந்த இடத்திலிருந்து மாயமானது.

Advertisement

நந்தினி உடனே தன் கையைப் பார்க்க, அதில் எந்த வேறுபாடும் தெரியவில்லை. சிறிது நேரம் நந்தினிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. பின்னர் அவளுக்கு, ‘Reveal yourself’ என்ற வாசகம் ஞாபகம் வர, ஆதியின் அருகே சென்று நின்றாள். தன்னை முழுமனதுடன் கிரிசான்டாவாக நினைத்துக் கொண்டு, ஆதியின் நெற்றியைத் தொட்டாள்.

 சில நொடிகளில் ஆதித்யன் படாரென எழுந்து அமர்ந்தான். அவன் கண்களிலிருந்த மிரட்சி மாறாமல் இருக்க, நந்தினி அதே முறையைப் பின்பற்றி ஆரியனை எழுப்பினாள். அவனும் எழுந்து பேயறைந்தது போல அமர்ந்திருந்தான்.

 அவர்கள் ஏதும் பேசாததைக் கண்டு, நந்தினி குழம்பினாள். இருவரது முகத்தின் முன்பும் கையை ஆட்டினாள். அவர்கள் முகத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

என்ன செய்வது என்று யோசித்து கொண்டு, நந்தினி எழுந்து நிற்க, மற்ற இருவரும் அவளுடன் எழுந்து நின்றனர். அதைக் கண்ட நந்தினிக்கு சந்தேகம் வந்து, இரண்டு அடிகள் நடக்க, அவர்களும் உடன் நடந்தனர்.

 அப்போது தான் நந்தினிக்கு அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்று புரிந்தது. இப்போது துயரப்பட்டு நேரத்தை வீணடிப்பதை விட, அவர்களைக் காப்பாற்றுவது தான் முக்கியம் என்று தோன்ற மெல்ல நடக்கத் தொடங்கினாள்.

வெகு தூரத்தில் ஒரு பெரிய மலை தெரிய, அதை நோக்கிச் சென்றாள் நந்தினி. ஆதியும், ஆரியனும் சுயநினைவு இல்லாமல் நந்தினியை பின்தொடர்ந்தனர். அதைக் கண்டு நந்தினிக்கு மேலும் வைராக்கியம் உருவாக, விரைந்து தனது இலக்கை நோக்கிச் சென்றாள். அங்கு நடந்த அனைத்தையும் இரு கண்கள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன.

நந்தினி அந்த மலையை நெருங்க நெருங்க தான் அது ஒரு பிரம்மாண்டமான கோட்டையாகக் காட்சியளிக்கத் தொடங்கியது. ஆனால், மற்ற கோட்டைகளுக்கும் இதற்கும் ஒரு வித்தியாசம் தென்பட்டது.

இதுவரை பார்த்த அனைத்துக் கோட்டைகளும் புதுமையாகவும் பிரம்மாண்டமாகவும் இருக்க, இது மட்டும் பாழடைந்து காணப்பட்டது. ஆனால், இதில் ஏதோ ஒரு மர்மமான விஷயம் இருப்பது போலத் தோன்றியது அவளுக்கு.

என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற தைரியத்துடன், நந்தினி அந்தக் கோட்டைக்குள் நுழைந்தாள். அவளுடன் செல்வது தான் தங்கள் வாழ்க்கையின் முக்கிய கடமை என்பது போல் நடந்து கொண்டிருந்தனர் ஆரியனும், ஆதியும்.

அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் கோட்டையின் கதவுகள் மூடிக் கொண்டன. அங்கு இருந்த இருளை கிழித்துக் கொண்டு, தீப்பந்தங்கள் போல் இருந்த அக்னி ஜுவாலைகள் ஒளி வீசின.

 அந்தப் பாதையிலேயே தொடர்ந்து நடந்தவளுக்கு வியப்பு ஏற்பட்டது. வழி நெடுகிலும் காளான்கள் போன்ற குடை அணிந்த தாவரங்கள் இருந்தன. எவ்வளவு தூரம் நடந்தாளோ தெரியவில்லை, ஏதோ தவறு செய்துவிட்டது போல் தோன்ற, பின்னால் திரும்பிப் பார்த்தாள். அங்கு ஆரியும் ஆதியும் இல்லை.

அப்போது அவள் உடலை மின்சாரம் தாக்கியது போல உணர்ந்தவள், மறுபடியும் வந்த வழியே நடந்து சென்று பார்த்தாள்.

