Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Niththirai Kalaiththa Maayaval

Niththirai Kalaiththa Maayaval 15

 

உன் பார்வை பொய்தானா பெண்ணென்றால் திரைதானா

பெண் நெஞ்சே சிறைதானா சரிதானா…

பெண் நெஞ்சில் மோகம் உண்டு அதில் பருவத் தாபம் உண்டு



Advertisement

பேராசைத்தீயும் உண்டு ஏன் உன்னை ஒளித்தாய் இன்று

புதிர் போட்ட பெண்ணே நில் நில் பதில் தோன்றவில்லை சொல் சொல்

கல்லொன்று தடைசெய்த போதும் புல்லொன்று புதுவேர்கள் போடும்

Advertisement

நம் காதல் அது போல மீறும்

Advertisement

கல்லொன்று தடைசெய்த போதும் புல்லொன்று புதுவேர்கள் போடும்

நம் காதல் அது போல மீறும் கண்ணில் கண்ணே கண்ணீர் இன்ப கண்ணீரே…

 

Advertisement

இனியவள் காணோம்… கடத்தபட்டாள் என்ற உண்மையை உணர்த்தவனாய்… செய்வதறியாது தன்னிலை மறந்து நடு வீதியில் நின்று குழம்பி கொண்டு இருந்தவன்… அவன் பாதையில் லாரி வருவதும் தெரியாமல் நின்று இருக்க…. 

 

ஆள் இல்லா அந்த சாலையில் சீறி பாய்ந்து கொண்டு வந்த லாரி அவனை நெருங்கி அவனை பதம் பார்ப்பதற்குள்…. நூல் இழையில் அவனை தான் புறம் இழுத்து… அந்த வேகத்தில் கீழே விழுந்தார் வேலுச்சாமி…. 

 

விழுந்தவரை தூக்கி விட்டவன்…..அப்போதும் குழப்பத்தில் எங்கோ வெறித்து கொண்டு நிற்க….. அவனை பல முறை உலுக்க… அவனோ அப்போதும் எதோ ஒரு உலகத்தில் பயணித்து கொண்டு இருக்க…. கோவமும் பயமும் ஒரு சேர தோன்ற…. 

 

பளார்ர்ர்… என்று பதித்தார் தன் ஐந்து விரல்களையும் அவனின் கன்னத்தில்…

 

திருமணம் ஆகி வெகுநாள் கழுத்து தவம் இருந்து பெற பட்ட குழந்தை தான் அன்பு.. அவனிடம் பிறந்ததில் இருந்து சீராட்டி பாராட்டி வளர்த்தனர் வேலுச்சாமியும் செல்லாமலும்…. 

 

இலக்கியனை கூட கோவத்தில் ஒரு இரு வார்த்தைகள் கூறுவது உண்டு…. ஆனால் அன்பை கண்டிக்கவும் மனம் வராது இருவருக்கும்…. அப்டி இருக்க அன்பை அறைந்தது வேலுசாமிக்கே புதிது தான்…

 

“என்ன தம்பி பண்ணிக்கிட்டு இருக்கீங்க? அந்த லாரி வந்த வேகத்துக்கு எப்படி அடிச்சி போட்டுட்டு போய்ட்டு இருக்கும் தெரியுமா?  மருமக எங்க… அவளும் உன்னோட தானே வந்தா?”  ஆதங்கத்தில் அவர் கத்தி கொண்டு இருக்க…. 

 

“போய்ட்டாபா… தொலைச்சிட்டேன் அவளை… அதுக்கு தொலைச்சேன்னு தெரியாமலே தொலைச்சிட்டேன்” இது மட்டுமே பதிலாக வந்தது அவனிடம் இருந்து 

 

ஒன்றும் புரியாமல்…முதலில் வீட்டிற்கு அன்பை கூட்டி செல்ல முடிவெடுத்த வேலுச்சாமி… தான் வந்தா ஜீப்பில் அவனை அமர வைத்து அழைத்து சென்றார்… 

 

செல்லும்  வழி முழுதும் எதுவும் பேசாமல் அமைதியாக வந்தவன்…. வீடு வந்தும் அதே போல் அமைதியாய் அமர்ந்து இருக்க… 

 

[the_ad id=”6605″]

 

 

இலக்கியனுக்கோ என்ன நேர்ந்து  இருக்கும் என்பது புரியாமல் போக.. இனியவளும் அவனுடன் காணாமல் போக… அவனை நெருங்கி இனியவளை பற்றி விசாரிக்க… 

