Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அணலில் துளிர்த்த பூந்தளிரே 10

Advertisement

ரமா

Member
Member
அணலில் துளிர்த்த பூந்தளிரே 10

அன்று அரவிந்தன் பேசி சென்ற பின்பு தான் வஞ்சி செய்த தவறு அவளுக்கு புரிந்தது.. யாரின் மனதையும் புன்படுத்தாமல் இருந்தவளுக்கு அவளறியாமலே தன் கணவனின் மனதை உடைத்திருக்கிறோம் என்பதே பெரும் வேதனையாய் இருந்தது.

அதுவும் இல்லாமல் அடுத்ததாய் அரவிந்தன் கூறிய வார்த்தை தன்னை அவர் நேசித்தாரா..? ஆனால் என்னை பார்க்கும் நேரம் எல்லாம் கோபமாய் தானே முறைப்பார்.. அதுவும் என்னை திட்ட வேற செய்வாரே..? என்ற பெண்ணவளின் எண்ணத்தில் ஆடவன் மழைத்துளியாய் விழுந்தான்.

ஆனாலும் ஆடவனின் கோபத்திற்கு பயந்து எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தாள்.

அன்று அரவிந்தன் சொன்னதை கேட்டதும் பெண்ணவளுக்கு ஆடவனின் நினைவுகள் அதிகமாய் வந்தாலும் சந்தோஷத்தையோ துக்கத்தையோ மறைக்கும் பெண்மை அவனின் நினைவுகளையும் மறைத்துக் கொண்டது.

ஆனால் அவனுக்கு பிடித்தமானது அத்தனையும் பெரியவர்களிடமும் அரவிந்தனிடமும் கேட்டு தெரிந்து கொண்டு அவன் வருகின்ற நாட்களில் அவனுக்கு பிடித்தமானதை சமைத்து வைத்து விட்டு மறைந்து கொள்வாள்.

முடிந்த வரை அவனின் கண்களில் அகப்படாமல் தன்னை மறைத்து கொள்பவளுக்கு அவளை தேடி தவித்த அவனின் விழகளை கண்டதும் தானாகவே தன்னையறியாமல் தரிசனம் தந்துவிடுவாள்.

அவனின் பிறந்த நாளன்று அவன் வீட்டிற்கு கூட வராமல் இருந்தது பெரியவர்களை வருந்த வைக்க அதை கண்டு பொறுக்க முடியாதவள் தன் கைகளால் தானே அவனுக்கு விருப்பமானதையும் தனக்கு விருப்பமானதையும் சேர்த்து சமைத்து எடுத்து கொண்டு அவனை தேடி அலுவலகம் சென்றாள்.

இதை கண்டு பெரியவர்களும் சற்று நிம்மதியாய் இருந்தார்கள் இருவரும் விரைவில் இணைந்து விடுவார்கள் என்று.

ஆனால் அவள் சென்ற நேரமோ இல்லை அவனின் கெட்ட நேரமோ அன்று பார்த்து தன் அலுவலகத்தில் வேலை பார்த்த பெண்ணிடம் ஒரு ஆண் தவறாக நடக்க முயற்சிக்க அதுவும் அவனும் அதே அலுவலகத்தில் வேலை பார்த்தும் இதை செய்ய சிபியால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

தன்னிடம் வேலையுடன் பாதுகாப்பையும் தேடி வந்த பெண்களை அவன் அலுவலகத்தில் வேலை செய்பவனே இப்படி செய்யவும் அதை மன்னிக்க சற்றும் மனமில்லாமல் அவனை அடித்து துவைத்தான் அவனின் உதிரம் இந்த பூமியில் சிந்துமளவிற்கு.

அரவிந்தன் அவனை வந்து தடுத்து நிறுத்த முயன்றும் சிபியின் கோபத்தின் முன்பு அவனாலும் எதுவும் செய்ய முடியாமல் போனது.. அதே நேரம் சரியாக மாந்தளிரும் அலுவலகத்தில் நுழைந்துவிட்டாள்.. அங்கே நடந்ததை கண்டு அதிர்ச்சியில் சிலையாகிவிட்டாள்.

தன் கணவனும் அடிவாங்கியவனும் மட்டும் அவளின் அறிவில் எட்ட சற்று தொலைவில் ஒரு இளம்பெண்ணை சிலர் சமாதானம் செய்து கொண்டிருந்ததை பெண்ணவளின் விழிகள் காணவில்லை.. அதுவே சிபியை அரக்கன் என்ற நினைவில் பதிய வைக்க சரியாக இருந்தது.

