Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண் விழித்தேன் உன் நினைவில் ep 22

Advertisement

Sesily Viyagappan

Well-known member
Member
கண் விழித்தேன் உன் நினைவில்
--செசிலி வியாகப்பன்

அத்தியாயம் 22

காலையில் கண்விழித்த விஸ்வாவிற்கு தான் இரவில் பால்கனியில் வந்து அமர்ந்த வண்ணம் உறங்கி இருப்பது புரிந்தது.

இரவில் நடந்த எதிர்பாராத குழப்பத்தால் எங்கே கனலிக்கும் பிள்ளைகளுக்கும் இடையே சரியான புரிதல் இல்லாமல் சென்று விடுமோ என்ற சிறு பயம் மனதில் எழுந்தாலும், அடுத்த நிமிடம் கனலி இந்த பிரச்சனையை பெரிதாக்க மாட்டாள் என்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டான்.

பிள்ளைகள் இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க கடிகாரத்தில் மணி ஐந்தரை என்று காட்டியது. இன்னும் இருவரும் எழுவதற்கு நேரம் இருக்கின்றது என்று கனலி இருக்கும் அறையை எட்டி பார்க்க அங்கும் பிள்ளைகள் மூவர் மட்டுமே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.

'எங்கு போயிருப்பா..!' என்று நினைத்துக்காெண்டு திரும்ப இடுப்பில் கை வைத்துக்கொண்டு புன்னகையுடன் நின்ற கனலி பார்த்ததும் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத வண்ணமயமான காலை பொழுது இதுவாகத்தான் இருக்கும் என்று நினைவு தோன்றி மறைந்தது.

நாவல் பழ நிறத்தில் மெல்லிய தங்க ஜரிகை வேலைப்பாடுகள் அமைந்த காட்டன் புடவையில் நின்றவளின் அழகு மனதில் சந்தோஷம் பூமழை பொழிய விசில் சத்தத்துடன் அவளை ஒருமுறை சுற்றிவர, அவன் செய்கையில் மனதுக்குள் சிரித்துக் கொண்ட கனலி

"சார் பல்லு விலக்கிட்டு வந்தால் ஒரு கப் காப்பி கிடைக்கும். எப்படி சாருக்கு வேணுமா? வேண்டாமா?''

பின்னிருந்து கனலி கழுத்தில் தன் முகத்தை புதைத்து அவள் கூந்தலின் வாசம் பிடித்த விஸ்வா கிறக்கத்துடன்

"நான் என்னைக்கும் நீ எது காெ டுத்தாலும் வேண்டான்னு சொல்லவே மாட்டேன்." என்று கூற அவனிடமிருந்து விலகி நின்ற கனலி

"அழுக்கா இருக்குற புருஷன் எனக்கு வேண்டாம்."

"இரு பேபி வந்து உன்னை வச்சிக்கிறேன்." என கூறி நகராமல்

"தாலி கட்டுன பொண்டாட்டிய வச்சிக்கிறேன்னு சொல்றியே உனக்கு வெக்கமா இல்ல."

"இல்ல." என்று அசால்டாக கூற கனலி சிரிப்புடன்

"வச்சிக்கிற லட்சம் தான் நல்லா தெரியுதே."

"பேசு பேசு உன்னால எவ்வளவு பேச முடியுமோ பேசு. பேசுற அந்த வாய்க்கு சரியான பனிஷ்மென்ட் கொடுத்தா எல்லாம் சரியாயிடும்."

தன் அறையில் தயாராகி வெளியே வந்த விஸ்வா தோட்டத்தில் இருந்த கனலி அருகில் சென்று அமர்ந்து தனக்கான காபியை எடுத்து கொண்டு அமைதியாக அமர்ந்து விட, அவன் அமைதியே ஏதோ தீவிர சிந்தனையில் இருப்பதை கனலிக்கு உணர்த்தியது.

"விஜி எனி ப்ராப்ளம்..."

