Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அணலில் துளிர்த்த பூந்தளிரே 7

Advertisement

ரமா

Member
Member
அணலில் துளிர்த்த பூந்தளிரே 7

மாந்தளிர் தலையை குணிந்தபடி அமர்ந்திருக்க அவரருகே தாட்சாயினி அவளை கவலையாய் பார்ப்பதும் தன் கணவரின் முகத்தை பார்ப்பதுமாய் இருந்தார்.. அதே நேரம் அங்கே சிபி அரவிந்தனுடன் அங்கே வந்தான் அவளை பார்த்தபடியே..

பெண்ணவளோ ஒரு நிலைக்கு மேல் அங்கிருக்க முடியாமல் எழுந்து உள்ளே ஓடி விட்டாள்.. அவளை தடுக்க போன தாட்சாயனியும் தடுத்து விட்டார் வர்த்தன்.

"தாட்சா விடு அவளை கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும்.." என தன் பேரனை பார்த்த படியே கூறினார்.

ஆனால் ஆடவனின் விழிகளோ தன்னை தாண்டி சென்றவளின் மேலே நிலைத்து நின்றது.

" சிபி.." என்ற வர்த்தனது அழைப்பு கூட காதில் கேட்காத அளவுக்கு அவளின் நினைவில் இருந்தான்.

அதை கவனித்த அரவிந்தனோ பாஸ் என்று சிபியின் தோளை உலுக்கினான்.

அதில் அவனின் புறம் திரும்ப அவனோ வர்த்தனை பார்வையால் காட்டினான்.

வர்த்தனின் புறம் திரும்பி எதுவும் நடக்காதவன் போல் , "சொல்லுங்க தாத்தா.. எதுக்கு கூப்பிட்டீங்க..." என்றான் அழுத்தமாய்.

அவனின் கேள்வியில் மனதுள் அவனை மெச்சியவர், "உன்கிட்ட ஒரு விஷயம் பேசனும் சிபி.. அதுக்கு தான் வர சொன்னேன்.. மாதுவை பத்தி பேசனும்.." என்றார் கலங்கிய குரலில்.

அவர் கேட்டதும் மனமெங்கும் ரணமாக, "அவளை பத்தி என்கிட்ட என்ன பேச இருக்கு.." என்றவனினா வார்த்தையில் இருந்த தடுமாற்றத்தில் மெதுவாய் புன்னகைத்தவர்,

"ஏன் சிபி உண்மையா உனக்கு அவளை பிடிக்காதா.. எனக்கு தெரிஞ்சு அவளை பத்தி பேச உன்கிட்ட தான் எல்லாமே இருக்குன்னு எனக்கு இப்போ தான் புரிஞ்சிது.. அதுவும் எப்போ தெரியுமா நேத்து நைட் தான்.." என்றார் அவனை அர்த்தமாய் பார்த்தபடி எனக்கு இரவு நடந்தது தெரியும் என்ற ரீதியில்.

அதற்கெல்லாம் அசருபவனா அவன்.. அதை காதில் வாங்காதது போல் நின்றிருந்தான்.

அவனின் அமைதியை சம்மதமாய் எடுத்து கொண்டவர்,

"மாதுவோட விஷயம் உனக்கு தெரியும்னு நினைக்குறேன்.. அவளோட வாழ்க்கை நல்லாருக்கனும்னு தான் நான் அவசரமா வெளியே மாப்பிள்ளை பார்த்தேன்.. அதுக்காக தான் என் பேத்தியை சமாதானம் செஞ்சு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணேன்.. அதுவே இன்னைக்கு என்ன பேத்தியை மூலையில முடிக்கி வச்சிடுச்சி.. என் பேத்தி வேணாம்னு சொல்லும் போதே நானும் விட்டுருக்கனும்.. அப்படி செய்யாம விட்டது என்னோட தப்பு தான்.. அதுக்காக என் பேத்திக்கு கிடைச்ச தண்டனை ரொம்பவே அதிகம் டா.. வேணாம் சிபி என் பேத்தி பூவோடும் பொட்டோடும் ரொம்ப வருஷம் அவ புருஷனோட சந்தோஷமா வாழனும்..

ஆனா என் பேத்தியை நினைச்சா எனக்கு ரொம்ப பயமா இருக்கு பா.. அவ சந்தோஷமா இருக்கனும்னா நீ அவளுக்காக ஒன்னு செய்யனும்.. செய்வியா பா.." என்றார்

என்ன என்பது போல் அவரை பார்த்த படி நின்றிருந்தான்.