ஒரு அளவிற்கு மேல் ஒரு மனிதன் அடிவாங்குவதை தாங்க முடியாமல் அதுவும் உயிர் போகும் நிலையிலும் விட்டு வைக்காமல் அவன் அடித்து கொண்டிருக்க அதை தாளாதவள், "நிறுத்துங்க.. நிறுத்துங்க.." என்று தன் காதை பொத்திக் கொண்டு கத்தினாள்.

அவளின் கதறலில் தன் கோபத்தை மறந்தவன் அடிப்பதை நிறுத்திவிட்டு அவளின் புறம் திரும்பினான்.. அவளை அந்த நேரத்தில் அங்கே எதிர்பார்க்காமல் சிலையாய் நின்று விட்டான்.

அவன் தன்னை கண்டதும் அடிப்பதை நிறுத்தியது சந்தோஷமாய் இருந்தாலும் எப்படி ஒரு மனிதனை இப்படி உதிரம் சிந்த அடிப்பது என்று கோபத்தில் அவன் புறம் திரும்பி,

"நீங்க அரக்கனா என்ன.. ஒரு மனுசன இப்படி போட்டு அடிச்சிட்டு இருக்கீங்க.. மாட்டை அடிக்கற மாறி.. உங்களுக்கெல்லாம் மனிதாபிமானமே இல்லை.. அதுவும் இப்படி ரத்த சிந்தற அளவுக்கா அடிப்பாங்க.. உங்களை யாராவது அடிச்சா உங்களுக்கு எப்படி வலிக்கும்.. அது போல தானே இவருக்கும் வலிக்கும்.. கொஞ்சமும் மனசாட்சியே இல்லையா.. ச்சீய் என்ன மனுஷன் நீங்க.. இன்னைக்கு உங்க பிறந்த நாள்.. தாத்தா பாட்டி கவலையா இருந்தாங்களேன்னு உங்களுக்காக ஆசையா சமைச்சி எடுத்துட்டு வந்தேன்.. ஆனா நீங்க பிறந்த நாளும் அதுவுமா உங்க ரத்தம் படிஞ்ச கையோட இருக்கீங்க..

இனிமே எப்பவும் என் மூஞ்சியில முழிக்காதீங்க.. நான் நினைச்ச மாறி நீங்க அரக்கன் தான்.. அரக்கன் தான்.." என இறுதியாக அவனின் மார்பில் தன் வெண்டை பிஞ்சு விரலால் அடித்து விட்டு சென்று விட்டாள்.

அங்கிருந்த அனைவரும் சிபியை அதிர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்தனர்.. இதுவரை சிபியை பார்த்து குரலுயர்த்தி யாரும் நேரடியாக பேசியது கிடையாது.. ஆனால் இன்று ஒரு சிறு பெண் அவனை தொட்டு அடித்து உரிமையாய் கத்தி விட்டு செல்கிறாள் எல்லோரிடமும் கோப்படுபவனின் முகமோ எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் அவள் பேசிய வார்த்தைகளையும் கொடுத்த சென்ற அடிகளையும் சுகமாய் ஏற்று கொண்டு நின்று விட்டான்.

அதை தடுக்க வந்த அரவிந்தனையும் தன் பார்வையால் தடுத்துவிட்டான்.

அவள் சென்றதும் அனைவரையும் அழுத்தமாய் ஒரு பார்வை பார்க்க அனைவரும் அந்த இடத்திலிருந்து சென்று விட்டனர்.

அனைவரும் சென்றதும் அரவிந்தனை ஒரு பார்வை பார்க்க அவனோ எதுவும் பேசாமல் யாருக்கோ தன் அலைபேசி எடுத்து பேசி விட்டு சென்று விட்டான் அந்த இடத்தை விட்டு.

எல்லோரும் சென்றதை உறுதிப்படுத்திக் கொண்டவன் தன் கரங்களால் தன் மார்பை மெதுவாய் தடவி கொடுத்தான்.

ஏனோ அவனின் உடலில் பெண்ணவளின் வாசம் ஒட்டிக் கொண்டிருப்பது போல் தோன்றியது ஆடவனுக்கு.

அவளின் பூவிரல்களின் மென்மை இன்னமுமாய் பெண்ணவளின் மேல் பித்தம் கொள்ள வைத்தது.

