Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 124

Advertisement

SHALU shalu

Well-known member
Member
ஸ்வரூபன் மற்றும் ருத்ராக்ஷியின் திருமண வேலைகளைத் தாங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பார்க்க முடிவெடுத்தனர்.

அதில், மாப்பிள்ளை வீட்டின் சார்பாக ஸ்வரூபன் மற்றும் கவிபாரதியை ஓய்வு எடுக்கச் சொல்லி விட்டு, வித்யாதரனும், மிருதுளாவும் பார்த்துக் கொண்டனர்.

அதே போலவே, ருத்ராக்ஷியின் குடும்பத்தில் காஷ்மீரன், மஹாபத்ராவும் பார்த்துக் கொள்ள, பெரியவர்களை அதிகமாக வேலை செய்ய விடவில்லை அவர்கள் இருவரும்.

அவர்களது செயல்களை அவதானித்துக் கொண்டிருந்த அவ்வூர் மக்களும் கூட, அவர்களுக்கு மனமுவந்து உதவி செய்ய முன் வந்தார்கள்.

ஸ்வரூபன் மற்றும் ருத்ராக்ஷியும், அவர்களுடைய குடும்பத்தினரும் அதைக் கண்டு நெகிழ்ந்து போயினர்.

அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து விட்டுத் திருமண ஏற்பாடுகளைச் செய்து முடித்தனர்.

நலங்கு வைபவத்திற்குத் தேவையானவற்றை எல்லாம் வாங்கி வைக்க நினைத்தவர்கள்,”ஏப்பா வித்யாதரா! இங்கே இருக்கிற கடைத்தெருவை நம்மக் காஷ்மீரனுக்குக் காட்டி விடு. பொண்ணு வீட்டு சார்பாக அவனே எல்லாத்தையும் வாங்கிட்டு வரட்டும்” என்றார் சந்திரதேவ்.

“சரிங்க சார்” என்று கூறியவரோ, அவரது மகனைத் தன்னுடன் கடைத்தெருவிற்கு அழைத்துச் சென்றார் வித்யாதரன்.

அந்த ஊருக்கு வந்ததில் இருந்து ருத்ராக்ஷியின் குடும்பத்தார் தங்களுடைய காரை உபயோகிக்கவே இல்லை.

ஏனெனில், அவர்கள் அனைவருக்கும்
அங்கே இருக்கும் அனைத்து இடங்களுக்கும் நடந்து செல்லத் தான் பிடித்திருந்தது.

எனவே தான், வித்யாதரனுடன் சேர்ந்து நடந்தே கடைக்குப் போனான் காஷ்மீரன்.

அவனுடைய குடும்பத்தின் பொருளாதார நிலையைப் பொறுத்தவரையில் அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் தாங்கள் இருந்த இடத்திலேயே செல்பேசியில் உதவியுடன் வரவழைத்துக் கொள்ளலாம்.

ஆனால், அவ்வாறு செய்ய வேண்டாம் என்று தன் குடும்பத்திடம் கோரிக்கை விடுத்து விட்டாள் ருத்ராக்ஷி.

அவளுக்குத் தன்னுடைய திருமணத்தின் அனைத்து ஏற்பாடுகளையும் தன் குடும்பத்தார் தான் எடுத்துச் செய்ய வேண்டும் என்று விண்ணப்பம் வைத்திருந்தால் அதை மற்றவர்கள் மனமார ஒப்புக் கொண்டு தாங்களே முன் வந்து தங்களுக்கான வேலைகளைப் பிரித்துக் கொண்டனர்.

அதில் ஒரு பகுதி தான், நலங்கு வைபவத்திற்கான பொருட்களை அங்கேயிருந்த கடைகளில் வாங்க வந்திருக்கிறான் காஷ்மீரன்.

“பூ, பழம் எல்லாம் இங்கே இருக்கிற கடைகளில் தான் நல்ல தரமானதாக இருக்கும் சார்” என்று அவனிடம் சொன்னார் வித்யாதரன்.

உடனே, அந்தப் பொருட்களைப் பார்வையிட்டுத் தரமானவற்றைப் ஆராய்ந்து பார்த்து வாங்கிக் கொண்டான் ருத்ராக்ஷியின் தமையன்.

