Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 12 2

Advertisement

Admin

Admin
Member
இவரை பார்த்ததும் என்னவோ என்று ராஜராஜன் எழுந்து அமர்ந்தான். அவரின் பின் எல்லோரும் வர, அங்கே எந்த சத்தமும் கேட்கவில்லை கதவை வெளிப்புறம் தாளிட்டு இருந்ததால்.

தில்லை சென்று கதவை திறக்க முனைய அது திறக்கவில்லை. அது வெளிப்புறம் தாளிடப் பட்டு இருக்க, அதனை தில்லை தட்ட, “மா, என்ன பண்ற? குழந்தை எழுந்துக்குவா” என்றான் ராஜராஜன். அதுவரையிலும் அங்கை அழுது கொண்டிருப்பாள் என்று அவன் நினைக்கவேயில்லை.

“ராஜா, அவ அழுதிட்டு இருக்கா?” என்று தில்லை சொல்ல,

“ப்ச்” என்று சலித்தவன், “கதவை தட்டாதீங்க” என்று சொல்லி வேகமாய் வெளியேறினான். அதுவே சொன்னது வெளியில் இருந்து பால்கனிக்கு ஏறப் போகிறான் என்று.

“ராஜா வேண்டாம்டா” என்று தில்லை சொன்னது காற்றோடு தான் கேட்டது.

சென்றவன், அணிந்திருந்த வேஷ்டியை கால்களை சுற்றி ஏறுவதற்கு ஏதுவாக கட்டி, வேகமாய் அங்கேயும் இங்கேயுமாய் காலை வைத்து ஏறினான். அவனுக்கு அழுகை சத்தம் நன்கு கேட்டது.

ஏறி பார்க்க அவள் முகத்தை கால்களில் புதைத்து தேம்பி தேம்பி அழுது கொண்டிருப்பது தெரிந்தது.

அவன் உள்ளே குதித்து சென்று கதவை திறந்து விட, தில்லை வேகமாக வந்து “அங்கை” என, அதன் பிறகு தான் நிமிர்ந்தாள்.

தில்லையை பார்த்ததும் எழுந்து நிற்க, “என்னமா?” என்றார் வாஞ்சையாய்.

பதில் சொல்லவில்லை, சொல்ல வரவில்லை, ஏதோ ஒன்று தொண்டையை அடைத்தது. “ஒன்றுமில்லை” என்பது போல தலையசைத்தவள், தண்ணீர் வேண்டும் என்று சைகை செய்ய, அதுவரை அவளை பார்த்திருந்த ராஜராஜன் வேகமாய் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான்.

அதனை குடித்ததும் சற்று ஆசுவாசமானவள், “ஒன்னுமில்லை” என்று இப்போது வாய் திறந்து சொல்ல..

“என்ன ஆச்சு அத்தை?” என்று விகாஸ் அருகில் வந்தான்.

“நத்திங் விக்கி” என்றவள் அவனை தூக்கி கொள்ள, தன் பிஞ்சு கைகளால் அத்தையின் கண்ணீரை துடைத்தான்.

தில்லை ராஜராஜனை “என்ன செய்து வைத்திருக்கிறாய் நீ?” என்ற பார்வையை பார்க்க, எப்போதும் அம்மாவிடம் ஏதாவது பாவனை காண்பிக்கும் அந்த முகம் எதுவும் காண்பிக்கவில்லை.

“உள்ள வா முதல்ல” என்று சொல்ல, உள்ளே வந்து பார்த்தால் வீடே உள்ளே இருந்தது.

“என்ன ஆச்சும்மா?” என்றார் சுவாமிநாதன்.

“ஒன்னுமில்லை மாமா” என்று மெல்லிய குரலில் சொல்ல,

நாச்சி அவளிடம் “என்னடா கண்ணு ஏன் அழற?” என்றவர், “இவன் எதுவும் திட்டினானா?” என்று ராஜராஜனை காண்பித்து கேட்க வேறு செய்தார்.

யோசிக்கவெல்லாம் இல்லை உடனடியாய் பதில் வந்தது “இல்லை பாட்டி” என்று. அப்போது தான் அனைவரும் சரியாய் மூச்சே விட்டனர். ராஜராஜனால் தான் இந்த அழுகையோ என்று அனைவரும் பயந்து விட்டனர். உண்மையில் அவனால் தான் அழுகை ஆனால் அங்கை காண்பித்து கொள்ளவில்லை.