அவள் தன்னை திட்டி அடித்து விட்டு சென்றதை உணரவில்லை ஆடவன்.. அவன் உணர்ந்த விஷயம் என்றால் தன்னை தேடி தனக்காக தன் பிறந்த நாளுக்காக தன்னவள் வந்துள்ளாள் அது மட்டுமே ஆடவனின் மனதில் பதிந்து போனது.

தன்னையும் நினைத்தாளா என்ன இந்த நினைவே இறக்கையில்லாமல் பறப்பது போல் உணர்ந்தான் ஆணவன்.

தன் மார்பை மெதுவாய் வருடியபடியே தன்னறைக்கு சென்று அமர்ந்தான்..

இங்கே அழுது கொண்டே தனது ஓட்டு வீட்டின் படுக்கை அறைக்கு வந்தவள் படுக்கையில் படுத்தபடியே அழுது கொண்டிருந்தாள்.

அவள் அழுது கொண்டே சென்றதை பார்த்த பெரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அரவிந்தன் சொன்னாலும் இந்த பெண்ணும் அவனை சற்று புரிந்து கொள்ள முயற்சிக்கலாமே என்ற எண்ணம் இருந்தது தான்.. ஆனால் அதை அவளிடம் கூறும் தைரியம் இருவருக்குமே இல்லை என்பதே உண்மை.

ஏனோ பெண்ணின் உள்ளம் புரிந்தும் அவளை குறை கூற இருவரும் விரும்பவில்லை.. விதிப்படி என்ன நடக்கிறதோ அதுவே நடக்கட்டும் என்று விட்டு விட்டார்கள்.. அவளாக வரும் வரை அவளை அழைக்க கூடாது என்ற முடிவில் விட்டுவிட்டனர்.

அவளுக்கு துக்கம் அதிகமாகும் சமயங்களில் இப்படித்தான் அந்த ஓட்டு வீட்டில் சென்று தன்னை சிறைப்படுத்திக் கொள்வாள்..

இப்பொழுதும் அப்படித்தான் தன் கணவனின் மேல் உண்டான கோபமும் துக்கமும் வஞ்சியவளுக்கு அதிகமாய் உண்டாக தன்னுடைய அகம் புகுந்து விட்டாள்.

அதற்கு பின்பான நாட்களில் அவள் அவனை பார்க்க விரும்பியதுமில்லை.. அவனை நேருக்கு நேராக பார்க்கவுமில்லை.

தன்னை தானே இன்னமும் சுருக்கி கொண்டு தன் கைச்சிறைக்குள் பூட்டிக் கொண்டாள்.

அதே நேரம் அரவிந்தனும் பெரியவர்களும் பேசி கொண்டிருந்த விஷயங்களில் அவன் அதீதமாக பட்டினி கிடப்பதும் அதிகமாகி விட அதை கேட்டவளுக்கு கண்டு கொள்ளாமல் அப்படியே விட மனமில்லை.. ஆதலால் அரவிந்தனுக்கு கால் செய்து அவனை சாப்பிட வைப்பது அவனின் வேலை என கட்டளை இட்டுவிட்டாள்.. அதே போல் சிபி மறந்தாலும் அவனுக்கு நினைவு படுத்த வேண்டிய வேலை அரவிந்தனுடையது தான்.

ஆனால் அவள் அறியாதது அவள் கூறிய அனைத்து கட்டைகளையும் கேட்டது என்னவோ அவளவன் தான்.

அவள் தன் மேல் வைத்த பாசம் அவள் அறியவில்லை.. பயம் என்ற முகமூடி அணிந்து கொண்டு தன்னை பார்க்கிறாள் என்றும் புரிந்தது.

அதை கண்ட அரவிந்தனுக்கு பயம் கொண்டு முழித்தான்.. சிபிக்கு ஒரு பைலை காட்டி விளக்கம் பெற்றுக் கொண்டிருக்கும் போது தான் மாந்தளிர் கால் செய்தாள்... தங்கச்சி மா என்று வந்ததும் அரவிந்தனையும் அலைபேசியையும் பார்த்தவன் அதை ஆன் செய்து ஸ்பீக்கரில் போட்டு அரவிந்தனை பேசுமாறு கண் ஜாடை காட்டினான்.

அவனும் வேறு வழியில்லாத நிலையில் அப்படியே பேச தன்னவள் பேசிய வார்த்தையில் உடல் உள்ளம் பூரித்தாலும் தன்னை இன்னமும் புரிந்து கொள்ளவில்லையே என்ற கோபமும் எழுந்தது.

