Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 106

Advertisement

SHALU shalu

Well-known member
Member
காலையில் கண் விழித்த மஹாபத்ராவோ, தனது கணவனின் நெஞ்சில் தஞ்சம் அடைந்து கொள்ள,”இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாமா மஹா?” என்று தன்னுடைய விழிகளைத் திறவாமலேயே அவளிடம் கேட்டான் காஷ்மீரன்.

அதைக் கேட்டதும், அவளது முகத்தில்
புன்சிரிப்பு தோன்றியது.

“எனக்கும் அதே தான் தோனுச்சு ங்க” என்றவாறே அவனுடன் இன்னும் ஒன்றிக் கொண்டாள் மஹாபத்ரா.

அவளது தாடையில் இதப் பதித்து விட்டு உறக்கத்தைத் தொடர்ந்தான் காஷ்மீரன்.

என்ன தான், வீட்டில் பார்த்துச் செய்து வைத்த திருமணமாக இருந்தாலும், அவர்களது இந்தப் புரிதலுடன் கூடிய இனிமையான வாழ்க்கை அவர்கள் நினைத்ததால் தான் சாத்தியமாகி உள்ளது!

இந்த இனிமையில் அப்படியே லயித்துப் போயிருந்தவர்களை, அவர்கள் செல்லில் வைத்திருந்த அலாரம் கொடுத்த ஒலி களைத்து விடவும்,

“ஊஃப்” என்று முனகியபடியே படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தாள் மஹாபத்ரா.

அவளைப் பின்தொடர்ந்து தானும் சிறியதாக முணுமுணுத்துக் கொண்டே எழுந்தான் காஷ்மீரன்.

அதன் பிறகுத் தான் சென்று பல் துலக்கி விட்டு வந்தவளோ,

“நீங்கப் போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க. இங்கே என்னென்ன திங்க்ஸ் இருக்குன்னுப் பார்த்துட்டு தானே காஃபியைக் கலக்கிடறேன் ங்க” என்று அவனை அனுப்பி வைத்து விட்டுச் சமையலறைக்குப் போனாள் அவனது மனைவி.

அதற்குள்ளாக, அவர்களது வீட்டின் கதவைத் தட்டும் சத்தம் கேட்டதும் யாரென்று கேட்க,

“நான் தான் அண்ணி” என்ற ருத்ராக்ஷியின் குரல் அவளுக்கு நன்றாகவே தெரியுமாதலால்,

உடனே கதவின் தாழ்ப்பாளை நீக்கி அவளை உள்ளே அனுமதித்தாள் மஹாபத்ரா.

“நீங்க ரெண்டு பேரும் இந்த டைமுக்கு தானே எழுந்து கீழே வருவீங்க! அதான், இப்போ காஃபி கொண்டு வந்தேன் அண்ணி. எங்கே அண்ணனைக் காணோம்?” என்று அவளிடம் வினவினாள் ருத்ராக்ஷி.

“அவர் ஃப்ரெஷ் ஆகப் போயிருக்கார் ம்மா” என்றாள் அவளது அண்ணி.

“அப்போ நீங்க காஃபியைக் குடிங்க. அவங்க வந்ததும் சூடு பண்ணிக் கொடுத்துக்கலாம்” என்று அவளிடம் சொல்லி விட்டு நாற்காலியில் உட்கார்ந்தாள் அவளுடைய நாத்தனார்.

அந்தப் பானத்தைப் பருகத் தொடங்கி விட்டாள் மஹாபத்ரா.

முந்தைய நாள் தங்கள் இடத்திற்கு வந்திருந்த ருத்ராக்ஷி மற்றும் அவளது குடும்பத்தாருக்குத் தகுந்தவாறு வீட்டை ஒதுக்கித் தந்திருந்தார்கள்.

அனைவருக்கும் ஒரே வீடே போதும் என்று அவர்கள் அவ்வளவு சொல்லியும் கவிபாரதியும், ஸ்வரூபனும் கேட்கவில்லை.

