Skip to content
Post Views: 4,813
“அவன் பேருக்கூட…” என்று பூபதி இழுக்க, ஷைலஜாவின் மெலிதாக நடுங்கும் தன் உதடுகள் அசைய, “ரகு…!” என்றாள்.
“ஹான்… அதான் அதான்!” என்றவன் மேற்கொண்டு பேச வர, காரின் ‘ஹாரன்’ ஒலி கேட்டது.
Advertisement
“நடேசன் வந்துட்டாரு போல! நான் கிளம்புறேன் ஷைலுமா! டேக் கேர்… ஸீ யூ டுமாரோ!” என்றவன் எழுந்துக்கொண்டான்.
Advertisement
துர்கா கையில் காஃபீ கோப்பையுடன் வந்துவிட, ‘உப்ப்…உப்ப்’பென ஊதி இருமடங்கு குடித்தவன், “நெக்ஸ்ட் டைம் பொறுமையா ஃபுல்லா குடிக்குறேன்! இப்போ மீதியை ஷைலுமா குடிப்பா!” என்று கண்ணடித்துவிட்டு நிற்காமல் சென்றான்.
Advertisement
ஷைலஜாவிற்கு வாய் வரை வந்துவிட்டதை கேட்டுவிட வேண்டும் என்ற தவிப்பு. அவன் பின்னாலே அவள் செல்ல,
Advertisement
“என்னை அனுப்ப இஷ்டமே இல்ல போலருக்கே!” என்றவன் நாவை கன்னத்தில் அதக்கி விஷமமாய் சிரிக்க, அதெல்லாம் அவளை பாதிக்கவில்லை.
“உங்ககிட்ட பேசணும்!” என்றாள்.
“இப்போ எனக்கு நேரமில்ல… என் போட்டோவை கட்டிப்பிடிச்சு அதுக்கூட பேசு… நாளைக்கு போட்டோ’க்கு பதில் நான் இருக்கேன்!” என்றான் நமட்டு சிரிப்புடன்.
மீண்டும் காரின் ‘ஹரன்’ ஒலி!
“வந்துட்டா ‘ஹாரன்’ அடிங்க, போதும்ன்னு சொன்னேன்! அதுக்காக எப்படி பண்றாரு பாரு!” என்றவன் பேசிக்கொண்டே வாசலுக்கு சென்றுவிட்டான்.
அங்கிருந்து புறப்பட்டவனின் கார் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்துக்கொண்டே நின்றவளுக்கு அதற்குமேல் ஒரு வேலையும் ஓடவில்லை.
விடியா இரவை விரட்டித்தள்ளிவிட்டு காலையில் நேரமே கிளம்பினாள் ஷைலஜா. காலை உணவை கூட அவள் மறுத்துவிட்டு கிளம்ப, துர்கா வழமைப்போல ‘டெலிவரி பாய்’க்கு அழைப்பு விடுத்தாள்.
அந்நேரம் மீண்டும் வேகமாய் வீட்டுக்குள் நுழைந்த ஷைலஜா அறைக்குள் புகுந்து எதையோ உருட்டிக்கொண்டிருந்தாள்.
எட்டிப்பார்த்த துர்கா, “என்ன தேடுறீங்க அக்கா?” என்று கேட்க,
“என் பிஸ்டல் எங்க?” என்றாள் அவள்.
அறைக்குள் இருக்கும் சின்ன கபோர்டின் லாக்கரை திறந்து அவள் எடுத்துக்கொண்டு, கையில் அந்த துப்பாக்கியை வாங்கிக்கொண்ட ஷைலஜா துர்காவை முறைத்தாள்.
“இதுக்குதான் என் ரூமை கிளீன் பண்ணாதன்னு சொல்றது… நான் எங்க வைக்குறேனோ, அங்கதான் எல்லாம் இருக்கணும்… அப்போதான் எனக்கு தெரியும்!” என்று கடுகடுத்தவள், அவள் முன்னவே சுவரோடு பதிந்திருக்கும் ரகசிய லாக்கரை திறந்து அதில் தனது பர்சனல் துப்பாக்கியை வைத்து பூட்டியவள், துர்காவை முறைத்துக்கொண்டே வெளியேறினாள்.
கமிஷ்னர் அலுவலகத்திற்குள் அவள் நுழைந்தபோது அலுவலகமே சற்று பரபரப்பாய் காட்சிதருவதாய் பட்டது அவளுக்கு.