" அவளை கல்யாணம் செஞ்சுக்குறியா சிபி.." என்றவரின் விழிகளில் இருந்த ஏக்கம் அவனை மறுத்து பேசவிடாமல் தடை செய்தது.

" என்னங்க அதுக்கு மாது ஒத்துப்பாளாங்க.." என்றார் தாட்சாயனி.

"நிச்சயம் ஒத்துப்பா தாட்சா.. நமக்காகவாது அவ ஒத்துக்கணும்.. அது மட்டுமல்ல இதை அவ மனசும் ஏத்துக்கும்.. ஏனா அவ மனசு அவளறியாம நம்ம சிபியை தேடுது.. இது நேத்து நான் கண்ட நிஜம்.." என்றார் சிபியை பார்த்தபடி.

அவனோ அதற்கு எந்த விதமான எதிர்வினையும் ஆற்றாமல் அமைதியாய் நின்றிருந்தான்.

ஆனால் அவர் சொன்னதின் அர்த்தம் புரியாமல் தாட்சாயனி தான்,

"என்னங்க சொல்றீங்க அவளுக்கு நம்ம சிபியை கண்டா ஆகாதே.. அவனை கண்டாலே ஏதோ பேயை பார்த்த மாதிரி பயந்து ஓடுவாளே.. அவளா சிபியை தேடுறா.. அட போங்க.." என்றார் அவர் கூறியதை நம்ப முடியாமல்.

"என்னாலேயும் தான் நேத்து நடந்ததை நம்ப முடியலை.. அதுலயும் இதோ இவன் அவளை எவ்வளவு மோசமா பேசனுமோ அந்தளவுக்கு பேசிட்டு இப்போ அவளுக்கு ஒன்னுன்னு உடனே தேடி வந்துட்டான்.. அது ஏன்னு யோசிச்சியா.. இத்தனை நாளா நாம என்ன நினைச்சோம்.. இவனுக்கு அவளை கண்டாலே ஆகலை.. அதுவும் இவனோட அப்பா அம்மாவை கொன்ன கொலைகாரியாத்தானே பார்த்தான்.. அப்படி தானே நாம நினைச்சோம்.. ஆனா இவன் அவளை வெறுக்கறேன் வெறுக்கறேன்னு சொல்லி அவளோட உருவத்தை இவனோட மனசுல ஆழமா பதிச்சிக்கிட்டான்..

அவளோட கல்யாணம்னு சொன்னதும் இவ வராததுக்கு நாம என்ன காரணம் யோசிச்சோம்.. இவனுக்கு அவளை பிடிக்காது.. அதனால தான் வரலைன்னு நீ சொன்னியா இல்லையா.." என்றவரின் கேள்விக்கு ,

"ஆமாங்க.." என்று தலையசைத்தார்.

"ஆனா இவன் நம்ப மாதுவை உயிரா நேசிச்சதால தாண்டி வரலை.. அதுவும் என் பேரன் என் பேத்திய யாருக்கும் விட்டு கொடுக்க முடியாத தாண்டி கடல் கடந்து போனான்.." என்றவரின் குரலில் இருந்த தழுதழுப்பு கூறியது அவர் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார் என்பதை.

அதை கேட்டும் ஆடவன் தன் தலையை நிமிரவில்லை.. அவரின் வார்த்தைகளுக்கு பதிலேதும் சொல்லவில்லை.


சோபாவில் அமர்ந்திருந்தவர் எழுந்து மெதுவாய் சிபியின் அருகே வந்து,

"அய்யா ராசா உன் மனசை புரிஞ்சிக்காதையே இத்தனை நாளா இந்த தாத்தா இருந்துட்டேனா என்னை மன்னிச்சிருய்யா.. உன் மனசு தெரியாமையே நான் அந்த புள்ளைக்கு வேற மாப்பிள்ளையை பாத்துட்டேன் இல்லை.. ஆனா அந்த புள்ளையோட மென்மையான மனசுக்கும் குணத்துக்கும் நீ சரி வருவியான்னு தெரியாம தான் யா செஞ்சேன்.. இந்த தாத்தனை மன்னிச்சிடு யா.." என்றார் கையெடுத்து கும்பிட்ட படி.

சட்டென்று அவரின் கையை இறக்கிவிட்டவன், "தாத்தா என்ன பன்றீங்க.. நீங்க வயசுல பெரியவங்க.." என்றான் பதட்டமாய்.