அவர்களுக்காகத் தனித்தனியாக வீடு ஒதுக்கிக் கொடுக்கும் விதமாக,”இந்த வீட்டில் சம்பந்தியும், ஸ்வரூபனும் தங்கிக்கட்டும். ருத்ராக்ஷியோட வீட்டில், நானும், அவளும் இருந்துக்கிறோம். காஷ்மீரன், மஹாபத்ராவுக்குத் தனி வீடும், கனகரூபிணி, பிரியரஞ்சன் அவங்களுக்கு ஒரு வீடும் ஒதுக்கிக் கொடுத்திடலாம்” என்று முந்தைய நாளே முடிவு செய்து அவர்களுக்குச் சொல்லி விட்டிருந்தார் கவிபாரதி.

அப்படித் தான், தங்களது இரவைக் கழித்து இருந்தார்கள் அனைவரும்.

அதனால் தான், அதிகாலையில் எழுந்து தயாராகி விட்டுக் கவிபாரதியும், அவளும் காஃபியைத் தயாரித்து விட்டு அதை அனைவருக்கும் கொடுக்கப் போனார்கள்.

இப்போது, தன்னுடைய தமையன் மற்றும் அண்ணிக்குக் கொண்டு வந்து கொடுத்திருக்கிறாள் ருத்ராக்ஷி.

சிறிது நேரத்தில் காஷ்மீரனும் அங்கே வந்து விட,”வாடா” என்று அவளை நோக்கிப் புன்சிரிப்பை உதிர்த்தான்.

அவனுக்குக் காஃபியைத் தந்தவளோ,”இதைக் குடிச்சிட்டு சீக்கிரம் ரெடியாகி அவரோட வீட்டுக்கு வந்துடுங்க. நான் மெழுகுவர்த்திக் கிளாஸ் எடுக்கிற வீட்டுக்குப் போகனும்” என்று அவர்களிடம் கூறி விட்டுப் போனாள் அவனது தங்கை.

அங்கேயிருந்து கிளம்பியதும், கவிபாரதியுடன் சேர்ந்து அவரது வீட்டிற்குச் சென்றாள் ருத்ராக்ஷி.

அங்கே, சந்திரதேவ்வும், ஸ்வரூபனும் எப்போதோ குளித்து விட்டிருந்தனர்.

அதே போலவே, மிருதுளாவும், அவளது கணவனும் வந்திருந்தார்கள்.

இன்னும் காஷ்மீரன் மற்றும் மஹாபத்ராவும், பிரியரஞ்சன் மற்றும் கனகரூபிணியும் மட்டும் தான் வர வேண்டும் என்று அவர்களுக்காக காத்திருந்தனர்.

“அவங்களுக்குப் புது இடம்ன்றதால் ஒருவேளை தூக்கம் வர லேட் ஆகிடுச்சு போல!” என்று பேசிக் கொண்டிருக்கும் போது,”அப்படியெல்லாம் இல்லைங்க. இங்கே நிம்மதியாகத் தூங்கினோம்” என்றவாறே வீட்டிற்குள் வந்தனர் அந்த இரு தம்பதிகள்.

அதைக் கேட்டதும் தான், இவர்களுக்கு,’ஹப்பாடா!’ என்றிருந்தது.

கவிபாரதி,“காஃபி குடிச்சீங்களா?” என்கவும்,

“அதெல்லாம் திவ்வியமாக ஆச்சுங்க” என்று அவருக்குப் பதிலளித்தார் பிரியரஞ்சன்.

“காலைச் சாப்பாட்டுக்கு என்ன செய்யலாம்?” என்று அனைவரிடமும் பொதுவாக வினவினார் மிருதுளா.

“இன்னைக்கு நான்வெஜ் எடுக்கலாமா? உங்களுக்கு ஓகேவா?” என்று அவர்களிடம் கேட்டான் ஸ்வரூபன்.

“எங்களுக்குச் சூப்பர் ஓகே!” என்று குரலை உயர்த்தி உற்சாகமாக உரைத்தாள் மஹாபத்ரா.