அவர்கள் அங்கும் இல்லாததைக் கண்டு மனதளவில் வெறுமையாக உணர்ந்தாள். ‘Believe your friends என்ற வரி ஞாபகம் வர, ‘ஒருவேளை இதுவும் நம்மைச் சோதிப்பதற்காக வைக்கப்படும் ஒரு போட்டியாக இருக்குமோ?’ என்று தோன்றியது நந்தினிக்கு.

அந்த எண்ணம் வலுப்பட, அவள் மறுபடியும் பழைய இலக்கை நோக்கி தன் பயணத்தைத் தொடர்ந்தாள்.

இறுதியில் ஒரு பெரிய மைதானம் போன்ற ஓர் இடத்தை அடைந்தாள். அந்த இடத்தில் குளிர் இன்னும் அதிகமாக இருக்க, நந்தினி தன் கைகளை இறுக்கிக் கொண்டாள். அந்த அரங்கத்தின் நடுவே ஒரு சிலை இருப்பது போல் தெரிந்தது. உடனே வேக எட்டுகளை எடுத்து வைத்து, அந்தச் சிலைக்கு அருகில் சென்றாள்.

அங்கிருந்து சிறிது தூரத்தில் ஆரியனும் ஆதியும் படுத்துக் கிடந்தனர். அவர்களைக் கண்டதும் நந்தினி அவர்களை நோக்கிச் செல்ல ஓர் அடி எடுத்து வைக்க, அந்தச் சிலை உயிர் பெற்று எழுந்தது.

 மற்ற சிற்றரசர்களைப் போல அல்லாமல், அவரிடம் ஒரு தனி தேஜஸ் தென்பட்டது. அந்தச் சிற்றரசர் மெல்ல தனது கயா கிரக மொழியில், “எனது பெயர் மெட்லடன். என் நண்பன் க்ரோனனின் பாதுகாப்பு வளையத்தை உடைத்து வந்தவர்களுக்கு என் பாராட்டுகள் ! ஆனால் என்னால் இரண்டு ஆன்மாக்கள் தங்கள் கூடுகளில் இருந்து விடுபட முயல்வதை உணர முடிகின்றதுஎன்றார்.

அதில் நந்தினியின் முகம் பயரேகையை அப்பிக் கொள்ள, மெட்லடன் தொடர்ந்தார். “அவர்களைப் பழைய நிலைக்கு மாற்றுவதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறதுஎன்று கூறும் போது, அங்கே முப்பத்து இரண்டு கலசங்கள் தோன்றின. மிகவும் அழகான வேலைப்பாடுகளுடன் காட்சியளித்தன அவை.

 “இந்த முப்பத்து இரண்டு கலசங்களில் ஒரே ஒரு கலசத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களைக் குணமாக்கும் மருந்து உள்ளது. மீதமுள்ள முப்பத்து ஒன்று கலசங்களிலும் வெறும் திரவம் தான் இருக்கும்என்று கூறிய போது, அங்கு ஐந்து உயிரினங்கள் தோன்றின. பார்ப்பதற்குப் பூனை போல இருந்தாலும், அவற்றின் உடல் கட்டமைப்பு வித்தியாசமாக இருந்தது. ஆனால், அந்த உயிரினங்களும் எந்த அசைவும் இல்லாமல் படுத்துக் கிடந்தன.

 மெட்லடன், “அந்த மருந்து எந்தக் கலசத்தில் இருக்கும் என்பதை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும்அங்கு பக்கத்திலிருந்த மணல் கடிகாரத்தைக் காட்டி,

இந்த உயிரினங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை தான். அதனால் இவற்றை உபயோகப் படுத்தி உங்களது சோதனையை நடத்திக் கொள்ளலாம். உங்களது நண்பர்கள் இன்னும் மூன்று நிமிடங்களுக்குத் தான் உயிரோடு இருப்பார்கள். அந்த மருந்து வேலை செய்கிறதா என்று தெரிந்து கொள்வதற்கு உனக்கு இரண்டு நிமிடங்கள் தேவைப்படும். அதனால், நீ இந்த கடிகாரம் முதல் முறை திரும்புவதற்குள், உனது சோதனைகளை முடித்துக் கொள்ள வேண்டும். சரியாக மூன்றாம் முறை திரும்பும் போது, உன் நண்பர்கள் அந்த மருந்தை உட்கொள்ளவில்லை என்றால், இறந்து விடுவார்கள். விரைவாகச் செயல்படு. அதற்கு முன் உன்னை முழுமையாக நம்பு. அடுத்த கட்டத்திற்கான பார்ச்மென்ட் இந்தக் கோட்டையின் வாயிலில் இருக்கிறதுஎன்று கூறி விட்டு மறுபடியும் சிலையாக மாறினார் மெட்லடன்.

