மனைவி - 3
கலை தூக்கக் கலக்கத்தில் எரிச்சலுடன் கண்களைத் திறந்தார். "எதுக்கு இப்ப என்ன ரெண்டு பேரையும் எழுப்புறீங்க? நீங்களும் படுத்துத் தூங்க வேண்டியது தானே?" என்று தன் மகள்களைப் பார்த்துக் கேட்டார்.
"எப்படிம்மா தூக்கம் வருது?" என்று மலர் சலிப்புடன் கேட்க, கலைக்குக் கோபம் வந்துவிட்டது.
"கண்ண மூடுனா தூக்கம் வரும்டி! இப்ப என்ன இந்த மாதிரி கிறுக்குத்தனமான கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க?" என்று படபடத்தார்.
மலர் விடாமல், "லூசு மாதிரி உளறிட்டு இருக்காத... உன் பையன் வரப்போறான், அதை மறந்துட்டியா?" என்று நினைவூட்டினாள்.
கலை இப்போது நிதானமாக எழுந்து அமர்ந்தார். தன் இரு மகள்களையும் அவர்களை விடவும் அதிக நிதானமாக ஊடுருவிப் பார்த்தார். ஒருவித அலட்சியத்துடன், "வந்தா என்ன? என் மகன் தானே வர்றான்!" என்றார்.
"அம்மா, அவன் வந்து பொண்டாட்டி கூட ஒட்டிக்கிட்டா?" என்று அலர் தன் அச்சத்தை வெளிப்படுத்தினாள்.
கலையின் முகம் மாறியது. "அதுக்கு நான் விடமாட்டேன்!" என்று அழுத்தமாகக் கூறினார்.
"என்ன பண்ணப் போற?" என்று மகள்கள் ஆர்வமாக கேட்க,
"அதெல்லாம் நான் யோசிச்சு வச்சுட்டேன். நீங்க ரெண்டு பேரும் உங்க வாழ்க்கையைச் சந்தோஷமா வச்சுக்கிற வழியை மட்டும் பாருங்க. உங்க புருஷன் கூடச் சந்தோஷமா இருங்க. என் பையன் ஸ்ரீராம் வந்ததும் நான் என்ன பண்ணனும் அப்படிங்கிறதை ஏற்கனவே முடிவே பண்ணிட்டேன்" என்றார் கலை தீர்க்கமாக.
"அவள் இந்த வீட்ல இருக்கிறது சுத்தமா பிடிக்கலைம்மா!" என்று அலர் தன் முகத்தைச் சுளித்துக் கொண்டே கூறினாள்.
"எனக்கும் தான் பிடிக்கலை. நம்மளா அவளைத் துரத்தி விட முடியாது. இப்ப ஸ்ரீராம் வர்றான்ல, அவனை வச்சே அவளைத் துரத்தி விடலாம்" என்று கலை ஒரு திட்டத்தைப் போட்டார்.
"அது நடக்குமா?" என்று மலர் சந்தேகப்பட,
"மலர், உன் அம்மா எது நினைச்சாலும் நடத்திக் காட்டுவாள். என் மகன் நான் கிழிச்சுப் போட்ட கோட்டைத் தாண்ட மாட்டான்" என்று கர்வத்துடன் சொன்னார் கலை.
"அது எங்களுக்கும் தெரியுமம்மா. ராம் இதுவரைக்கும் நீ என்ன சொன்னாலும் மறுத்துப் பேசினது கிடையாது. ஆனா இதுவரைக்கும் அவன் வெளிநாட்டுல இருந்தான். இனி இங்கே வந்து தங்கிட்டான்னா, அவன் பொண்டாட்டியைப் பார்த்து அவன் மனசு கொஞ்சம் மாறுச்சுன்னா என்ன பண்றது?" என்று மலர் தன் கவலையைத் தொடர்ந்தாள்.
