Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 14

Advertisement

பன்னுரது எல்லாம் பன்னிட்டு இப்போ மன்னிப்பு கேட்டா எல்லாம் சரியா போயிடுமா.ஏய் கங்கா சாலினி டிவோஸ் பன்னிட்டு வந்த நேரம் வாழ்க்கைக்கு வழி தேடல.இப்போ தான் வந்து நியாயம் கேக்குரியா? பிரகாஷ் இல்லாட்டி இன்னொருத்தன தேடி போய்ட்டே இருப்பா.பணத்துக்காக தானே அவன் கூட போன.அது கிடச்சுரிச்சு இல்ல.கம்முனு போயிரு.
ஏப்பா பிரகாஷு உனக்கு சாலினியும் பத்தல அலுத்து போச்சு. மறுபடியும் வந்துட்ட சாலா கிட்ட .மறுபடியும் இன்னொரு மாலினி கிட்ட போக மாட்டேனு என்ன நிச்சயம்.because சாலாக்கு இனிமே இளமை திரும்பாது. இன்னும் வயசு தான் ஆகும். நீ எதிர்பார்க்கப்படுகிறது மனைவிகிட்ட கிடைக்காதுபா.ஏமாந்து தான் போவ.எப்பவும் எந்த வயசுலயும் கிடைக்கிற ஒன்னு அன்பு மட்டும்தா.அத நீ சாலாகிட்ட கொடுத்து இருந்தா அல்ல அல்ல கொரயாம அவ்வலோ கொடுத்து இருப்பா உனக்கு. .வட போச்சே.இப்போ என்ன பன்னுரது.ஆர்தரே சேத்து வச்சாலும் நா விட மாட்டேன் பா.
 
பாண்டியம்மாள பொறுத்த வரை எல்லா தப்புக்கும் பொண்ணுங்கள தான் திட்டறாங்க … மருமகன் தப்புக்கு மகள குறை சொல்ற … மகன் விஷயத்துல மருமகள குறை சொல்ற … உன் ரெண்டு மருமகளுக்கும் நீ செய்த துரோகம் உன் மகள்கள் ரெண்டு பேர் வாழ்க்கையும் பதம் பாத்துடுச்சு … உன் மகன் பொண்டாட்டிய அடக்கின மாதிரி உன் புருஷன் இருந்திருக்கனும்

பரகாஷ உன்ன பத்தின உன் மாமியார் கணிப்புல உனக்கு சந்தேகம் வேறயா … நீ தனியா விட்டா இல்ல மனைவீ இருக்கும்போதே அப்படிதான் …

ஷாலினீ இப்ப உனக்கு கலயாணம்ங்கிற கட்டுபாடு எதுக்குமா … ஒருத்தனோட ரெண்டுவருஷம் லிவிங்ல இருந்தா என்ன … உன்ன பத்தி மத்தவங்க தப்பா பேசினா என்ன … அதுக்காக அவனுக்கு மனைவியாகி அவன் குடும்பத்த உன் குடும்பமா நெனச்சு அய்யோ இதெல்லாம் கட்டுபாடு உனக்கு வேணாம் … வேற ப்ரச்சன இல்லாத இளிச்ச வாயன தேடு … பஞ்சாயத்துங்கிற கட்டுபாடெல்லாம் உனக்கு எதுக்கு …
இப்ப கூட சாலாகிட்ட மன்னிப்பு கேக்க தோனல உனக்கு

சாலா இப்ப நீ அவன மன்னிக்கலனா உனக்கு திமிரு … ஆம்பள கும்பிட்டு மன்னிப்பு கேட்டான் பொட்டச்சீ மன்னிச்சா என்ன, மன்னிப்பு கேக்கறவன் பெரீய மனுசன் ஊரே உனக்கெதிரா திரும்பும் … ப்ரகாஷ் நல்லவனாகிடுவான் … உன் மாமனாரே தங்கச்சி பொண்ண கட்டிகுடுக்கலாம் … மன்னிச்சா வாழ்க்கை முழுக்க இவனோட த்ரோகத்த நென்ச்சு புழுங்கனும்

