Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

agnikavin sagaran episode 1

ஓர் மழை இரவு.அவன் இரவு  உணவு தயார் செய்து கொண்டிருந்தான். அவன் சாகரன் தனிமை விரும்பி. அதனால் தான் ஊரை விட்டு தொலைவில் தன் இருப்பிடத்தை அமைத்து   கொண்டான். அப்பொழுது  சத்தம் கேட்டது. என்னவென்று அவன் வந்து பார்த்த பொழுது யாரும் அங்கே இல்லை. சிறிது நேரம் கழித்து மீண்டும் சத்தம் கேட்டது. என்னவென்று அவன் வந்து பார்த்த பொழுது வாசலில் அந்த பகுதி இன்ஸ்பெக்டர் கிரி நின்றிருந்தான்

         “ என்ன வேண்டும்? ,”என எச்சரிக்கும் குரலில் சாகரன் கேட்டான்.

“ஒரு பைத்தியம் இங்கு தப்பி  வந்துடுச்சுஎன கூறினான் கிரி

“அதுக்கு நான் என்ன பண்ணனும்?” குரலில் காரம் கூடியது



Advertisement

“இல்ல இந்த ஏரியால உங்க வீடு மட்டும்  தான் இருக்கு ,அதான் இங்க தேடி பாக்கலாம்னு வந்தேன்.” என தயங்கியபடி கேட்டான் கிரி. அவனுக்கு தெரியும் இன்னும் அவனை கோப்பபடுத்தினால் அடி விழுவது உறுதி என்று

‌“So you want to search my house right?.” என அவன் கேட்ட விதத்தில் இவனுக்கு வியர்த்தது. ஆனால் வேறு வழி இல்லை கையில் கிடைத்தவளை விடவும் மனதில்லை

“ஆமாம் சார் ,” என்று கூறிவிட்டான் கிரி

Advertisement

‌“okay, but யாரும் அங்கே இல்லனா உன்ன என்ன பண்ணலாம், அத சொல்லிட்டு போய் செக் பண்ணிக்கோ. “

Advertisement

‌ “சார் it’s my duty sir.” கிட்டத்தட்ட காலில் விழும் நிலையில் கேட்டான்.அவனுக்கு தெரியும் சாகரனை பகைத்து வாழ முடியாது.  

சாகரன் காடுகளின் பாதுகாவலன் District forest officer (DFO). மனிதர்களை விட மரங்களும் விலங்குகளும் தான் சிறந்தது என்ற எண்ணம் கொண்டவன். இதற்கு காரணம் அவன் மனதில் பதிந்த சில வலிகளே. தனிமை வேண்டும்  எண்ணி என்று அரசாங்கம் கொடுத்த இல்லத்தில் தங்காமல் தனக்கென தனியாக ஓர் இல்லம் உருவாக்கி கொண்டான். அவனுக்கு மனிதர்கள் மேல் நம்பிக்கை இல்லை. எனவே அனைவரையும் தள்ளி நிறுத்தி விடுவான்

‌ “ஓகே ,போய் செக் பண்ணிக்கோஎன்று வாசலில் ஒதுங்கி நின்றான். அவன் வீடு மிகவும் நேர்த்தியாக இருக்கும். ஒரு பெரிய ஹால் இரண்டு படுக்கை அறை, சமையல் அறை கொண்டது. மாடியில் ஓர் அறை மற்றும் பெரிய பால்கனி இருக்கும்வீட்டை சுற்றி பெரிய தோட்டம். அதில் ஒரு குட்டி வீடு இருக்கும்.( யாருடையது என்று பின்னால் சொல்கிறேன்).

Advertisement

கிரி எல்லா இடமும் தேடி விட்டு அவள் இல்லை என்றவுடன் அவன் பதட்டம் அதிகரித்தது.பின்னால் இருந்த குட்டி வீடை மட்டும்  பார்க்க வேண்டும் என்று அங்கே சென்றான்

அப்பொழுது சாகரன் அங்கே சென்றுஇந்த வீட்லயும் பாக்கனுமாஎன்று கேட்டான். அதற்கு கிரிஆமாம் சார், ஒரு வேளை உங்களுக்கு  தெரியாமல் இருக்கலாம்லஎன்று கூறினான்

ஓஹ் அப்போ பாக்கலமே!, என நக்கலாக கூறி கொண்டேடைகர்என அழைத்தான் . ஆனால் உள்ளே இருந்து வந்தது நிஜ டைகர் போல பயங்கரமாக இருந்தது.

அதுஒரு பெரிய நாய் டைகர் வேகமாக ஓடி வந்தது வந்த வேகத்தில் தன் முன்னங்கால்களை தூக்கி நின்றது  . கிரி மிகவும் பயந்துவிட்டான் டைகரின் குறைப்பில் பயந்தவன் இனி இருந்தால் மிகவும் ஆபத்து என்று சார் நான் கிளம்புறேன் என்று கூறி சென்றுவிட்டான். 

 கிரி  சென்றவுடன் வெளிய வா என்று அழைத்தான் அப்பொழுது  அந்த குட்டி வீட்டிலிருந்து ஓர் அழகான பெண் இவ்வளவு  நேரம் நம் டைகர் ஓடு அந்த வீட்டை பகிர்ந்து கொண்டிருந்தவள் வந்தாள்.

 உடனே சாகரன் “அவன் போயாச்சு, நீ இங்கிருந்து கிளம்பலாம் “என்று கூறி தன் வீட்டிற்கு சென்று விட்டான் பெண் அவள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தாள். 

அவள் பக்கத்தில்   டைகர்  இவளை  கடிக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டே முறைத்தது. வீட்டின் உள்ளே இருந்து  சாகரன் “டைகர்” என்று அழைத்ததும் பாய்ந்து ஓடி சென்று விட்டது.  சாகரன் சமைத்த உணவை  தனக்கும் டைகருக்கும்  எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். 

  அப்பொழுது அங்கே வந்த அவள் “சார்” என்று அழைத்தாள்.  உடனே சாகரன் நீ இன்னும் போக வில்லையா அதற்கு அவள்” சார்  நைட் நேரத்தில் நான் எங்கே செல்வது இன்னைக்கு ஒருநாள் இங்கே தங்கி இருக்கேன்  சார் ,ப்ளீஸ்” என்று என்று கேட்டாள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!