               

அவர் கடைசி வாக்கியத்தைக் கூறிய போது, அவர் முகத்தில் ஏதோ குறுநகை தோன்றியது போல உணர்ந்தாள் நந்தினி. கடிகாரத்தில் மண் துகள்கள் சரிய ஆரம்பிக்க, அவள் பதற்றமடைந்தாள்.

 “முப்பத்து இரண்டு கலசங்கள் இருக்கு. இதுல ஒரே ஒரு கலசத்தில் தான் மருந்து இருக்கு. இதுல எது சரியானது என்று கண்டு பிடிக்கிறதுக்கு ஏதாவது ஒரு வழி யோசிப்போம்என்று நினைத்தவள்,

 அந்தக் கலசங்களை ஐந்து பிரிவாகப் பிரித்து, மூன்று விலங்குகளுக்கு தலா ஆறு கலசங்களையும், இரண்டு விலங்குகளுக்கு தலா ஏழு கலசங்களையும் கொடுத்தால், எந்தப் பிரிவில் மருந்து இருந்தாலும், ஏதாவது ஒரு விலங்கு பிழைத்து விடும். அந்த விலங்குக்குக் கொடுக்கப்பட்ட பிரிவில் இருக்கும் கலசங்களை, மீதமிருக்கும் விலங்குகளுக்குக் கொடுத்தால், எந்தக் கலசத்தில் மருந்து இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து விடலாம். ஆனால், இரண்டு முறை சோதனை செய்வதற்குக் குறைந்தது 5 (1+2+2) நிமிடங்கள் ஆகுமே. அதற்குள் ஆதியும் ஆரியனும் இறந்து விடுவார்கள் என்று நினைத்தவள், அந்தத் திட்டத்தை ஒதுக்கினாள்.

 அதற்குள் அந்தக் கடிகாரத்தில் கால்வாசி துகள்கள் கீழே சரிந்து விட்டன. அவள் ஒவ்வொரு யுக்தியாகக் கண்டுபிடித்து, அவளே அதை ஒதுக்கினாள்.

 திடீரென்று அவள் மனதில், “ஏன் இங்குச் சரியாக ஐந்து விலங்குகள் இருக்க வேண்டும் ? அதே போல் ஏன் முப்பத்து இரண்டு கலசங்கள் இருக்க வேண்டும் ? இது இரண்டுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா ?” என்ற கேள்வி எழுந்தது.

அவள் யோசித்ததில், “இந்தக் கலசங்களில் இருக்கும் திரவத்தைக் குடித்தால், ஒன்று வாழலாம் இல்லை என்றால் இறப்பது நிச்சயம். அதாவது இரண்டு பாசிபிளிடீஸ் இருக்கின்றனஎன்று தோன்றியது.

அவள் எண்ண அலைகளில் இரண்டு, ஐந்து மற்றும் முப்பத்து இரண்டு முதலிய எண்கள் மிதக்க, அவளுக்கு அவள் தேடிய விடை கிடைத்தது. ( 2^5= 32)

 “அப்படியென்றால் இந்த இடத்தில் எல்லா பொருட்களுக்கும் ஒரு காரண காரியம் இருக்கு. ரெண்டு பாசிபிளிடீஸ்ரெண்டு பாசிபிளிடீஸ் …” என்று உச்சரித்தவள்,

 “இரவுபகல், ஆண்பெண், நகம்சதை, On – Offஎன்று தோன்ற தொடங்கி, “0-1” என்ற இடத்தில் வந்து நின்றாள்.

உடனே அவள் முகத்தில் பிரகாசம் தோன்றியது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த பின், அவள் அந்தக் கடிகாரத்தைப் பார்த்தாள். பாதி அளவு மண் துகள்கள் காலியாகி இருக்க, தனது திட்டத்தை விரைந்து செயல்படுத்தத் தொடங்கினாள்.

