ராகம் – 24.1
“பொறுப்பானவளா..?? நானா…??” என்று இத்தோடு நூறு முறைக்கு மேல் தன்னை தானே கேட்டு கொண்டிருந்திருப்பாள் யாழி..,
சத்தியமாக அவளாலேயே இதை நம்ப முடியவில்லை…
பின்னே அன்று தாயிடம் ‘திருமணம்’ என்றால் என்னவென்று கேட்டதற்கு அவர் கூட பொறுப்பு என்றாரே தவிர அதை பற்றிய விளக்கம் கொடுக்கவில்லையே அப்படி இருந்தும் அவள் எப்படி பொறுப்பாக இருக்க முடியும்…??
Advertisement
சொல்லபோனால் பொறுப்பு என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள அன்று அவள் அதியின் நினைப்பில் கூகுளாண்டவரையும் கேட்கவில்லை திருமணத்திற்கு பின் கேட்பதற்கு போனும் கையில் இல்லை அப்படி இருந்தும் அவள் பொறுப்பானவளாக இருப்பதாக சாரு கூறினால் அதை எப்படி நம்புவது..??
யாழியால் சுத்தமாக ஏற்க முடியவில்லை.
‘எப்படி..?? எப்படி இது சாத்தியம்’ என்று பல நேரம் இதே சிந்தனையில் உழன்று கொண்டிருந்தவள் பார்வை கையில் இருந்த போனில் பட உடனே அதை திறந்திருந்தாள்.
Advertisement
அவளது பல அழைப்புகளுக்கு பதிலின்றி போகவும் கைபேசியை வைத்து விட்டு புத்தகத்தை எடுத்து கொண்டு படிக்க அமர்ந்தவள் இரவு உணவை முடித்து கொண்டு அதிர்துடியனுக்காக காத்திருக்க தொடங்கினாள்.
Advertisement
ஆம் இப்போது கைபேசியை யாழி திறந்ததே இது குறித்து அதிரிடம் கேட்டுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தானே தவிர கூகுளெல்லாம் அவள் நினைவில் இல்லவே இல்லை…
அரசியல் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் நாடாளுமன்ற, சட்டமன்ற செயல்பாடுகள் குறித்த செய்திகளை பார்க்க தொடங்கிய பின் இப்போதெல்லாம் அவனுடன் உரையாடும் நேரம் அதிகரித்திருப்பதில் பாடம் சம்பந்தமாக மட்டுமின்றி பொதுவாகவே அவளுக்கு எழும் சந்தேகங்களை தீர்த்து வைப்பதும் கணவனே என்றாகி போயிருந்தது.
ஆனால் இரவு அவர்கள் அறைக்குள் நுழைந்த கணவனின் முகத்தில் இருந்த அயர்ச்சியை கண்டவளுக்கு அது நேரம் வரை கொண்டிருந்த சந்தேகங்கள் யாவும் மறந்து போக சட்டென புத்தகத்தை வைத்து விட்டு அவனிடம் சென்றவள்,
Advertisement
‘என்னாச்சு..?? ஏன் இவ்ளோ டையார்ட்டா இருக்கீங்க..??’ என்றவாறு அவன் கையில் இருந்த கணினி பையை வாங்கி இருந்தாள்.
‘தலைவலி யாழி’ என்றவாறே அவன் தன் சட்டை பட்டன்களை கழற்றிவிட்டு அப்படியே மெத்தையில் சரிந்திருந்தான்.
யாழியோ அறையில் ஓடிக்கொண்டு இருந்த ஏசியை அணைத்து விட்டு பேனை போட்டவள் உடனே கீழே ஓடி சென்று அடுத்த ஐந்து நிமிடத்தில் அவனுக்கான காபியோடு வர இங்கு அதிர்துடியனோ சோர்விலும் தலைவலியிலும் படுத்தவுடனே உறங்கி போயிருந்தான்.
‘என்னங்க எந்திரிங்க…’ என்று அவனை எழுப்பி காபியை குடிக்க வைத்தாள்.
அவன் குடித்து முடித்து படுக்க போக, ‘ஒரு நிமிஷம் இருங்க’ என்று அவன் தலையை தன் மடியில் தாங்கி நெற்றியில் தைலம் பூசி இதமாக பிடித்து விட்டவள் ‘இப்போ தூங்குங்க’ என்று அறை விளக்கை அணைத்து விட்டு வெளியில் வந்து பாடங்களை தொடர்ந்திருந்தாள்.
