Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Niththirai Kalaiththa Maayaval

Aarpitha’s Niththirai Kalaiththa Maayaval 33

 

மேகம் திறந்து கொண்டு

மண்ணில் இறங்கி வந்து

மார்பில் ஒளிந்து கொள்ள வா வா



Advertisement

மார்பில் ஒளிந்து கொண்டால்

மாறன் அம்பு வரும்

கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா

Advertisement

 

Advertisement

என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையா

மலர் சூடும் வயதில் என்னை மறந்து போவதுதான் முறையா

நினைக்காத நேரமில்லை காதல் ரதியே ரதியே

Advertisement

உன் பேரை சொன்னால் போதும் நின்று வழி விடும் காதல் நதியே

 

என் சுவாசம் உன் மூச்சில்

உன் வார்த்தை என் பேச்சில்

ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா

 

மடியில் இருந்த படி… வருவது மீரா தான் என்பதை மிக கட்சிதமாக புரிந்து கொண்டான் அன்பு…அதை உணர்த்த அடுத்த நொடி…அவனுள் சொல்ல முடியாத உணர்வு ஒன்று எழ… அது மகிழ்ச்சியா, அதிர்ச்சியா என்று கூட அவனால் சொல்ல முடிய வில்லை 

 

அது என்ன என்பதை யோசிக்கும் மனநிலையிலும் அவன் இல்லை.. இவ்வளவு ஏன்… அருகில் அவனின் மேல் சாய்ந்த படி நின்று கொண்டு இருக்கும் இனியவள் கூட அவனின் நினைவில் இல்லை… 

 

அவளை கண்டு கொள்ளாமல்…அடித்து பிடித்து கொண்டு கீழே சென்றான்.. மீராவை பார்க்க 

 

அவன் கூறிய பெயரும்.. அதற்கு அவனின் நடவடிக்கையும்.. இனி நிகழ போவதை கிட்ட தட்ட இனியாவிற்கு புரிய வைத்தது 

 

முற்றத்தில் அனைவரும் அமர்ந்து.. ஒரு புறம் பெண்கள் பூ கட்டுவதும்… மறுபுறம் ஆண்கள் கணக்கு வழக்கு மற்றும் நாளைய நாளிற்கு தேவையான ஏற்பாட்டில் முழ்கி இருக்க… மாடியில் இருந்து அன்பின் கண்ணிற்கு அங்கு இருப்பவர்கள் யாரும் கண்ணிற்கு தெரிய வில்லை… 

 

முற்றத்தில் வைஷுவின் மடியில் படுகிறேன் என்ற பேரில்.. மீனுவை வெறுப்பேத்தி கொண்டு இருந்த இலக்கியனின் காலையும் மிதித்து விட்டு தான் சென்றான் அன்பு… 

 

“அம்மா” அவன் அலற… பின்பு தான் அங்கு நடப்பது அனைவர்க்கும் புரிய… 

 

“இவன் எதுக்கு இப்டி ஓடுறான்.. இனியாவை பார்க்க தானே போனான்… இப்போ எங்க போறான்” என்று யோசித்தவர்களின் பார்வை…வீட்டை நோக்கி வரும் அந்த நபரின் மேல் பட.. அதுவும் அம்பு அவர்களை நோக்கி தான் ஓடுகிறான் என்பது புரிய 

 

“யாரு அது… புதுசா இருக்கு” ஜானகி கேட்க 

 

“அன்போட ஆபீஸ்ல வேலை செய்யுறவங்களோ” என்றார் செல்லம்மாள் 

 

[the_ad id=”6605″]

 

 

“அவுங்க எல்லாரும் நாளைக்கு தானே வராதா சொன்னாங்க.. நான் இப்போ தான் பேசுனேன்… பாதி வழியில வந்து கிட்டு இருக்கறதா சொன்னாங்க” தெளிவு படுத்தினான் இலக்கியன் 

 

“அப்போ இது யாரு” என்று பலரை பற்றி யோசித்தார்களே தவிர.. மீராவாக இருக்க கூடும் என்ற எண்ணம் யாருக்கும் வர வில்லை… உண்மையில் அப்டி நடக்க வேண்டும் என்று யாரும் விரும்ப வில்லை என்பது தான் நிஜம் 

 

அனைவரும் பார்வையும் வாசலில் நிலைத்து இருக்க.. அன்போ அவரை நெருங்கி…அவரின் தொலை பிடித்து.   எதோ பேசுகிறான்..  அவர் அதற்கு எதோ பதில் சொல்ல வர… பின் அழுது கொண்டே அன்பை அணைத்த படி அழுக துவங்குகிறாள் 

 