 

தொலைச்சுட்டேன்டா அவளை… நீ எல்லா உண்மையையும் சொல்லிட சொல்லி அனுப்புன… ஆனா அதுக்குள்ளயே நெறைய நடந்து… அவளை தொலைச்சிட்டேன்டா…..குமுறி அழ துவங்கினான்… முற்றத்தில் அமர்ந்த படி… 

 

ஆண்பிள்ளைகள் அழ கூடாது…. என்பது நாம் சமூகத்தில் எழுத படாத விதி….ஆண் ஒருவன் அழுவதை பார்ப்பவர் என்றால் அது தாயும் தரமும் தான்… 

 

அப்டி இருக்க… வீட்டினர் அனைவரின் முன்னும்… துக்கம் தொண்டையை அடைக்க… கூற வரும் வார்த்தைகளை கூற முடுயாமல் அவன் கேவ…கண்ணில் இருந்து நீர் மட்டும் வண்டிந்த படியே இருந்தது…. 

 

அதை காண பொறுக்காத தாய்.. அவனை தன்னோடு அணைத்து… அவனுக்கு ஆறுதல் சொல்ல…. அதிலும் அடங்கவில்லை அவனின் மனம்… 

 

“என்ன அன்பு நடந்தது… அம்மா கிட்ட சொல்லுபா…. இப்டி அழாத கண்ணு… அம்மாவால பாக்க முடில”

 

தாயின் தழுதழுத்த குரலில் வார்த்தைகளை கேட்டவன்… மீண்டும் மனது வலிக்க…..

 

கோவிலில் அவன் தாக்க பட்டது… இனியவளை பாதுகாத்தது…. பின் திரும்பி வந்து பார்க்கையில் அவள் இல்லாமல் போனது… விசாரித்ததில் அவள் கடத்தபட்டது… என அனைத்தையும் கூறினான்… 

 

கேட்டு கொண்டு இருந்த வேலுச்சாமிக்கு தேவாவின் மேல் சந்தேகம் வர… அதை அன்பிடம்  கூறியவர்….. 

 

இல்லா அப்பா… அது தேவா ஆளுங்க இல்லை… வந்தவங்க வட நாட்டு ஆட்கள் மாதிரி இருந்தாக…. இனியா வீட்டில் இருக்கவங்க தான் அனுப்பி வெச்சி இருப்பாகனு நினைக்குறேன்… அடித்து எழ போகும் கேள்வுகள் புரியாமல்… இந்த கூற்றை கூறிவிட்டான்…. 

 

“மருமக வீட்டு ஆளுங்களா….அது யாரு தம்பி… இனியாக்கு தான் யாரும் இல்லை… அக்கா மாமா இறந்துட்டாங்கனு சொன்னேங்களே? வேற சொந்தம் இருக்கா என்ன”

 

“அப்டி அவுங்க மேல சந்தேகம் இருந்தா அவுங்கள கூப்பிட்டு கேட்டுடு தம்பி… எதுக்கு இப்டி பயப்படணும்…இந்தா தம்பி அவுங்களுக்கு போன் பண்ணி விஷயத்தை விசாரி” அவன் கையில் கைபேசியை திணித்தார்… 

 

பாவம் அன்பு… யாருக்கு அழைப்பான்… யாரிடமும் இனியாவை பற்றி விசாரிப்பான்.. அவனுக்கே அவளை பற்றி எதுவும் தெரியாதே….

 

மனம் அவள் இல்லாமல் இந்த பாடு படும் என்று முன்பே தெரிந்து இருந்தாள்.. அனைத்தையும் விசாரித்து இருப்பான்….. அவன் மனமே இன்று தானே அவனுக்கே புரிந்தது… இதில் வீட்டில் இருப்பவரிடம் என்ன கூறுவான் அவன்…. 

 

கைபேசியை வாங்காமல்… முழித்து கொண்டு இருந்தவனை…..

 

“பிடி தம்பி… கூப்பிட்டு பேசி எங்க இருக்கா… யார் கூட்டிட்டு போனது….அது எப்படி  சொந்தமுன்னாலும் இப்டி வழில வெச்சி கூட்டிட்டு போவது என்ன பழக்கம்…வீட்டுக்கு வந்து ஒரு முறையோட தானே கூட்டிட்டு போகணும்…நீ போன் போடு… நான் பேசுறேன்” பாசமாய் ஆரம்பித்தவர் உத்தரவாய் முடித்தார்….. 