 ஒவ்வொரு கலசமாக எடுத்து வந்து சில விலங்குகளுக்கு கொடுத்தாள்; சில விலங்குகளுக்குக் கொடுக்கவில்லை. வேகவேகமாக இதே முறையைப் பின்பற்றி முப்பத்து இரண்டு கலசங்களில் இருந்து நீரையும், சிறிதளவு பயன்படுத்தினாள். அவள் முடிப்பதற்கும் அந்த மணல் கடிகாரம் ஒரு நிமிடம் தீர்ந்ததை உணர்த்துவதற்கு தலைகீழாகத் திரும்பவும் சரியாக இருந்தது.

இன்னும் இரண்டு நிமிடங்கள் காத்திருக்க வேண்டும் என்ற எண்ணமே அவளது பொறுமையைச் சோதித்தது. இதுவரை ஏதோ புதிரை விடுவிப்பது போல ஆர்வமாகச் செய்து விட்டாள். ஆனால், அங்கு உணர்வின்றி கிடந்த ஆதியையும் ஆரியனையும் பார்த்த பின்புதான், அவளுக்குத் தான் செய்திருக்கும் காரியத்தின் ஆழம் புரிந்தது.

தான் மனதில் கணித்த இடங்களில், ஒரு சிறு பிழை நடந்தால் கூட, தான் தன் காதலனையும் நண்பனையும் இழந்து விடுவோம் என்று புரியத் தொடங்க, அவளது பயம் அதிகரித்தது. சுருக்கமாகக் கூறினால், தேர்வு எழுதிய மாணவி முடிவுக்காகக் காத்திருக்கும் மனநிலையில் இருந்தாள் நந்தினி.

 அவள் யோசித்துக் கொண்டிருந்த பொழுது, வேகமாக ஓடிய நேரம் இப்போது ஆமை வேகத்தில் நகர்ந்தது. அவள் போட்டு வைத்திருந்த கணக்கை மறுபடியும் மனதிற்குள் சரி பார்த்தாள். எந்த இடத்திலும் தவறு நடந்தது போல அவளுக்குத் தோன்றவில்லை.

இரண்டாம் நிமிடம் கரைந்ததைப் பறைசாற்றும் விதமாக அந்த மணல் கடிகாரம் தலைகீழாகத் திரும்பியது. உடனே சுறுசுறுப்பானாள் நந்தினி. சற்று தள்ளி இருந்த ஆரியனையும், ஆதியையும் சிலைக்கு அருகில் ஒவ்வொருவராக இழுத்து வந்தாள் .

நந்தினியின் ஒரு மனது, “உன் மீது முதலில் நம்பிக்கை வை என்று மெட்லடன் கூறினார் இல்லையா ? பிறகு ஏன் கவலைப்படுகிறாய் ?” என்றது. மற்றொன்று, “நீ செய்திருக்கும் காரியத்தின் விளைவை ஒருமுறை யோசித்துப் பார்த்தாயா ? இப்போது இரண்டு உயிர்கள் உன் கையில் தான் இருக்கிறது. அதை நினைவில் வைத்துக்கொள்என்று கூறியது.

 இரு மனதுக்கும் இடையில் அல்லாடிய நந்தினி, மூன்றாம் நிமிடம் முடிவடையப் போவதை அந்த மணல் கடிகாரத்தைப் பார்த்துத் தெரிந்து கொண்டாள். அதற்குள் இங்கு ஆரியன் மற்றும் ஆதி இருவரின் உடல்களும் தூக்கிவாரிப் போடத் தொடங்கின. அதைக் கண்டு அவர்களிடம் ஓடிய நந்தினி அவர்களைக் கட்டுப்படுத்த முயன்றாள். ஆனால், அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.

 மூன்று நிமிடங்கள் முடிந்த பிறகு, அந்த இடத்தில் ஒளி வெள்ளம் பாய்ந்தது. அதன் பின்னர் கண்ணைத் திறந்து பார்த்ததில் ஐந்து உயிரினங்களும் உயிர் பெற்றிருந்தன. உடனே நந்தினி வேகமாக அந்தக் கலசங்களிடம் சென்று, முப்பத்து ஒன்றாம் கலசத்தைக் கொண்டு வந்தாள். அதிலிருந்த திரவத்தை மற்ற இருவருக்கும் கொடுத்தாள் .

 அடுத்துக் கழிந்த இரண்டு நிமிடங்களில், அவள் மனம் அங்கும் இங்கும் ஊசலாடியது. அந்த இரண்டு யுகங்கள் போலத் தோன்றிய காலமும் ஒரு கட்டத்தில் முடிவடைய, நந்தினி அவர்கள் இருவரது முகத்தையும் உற்றுப்பார்த்தாள். அவர்கள் உடலில் எந்தவிதமான அசைவும் இல்லாமல் இருக்க, நந்தினி இடிந்து போய் அமர்ந்தாள்.

