Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

En Kaathal Kanaa

Aruna Kathir En Kaadal kanaa – 14

என் காதல் கனா 14

சதீஷ் தண்ணி அடிப்பாங்கற விஷயத்தை சுஜினிட்ட சொல்லியிருக்க வேண்டாமோ. அவனைப் பத்தி தப்பா நினைச்சிருப்பாளோஎன்று விவேக்கிற்கு யோசித்துக் கொண்டே நண்பர்களுடன் உணவருந்தச் சென்றான்.

அடுத்து வந்த இரண்டு வாரங்களும் இதே கதை தொடர்ந்தது. பகலில் கல்லூரி முடிந்ததும், மதிய உணவிற்குப் பின், நண்பர்களுடன் ரோனால்டின் காரில் பகுதி நேர வேலைக்கு ஒன்றாக சென்றனர். வேலை முடிந்ததும், சதீஷும் ரோனால்டும் காரில் கிளம்பிவிட, விவேக், சுஜினிக்காக சிம்பிளி ஏஸ்யாவாசலில் காத்திருப்பான்.

ஒன்பது மணிவாக்கில் சுஜினி வேலை முடித்துக் கொண்டு வந்ததும், அவளுடன் சேர்ந்து பேருந்தில் செல்வது என்பதை வாடிக்கையாகச் செய்தான். சேர்ந்து நடக்கும் போதும், பேருந்திற்காக காத்திருக்கும் போதும், என சுஜினியிடம் தன்னைப் பற்றி, தன் வீட்டினரைப் பற்றி, கேம்பஸ்ஸில் நடந்த சுவையான நிகழ்வுகளைப் பற்றி என முடிந்தவரையில் பேசிக் கொண்டே வருவான்.



Advertisement

சுஜினியும் நிறைய பேசுவாள் தான். ஆயினும், மேலோட்டமாக தன் அன்னையைப் பற்றியும் வீட்டினரைப் பற்றியும் சொல்லுவாளே தவிர, இவர்களைப் பற்றி இன்னது நினைக்கிறேன் என மனதிறந்து சொல்லியதில்லை. பொதுவான விஷயங்களே இருவரும் பேசிக் கொள்ளும் படிக்கு இருக்கும். அதைத் தவிர இம்மி அசைந்து கொடுக்க மாட்டாள்.

இந்த நிலையில் தான் சுஜினியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விவேக்கிற்கு ஒருவாய்ப்பு தானாக அமைந்தது. அந்த வார வெள்ளியன்று வழக்கம் போல் வேலை முடித்துத் திரும்பியவள், கேம்பஸ்ஸில் விடைபெற்று பிரியும் நேரம், விவேக்..உங்ககிட்ட ஒரு சின்ன ஹெல்ப்என்று மெதுவாக கேட்டாள்.

சொல்லு சுஜி….என்று ஆர்வத்துடன் வினவினான் விவேக்.

Advertisement

 

Advertisement

[the_ad id=”6605″]

 

 

Advertisement

உங்களுக்கு இந்த ஷேர் மார்கெட், ஃப்யூச்சர் ஆப்ஷன்ஸ் பத்தி ஏதாவது ஐடியா இருக்கா?

ஷேர் மார்கெட்டா…..எதுக்கு திடீர்ன்னு கேட்கற..

இல்லை, எனக்கு கொஞ்சம் இன்வெஸ்ட் பண்ணனும்ரொம்ப இல்லை. என்னோட டிப்ஸ் அமெளண்டை இண்வெஸ்ட் பண்ணலாம்னு ஐடியா இருக்குஅதான்கொஞ்சம் கிளியரா தெரிஞ்சுகலாமேன்னு..

ஷேர்மார்கெட்லாம் ரொம்ப ரிஸ்கி சுஜிநீ பேங்கல ஃபிக்செட் டெபாஸிட் மாதிரி ஏதாச்சும் ட்ரை பண்ணலாமே

ஜஸ்ட் தெரிஞ்சுக்கலாம்னு தான் கேட்கறேன்..இண்வெஸ்ட் பண்ணறதுக்கு முன்னாடி தெரிஞ்சுக்கறது நல்லது இல்லையா

கரெக்ட் தான்பட் எனக்கு ஷேர்மாட்கெட் பத்திலாம் அவ்வளவா தெரியாது…. வேணா ஒன்னு செய்யவா? நான் வேணா நெட்ல படிச்சு, உனக்கு டீடெய்லா எக்ஸ்பிளைன் பண்ணவா?என்று வெகு ஆர்வமாக கேட்டவனை செல்லமாக முறைத்தவள்,

அதே கூகுள்ல இருந்து நான் படிச்சு தெரிஞ்சுக்க மாட்டேனா? எனக்கு யாராவது ப்ராக்டிகலா சொன்னா ஈஸியா இருக்கும்னு நினைச்சேன்

சதீஷ் கொஞ்சம் ஷேர்ஸ்ல இண்டிரெஸ்ட்டா இருப்பான்நான் வேணா அவங்கிட்ட கேட்கட்டுமா?

