Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Maruvak Kaathal Kondaen

மருவக் காதல் கொண்டேன்-22 (2)

மைக்கேல் கிருஷ்ணாவின் காரை எடுக்க, வழக்கமாக அவரின் அருகில் முன்னாடி அமரும் கிருஷ்ணா, இன்று பின்னாடி உமையாள் அருகில் அமர்ந்தான். உமையாள் இதை கவனித்தாலும் பெரிதாக அலட்டி கொள்ளாமல் இருக்க, காரில் ஏறிய சில நிமிடங்களிலே கிருஷ்ணா உறங்க ஆரம்பித்துவிட்டான். இத்தனை நாள் சரியாக உறங்காதது, வேலை பளு, திருமணத்தை குறித்த தன்னவளின் எண்ணங்கள் பற்றிய கவலை என உள்ளத்தின் அலைப்புறுதல் எல்லாம் அவனவளின் அருகாமையில் கரைந்து காணாமலே போக, அவன் ஆழ்ந்த உறக்கத்தின் வசம். உறங்கும் […]


மருவக் காதல் கொண்டேன்-22 (1)

கிருஷ்ணா பல எண்ணங்களுக்கு நடுவில் மருத்துவமனையில் உழன்று கொண்டு இருக்க, வீட்டிற்கு சென்ற உமையாளும், வசீகரனும் கூட திரும்பி வந்து விட்டனர், ஆனால் இன்னும் ஜெயவர்மர் கண் விழிக்க வில்லை. என்ன தான் மருத்துவர்கள் இனி பயம் இல்லை என்று கூறிவிட்டாலும், அவர் கண் திறந்து, ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டால் நிம்மதி என்ற நிலையில் தான் அமர்ந்து இருந்தனர் நால்வரும். சில மணிநேர காத்திருப்புக்கு பிறகு, ஜெயவர்மர் மயக்கம் தெளிந்துவிட்டதாக கூறிய செவிலியர், அவருக்கு சில சோதனைகள் […]


மருவக் காதல் கொண்டேன்-21

படித்தவர்களோ, பாமரர்களோ நிறைய பேருக்கு உடல் நலத்தின் பேரில் சரியான அக்கறையும், அதை சரியாக பேணுவதற்கான அவசியமும் புரிவது இல்லை. ஐம்பது வயதை கடந்தால், வருடத்திற்கு ஒரு முறையேனும், முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அத்தியாவசியம். உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாட்டில் பிரச்சனை எழும் போதும், உடல் ஏதாவது ஒரு வகையில், அதை பற்றிய குறிப்பை நமக்கு கொடுத்து கொண்டே தான் இருக்கும். ஜெயவர்மர் கடந்த இரண்டு வருடங்களாக, அவரின் உடல் கொடுத்த குறிப்புகளை புரிந்து […]


மருவக் காதல் கொண்டேன்- 20 (1)

கிருஷ்ணா உமையாளிடம் மனம் விட்டு, தன் தயக்கங்ளையும்,காயங்களையும் பகிர்ந்து கொண்டதாலோ என்னவோ அன்று இரவும், அதற்பிறகான நாட்களிலிலும், அலைபுறுதல் இல்லாத நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் வாய்க்க பெற்றது கிருஷ்ணாவுக்கு. அந்த நீண்ட உரையாடலுக்கு பிறகு, கிருஷ்ணாவின் மனம், முன் எப்பொழுதையும் விட, உமையாளை அவனுக்கு இன்னும் நெருக்கமாக நினைக்க ஆரம்பித்து இருந்தது. அலுவலகத்திலோ புதிதாக கிடைத்த அந்த வெளிநாட்டு ஒப்பந்தத்தின் காரணமாக, வேலைகள் முன்னைவிட முனைப்புடன் நடக்க ஆரம்பித்து இருந்தன. தினமும் நடைபெறும் வேலைகளோடு, புதிய வேலைகளும் […]


மருவக் காதல் கொண்டேன்-20 (2)

கிருஷ்ணா கிளம்பும் வரை அவனில் மட்டுமே கவனத்தை வைத்திருந்த ஜெயவர்மர் மீண்டும் தன் சிந்தனைகளில் உழல ஆரம்பித்தார். அவரின் எண்ணங்கள் ஒரு வாரத்திற்கு முன்பு சென்றது. அன்று உமையாள் இவரிடம் வழக்கம் பேச பேச, தீவிர சிந்தனையில் இருந்த தன் மகனின் முகமே கண் முன் தெரிய, இவரால் தான் அவளுடன் சரியாக உரையாட முடியவில்லை. இவரின் கவனம் இங்கு இல்லை என்பதை புரிந்துகொண்ட உமையாளும் சீக்கிரமே விடைபெற்று கிளம்ப, இவர் அவரின் மகனை நாடி கிளம்பினார். […]