உள்ளே நுழைய நுழைய இவனுக்கு ‘சல்யூட்’ வைக்கும் ஆட்கள் பலரின் முகமும் ஏதோ போல திகைப்பில் இருப்பதாகவே தோன்றியது அவளுக்கு.
தன் அறைக்கு சென்று அமர்ந்தவள், ‘இப்போதே போய் அவனை பார்ப்போமா?’ என்று யோசித்தாள்.
‘ஷைலுக்குட்டிக்கு என்னை பாக்கமா இருக்கவே முடியலையோ?’ ‘விர்சுவல் எஃபெக்ட்டில்’ அவன் வந்து பதில் சொல்வதை போல தோன்ற தலையை வேகமாய் உலுக்கிக்கொண்டாள்.
‘இடியட்… ராஸ்கல்… இம்சை!’ அவள் மனதார அவனை வசைப்பாடிய நேரம், கதவை தட்டாமல் கூட திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்த விக்கி,
“சார் உங்களை உடனே வர சொல்றாங்க மேடம்!” என்றான் மெலிதாக மூச்சு வாங்க.
புருவங்கள் சுருங்க, குழம்பிய பாவனையில் எழுந்து விரைந்து சென்றாள் அவனிடம்.
அவன் அறையில் அநேகமான காக்கிசட்டைகள்.
பெருவிரலால் புருவத்தை வருடிக்கொண்டு கண்மூடி நாற்காலியில் சாய்ந்து யோசனையாய் அமர்ந்திருந்தான் பூபதி.
ஷைலஜா பார்வை எல்லாம் அவன்மீது மட்டும் தான் இருந்தது.
சுற்றிலும் நிற்கும் ஆட்களை பார்த்தாள். அதில் ஒருவனாய் அவள் சொன்ன ‘கோபி’யும் நிற்க, “என்னாச்சு?” என்றாள் அவனிடம்.
“மேடம்!?” என தயங்கியவன், பூபதியை ஒருமுறை பார்த்துவிட்டு, “நீங்க கேட்டுருந்த தேதில நம்ம சர்வைலன்ஸ் கேமரா புட்டேஜ் எடுத்துட்டு இருந்தேன் மேடம்!” என்றான்.
“ஓ, நான் கேட்ட பைக் ட்ரேஸ் பண்ணிட்டீங்களா?” பரபரப்பாய் கேட்டாள்.
‘இல்லை’ என தலையசைத்தவன்,
“அந்த பர்டிகுலர் டே புட்டேஜ் மட்டும் ‘ஹேக்’ ஆகிருக்கு மேடம்!” என்றதும்,
“வாட்?” என அதிர்ந்துப்போனாள் அவள்.
“ஆமா மேடம்… அதுமட்டுமில்லாம, வேறொரு நாளோட வீடியோவை அந்த தேதி ரெக்கார்டிங்’ல பேட்ச் செஞ்சு விட்டுருக்காங்க!” என்று சொல்ல இன்னுமே அதிர்ந்துப்போனாள்.
“ஹவ் இஸ் இட் பாசிபிள்?” என்றவள்,
“ஒரு கவர்ன்மென்ட் சர்வரை ஹேக் செஞ்சு புட்டேஜ் மாத்துற அளவுக்கு யாருக்கு தைரியம் இருக்கு?” என்றாள் அதிர்ச்சி மீளாமல்.
“இது வெளில தெரிஞ்சா நமக்கு எவ்ளோ பெரிய அசிங்கம் தெரியுமா? நியூஸ்பேப்பர், மீடியா’ன்னு நார்நாரா கிழிப்பாங்க! இதைக்கூட இத்தனை நாளா கவனிக்காம என்ன செஞ்சுட்டு இருந்தீங்க!?” ஷைலஜா அந்த போலிசை வறுத்தெடுத்தாள்.
இன்னும் அவள் மோசமாய் திட்டிக்கொண்டே போக, “ஷைலு…” என்றான் பூபதி.
அவள் தன் பேச்சை நிறுத்த, “விடு!” என்றான் ஒற்றை வார்த்தையாய்.