அவள் அன்பை அனைத்தும் தான்…அனைவர்க்கும் எதோ சரி இல்லை என்று தோன்ற.. அப்போது தான் மாடியில் இருந்து கீழே இறங்கினால் இனியா… வருபவளை பார்த்த அனைவரும் 

 

இனியா வந்து இருக்கறது யாருனு உனக்கு தெரியுமா….எதோ சரியா படலை எனக்கு” என்று ஜானகி அவளை நெருங்க 

 

எங்கோ ஆணி அடித்தார் போல் பார்வையை பதித்த படி… பேய் அறைந்தவள் போல் வந்து நின்றவள்.. ஜானகியின் இரண்டு முறை கேட்ட பின் தான்… வாயை திறக்கவே செய்தாள்..  ஆனால் அவளின் வாயில் இருந்து வந்தது ஒரே ஒரு வார்த்தை தான் 

 

“மீரா” என்றாள் கிட்டத்தட்ட உடைந்த குரலில்.. அவளின் அந்த ஒரு வார்த்தையே அங்கு இருப்பவர்களின் முகத்தின் சந்தோசத்தை மொத்தமாக பிடுங்கியது 

 

யாழினுக்கும்,செழியனுக்கும் தான் அவர்கள் யார் என்பது புரியாமல் நின்று கொண்டு இருந்தாலும்… அவர்கள் அனைவரின் முகத்தில் இருக்கும் அதிர்ச்சியே எதோ சரி இல்லை என்பதை புரிய வைத்தது 

 

மீராவுடன் வீற்றிக்குள் வந்தான் அன்பு…வந்தவன் கண்ணிற்கு மீராவை தவிர யாரும் தெரிய வில்லை… 

 

“அம்மா, அப்பா.. இதோபா மீரா… நான் காணோம் காணோம்னு இத்தனை நாளா தேடிகிட்டு இருந்தேனே, என்னோட மீராபா… என்னை தேடி வந்துட்டா” என்று அவளை அவன் அணைக்க 

 

அது மற்றவர்களுக்கு அருவெறுப்பாக இருந்தாலும்.. இனியாவிற்கு தான்… “என்னோட மீரா” என்ற வார்த்தை கத்தியால் அவளின் மனதை கீறுவது போல் இருந்தது 

 

அவளை நெருங்கிய ஜானகி..”இனியா…மீரா அன்போட நேத்து… ஆனால் நீ அவனோட இன்று மற்றும் நாளை… உன் கழுத்துல அவன் தாலி கட்டி இருக்கான்..  நீ இப்டி அதிர்ச்சியில நின்னு வேடிக்கை பார்க்க முடியாது.. போ…முன்ன போ…என்னனு கேளு” என்று அவர் கூற… அப்போதும் அசையாமல் இருந்த அவளின் கையை பற்றி கொண்டு இலக்கியன் அவளை அவர்களுக்கு முன் நிறுத்தினான் 

 

இனியாவை பார்த்த பின்.. மீராவை விட்டு விலகி நின்ற அன்பு “இனியா இது…இது…மீரா… நாங்க… டெல்லி” வார்த்தை கூட தடுமாறியது அவனுக்கு 

 

அடுத்து எதோ பேச வாய் எடுத்தவனை, வாயடைக்க செய்தாள் மீனா அவளின் பேச்சால் 

 

“இவ.. இவ… இவ எப்படி இங்க….நீ இங்க என்ன பண்ணுற” என்றாள் இனியவை பார்த்த படி 

 

“இவளை உனக்கு முன்னவே தெரியுமா…எப்படி தெரியும்? ” என்றான் அன்பு இன்றும் புரியமல் 

 

“அன்பு… அன்பு… இவ தான் அன்பு… இவளால தான் எனக்கு இப்டி ஒரு நிலைமை…இவளால தான் நான் உன்னை விட்டு பிரிஞ்சேன்…எல்லாத்துக்கும் இவ தான் காரணம்” என்றாள் கோவமாக 

 

அங்கு இருந்த யாருக்கும் மீரா கூறுவது புரியாமல் போக…இனியாவின் முகம் மட்டும் பரிச்சயத்தை உறுதி செய்தது 

 

“என்ன… என்னை நியாபகம் இருக்கா.. இல்லை அதையும் மறந்துட்டியா…அன்னைக்கு என்ன அடிச்சி போட்டுட்டு…திரும்பி கூட பாக்காம ஓடுனியே நியாபகம் இருக்கா… இல்லை நான் நியாபகம் படுத்தவா”

 

[the_ad id=”6605″]

 

 

 

“நியாபகம் இருக்கா… அந்த சாந்தி நிவாஸ் கேர்ள்ஸ் ஹாஸ்டல்….aiims ஹாஸ்பிடல்…இதெல்லாம் நியாபகம் இருக்கா இல்லை அதையும் மறந்துட்டியா” கோவத்தில் கத்தினாள் மீரா 