என்ன தான் உறவுகளை விட்டு விலகி இருந்தாலும் தனக்கென்று இருக்கும் உறவு அல்லவா.. இவர்களும் இல்லையென்றால் தான் அனாதை தானே.. தன்னை தூக்கி வளர்த்தவர் தன்னிடம் மன்னிப்பு கேட்பதா.. என்ன தான் இரும்பு மனம் படைத்தாலும் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை ஆடவனால்.

"அய்யா இப்போ நான் உன்கிட்ட ஒன்னு கேட்பேன்.. எனக்காக செய்வியா சிபி.." என்றவரின் கண்களில் இருந்த இறைஞ்சல் ஆடவனை அசைத்து பார்த்தது.

ஆனாலும் பதில் பேசாமல் அமைதியாய் நின்றிருந்தான்.. அவனின் மௌனத்தை சம்மதமாய் எடுத்துக் கொண்டவர்,

"எந்த முகூர்த்தத்துல என் பேத்திக்கு கல்யாணம் வச்சேனோ அதே முகூர்த்தத்துல அவ கல்யாணம் நடக்கனும் அதுவும் உன்னோட.. நடக்கும்னு நீ ஒரு வார்த்தை சொல்லுய்யா போதும்.." என்றார் இருகரம் கூப்பியபடி.

என்ன இருந்தாலும் அவள் பெண்ணல்லவோ.. ஒரு பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் ஆகி நின்று போனாளே அவளை ஆயிரம் பேசும்.. அதுவும் இவளுக்கோ நிச்சயத்தன்றே மாப்பிள்ளை இறந்து போனது அவளின் வாழ்வை பெரிதும் அல்லவா பாதிக்கும்.

அந்த பயம் வர்த்தனுக்கு மட்டுமன்றி தாட்சாயினிக்கும் இருந்தது.. அதனால் தான் சிபியிடம் வர்த்தன் பேசும் போது அமைதியாய் இருந்தார்.

அவர் கேட்டதும் ஒரு விரக்தி புன்னகை சிந்தியவன், "முதல்ல உங்க பேத்திக்கு என்னை பிடிக்குமான்னு கேளுங்க தாத்தா.. அவளுக்கு சம்மதம்னா எனக்கும் சம்மதம் தான்.." என்றவன் அங்கிருந்து கிளம்பும் சமயம் தாட்சாயினி

"சிபி ஒரே ஒரு சின்ன விஷயம்.." என்றார் தவிப்புடன்.

அவர் கேட்டதும் மௌனமாய் நின்றவன் அவரை திரும்பி பார்க்காமல், "சொல்லுங்க பாட்டி.." என்றான்.. என்ன தான் அவர் மீது கோபம் இருந்தாலும் தன் உதிரம் அல்லவா அதனால் அமைதியை கடைபிடித்தான்.

அவனின் கோபம் புரிந்தாலும் அதை பெரிதாக நினைக்காமல் தன் பேரன் தானே என்ற உரிமையில் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதவர் அவனிடம்,

"கொஞ்சம் உன் கோபத்தை அவகிட்ட குறைச்சிக்கோ பா.. அவகிட்ட மட்டுமாவது.." என்றான் வேண்டுதலாய்.

அவரிடம் திரும்பியவன், "பாட்டி அவளுக்காக நானோ இல்லை எனக்காக அவளோ மாறுனா அது உண்மையான காதல் இல்லை.. ஒருத்தரோட நிறை குறைகளோட ஏத்துக்கறது தான் உண்மையான காதல்.. அப்படி பாத்தா அவளோட அந்த மென்மையான மனசோட ஏத்துக்கறது தான் என்னோட காதல்.. என் கோபத்துல உள்ள நியாயத்தை புரிஞ்சிக்கிட்டு என்னை அப்படியே ஏத்துக்கறது தான் அவளோட காதல்.. அவ என்னை இப்படியே ஏத்துக்கிடட்டும் பாட்டி..பேசி பாருங்க அவளோட முழு மனசும் இருந்தி தான் நான் அவளுக்கு தாலி கட்டுவேன்.. பேசுங்க.." என்று விட்டு அவன் என்னவோ சென்று விட்டான் தான்.. ஆனால் அவன் கூறியதை கேட்ட பெரியவர்களுக்கு தான் அவன் அதிசயமாய் தெரிந்தான்.

தங்கள் பேரன் இப்படியும் கூட பேசுவானா என்று தான் பார்த்திருந்தனர்.

அவன் சொல்லி சென்றதும் சந்தோஷமாய் தங்களின் பேத்தியை பார்க்க சென்றார்கள்.