 

“எனக்கு அவளோட சொந்தக்காரங்க நம்பர் தெரியாதுபா” என்றான் தேய்ந்த குரலில்…. 

 

“என்ன” என அதிர்த்தவர்… “சரி நீ இனியவளுக்கே போன் போடுபா… அவ கிட்டயே கேட்டுடலாம்” அடுத்த கேள்வியால் அவனை தாக்க….. 

 

“அவளோட நம்பரும் என் கிட்ட இல்லப்பா” கூறும் போதே…தன் மேல் வெறுப்பு வந்தது அவனுக்கு…. 

 

இத்தனை நாள் வீட்டில் இருந்தவளிடம்… அவளின் எண்ணைக்கூட வாங்காமல் இருந்து விட்டோமே என்ற குற்றம் அவனை வாட்ட துவங்கியது…. 

 

[the_ad id=”6605″]

 

 

அது வரை பொறுமையாய் பேசி கொண்டு இருந்த வேலுச்சாமியின் பொறுமை காற்றில் பறந்தது…..

 

“என்ன அன்பு சொல்லுற… கட்டுன பொண்டாட்டியோட நம்பர் கூட இல்லையா… அதை கூட வாங்காமலா… ஒரு வருஷமா குழந்தை பெற்று… குடும்பம் நடத்துனீங்க”

 

“சரி அவளோட ஆபீஸ் முகவரி தெரியும் இல்ல… அதை சொல்லு… அங்க தானே அவளை காதலித்து மனத்து கொண்டாய்… அதான் முகவரி கொடு” 

 

“தெரியாதுபா”

 

“அந்த பொண்ணு தங்கி இருந்த விலாசம் தெரிஞ்ச அதை சொல்லு…அவாளோட நண்பர்கள் நம்பரோ இல்லை அவுங்க வீட்டு விலாசமோ குடு… என் நண்பனை வெச்சி விசாரிக்குறேன்”

 

“தெரியாதுபா”

 

மீதம் இருந்த பொறுமையும் காற்றில் பறக்க… 

 

‘தெரியாது தெரியாது தெரியாது…. அவளை பத்தி எது கேட்டாலும் தெரியாது… அவளோட ஊர் தெரியாது… ஒரு வருஷத்துல அவளை பத்தி எதுவுமேவா தெரிஞ்சிக்காம குடும்பம் நடத்துன…. எதுவுமே தெரியாதுன்னா அவ யார் அன்பு” உச்ச கட்ட கோவத்தில் வேலுச்சாமி இருந்தார்…அவர் இந்த அளவிற்கு கோவத்தில் செல்லம்மாள் கூட பார்த்தது இல்லை….. 

 

“தெரியாதுபா” என்பது தான் இந்த முறையும் அவனின் பதிலாய் இருந்தது… 

 

“எதுவும் தெரியாமல் தான் அவ கூட இருக்கியா… அவளை எப்போ சந்திச்ச.. எப்படி பழக்கம்? ” எனக்கு இது இப்போவே தெரிஞ்சாகணும்… 

 

“இந்த கேள்விக்கு விடை எப்படி கொடுப்பான் அவன்… தான் செய்த இந்த அசிங்கமான காரியம் தெரிந்தால்… தன் தந்தையும் தாயும் வேதனையில் குறுகி போய் விட மாட்டார்களா? அவர்களுக்காக பெண்ணின் வாழ்க்கையை பணயம் வைத்ததை எப்படி சொல்லுவேன்” பேச முயன்று வாய் எடுக்க… வார்த்தை தொண்டை குழியில் சிக்கி கொண்டு… வரவே மாட்டேன் என்று அடம் பிடிக்க…மனமோ ஒரு புறம் அழுது கொண்டு இருக்க… 

 

பொறுமை இழந்த வேலுச்சாமியோ மறுபடியும் அன்பின் கன்னத்தை பதம் பார்த்தார்…. 

 

இதே பழைய வீடாக இருந்து இருந்தால்.. வீடே அன்பின் பக்கம் நின்று… வேலுச்சாமியை கேள்வி கேட்டு இருக்கும்… 

 

ஆனால் இன்று… செல்லம்மாள் கூட தடுக்க வரவில்லை..  நடக்கட்டும் என்று கல்லாகவே நின்று இருந்தான்… 

 

ஆனால் அதை பார்க்க முடியாத இலக்கியனோ…. 