 

அன்பு… அன்னைக்கு உங்க ஊருக்கு போகணும்னு வர சொன்னா அப்போ…நான் கண்டிப்பா வரேன்னு உன் கிட்ட சொன்னேன்ல… நான் உன்ன பார்க்க தான் வந்துகிட்டு இருந்தேன்… 

 

என்னோட ரூம்ல துணி எல்லாம் பேக் பண்ணிக்கிட்டு இருக்கும் போது… திடீருனு மயக்கம் வந்துடுச்சி…கொஞ்சம் நேரத்துல சரி ஆகிடுச்சு…அப்பறம் பாத்துக்கலாம்… மொதல்ல ட்ரெயின் பிடிக்கறது தான் முக்கியம்னு கிளம்பிகிட்டு இருந்தேன்…

 

அப்போ திடீர்னு எங்க ஹாஸ்டல் வார்டன் கூப்பிட்டு எதையோ பேசிகிட்டு வேற இருந்தாக… அதுல இன்னும் நேரம் ஆகிடுச்சு…ட்ரெயின்க்கு அறை மணி நேரம் தான் இருந்தது… சரி உனக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லலாம்னு உனக்கு போன் பண்ணேன்… பட் அது சுவிட்ச் ஆப்ல இருந்துது..  

 

சரி… இங்க இருந்து இருபது நிமிஷம் தானே… வெளிட்ட ஆட்டோ பிடிச்சி போய்ட்டா… சீக்கிரம் போய்டலாம்னு பேட்டியோட ஆட்டோ பிடிக்க போய்ட்டு இருந்தேன்… 

 

அப்போ தூரத்துல இருந்து இரு கார் ஒன்னு வேகமா வந்துது… நானும் சுதாரிச்சி… கொஞ்சம் நகந்து தான் நின்னேன்… பட் ரொம்ப நகர முடியல… ஏன்னா நான் ரோடோட நடுவுல… அதை கிராஸ் பண்ண நின்னுகிட்டு இருந்தேன்… 

 

நான் ஒதுங்கி நின்னு… காரை பார்க்கர்துக்குல்ல அது என்னை அடிச்சி தூக்கி போட்டுடுச்சி….எனக்கு எதுவும் புரியர்த்துக்கு முன்னாடியே என்னோட தலையில இருந்து ரத்தமா கொட்ட ஆரம்பிச்சுது…

 

நான் இவளை பார்த்தேன்… கார் இவ தான் ஓடிக்கிட்டு இருந்தா… யாரையோ திரும்பி திரும்பி பார்த்துகிட்டு..  ரோடுல கவனம் இல்லாம…வந்து என்னை இடிச்சிட்டா… 

 

இடிச்சது மட்டும் இல்லாமல்… அங்கேயே என்னை, ரதத்தோடா விட்டுட்டு ஓட பார்த்தா… அதுக்குள்ள அங்க இருக்கவங்க அவளை மடக்க முயற்சி பண்ண… அவ கைல ஒரு குழந்தையை வெச்சிக்கிட்டு… காரை அங்கேயே விட்டுட்டு ஓடிடா… 

 

அன்னைக்கு மட்டும் அவ என்னை ஓடிக்காம இருந்து இருந்தா… அன்னைக்கு இடிச்ச அப்புறமும் என்னை கொண்டு போய் ஹாஸ்பிடல்ல சேர்த்து இருந்தா….நான் கோமாவிற்கு போய் இருக்க மாட்டேன்” அழுது கொண்டு திக்கி திணறி கூறினால் 

 

“கோமாவா” என்று அன்பின் பார்வை அவளின் மேல் அதிர்ச்சியில் பட 

 

ஆமாம் அன்பு.. ஒரு மாசத்துக்கு முன்னாடி தான் கோமால இருந்து எழுந்தேன்… எத்தனை நாள் இருந்தேனோ தெரியல… எழுந்த உடனே உன்னை பார்க்கணும்னு உன்னை தேடினேன்..அப்போ தான் லோகநாதன்ன்ற ஒரு நல்லவர் எனக்கு உன்னோட வீட்டு முகவரியை குடுத்து… இங்க வரதுக்கு ஏற்பாடும் பண்ணாரு… என்று அவள் முடிக்க 

 

“இப்போவாவது சொல்லு உனக்கு என்னை தெரியல…என்னை நியாபகம் இல்ல” என்று பாய்ந்தால் இனியா மேல் 

 

அவள் என்ன கூறுவாள் பாவம்… அன்று அவள் இருந்த சூழ்நிலை என்ன என்று கூறினால் மட்டும் மீராவிற்கு புரியவா போகிறது… 

