Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

manam virumbuthae

MV 1.2

மேடையில் பேச்சு போனது… போனது… போனது… போய்க்கொண்டே இருந்தது.

ஒரு கால் மாற்றி மறுகால் என நொண்டிக்கொண்டே நின்றவளை ப்ரின்சி ஜாடையில் அழைக்க,



Advertisement

‘ஐ! என் தெய்வம் என்னை அழைக்குதே! போய் உட்காந்துக்கோ ராசாத்தி’ன்னு சொல்லபோவுதே!’ என மனம் துள்ள வேகமாய் அவர் அருகே போனவளிடம்,

“என் ரூம்ல ஒரு பொக்கே’ இருக்கு! அதை எடுத்துக்கிட்டு வாசலுக்கு போ! மிஸ்டர் ஷ்யாமளன் வந்துட்டாரு! ரொம்ப மரியாதையா இன்வைட் பண்ணி, அழைச்சுட்டு வரணும், சொல்லிட்டேன்! கூட உன் எச்.ஓ.டி’யை கூட்டிட்டு போ!” என்று சொல்ல,

Advertisement

Advertisement

சுர்ரென எழுந்த கடுப்புடன், ‘போறேன்… போய் தொலைக்குறேன்!’ என முனகிக்கொண்டே சென்றாள் ஜனனி.

காலேஜ் வாசலில் நின்றிருந்தவளிடம், “எப்போ வருவாராம்?” என்றார் எச்.ஓ.டி!

Advertisement

“வந்துட்டாங்கன்னு சொல்லிதான் ப்ரின்சி அனுப்புனாங்க” என்றாள் ஜனனி.

‘ஹும்! அதுக்கு இதே வேலை!’  அவர் சன்னமாய் முனகுவது காதில் விழுந்தாலும் காட்டிக்கொள்ளாமல் அவள் நிற்க, சில நிமிடங்களிலேயே ஒரு பைக் கல்லூரி உள்ளே நுழைந்தது.

அதை தடுத்து நிறுத்திய வாட்ச்மேன், ‘யாரென?’ விசாரிக்க, “நான் ஷ்யாமளன்! கெஸ்ட்’டா வந்துருக்கேன்!” என்று அவன் சொன்னது இரு பெண்களின் செவிகளிலும் நன்றாய் கேட்க,

அந்த ஹெல்மெட் தலையனிடம் வேகமாய் விரைந்தனர்.

“வாங்க… வாங்க…” என்றார் எச். ஓ.டி!

“வணக்கம்!” சொன்னவன் ஓரமாய் வண்டியை நிறுத்துவிட்டு ஹெல்மெட்டை கழட்ட,

‘பைக்’ல வர கெஸ்ட்’ட இப்போதான்ப்பா பாக்குறேன்!’ என்ற நமட்டு சிரிப்போடு நின்றிருந்த ஜனனியின் வாய் தன்னால் பிளந்தது.

பளிச்சென சிரித்தபடி நேராய் நடந்து வந்தவன், “ஹலோ” என கரம் நீட்ட, எச்.ஓ.டி அதை பற்றி குலுக்கினார். இயல்பாய் அவன் கரம் அவளிடம் அடுத்து நீண்டது.

இவள் தான் ‘பட்டிக்காட்டான் மிட்டாய்க்கடையை பார்த்ததை’ போல வாயை பிளந்துக்கொண்டு நிற்கிறாளே!

“ஹலோ?” என்றான் மீண்டும்.

அவள் அப்படியே நிற்க, எச்.ஓ.டி அவள் கரத்தில் இருந்த பொக்கே’வை பிடுங்கினார்.

அதில் சுயம் பெற்ற ஜனனி திருதிருவென விழிக்க, பொக்கே அவன் கைகளில் இருந்தது அப்போது.

“ரொம்ப டயர்டா இருக்கீங்க போல… கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு போலாமா?” என்றார் எச்.ஓ.டி!

அவனும் மறுக்காமல், “அவசரமா வந்தேன்! கொஞ்சம் ரிலேக்ஸ் பண்ணிட்டு போனா தேவலாம்!” என்றுவிட, ப்ரின்சி அறை நோக்கி இருவரும் போக, நாய்க்குட்டியை போல அவன் பின்னே ஓடினாள் ஜனனி.

அறைக்குள் அவனை அமர வைத்த எச்.ஓ.டி, “டேக் யூர் டைம்… இன்னும் ஸ்பீச் தான் போய்க்கிட்டு இருக்கு!” என்றார்.  

“ஓகே மேம்! நான் டென் மினிட்’ல வரேன்! நீங்க வேணுனா போங்களேன்!” என்றான் அவன்.