"அதுதான் சொல்றேன், அவன் வந்ததும் நான் என்ன பண்றேன்னு மட்டும் நீங்க ரெண்டு பேரும் பாருங்க. அலர், இனி அவ இந்த வீட்ல இருக்க மாட்டா. அதுக்கு நான் விடவும் மாட்டேன்!" என்றவரின் கண்கள் குரோதத்தில் மின்மினியாய் மின்னின.
அந்த வீட்டில் இருப்பதையெல்லாம் உண்டுவிட்டு, நாள் முழுவதும் ஒரு வேலைக்காரியைப் போலக் கடுமையாக உழைத்தும், அடிமை போல் அவர்களுக்குச் சேவை செய்தும், அவர்கள் மனம் அவளை ஒரு தீராத தொல்லையாகவே கருதியது. தன் மகள்கள் மட்டும் கணவர்களுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று துடிக்கும் அந்தத் தாய்க்கு, தன் மகனும் தன் மனைவியோடு சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற நினைவு துளிகூட இல்லை போல!
"ராம் கிட்ட ஏதாவது காசு இருக்கா? நீ கேட்டியா அம்மா?" என்று மலர் அடுத்துத் தாவினாள்.
"அவன் கிட்ட ஒரு ரூபா கூட கிடையாது. என்கிட்ட எல்லாத்தையும் அக்கவுண்ட்ல அனுப்பிட்டான். அவனே போன் பண்ணிச் சொன்னான், 'என் கையில காசு இல்ல, நான் ஊருக்கு வந்ததும் எனக்கு ஏதாவது காசு கொடு'ன்னு சொல்லி இருக்கான்" என்றார் கலை.
உடனே மலர், "அம்மா! அவனுக்கு நிறைய காசு எதையும் கொடுத்து டப் போற! டெய்லி கை செலவு பண்ண 100 ரூபாய், 200 ரூபாய் குடு, அது மட்டும் போதும். இல்லைன்னா பொண்டாட்டிக்கு ஏதாவது வாங்கி கொடுத்துட்டு அவ கூட கொஞ்சிட்டு இருக்கப் போறான்" என்று எச்சரித்தாள்.
"அதுக்கு நான் விட்ருவேனா? மலர், நான் இருக்கிற வரைக்கும் என் பிள்ளை எனக்குப் பிள்ளையா மட்டும் தான் இருப்பான்" என்று கலை உறுதிபடக் கூறினார்.
அலர், மலர் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர். பாவம் ராதை! அவள் சிரித்தாலே அவர்களுக்குப் பிடிக்காது; இதில் புருஷனுடன் அவள் சந்தோஷமாக இருந்துவிட்டால் அவர்களுக்குப் பொறுக்குமா என்ன? உலகத்தில் என்ன விதியின் பயனாக இப்படிப் பெண்களின் வாழ்க்கை எழுதப்பட்டிருக்கிறதோ!
கணவன் வருகையை எதிர்பார்த்து ராதையும் ஆவலுடன் காத்திருந்தாள். ஆனால் அவள் உள் மனமோ இனம் புரியாத அச்சத்தில் எதையோ கூறிக்கொண்டே இருந்தது. ஏதோ ஒன்று நடக்கப் போகிறது; அது நல்லதா கெட்டதா என்று அவளால் முழுதாக உணர முடியவில்லை.