 

 

[the_ad id=”6605″]

 

 

 

மீராவிற்கு எப்படி கூறுவாள் அவள்… அன்று மட்டும் அவளை விட்டு விட்டு ஓடி செல்லாமல் இருந்து இருந்தாள்… இன்று அவள் உயிருடன் கூட இருந்து இருக்க மாட்டாள் என்று… சொன்னாலும் புரியுமா அவளுக்கு 

 

அனைத்தையும் கேட்டு கொண்டு இருந்த அன்பிற்கு… மீரா பாவமாகவும்….இனியா எதோ ராட்சசி போலவுமே பட்டாள்… அவனின் பார்வையே அதை உணர்த்தவும் செய்தது…. 

 

இதில் சகுந்தலா வேறு… “என்ன இனியா இது…மீரா சொல்லுறது எல்லாம் உண்மையா.. அவளை கொன்னுட்டு தான் அன்பை கல்யாணம் பணிக்க வந்தியா” என்று எரியும் கொள்ளியில் எண்ணெயை ஊற்ற 

 

இனியா பாவம்… அவள் ஆம் என்று கூறுவாளா… இல்லை என்று கூறுவலா… அவளின் அன்றைய நிலை யாருக்கு சொல்லி புரிய வைப்பது என்று புரியாமல் நிற்க… அவளுக்கு ஆபத்பாந்தவனாய் வந்தான் இலக்கியன் 

 

“என்ன இது… எல்லாரும் இப்டி கேட்ட என அர்த்தம்… அன்னைக்கு இனியா எந்த நிலமைல இருந்தானு உங்களுக்கு தெரியாதா… அப்டி இருக்கும் போது…என்ன இது மீராவை கொன்னுட்டு அன்பை கல்யாணம் பணிக்க வந்தியான்ற பேச்சு எல்லாம்” இனியாவை நெருங்கிய படி இலக்கியன் பேச… ஜானகியும் அவளுக்கு ஆதரவாக தான் இருந்தார் 

 

“என்ன அன்புக்கு கல்யாணமா” என்று திக்கி திணறிய படியே அவள் கேட்டு கொண்டே அவ்விடத்தில் மயங்கி விழுந்து விட 

 

ஹையோ என்று பதறிய படி இனியா அவளை நெருங்க பார்க்க… 

 

அன்பு தன்னுடைய கையை காட்டி… “போதும்… தொடாதே.. அங்கேயே நில்லு” என்றான் உக்கிர கோவத்தில் 

 

கூறி கொண்டே டாக்டரை அழைக்க சொல்லி விட்டு… மீராவை கையில் ஏந்திய படி… மடியில் இருக்கும் தான் அறைக்கு சென்றான் அன்பு 

 

 

செல்லும் அவர்களையே பார்த்து கொண்டு இருந்த இனியா… 

 

வாழ்க்கை எந்த இடத்துலயும் எப்படி வேணும்னாலும் மாறும்…எதுவும் நிரந்தரம் இல்லனு சொல்லுறது சரி தாநோ… இப்போதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நாம ஒன்னு சேரணும்னு காதலே ஆசைபடுது… என்னை விட்டு போகிடாதானு அவ்வளவு ஆசையோட எனக்கு செயின் கிபிட் குடுத்து…. அன்போட கையில ஆனந்தமா நின்னுகிட்டு இருந்தேனே… நாளைக்கு நிச்சயம்னு எவ்வளவு சந்தோசமா இருந்தோம்… 

 

அது அத்தனையும் எவ்வளவு அழகா இருந்துது…..யாருக்கு தெரியும்… மீரா வருவா… அவளோட வாழ்க்கையின் ஒரு உண்மை என்னோட வாழ்க்கையாவே கேள்வி குறியாகிடும்னு யார் எதிர் பார்த்தா…

 

ஆனா இப்போ… சந்தர்ப்ப சூழ்நிலை நிலைல நடந்த அந்த ஒரு சம்பவம்…எனக்கும் அன்புக்கும் இருந்த மொத்த உறவையுமே கெடுத்து… 

 

இரு பதினஞ்சு நிமித்ததுல அழகான கனவா இருந்த என்னோட வாழ்க்கை..  இப்போ பயமுறுத்துற, கோரமான நிஜமா எப்படி மாறலாம்…இதை நான் எப்படி ஏத்துக்க போறேன்…அன்பு இல்லாம எப்படி வாழ போறேன்…. 

 

என்று யோசித்த படி… கண்ணில் நீர் பெறுக தரையில் அமர்ந்த படி விழுந்தாள் இனியா 

 

                       மாயம் தொடரும்…….  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!