Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Aathiyum Anthamumaai

Amuthangalaal Nirainthaen 14 1

அமுதங்களால் நிறைந்தேன்…

14

 

 இரவு மணி பதினொன்று… எப்போதும் லதா… எட்டுமணிக்கே மேலே சென்றுவிடுவாள்… இளாதான் ஆபீஸ் முடித்து, உண்டு மேலே வர லேட் ஆகும்… இன்று லதா லேட்.



Advertisement

இன்னும் கிட்சென் விளக்கு அனையவேயில்லை… மாமியாரும் மருமகளும்… குடும்ப ரகசியம் பேசிக் கொண்டிருந்தனர்… ‘அன்னிக்கு திடீர்ன்னு சொல்றான் லதா… ஒரு பெண்ணை விரும்பறேன்னு… காவ்யா வீட்டில் எப்படி சொல்றது.. அத்தோட அந்த பொண்ணுக்கு ஏதோ ஒரு மாசத்தில் கல்யாணம் பண்ணனுமாம்… நான் எத பார்ப்பேன்… போடான்னு எழுந்து வந்திட்டேன்… உன் மாமாக்கு கோவம் இன்னமும் அப்படியேதான் இருக்கார்… இளா பேசினான்… ஒன்னும் கண்டுக்கல… என்னமோ பண்ணுங்க டான்னு சொல்றார்… ‘ என கதை ஓடிக் கொண்டிருந்தது… 

இளா… பொறுத்து பொறுத்து பார்த்து மேலிருந்து சத்தம் போட்டான் “லதா… தீபக் அழறான்…” என. அப்போதுதான் அசைந்தாள் மனையாள். அன்னையும் “போ… போ… பையன் தேடுவான்..” என சொல்லி.. கிட்சனை விட்டு வெளியே வந்தனர்.. இருவரும்.

இளா காத்திருந்தான் மனையாளுக்காக… ஆனால் லதா லிங்காவின் லவர் யார்… என கேள்வியாக கேட்டுக் கொண்டிருந்தாள்.. காண்டான இளா.. “ஏண்டி இவ்வளோ நேரமா… மாமியாரும் மருமகளும் என்ன பேசினீங்க… என்னை வந்து கேள்வி கேட்டுகிட்டு.. பேசினா…” என சொல்லி கடிந்தபடியே அவளை அனைத்துக் கொண்டான்.. லதாவும் ஏதும் பேசவில்லை.. கணவனுடன் ஆசையாக இசைந்தாள்.

Advertisement

 

Advertisement

லிங்காக்கு இன்று, ஜாகிங் செல்ல நேரமில்லை… இன்று அதிகாலையிலேயே… கணபதி ஹோமம்… கூடவே இளாவிற்கு ஆயுஷ் ஹோமம் என பூஜைகள் நடந்ததால்… வீட்டில் எல்லோரும் அங்கிருப்பதால்… லிங்கா வெளியே செல்ல முடியவில்லை.. 

இன்று எப்படியும் தாமு அங்கிளிடம் பேசிவிட வேண்டுமென நினைத்திருந்தான்… ஆனால், எல்லாம் தடைபட்டது போல.. அமைதியாக பூஜையில் தன்னை ஈடுபடுத்துக் கொள்ள முடியாமல் திணறியபடியே அமர்ந்திருந்தான்.

 

Advertisement

[the_ad id=”6605″]

 

 

இளா லதா தம்பதி… ஆனந்தமாக பூஜையில் அமர்ந்திருந்தனர். மிச்ச மீதி ஒட்டிக் கொண்டிருந்த தயக்கமும் அவநம்பிக்கையும் கூட… இந்த பூஜையில் கழிந்தது போல.

பிள்ளைகள் இன்னும் எழவில்லை.. கீழே காவ்யாவின் அறையில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். காவ்யா இப்போதுதான் எழுந்து குளித்து மேலே பூஜை நடக்கும் அறைக்கு வந்தாள்.

ஆக, குடும்பமே அந்த பூஜையில் நின்றது. நல்லபடியாக எல்லாம் முடிந்தது.. பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர் தம்பதிகள்.. பெற்றோருக்கு கண்ணில் நீரே துளிர்த்துவிட்டது. என்னவெல்லாமோ நடந்திருக்கும்… எந்த தெய்வ செயலோ என எண்ணி, கண்ணை துடைத்தப் படியே ஆனந்தமாக பிள்ளைகளை ஆசிர்வாதம் செய்தனர் பெற்றோர்.

இதெல்லாம் பார்க்க லிங்காக்கு நேரமில்லை… மணி ஆறரை இருக்கும் லிங்கா… தாமுக்கு அழைத்து விட்டான். அவரும் போனை எடுத்தார் “அங்கிள்… என்ன வாக்கிங் முடிச்சிட்டீங்களா” என கேட்டான் ஆர்வமாக.

“ம்… லிங்கா நீயேன் வரலை.. என் பொண்ணு உன்னை எதிர்பார்த்தா… இன்னிக்கு அவளுக்கு உன்னை அறிமுகம் செய்யலாம் என நினைத்தேன்..” என்றார் ஏமாற்றமான குரலில்.