, சதீஷ்க்கு ஷேர்ஸ்ல இண்டிரெஸ்ட் இருக்கா?என்று ஒரு நொடி கண்களை அகலவிரித்தவள்,  விவேக் தன்னை கண்களைக் குறுக்கிக் கொண்டு பார்பதைக் கண்டு தன் முகத்தின் ஆர்வத்தை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

சதீஷோட அப்பா ஆடிட்டர். சோ, சதீஷ்க்கு சின்ன வயசில இருந்தே மேத்ஸ்ல இன்டிரெஸ்ட் ஜாஸ்திஅவனுக்கு இந்த ஷேர்ஸ் பத்தி நிறைய தெரியும்என்று பேசியவன், எதுக்கு இப்போ தேவையில்லாம சதீஷை கோர்த்துவிடறேன்அவ எனக்குத் தெரியுமா தெரியாதான்னு மட்டும் தான கேட்டாஎன மனதிற்குள் பெரிய கொட்டு வைத்துக் கொண்டவன், இனிமேல் அனாவசியமாக சதீஷை பேச்சில் இழுப்பத்தில்லை என முடிவெடுத்தான்.

தன் முகத்தில் இருந்து கண்களை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் விழித்தான். விவேக்கின் பதிலுக்காக காத்திருந்த சுஜினி, விவேக் மறுமொழி கூறாமல் நிற்பதைக் கண்டு,    

அப்போ சதீஷ் எனக்கு கொஞ்சம் சொல்லித் தருவாரான்னு கேட்டு சொல்லறீங்களா? என்று விவேக்கிடம் கேட்டிருந்தாள். விவேக்கால் இல்லை என்று சட்டென்று மறுக்க முடியவில்லை. ஸ்யுர்..நான் கேட்டுட்டு உனக்கு சொல்லறேன்….என்றவன் விடைபெற்றுச் சென்றான்.

அடுத்த தினம் சனிக்கிழமை விவக்கிடம் இருந்து அழைப்பு வந்தது. சதீஷ் சொல்லித் தற்றேன் சொல்லிட்டான். சண்டே உங்க டார்மிட்டரிக்கு பக்கத்தில் ஒரு சின்ன சில்ட்ரண்ஸ் பார்க் இருக்கில்ல, அங்க காலையில் ப்ரேக்ஃபாஸ் முடிஞ்சதும் வர்றியா? நான் சதீஷை கூட்டிட்டு வர்றேன்என்று கொஞ்சம் சுரத்தில்லாமல் மொழிந்தான்.

சுஜினிக்கு விவேக்கின் எண்ணவோட்டத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.

செமயா காண்டாகறான்ஜஸ்ட் டவுட்ஸ் தானே சதீஷ் சொல்லித் தரப்போறான். அதுவும் பட்டப்பகல்ல, இதுல விவேக்கு என்ன பிரச்சனை வந்திடப் போகுதுஎன்று மனம் அரற்றியது. அதே நேரம், இருந்தாலும் விவேக் பாவம்என்னை ரொம்ப பிடிச்சிருக்கு போல, அதனால கொஞ்சம் பொறாமையா, பொசஸிவ்வா ஃபீல் பண்ணறான்….சச் எ ஸ்வீட் பர்சன்.. எவளோ நல்ல காரெக்டர்..ஒழுக்கம்..பண்பு.. நீ நல்லவன் விவேக்.. ஆனா எனக்கு இவளோ நல்லவன் வேண்டாமே ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்என்று விவேக்கின் தடுமாற்றத்தைக் கண்டு நெகிழவும் செய்தது.

 

[the_ad id=”6605″]

 

 

சதீஷுடன் செலவிடப்போகும் அடுத்த தினத்தை சுஜினியின் மனம் வெகுவாக எதிர்பார்க்கத்துவங்கியது. என்ன உடை அணிவது, தலை எப்படி வாருவது என எண்ணங்கள் சென்ற திசையை சுஜினியால் கட்டுக்குள் வைக்க இயலவில்லை. தன் மீதே கொண்ட சிறிய பயத்தினால், தோழிகள் வித்யாவையும், எம்மாவையும் உடன் அழைத்திருந்தாள்.

