Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Amuthangalaal Nirainthaen

Thazhampoo Vaasam Nee 8 1

தாழம்பூ வாசம்  நீ…..

8

எல்லோரும் கம்பெனியில் இருந்தனர். இளாவும் லலித்தாவும் மருத்துவமனையில். தீபக் பள்ளிக்கு சென்றுவிட்டான். காவ்யா, சாதனா மட்டும் வீட்டில்.

மதியம் ஆக ஆக சாதனா அழ தொடங்கினாள். எட்டு மாதமே ஆனா, குழந்தை, எதற்கு அழுகிறது என தெரியாமல் காவ்யா, இப்படி அப்படி என சாமாதானம் செய்து உறங்க வைத்திருந்தாள். ஆனால் கூழ் கூட உண்ணாமல்தான் உறங்கினாள் குழந்தை.



Advertisement

சத்தியமூர்த்தி குடும்பம் அங்கு அலுவலகத்தில் பிஸியாக இருப்பதால்… இன்று மதியம் லலிதாவின் பெற்றோர் உணவு எடுத்து வந்திருந்தனர்.

இப்போதுதான் லலிதாவின் பெற்றோர் மருத்துவமனை வந்திருந்தனர். உணவு உண்டு முடித்து.. சற்று நேரம் உறங்கி எழுந்தான் இளா. 

ஏனோ இளாக்கு மருத்துவமனையில் இருக்கவே முடியவில்லை. ஏதோ அடைபட்ட உணர்வு… இந்த இரு நாட்களாக.

Advertisement

மதியம் ரௌண்ட்ஸ் வந்த டாக்டரிடம், இளா, வீடு செல்லலாமா என கேட்டே இருந்தான். அவரும் சிரித்த படியே “சரி.. இரவு, நான் ரௌண்ட்ஸ் வந்த பிறகு.. கிளம்புங்க… ஆனா, கவனமா இருக்கனும்.. டெய்லி டிரெஸ்ஸிங் செய்ய வரணும்.. ” என்றிருந்தார்.

Advertisement

ஏனோ மதியத்திலிருந்தே, லலித்தாவுக்கும்.. பால் நெறி கட்ட தொடங்கியது.. இப்போதுதான்.. மாலை ஆக.. ஆக… வலி எடுக்க தொடங்கியது.. அம்மு எப்போதும் குடிப்பதில்லை என்றாலும் உறக்கத்தில் இன்னும் தாய்ப்பால்தான் அவளுக்கு. எனவே நேற்று இரவிலிருந்து இருந்தது வலி. இப்போதான் நெறிகட்ட தொடங்கியது. முகம் அவஸ்த்தையை காட்ட தொடங்கியது.

அவளின் அவஸ்த்தையை அங்கிருந்த எல்லோரும் கவனிப்பதும் , இளாவிடம் பேசுவதுமாக இருக்க.. ஒரு கட்டத்தில் லலிதா பாத்ரூம் சென்று வந்தாள்.. ஓய்ந்து போனாள்.. வலி அதிகம் எடுக்க.. அவள் வந்து அமர்ந்த விதத்திலேயே ஏதோ சரியில்லை என எல்லோருக்கும் புரிய இளா “என்னாச்சு லதா” என கேட்க.. அவளின் அன்னையும் அருகில் வந்தார்.. அதுவும் தெரியாமல் தோளில் அன்னையின் கை படவும்…”அம்மா” என துடித்து விட்டாள் லலிதா.. அன்னைக்கு ஏதோ புரிய… 

 

Advertisement

[the_ad id=”6605″]

 

 

 

மீண்டும் இளா “என்னச்சு லதா…” என்றான் எழுந்து மனையாள் அருகில்  வந்தான். 

மாமியார் “இருங்க மாப்பிள்ளை, பால் கட்டியிருக்குன்னு நினைக்கிறேன்… வா… இங்கே பார்த்துக்கலாம்”  என்றார்.

டிர்ப்ஸ் எல்லாம் முடிந்து இலகுவாகதான் இருந்தான் இளா. எனவே கூடவே சென்றார்.. மாமியார் “நா.. நாங்க பார்த்துட்டு வரோமே” என்றார் தயக்கமாக..

“சும்மா வரேன் வாங்க” என சொல்லி முன்னால் சென்றான்.