லிங்கா சிரித்தான் காரியமாக “அங்கிள்… நாங்க ஏற்கனவே அறிமுகம் ஆயாச்சு… என்ன புதுசா சொல்றீங்க… நான் பேசிக்கிறேன் அங்கிள்… நீங்க வொர்ரி பண்ணிக்காதீங்க…” என்றான் சிரித்தபடியே…

தாமு “ஓ… அப்படியா… அப்போ நல்ல சேதிதான்னு சொல்லுங்க…” என்றார்.

“ஆமாம் … கண்டிப்பா அங்கிள், அண்ணன் பேசுவான் ரெண்டு மூனு நாளில்…” என்றான் சின்ன குரலில்… அதை வெட்கம் என அவர் உணர வேண்டுமாம்…

தாமுவும் அப்படியே உணர்ந்தார்… “ஹா… ஹ…. சந்தோஷம் ப்பா…. நல்லதே நடக்கட்டும்….” என்றார் ஆத்மார்த்தமாக.

பின் லிங்காவிற்கு தயக்கம் ஏதும் இல்லை போல “அங்கிள்… கடனா கொஞ்சம் அமௌன்ட் கேட்டிருந்தேனே… நியாபகம் இருக்கா அங்கிள்…” என்றான்.

அவரும் ஒன்றுமே நடவாதது போல “இருக்கு ப்பா… நான் ஏற்கனவே சொல்லி வைச்சிருக்கேன் லிங்கா… இல்ல, மாப்பிள்ளை… ஹா… ஹா… இனி மரியாதையா கூப்பிடனுமில்ல… ஹா… ஹா….” என சிரித்து முடித்தவர்… “இப்போ எவ்வளோ வேணும் சொல்லுங்க… ஏற்பாடு பண்ணிடுவோம்…” என்றார் பொறுப்பாக மரியாதை பன்மைக்கு மாறி… 

லிங்கா… அவரின் மரியாதையை கருத்தில் கொண்டு ஏதும் சொல்லாமல், என்னுடைய கொள்கையில் மாற்றமில்லை என்பது போல் “அங்கிள்… எனக்கு இப்போ அர்ஜென்ட்டா… 25L வாங்கிக் கொடுங்க… அடுத்த வாரம்.. இதே மாதிரி இன்னொரு பார்ட் வாங்கி கொடுங்க…. எவ்வளோ இன்ட்ரெஸ்ட் சொல்லிடுங்க… நாம பே பண்ணிக்கலாம்… “ என்றான் கறாராக. 

தாமு “லிங்கா… அதுங்க மாப்பிள்ளை…” என தொடங்க.

 

[the_ad id=”6605″]

 

 

லிங்கா “அங்கிள்… நீங்க எப்போது போல கூப்பிடுங்க… ப்ளீஸ்” என்றான் தெளிவான குரலில்.

“ம்…. என்ன இருந்தாலும் மரியாதை கொடுக்கனுமில்ல… மாப்பிள்ளை… இதுக்கு நீங்க வட்டியெல்லாம் கொடுக்க வேண்டாம்.. என் மாப்பிள்ளைகிட்ட யார் வட்டி கேட்பா… ம்… ஹா… ஹா…. 

அதபத்தி எல்லாம் நீங்க ஏதும் பேசாதீங்க… இனி பணம் விஷயம் எவ்வளோ வேணும்ன்னு சொல்லுங்க, நான் ஏற்பாடு பண்றேன்… வட்டி.. அது… இதுன்னு பேச கூடாது. 

எதா இருந்தாலும் கல்யாணத்துக்கு பிறகு என் பெண்ணுக்கு… இல்ல, இல்ல… உங்க மனைவிக்கு செய்ங்க…. சரிதானே” என்றார்… அவனை போலவே… உனக்கு சளைத்தவன் இல்லை என்பதாக. ஆக இருவரும் பிசினஸ் பேசி முடித்தனர். 

லிங்காக்கு இப்போதுதான் நிம்மதி… “ஊப்………” என பெரிதாக முச்சு விட்டு தன்னை நிலைபடுத்திக் கொண்டான். போனை வைத்தான் பேசி முடித்து.

மனதுள்… அடுத்து என்ன… என்ன… என ஏதோ திடம் ஓடிக் கொண்டிருந்தது… போனை கையில் வைத்துக் கொண்டு சுழற்றிக் கொண்டிருந்தான்… முகத்தில் சிந்தனை ரேகைகள்..

ஏதோ நினைவு வந்தவனாக fb சென்று.. நேற்று இரவு, அவளின் அழைப்பை ஏற்றவன்… இன்று… போன் எண் கேட்டான்.. அவளிடம். முகத்தில் ஏதும் ஆசையில்லை… ஆனால், கடமை இருந்தது.

லிங்கா உள்ளே வந்து குடும்பத்தாருடன் பேச்சில் கலந்து கொண்டான்… நேரம் சென்றது அண்ணன் தம்பி இருவரும் உண்டனர்… லிங்கா அலுவலகம் கிளம்ப… இளாவும் கிளம்பினான் தம்பியுடன்.

