Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

5. நிழலே! என்னை தள்ளிபோகாதே

அந்த பெரிய மாலில் அனைத்து தரப்பு மக்களும் கூடியிருந்தனர். ஆதிரா பொம்மைகளை கைநீட்டவே தேவிகாவும், சௌந்தர்யாவும் அதை நோக்கி சென்றனர். கௌரி மற்றும் சிதம்பரம் கூட்டத்திற்கு இடையே போகாமல் இரு நாற்காலிகளை பிடித்துக்கொண்டு அதில் இருந்தனர். கௌதம் மற்றும் சூரியா பெண்களுக்கான ஆடை பிரிவில் நின்றுக்கொண்டிருந்தனர். சூரியா, தேவிகாவிற்கு சேலை தேர்வு செய்வதை மகிழ்ச்சியோடு பார்த்தவாறு நின்றிருந்தான், கௌதம். “கௌதம், அண்ணிக்கும், அம்மாவுக்கும் ஒரு சேலை தேர்வு செய். சும்மா வெட்டியா தானே நின்று கொண்டிருக்க,” என்றான் […]

Readmore

4. நிழலே! என்னை தள்ளிபோகாதே

வேகமாகப் பாய்ந்த அந்த சொகுசு பேருந்து ஒரு வழியாக அதன் வேகத்தை குறைத்து சாலை ஓரத்தில் நின்ற மரங்களின் நிழல்களில் ஒதுங்கி நின்றது. மழை தூரல் இருந்ததால் வெயிலின் உஷ்ணம் சற்று குறைவாகவே இருந்தது. பஸ் நின்ற நிலையில் தேவிகாவும் கண் விழித்தாள். அவள் கண் விழித்த போது அவள் தலை சாய்த்து இருந்தது சீட்டிலே தான். சூரியாவின் தோளில் சாய்ந்து தூங்கியது அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவள், சூரியாவை பார்க்க அவன் கொண்டுவந்திருந்த சாப்பாட்டு பொதியலை […]

Readmore

3. நிழலே! என்னை தள்ளிபோகாதே

மறுநாள் காலை சூரிய உதயத்திற்கு முன்பே தேவிகா எழும்பிவிட, நல்ல தூங்கி கொண்டிருக்கும் தன் கணவனை சைட் அடித்தாள். பின் அவளை அறியாமலே அவன் மேலே பதித்த பார்வையை எடுக்க முடியாமல் தவிக்க, அவனும் தூக்கத்தில் புரண்டு படுக்க, சூரியா முளித்துவிட்டதாக எண்ணி தன் பார்வையை எடுக்கலானாள். அன்று காலை சமயலறை சென்று சௌந்தர்யாவுக்கு உதவினாள். ஆதிராவும் ஒருவழியாக பள்ளிக்கு கிளம்பிவிட்டாள். “அக்கா, ஸ்டோர் ரூம்ல நிறைய வரைந்த ஓவியங்கள் இருந்தது அதன் கீழே சூரியாவின் பெயர் […]

Readmore

2.நிழலே! என்னை தள்ளிபோகாதே

மறுநாள் காலை நான்கு மணியளவில் அவன் நித்திரை கலைய, அவனுக்கு நேற்றைய தினம் திருமணம் முடிந்தது நினைவுக்கு வர, அந்த பெண்ணிடன் நேற்றிரவு அவன் கூறியதும் அதற்கு அவள் எதையுமே வெளிக்காட்டாது இருந்தது அவனுக்கு குழப்பத்தை சற்று அதிகரித்தது. எப்படியும் அவள் இன்று இந்த விஷயமாக பெரியவர்களிடம் சொல்லி பிரச்சினை பண்ணக்கூடும் என்று சிந்தித்தவன் கண்களை பட்டென்று திறந்து பார்த்தான். அவ்வளவு வெளிச்சம் இல்லாவிட்டாலும் ஜன்னல் கண்ணாடியின் வழியே நிலா வெளிச்சம் தன்னால் முடிந்தவரை ஓளியை ஊடுருவ […]

Readmore

1. நிழலே! என்னை தள்ளி போகாதே

மேற்கு வானில் சூரியன் முழுவதுமாக மறைந்து இருள் படர்ந்த நேரமது. வானத்தில் ஒளிரும் நிலவும் அதோடு சேர்ந்து நட்சத்திரங்களும் உலகையே தன் வசப்படுத்திக் கொண்டிருந்த வேளையில் சூரிய ஆனந்தன் மொட்டைமாடியில் வெட்ட வெளியை பார்த்தப்படி படுத்திருந்தான். அவனது மனயோசனைகள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுக்க அவன் கண்களும் குளமானது. திடீரென, ‘தேவிகா’ ‘சாரா குட்டி’ என்று கூறிக்கொண்டே விம்மி அழத்தொடங்கினான். ஏன்? என்னவாயிற்று அவனுக்கு? ஏன் இந்த இயற்கை வருடும் தென்றலை கூட ரசிக்காமல் அழுகிறான் என்றால் அவனுக்கு […]

Readmore