நர்ஸிடம் சென்று.. லலிதாவின் அம்மாவே சொல்லி லலிதாவை அனுப்பினார். இளா பொறுமையாக அமர்ந்திருந்தான். லலிதாவுக்கு அதற்குண்டான சிகிச்சை நடந்தது. சிறிது இடைவெளி விட்டு விட்டு, என்பதால் நேரம் எடுத்தது.. 

எனவே, எல்லோரும் அங்கேயே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அது இளா இருந்த தளத்தில் இருந்த வார்ட் என்பதால்.. ஒன்றும் கூட்டமில்லை.

இளா, இரவு உண்ண வேண்டும் என நர்ஸ் வந்து நினைவுபடுத்தி சென்றனர். மனதேயில்லாமல் சென்று உண்டு.. மருந்துகளையும் உண்டு வந்தான் அவசர அவசரமாக.

அப்போதுதான் லலிதாவும் வர… அவள் உடுத்தி இருந்த சுடிதார்… எல்லாம் நனைந்து.. ஓய்ந்து போய் வந்தாள். பார்க்கவே சங்கடமாக போனது.. கண்ணாளனுக்கு. தளர்ந்த நடை.. இரண்டு நாள் தூங்காத கண்கள்.. அதைவிட பயந்து.. வெளிறிய.. முகம் என.. லலிதா ஒய்ந்து போனாள். கணவன்  நரகத்தின் வாசலில் நின்றான்… மனையாளின் தோற்றத்தில் ‘எப்படி துணிந்தேன்… இவளை, கண் கொண்டு பார்க்க முடியவில்லையே…’ என எங்காவது சென்று முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது. கைகளை இருக முடிக் கொண்டான். 

மெல்ல இளா, லதா அருகில் சென்றான் இயல்பாக. அன்னை ஒரு பக்கம் வர.. அவனும் மறுபக்கம் அவளின் முழங்கையை பிடிக்க.. வர, சட்டென தன் கையை நகர்த்திக் கொண்டாள். 

அற்றாமையாக வந்தது மனைவிக்கு… ‘என்னையும் என் பிள்ளைகளையும் பார்த்தியா… நீ இருக்கும் போது.. உன் முட்டாள் தனத்தால்.. எவ்வளவு கஷ்ட்டம் என… பார்த்தியா… இதில்.. நீ இல்லையென்றால்..’ என மனம் மூளை எல்லாம் கோவம் மட்டுமே மனைவிக்கு.. எனவே அவளின் கை தன்போல்.. மறுப்பு சொன்னது போல.

லதாவின் செய்கையில்… அடிவாங்கினான் கணவனாக இளா. 

ஆனாலும் அவளுடனேயே நடக்க.. கிடு கிடுவென முன்னே வந்துவிட்டாள் லலிதா தங்களின் அறைக்கு.

சரியாக அந்த நேரம் காவ்யா, லலிதாவுக்கு அழைத்திருந்தாள்.. எடுத்த உடன் “அண்ணி. அம்மு அழுதிட்டே இருக்கா… நான் தூக்கி வரவா..” என்றாள்.

என்ன செய்வது என தெரியவில்லை.. ‘நான் அங்கே சென்றுவிடலாம் என தோன்றியது’. ஆனால், இவரை யார் பார்ப்பது.. ஒன்றும் வேலையில்லை.. என்றாலும், கூட யாராவது இருந்தால்.. பேசிக் கொண்டாவது இருப்பார்.. என எண்ணினாள். ஆனால், அதைவிட ‘ஒரு பயம்.. கணவனை தனியே விட…’ என்பதுதான் உண்மையோ என்னமோ.

எனவே, கணவன் முகம் பார்த்தாள் அனிச்சையாய்.. ஒரு சின்ன விஷையம்தான்.. அவளே முடிவெடுக்கலாம், ஆனால்.. ஏனோ.. இந்த இரண்டு நாளில்.. பயத்தின் பிடியில் இருப்பதால்.. எல்லாம் மாறி இருந்ததே.. எனவே மெல்ல தன் கணவனை பார்த்தாள்.

இப்போதுதான், அவனை.. தள்ளி நிறுத்தினோம் என தெரியவில்லையா.. இல்லை உணரவில்லையா… அப்படி ஒரு பார்வையாக கணவனை பார்த்தாள். ஒரு வேலை.. இது இப்படிதானோ என்னமோ.. கலவையாக இருந்தாள் லலிதா.

