உனதன்பில் சரணாகிறேன் 15

Advertisement

கண்கள் நான்கும் சந்திக்க
காதல் இதயம் இரண்டும் பதைக்க
கலங்கிய கண்களுடன்
காட்சிப் பிழையா
காணாமல் போகுமா பிம்பம் என்ற
குழப்பத்துடன் தவிக்க....

காலம் சதி செய்து
காதலர்களை பிரித்து
கண்ணீரில் கரைத்து
காதலுடன் காத்திருந்து
கானல் நீராக நினைத்து
கலைந்து விடாது
காதல் நிலைக்ககொள்ள....


காலத்தை கடந்தும்
காத்திருக்க
காயங்கள்
கண்களுக்குள் கரைய
கனவுகளை மட்டும்
கைவிடவில்லை....

காத்திருப்பின்
காலடிச்சுவட்டில்
கண்ணீரால்
எழுதப்பட்ட
காதல் கதை.....
 
குழந்தைகளின் பெயரில்
காதலை சொல்லாமல்
கடத்தி விட்டாள்
கை சேரா காதலை
குழந்தைகளை பிடித்து......
சிவனேஷ்
சிவன்யா.....
சித்தம் சிவ மயம்
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top