அதே சமயம் அடுத்த இரண்டு மணி நேரத்தில் அதிர்துடியன் புன்னகை முகமாக வெளியில் வருவதை கண்டவள் ‘இப்போ ஓகேவா உங்களுக்கு..?? தலைவலி சரி ஆகிடுச்சா..?? இங்கயே சாப்பிடுறீங்களா..?? இல்ல கீழ வரீங்களா..??’ என்று அடுத்தடுத்து கேள்விகளை தொடுக்க,
“பீலிங் பெட்டர் !! நீ படி நான் போய் சாப்ட்டுக்குறேன்” என்றவன் இன்னைக்கு டாப்பிக் டிவோர்ஸ் யாழி அதை பத்தி ப்ரிபேர் பண்ணு’ என்றவன் அடுத்த வாரம் தொழில்நுட்ப வளர்ச்சியும் அதன் சாதக பாதகங்கள் என்ற தலைப்பை கொடுத்திருந்தான், பின் பெருகி வரும் விபத்தின் காரணங்கள், அதை தொடர்ந்து கூட்டு குடும்பம் குறித்து என்று ஒவ்வொரு நாளும் புது புது பொது தலைப்புகள் கொடுத்து அது குறித்த தகவல்களை இணையத்தில் சேகரித்து அவளே அதை பற்றி பேசும் வகையில் அவளை தயார் படுத்தி இருந்தான்.
பின்னே பல வருடங்களாக சிந்தித்து செயல்பட தெரியாமல் சிறு விஷயத்திற்கும் கைபேசியை எடுத்து கூகுளையும் யூடியூபையும் கேட்டு முடிவு செய்பவளுக்கு தனித்து இயங்குவது தன் அறிவை பயன்படுத்தி சூழலை கையாள்வது அடுத்த நிலைக்கு நகர்வது என்பது அத்தனை எளிதான காரியமல்ல…
அதே சமயம் சாரு கூறியது போல அவளது இலட்சியத்தையும் குடும்பத்தையும் போட்டு யாழி குழப்பி கொள்ளவே இல்லை இரண்டையும் அழகாக ஏற்று அதற்க்கான நேரத்தை ஒதுக்கி இருந்தாள்.
அதிர்துடியனும் இப்போதெல்லாம் தனக்காக யாழி செய்யும் எதற்கும் அவளை மறுப்பதில்லை, என்ன ஒன்று அவனுக்காக விதவிதமாக சமைத்து அவளே பரிமாறி அவன் பாராட்டுக்காக அவன் முகம் பார்த்து நிர்ப்பவளை இழுத்தணைத்து முத்தாட துடிக்கும் மனதை கட்டுபடுத்த தான் அரும்பாடு பட்டுபோவான்.
மரகதமும் எந்நேரமும் படித்து கொண்டிருக்கும் பெண்ணின் சிறு ஆசைகளையும் மகனின் வார்த்தைக்காக தடுக்கவில்லை… பெரும்பாலும் காலை மற்றும் இரவு உணவை அவரோ அல்லது சாருவோ ஏற்று கொண்டனர்.., மதியம் மட்டும் ஆருவும் யாழியும் சேர்ந்து சமைப்பர்.
இப்போதெல்லாம் பெரும்பாலும் அவளுக்கான நாட்களில் யாழியை லாங் டிரைவ் அழைத்து சென்று விடுவான், பயணத்தின் போது இருவரின் உரையாடலும் அன்றாட நாட்டு நடப்பை அலச தொடங்கி விடும்..
அதன் பின் யாழிக்கு எதை பகிரவும் அதிர்துடியன் வேண்டும்… எந்த சந்தேகமாக இருந்தாலும் முதலில் அவனுக்கு அழைத்து கேட்டுவிடுவாள்.., சந்தேகத்தை சாக்காக கொண்டு அவனுடனான நிமிடங்கள் இன்னுமே நீள்வதில் பெண்ணவளுக்கு பெரும் மகிழ்ச்சி.
ஆனால் அடுத்த மூன்று மாதங்களில் புத்தகத்தை தாண்டி நடப்புகளை படிக்க படிக்க, செய்திகளை கேட்க சாதாரண அரிசி, கோதுமையில் தொடங்கி எங்கும் எதிலும் விரவி இருக்கும் உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை தன்னை சுற்றி நடப்பதை உற்று கவனிக்க தொடங்கியவளிடம் சிறுக சிறுக மாற்றம் தென்பட்டது.