“ஆமாம். அவளுக்குச் சம்மதம்ன்னா நாங்களும் சம்மதிக்கிறோம். வேலையைப் பிரிச்சி செய்யலாம்” என்று கூறிச் சமையலுக்கு உதவ முன் வந்தார் கனகரூபிணி.

“ஐயோ இருக்கட்டும் ங்க! நாங்களே பாத்துக்கிறோம்” என அவரிடம் சொல்லிப் பார்த்தும் கேட்கவில்லை.

எனவே, அனைவரும் இணைந்து சமையலை முடிக்க முடிவெடுத்து விட்டனர்.

அதற்கு முன்பாகவே, ருத்ராக்ஷி பயிற்சி கொடுக்கும் வீட்டிற்குச் செல்லத் தயாரானார்கள்.

அந்த விஷயத்தைத் தானும், அவ்வூர்ப் பெண்களும் இருக்கும் வாட்சப் குழுவில் பகிர்ந்து விட்டாள் ருத்ராக்ஷி.

அதற்குப் பிறகுச் சொல்லவா வேண்டும்? அந்தச் செய்தி காட்டுத் தீயாகப் பரவி, அவளிடம் பயிற்சி எடுக்கும் பெண்கள் மட்டுமில்லாமல், ஊரில் இருக்கும் மற்ற பெண்மணிகளும் அங்கே செல்வதற்கு ஆர்வமாக இருந்தனர்.

அந்த இடத்திற்கு நூலகத்தின் உரிமையாளர் துரைமுருகனுக்கும் அழைப்பு சென்றிருந்ததால் அவரும் சரியான நேரத்திற்குப் போய்க் காத்துக் கொண்டு இருந்தார்.

“மிருதுளா ம்மா! தயாராக இருக்கியா?” என்று அவரிடம் கேட்கவும், மற்றவர்களுக்குப் புரிந்தாலும், அது என்னவென்று மஹாபத்ராவின் பெற்றோருக்குத் தெரியவில்லை.

ஆதலால், இதுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சிகளை அவர்களிடம் சொன்னாள் ருத்ராக்ஷி.

“ஓஹ்ஹோ! இன்னைக்கு என்ன நடக்குது, என்னப் பேசுறாங்கன்னு நாங்களும் பார்க்கிறோம். அதுக்கு ஏத்த மாதிரி நான் அவங்களுக்குப் பதிலடி தர்றேன்!” என்று ஒரு முடிவுடன் அவர்களுடன் சென்றார் கனகரூபிணி.

அதைக் கேட்டுப் புன்னகைத்தவாறே அவ்விடத்திற்குச் செல்ல முனையும் போது,”மாப்பிள்ளை! நீங்களும் , உங்கம்மாவும் அங்கே இப்போ வர வேணாம்! நாங்க சொல்லும் போது வாங்க” என்று ஸ்வரூபனைக் காத்திருக்கச் சொல்லி விட்டு அனைவருடனும் சேர்ந்து அங்கே போனான் காஷ்மீரன்.

அந்தக் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமின்றி, அவர்களுடன் இணைந்து மிருதுளாவும், வித்யாதரனும் வருவதைக் கண்டு,”இவங்க ஏன் எப்போ பார்த்தாலும் அவங்களோட சேர்ந்து வர்றாங்க!” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள் அங்கே இருந்தவர்கள்.

அதற்குள் ருத்ராக்ஷி தனது குடும்பத்துடன் உள்ளே வரவும்,

“வா ம்மா. புதுப் பொண்ணு! எப்படி இருக்கிற? ஓஹ்! எல்லாரும் வந்திருக்கீங்களா? நீங்க எப்படி இருக்கீங்க?” என்று இயல்பாக விசாரித்தனர் அனைவரும்.

அதைக் கேட்டதும் ஒருவருக்கொருவர் அர்த்தப் புன்னகை புரிந்தவாறே,”நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம் ங்க. உங்களைத் திரும்ப பார்க்கிறதில் ரொம்ப சந்தோஷம்!” என்றார் சந்திரதேவ்.