போன் வந்தது முதல் அவளையே பார்த்திருந்த இளா, தன் மனையாளின் இந்த பார்வையை உணர்ந்து “இங்க கொடு… யாரு” என கேட்டுத் தானே வாங்கினான்.. “ஹலோ” என்றான்.

காவ்யா “ண்ணா.. அம்மு அழறா… ஏன்னே தெரியலை.. சாப்பிடல… அதான் நான் தூக்கி வரவா… அம்மா இப்போதான் வந்தாங்க…” என்றாள்.

“இதென்ன கேள்வி.. தூக்கி வா… பாண்டி அண்ணா இருக்காங்களா… வண்டி எடுத்து வா…” என்றான்.

பின் தன் மனையாளின் செல்லிருந்து தன் தம்பிக்கு அழைத்து மருத்துவர் சொன்னதை சொல்லி.. வர செய்தான்.

 

[the_ad id=”6605″]

 

 

அரைமணி நேரத்தில் அம்மு வரவும்.. அழுது அழுது சோர்ந்து போயிருந்தாள்.. அன்னையை பார்த்ததும் “ம்மா… ம்மா…” என இன்னும் அழுத படியே தாவினாள். 

லலிதாக்கு கண்ணில் நீரே வந்தது.. இன்னும் அழுகை தீரவில்லை.. அன்னையின் தோள் சாய்ந்து தேம்பிய படியே இருந்தாள். இளா, வந்து தூக்கியதும் இன்னும் அழுதாள்.. மகள். தட்டி கொடுத்து.. தடவி.. என சாமாதனாம் செய்துதான் பால் கொடுக்கவே செய்தாள் லலிதா.

லிங்கம், வீட்டிக்கு அழைத்து… இளா சொன்னதை சொல்லியிருந்தான். காமாட்சி “சாப்பிட வந்திடுவானா டா” என்றார்.

“ம்மா.. மணி இப்போவே ஒன்பதாக போகுது… டாக்டர் ரௌண்ட்ஸ் வரவே பதினோரு மணியாகும்.. நாங்க வந்திடறோம்… நீங்க சாப்பிட்டு இருங்க” என கடிந்த குரலில் சொன்னான்.

காவ்யா, வந்த காரிலேயே.. வீடு வந்து சேர்ந்தாள்.

லலிதாவின் பெற்றோர்.. அங்கேயே இருந்தனர். அம்மு இப்போதுதான் சற்று சாமாதனாம் ஆக தொடங்கினாள்.. இப்போதுதான் தந்தையையே தெரிய.. “ப்பா.. ப்பா…” என தாவிக் கொண்டு சென்றது தன் தந்தையிடம்.

ஆசையாக அள்ளிக் கொண்டான் மகளை… முகம் முழுவதும் எச்சில் செய்து.. “ப்பா… ஊ.. “ என ஏதோ சத்தம்தான் அந்த அறையில். அவளையே எல்லோரும் வேடிக்கை பார்த்து பேசிக் கொண்டிருந்தனர்.

இளா “நீங்க எல்லோரும் போய் சாப்பிட்டு வாங்க… நான் அம்முவ பாத்துக்கிறேன்.. போ லதா.. அம்மா அப்பாவ கூட்டி போ” என்றான்.

லதா “இல்ல, அப்பா, நீங்க.. அம்மா.. சாப்பிட்டு, எனக்கு வாங்கி வந்திடுங்க… நான் எங்க வரது…” என்றாள்.

ஒன்றும் சொல்லவில்லை பெற்றோர் இருவரும், உண்ண கிளம்பினர். அப்போதுதான் லிங்கா வந்தான்.. எதிரில்… “ வாங்க மாமா… நீங்களும் இங்கதான் இருக்கீங்களா…” என்றான்.

“ஆமாம் ப்பா, மாப்பிள்ளையை வீட்டுக்கு அனுப்பிட்டு போலாம்னு..” என்றனர் அண்ணியின் தந்தை. அந்த மனிதரை பார்க்கவே லிங்காக்கு பாவமாக இருந்தது. எதையும் பேசவில்லை என்றாலும்.. முகத்தில் ஒரு கலக்கம்.. அதனை பார்த்தவன்… மனது கேட்க்காமல் உற்சாகமாக பேசினான்… இன்னும் சில வார்த்தைகள். எப்போது வந்தீங்க.. சாப்பிட்டீங்களா.. என கேட்க “இல்ல ப்பா… இப்போதான் போறோம்.. லதா, வாங்கி வர சொல்லிட்டா.. நீயும் வா சாப்பிட்டு வரலாம்..” என்றார் பெரியவர் இயல்பாக.