“ஒன்னுமில்லைன்னா ஏன் அழுதம்மா?” என்று சுவாமிநாதன் அழுத்தமான குரலில் வினவ,

என்ன சொல்வது என்று தெரியாமல் “அம்மா அப்பா ஞாபகம்” என்று முடித்துக் கொண்டாள். அதுவும் கூட தானே! அதன் பின்னே அங்கே பேச்சே இல்லை, அனைவரும் மௌனமாய் சென்று விட.. தில்லை ராஜராஜனை பார்த்த பார்வையில் நீ சரியில்லை என்ற பாவனையை கொடுத்தாரோ.

அங்கேயே இருந்த ராஜராஜனிடம் “நீங்க இங்க தான் தூங்க போறீங்களா?” என்று கேட்டாள்.

“ஏன் நான் வெளில போகணுமா. அதுக்கு தான் இந்த அழுகையா” என்று அவன் பதில் கேள்வி கேட்க,

“இங்க படுக்கறீங்களான்னு கேட்டா, ஆமா இல்லைன்னு ரெண்டு பதில்ல ஏதாவது ஒன்னு தான் சொல்லணும்” என்று அதிகாரமாய் அங்கையின் குரல் ஒலித்தது.

“திமிர்டா இவளுக்கு” என்று தோன்றிய போதும் அதனை மீறி அவள் நின்ற தோரணை, அவள் பேசிய தோரணை, அவளின் அழகு முகம், அவனை ஏதோ செய்ய... அவனுள் உதித்து ஒரே வார்த்தை தான் அப்போது!

அடடா ஜாதிக் குதிரை இது!

“இங்க தான் படுக்க போறேன்”

“இவன் கதை கேட்பான், எனக்கு இப்போ சொல்ல முடியாது, இவனை கூட படுக்க வைச்சு சொல்லிக்கங்க. அவன் கீழ படுக்க மாட்டான், இங்க மேல படுத்து அவனுக்கு சொல்லுங்க, கதவை சாத்திடுங்க” என்று சொல்லி,

ஸ்ருஷ்டியை ஓரமாய் படுக்க போட்டு அவள் படுத்து விட்டவள், “விக்கி, எனக்கு பக்கமா படு, மாமா அந்த உனக்கு அந்த பக்கம் படுப்பாங்க” என்று சொல்ல.. அசந்து நின்று விட்டான், “என்னடா நடக்குது?” என்று.

கூடவே இவளுக்கு ஏதாவது மன வியாதி இருக்குமோ? ஒரு ஒரு நேரம், ஒரு ஒரு மாதிரி நடக்கிறா என்றும் தோன்றியது.

“அச்சோ ராஜா, உன் வாழ்க்கை என்ன ஆகுமோ?” என்று அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டவன், “ஒன்னுமே இல்லாததுக்கு சண்டை, பின்ன என்னையும் பேச வெச்சு, இப்போ எல்லோரும் கேட்கற மாதிரி அழுது, இப்போ ஒன்னுமே இல்லாத மாதிரி இங்க படுக்க சொல்றா?”

“கடவுளே! என்னை காப்பாத்துடா” என்று வேண்டிய போதும், கண்கள் படுத்திருந்த அங்கையை பார்த்து நின்றது. விளையாட்டுத்தனங்களை எல்லாம் கைவிட்டு விகாஸிடம் மீண்டும் மொபைல் கொடுத்தவன், அவனின் காதில் ஹெட் போன் மாட்டிவிட்டு,

அவள் படுத்திருந்த பக்கம் வந்து நின்றவன் “எனக்கு உன்னோட பேசணும்” என்றான்.

கண்களை திறந்தவள் “எனக்கு ரொம்ப டையர்ட்டா இருக்கு” என்றாள்.

“எனக்கு பேசணும்?” என்றான்.

படுத்தபடியே “அப்படியே சொல்லுங்க” என்றாள்.

“இந்த படுக்கையில படுக்க சொல்றது உனக்கு சாதாரண விஷயமா இல்லையான்னு நான் பேச விரும்பலை. ஆனா எனக்கு இது ஒரு வழிப் பாதை புரியுதா?” என்றான்.