***********************************************
முக்கியமாக இப்போது தொழிநுட்ப யுகத்தில் பெருகி வரும் குற்றங்கள் அவளை மாபெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னே பிறந்த குழந்தை தொடங்கி, வயதான பெண்மணி வரை பாலியல் கொடுமைக்கு உள்ளாவதும், கைபேசியால் ஏற்படும் நொடி நேர கவன சிதறலும் அதனால் ஏற்ப்படும் உயிர் இழப்புகளும், தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தி அதன் மூலம் ஒரு கும்பல் சத்தமின்றி சம்பாதிப்பதும் அதற்கு அப்பாவி பெண்கள் பெருமளவில் பலியாகி போவதும்…
ஆன்லைன் மோசடிகளால் பெருகி பல ஆண்கள் ஏமாறுவதும், பெண்களை தங்கள் வலையில் வீழ்த்தி அவர்களை தடம் மாற செய்து குடும்பங்களை சிதைப்பது என்று பெருகி வரும் குற்றங்களை படிக்க, பார்க்க தொடங்கியவளுக்குள் பெரும் மாற்றம்.
அதிலும் காதல் என்ற பெயரில் திருமணத்திற்கு முன் அத்துமீறுதல் சரியே அதுவும் தனி மனித சுதந்திரமே என்று வரையறுக்கபடுவது, அங்கிகாரம் இன்றி வாழ்ந்து புதுமை படைத்தல் ட்ரென்ட்டாகி போயிருப்பது, திருமணத்திற்கு பின் கள்ள உறவுகள் அதனால் கொலை , தற்கொலை என்று குற்ற செயல்கள் அதிகரித்து வக்கிரங்கள் நிரம்பி வழிவதை எல்லாம் கண்டவளுக்கு தாள முடியவில்லை..,
தன்னை சுற்றி இத்தனை கொடூரங்கள் நடந்து கொண்டிருக்க அவளோ இதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல ஷேர்சேட், ஸ்னேப்சேட், செல்பி லைக்ஸ் என்று வேறொரு பேண்டசி உலகில் மூழ்கி கிடந்ததை உணர்ந்து வெட்கி போனாள்.
சிறுமிகளுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகள், காதல் என்ற பெயரில் அறியா பெண்களை வசப்படுத்தி விற்ப்பது, அவர்களை கொண்டு வீடியோ தயாரித்தல், பெண்களை மையபடுத்தி எளிதாக சம்பாதிக்கும் இலக்கோடு இன்றைய இளைஞர் பட்டாளம் திசை மாறி போயிருப்பதை கண்டு நொறுங்கி போனாள்.
பின்னே அவர்கள் வீட்டில் தாயாக, தாரமாக, குழந்தையாக பெண்கள் இல்லையா..?? எப்படி இது போல செய்ய முடிகிறது..??
பொது வெளிகளில் குறைந்து வரும் பாதுகாப்பு, பட்டன் கேமரா, பேனா கேமரா, என்று புது புது வடிவங்களில் கேமராக்கள் எங்கெங்கோ பொருத்தப்பட்டு பெண்களே அறியாமல் அவர்களை வியாபராமாக்கி கொண்டிருப்பதும், தொழில் நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் அடுத்தவரின் கைபேசியில் ஊடுருவுதல் அவர்களின் அந்தரங்கங்களை அவர்களுக்கே தெரியாமல் திருடுதல் என்று பெருகி வரும் குற்றங்களின் வடிவம் கணக்கில் கொள்ள முடியாத அளவு விஸ்வரூபம் எடுத்து நிற்ப்பதை கண்டு அதிர்ந்து போனாள்.
அனைத்திற்கும் மேலாக சர்வசாதரணமாக மளிகை கடையில் பொருள் வாங்குவது போல நீதிமன்றங்களை நாடி விவாகரத்து வாங்கும் தம்பதிகள், சிதைந்து கொண்டிருக்கும் குடும்ப உறவுகள், தடம் மாறி செல்லும் பிள்ளைகள், அவர்களின் அங்கமாகவே மாறிப்போன கைபேசி அதனால் ஏற்ப்படும் பிரச்னைகள், அகக்காரணிகள் மட்டுமின்றி புறக்காரணிகள் போதை பழக்கம், அழுத்தங்கள், தற்கொலைகள், வலுவிழந்து வரும் சட்டங்கள், பெண்களின் பாதுகாப்பை சீர்குலைக்கும் வகையில் வழங்கப்படும் தீர்ப்புகள் … அப்பப்பாஆஆஆஅ இன்னும் என்ன என்று இருநாட்கள் ஊன் உறக்கம் கொள்ள முடியாத அளவு யாழியின் மனதை அத்தனையும் ஆட்கொண்டு பிசைய அவளுள் பெரும் போராட்டம்.