மருவக் காதல் கொண்டேன்-19

முன் உச்சி கொண்டை, மீதி முடி தோளில் புரண்டு விளையாட, இலகுவான உடை அணிந்து, நீச்சல் குளத்தின் நீரோடு குதி கால்களை மட்டும் உறவாடவிட்டு, தீவிர சிந்தனையின் வசம் இருந்த கிருஷ்ணாவை ஆதவனின் பொன்மஞ்சள் கிரணங்கள், பொன்னால் வடித்த சிலையென காட்டி கொண்டிருந்தன. இன்று வழக்கத்துக்கு மாறாக கிருஷ்ணா அலுவலகத்தில் இருந்து சீக்கிரமே வந்து இருந்தான். மனம் தீவிர சிந்தனையிலே இருக்க, அவனுக்கு தனிமை தேவையாய் இருக்க, வசீகரனிடம் மட்டும் தான் கிளம்புவதாக சொல்லிவிட்டு கிளம்பி விட்டான். […]


மருவக் காதல் கொண்டேன்-18

தன் நண்பனிடம் தன் காதலை பற்றி மனம் திறந்ததாலோ என்னவோ, வசீகரன் அன்று இரவு நன்றாக உறங்கினான். மறுநாள் உற்சாகமாக எழுந்து இவன் கிளம்பி, அலுவலகம் செல்ல தயாராகி வந்தும் கூட, அவனின் பாப்பு எழுதற்கான எந்த அறிகுறியுமே தெரியவில்லை. “என்னவாயிற்று அவளுக்கு” என்று, அவளின் அறைக்கு சென்று பார்க்க, அவளோ இன்னும் உறங்கி கொண்டு தான் இருந்தாள். ஒரு வேளை நேற்று வெயிலில் சுற்றியது உடலுக்கு சேரவில்லையோ என்ற யோசனையுடன் அவளின் அருகில் சென்றான். அவளின் […]


மருவக் காதல் கொண்டேன்-17

இரவு எல்லாம் தன் நிலா பெண்ணோடு கனவிலும், பல்வேறு சிந்தனைகளும் ஆட்கொண்டதில், நேரம் கழித்து உறங்கி இருந்த போதிலும், மனதின் உற்சாகமோ என்னவோ காலையில் வழக்கமான நேரத்திற்கே எழுந்து விட்டான் வசீகரன். அவன் தயாராகி வெளியே வர, உமையாளோ இன்னும் அவளின் அறையில் இருந்து, வெளி வந்த பாடு இல்லை. இன்று ஊர் சுற்றி பார்க்க போவதால், நண்பர்கள் மூவரும், உமையாளுடன், ஒன்றாக இங்கிருந்து கிளம்பி செல்வதாக தான் திட்டம். பின்பு நட்சத்திர விடுதிக்கு சென்று, அவர்களின் […]


மருவக் காதல் கொண்டேன்-16

நண்பர்கள் மூவரும் ஆவலாக எதிர்பார்த்த திங்கள் கிழமை, வழக்கத்துக்கு மாறாக பரபரப்புடன் விடிய, காலை எழுந்தது முதலே வசீகரன் பம்பரமாய் சுற்றி தயாராக, உமையாளோ எப்பொழுதும் போல தேரென ஆடி அசைந்து தயாரானாள். இருவரும் உணவு மேசையில் உணவுக்காக அமர, வசீகரனை பார்த்து உமையாள் மென்மையாக புன்னைகை புரிய, அந்த புன்னகை புது புத்துணர்வை தர, கொஞ்சம் பரபரப்பு நீங்க, அவனும் புன்னகையுடனே அமர்ந்தான். இருவரும் உணவில் கவனமாக இருக்க, வசீகரனின் கைப்பேசி ஒலித்து அதன் இருப்பை […]


மருவக் காதல் கொண்டேன்-15

உமையாள் வசீகரனின் வீட்டிற்கு வந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன நிலையில், அன்று அலுவலகத்தில் நண்பர்கள் மூவருமே கொஞ்சம் பரபரப்பாய் தான் இருந்தனர். இன்று தான் அந்த வெளிநாட்டு நிறுவனம், ஒப்பந்ததிற்கான பதிலை தெரிவிப்பதற்கான நாள். கொஞ்சம் கடுமையான போட்டி தான், இருந்தாலும் நண்பர்கள், இந்த ஒப்பந்தம் தங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனே இருந்தனர். என்ன தான் நம்பிக்கை இருந்தாலும், அறிவிப்பிற்கான நேரம் நெருங்கையில், முடிவு நல்ல விதமாக வர வேண்டுமே என்ற பதட்டம் இருந்தாலும், அதை […]