அவள் எண்ணங்கள் அவளை எங்கெங்கோ கூட்டிக் கொண்டு செல்ல, ஆதி மற்றும் ஆரியனின் முனகல் சத்தம் அவளது எண்ணங்களைத் தடுத்தது. அவள் அவர்களிடம் சென்று பார்க்க, ஆதியும், ஆரியனும் மெல்ல கண் விழித்துப் பார்த்தனர்.

அதில் உயிர் பெற்றவள், “ஆதி.. ஆரி..” என்றழைக்க,

எதிரே இருந்த நந்தினியைப் பார்த்ததும், இருவரும், “சாரி, நந்து. இனிமே உன் கூட நாங்க பேசக்கூட மாட்டோம்என்று கத்தினர்.

அவர்கள் கண்திறந்து பார்த்தவுடன் தன்னை அடையாளம் கண்டு கொண்டதில் மகிழ்ந்தவள், அவர்கள் கூறிய பதிலில், “மறுபடியும் அவர்களுக்கு ஏதாவது ஆகிவிட்டதோ? மருந்து சரியாக வேலை செய்யவில்லையோ?” என்று யோசிக்கத் தொடங்கி விட்டாள்.

அப்போது திடீரென்று அவள் நினைவில் வந்து நின்றார் க்ரோனன்.

இன்னும் அவர்கள் க்ரோனனின் மாய வலையிலிருந்து, வெளியில் வந்ததை உணராமல் இருப்பது புரிந்ததும், “ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு அமைதியா இருக்கீங்களா?” என்று கத்தினாள் நந்தினி. அதில் ஆதியும், ஆரியனும் பயந்து அமைதியாகி விட்டனர்.

 நந்தினி பொறுமையாக, “நாம போன லெவல்ல க்ரோனனோட சோதனைல மாட்டிக்கிட்டோம். நம்ம மனசுல இருந்த சின்ன சின்ன வருத்தங்களை, பெரிது படுத்தி, அதை வச்சு நம்முடைய எண்ணங்களோட விளையாடி இருக்கார். எனக்கும் அது மாதிரி தான் நடந்ததுஎன்று கூறியவள், சற்று நிறுத்தி,

 “அப்படி என்ன நடந்துச்சுன்னு என்கிட்ட எதுவும் கேட்காதீங்க, அது மாதிரி நீங்களும் சொல்ல வேண்டாம். அதை ஒரு கெட்ட கனவா நெனச்சு மறந்துடுவோம். நம்ம ஸ்பேஸ் ஷிப் கடைசியா இருந்தப்ப நடந்தத நினைச்சு பாருங்க, அதுதான் நிஜம்என்றாள்.

 சிறிது நேரம் யோசித்த அவர்களது முகங்கள் தெளிவைக் காட்ட, ஆதி உடனே, “சனா ! உனக்கு எதுவும் ஆகலைல?” என்று பதட்டத்துடன் அவளருகில் வந்தான்.

அவனதுசனாஎன்ற பழைய அழைப்பில் உடனே உற்சாகமாகியது நந்தினிக்கு. ‘இல்லைஎன்பது போலத் தலையசைத்தவள், அவனைப் பாய்ந்து வந்து கட்டிக்கொண்டாள்.

அவர்களின் மோன நிலையைக் கலைக்கும் விதமாக, ஆரியன், “நான் இன்னும் சின்னப் பையன்னு யாரோ சொன்னாங்கஎன்று கூறிவிட்டு இரும, இருவரும் வெட்கத்துடன் விலகிக் கொண்டனர்.

 அதற்குப் பிறகு ஆரியன், “இந்த கிரகத்துல அப்புறம் என்ன நடந்துச்சு நந்து ?” என்று கேட்க,

 நந்தினி அவர்கள் உயிரற்ற நிலையில் கிடந்ததையும், க்ரோனன் மற்றும் மெட்லடன் கூறியதையும் கூறினாள்.