“ம்ம். எங்களுக்கும் தான்! ஆமாம். உங்கப் பொண்ணோட நிச்சயத்துக்குத் தானே எங்களை அழைக்க வந்திருக்கீங்க? அப்போ மாப்பிள்ளையையும் கூட்டிட்டு வந்திருக்கனும்ல? அவர் எங்கே?” என்று முந்திக் கொண்டு கேட்டார் ஒரு பெண்மணி.

‘இவங்க இன்னும் திருந்தலையா?’ என்பதைப் போலத் துரைமுருகனைப் பார்த்தார் வித்யாதரன்.

அதற்கு அவரோ,’எப்பவுமே திருந்த மாட்டாங்க?!’ என்று மறுத்துத் தலையசைத்து விட்டார்.

தன் மகளைப் பேச விடாமல்,“க்கும்! எங்க மாப்பிள்ளை இந்த ஊருக்குள்ளே தான் இருக்கார் ங்க‌. இங்கே தான் கூட்டிட்டு வரலை” என்று அவர்களுக்குப் பதில் சொன்னார் சந்திரதேவ்.

“ஆஹான்! ஏன் அப்படி பண்ணீங்க சார்? நாங்க அவரைக் கண்ணு வச்சிடுவோம்னா?” என்று விதண்டாவாதமாக கேட்டனர்.

“ஹாஹா! அப்படியெல்லாம் இல்லை ம்மா. இதோ இப்போ வந்துடுவாங்க” என்று அவர்களிடம் சொல்லி விட்டுத் தன் மகனுக்குக் கண்ணைக் காட்டவும்,

உடனே காஷ்மீரனும், தனது செல்லில் ஸ்வரூபனுக்கு அழைத்து இங்கே வருமாறு கூறி விட்டு வைத்தான்.

“இதோ எங்க வீட்டுப் பொண்ணுக்கு நாங்கப் பார்த்திருக்கிற மாப்பிள்ளை வரப் போறார்!” என்று அவர்களுக்கு அறிவித்தாள் மஹாபத்ரா.

தங்களது கண்களில் ஆர்வமும், பளபளப்பும் போட்டிப் போட வாயிலைப் பார்த்திருந்த அனைவரும் ஒரு சேர மின்சாரம் தாக்கியதைப் போன்ற அதிர்ச்சியில் உறைந்து விட்டார்கள்.

அங்கே வந்து கொண்டிருந்த ஸ்வரூபனும், கவிபாரதியும் தான் அவர்களது அந்த நிலைக்குக் காரணம் என்பதை உணர்ந்து கொண்ட ருத்ராக்ஷியோ,”இந்தக் கல்யாணப் பொண்ணோட கல்யாண மாப்பிள்ளை அவர் தான்!” என்று அவனைக் காட்டிச் சொல்லவும்,

அவளைப் பிரம்மிப்புடன் பார்த்தனர் அவ்வூர் மக்கள்.


- தொடரும்
 
Last edited:
"தங்களது இரவைக் கழித்தனர்" இந்த இடத்தில் பிழை இருக்கு மா பார்த்துக்கோங்க
 
அது சரி, கட்டிக்கப்போறவங்களுக்குப் பிடிச்சிருக்கு, பெத்தவங்க, உடன் பிறந்தவன் சம்மதத்தோடு கல்யாணம் பண்ணிக்கப்போறாங்க.இதுல மத்தவங்களுக்கு ஏன் அதிர்ச்சி 🤔🤔🤔🤔
 
Last edited:
அது சரி, கட்டிக்கப்போறவங்களுக்குப் பிடிச்சிருக்கு, பெத்தவங்க, உடன் பிறந்தவன் சம்மதத்தோடு கல்யாணம் பண்ணிக்கப்போறாங்க.இதுல மத்தவங்களுக்கு ஏன் அதிர்ச்சி 🤔🤔🤔🤔
Haha... Adhu andha oor paiyan mappilai nu nenachu apdi shock sis... Thank you so much ❤️
 
Top