அவள் புரியாமல் பார்க்கவும்,

“இதுவரை எப்படியோ? படுக்கையில எல்லாம் ஒன்னா படுத்துட்டு, நீ எப்படியோ போ, நான் எப்படியோ போறேன்னு இருக்க முடியாது. இதுவரையிலும் நம்ம வாழ்க்கை ரிவர்சிபிள் தான். ஆனா இனிமே இர்ரிவர்சிபில், உன்னால பின் வாங்க முடியாது” என்று தீவிரமாய் பேசினான்.

“என்ன இப்போ நான் எப்போ குழந்தை பெத்துக்கலாம்னு உங்க கிட்ட கேட்கணுமா?” என்று அவள் அதையும் விட தீவிரமாய் சொல்ல.

“ஓஹ், அப்படி உன் மேல நான் பாய்ஞ்சிடுவேன்னு நினைச்சு தான் என்னை வீட்டுக்குள்ள கூட விடமா வெளில படுக்க வைச்சியோ” என்றான் பாவனை பிரிக்க முடியாத குரலில்.

வாயடைத்து போனாள்!

“கல்யாணம் பண்றது உண்மையில குழந்தை பெத்துக்க தான். ஆனா குழந்தை பெத்துக்கறது மட்டும் கல்யாணம் கிடையாது” என்று அலட்சியமாய் சொன்னவன்,

“பலமுறை உன் கிட்ட நம்ம வாழ்க்கையை பத்தி பேச முயற்சி பண்ணிட்டேன். நீ பேச இடம் குடுக்கலை. சொல்லப் போனா எனக்கு உன்கிட்ட இப்போ பேசக் கூட விருப்பமில்லை. நான் ஒன்னும் உன்னை தேடி வரலை, நீங்க தான் வந்தீங்க, கல்யாணம் பண்ணுனீங்க, இப்போ இங்க வந்திருக்க”

“ஆனா இனி நீ போக முடியாது, குழந்தை பெத்துக்க போறோமா இல்லையா தெரியாது? ஆனா இனி நம்ம வாழ்க்கை தனித் தனி கிடையாது” என்று சொல்லியவன், விகாஸிற்கு பக்கத்தில் சென்று படுத்துக் கொண்டான்.

விகாஸ் “ஹெர்குலிஸ் கதை” என்று கேட்க, “குடுடா அந்த மொபைல அதை பார்த்து தான் சொல்லணும்” என்று அவனிடம் கதை பேச ஆரம்பித்து விட,

மௌனமாய் அவன் சொன்னதை கிரகிக்க முற்பட்டாள் அங்கையற்கண்ணி.



ஆக்கமும் எழுத்தும்
மல்லிகா மணிவண்ணன்

 
:love: :love: :love:

ராஜராஜா அசத்திட்ட போ...... ஒருவழி பாதையில் திரும்பி வரமுடியாத அளவுக்கு கேட் போட்டாச்சு........
அங்கை யோசிக்க ஆரம்பிச்சுட்டா.......

விகாஸ்க்கு செவிட்டு machine மாட்டிவிட்டு பேசிமுடிச்சுட்ட..... குழந்தைகள் 2 பேர் இருக்கிறது advantage.......
இல்லைனா அடிதடி நடந்திருக்கும் போல......

இப்போ விகாஸ் மாமாக்கும் மாமிக்கும் இடையிலா :p:p:p கரிஷ்மா உன் பையன் சரியில்லை :D:D:D
 
Last edited:
அங்கை என்ன ஜாதி குதிரை... ;) ;)
யார் யார் எங்க எங்க
படுக்கனும்ங்கறதுல அங்கை ரொம்ப தெளிவாக இருக்கா...
ராஜ ராஜன் நீ பேசுனது எல்லாம் சூப்பர்டா... (y)(y)
 
Last edited:
போலீஸ் ஸ்டேஷன்ல அவர் வேற நான் வேற இல்ல னு அங்கை சொன்னது சும்மா..

இப்போ ராஜன் சொன்னானே ..
நம்ம வாழ்க்கை தனித்தனி கிடையாதுன்னு...
அது சத்தியம்..
 
Last edited:
Instructions எல்லாம் பக்காவா வருது....... மற்ற பேச்சு மட்டும் சரியா வரமாட்டேங்குதே......

ஆனா இனி நம்ம வாழ்க்கை தனித்தனி கிடையாது.........

ஹெர்குலஸ் கதை விகாஸுக்கா இல்லை பொண்டாட்டிக்கா???
 
Last edited:
Top