லிங்கா.. “ஏன் டா… ரெஸ்ட் எடு…” என்க…

“நிறைய எடுத்துட்டேன்… சும்மா கொஞ்ச நேரம்… அப்புறம் ஜோசியர் பார்க்க போகணும்.. சோ, சும்மா ஒரு ரவுண்டு… வா…” என சொல்லி இருவரும் கிளம்பி சென்றனர் அலுவலகம்.

அலுவலகத்தில்… அங்கே இருந்த செந்தில் ஜெகன்.. என எல்லோரும் வந்து பார்த்து சென்றனர்… ‘இப்போ எப்படி இருக்கீங்க சர்..’ என கேட்கவும் செய்தனர்.. ஆனால் இளா அலட்டவில்லை ‘நல்லா இருக்கேன் செந்தில்.. ஜெகன்… தம்பி என்ன சொல்றான்… ஏதேதோ புதுசா பண்றான் போல… எங்க, ஸ்டாக் வந்தாச்சா…’ என பேசியபடியே வேளைகளில் கவனம் செலுத்தினான் இளா.

இங்கு வீட்டில் லதா, பொறுமையாக தன் மாமனாரிடம் பேசிக் கொண்டிருந்தாள் ‘ஏன், மாமா… லிங்கா விரும்பறேன்னு சொல்றாங்க… நம்ம செய்து வைப்பதுதானே கடமை… நல்லதாவே நடக்கும் மாமா..’ என ஏதேதோ சொல்லி அவரை… பெண்பார்க்கும் வைபவத்திற்கு.. வரவைக்க பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தாள்.

சற்று நேரம் இருந்துவிட்டு இளா.. வீட்டிற்கு வந்தான்.. லதாவும் தயாராக இருக்க… இருவரும் ஜோசியரை பார்க்க சென்றனர். நாள் குறித்துக் கொண்டு வீடு வந்தனர்.

இளா, தாமோதரன் வீட்டிற்கு முறையாக அழைத்து பேசினான். தாமுக்கு மூர்த்தி பற்றி தெரியுமாதலால்.. அவர் பேசாததை பெரிதாக எடுக்கவில்லை.

 

[the_ad id=”6605″]

 

பெண் வீட்டில் நிச்சயத்திற்கு ஏற்பாடு செய்தனர். ஆம், லிங்காவின் வீட்டில்.. நிச்சயமும் சேர்த்து ஒரே நாளில் வைக்கலாம் என சொல்லிவிட்டான் இளா… எனவே அதற்கு தக்க ஏற்பாடுகள் நடந்தது சக்தி வீட்டில்.

ஒருவாரம்… சரியாக ஒரு வாரம் நிச்சயத்துக்கு… இருக்க… லிங்கா வீட்டில்… குலதெய்வ கோவிலுக்கு சென்று வந்தனர். அடுத்து காவ்யா வாழ போகும் வீட்டிற்கு நேரே சென்று… இளா தம்பதி முறையாக பேசி.. அழைப்பு விடுத்து வந்தனர்.

அடுத்து, நிச்சயத்திற்கு தேவையான ஏற்பாடுகள் என தாமுவும் இளாவும் கலந்து பேசினர். இதில் எங்கும் லிங்கா தலையிடவில்லை.. கம்பெனியே கதி என்று கிடந்தான் லிங்கா.

பணமும் தடையின்றி கிடைக்க… வேலைகளில் இறங்கிவிட்டான்.. அந்த பெண் சக்திக்கு அழைத்து பேசும் எண்ணம் வரவியில்லை… போன் நம்பர் வாங்கியதுடன் சரி… fbயை பார்க்கவேயில்லை அவன்.

சக்தி தினமும் எதிர்பார்ப்பாள் அவனின் அழைப்பை… எங்கே லிங்காக்கு.. தன் அலுவலகம் தவிர ஏதும் நினைவு இல்லை போல… நிச்சய மோதிரம் வாங்க கூட அவன் வரவில்லை.. தன் அளவு மட்டும் கொடுத்தான். 

இரவு பகலாக கம்பெனியில் வேலை நடப்பதால்… இரவு வீட்டிற்கும் வருவதில்லை லிங்கா. இது.. இளா வழி பழக்கம் என்பதால் பெரிதாக யாரும் அலட்டவில்லை..  

காலையில் இளா… அவனை ஓய்வெடுக்க சொல்லி தானே கம்பெனி செல்வான். ‘மதியம் வாடா போதும்’ என்பான். ஆனால், லிங்கா பதினோரு மணிக்கே கிளம்பி அலுவலகம் சென்றுவிடுவான்.

ஏதோ லிங்கா, வெறியாக இருப்பதாக உணர்ந்தான் இளா. வீட்டில் பேச்சு குறைந்தது.. இவர்களுடன் குலதெய்வ கோவில், ஷாப்பிங்.. என எதற்கும் வரவில்லை… லிங்கா. 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!