கங்கா சாலா கால்ல விழுந்து விட்டு குடுக்க கேப்பாளோ

கண்டிப்பா சாலா விட்டுகுடுக்காத … இவளுக்கு வாழ்க்கை பிச்ச தராத … இனி ப்ரகாஷ காலமெல்லாம் உன் மன்னிப்புக்கு ஏங்கனும் … இனி முதல்லேர்ந்து உழைக்க ஆரம்பிக்கட்டும் அப்ப தான் எவளோ இழந்துருக்கான்னு புரியும் … அப்ப அன்பா இருந்தவங்களுக்கு உழச்சதுக்கு கணக்கு பாத்ததுக்கி இப்ப அந்த அன்ப திரும்பி பெற உழைக்கட்டும் …
நல்ல முடிவா எடு

அடுத்த பஞ்சாயத்து தேவீ குமரன சித்ரா ரெடியாகுங்க தலைவரே
 
தலைவர் பேச்சு அருமை. கண்ணுல ஒத்திக்கலாம் அவரோட கருத்தை- Author -ரோட எழுத்தை.

ஷாலினி மட்டுமா பேய்ப்பிறவி இல்லை நம்ம சமுதாயத்து பாண்டியம்மாக்களும் பேய்கள் தான்.
தேவி-சித்ராக்கு ஒரு தனி கதை படிக்கலாம் போல இருக்கே. பாண்டியம்மா மாதிரி ஆட்களுக்கு தனக்கு ஒரு நியாயம் அடுத்தவருக்குன்னா ஒரு நியாயம். இப்படி இவங்க செய்யற அநியாயங்கள் எல்லாம் தான் இவங்க ரெண்டு பெண்களோட தலையிலும் இடியா விழுந்துருச்சு.
எனக்கும் உங்க கருத்து தான் சிஸ். நல்லதோ, கெட்டதோ நாம் மனம், வாக்கு, செயலில் என்ன செய்கிறோமோ அதுவே பல மடங்காக திரும்பி வரும். பாண்டிமா பத்மினிக்கு செய்த தவறு, அவரின் மகள்களின் தலையில். ஒரு மகளின் உயிர் போய் மற்றும் இன்னொரு மகளின் சந்தோஷமான குடும்ப வாழ்வை பாதிக்கிறது. குரூரமாக தெரிந்தாலும் உண்மை இது.
 
சாலா பிரகாஷை வேண்டாம் ன்னு சொல்லக்கூடாது. முடிவை பசங்க கையில தரனும் ன்னு சொல்லறீங்களே.அந்த பையன் ஏற்கனவே உண்ணாவிரதம் இருந்து அப்பன் மேல் கேஸ் இல்லாம பண்ணுனவன் தானே.அவன் சரியா சொல்லுவானா சிஸ் தீர்ப்பை.?🤔🤔🤔
பையன் காலேஜ் போயிட்டான்ங்க சிஸ்டர். அப்படினா கொஞ்சம் விவரமாக தான் இருப்பான்.
ஸ்டேஷனில் அவன் அப்பாவ அந்த நிலைமையில் பார்த்து மனசிறங்கிட்டான். இனி பிரகாஷ் சாலா கூட ஒரே வீட்டில் இருந்தாலும் மனைவியும் மகனும் ஒதுக்கித்தான் வைப்பாங்க. அந்த நிலைமையில் அவன நினைத்துப் பார்த்தாலே நிறைவா இருக்கு. சொந்த வீட்டில் துடைப்பக்கட்டைய விட கேவலமா இருக்கனும் அவன். அவன் மக மட்டும் கொஞ்சம் புரிதல் இல்லாம பாசம் காட்டுவா, பிறகு விவரம் புரியும் போது அவளும் காரித்துப்புவா.
 
Top