“என்ன நடக்கிறது நாட்டில்..?? ஏன் இந்த திடீர் மாற்றம்..? எதனால் நாடு அழிவு பாதையை நோக்கி போய் கொண்டு இருக்கிறது” என்று கடந்த இருபது முப்பது வருட வரலாறை முதலில் படித்து பார்க்க தொடங்கினாள் முக்கியமாக கைபேசியின் அசுர வளர்ச்சிக்கு முன் இருந்த நாடும் மக்களும், அவர்கள் சிந்தனையும், வாழ்வியலும் எப்படி இருந்தது என்று படிக்க தொடங்கினாள்.
படித்து முடித்தவளுக்கு அத்தனை எளிதில் மீள முடியவில்லை பின்னே எப்படி தான் இத்தனை அறிவீனமாக, கபடமற்று, வெகுளியாக இருந்து இருக்கிறோம்… நாட்டில் பாதுகாப்பின்மை அதிகரித்து எண்ணி பார்க்கவே முடியாத கொடூரங்கள் நாள்தோறும் ஆங்காங்கே அரங்கேறி, இத்தனை அக்கிரமங்கள் தலை விரித்தாடி கொண்டிருக்கும் நிலையில் என்ன செய்து கொண்டிருந்தாள் அவள்..? என்ற சுயவிசாரணை ( self interrogation ) பெண்ணவளிடம்..!!
அதிலும் ஆன்லைன் குற்றங்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் அரங்கேறும் மோசடிகள், பெண்களின் அறிவை, ஆளுமையை, தலைமை பண்பை, திறனை, எல்லாம் புறம் தள்ளி அவர்களின் அழகை பிரதானபடுத்தி அழகு சாதன பொருட்களின் விளம்பரங்கள் எங்கும் நிறைந்திருப்பதை கண்டவள் திகைத்து போனாள்.
பின்னே பெண்ணின் புறத்தோற்றத்தை அழகு படுத்துவது தான் பெண் முன்னேற்றம், அதுவே அவளின் நம்பிக்கையை அதிகரிக்கும் எனும் வகையில் பெருகி வரும் அழகு நிலையங்களும் அழகுகளை நிபுணர்களுமே சாட்சியாகி இருப்பதை கண்ட யாழிக்கு இப்போதுதான் அதன் பின்னணி பிடிபட்டது…,
பின்னே அவள் யூடியூப் சேனலில் பெரும்பாலும் அவள் அழகை வருணித்து அதை மேலும் அழகாக்கும் படி தானே கருத்துகள் வரும்.. அழகு என்றால் பெண் என்ற கருத்தை ஆழமாக பெண்கள் மனதில் விதைத்து கருணை, பாசம், பொறுப்பு, அன்பு, நிதானம், பொறுமை போன்றவற்றை அவர்களிடம் இருந்து சத்தமே இல்லாமல் திருடி செல்கிறதே இந்த சமூக வலைதளமும் ஊடகமும்.
அவர்கள் அழகை புகழ்ந்து பெண்களுக்கு விரிக்கப்படும் வலை அவர்களே அறியாமல் அவர்களை ஒருவிதமான மாயசுழலில் சிக்க வைப்பது, இது தான் நிஜம் என்று நம்பவைப்பது.., அதன் மூலம் அவர்களின் புகைப்படங்களை பகிர வைப்பது.
அங்கே பகிரப்படும் புகைப்படங்கள் கொண்டு அவர்களை நோக்கிய மீடியா வெளிச்சம், அதில் கவரப்பட்டு விட்டில் பூச்சிகளாக வீழும் பெண்கள், ரீல்ஸ், ஷார்ட்ஸ், ட்ரென்ட்டிங் என்று யாரோ ஒரு முட்டாள் தொடங்கி வைத்ததை கொண்டு சரியா தவறா என்று கூட சிந்திக்காமல் அந்தரங்கங்கத்தை அம்பலமாக்கும் பெண்கள் என்று தனிமனித ஒழுக்கமின்றி, கட்டுபாடுகள் இன்றி குப்பையாகி கொண்டிருக்கும் மனித மனங்களை கண்டு வெதும்பி போனாள்.
அதே சமயம் இத்தனை தூரம் இல்லையென்றாலும் தானுமே ஒரு காலம் வரையில் இந்த மந்தைகளுக்கிடையில் தானே இருந்தோம் என்று அவளுக்கு தோன்றாமல் இல்லை.., ஒருவேளை இப்படியே முட்டாள் தனமாக தொடர்ந்திருந்தால் தன் வாழ்வு என்னவாகி இருக்கும்..?? என்ற அச்சம் அவளை ஆட்டி படைத்தது..,
*************************************

