இன்னிக்காச்சும் “அவர்” வருவாரா? வரணுமே கடவுளே!
அப்பா பிள்ளையாரப்பா.. உனக்கு ஒரு தேங்காய் கூட எடுத்து வச்சுருக்கேன்! சிதறு காய் போடவென்று!
கண்டிப்பா இன்னிக்காவது “அவர்” வந்திடணும்!
நானும் ஒரு வாரமா “அவர்” வருவார்ன்னு வருவார்னு காத்துட்டு இருக்கேன்!
ஆனால் மனுஷன் வந்தா தானே?
போன வாரமே “அவர்” வர வேண்டியது!
போன் பண்ணும் போதெல்லாம் இதோ.. இன்னிக்கு கட்டாயம் வந்துடுவேன்னு சொல்றார்.
ஆனா வர தான் மாட்டேங்கிறார்!
என்ன பண்றதுன்னே தெரியல!
இப்ப நான் இருக்கிற சூழ்நிலையில் “அவரை” கோவிச்சுக்கவும் முடியல!
எத்தன வாட்டி தான் போன் பண்றது?
இதுல பல நேரம் போன் பிசியா இருக்கு.
இல்லைனா போனை “அவர்” எடுக்க மாட்டேங்கிறார்.
பேசாம “அவர்” ஆபிஸுக்கே போன் பண்ணிடலாம்னு கூட தோணுது தான் சில சமயம், காத்திருந்து காத்திருந்து வராத கோபத்தால்!
ஆனால் இப்ப வேகம் முக்கியம் இல்லை!
விவேகம் தான் முக்கியம்!
நேற்றே கண்டிப்பா வரேன்னு சொல்லியிருந்தார் தான்!
ஆனா நேத்துன்னு பார்த்து, ஒரே டிராஃபிக்!
உறையூர் குழுமாயி அம்மன் கோவில் குட்டிக் குடி திருவிழா!
பயங்கர டிராஃபிக்!
“அவரால” நிஜமாவே வர முடியல!
இன்னிக்கு கண்டிப்பா வந்துடறேன்னு சொல்லியிருக்கார்.
அதனால தான் காலையில் இருந்தே “அவர்” வருகைக்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்!
“அவர்” வரும் போது நாம் வேலையாக இருந்துட கூடாதுன்னு தான் ஒர்க் ப்ரம் ஹோமில் இருக்கும் நான், எனது மீட்டிங் எல்லாத்தையும் மாத்தி மதியத்துக்கு மேல் ஷெட்யூல் பண்ணி விட்டேன்.
குழந்தையைக் கூட வழக்கத்தை விட முன்னதாகவே குளிப்பாட்டி விட, அவன் குளித்த அசதியில் வழக்கத்தை விட சீக்கிரமே தூங்கி விட்டான்!
இனி ஒரு இரண்டு மணிநேரம் அவன் தூங்குவான்!
“அத்தை.. அவர் வரும் நேரம் நீங்க கொஞ்சம் வீட்டில் இருந்தா நான் மத்த வேலைகளைப் பார்ப்பேன்” என்று மாமியாரிடம் கெஞ்சிப் பார்த்தும் மாமியார் கேட்காமல் மகள் வீட்டிற்கு, இன்றைக்கு தான் நாள் பார்த்து கிளம்பி போய் விட்டார்.
என்னவரோ, “எப்ப போறே என் பாஸ் வீட்டுக்கு? என்றார்.
என்னவரின் பாஸின் மகள் இன்று காலையில் தான் பூப்பெய்தி இருக்கிறாள்.
காலை பதினோரு மணிக்கு தலைக்கு தண்ணீர் ஊற்றி அவளை அழைக்க இருக்கிறார்கள்.
முதலாளியின் மனைவி காலையிலேயே வந்து குங்குமம் கொடுத்து அழைத்து விட்டுப் போயிருந்தார்!
நிச்சயம் போக வேண்டும் தான்!
ஆனால் இன்றைக்கு நான் எங்கும் வெளியே போவதாக இல்லை!
“நான் இன்னிக்கு எங்கயும் வெளியே போறதா இல்ல!
நாம வேணுமின்னா நீங்க ஆபிஸ் விட்டு வந்தவுடன், ஸ்வீட் காரம் பூ வாங்கிட்டு போய் பார்த்துட்டு வரலாம்.
ஆனா இப்ப நான் எங்கயும் வெளியே வர மாட்டேன்!” என்று சொல்லி விட்டேன்.
காரணம் “அவர்” வரும் நேரம் வீட்டில் நான் கட்டாயம் இருக்க வேண்டும்!
அதனால் போக முடியாது என்றே நிர்தாட்சண்யமாகவே மறுத்து விட்டேன்!
என்னவர் கோவித்துக் கொண்டு காலையுணவு சாப்பிடாமல் சென்று விட்டார் ஆபிசிற்கு!
சாப்பிடாமல் போனா, போகட்டும்! ஒரு நாள் சாப்பிடாமல் இருந்தா ஒண்ணும் கெட்டுப் போய்டாது.
ஆனா நான் மட்டும் “அவர்” வர்ற நேரம் இன்னிக்கு வீட்டில் இல்லாமல் போய்ட்டா, அப்புறம் பல நாட்கள் நமக்கு சாப்பாட்டுக்கு பிரச்சினை வந்து விடும்!
போனை கையில் வைத்துக் கொண்டு, வாசல் காலிங் பெல்லிலும் ஒரு காதை வைத்துக் கொண்டே தான் காத்திருந்தேன்.
“அவருக்கு” குடிக்க எதாச்சும் கொடுக்கலாமா?
ஜூஸ்? இல்ல நன்னாரி சர்பத்? இல்லைனா டீ? என்ன குடிப்பாருன்னு கேட்டுப்போம்!
யோசித்துக் கொண்டிருக்கையிலே காலிங் பெல் அடித்தது!
கதவைத் திறந்தால் “அவரே” தான்!
சட்டென்று ஒரே மகிழ்ச்சி!
“வாங்க.. உள்ள வாங்க..”
“என்ன சாப்பிடறீங்க? டீ இல்லைனா சர்பத்?”
“அதெல்லாம் வேண்டாம்ங்க மேடம். ஓ.டி.பி மட்டும் சொல்லுங்க” என்று புது காஸ் ஸ்லிண்டரை வைத்து விட்டு,
பழைய காலி சிலிண்டரை தோளில் சுமந்து கொண்டு, கையில் பில்லை நீட்டியவாறு சொன்னார், அந்த காஸ் சிலிண்டர் டெலிவரி மேன்!