Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vaa Vaa En Thoora Nila

வா வா என் தூர நிலா 23(2)

சென்னையில்  விமானத்தில் விஜயவாடா சென்றனர் கல்கியும் சிரஞ்சீவியும். முதல் முறை  வானில் பறந்தாள் வஞ்சி!! அவளுக்குப் பிடித்த பறவை போல.! விஜயவாடாவில் சூர்ய நாராயணன் க்ரைம் ப்ராஞ்சில் கமிஷனராக இருந்தார். கல்கி வருகிறாள் என்பதால் மனைவியுடன் சொந்த ஊரான குண்டூருக்கு வந்திருந்தார். விமான நிலையத்தில் இருந்து குண்டூருக்கு டாக்ஸி பிடித்தான் சிரஞ்சீவி. “மாமா வீடு எங்க இருக்கு?” கல்கி சுற்றிலும் பார்த்தபடி சிரஞ்சீவியிடம் கேட்டாள். “குண்டூர்ல இருந்து ஒரு ஃபாஃப்டி வைஃப் மினிட்ஸ் ஆகும். இங்க இருந்து […]


வா வா என் தூர நிலா – 23(1)

தூர நிலா 23 மௌனம் இத்தனை இசைக்குமென வரப்ரசாத் அன்றுதான் அனுபவத்தில் உணர்ந்தான். அவள் விழியும் அவன் விழியும் சங்கமித்த, அந்த காதல் சஞ்சரித்த நொடிகள் அத்தனைப் பிடித்தது. அவனுக்காகவே தான் அவன் மொழி கற்கிறேன் என்று கல்கி  சொல்லவில்லை. அவனைப் பிடிக்கும், அதனால் அவன் மொழி பிடித்தது! கல்கி அப்படித்தான்! யாரிடமும் உன்னைப் பிடிக்கும் என்று சொல்லி பழக்கமில்லை. அப்பா, அம்மாவிடம் எல்லாம் பிடிக்கும் என்றா  நித்தமும் சொல்கிறோம்? அது போலவே அவள் எண்ணம். ‘உனக்காக’ […]


வா வா என் தூர நிலா 22(2)

அடுத்த இரண்டு நாளும் கல்கியும் வரப்ரசாதும் பேசிக்கொள்ளவில்லை. அம்மாவைப் பேசிய கோபத்தில் அவனும், அவன் பேசாத கோபத்தில் அவளும் இருக்க மகளுக்கு உதயமூர்த்தி அழைத்தார். பொதுவாய் நலம் விசாரித்து முடித்தவர் “என்ன கல்கி காலேஜ்ல டூர் போறாங்களாமே?” என்று கேட்க “ஆமாம்பா, அடுத்த வாரம் பெங்களூர் போறாங்க” என்று கல்கி பதில் சொல்ல “உனக்குப் போக ஆசையில்லையா?” என்று கேட்க, கல்கியிடம் பேச்சில்லை. மகளின் மௌனம் புரிந்த அவரும் “நீ போய்ட்டு வா கல்கி. இப்போ ஃபீஸ் […]


வா வா என் தூர நிலா 22

 தூர நிலா 22 மாலை நேரம் இத்தனை மஞ்சிமத்துடன் இருந்தது போல் வரப்ரசாத்தின் நினைவில் இல்லை. இன்னும் சற்று நேரத்தில் கல்கி வந்துவிடப் போகிறாள் என்பதே சுவாசத்தை சீராக்கியது. தான் ஒரு பெண்ணை இத்தனை நேசிக்கிறோம் என்பதை அவனுக்கு ஆச்சர்யம்! அதனை விடவும் ஆச்சர்யம் கல்கி!! சின்ன வயதில் அவளுக்கு இருக்கும் தெளிவும் துணிவும் அவன் மதிக்கும் பக்கங்கள் என்றால், அவளின் திமிரும் கோபமும் அவன் ரசிக்கும் பக்கங்கள்.! அதனையும் விட கொண்ட செயலில் அவளுக்கு இருக்கும் […]


வா வா என் தூர நிலா 21

தூர நிலா 21 கல்கிக்கு ஆழ்ந்த உறக்கத்தில் விழிப்பு வந்துவிட, கண்முழித்து பார்க்க அவள் அறையில் இருந்தாள். நேரம் பார்க்க பதினொன்று. தீடீரென வரப்ரசாத்தின் நினைவு அவளைக் கேட்காமலே வஞ்சியிடம் வந்தது. அவன் வீட்டிற்கு வந்திருப்பானா இல்லையா என்ற எண்ணம் அவளை அலைக்கழித்தது. ஊருக்கு வந்த குஷியில் அவன் நினைவின்றி அம்மா, அப்பா, அப்பத்தா என்று எல்லாருடனும் பேசிவிட்டு சந்தோஷமாய் நேரம் ஓடிவிட பயணக் களைப்பில் பாவை அசந்தும் போயிருந்தாள். ஆனால் வாழ்க்கையின் வழக்கமாய் சில மாதங்களாய் […]