 அதைக் கேட்ட ஆரியன், “அடிப்பாவி ! அப்ப என்னமோ சும்மா ஒரு பேச்சுக்கு சொல்ற மாதிரி, எங்களுக்கு ஏதாச்சும் ஆனால் நான் பொறுப்பில்லனு சொன்னியே ? அதுக்கு இதான் அர்த்தமா ? உன்னைய நம்பி வந்ததுக்கு ?” என்று அவன் கூறி முடிப்பதற்குள்,

 ஆதி, “அதுல எந்த கலசத்துல இருந்துச்சுனு எப்படி கண்டுபிடிச்ச, சனா ?” என்று கேட்டான். அப்போது தான் ஞாபகம் வந்த ஆரியனும், “ஆமா நந்து, எப்படி அந்த மருந்து இருந்த கலசம் முப்பத்து ஒன்னுன்னு நீ கண்டுபிடிச்ச ?” என்று கேட்டான்.

 நந்தினி, “அத இப்பவே சொல்லணுமா? மொதல்ல இந்த கிரகத்தை விட்டுப் போகணும். எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலஎன்று கடைசி வரியைச் சிறிது நடுக்கத்துடனேயே கூறினாள்.

 ஆதி, “என்னால இன்னும் பழைய மாதிரி எந்திரிச்சு நடக்க முடியல, சனா. ஒன்னும் இல்ல, பயப்படாத ! இன்னும் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தா சரியாகிடும்என்று கூற, ஆரியன், “ எனக்கும் அதே பிரச்சனைதான்என்று பின் பாட்டு பாடினான்.

அதில் தன் தலையிலடித்துக் கொண்ட நந்தினி, “சரிசரிசொல்றேன். அதுக்கு ஏன் இவ்வளவு ஆக்டிங் ?” என்று கூற, மற்ற இருவரும் முப்பத்து இரண்டு பல்லும் தெரிகிற அளவிற்குச் சிரித்தனர்.

முதலில் நந்தினி, அந்தக் கலசங்களை ஐந்து பிரிவாக பிரித்து தான் கண்டுபிடிக்கலாம் என்று நினைத்ததையும், அதன் பிறகு அதை ஏன் செயல்படுத்த முடியவில்லை என்பதையும் விளக்கிக் கூறினாள்.

 ஆதி, “அப்ப இதுக்கு எப்படி ஆன்சர் சொல்லமுடியும் ? இரண்டு நிமிஷத்துல எப்படி எந்த கலசத்துல இருக்குனு கண்டுபிடிக்க முடியும் ? இது ஏதோ ஹைபோதெடிகல் (Hypothetical) கொஸ்டின் மாதிரி இருக்குஎன்றான்.

 நந்தினி, “கேள்வினு இருந்தா அதுக்கு பதிலும் இருக்கும், ஆதிஎன்று புன்னகையுடன் கூற,

அதத்தானே உங்கிட்ட மொதலயிருந்து கேட்கிறோம்என்றான் ஆரியன்.

 நந்தினி, “0,1 இந்த ரெண்டு நம்பர் யூஸ் பண்ணி தான், நான் எதுல இருக்கும்னு கண்டுபிடிச்சேன்என்றாள்.

 “என்னது வெறும் 0,1-னா ? இத வச்சு எப்படி ?” என்று கேட்டான் ஆதி.

 நந்தினி, “அந்த வெறும் 0,1- க்கு பின்னாடி பல விஷயங்கள் இருக்கு. பொதுவா நாம உபயோகப்படுத்துற எண் முறை பதின்ம முறை (Decimal system) . அதாவது பூஜ்யத்தில் இருந்து ஒன்பது வரை பயன்படுத்தும் முறை. ஆனா, இதைவிட முக்கியமானது இருமை அமைப்பு (Binary system ). இதுல வெறும் இரண்டே எண்கள் தான் பயன்படுத்துவோம். ஒன்று பூஜ்ஜியம் மற்றொன்று ஒன்று

நாம சேமிக்கிற எல்லா தரவுகளும் இந்த 0,1 முறையில் தான் சேமிக்கப்படுது. இது கண்ணுக்கே தெரியாத ஒரு ராட்சச வலை மாதிரி. இதுல இன்னொரு விஷயம் என்னன்னா, இந்த ரெண்டு அமைப்பு முறைகளையும் ஒன்னுலயிருந்து இன்னொன்னுக்கு மாத்திக்கலாம். இததான் BCD (binary coded decimal)-னு சொல்லுவோம். இப்ப உதாரணத்துக்கு ஒன்பது அப்படின்ற நம்பர பைனரில, 1001-ன்னு சொல்லுவோம். அதேமாதிரி இருபத்தி அஞ்சு அப்டீன்ற நம்பர, பைனரில 11001-ன்னு எழுதலாம்என்றாள்.