அந்த தினம், பறவைகள் கூச்சல்களுடன் அழகாக புலர்ந்தது. தினமும் கல்லூரிக்காக விடியக்காலையே எழுந்து பழக்கமாகிவிட்டதால் ஞாயிறன்றும் சீக்கிரமீ கண்விழித்திருந்தாள் சுஜினி. கட்டிலில் இருந்து எழுந்து கொள்ள மனமின்றி படுத்துக் கிடந்தாள். மனம் ஒருவிதப் பரபரப்புடன் இருந்தது. சதீஷைக் காண இவ்வளவு ஆவலா? என யோசனை சென்றது.

அவனை பார்த்தே ஒரு மாசத்துக்கும் மேல ஆச்சு. கடைசியா அன்னைக்கு ரெஸ்டாரெண்டில விவேக்கை மீட் பண்ணப்போ பார்த்தது தான். அதுவும் தூரத்தில நின்னு , போறப்போ ஒரு சின்ன சல்யூட் அடிச்சுட்டு போனான். ஸ்வீட் கைஎன்ற வாக்கியம் மனதில் எழ, இதென்ன சதீஷைப் போய் ஸ்வீட் கைஎன்கிறேன்.

சொல்லப்போனால் விவேக் எல்லா விதத்திலும், சதீஷைக் காட்டிலும் பண்பட்டவனாக, பிறரின் மனதை புரிந்து கொண்டு பேசும், நடந்து கொள்ளும் நன்னடத்தை கொண்டவன். ஆனால் விவேக்கைப் பார்க்கையிலும், பேசுகையிலும்  இது நாள் வரையில் எந்த ஒரு பரபரப்பும் உண்டானதில்லை. ஆனால் சதீஷை நினைத்தாலே மனம் ஜிவ்வென்று விண்ணில் பறக்கத்துவங்குகிறதே.

இது என்ன மாயம், இது எதுவரை போகும்உனைப் பார்த்த போதெல்லாம் வானில் பறக்கிறேன் மேலேஎன்று சம்பந்தமில்லாமல் திரைப்படப் பாடல் மனதில் மெல்லிய ஊற்றாய் அரும்ப, கட்டிலில் புரண்டு புரண்டு படுத்தவள், வெளியே வானம் கொஞ்சம் கொஞ்சமாக வெளுப்பதை ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்தாள்.

ஏழு மணி ஆனதும், குளித்து முடித்து, வழக்கமாக கல்லூரிக்கு அணியும், ஜீன்ஸையும், டிஷர்ட் மற்றும் ஸ்வெட்டரையும் தவிர்த்து, கொஞ்சம் நல்ல டாப்ஸும், இள பிங்க நிற ஜெர்க்கினும் அணிந்து கொண்டாள்.

 ஜெர்க்கினுக்கு தோதாக இள பிங்ன் நிற லிப்ஸ்டிக்குடன், சிறிய பிங்க கற்கள் தொங்கும் நீள காதணியும் அணிந்து கண்ணாடியின் முன்னும் பின்னுமாய் தன் அலங்காரத்தை ரசித்துக் கொண்டிருந்தவளின் கவனத்தை கதவு தட்டப்படும் ஓசை கலைத்தது.

கமிங்என்று கத்திக் கொண்டே கதவைத் திறந்தவள், வெளியே வித்யாவும், எம்மாவும் தயாராகி நின்றிருப்பதைக் கண்டாள்.

சுஜினியின் மேக்கப்பைக் கண்டு கொஞ்சம் துணுக்குற்ற வித்யா,பேபி, என்ன ஸ்பெஷல் இன்னைக்கு, மேக்கப்லான் பலமா இருக்குசதீஷை இம்பிரஸ் பண்ணவா…?என்று கண்களை சுருக்கிக் கொண்டு வினவினாள்.

ஹ ஹ ஹபெரிய கண்டுபிடிப்புஎன்று சுஜினி சமாளித்தாலும், அவளது கன்னங்கள் செம்மை படருவதை தோழிகள் இருவரும் கண்டு கொண்டனர்.

நைஸ் ப்ளஷ் பேப்ஸ்….. ஹி இஸ் கோயிங்க டு ஃபால்  ஹெட் ஓவர் ஹீல்ஸ் என்று எம்மா மொழிய, சுஜினி தன் உதட்டை குவித்து, கண்களை ஒருவிதமாக சிமிட்டிக் காட்டினாள். மூவரும் பேசிக் கொண்டே, தயாராகி, டார்மிட்டரி உணவகத்தில் ஆளுக்கு இரண்டு டோஸ்ட்களையும், ஒரு கப் மல்டி ஃப்ளேவர்ட் சீரியலையும் உண்டு முடித்தனர்.