இனி என்ன வரப்போகிறதோ என்ற தயக்கத்தோடு கேட்க,

நைட் நடந்த சம்பவத்தில் உனக்கு வருத்தம் எதுவும் இல்லையே..." ஒரு நிமிடம் விஷ்வா முகத்தை பார்த்த கனலி

"விஜி தே ஆர் கிட்ஸ், அவங்க அப்படித்தான் பிஹேவ் பண்ணுவாங்க. அதற்காக வருத்தப்பட முடியாது, அவங்களுக்கு கொஞ்ச நாள் போனால் எல்லாமே சரியாயிடும். எனக்கு அஞ்சு பேரும் ஒன்னு தான்."

விஸ்வாவிற்கு சமாதனம் கூறும்பாேதே தனக்கும் கூறிக்காெண்டாள். நிம்மதி மூச்சு ஒன்றே வெளியேற்றிய விஷ்வா

"தேங்க்யூ சோ மச் கனல்...
சரி அப்புறம் நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.."

"சொல்லு விஜி.."

"இந்திரா தீபா ரூபா மூன்று பேரையும் ஸ்கூல் மாத்துறது பற்றித்தான்."

"இல்ல விஜி இப்போதைக்கு மாற்ற வேண்டாம்." என்று அவள் கூறி முடிப்பதற்கு முன்பு கோபத்தோடு முறைத்துப் பார்த்த விஷ்வா

"இப்ப அவங்க என்னோட பசங்க, என்னோட பசங்க எந்த ஸ்கூல்ல படிக்கணும்னு முடிவு பண்ண உரிமை எனக்கு இல்லையா.."

ஏனோ அந்த உரிமையான கோபத்தில் மனதில் எல்லையற்ற நிம்மதியை உணர்ந்த கனலி

"ஏய் லூசு விஜி நான் ஒன்னும் உனக்கு உரிமை இல்லை என்று சொல்ல வரல.
இன்னும் அவங்களுக்கு ஸ்கூல் ஹாலிடே வர்றதுக்கு ரெண்டு மாசம் தான் இருக்கு. இந்த டைம்ல ஸ்கூல் மாற்ற வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.

அதுமட்டுமில்லாமல் கிருபா படிக்கிற ஸ்கூல்ல இப்படி உடனே அட்மிசன் கிடைக்காது. அவங்க பிரின்சிபால் கிட்ட சொல்லி வைய் நெக்ஸ்ட் அகடமிக் இயர்ல எல்லாரும் ஒரே ஸ்கூல்ல படிக்கட்டும்."

அதன் பின் இருவருக்கும் தங்களுக்கிடையே பேசிக் கொள்ள எவ்வளவோ இருந்தது.

"ஐயோ விஜி.... பிள்ளைகள் நேரம் இந்நேரம் முழிச்சிருப்பாங்க." என்று கனலி ஓட, சிரிப்புடன் விஸ்வா அவளை தொடர்ந்தான்.

இருவரின் நேரத்தையும் பிள்ளைகள் எடுத்துக்கொள்ள மீண்டும் காலை உணவின் போது இருவரும் சந்தித்தனர்.

பெரியவர்கள் அனைவரும் முதலிலேயே உணவு அருந்திவிட்டு தங்களுக்குள் பேசிக்கொண்டு இருக்க, இப்பொழுது டைனிங் டேபிளில் விஷ்வா கனலி ஐந்து பிள்ளைகள் மட்டுமே உணவருந்திக் கொண்டு இருந்தனர்.

தட்டில் வைக்கப்பட்டிருந்த பொங்கலில் இருந்த மிளகை தனியாக எடுத்து வைத்துவிட்டு இந்திரா சாப்பிட்டுக்கொண்டு இருக்க அதை கவனித்த விஷ்வா

"இந்திரா மிளகு உடம்புக்கு ரொம்ப நல்லது இப்படி தனியா எடுத்து வச்சுட்டு சாப்பிடாத." என்று கனிவுடன் கூற,

தன் தாயின் முகத்தை பார்க்க இந்திரஜித் அடுத்த நொடி தன் தட்டை பார்த்து குனிந்து பொங்கலை தன்கையால் கிளர ஆரம்பித்தானே தவிர ஒரு வாய் கூட உண்ணவில்லை.