 

“நிறுத்துங்க அப்பா… அண்ணனுக்கு அவுங்கள பத்தி எதுவுமே தெரியாது… அவுங்க யார்னு கூட தெரியாது…அவுங்கள அண்ணனே ரயிலில தான் சந்துச்சான்”

 

ரயிலில் நடந்த அனைத்தையும் கூறினான் இலக்கியன்… 

 

அதை கேட்ட வீடே அதிர்ந்து போய் நிற்க… அன்போ குற்ற உணர்வில் கூனி குறுகி போய் நின்று இருந்தான்… 

 

சபையில் இருந்த ஜானகியோ… முன் வந்து… அன்பை ஒரு அறை விட்டு.. அவனை உலுக்கி தன் மகளுக்காக நியாயம் கேட்டு கொண்டு இருக்க….. 

 

செல்லம்மாள் இப்போதும் எதுவும் கூறாமல் அமைதியாக நின்று இருந்தார்… சொல்ல போனால் அவரின் மனநிலையும் அவனை அறையை வேண்டும் என்று தான் இருந்தது… 

 

“நம்மளோட சுயநலத்துக்காக ஒரு பொண்ணோட வாழ்க்கையை அவளோட விருப்பம் இல்லாமல் கெடுத்து இருக்க… எப்போல இருந்துடா உனக்குள்ள இந்த மிருக குணம் வந்துது…. எப்போல இருந்து நீ அரக்கனா மாறின…நீ நாங்க பெத்து வளத்த அன்பே கிடையாது”

 

ஆதங்கத்தை தீர்த்து கொண்டு உருந்தார் வேலுச்சாமி…. 

 

“அப்போ நீ காதலிச்சதா சொன்னா பொண்ணு யாரு… அவள் எங்க… அவளை ஏன் கொட்டிக்கிட்டு வரல? ” இவ்வளவு நேரமாக அமைதியாய் இருந்த சகுந்தலா இறுதியாய் இதை கேட்டார்…. 

 

அதற்கும் அன்பு வாயை திறக்காமல் இருக்க… இப்போதும் பதில் இலக்கியனிடம் இருந்தே வந்தது…. 

 

தங்களுக்காக தான் தாங்கள் மகன் அனைத்தையும் செய்தான் என்பது புரிந்தாலும்… அதற்காக அவன் கையாண்ட பொய்களும்… அதற்கு பனையமாக ஆக்கப்பட்ட இனியவளை பற்றி நினைக்கும் போது தான் மனம் தீயை எரிந்தது செல்லம்மாவிற்கு… 

 

[the_ad id=”6605″]

 

 

“செல்லம்மாவிடம் சென்ற அன்பை… இரண்டடி தள்ளியே நிற்க வைத்தவர்.. எனக்கு என்னோட மருமகள் வேணும்… இப்போவே அவ எங்க இருக்கான்னு எனக்கு தெரியணும்” கட்டளை இட்டார் அவர் 

 

“விடுங்க அண்ணி… ஓடுகாலியா வந்தவ… ஓடுகாலியாவே போய்ட்டா…. இதுல நம்ப என்ன பன்ன வேண்டி இருக்கு… அந்த குட்டியை அனாதை அக்ஷரமத்துல சேர்த்துட்டு கை கழிவிடுவோம்…. நமக்கு எதுக்கு தேவை இல்லாத தலைவலி” அலட்சியமாய் கூறிய சகுந்தலாவை முறைத்த செல்லம்மாள் 

 

“தேவை இல்லாத தலை வலின்னு நான் அப்போவே நெனச்சி இருந்தா… உங்களையும்… உங்க புருஷம் குழந்தைகளையும் தான் வெளிய அனுப்பி இருக்கனும்…அனுப்பிடவா? ” என்றார் என்றும் இல்லாத அதிகாரத்தில்…. 

 

இவர்கள் பேசி கொண்டு இருக்கும் போதே… எதோ நியாபகம் வந்தவனாய்… தன் அறைக்கு விழுந்து அடுத்து கொண்டு ஓடினான் அன்பு… 

 

இறங்கி வந்தவன் கையில் டைரி இன்று இருக்க… அதை பிரித்தவன்… ஆடி தான் போனான்… அதான் முதல் பக்கத்தில் அவளின் பெயரை பார்த்து…. 

 

       

???இனியவள் இளங்கோவன்???

 

                    மாயம் தொடரும்…… 

                 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!