லிங்காக்கு அவர்களை எப்படி தனியாக அனுப்புவது என தோன்ற… “சரியென’ அவனும் கூடவே சென்றான்.

 

[the_ad id=”6605″]

 

 

என்ன பேசுவது என தெரியவில்லை லிங்காவிடம், இரண்டு பெரியவர்களுக்கும்… மெல்ல மெல்ல தீபக்.. அம்மு.. என்ற பேச்சை கொண்டு.. பேசி.. உண்டு முடித்து.. லதாவுக்கும் வாங்கி… வந்தனர் மூவரும்.

நேரம் சென்றது.

மருத்துவர் வந்து பரிசோதித்து.. இளாவை வீட்டிற்கு அனுப்பினார். வீட்டிற்கு, லலிதாவின் பெற்றோர் வரவில்லை என சொல்லியும் விடாது.. அழைத்து வந்தனர்.. அண்ணன் தம்பி இருவரும்.

காமாட்சி… முழு பூசணிக்காயுடன் நின்றார் வாசலில்… வீட்டில் எல்லோரையும் வெளியே நிறுத்தி.. அதனை சுற்றி உடைத்த பின்னே.. வீட்டினுள் வர விட்டார், அனைவரையும் காமாட்சி.

மூர்த்தி, என்ன ஏது என விசாரித்தார்.. எவ்வளவு சொல்லியும் லலிதாவின் பெற்றோர் இங்கு தங்கவில்லை. வீடு சென்றுவிட்டனர். தீபக் தூங்கியிருந்தான். 

மெல்ல மெல்ல எல்லோரும் உறங்க சென்றனர். லலிதாவிற்கு.. ஒரே பயம்.. அத்தோடு.. இருட்டில்.. லிங்காவின் குரல் அந்த வராண்டாவில் கேட்பதாகவே இருந்தது.. எழுந்து எழுந்து அமர்ந்தாள். இளா, இதை இரண்டு தரம் பார்த்துவிட்டு “லதா… படு… என்ன…” என்றான்.

நடுவில் இரு பிள்ளைகள் இருப்பதால்.. இளா, சத்தம் போட.. மகள் “ம்மா… “ என்றாள்.. சிணுங்களாக. லதா, அவளை அனைத்துப் படுத்தாள். 

இளா பொறுமையாக “தூங்கு டா…” என மனையாளின் கை பற்றினான்.. பற்றும் போதே, அந்த கையில் உள்ள பரபரப்பை உணர்ந்தான்.. லேசாக தட்டி கொடுக்க… ஏதும் சொல்லவில்லை அவள்… அந்த ஸ்பரிசம்… என்ன சொல்லியதோ.. தன் மகளை அனைத்துப் படுத்தபடி.. கண்ணயர்ந்தாள் லதா.

அதிகாலை.. 

‘எத்தனை வருடமாயிற்று இந்த விடியலை பார்த்து.. அப்போதெல்லாம் படிப்பதற்காக அம்மா எழுப்பி விடுவாங்க.. ம்.. ஹா…’ என விடியலின் வெளிச்சத்தை பார்த்த படியே… மொட்டை மாடியில் நின்றான் லிங்கா.

என்ன இருந்தாலும்.. அதிகாலை தரும் உற்சாகமே தனிதான்.. ஏனோ, உறக்கம் வரவில்லை நாலரை மணிக்கு மேல்.. லிங்காவிற்கு. எழுந்துவிட்டான்.

ஏதோ தோன்ற.. ரெடியாகி வண்டி எடுத்துக் கொண்டு.. வந்தான். ஊரில்.. மத்தியில்.. அதிகாலையில் எல்லோரும் நடை பயிலும் ரெஸ்க்கோஸ் சாலையில் வண்டி நின்றது. அங்கே அந்த ரோட் முழுவதும் பெரியவரும் சிறிவருமாய்.. ஆண்களும் பெண்களுமாய்.. அந்த நேரத்திலேயே வாக்கிங் சென்று கொண்டிருந்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!