அவர் தயங்க, “ஆமா மேம்! நீங்க போங்க!” என்றாள் ஜனனி. இருவரும் ஒரு சேர அவளை நோக்கினர்.

அதில் சுதாரித்தவள், “இல்ல மேம்! ப்ரோக்ராம் எல்லாம் அடுத்து செய்யணும்! நீங்க தானே இன்சார்ஜ்… ஒருமுறை கேர்ள்’ஸ் ட்ட பேசிடலாமே!” என்றவள்,

“நான் கூட இருந்து சார்’ர அழைச்சுட்டு வரேன்!” என்றாள் நல்லப்பிள்ளையாய்.

ஷ்யாமளனுக்கு எந்த மறுப்பும் இல்லை! ஆனாலும் அவர் தயங்க, “வொர்க் இருந்தா பாருங்க மேம்! எனக்காக நிக்காதீங்க!” என்று அவன் திடமாய் சொல்ல, ஜனனியை தனியே அழைத்து ஆயிரம் மரியாதை நடைமுறைகள் சொல்லி, ஒரு காபியோடு அனுப்பி வைத்தார் எச்.ஓ.டி.

அவள் நீட்டியதும், “ஓ! தேங்க்ஸ்!” என பெற்றுக்கொண்டவன் அதன் பின்னே பேசவே இல்லை.

அருகே ஒரு பெண் நிற்கிறாள் என்றுக்கூட அவன் நிமிரவில்லை. அவன் அருகே சற்று தள்ளி நின்று அவன் செய்கைகளை எல்லாம் பார்த்துக்கொண்டே இருந்தாள் ஜனனி. என்னவோ அந்த அறைக்குள் அவன் மட்டுமே இருப்பதை போல இருந்தது அவன் செய்கை.

காபி குடித்து முடித்ததும் கப்பை எங்கே வைப்பது என தடுமாற, ‘குடுங்க!’ என்று அருகே சென்றாள் அவள்.

“தேங்க்ஸ்!” என்றவன், “காஃபி நல்ல இருக்கு!” என்றான்.

“மெசின் காஃபி தான்” என்றதும் சின்னதாய் சிரித்தவன், பேச்சை அத்தோடு நிறுத்திக்கொள்ள, அவனேயே ஊன்றி கவனித்துக்கொண்டிருந்த ஜனனியின் கபாலத்தில் ஏகப்பட்ட விஷயங்கள் ஓடின.

என்னவோ அவனை பார்த்ததும் பிடித்தது, பார்க்க பார்க்கவும் பிடித்தது.

‘ஆணழகனா?’ என்று கேட்டால்… அவள் கண்களுக்கு அப்படிதான் தெரிந்தான்.

‘ஒரு அழகான பொண்ணு பக்கத்துல இருந்து கூட எக்ஸ்ட்ரா ஒரு வார்த்தை பேசாம இருக்குறதுலையே நல்ல பையன்னு தெரியுது!’ அவளே ஆராய்ச்சியை ஆரம்பித்தாள்.

‘போனை நோண்டாம அமைதியா இருக்குற இடத்தை அப்சர்ப் பண்றான்! ம்ம்ம்ம்!!!!’

‘ரொம்ப டீசென்ட்டா இருக்கானே…’

மூளை என்னவோ சொல்ல, அதை மனசு தடுக்க… சிறிது நேர போராட்டத்தின் பின்னே,

“உங்க பேரு கூகுள்’ளா?” என்று கேட்டுவிட்டாள் ஜனனி.

திடீரென்ற அவள் குரலில் ‘ஹான்?’ என திரும்பியவன், கேள்வி புரியாமல் விழிக்க, மீண்டுமாய் கேட்டாள்.

“உங்க பேரு கூகுளா?”

சிரித்தவன், “இல்லையே! ஏன்?” என்று கேட்க,

“நான் தேடுற எல்லாமே உங்ககிட்ட இருக்கே!!! அதான்!” என்று அவள் சொன்னதும், முதலில் அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.

சில நொடிகளில் விளங்கிய பின்னோ அவன் கண்கள் அப்பட்டமான திகைப்பை காட்டியது.

அவன் திகைப்பை ரசித்தவள், நாவை கன்னத்தில் அதக்கி குறும்பாய் சிரிக்க, அவன் மொபைலை எடுத்து பார்க்க ஆரம்பித்தான்.

‘தடுமாற்றத்தை மறைக்க மொபைலா?’ சிரிப்பாய் வந்தது அவளுக்கு.

“பேச மாட்டீங்களா?” என்றாள்.

உண்மையில் அவனுக்கு பேச்சே வரவில்லை.