                 

ஆரியன், “சரி, நந்து. இதுக்கும் எங்கள காப்பாத்துனதுக்கும் என்ன சம்பந்தம் ? நல்லா தெளிவா குழப்புறஎன்றான்.

 நந்தினி, “சொல்லி முடிக்கிற வரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுடா, எருமஎன்று திட்டியவள் தொடர்ந்து,

இந்த சின்ன விஷயம்தான் நீங்க சொன்ன இம்பாஸிபிள் கேள்விக்கான பதில். கொஞ்சம் கவனமா கேளுங்க. இப்ப முப்பத்து இரண்டு கலசங்கள் இருக்கு. அத ஒண்ணு, ரெண்டு, மூணு, இப்படியே முப்பத்தி ரெண்டு வரைக்கும் நம்பர் போட்டுக்கங்க. அதே மாதிரி அந்த அஞ்சு உயிரினங்கள A, B, C, D, E-னு வச்சிக்குங்க. அப்புறம் அந்த முப்பத்தி ரெண்டு நம்பர்ஸையும் Binary digits- மாத்திக்குங்கஎன்றாள்.

மற்ற இருவரும் சற்று யோசித்துவிட்டு, “ஓகேஅப்புறம்…” என்றனர்.

 “இப்ப இந்த இடத்துல binary system- நமக்கு ஏத்த மாதிரி மாத்திக்க போறோம். அதாவது 0-னா அந்த கலசத்தில் இருக்கிறத குடிக்கக்கூடாது, 1-னா அந்த கலசத்தில் இருக்கிறத குடிக்கணும். ஒவ்வொரு கலசத்துக்கும் ஐந்து இலக்க (5 digit) binary நம்பர் இருக்கும். உதாரணத்துக்கு, ஒன்னோட பைனரி நம்பரும் 1 தான். ஆனா அதை நாம ஐந்து இலக்கமாக மாற்றி 00001 அப்படின்னு ஞாபகம் வெச்சுக்கணும்.

 இப்ப அந்த பைனரில இருக்கிற ஒவ்வொரு டிஜிட்டையும் ஒவ்வொரு விலங்கோட வரிசையா சேர்க்கணும். உதாரணத்துக்கு இப்ப பதின்மூன்றாவது கலசத்தை எடுத்துக்குவோம். அதோட பைனரி நம்பர் 01101 அப்படின்னா அந்த கலசத்துல இருந்து B, C, E விலங்குகள் திரவத்தை குடிக்கும். ஏன்னா அதுங்களோட code 1. அதே சமயம் A ,D விலங்குகள் திரவத்தைக் குடிக்காது. ஏன்னா அதுங்களோட code 0. புரிஞ்சுச்சா?. இதே மாதிரி எல்லா கலசத்துல இருக்குற திரவத்தையும் Binary number-க்கு ஏற்ற மாதிரி அந்தந்த விலங்குகளுக்கு கொடுக்கணும்என்றாள் நந்தினி.

         

ஆதி, “அப்படி இருந்தாலும் எப்படி மருந்து இருக்குற கலசத்தை கண்டுபிடிக்கிறது ?” என்று கேட்டான்.

 “சரி இப்ப ரிவர்ஸ் முறையில் சொல்றேன். அந்த மருந்து பதின்மூன்றாவது கலசத்தில் இருக்குன்னு வச்சுக்குவோம். அப்படின்னா B, C, E விலங்குகள் மட்டும் மருந்து குடிச்சிருக்கும். A, D விலங்குகள் மருந்து குடிச்சிருக்காது. அதனால் B, C, E விலங்குகள் மட்டும் உயிர் பொழச்சுக்கும். மத்த இரண்டு விலங்குகளும் இறந்துடும். ஒவ்வொரு நம்பருக்கும் பைனரி நம்பருன்றது தனித்துவமானது. அப்படின்னா ரெண்டு நிமிஷத்துக்கு அப்புறம் எந்தெந்த விலங்குகள் உயிரோட இருக்கின்றத வச்சு அது எந்த கலசம்னு கண்டுபிடிச்சிடலாம்.

 உங்களுக்கு வந்தப்ப எல்லா விலங்குகளும் உயிரோடு வந்திருச்சு. அப்ப எல்லா விலங்குகளும் மருந்து இருந்த அந்த கலசத்தை குடிச்சு இருக்கணும். சோ, அந்த கலசத்தோட பைனரி நம்பர் 11111. இந்த பைனரி நம்பரோட decimal number முப்பத்தி ஒண்ணு. அதனால கண்டிப்பா அந்த மருந்து முப்பத்தி ஒண்ணாவது கலசத்துல தான் இருக்கும்னு முடிவு பண்ணேன். அதை உங்களுக்கும் கொடுத்தேன், நீங்களும் உயிரோட இருக்கீங்கஎன்றாள் நந்தினி.

