ஹாய் பிரண்ட்ஸ்,
கனவுப் பட்டறை கதை தொழிற்சாலை – A Novel Writing Contest 2025
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த முடிவுகள்
இருபத்தி இரண்டு கதைகள் முடிவடைந்தன
அவர்களின் வெற்றி பெற்ற வரிசைகள் விகிதம்
இந்த வரிசை படுத்ததிலில் பெரிய வித்தியாசங்கள் இல்லை. தமது வாசிப்பு விகிதங்களையும் வாக்குக்களையும் தெரிந்து கொள்ள நினைக்கும் எழுத்தாளர் என்னை தனியாக தொடர்ப்பு கொள்ளலாம்.
தெரிந்தவர், தெரியாதவர் அறிந்தவர் அறியாதவர் நமது தளம் வேறு தளம் என்ற எந்த பாகுபாடுமின்றி வாசகர்களின் வாசிப்பு, வாக்குகள் கொண்டே இந்த முடிவு. நடுவரின் கருத்தாக வெகு சில கதைகளை தவிர, கதைகளின் களமும் இந்த முறை பெரிய வித்தியாசமில்லாமல் லவ் அண்ட் லவ் ஒன்லி என்ற நமது கருப்பொருளுக்கு ஏற்பவே இருந்தது அதனதன் போக்கில்.
எப்பொழுதும் நான் சொல்வது தான், வாசகர்களை எது ஈர்ப்பது என்பது நம்மால் கணிக்க முடியாதது. இது வாசகர்களின் திருவிழா அவர்களைக் கொண்டே இந்த முடிவு.
சிலர் பேர் சொல்லி எழுதினர், சிலர் பெயர் சொல்லாமல், பெயர் சொல்வத்தும், சொல்லாததும் அவரவர் விருப்பம்.
முதலிடத்தில் இருக்கும் ஆராதனா துரையும், ஆறாவது இடத்தில் இருக்கும் ரெஞ்சு வினோத்தும் முன்பே நமது பதிப்பகத்தில் இருப்பதால் இவர்கள் வெற்றி பெற்றாலும், புத்தக பதிப்பின் வரிசையில் இவர்கள் இல்லை ஏனென்றால் இவர்களது தானாகவே பதிப்பித்து விடுவோம், அதற்குரிய பரிசையும் கொடுத்து விடுவோம்.
இவர்கள் அல்லாது தென்றல், ஸ்ரீ, மித்து, மகிழினி சந்திரன் இவர்கள் நால்வரும் புத்தக பதிப்பிற்குள் வருவர், அவர்கள் விருப்பம் இருந்தால். மற்றபடி பரிசுத் தொகை மூவாயிரம், அவர்களை சேரும்.
இவர்கள் அல்லாமல் பங்குபெற்று கதையை முடித்த அனைவருக்கும்,
1) எட்டு கிராம் மதிப்புள்ள வெள்ளிக் காசு அல்லது பார்
2) ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நமது பதிப்பகத்தின் புத்தகங்கள்
3) மின் சான்றிதல்கள்
பங்கு பெற்ற அனைவருமே வெற்றி பெற்றவர்களாகத் தான் கருதுகிறோம். இது வாசகர்களுக்கான திருவிழா. அவர்கள் படிக்க எழுதி முடித்த அனைவரும் வெற்றி பெற்றவரே.
கீழே உள்ள லிங்கில் எழுத்தாளர்கள் அவர்களின் விவரங்கள் கொடுக்கவும். இன்னும் பத்து நாட்களில் பரிசுகள் உங்களை சேரும்
கதைகளை எடுக்க நினைப்பவர்கள் எனக்கு சொல்லுங்க, பதிமூணாம் தேதி போல எடுத்து விடுகிறேன்.
அடுத்த போட்டியின் அறிவிப்பு கூடிய விரைவில்
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே
Last edited: