Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

அக்னிகாவின் சாகரன் 2

சற்று நேரத்திற்கு முன்பு

சாகரன் சமைத்துக் கொண்டிருந்த போது சத்தம் கேட்டது அவன் வந்து பார்த்தபோது யாருமில்லை அவன் மாடிக்கு சென்றான். அங்கே இருந்த அறையின் உள்ளே சென்று பார்த்தான்.அது அவனுடைய உடற்பயிற்ச்சி அறை. “யாரது? மரியாதையா வெளிய வா” எனக் கூறினான்.

அப்போது ஒரு பெண் ஸ்க்ரீன் பின்னால் இருந்து வெளியே வந்தாள் ஆளையே அசரடிக்கும் பேரழகி என்றெல்லாம் கூற முடியாது நம் பக்கத்து வீட்டு பெண் போன்ற ஒரு சாதாரண பெண்( நம் வீடடு பெண் கூட சொல்லாம்;) கலையான முகம் சொல்லப்போனால் கொஞ்சம் புஷ்டியான பெண். ஓடி வந்த கலைப்போடு கண்களில் சற்று பயத்தோடு வந்து நின்றாள்;, “யார் நீ? எதுக்கு இங்க வந்த? யார் அனுப்பினாங்க உன்னை? மரியாதையாக இங்க இருந்து கிளம்பி போயிடு” என வார்த்தைகளை கடித்துத் துப்பினான்.

“ சார் நான் தப்பான எண்ணத்தோட வரல என்னை காப்பாத்திக்க தான் வந்தேன். என்ன ஒரு போலீஸ் துரத்துறார்.” என்று கூறினாள் “ஓஹோ! அப்போ நீ திருடியா, திருட வந்தியா” என கேட்டான்.



Advertisement

“ இல்ல சார் நான் திருடி கிடையாது நம்புங்க. அந்த போலீஸ் என்ன தப்பான இடத்துக்கு கூட்டிட்டு போனாரு அவர்கிட்ட இருந்து தப்பிச்சு இங்க ஓடி வந்தேன். இங்க உங்க வீடு மட்டும் தான் இருக்கு. கண்டிப்பா தேடி வருவார் ப்ளீஸ் காப்பாத்துங்க.” என மன்றாடி கேட்டாள். அவள் கண்களில் உண்;மை இருந்தது. ஆனால் அவனால் நம்ப முடியவில்லை. உன்ன எப்படி நம்புறது? எனக் கேட்டான்.

“உண்மையா தான் சொல்றேன் ளுஐசுஇ அவர் பேரு கிரின்னு சொன்னாரு” கிரியின் பேரை கேட்டவுடன் சாகரன் சற்று யோசித்தான் பால்கனி வழியாக எட்டிப்பார்த்தான் தூரத்தில் கிரி ஓடி வருவது தெரிந்தது. “சரி என் கூட வா” என்று கூட்டி சென்றான். வீட்டின் பின்னால் இருந்த டைகரின் வீட்டின் முன்பு நின்றார்கள்.

அப்போது “டைகர்” என்று என்று குரல் கேட்டவுடன் டைகர் ஓடிவந்து அவன் மேல் பாய்ந்து விளையாண்டதுஇ பக்கத்தில் இருந்தவளை பார்த்து குரைத்தது .டைகர் “ளவழி” என்று கூறியவுடன் அமைதியகி விட்டடது. டைகரின் வீட்டை பார்ப்;போம், அந்த வீடு கிட்டத்தட்ட ஒரு குட்டி டெண்;ட் அளவு இருந்தது ,ஒரு கதவும் குட்டி ஜன்னலும் மட்டும் இருக்கும். இருவர் படுத்து உறங்கலாம்.

Advertisement

“இந்த வீட்டுக்குள்ள போய் இரு , கிரி செக் பண்ணி போனதும் நான் கூப்பிடுறேன்” என்று கூறினான். “சார் ப்ளீஸ்இ எனக்கு நாய் என்றால் பயம்இ வீட்டுக்குள்ளேயே எங்கேயாவது இருக்கிறேன்” என்று கூறினான். “ இங்க பாரு நீ இருக்கிறது என்றால் இங்கேயே இரு இல்லனா கிளம்பி போயிடு” என்று கூறினான்.

Advertisement

“சார் நாய் என்ன கடிச்சுட்டா என்ன பண்றது?” என்று கேட்டாள். “நீ திரும்ப கடிச்சுடு” என்று கூறினான். “சார்!” என்று சற்று முறைப்புடன் பார்க்கவும். “ டைகர், புழ யனெ ளவை in லழரச pடயஉந. னழn’வ யவவயஉம” என்று கூறியவுடன், அமைதியாக சென்று அதன் வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டது. “நீ அந்த பக்கம் உக்காந்துகோ , நான் கூப்பிட்ற வரைகும் வெளியே வர கூடாது” என்று கூறினான்.அவள் பயந்து கொண்டே சென்று அமர்ந்தாள்.