வாவ் ! செமபிரில்லியண்ட் பிளான் நந்துஎன்றான் ஆரியன்.

 ஆதியும், “வெல்டன், சனா. இப்ப நாங்க உயிரோட இருக்கிறதுக்கு காரணம் நீதான்என்றான்.

நந்தினி வெளியில் சிரித்தாலும் மனதிற்குள், “உங்க உயிர் போறதுக்கும் நான் தானே காரணமா இருந்திருப்பேன்என்று நினைத்துக் கொண்டாள், ஆனால் வெளியில் சொல்லவில்லை.

 பிறகு நந்தினி, “சரி நாம இப்ப கிளம்பலாமா ?” என்று கேட்டாள். ஆதியும் ஆரியனும் எழுந்து கொள்ள, மூவரும் அங்கிருந்து நடக்கத் தொடங்கினர்.

 அவர்கள் அந்த மைதானத்தை விட்டு வெளியே வர, “இந்த கோட்டையோட வாசல்ல தான் அடுத்த லெவலோட பார்ச்மென்ட் இருக்கும்னு மெட்லடன் சொன்னார். அதை எடுத்துக்கிட்டு தான் இப்ப நம்ம போகணும்என்றாள் நந்தினி.

 ஆதி, “நம்ப ஸ்பேஸ் ஷிப் எங்க இருக்கு ? இந்த கிரகம் நாம ஸ்பேஸ் ஷிப் தரை இறங்கின கிரகம் மாதிரி இல்லையேஎன்று கூறியவன், தனது வாட்சை எடுத்துப் பார்த்தான்.

அதில் இரு கிலோமீட்டர் சுற்றளவில் அந்த ஸ்பேஸ் ஷிப் எங்கும் இல்லை என்பதைக் காட்டியது.

ஆரியன், “நாம ஒரு கிரகத்தை விட்டு இன்னொரு கிரகத்துக்கு வந்திருக்கோம். அப்படின்னா இது கயா கிரக வாசிகள் பயன்படுத்துகிற space time continuum மாதிரி போல. இப்ப நாம எப்படி பழைய கிரகத்துக்கு போறது ? அங்க இருக்குற ஸ்பேஸ் ஷிப் தானே பொசய்டனும் இருக்கார் ?” என்றான்.

அவன் கடைசியாகக் கூறியதை கேட்டு ஆதியும், நந்தினியும் அதிர்ந்து போயினர். “இதை எப்படி யோசிக்காமல் விட்டோம் ? இப்போது இந்தக் கிரகத்தில் இருந்து எப்படி வெளியேறுவது ? பொசய்டன் இருக்கும் ஸ்பேஸ் ஷிப்க்கு எப்படிச் செல்வது ?” என்று நினைத்தனர்.

அவர்கள் மூவரும் பேசிக் கொண்டே செடிகள் நிறைந்த பகுதிக்கு வந்து விட, அவர்களது பேச்சைக் கலைக்கும் விதமாக, அங்கிருந்த ஆயிரக்கணக்கான செடிகளும் எழுந்து நின்றன. போர் வீரர்கள் போல அவர்கள் கையில் ஆயுதம் வைத்திருக்க, அவர்களுடைய பற்கள் கூர்மையாக இருந்தன. அனைத்து வீரர்களும் அவர்கள் மூவரையும் சூழ்ந்துகொண்டனர். அவர்களது தோற்றத்தை வைத்து அவர்கள் விலங்குகளா இல்லை செடிகளா என்பதையே அறிய முடியவில்லை அவர்களால்.

மூவரும் திகைத்துப்போய் நிற்க, நந்தினி சற்று தெளிந்து, “A surprise is waiting at the endக்கு இதுதான் அர்த்தம் போலஎன்றாள். அப்போது அவளுக்கு மெட்லடனின் குறுநகைக்கு அர்த்தம் புரிந்தது.

இதுவரை பல்வேறு இக்கட்டிலிருந்து நந்தினி தப்பித்து விட்டாள். ஆனால், இந்த ஆயிரக்கணக்கான வீரர்களை வென்று ஈரின் கல்லை நோக்கி அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவாளா ?

                         

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!