மூன்று வயதில் இருந்தே இந்திரஜித்திற்கு தன் உணவு விஷயத்தில் யாரும் கருத்து கூறுவது பிடிக்காது.

பசிக்கும் பொழுது அவனாகவே கேட்டு வாங்கி உண்பான். பசிக்கவில்லை என்றால் ஒரு வாய் உணவு கூட அவன் தொண்டையில் இறங்காது.

அப்படியே அவன் உணவு உண்ணும் பொழுதும் தனக்குத் தேவையானவற்றை மட்டுமே உண்பான். இடையில் வேறு எவராவது கருத்து கூறினால் அதன்பிறகு உணவை உண்ண மாட்டான்.

அழுது ஆர்ப்பாட்டம் செய்யாமல் மௌனமாகவே இருந்து மற்றவர் தனக்கு எதிராகக் கூறும் கருத்தில் விருப்பமில்லை என்பதை காட்டி விடுவான். எனவே கடலி உணவு விஷயத்தில் எப்பொழுதும் இந்திரஜித்தை கட்டாயப்படுத்துவது இல்லை.

அவனுக்கு மிளகு பிடிக்காது என்பதால் கனலி எப்பொழுதும் பொங்கல் செய்யும் பொழுது மிளகை மிக்ஸியில் லேசாக பொடித்து சேர்த்து விடுவாள்.

உணவு உண்ணாமல் இந்திரஜித் அமைதியாக அமர்ந்து இருக்க விஷ்வா

"இந்திரா சாப்பிடு....
எதுக்காக அமைதியா இருக்க." இந்திராவின் மௌனத்தின் காரணத்தை உணர்ந்த கனலி

"விஜி அவனுக்கு சாப்பிடும்பொழுது யாராவது கமெண்ட் பண்ண பிடிக்காது. விடு அவனே காெ ஞ்ச நேரத்தில் சாப்பிடுவான்."

இதுபோன்ற சம்பவம் வீட்டில் எப்பொழுதாவது நடக்கும் என்பதால் கனலி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் தன்னால் இந்திரஜித் சாப்பிடாமல் இருப்பதை கவனித்த விஸ்வாவிற்கு அதன்பின்பு சாப்பிட முடியவில்லை. விஸ்வா சாப்பிடாமல் இருக்க அதை கவனித்த அபராஜித்

"அப்பா அந்த அண்ணா சாப்பிடாம இருக்கிறதுக்கு நீங்கள் ஏன் சாப்பிடாம இருக்கீங்க." தம்பியின் குரலில் விஸ்வா தட்டை பார்த்த கிருபா இந்திராவிடம்

"நீ ஒழுங்கா சாப்பிட மாட்ட, உன்னால பாரு விஷ்வா சாப்பிடாம இருக்கான்." என்ற வார்த்தைகளில் உஷ்ணம் தெறிக்க பேச, இந்திரஜித் லேசான குரலில்

"நான் யாரையும் சாப்பிட வேண்டாம்னு சொல்லல." என்று பதில் கூற, அருகிலிருந்த ரூபா

"உன்னோட அப்பா சாப்பிடலைன்னா அதுக்கு எங்க அண்ணனை திட்டாத."

கொஞ்சம் விட்டால் உணவு அருந்தும் இடம் போர்க்களமாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை உணர்ந்து இருவரும் பிள்ளைகளை சமாதானப்படுத்தி உணவருந்த வைத்தனர்.

பெரியவர்கள் அனைவரும் பேசிக்கொண்டு இருந்தாலும் அங்கு நடப்பதை கவனிக்காமல் இல்லை.