அந்த அறையில் ஊதுபத்தி மணம் கமழ கட்டிலில் பூக்கள் தூவி அறை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

அறையின் பால்கனியில் சிபி யாரிடமோ தீவிரமாய் போன் பேசிய படி நின்றிருந்தான்.. பட்டு வேட்டி சட்டையில் மாநிற தேகம் இன்னும் பொன்னிறமாய் ஜொலித்தது.


ஆம் இன்று காலையில் தான் இருவருக்குமான திருமணம் முடிந்தது.

எப்படியோ வர்த்தனும் தாட்சாயனியும் மாந்தளிரிடம் பேசி சம்மதம் வாங்கி அடுத்த வாரத்தில் திருமணத்தை முடித்து விட்டனர் சந்தோஷமாக.

இன்றே முதலிரவும் ஏற்பாடு செய்து விட்டனர்.. சிபி காதலை மாந்தளிரிடம் கூறலாம் என்று வர்த்தன் கேட்க,

"இல்லை தாத்தா.. என்னோட காதலை அவ பாதுகாப்பா உணரனும்.. அப்படி அவ உணர்ந்து பேசும் போது நான் சொல்லிக்குறேன்.." என்று ஒரே போடாய் போட்டு விட்டான்.

அவர்களுக்கும் அவன் கூறியது தான் சரி என்று தோன்ற அமைதியாய் விட்டு விட்டனர்.

இதோ தங்களின் அலுவலகத்திற்கு கிடைக்க வேண்டிய கான்ட்ராக்டை ஊழல் செய்து வாங்கிய ஒரு தொழிலதிபரிடம் தான் பேசிக் கொண்டிருந்தான்.

அவனுக்கு எப்போதும் பின்னாடி பேசுவது பிடிக்காது.. அதுவும் அவனின் தொழிலுக்கு நேர்மை ரொம்பவே முக்கியம் என்று நினைப்பவனின் வழியில் குறுக்கே வருபவனுக்கு அன்றிலிருந்து அழிவு தான்.

அவன் பேசிக் கொண்டிருக்க கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பியவனின் கண்களுக்கு விருந்தாய் விழுந்தாள் வஞ்சியவள்.

தங்க சரிகை கொண்ட குங்கும நிற புடவையில் பொண்ணோவியமாய் வந்து நின்றவளை கண்டதும் ஆடவனுக்கு மூச்சடைத்து தான் போனது.

இத்தனை பேரழகா இவள்.. அளவான நகையுடன் எளிமையான அலங்காரத்தில் கோட்டோவியமாய் நின்றவளை இமை சிமிட்டாமல் பார்த்திருந்தான்.

அவன் தான் அவளை ரசித்தானே ஒழிய நங்கையவள் துளியும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை.

அவளின் அங்கங்கள் யாவும் அவனின் முன்னால் நடுங்க தான் செய்தது.. எங்கே தான் நிமிர்ந்து பார்த்தாள் அவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமோ என்ற எண்ணமே அவளை நிகர முடியாமல் செய்தது.

கையில் பால்சொம்புடன் பதட்டத்துடன் நின்றவளை கண்டவனுக்கு ஒரு நிலைக்கு மேல் தாளாமல்,

"தளிர்.." என்றழைத்தான் மென்மையாய்.

அவனின் அழைப்பில் நிமிர்ந்து பார்த்தவளுக்கு ஏனோ ஆடவனும் புதிதாய் தான் தெரிந்தான்.

இத்தனை நாளாய் அவன் தன் பெயரை கூறி அழைத்ததாய் அவளுக்கு துளியும் நினைவு இல்லை.

ஆனால் இன்று அவனின் இந்த வித்தியாசமான அழைப்பு பெண்ணவளுக்கு என்ன மாதிரியான உணர்வு என்றே தெரியவில்லை.. ஆனால் அவளின் உள்ளத்தின் ஆழத்தில் ஒரு சிலிர்ப்பு உண்டானதை மென்மை மகள் அறியவில்லை.

ஆனால் அடுத்த அரைமணி நேரத்தில் அவனை கண்டு பயத்தில் அலறி துடித்து மயங்கி சரிந்தாள்.

சற்று நேரத்தில் அப்படி என்ன மாறியிருக்க போகின்றது இயல்பாய் இருந்தவர்களின் இடையிலே.. பொறுத்திருந்து தான் பார்ப்போமே அடுத்த பாகத்தில்.
 
Top