“எப்படி விட முடியும் ரகு? இதென்ன சின்ன விஷயமா? எவனோ ஒருத்தன் அசால்ட்டா கைவைக்குற அளவுக்கு இவங்க அஜாக்கிரதை’யா இருந்துருக்காங்க!” இன்னமும் அவள் அவர்களை திட்ட,
அந்நேரத்திலும், அவளது ‘ரகு’ அவனுக்கு புத்துணர்ச்சியூட்டியது.
அதோடு, “எவனோ ஒருத்தன் இல்ல” என்றான் பூபதி.
“தென்?” ஷைலஜா கேட்க, அதே கேள்வியை விழிகளில் தாங்கி மற்ற காவல்துறை ஆட்களும் அவனை பார்த்துக்கொண்டு நிற்க, சாவதானமாய் எழுந்து சோம்பல் முறித்தவன், பேக்கேட்டில் இருந்து பொட்டலத்தை பிரித்து வாயில் கொட்டினான்.
“சொல்லுங்க… என்ன நினைக்குறீங்க நீங்க?” என்றாள்.
“நினைக்கல… கன்ஃபார்மா சொல்றேன்… நம்ம தேடிக்கிட்டு இருக்க அக்யூஸ்ட் ஒரு….!” என்று நிறுத்த, அத்தனை பேரின் கவனமும் அவன்பால் குவிய,
“ஒரு… போலீஸ்!!!” என்றான் திண்ணமாய்.
நம்பமுடியாத அதிர்ச்சியில் அத்தனை பேரின் இதயமும் துடிக்க, அதில் ஒரே ஒரு இதயம் மட்டும் படபடத்து தாளம் தப்பி துடித்தது…!
****
அந்நாளின் பின்னேரத்தில் கொலை நடந்த இடத்தில், அந்த என்.எச்’ல் ஓரமாய் நின்றிருந்த தன் காரின் மீது அமர்ந்திருந்தான் ரகுனந்தபூபதி.
எதிரே ஷைலஜா நிற்க, அந்தகாரம் பூச ஆரம்பித்த தொடுவானை பார்த்தபடி,
“நம்ம இந்த கொலையை மட்டுமே ஃபோகஸ் பண்ணிப்போறது தப்புன்னு தோணுது ஷைலுமா!” என்றான் பூபதி.
“ஏன் சார் அப்படி சொல்றீங்க?”
“இல்ல ஷைலு, இந்த மர்டர்க்கு முன்னாடி மினிஸ்டர் பொறுப்புல இருந்த கட்சி பணம் காணாமல் போயிருக்கு! அமவுண்ட் பெருசுங்குறதால வெளில சொல்ல முடியாம உள்ளுக்குள்ளே பேசி முடிச்சுக்கிட்டாங்க!”
“இதுதான் அன்னைக்கு மினிஸ்டர்’கிட்ட சொன்னீங்களே!”
“ஆமா, இதுல உனக்கு டவுட் வரலையா?”
“வருது தான்! ஆனா, மினிஸ்டர் ஒப்புதல் இல்லாம அதை பத்தி நம்ம இன்வஸ்டிகேட் பண்ண முடியாதே சார்!”
“இல்ல ஷைலு, அதுக்கும் இதுக்கும் நிறைய தொடர்பு இருக்கும்ன்னு எனக்கு ஸ்ட்ராங்கா தோணுது!” என்றான் உறுதியாய்.
“இதைப்பத்தி நோண்ட மினிஸ்டர் விடமாட்டாரு!”
“அவர் பர்மிஷன் நமக்கு தேவையேயில்லை!” என்றவன் காரில் இருந்து குதித்திறங்கி, “வா, போலாம்!” என்றுவிட்டு முன்சீட்டில் சென்று அமர்ந்தான்.
நடேசனை விட்டுவிட்டு வந்ததால் அவள் தான் இப்போது சாரதி!
டிரைவர் சீட்டிற்கு போகாமல், அவன் அமர்ந்திருந்த ஜன்னல் புறம் வந்தவள், “ஒன்னு கேட்கணும்!” என்றாள்.
“ஒன்னு என்ன, ஒன்பது கூட கேளு… கன்னத்துலையா உதட்டுலையா?” என்று கண்ணடிக்க, அவன் கேலியை கண்டுக்கொள்ளாமல்,
“அன்னைக்கு என்னைப்பத்தி நிறைய சொன்னீங்க? ஹவ் டு யூ க்நொவ் தட்? அப்படின்னா நீங்க தான் என் அத்…” அவள் கேட்டு முடிக்கும் முன்னே அவள் காதோரத்தை உரசிக்கொண்டு எங்கிருந்தோ பாய்ந்து வந்து காரில் மோதியது ஒரு கத்தி!