இந்திரா தீபா ரூபா மூவரும் தோட்டத்தில் ஒருபுறம் விளையாடிக்கொண்டிருக்க, கிருபா அபி இருவரும் இன்னொருபுறம் விளையாடிக்கொண்டிருந்தனர்.

குழந்தைகள் அனைவரும் ஒன்றாக விளையாடாமல் தனித்தனியே விளையாடுவதை வருத்தத்துடன் கவனித்த விஸ்வா கனலி இருவருக்கும் எப்படி இவர்கள் அனைவரையும் ஐவரையும் ஒன்று சேர்ப்பது என்கின்ற எண்ணம் மட்டுமே இருந்தது.

நாளை மறுவீடு செல்வது, அதன்பிறகு வீரபாண்டி சென்று உறவினர்களுக்கு விருந்து வைத்தது வைப்பது என்பன பற்றி பேச்சுக்கள் நடக்க கனலி விஷ்வா இருவரும் பெரியவர்களுடன் சென்று அவர்களுடைய உரையாடலில் கலந்து கொண்டனர்.

சற்று நேரத்தில் தோட்டக்காரன் அழைக்கும் குரலில் அனைவரும் வெளியே வந்து பார்க்க அங்கு கண்ட காட்சியில் அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.

பிள்ளைகள் அனைவரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டும், திட்டிக் கொண்டும் இருக்க விஷ்வா கனலி இருவரும் சென்று ஐவரையும் கிழித்து பிரித்து தனியே நிறுத்தினர்.

அதுவரை சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்கள் தங்களுக்கு ஆதரவுக்கு என துணை வந்துவிட்ட தைரியத்தில் ஒருவர் மாற்றி ஒருவர் மற்றவரைப் பற்றி புகார் செய்ய ஆரம்பிக்க அவர்களை சமாளிப்பதற்குள் வீட்டு பெரியவர்களுக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது.

மாலை மறுவீடு கிளம்பும் நேரத்தில் விஷ்வா தாயார் பூரணி திலகவதியிடம்

"சம்பந்தி சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க கொஞ்ச நாளைக்கு உங்க பேர பிள்ளைகள் இங்கே வராமல் இருக்கிறதுதான் நல்லது." என்று பட்டென்று பேசிவிட அடுத்து என்ன கூறுவது என்று தெரியாமல் கடலில் வீட்டார் மௌனம் காத்தனர். அதை உடைத்து எறிந்த விஷ்வா

"அம்மா அவங்க மூணு பேரும் இனி இந்த வீட்டில் தான் இருப்பாங்க, அதுல உங்களுக்கு என்ன கஷ்டம் வந்துச்சு."

"விஷ்வா நான் எது சொன்னாலும் அதை மறுத்துப் பேசணும்னு முடிவோட இருக்காதே, நீயே பார்த்துக்கொண்டுதான் இருக்கிற இன்னைக்கும் அந்தப் பசங்களா வீட்டில் எவ்வளவு பிரச்சனை நடக்குதுன்னு."

"பிரச்சினை பண்ற எல்லாரையும் வீட்டைவிட்டு அனுப்பனும் என்று முடிவு பண்ணினான் யாருமே இங்கே இருக்க முடியாது. பிள்ளைகள் எல்லாரும் இப்போ என்னுடைய பொறுப்பு அவர்களை எப்படிப் பார்த்துக்கணும் என்று எனக்கும் கனலிக்கும் தெரியும் அத நாங்க பாத்துக்குறோம்."

"விஷ்வா நீ அவங்கள பார்க்க வேண்டாம்ன்னு நான் சொல்லல....
அவங்க மூணு பேரையும் நல்ல ரிச் அண்ட் ராயல் ஸ்கூல்ல செத்துவிடு. எல்லா செலவையும் நாம பாத்துக்கலாம்.

அவங்க மூணு பேரும் இங்க இருந்தா கனலி கவனம் அவங்ககிட்ட இருக்குமே தவிர கிருபா அபி மேல இருக்காது."