 டார்மிட்டரியில் இருந்து பத்து நிமிட நடை தூரத்தில் இருந்த குழந்தைகள் விளையாட்டு மைதானத்தை அடையும் முன்னரே, ஒரு பார்க் பென்சின் அருகில், பெரியதாக நிழல் பரப்பிக் கொண்டு நின்றிருந்த வில்லோ மரத்தின் அடியில் அமர்ந்திருந்த மூவரும் தென்பட்டனர்.

சுஜினியைக் கண்ட விவேக், அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து பெண்கள் மூவரையும் வரவேற்றான். வந்து ரொம்ப நேரம் ஆச்சா விவேக்சாரி, சாப்பிட கொஞ்சம் லேட் ஆகிடுச்சுஎன்று மன்னிப்பு கோரியவாறே சுஜினி விவேக்குடன் நடக்கத் துவங்கினாள். மற்ற இருவரும், எழுந்து கொள்ள, ஹாய்என்று மெல்லிய புன்னகையுடன் சதீஷையும், அவனுடன் நின்றிருந்த மற்றவனையும் ஏறிட்டாள்.

சுஜி, இது எங்க ஃப்ரெண்ட் ரோனால்ட்…. என்று மூன்றாமவனை விவேக் அறிமுகம் செய்து வைக்க, வரவேற்பாய் தலையசைத்த சுஜினி, சதீஷின் முகத்தில் கண்களை நிலை நிறுத்தினாள்.

சதீஷின் பார்வையும் அப்போது சுஜினியிடமே லயித்திருந்தது. கண்களில் ஒருவித ஒளிமிளிர, அவளது பிங்க நிற காதணியில் துவங்கி, கண்களின் மை தீட்டல், உதட்டின் இள பிங்க் நிற சாயம், பிங் ஜெர்க்கின் என ஒவ்வொன்றாக கண்களால் அளந்தவன், சுஜினி தன்னை ஏறிடுவதைப் பார்த்து, உதட்டில் சின்ன முறுவலுடன் கண்களை அவளது முகத்தில் நிறுத்தினான். சதீஷின் மெச்சுலான பார்வையை, அதுவும் அனைவரும் உடன் இருக்கும் போதே சதீஷின் கண்கள் பேசிய கவிதைகளை சுஜினி சற்றும் எதிர்பார்க்கவில்லை.

கன்னத்தில் செம்மை படர தலையை தாழ்த்திக் கொள்வதைத் தவிர என்னசெய்யவென்று தெரியவில்லை.இது எதையும் உணராத விவேக், சுஜினியின் தோழிகளிடம் தன்னையும் ரானையும் அறிமுகப்படுத்திக் கொள்வதில் ஈடுபட்டிருந்தான். நல்லவேளையாக விவேக்கின் கண்களில், நொடிப் பொழுதில் சுஜிக்கும் சதீஷுக்கும் நடந்த உரையாடல் கருத்தில் பதியவில்லை.

 

[the_ad id=”6605″]

 

 

சில நிமிட பரஸ்பர உரையாடல்களுக்குப் பின்னர், சோ, சேர்மார்கெட் பத்தி ஆரம்பிக்கலாமா?என விவேக் தொடங்க, மற்றவர்கள் அனைவரும் வட்டமாக அமர்ந்து கொண்டனர். சுஜினி சதீஷுன் இடதுகையின் பக்கம் அமர்ந்து கொண்டாள்.

சதீஷ் முதலில் ஷேர்ஸ் என்றால் என்ன என்பதில் இருந்து விளக்கத் துவங்கினான். சுஜினி கையுடன் கொண்டுவந்திருந்த சிறிய நோட்பேடில் சதீஷ் பேசுவதை குறிப்புகள் எடுத்துக் கொண்டாள். சதீஷ் பேச ஆரம்பித்த பத்து நிமிடத்திலேயே ரோனால்டும், எம்மாவும் ஆர்வமில்லாமல் அமர்ந்திருப்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

சற்றைக்கெல்லாம், எழுந்து கொண்ட ரான், மேன், இதுக்கு மேல என்னால கேட்க முடியாதுசாரி, திஸ் இஸ் நாட் மை கப் ஆஃப் டீநான் ஒரு வாக் போயிட்டு வர்றாம்னு நினைக்கறேன்..எனிபடி கமிங்?என்று மற்றவரைப் பார்த்து வினவினான்.