இருதயம் நொடிப்பொழுது நின்றுப்போக, மறுநொடி வேகமாய் துடித்தது இருவருக்கும். காரை விட்டு வேகமாய் இறங்கினான் பூபதி. இருட்டில் சுற்றிலும் ஆங்காங்கே அவன் துலாவ, ஆள்நடமாட்டம் தெரியவில்லை.
சரியாய் எரியாத சாலைவிளக்கை நிந்தித்தவன், “வா..!” என அவள் கரத்தை பற்றி இழுத்து காருக்குள் தள்ளினான்.
“என்ன பண்றீங்க நீங்க? யார் என்னன்னு பாக்க வேண்டாமா?” பதறிக்கொண்டு கேட்டவள் வெளியே வரப்பார்க்க, விரைந்து ‘செண்டர் லாக்’ போட்டவன், காரை ஸ்டார்ட் செய்தான்.
“ஐ டின்ட் எக்ஸ்பெக்ட் திஸ் ஃப்ரம் யூ சார்! கோழை மாறி ஓடுறீங்க!? யார் என்னனு பாக்கக்கூடயில்லை!” முழு அதிருப்தியுடன் அவள் பேசிக்கொண்டு வர, அவனோ தங்களை யாரும் பின்தொடர்கிறார்களா என கவனித்துக்கொண்டே வாகனத்தை செலுத்தினான்.
ஒருக்கட்டதில் யாரும் வரவில்லை என்றதும் தான் அவன் நிதானத்திற்கு வந்ததே!
அப்போதும் ஷைலஜா பேசிக்கொண்டே இருக்க, “போதும் ஷைலுமா” என்றான் அவன் சிரிப்பாய்.
“நம்ம போலீஸ்! நம்மளே இப்படி ஓடி ஒழியலாமா? ஐ ஃபீல் அஷேம்ட்! அவங்களை யாருன்னு பார்த்து உண்டு இல்லன்னு செஞ்சுருக்கணும்! மே பீ அவங்க தான் நம்ம தேடுற மர்டரர்’றா கூட இருக்கும்…!”
அவள் சொல்வது அத்தனையும் உண்மைதான்… ஆயினும், “ஷைலுமா இது சினிமா இல்லை! நம்ம சூப்பர்ஹீரோ’சும் இல்லை! இருட்டுல யார் என்னன்னு தெரியல! எத்தனை பேர் இருக்காங்க? எந்தமாதிரி வெப்பன் வச்சுருக்காங்க? எதுவும் தெரியாது!
எந்தவித பாதுகாப்பும் இல்லாம நம்ம போய் வெறுங்கைல சண்டை போட்டு எல்லாரையும் பறக்க விட முடியுமா?” என்றவன்,
“ஜஸ்ட் பீ ப்ராக்டிகல் ஷைலு! வேகத்தை விட விவேகம் முக்கியம்!” என்றான்.
அவள் முகம் எந்தவித சமாதானத்தையும் ஏற்றதுக்கான அறிகுறியில் இல்லை.
‘ஹும்!’ சலித்தவன் மௌனமாய் காரை செலுத்தினான்.
சிறிது நேர நீண்ட பயணத்துக்கு பின் கார் கடற்கரை சாலையில் நின்றது.
“இறங்கு!”
அவளிடம் பதில் இல்லை.
“இன்னும் கோவமா?”
இதற்கும் பதில் இல்லை.
“ஒரு வாக் போலாம்… வா!”
“மாட்டேன்!” என்றாள்.
‘அடடடா!’ என்றவன் இறங்கி வந்து அவள்பக்க கதவை திறந்து,
“நான் தோப்புகரணம் வேணுனா போடவா?” என்று கேட்க, முகத்தை திருப்பினாள் அவள்.
“அட போலீஸ்காரம்மா… ரொம்பத்தான் பிகு பண்ணிக்குறீங்களே… வாங்க” என்று அவள் திமிற திமிற கேட்காமல் அவன் இழுத்துக்கொண்டு அந்த மணல் பரப்பில் நடக்க,
“நீங்க என்னை பலாத்காரமா இழுத்துட்டு போறீங்க” என்றாள் முறைப்புடன்.
