Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Greakka Manimagudam

கிரேக்க மணிமகுடம் ( வரலாற்றுத் தொடர்) அத்தியாயம்-10

கிரேக்க மணிமகுடம் (வரலாற்று நெடும்தொடர்) 10. சவ்ஜித்தாவின் சாணக்கியத்தனம்… “வான்மகள் மேனி மூடிய நீலப் பட்டாடையில், வெண்மையும், கருமையுமாக, மேகங்கள் பொன்னெளில் வடிவங்கள் சூடியிருந்த மாலை நேரம்”. “கடலரசி,… சூரிய தேவனின் சுடரொளி மங்கும் நேரத்தில் வர்ணக் கலவையாய் காட்சித் தந்தாள்”. “நீலக்கடலில் சிகப்பும், மஞ்சளும் கொட்டி, காரிருள் சூழும் கருமையில் கோடுகளிட்டு, நிலவின் வெண்மையை சிறிது பூசிவிட்டதாலும், கரை ஒட்டி நின்ற மரக்கலங்களும், கரையை ஒட்டி எழும்பியிருந்த கட்டிடங்களும் சேர்ந்து, முத்துத்தீவின் கடல்வெளியெங்கும், ஆயிரம் ஓவியர்கள்… […]


கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) 9ம் அத்தியாயம்

கிரேக்க மணிமகுடம் (வரலாற்று நெடும்தொடர்) 9. துரோகியா? நண்பனா?… “கொற்றச்சோழர் குடந்தை வைத்த நாடுதரு நிதி….” என்ற அகநானூற்றுப் பாடல் புகழும் குடந்தை. வானை முட்டும் கோபுரங்களும், ஒவ்பொறு கோபுரங்களையும் அனைத்து அமைந்த கோவில்களும், வீதி தோறும் கோவில் நாயகர்களை வரவேற்க போடப்படும் கோலங்களும், தெப்பக்குளங்கலில் வீசும் பேரலையும், குடந்தையில் குளிர்ந்த காட்சிகள். கருக்கல்லில் தொடங்கும் வேத மந்திரங்கள் உச்சர்ப்பின் ஒலி.. இரவில் முதல் சாமம் முடியும் வரை ஓங்கி ஒலித்து பரவசம் தரும் அற்புதமான வேதப்பாட […]


கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) 8ம் அத்தியாயம்

கிரேக்க மணிமகுடம் (வரலாற்று நெடும்தொடர்) 8. காந்தளூர்சாலையில் சதிவலை…சிதைக்க வந்த அசுர தேவதை….. கொற்கை துறைமுகத்தின் தென்மேற்கில்….. பரவி விரிந்த மேற்குமலைத்தொடர்….. பசுமை உடையுடுத்தி மேகங்கள் வெண்சாமரம் வீச, தென்னையும் பாக்கும் போட்டியிட்டு தென்றலை வீசி, மகிழ்ச்சி மெட்டு பாடும், வாழை,பலாவும், மாங்கனியும் பழுத்து மணம் பரப்ப, கோதையாற்று வெள்ளம் மணிமுத்தாற்றுடன் காதல் கலாபனை செய்யும் சேர தேசத்து காந்தளூர்சாலை…. தாமரை குளங்களும், தெவிட்டா தேனடைகளும், மலையில் மோதி நிலத்தில் பரவி, துளிர்த்து நனைக்கும் பெரு மழையும்…. […]


கிரேக்க மணிமகுடம் ( வரலாற்றுத் தொடர்) 7ம் அத்தியாயம்

கிரேக்க மணிமகுடம் (வரலாற்று நெடும்தொடர்) 7. சூழ்ச்சியின் சூட்சுமம் “காவிரிப் படப்பை உறந்தை அன்ன” என்னும் அகநாற்று பாடலுக்கு ஏற்ப உறந்தை என்ற உறையூர் சோழர் காலத்தில் செழித்து கொழித்து கோலோச்சி நின்றது. நேற்று சமைந்த எழிலரசி வெட்கத்தில் புன்னகைப்பது போல உறையூரின் கரைகளை கடக்கும் போது, ஆற்றின் வடிவில் இருக்கும் பொன்னி மகள் பூரித்து புன்னகைப்பாளாம்… அவ்வளவு காதல் காவிரிக்கு உறையூரின் கரைகள் மீது…. இரண்டாம் சாமம் கடந்து சில நாழிகைகள் ஆகியிருந்த மையிருட்டு மந்தார […]


கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) அத்தியாயம் 6

கிரேக்க மணிமகுடம் (வரலாற்று நெடும்தொடர்) 6. முத்துத் தீவில் முற்றுகை…. அகோட்டஸ் துறைமுகத்தை நெருங்கிய நேரத்திற்குள், பல்வேறு நாட்டு வணிகர்களும், கிரேக்க போர்வீரர்களும் சேர்ந்து தீயை அணைத்து இருந்தனர். துறைமுகமெங்கும் பதட்ட நிலை காணப்பட்டது. துறைமுக அதிகாரிகள் அவசரமாக தீப்பிடித்திருந்த கிடங்குகள்,அதன் வணிகர்கள், மரக்கலங்களின் தலைவர்கள் ஆகியோரிடம் காவல் படை உதவியுடன் விசாரணை செய்து கொண்டிருந்தனர்…. மாலுமிகள், விடுதியின் உரிமையாளர்கள், பவளதீவிற்கு வரும் பல்வேறு நாட்டினரையும் மகிழ்விக்கும் ஆடல் கூடங்களின் அழகிகள் அத்துணை பேரையும் விசாரணை வளையத்திற்குள் […]


கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) அத்தியாயம் 5

கிரேக்க மணிமகுடம் வரலாற்று நெடும்தொடர்) 5. உந்துரு போட்ட ஓட்டை….. “தன் குடவாயில் அன்னோள்” என்று அகநானூற்றுப் பாடலும், “தேர்வண் சோழர் குடந்தை வாயில்” என்று நற்றிணையும் புகழும் குடவாயில் என்ற குடந்தை…. பிற்கால சோழர்கள் ஆட்சிக்காலத்தில் கோவில்களின் நகரம் என்றும் சுந்தர சோழ சக்ரவர்த்தியின் காலம் வரை சோழ தேசத்தின் தலைநகராகவும் இருந்த பெரும் நகரம். வாசகர்களின் எளிய புரிதலுக்கு இன்றைய கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியே கதையில் வரும் குடந்தை. சோழர்களின் கருவூல […]


கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) அத்தியாயம் – 4

கிரேக்க மணிமகுடம் (வரலாற்று நெடும்தொடர்) 4. பச்சை விழி பவள முல்லை…… ஏஜியன் நீலக்கடலில் நிலவின் ஒளிப்பட்டு மின்னிய நீரை கத்திப்போல கிழித்துக்கொண்டு பாயும் ஸ்கேட் என்னும் பெயருடைய மரக்கலனின் வேகத்தில் இருபுறமும் பாய்ந்து பிரியும் கடல்… விண்ணிலிருந்து பார்க்கும் போது அந்த மரக்கலம், நிலத்தில் இரு கணவாய்களிடையே பாய்ந்து செல்லும் பெரிய ரதமாக காட்சி தந்தது. தெளிந்த வானத்தில் ரோகிணி நட்சத்திர கூட்டம் முளைத்து மின்னிக் கொண்டிருக்க, சிறிதும் பெரிதுமான புகை மண்டலங்களாக மேகங்களின் அணிவகுப்பு […]


கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) அத்தியாயம்-3

கிரேக்க மணிமகுடம் (வரலாற்று நெடும்தொடர்) 3. ஆலமரத்தில் அபாயசங்கு “சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் அறத்துவழிப் படூஉம் தோற்றம் போல இருகுடை பின்பட வோங்கிய வொருகுடை“ என்னும் புறநானூற்றுப் பாடல் சோழர் குலத்தின் பெருமையை பறைசாற்றும்.அத்தகைய பெருமைக்குரிய சோழகுலத்தில்….. சூரியனின் கதிரொளி போல தகதகக்கும் நிறத்தோனாகவும், செந்தாமரை கன்னங்களில் சோழக்கொடி தாங்கிய, புலியின் வாலை மீசையாக கொண்டவனும், அகன்ற மார்பில் சிறிதும் போர் புரிந்து பெற்ற விழுப்புண் இன்றி வெறுமையாக இருப்பவனும்,…. தன் பாட்டன் இளஞ்சேட் சென்னியைப் […]


கிரேக்க மணிமகுடம் ( வரலாற்றுத் தொடர்)

கிரேக்க மணிமகுடம் 2. பவளத் தீவில் பாய்விரித்த நாவாய் மத்திய தரைக்கடல் பகுதியில் விரிந்து பரந்திருந்த நீலக்கடல் பரப்பு…. மத்திய தரைக்கடலிலிருந்து வடக்கு நோக்கி விரிந்த ஏஜியன் கடலில் வாரியிறைத்த மரகத கற்களாக சிதறி ஜொலித்த தீவுக்கூட்டங்கள்…. எண்ணைதீவுகள் என்று கடலோடிகள் அழைத்த பேகான தீவுகள் கூட்டம் ஒவ்வொன்றும் ஒரு தனிரகம்…. அந்த தீவுக்கூட்டத்தின் நடுவே சிறிது பரப்பில் பெரியதும் மேடான மலைப்பகுதியில் அமைந்ததுமான பவளத்தீவு, தன்னை சுற்றிலும் ஏழு சிறு தீவுகளை அரணாக கொண்டு கம்பீரமாக […]


கிரேக்க மணிமகுடம்

1. ஆடித் திங்கள் நள்ளிரவில் “உறந்தை குணாது நெடும் பெருங்குன்றம்” என்ற அகநானூற்று பாடலும், ” உறந்தை குணாது நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர்” என்ற புறநானூற்றுப் பாடலும் குறிக்கும் உறையூர். முற்கால சோழர்களின் தலைநகரம். இளஞ்சேர்ச்சென்னி துவங்கி கரிகால் பெருவளத்தான் வரை சீரோடும் சிறப்போடும் விளங்கிய அற்புதமான பெருநகரம். உறையூரை அணைத்தபடி ஆர்ப்பரித்து பொங்கி பாயும் பொன்னி நதியும், பொன்னி நதி தன் மடிமீதில் தாலாட்டி மகிழும் உறையூரின் கரையாவும், கன்னிப்பெண் தன் காதலனை மடியில் […]