ரானுடன் சேர்ந்து எம்மாவும் எழுந்து கொள்ள, வித்யாவிற்கும் ஷேர்மார்க்கெட்டைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகப்படவில்லை. ரான், வெயிட்….ஐ வில் ஜாயின் டூ என்று வித்யாவும் எழுந்து கொண்டாள், அத்துடன் நில்லாமல், விவேக், வாங்க..எப்படியும் உங்களுக்கு இன்டிரெஸ்ட்  இல்லைன்னு தெரியுது..கவனமா கேட்கற மாதிரியே இன்னும் எவ்வளவு நேரம் தான் நடிப்பீங்க….என்று விவேக்கையும் எழுப்ப முற்பட்டாள்.

இல்ல, இல்ல, நான் இருக்கேன்யு பீப்பிள் கேரி ஆன் என்று விவேக் மறுத்த போதும் விடாமல், அட, வாங்க விவேக்….இத்தோட மூனு கொட்டாவி விட்டுட்டீங்கசூடா ரெண்டு என்ஸ்பிரஸோ வாங்கித் தர்றேன்..வாங்க போலாம் என்று விவேக்கின் கையைப் பிடித்து மேலே எழுப்பினாள். வித்யாவின் தொடுதலில் கூச்சத்துடன் நெழிந்த விவேக், அதற்குமேல் மறுக்க முடியாமல் தானும் எழுந்து கொண்டான்.

நால்வர் செல்வதையும் ஒரு அசட்டுச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த சுஜினியைப் பார்த்து கண்சிமிட்டி சிரித்த வித்யாவையும், சத்தம் வராமல் உதடுகளை மட்டும் அசைத்து, தேங்க் யூஎன்று மொழிந்த சுஜினியையும் சதீஷ் கவனிக்கத் தவறவில்லை. கண்களில் குறும்பு கொப்பளிக்க உதட்டில் சிறு முறுவலை படரவிட்டான்.

உங்களுக்கு கேட்க இண்டிரெஸ்ட் இல்லைன்னா, நாமளும் அவங்க கூட ஜாயின் பண்ணிக்கலாமா?என சின்ன சிரிப்புடன் எழுந்து கொள்வது போல் சற்றே எழும்பியவண்ணம் சுஜினியிடம் வினவ, ஐய்யோ, வேண்டாம் வேண்டாம் என்று அவசர அவசரமாக அவள் மறுத்ததை ரசித்துச் சிரித்தான் சதீஷ்.

சோ, டிபென்சர்ஸ், ஃப்யூச்சர் அண்ட் ஆப்ஷன்ஸ் பத்தி இப்போ பார்க்கலாம்ஃப்யூச்சர் அண்ட் ஆப்ஷன்ஸ்ங்கறது பார்ட் ஆஃப் டெரிவேட்டிவ்என சதீஷின் வாய் சொல்லிக் கொண்டிருக்க, சுஜினியின் கண்கள் சதீஷின் முகத்திலேயே லயித்திருந்தன.

ஏன் சுஜி இப்படி பார்க்கறா? இப்படியே பார்த்தா எப்படி நான் சேஷுவலா பேச முடியும்….இதென்ன இப்படி ஒரு பார்வை, மனசை ஊடுருவி பாயற கத்தி மாதிரி ஒரு அழுத்தம்..பார்க்காதடீஎன்று கத்த வேண்டும் போல் இருந்த எண்ணத்தை வெகுவாக கட்டுப்படுத்திக் கொண்டான்.

அவளது பிங்க் நிற காதணி காதுகளில் அசையும் விதம், காற்றில் அலைபாயும் கூந்தலை ஒற்றை விரலால் சுஜினி ஒதுக்கும் பாங்கு, வலது கை ஆள்காட்டிவிரலில் அணிந்திருந்த ஒற்றைக்கல் மோதிரம் என சுஜினியின் முகத்தில் தோன்றிய சின்ன சின்ன அசைவுகளையும் சதீஷின் மனம் தானாக படம்பிடித்துக் கொண்டது.

சதீஷின் எண்ணங்கள் வேறு திசையில் செல்ல, வாயில் இருந்து வந்த வார்த்தைகள் தடுமாறத் துவங்கின. மனதின் கட்டுப்பாடில்லாமல் பேசிக் கொண்டே இருந்தால், தவறுதலாக ஏதேணும் பேசிவிடுவோமோ என்ற எண்ணமேற்பட, சதீஷ் தன் சொற்பொழிவை கொஞ்சம் நிறுத்திக் கொண்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!