Vaa Vaa En Dhoora Nilaa – 20

தூர நிலா 20 கல்கியிடமிருந்து தன்னைப் பிடிக்கும் என்ற வார்த்தைகளைக் கொஞ்சமும் சிரஞ்சீவி எதிர்ப்பார்க்கவில்லை. திடீரென சொன்னாலும் தித்திக்கவே செய்தன அவள் வார்த்தைகள். “அவுனு?” என்று அவன் சிரிப்புடன் கேட்க “அவுனு அவுனு” என்றாள் அவனைப் போல. அவன் பார்வையில் இன்னும் கேள்வி மிச்சமிருக்க, கல்கியே பேசினாள். “இல்லை முன்னாடியெல்லாம் ரொம்ப சண்டைப்போடுவோம்ல, இப்போதான் தெரியுது நீங்க கொஞ்சம் ஸ்வீட்னு” “ஓஹ், கொஞ்சம்தானா?” “கொஞ்சம் ஸ்வீட், கொஞ்சம் காரம்” என்றதும் அவன் புருவங்கள் உயர, கல்கியோ “எனக்குக் […]


Vaa Vaa En Dhoora Nilaa – 19

தூர நிலா 19 சிரஞ்சீவி வரப்ரசாத்  வழக்கு விஷயமாக கமிஷனரைப் பார்க்க சென்றிருந்தான். அவருடன் பேசி முடித்து வெளியே வருகையில் பரத்வாஜிடமிருந்து அவனுக்குப் போன் வந்தது. “எஸ் பரத்” “ஸார், கல்கி போன் பண்ணியிருந்தாங்க” என்று பரத் சொல்ல, வரப்ரசாத்திற்கு அதிர்ச்சி. கல்கி ஏன் இவனுக்குப் போன் செய்திருக்கிறாள் என்று யோசனைப் போனாலும் பரத்வாஜே பேசட்டும் என்று இருக்க, “ஏதோ எமெர்ஜன்சி, என்னை உங்க ஏரியா ஸ்டெஷன் வரமுடியுமா கேட்டாங்க. அங்க இருக்காங்களாம் அவங்க” என்றுவிட எமெர்ஜன்சி […]


வா வா என் தூர நிலா 18

தூர நிலா 18 வீட்டிற்கு சிரஞ்சீவி நுழையும்போது மணி பத்து. தையல் நாயகி உறங்கப்போய்விட்டாள். கல்கி ஹாலில் உட்கார்ந்து படித்துக் கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்தாள். உள்ளே நுழைந்தவன் கல்கியிடம் “உங்கப்பாவை பஸ்ல ஏத்தி விட்டாச்சு கல்கி” என்று சொன்னான். “ம்ம், தெரியும். அப்பா கால் பண்ணிட்டாங்க. அது என்ன உங்கப்பா? மாமான்னு சொன்னா தேஞ்சிடுவீங்களோ?” என்றாள் கொஞ்சம் கோபமான குரலில். “ப்ச், உன் அப்பாவை உன் அப்பான்னு சொல்றதுல என்ன தப்பு?” என்றான் அவனும் எரிச்சலாக. “என் […]


வா வா என் தூர நிலா 17

 தூர நிலா17 அன்று காலை உதயமூர்த்தி சென்னை வருவதாக இருந்தது. சிரஞ்சீவி வழக்கம் போலவே காலை நேர நடைபயிற்சிக்குத் தயாராகி வந்தவன் கல்கி இன்னும் வராமல் இருப்பது கண்டு ஹாலில் இருந்தபடியே “கல்கி!” என்று குரல் கொடுத்தான். “கூப்பிட்டீங்களா?” என்றபடி கல்கி வெளியே வர “வாக்கிங் வரல நீ?” என்றான். “இல்லை, அப்பா வராங்க. அப்பாவுக்கு காலையில பொண்ணுங்க வாக்கிங் போறது எல்லாம் பிடிக்காது. அதெல்லாம் வயசானவங்க செய்றதுன்னு சொல்வார். அப்பா ஊருக்குப் போறவரைக்கும் நோ வாக்கிங், […]


வா வா என் தூர நிலா 16

தூர நிலா 16 கல்கி அப்படி தன்னைப் பார்த்து சொல்லிவிடவும் வரப்ரசாத்தினால் அவளின் வார்த்தைகளை ஏற்கமுடியவில்லை. தங்கள் வீட்டில் வந்து இருக்கிறாள், அதுவும் ஊரில் உறவுகளை விட்டு என்ற காரணத்தால் அவளை மிகவும் நன்றாகப் பார்த்துக் கொள்கிறோம் என்ற கர்வத்தில் இருந்தவனுக்கு அவளின் வார்த்தைகள் பிடிக்கவே இல்லை. அப்படி என்ன நான் இவளிடம் போலிஸாக நடக்கிறேன் என்ற எண்ணமே. இதே வெளியாட்கள் என்றால் ஆம் நான் போலீஸ் அப்படித்தான் இருப்பேன் என்றிருப்பான் கர்வத்துடன்! ஆனால் உறவாய் நினைக்கும் […]