அதன்பிறகு பேச்சு வளர்ந்து கொண்டே செல்ல இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கனலில் மனதுக்குள் மிகவும் நொறுங்கி போனால் என்பதே உண்மை.

சிறு பிள்ளைகளுக்கும் சண்டை நடப்பது என்பது மிகவும் சாதாரண விஷயம்.

அதை பக்குவமாக கையாண்டால் அதன் பிறகு அவர்களை அனைத்தையும் மறந்து ஒற்றுமை ஆகிவிடுவார்கள் என்று நினைத்துக் கொண்டு இருந்தாள்.

ஆனால் இப்பொழுது விஷ்வா அம்மா பேசுவது மொத்தமாக பணத்தைக் கொடுத்து மூவரின் உறவை முறித்துக் கொள்ள சொல்வது போல இருந்தது.

இவர்களின் வாக்குவாதம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க கனலி கண்களால் அறையின் வாசலில் நின்று கொண்டு தாயின் முகத்தை பார்த்துக் கொண்டு நிற்கும் பிள்ளைகள் மூவரின் முகத்தை பார்வையால் வருடியவள் மனதில் எண்ணிலடங்கா கவலைக் கோடுகள்.

தன் மாமியார் அபி கிருபா இருவரையும் முதன்மைப்படுத்தி பேச அதில் தான் கொடுமைக்கார சித்தி போன்று உருவகப்படுத்த படுவதை நினைக்க வாழ்க்கையே இந்த நொடி கசந்து போனது போன்று உணர்ந்தாள்.

கனலி எந்தநேரத்திலும் ஐவருக்கும் இடையில் எந்த பாகுபாடும் பார்க்கவில்லை. அப்படி இருக்க இரு பிள்ளை மன நிம்மதிக்காக மூவரை விட்டுவிட அவளால் எப்படி முடியும்.


கண் முன்னே நிற்கும் பிள்ளைகளையும், அவர்களுக்கு தாயாக மாற நினைத்த பொழுது ஏற்றுக்கொண்ட பொறுப்புகளையும் கடமைகளையும் எச்சூழ்நிலையிலும் விட முடியாது.

இதனால் மட்டுமே மீண்டும் விஷ்வா தன் வாழ்வில் வருவதற்கான சூழ்நிலை இருந்தபொழுதும் தயங்கி நின்றாள்.

எப்படி தன்னால் இவர்களை விட்டு பிரிந்து வாழ்க்கை ஓட்டத்தில் இந்த வீட்டோடு தன்னைப் இணைத்துக்கொள்ள முடியும் என்ற எண்ணமே அவளை கொல்லாமல் கொன்றது.

'ம்மா.' என்று பட்டாம்பூச்சியாய் அழைக்கும் தீபா ரூபா அழைக்கும் பொழுது அப்படியே அள்ளி அணைத்து முத்தம் கொடுக்க வேண்டும் போல இருக்கும்.

தன் சிறு முகத்திற்கு மாற்றத்தையும் கவனித்து அதற்கு ஏற்ப நடக்கும் மகனை பார்க்கும் பொழுது எல்லாம் மனதுக்குள் ஊற்றெடுக்கும் தாய்மை உணர்வை எவ்வாறு அவளால் தள்ளி வைக்க முடியும் என்று தங்களுக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டு இருக்க, அவளது சிந்தனையை விஷ்வாவின் கணீர் குரல் தடை செய்தது

"அம்மா இனி நீங்க ஒரு வார்த்தை கூட பேச தேவையில்லை, எப்படி மா உங்களால இப்படி பேச முடியுது.

நான் ஏற்றுக்கொண்டது அவங்களுடைய செலவுக்கான பொறுப்பை இல்லை, நான் அவங்க மூணு பேருக்கும் அப்பா...! என்னால நீங்க சொல்ற மாதிரி நடந்துக்க முடியாது."