இரவு 12 மணி வரை அவள் ஓய்வின்றி வேலை செய்து கொண்டிருந்தாள். அனைவரும் உறங்கிய பிறகு இவள் மெதுவாகச் சென்று கட்டிலில் படுத்தாள். ஆனால் அவளுக்கு உறக்கம் வரவில்லை. அந்தக் கட்டில் அவளுக்கு எந்த இன்பத்தையும் தரவில்லை. திருமணம் முடிந்து வெறும் இரண்டு இரவுகள் மட்டுமே மனைவியுடன் இருந்தான் ராம். அதன் பிறகு 'அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை' என்று கூறி, அம்மாவைப் பார்த்துவிட்டு துபாய் கிளம்பியவன் தான். அதன் பிறகு இருவரும் ஒன்றாக இருந்ததே இல்லை. ஏன், இத்தனை வருடங்களில் 'உனக்கு என்ன தேவை? நீ சாப்பிட்டியா? எப்படி இருக்க?' என்று கூட அவன் கேட்டது கிடையாது. தன் தாயிடமே தன்னைப்பற்றி நலம் விசாரித்துக் கொள்ளும் கணவனை நினைத்து அவள் இன்னமும் ஏங்கிக் கொண்டிருக்கிறாள்.
அவள் அம்மா அடிக்கடி ஒன்றைச் கூறுவார்: "உன் வாழ்க்கை இப்படியே போயிடாது ராதை, கண்டிப்பா மாறும். நீ சந்தோஷமா இருப்ப, அதை உன் அம்மா நான் என் கண்ணால பார்த்துட்டுதான் சாவேன். அதுவரைக்கும் உனக்கு நான் துணையாக இருப்பேன். உன் வாழ்க்கையை நானே நாசம் பண்ணிட்டேன். என்னால முடிஞ்ச வரைக்கும் உனக்குத் தேவையான உதவியை நான் செய்வேன். என் உயிர் இருக்கிற வரைக்கும் நீ எதை நினைச்சும் பயப்படாத. எப்படியாவது உன் வாழ்க்கையைச் சரி பண்ணப் பாரு, மத்ததெல்லாம் நான் பார்த்துக்கிறேன்." என்ற தாயின் அழுகுரல் தான் ராதையை இன்றும் அந்தக் குடும்பத்தோடு கட்டிப்போட்டு இருக்கிறது. இல்லையென்றால், என்றோ இந்த வீடும் இந்த உறவும் வேண்டாம் என்று அவள் கிளம்பி இருப்பாள்.
இதைவிட அவளுடைய அண்ணனின் வார்த்தைகள் கொடியவை: "வாழாவெட்டியா இந்த வீட்டுக்கு வந்துரலாம்னு நினைக்காதே! ஏற்கனவே ரெண்டு பேருக்குத் தண்டமா சோறு போட்டுட்டு இருக்கேன், உனக்கும் சேர்த்துச் சோறு போட முடியாது. மீறி வந்தா காலை ஒடைச்சு விடுவேன், திரும்பத் தூக்கிட்டுப் போய் அதே வீட்டுல போட்டு வந்துருவேன்!" என்று கேட்கும் அவன் குரலும் அவளை இதே வீட்டில் சிறை வைத்தது. தன் கணவன் மற்றும் தன் அண்ணன் ஆகிய இருவருக்கும் இடையிலான வித்தியாசத்தை நினைத்து நினைத்து அவள் தினமும் குமுறுவதுண்டு.
தன் கணவன் தன் தங்கை குடும்பத்தையே தலையில் தூக்கி வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறான்; ஆனால் என் அண்ணனோ எனக்குச் சோறு போட அழுது வழிகிறான்.
என் அண்ணனின் மனைவி என் அண்ணனைத் தன் முந்தானையில் முடிந்து தன் கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டிப் படைக்கிறாள். இங்கு என் கணவனின் தங்கைகள் கூடத் தங்கள் கணவர்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். ஆனால் நான் என் கணவனை என் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று ஒருபோதும் ஆசைப்படவில்லை; ஒரு சாதாரண அடிப்படை வாழ்க்கையை அவரோடு வாழ வேண்டும் என்று மட்டுமே ஆசைப்படுகிறேன். அதுவும் எனக்காக அல்ல, இரு ஜீவன்களுக்காக! என் ஆசை நிறைவேறுமா என்ற அந்தப் பாதி இரவு மனப் போராட்டத்தில் விவாதத்திலும் அவளுக்கு விடிந்தே போனது.