சட்டென அவள் கையை விட்டவன் தன் வாயை பொத்திக்கொண்டு அதிர்ச்சியடைந்தவன் போல போஸ் கொடுத்து நிற்க, “என்ன?” என்றாள்.
“பலாத்காரமா? அதெல்லாம் நான் ஒரு தடவை கூட செஞ்சதே இல்லையே ஷைலுமா… ஒரு அக்மார்க் வெர்ஜின் பையனை பார்த்து என்ன வார்த்த சொல்லிட்ட நீ?!”
‘ஐயோ’ என பல்லைக்கடித்தவள், “பலாத்காரம்ன்னா பலவந்தம்… அதாவது… விருப்பம் இல்லாத ஒன்னை கட்டாயப்படுத்துறது… அந்த அர்த்ததுல சொன்னேன்” என்றதும் தான் சாதாரணமாய் மூச்சு விட்டவன்,
“இவ்ளோதானா?” என்றுவிட்டு மீண்டுமாய் அவள் கரத்தை பற்ற வர, விலகிக்கொண்டாள் ஷைலஜா.
“ஒரு கண்ணு தெரியாதவனை கடற்கரைக்கு கூட்டிட்டு வந்ததா நினைச்சு கையை பிடிக்க கூடாதா?” என்று பாவமாய் அவன் கேட்டதும் சிரிப்பு வந்தாலும் முகத்தை அவனுக்கு காட்டாது திருப்பிக்கொண்டாள் அவள்.
“சமூக சேவை செய்யுற மனப்பான்மை இன்றைய இளைஞர்கள் மத்தில குறைஞ்சுட்டே வருது” சோகம் போல சொன்னவன் முன்னே நடக்க ஆரம்பித்தான்.
இவளும் பின்னால் மெதுவாய் வர, ரோந்து பணி காவலர்கள் ‘வணக்கம்’ வைத்து சென்றனர்.
சிறிது தூரம் நடந்த பின்னர், “இந்த போட்’டோரமா உட்காரலாமா?” என்றான். அவளுக்கும் கால்கள் சற்று நொந்திருந்தது.
இருவரும் காலை நீட்டி அமர, வழமைபோல சட்டை பொத்தான்கள் மூன்றை கழட்டிவிட்டவன், கால் ஷூவையும் கழட்டிவிட்டு, ஷாக்ஸை உருவிபோட்டான்
ஜில்லென்ற காற்று பட்டதும் இதமாய் இருந்தது அவனுக்கு.
ஒருவித உற்சாக மனநிலை தொத்திக்கொள்ள, திரும்பி அவளை பார்த்தான்.
அவள் ஏதோ யோசனையில் இருந்தாள்.
“என்ன திங்கிங்?”
“யாரு நம்மளை கொலை செய்ய வந்துருப்பா… இது ரெண்டாவது முறை” என்றவளுக்கு யோசனை பலமானது.
“அதெல்லாம் இப்போ எதுக்கு?! இந்த நிமிஷம் இருக்குற இடத்தை, கூட இருக்க ஆளை ரசியேன்!” என்றவன், அவள் முறைப்பை கணக்கில் எடுக்காது, மொபைலை எடுத்து ‘பிளேலிஸ்ட்டை’ தட்டினான்.
“காதல் என்பது நேரச்செலவு…
காமம் ஒன்றே உண்மை துறவு…
நேசம், பாசம் போலி உறவு…
எல்லாம் கடந்து மண்ணில் உலவு…
யாருடன் கழிந்தது இரவு? என நியாபகம் கொள்பவன் மூடன்…
அணியும் நாற்றம் கொண்டே அவளின் பேரை சொல்வான் போகன்”
“ம்ச்” என்ற எரிச்சலோடு மொபைலை எடுத்து பாட்டை நிறுத்தினாள் ஷைலஜா.
“ஒய் ஷைலுமா… உனக்கு இந்த மாறி தத்துவ பாட்டெல்லாம் பிடிக்காதா?! சரி விடு, வேற மாறி ஒன்னு இருக்கு… போடுறேன்!” என்று அவளிடம் இருந்து மொபைலை வாங்க,
“ஏதாவது பாட்டுன்னு போட்டீங்க? மொபைலை தூக்கி கடல்ல வீசிடுவேன் சொல்லிட்டேன்”
கோபமாய் சொன்னவளை பரிதாபமாய் பார்த்தான் அவன்.