இனி தன் மகனிடம் பேசினால் எதுவும் நடக்காது என்பதால் பூரணி திலகவதியிடம்

"உங்க பொண்ணோட வாழ்க்கை சந்தோஷமா இருக்கணும்னு நெனச்சா உங்க பேர பிள்ளைகள் இங்க இருந்து கூட்டிட்டு போயிடுங்க.

ஏன்னா இவங்க இங்கே இருந்தா உங்க பொண்ணால மட்டும் இல்ல இங்க இருக்கிற யாராலயும் நிம்மதியா இருக்க முடியாது." என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட அமைதியாக நின்ற திலகவதியிடம் வந்த விஷ்வா

"அத்த நீங்க கவலைப்படாதீங்க...!
நான் அம்மாவ சமாளிச்சுக்கறேன்."

"மாப்பிள்ளை சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க உங்க அம்மா சொல்றதுலயும் கொஞ்சம் நியாயம் இருக்கு. கொஞ்ச நாளைக்கு பிள்ளைங்க என்கூட இருக்கட்டும் நான் பாத்துக்குறேன்."

எங்கே பேரப்பிள்ளைகளால் மகள் வாழ்க்கையில் பிரச்சனை வந்துவிடுமோ என்ற பயத்தில் திலகவதி பேச

"என்னுடைய குழந்தைகளை எப்படி பார்க்கணும்னு எனக்கு தெரியும் நீங்க எதுவும் சொல்ல தேவை இல்லை." என்று கோபமாக கூறிவிட்டு விஷ்வா அங்கிருந்து சென்று விட்டான்.

விஷ்வா பின்னே கிருபா அபி இருவரும் அவன் அறைக்கு வந்து சேர்ந்தனர்.

"அப்பா அவங்க மூணு பேரும் போனா போகட்டும் நீங்க எதுக்காக பாட்டி கிட்ட சண்டை போடுறீங்க." என்று எப்பொழுதும் போல சாமாதானத்தை எண்ணி அபி பேச,

"அபி ஒரு விஷயத்தை நீ நல்லா புரிஞ்சுக்கணும் கனலி தான் இனி உங்க ரெண்டு பேருக்கும் அம்மா,
இந்திரா உங்களுக்கு அண்ணன், அது மாதிரி தீபா ரூபா ரெண்டு பேரும் உங்களுக்கு தங்கச்சி. அதனால அவங்க இங்க தான் இருப்பாங்க." என்று இழுத்து பிடித்த பொறுமையுடன் எடுத்துக்கூற,

எப்பொழுதும் வார்த்தையாடும் கிருபாலி அமைதியாக இருக்க இம்முறை அபராஜித்

"எங்களுக்கு அம்மா அண்ணன் தங்கச்சி எல்லாம் வேண்டாம். அவங்க வந்ததிலிருந்து வீட்டில் யாருமே ஹேப்பியா இல்ல பா. எல்லாரும் ரொம்ப டல்லா இருக்காங்க. எங்க கூட அந்த ரப்பிஷ் டாக்ஸ் சண்டையெல்லாம் போடுறாங்க. அவங்கள இங்க இருந்து போக சொல்லுங்க டாடி." என்று

ஏற்கனவே தாய் பேசியதில் கட்டுக்கடங்காமல் இருந்த விஷ்வாவின் கோபம் அபியின் 'ரப்பிஷ் டாக்ஸ்' வார்த்தைகளில் கரையை கடந்தது.

"அபி திஸ் இஸ் தி லிமிட் இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினாலும் அப்பா உன்ன அடிச்சிடுவேன். தேவையில்லாத வார்த்தையா விடக்கூடாது, சொன்னதை கேட்டு புரிஞ்சு நடந்துக்கணும்."