விடிந்த பிறகு எப்போது தான் அறியாமல் கண் அயர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. திடீரென தண்ணீர் அவள் மேல் கொட்டவும், பதறியடித்து வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து அமர்ந்தாள். கலை உக்கிரமான முகத்துடன், கையில் ஒரு பக்கெட்டுடன் ராதை முன்பு நின்றிருந்தார்.
"என்ன தூக்கம்? வீட்ல இருக்கிற வேலையெல்லாம் யார் செய்யறது? தண்டமா தின்னுட்டுத் தூங்குறதுக்கா இந்த வீட்டுக்கு வந்துருக்க? மாப்பிள்ளை இப்போ வேலைக்கு போகணும், பேரப்பிள்ளைகள் ஸ்கூல் போகணும்... எவ்வளவு சொகுசா தூங்குற நீ?" என்று அவர் கேட்ட வார்த்தைகளை விட, தன் மீது கொட்டியிருந்த அந்தத் தண்ணீர் அவளைச் சில்லிட வைத்தது.
ராதை எதற்கும் பதில் பேசவில்லை. பொறுமையை இழந்தவள், அப்பொழுதுதான் கடிகாரத்தைக் கவனித்தாள் மணி ஐந்தாகி விட்டது என்பதை உணர்ந்தாள்.
"சாரி அத்தை, ஒரு பத்து நிமிஷத்துல நான் கிளம்பி வந்து எல்லாமே செஞ்சிடுவேன்," என்று தணிந்த குரலில் கூறியவளுக்கு மிகவும் கூச்சமாக இருந்தது. ஏனெனில், அசோகன் வெளியே நின்று அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வை எப்பொழுதுமே அவளுக்கு ஓர் அருவருப்பையே கொடுக்கும்.
அதை கவனித்த பிரபாகரன், "வாங்க அசோகன், இங்கே நின்னு என்னத்தைப் பார்த்துட்டு இருக்கீங்க? பொம்பளைங்க சண்டையை நீங்க எதுக்கு வேடிக்கை பார்க்கிறீங்க? நம்ம ரெண்டு பேரும் வாக்கிங் போகலாம்," என அவன் தோள் மீது கை போட்டு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றான்.
"சாரி கேட்டா எல்லாமே சரியாப் போயிடுமா? நீ எப்ப எழுந்து, எப்ப சமைச்சு, எப்ப வீட்டு வேலை செய்யறது? அறிவு இருக்காடி உனக்கு? உன்னையெல்லாம் இந்த வீட்ல தண்டமா வச்சு சோறு போடணும்னு என் தலையெழுத்து!" என்று கலை இரைந்தார்.
"இல்லை அத்தை, நான் முழிச்சுட்டு தான் இருந்தேன்..." என்று அவள் ஏதோ பேச வர, 'பளார்' என்று அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் கலை.
அவள் கன்னத்தில் அவரது ஐவிரல்களும் தடம் பதிந்து வீங்கிப் போனது. கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றாலும், அதைத் துடைத்துக் கொண்டு அவசரமாக குளியலறை நோக்கி நடந்தாள் ராதை.
அவள் பெண்களின் கணவர்கள் வேலைக்கு செல்வதற்கு இந்த ராட்சசி ராதையை எழுப்புகிறாள். பொண்ணுங்க நிம்மதியா தூங்குறாங்க.
தொடரும்.....
இரண்டு பெண்களுக்கும் செல்போனில் வீடியோக்களைப் பார்த்து பார்த்து சலித்துப் போய்விட்டது போலத் தெரிந்தது. சலிப்புத் தாளாமல் இருவரும் வேகமாகச் சென்று, அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த தாயை உலுக்கி எழுப்பினார்கள். "அம்மா எழுந்துரு... எம்மா நேரம் தூங்குவ?" என்று அதட்டலாக கேட்டனர்.