சாகரன் இவளை நம் டைகரிடம் ஒப்படைத்து விட்டு பாதியில் நின்ற சமயலை முடிக்க சென்று விட்டான். நம் நாயகி தான் பாவம் நாயோடு போராடி கொண்டிருந்தாள். நம் டைகரோ தன் வீட்டை பங்கு போட்டவள் பார்த்து முறைத்து கொண்டிருந்தது.(நம் விசு சார் வீடை போல் இருவரும் மனதிற்குள் கோடு போட்டு அதை தாண்டாமல் அமர்ந்திருந்தார்கள்.)

நம் நாயகியின் மனமோ பெரும் பீதியில், “வெளிய போனா ஒரு எருமைக்கிட்ட மாட்டிக்குவேன், இங்க ஒரு நாய் கிட்ட
மாட்டிக்கிட்டேன். இங்க பாரு டைகர்!; நானும் இத தாண்டி வர மாட்டேன் நீயும் வர கூடாது என்று டீல் பேசி கொண்டிருந்தாள்,”
அப்பொழுது தான் கிரி வந்தது . சாகரன் “டைகர்”; என்று அழைத்ததும் ஆர்வத்துடன் வெளியே வந்தது. கிரியயை பார்த்ததும், எங்கே அவனும் இவ்வீட்டில் பங்குக்கு வந்து விடுவான் என்று பாய்ந்து விட்டது. கிரியும் பயந்து ஓடி விட்டான்.

Advertisement

இப்பொழுது
சாகரன் கோவமாக “ இங்க பார் நான் உன்ன நம்பி உனக்கு ஹெல்ப் பண்ண்லை, எனக்கு கிரி பற்றி தெரியும் அதான் உன்னை காப்பற்றினேன்.இனி நீ கிளம்பலாம்” என்று கூறினான்.
“சார் ப்ளீஸ், இன்னைக்கு ஒரு நாள் இங்க தங்கிட்டு நாளை காலையில் போயிறேன் இருட்டில் தனியா எப்படி சார் போகிறது. அந்த போலிஸ் கண்டிப்பா இங்க தான் சுத்திட்டு இருப்பாரு” என்று சற்று இரங்கி கேட்டாள். அவனுக்கு தன் தனிமையை கெடுக்க விருப்பம் இல்லை. அதனால் தான் டைகர் கூட தன் தனிமையை கெடுக்க விருப்பமின்றி தனியாக வீடு அமைத்து கொடுத்தான். ஆனால் இவள் கூற்றில் இருந்த உண்மையால் சற்று யோசித்தான்.

“ஒகே , இங்க தங்கலாம். டைகர் வீட்டில் தங்கிக்கோ, காலையில் கிளம்பிடு.” என்று சாதரணமாக கூறி விட்டான்.
“சார் இதுக்கு நீங்க என்னை வெளியே போன்னு சொல்லிருக்கலாம்” என்று கேட்டாள்.
“சரி வெளியே போ” என்று கூறினான்.
“சார் ப்ளீஸ்” என்று அவள் கெஞ்சவும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவன் இவ்வளவு நேரம் யாருடனும் பேசியதில்லை. ஆனால் அவளை தனியே அனுப்பவும் மனதில்லை. அதே நேரம் அவளை முழுதாய் நம்பவும் முடியவில்லை.

“சரி உன் முழு விவரம் சொல்லு, பிறகு இங்க தங்கலாம்.உன் பெயர் என்ன? எதுக்கு உன்னை கிரி தேடுறான். நீ எங்க தங்கியிருக்க? என்று கேள்வி கணைகளை தொடுத்தான்.
“சார் என் பெயர் அக்னிகா, நான் ஒரு அனாதை. எனக்கு ஹெல்ப் பண்றேனு சொல்லி என்ன இங்க கூட்டிட்டு வந்தாரு வர்ர வழியில நான் துங்குறேனு நினச்சு அவர் போன் பேசுறது கேட்டேன்.அதான் கொஞ்ச நேரம் களிச்சு பாத்ரூம் போகனும்னு சொல்லி வண்டிய விட்டு இரங்கி ஓடி வந்துட்டேன்.” என்று கூறினாள்.
“சரி இதுக்கு முன்னாடி நீ எங்க தங்கியிருந்த அத சொல்லவே இல்லை” என்று கேட்டான்.
“ சார் குயிஸ் ப்ரோக்ராம் நடத்துறீங்களா, பாருங்க டைகருக்கு பசிக்குதாம் உங்களுக்கு பதில் சொல்லி எனக்கும் பசிக்குது . சாப்ட எதாவது குடுங்க சார்” என்று கேட்டவுடன் அவனுக்கு புரிந்தது அவள் பதில் சொல்ல மாட்டாள் என. சரி நாமே கண்டுபிடிப்போம் என்று சாப்பாடு எடுத்து வைத்தான்.

-தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!