இப்படியெல்லாம் இதற்கு முன் நடந்ததே இல்லை அவனுக்கு.

அதிலும் முதல்முறையாய் பார்க்கும் ஒரு பெண் இப்படி பேசுவாள் என்பதை அவனால் நம்பக்கூட இயலவில்லை.

“ஒரு வேலை பயமோ?” என்றாள் அவள் விடாமல்.

“எனக்கென்ன பயம்?” வாயை திறந்தான் ஷ்யாமளன்.

“அப்போ பேசுங்க!” என்றாள் ஜனனி.

அவனுக்கு கொஞ்சம் நடுக்கமாய் கூட இருந்தது.

அதை மறைத்து, “என்னங்க வேணும் இப்போ?” என்று கேட்க,

“BAND AID  இருக்கா?” என்றாள் சம்பந்தமே இன்றி.

புருவம் சுருக்கி, “எதுக்கு?” என்று அவன் வினவ,

“நான் உங்ககிட்ட விழுந்ததுல, லே….சா அடிப்பட்டுடுச்சு… அதான்!!!” என்றதும், அவனுக்கு எப்படி ‘ரியாக்ட்’ செய்வது என்றுக்கூட புரியவில்லை.

அவள் பேசுவதே பிடிக்கவில்லை என்றால் இந்நேரம் ஏதாவது சூடாய் சொல்லியிருக்கலாம்! ஆனால், அவனால் முடியவில்லையே!

மூச்சு முட்டுவதாய் இருக்க, எழுந்து போலாமா? என்று அவன் நினைத்த நேரம் ஆபத்தாண்டவனாய் வந்தார் எச்.ஓ.டி.!

‘விட்டால் போதும்’ என ஓடியே விட்டான் அவரோடு.

சிரித்துக்கொண்டே அவள் பின்தொடர, ஷ்யாமளனுக்கான புகழுரைகள் ஸ்பீக்கரில் ஒலித்துகொண்டிருந்தது.

உரிய மரியாதையுடன் முதல் வரிசையில் மேடையின் கீழே அமர்த்தப்பட்டான். ஆனாலும் அவனுக்கு அந்த படபடப்பு நீங்கவில்லை.

திருட்டுத்தனமாய் அவன் கண்கள் ‘அவள்’ எங்கே என்றே தான் சுழன்றது.

‘முகத்தை கூட சரியா பாக்கலை!’ அவன் அப்படி நினைக்கும்போதே, மேடையில் இருந்த மைக்கின் முன்னே வந்து நின்றாள் அவள்.

‘பாடல் நிகழ்ச்சி!’ நடக்கப்போவதற்க்கான ‘செட்டப்’ இருக்க,

‘இவ பாட போறாளா?’ என்ற எண்ணத்தோடு சின்ன எதிர்ப்பார்ப்பும் எழ காத்திருந்தவனை அதிர வைக்கும்போது, அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு,

“மனம்… விரும்புதே….

உன்னை… உன்னை……

மனம் விரும்புதே….!!!!” என்றாள்.

திக்கென்றானது அவனுக்கு.

‘என்னா பொண்ணு இவ!’ எண்ணாமல் இருக்க இயலவில்லை அவனால்.

“மனம் விரும்புதே… உன்னை… உன்னை… உன்னை… உன்னை… உன்னை… உன்னை…”

மீண்டும் மீண்டும் அழுத்தி அழுத்தி தேய்ந்த ரெக்கார்ட் போல ஜனனி ஒரே இடத்தில் நிற்க, ஆடிட்டோரியமே ‘கொல்’லென சிரித்தது.

சௌமியா, “சொன்னேன்’ல சொதப்பிடுவான்னு!” பல்லைக்கடிக்க, ஜனனியின் முட்டியில் யாருமறியாமல் கிள்ளி வைத்தாள் மெர்லின்.

“ஸ்ஸ்..” என்றவளோ,

“சட்டென்று சலனம் வரும் என்று…

ஜாதகத்தில் சொல்லலையே…

நெஞ்சோடு காதல் வரும் என்று…

நேற்று வரை நம்பலையே!” என்று பாடலின் கடைகோடிக்கு தாவிவிட்டு,

“என் காதலா…ஆஆஆஆ” என்று ‘ஹைபிட்ச்’சில் அவனை பார்த்து ஒரு இழு இழுக்க….

‘சோலி முடிஞ்ச்சு!’

ஆடிட்டோரியத்தின் சிரிப்பலை ஓய பல நேரம் எடுக்க, ஜனனிக்கு ப்ரின்சிப்பால் வாயால் ‘மண்டகப்படி’ கிடைத்தது விழா முடிந்த பின்னேரத்தில்.   

தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!