இதுநாள்வரையில் தங்களிடம் கோபமாக பேசியே இராத தந்தை முதல் முறை கோபமாக பேசியதில் அபியின் உதடு துடிக்க கண்ணீர் எப்பொழுது வரவா என்று காத்துக் கொண்டு இருந்தது. தம்பியை பார்த்த கிருபா

"பாட்டி சொன்ன மாதிரி எங்களை வீட்டைவிட்டு அனுப்பி விடுவியா விஷ்வா." என்று கேட்டு வைக்க அதிர்ந்து பார்த்த விஷ்வாவிடம்

"அந்தக் கனலி வந்தா நீ எங்களை வீட்ட விட்டு அனுப்பிவிடுவீங்கன்னு சொன்னாங்க. அது மாதிரியே நீ இப்போ எங்க கிட்ட கோபப்படுற, சீக்கிரமே எங்களை அனுப்பிவிடுவா தானே." என்று கேட்டுவிட்டு பதிலை எதிர் பார்க்காமல் அங்கிருந்து ஓடி விட அபியும் அழுத வண்ணம் தன் தமக்கையின் பின்னே சென்றான்.

அவர்கள் இருவரும் சென்ற பின்பும் அப்படியே நின்ற விஷ்வா அருகிலிருந்த சோபாவில் பொத்தென்று அமர்ந்தான்.

தான் நினைத்ததை விட இந்த பிரச்சனை பெரிதாக இருப்பதையும் அதை எவ்வாறு கையாள்வது என்பதை நினைத்து அவன் தலை வலிப்பது போல இருந்தது.

கனலி தன்னை விட்டு சென்ற பொழுது கூட தான் இந்த அளவு உடைந்து விடவில்லை என்பது என்பதை அவன் மனது எடுத்துரைக்க, பிள்ளைகளை எவ்வாறு சமாளிப்பது என்ற பிரச்சனை பூதாகரமாக முன் நின்றது.

"அம்மா நீங்களே இப்படி பேசினால் எப்படி மா பிள்ளைங்க இல்லாமல் எப்படிமா இருக்க முடியும்."

அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தை எல்லாம் தாயிடம் கொட்ட திலகவதி தலைக்கு மேலே கையை குவித்து

"அம்மாடி போதும் இதுநாள் வரைக்கும் மத்தவங்க எல்லாருக்காகவும் பார்த்து உன் தலையில் நீயே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டது.

முதல்ல எனக்காக அடுத்து...
இப்போ இந்த பிள்ளைகளுக்காக.... இப்படி ஒவ்வொருத்தர் தேவைக்காக நீ உன்னுடைய சந்தோசத்தை இழந்து நிற்கவேண்டாம்.

நாளைக்கு மாப்பிள்ளையை வரச்சொல்லி அவர் பிள்ளைங்கள அவர்கூட அனுப்பிடுறேன். அவர் பிள்ளைகளை இனி அவர் பாத்துபார்."

"அம்மா இவங்க என்னுடைய பிள்ளைங்க..."

"கனலி......" என்று அதட்டிய திலகவதி

"என்னதான் பாசத்தை காட்டி நீ வளர்த்தாலும் நீ அவர்களுக்கு சித்திதான்.....! என்னைக்கும் அம்மாவா ஆக முடியாது."

ஏற்கனவே கிரிதரன் ஒருமுறை கூறிய அதே வார்த்தைகளை தன் அம்மா மீண்டும் கூற கனலி அதிர்ந்து தாயின் முகத்தை பார்த்தாள்.

"அம்மா நான் அங்களுக்கு சித்தியா....!" என்று கண்களில் கண்ணீர் பெருக பார்த்த கனலி முகம் மனதை அசைத்தாலும் இப்பொழுது தான் மனம் இலகினால் அது தன் மகளின் வாழ்விற்கு நல்லது அல்ல என்பதால் மனதை கல்லாக்கிக் கொண்டு மேலும் பேச, கனலி தன் காதுகளை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

நேற்று இந்நேரம் வரவேற்பில் மகிழ்ந்து இருந்த வீட்டினர் அனைவரும் இப்பொழுது ஒவ்வொரு மூலையில் வருத்தத்துடன் அமர்ந்து இருந்தனர்.

யாருக்கும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலை என்றே கூற வேண்டும்.

பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்டுவது சரியல்ல என்பதை உணர்ந்த விஷ்வா அவர்களின் அறைக்கு சென்று பார்க்க இருவரும் சோர்ந்துபோய் கட்டிலில் சுருண்டு படுத்து இருந்தனர்.

மெதுவாக அவர்கள் அருகில் அமர்ந்து தலையை கோதி விட ஆரம்பித்தான். தலையில் தொட்ட கைகளில் உணர்ந்த வெப்பத்தில் இருவரையும் தொட்டுப் பார்க்க இருவரின் உடல் காய்ச்சலால் நடுங்கிக்கொண்டிருந்தது.

அடுத்த அரை மணி நேரத்தில் டாக்டர் வந்து பிள்ளைகளை பரிசோதித்துவிட்டு மருந்து எழுதிக் கொடுத்துவிட்டு சென்றுவிட பூரணி

"போதுமடா இதற்காகத்தான் நான் சொன்னேன்." என்று பேச ஆரம்பிக்க யாழினி

"அக்கா பிள்ளைங்கள கீழ காணோம் எங்க மேல வந்தாங்களா.." என்று விசாரிக்க அடுத்த நிமிடம் வீடு மீண்டும் பரபரப்பு ஆகியது.


இனி நிஜத்தின் நினைவுடன்......
 
அச்சோ
பைரவியின் அம்மாவின் பேச்சால் கிருபாலி கனலியிடம் ஒட்டவில்லை
இந்திரஜித் மற்றும் குழந்தைகள் விஷ்வாவிடம் ஒட்டவில்லை
ஊருல உலகத்துல இல்லாத சொந்தக்கார பீடைகள் செய்த அழிச்சாட்டியத்தில் கணவன் மனைவி இருவருக்கும் குழந்தைகளிடம் பேச நேரம் கிடைக்கவில்லை
விளைவு கமலியின் குழந்தைகள் மூவரும் எங்கோ போய் விட்டனர்
திலகவதி சுத்த வேஸ்ட்
இவளுக்கு கொஞ்சங்கூட மகளின் குழந்தைகள்ன்னு இல்லை
அம்மாவின் அன்பு வேணும்ன்னு நினைக்கலை
மருமகனிடம் அனுப்புறதிலேயே குறியா இருக்காள்
இந்த செசிலி டியரும் அநியாயம் பண்ணுறாங்க
புதுசா கல்யாணமான ஜோடியை குழந்தைகளை வைச்சு பிரிக்கறாங்க
It is வெரி பேடு வெரி பேடு ஆத்தர் மேடம்
 
Last edited:
ஓஹ்...மை...காட்....இரண்டு பேரும் லூசுங்களா...தன்னோட அண்ணன் பிள்ள அக்கா பிள்ளைகளை வளக்குறாங்க...இரண்டு பேரும் மறுபடியும் ஒன்னா வாழப்போறாங்கனா அந்த குழந்தைகள்ட அதைப் பத்தி பேசி அவங்க மனசை மாத்தனும்...இதுக ஆசைக்கு குழந்தைகளுக்குள்ள ஏற்றத்தாழ்வு வாந்து...ம்ப்ச்.....

சீக்கிரம் அடுத்த எப்பி தாங்க
 
ஓஹ்...மை...காட்....இரண்டு பேரும் லூசுங்களா...தன்னோட அண்ணன் பிள்ள அக்கா பிள்ளைகளை வளக்குறாங்க...இரண்டு பேரும் மறுபடியும் ஒன்னா வாழப்போறாங்கனா அந்த குழந்தைகள்ட அதைப் பத்தி பேசி அவங்க மனசை மாத்தனும்...இதுக ஆசைக்கு குழந்தைகளுக்குள்ள ஏற்றத்தாழ்வு வாந்து...ம்ப்ச்.....

சீக்கிரம் அடுத்த எப்பி தாங்க
Thank you for your comment Viji dr
Next ep evening k va
 
Top