“பாட்டு நல்லா இல்லையா?”
“கேட்க சகிக்கல” என்றாள்.
“போ ஷைலு… உனக்கு டேஸ்ட்டே இல்ல”
‘யாருக்கு எனக்கா?!’ என்று கேட்க வாய் வர வந்தும் அடக்கிக்கொண்டாள். அதற்கும் ஏதாவது சொல்வானே இவன்…?!
காற்றில் கூந்தல் ஆட, தேகம் சிலிர்க்க வைக்கும் அந்நேரத்தில் வாக்குவாதங்களை இருவருமே எதிர்நோக்கவில்லை.
ஷைலஜாவிற்கு எல்லாம் புது அனுபவமாய் இருந்தது.
இப்படியெல்லாம் ஆற அமர அவள் இயற்கையை ரசித்ததில்லை.
கடல் மடியில் துள்ளி ஆடும் நிலவை ரசித்துக்கொண்டு அந்த நிசப்தத்தை அவள் உணர,
“ஷைலுமா… டூ யூ லைக் மீ?!” கரகர குரலில் அவளை நெருங்கி வந்து முகம் பார்த்து கேட்டான் பூபதி.
அவனை திரும்பி பாரத்தவளுக்கு அவன் முகத்தை விட்டு கண்ணை பிரிக்கவே இயலவில்லை.
அறியா வயதிலேயே, யாரென்று அறியாமலே, பிடித்துப்போன முகமாயிற்றே!!!
அவள் அமைதியை விரும்பாது,
“சொல்லு ஷைலு… என்னை பிடிக்குமா?” என்றான் ஆழ்ந்த குரலில்.
“தெரியல” என்றாள் பார்வையை வலுக்கட்டாயமாய் திருப்பி.
“ஹே, உனக்கு தெரியும்… சொல்லு… பிடிக்கும் தானே?” ஆவலாய் கேட்டவனை ஏமாற்ற தோன்றவில்லை.
“ம்ம்” என்றாள் பட்டும் படாமலும்.
அவனுக்கு எந்த தயக்கமும் இல்லை.
“எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்” என்றான்.
அவள் விழிகள் விரிந்தது. அவனை அவள் ஆராய்ச்சியாய் பார்க்க,
“என்னை எப்பவும் சந்தேகமாவே முறைச்சு பாக்குற இந்த கண்ணை ரொம்ப பிடிக்கும்” என்றவன் தன் விரலால் அவளை வருட, முறைத்தாள் அவள்.
இன்னும் இன்னும் அவள் கண்களுக்குள் ஆழ்ந்துப்போனவன், “ஐ ஃபீல் லைக் கிஸ்ஸிங் யூ” என்றான் ஏக்கமாய்.
அப்பட்டமான அதிர்ச்சி அவள் விழிகளில்.
அதை படித்தவன், “சீரியஸ்லி… ஆழமா… அழுத்தமா… ஒண்ணே ஒன்னு கொடுக்கணும் போல இருக்கு” என்றான் அவள் உதடுகளை பார்த்து.
அவள் உள்ளுக்குள் புதிதாய் எழும் உணர்வுகளை அடக்க முடியாமல், கோபப்போர்வையை கண்களில் தாங்கிக்கொள்ள,
“ஸ்ஸ்.. ஃப்பூ” பரபரவென கைகளை தேய்த்தவன், ஒரு நிமிடம் எங்கோ பார்த்துக்கொண்டு அமர்ந்துவிட்டு, ஒருநொடியில் அவளை நோக்கி திரும்பினான்.
“ஐ ஜஸ்ட் காண்ட் கண்ட்ரோல் மைசெல்ப்…
அடிக்கக்கூட செய்… ஆனா, அஞ்சு நிமிஷம் கழிச்சு செய்” என்றவன் வேகத்துடன் அவள் இதழ்களில் அழுத்தமாய் புதைய, அவன் செயலில் முதலில் அதிர்ந்தவளுக்கு அவன் கொடுக்கும் வன்மையான இன்பத்தை மறுக்க தோன்றவில்லை.
மயக்கத்துடன் கண்களை மூடிக்கொண்டவளுக்கு என்னவோ தோன்ற, விழித்தவள் பார்வை அவனது வெற்றுப்பாதங்களில் போனதில் அவன் தரும் முத்தம் கூட இரண்டாம் பட்சமாகி போனது.
error: Content is protected !!