அதற்கு பின்பான காலங்களில் இன்னுமும் ஒட்டுக்குள் சுருங்கும் நத்தையாய் தன்னை சுருக்கி கொண்டு வெளியே வராமலும் அவனையும் பார்க்க விடாமலும் செய்ய ஆடவனின் கோபம் எல்லை கடக்க அதை அவளிடமும் காட்ட முடியாமல் எல்லோரையும் விட்டு சுத்தமாய் ஒதுங்கி போனான்.

இதோ நீண்ட நாட்கள் கழித்து இப்பொழுது தான் வந்திருக்கிறான்.. வர்த்தனும் தாட்சாயனியும் சிபியிடம் பேசி அவளை அழைத்து செல்ல கூற அவனோ அவள் விருப்பமில்லாமல் தன்னால் அழைத்து செல்ல முடியாது என்று கூறிவிட்டான்.

பழைய நினைவிலிருந்து மீண்டு வந்தவள் சமைத்து முடித்து விட்டு தன் ஓட்டு வீட்டு அறைக்கு சென்று அடைத்துக் கொள்ள நினைக்க பெரியவர்கள் இருவரும் அவள் முன்னே வந்து நின்றார்கள்.

"தாத்தா பாட்டி.." என்று யோசனையாய் அவர்களை பார்த்தாள்.

" உள்ளே வரலாமா மாதும்மா.." என்றார் வர்த்தன்.

" என்ன தாத்தா கேள்வி இது.. உள்ளே வாங்க.." என்றபடி வழிவிட்டு நின்றாள்.

இருவரும் உள்ளே வந்து அங்கிருந்த படுக்கையில் அமர்ந்தார்கள்.. அவர்கள் அமர்ந்ததும் இவளும் அவர்களுடன் அமர்ந்து தாட்சாயனியின் மடியில் படுத்துக் கொண்டாள் உரிமையாக.

அவளுக்கு தெரியும் தன் கணவனை பற்றி தான் பேச வந்துள்ளார்கள் என.. ஆனாலும் அவர்களிடம் எப்படி இதை பற்றி பேசுவது என்றும் புரியவில்லை.. அதுமட்டுமில்லாமல் அவர்கள் ஒன்றை சொல்லி எப்படி அதை தான் மறுப்பது என்று தன் நினைவில் உழன்று கொண்டிருந்தாள்.

தாட்சாவோ அவளின் தலையை மென்மையாய் வருடி கொடுத்தவர்,

"அம்மாடி தாத்தாவும் பாட்டியும் உன்கிட்ட கொஞ்சம் பேச வந்துருக்கோம்.. பேசலாமா டா.." என்றார் மென்மையாய்.

"சொல்லுங்க பாட்டி.." என்றாள் மெதுவாய்.

" நீ எங்க பேத்தி.. சிபி எங்களோட பேரன்.. இப்போ உன்னோட புருஷன்.. உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகியும் நீ எங்களோட இப்படி தனியா இருக்க கூடாது மா.. அவனும் வளர்ந்ததும் தனியே தான் இருக்கான்.. எங்களுக்கு என்னவோ உன்னை பாத்துட்டு அவனை விட்டுட்டோமோ என்னவோன்னு தோணுது மா.. அப்பா அம்மாவை இழந்தவனுக்கு எங்களோட சொந்தத்தையும் இழந்துட்டு அனாதையா விட்டுட்டுடோமேன்னு தோணுது..

ஒரு வேளை என் பேரனுக்கு பாசம் காட்டி வளர்த்திருந்தா என் பேரன் இன்னைக்கு முரடனா இருந்திருக்க மாட்டானோ என்னவோன்னு மனசு கிடந்து தவிக்குது டா.. எங்க பேரனோட இன்னைய நிலைக்கு நாங்களும் ஒரு காரணமோன்னு மனசு சொல்லுது மா.." என்றார் வருத்தமாய்.

அவரின் வார்த்தையோ இல்லை பெண்ணவளின் மனதில் உள்ள குற்றவுணர்ச்சியோ எதுவோ ஒன்று அடுத்த நாளே எதுவும் பேசாமல் சிபியுடன் செல்ல வைத்தது.

இனி அவர்களின் வாழ்க்கையும் காதலையும் அடுத்தடுத்த பாகத்தில் பாக்கலாம் மக்களே.

இந்த கதை பிடித்திருந்தால் உங்க பொன்னான கருத்துக்களை சொல்லிட்டு போங்க பா.
 
இந்த பாட்டிக்கு இப்போ தான் பேரன கண்டுக்காம விட்டது தோனுது. நல்ல வேளை இப்பயாச்சும் தோன்றியிருக்கே. 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
Top