அவற்றிற்குரிய பணத்தைக் கொடுத்து விட்டு,”வேறெதாவது வாங்கனுமான்னுக் கேட்டுக்கிறேன்” என்று தன்னுடைய செல்பேசியில் இருந்து தன் மனைவிக்கு அழைத்து,”மஹா ம்மா‌. இன்னும் என்னவெல்லாம் வாங்கனும்ன்னுக் கேட்டுச் சொல்லு” என்றதும்,

“ம்மா! அவர் தான் லைனில் இருக்கார். லிஸ்ட்டில் இருக்கிற எல்லா பொருட்களையும் வாங்கியாச்சு. இன்னும் ஏதாவது வேணும்னா சொல்ல சொல்றார்” என்று தன் அன்னையிடம் வினவினாள் மஹாபத்ரா.

“அந்த லிஸ்ட்டிலேயே எல்லாத்தையும் எழுதிக் கொடுத்தாச்சு டி. இனிமேல் எதுவும் தேவைப்படாது. அதை எல்லாத்தையும் மாப்பிள்ளையை வாங்கிட்டு வரச் சொல்லு” என்று மகளுக்கு அறிவுறுத்தினார் கனகரூபிணி.

அதை அப்படியே தன்னுடைய கணவனிடம் தெரிவித்து விட்டாள் மஹாபத்ரா.

“சரிம்மா” என்று அந்த அழைப்பைத் துண்டித்தவனோ,

“வாங்கப் போகலாம் சார்” என்று வித்யாதரனுடன் வீட்டிற்குப் போனவனோ,

“இந்தாங்க! எல்லாமே இருக்கான்னுப் பாருங்க” என்று பையைத் தன்னுடைய மனைவி மற்றும் மாமியாரிடம் கொடுத்து விட்டுத் தந்தை மற்றும் மாமனாருடன் ஐக்கியமாகி விட்டான் காஷ்மீரன்.

“ருத்ரா! உனக்கு மெஹந்தி போட்டு விட இன்னும் யாரும் வந்தா மாதிரி தெரியலையே?” என்று அவளிடம் வினவினார் கனகரூபிணி.

“அவங்களைக் கூட்டிட்டு வர்றதுக்கு எப்பவோ வண்டியை அனுப்பியாச்சு அத்தை. அவங்களே கால் பண்ணுவாங்க. இல்லைன்னா நான் கூப்பிட்டுக் கேட்கிறேன்” என்று அவரிடம் கூறினாள் ருத்ராக்ஷி.

“சரி” என்று சொல்லி விட்டு மற்ற வேலையைப் பார்க்கப் போய் விட்டார் கனகரூபிணி.

அவளும் அந்த அழகுநிலையப் பெண்ணிற்கு அழைத்து,

“ஹாய் மேடம்! நீங்க எங்க வந்திருக்கீங்க?” என்று விசாரித்தாள் ருத்ராக்ஷி.

“ஹலோ மேடம்! நாங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் ஊருக்குள்ளே வந்துருவோம்” என்று அவளுக்குப் பதிலளித்தாள் அந்தப் பெண்.

“அப்படியா? சரிங்க. அந்தக் கார் டிரைவருக்கு எங்களோட வீடு நல்லா தெரியும். சோ, அவர் உங்களைக் கரெக்ட் ஆக இங்கே கூட்டிட்டு வந்துருவார்” என்றவள்,

“நீங்க எல்லாரும் சாப்பிட்டீங்களா?” என்று வினவ,

“அங்கேயிருந்து கிளம்பும் போது சாப்பிட்டது மேடம்” என்றுரைக்கவும்,

“சரி. ஒன்னும் பிரச்சினை இல்லை. நீங்க வந்ததும் உங்களுக்குச் சாப்பாடு தாயாராக இருக்கும்” என்று அவளிடம் கூறி அழைப்பைத் துண்டித்தவள்,

அந்த விஷயத்தைத் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்து விட்டு,

“அண்ணி! நீங்களும் என் கூடச் மெஹந்தி போட்டுக்கோங்க” என்று மஹாபத்ராவிடம் சொன்னாள் ருத்ராக்ஷி.

“எனக்கு வேண்டாம் மா. நிலைய வேலை இருக்கு. அதைப் பார்க்கவே நேரமில்லை. இதில் கையில் மெஹந்தி எல்லாம் போட்டுட்டு இருந்தால் எதையுமே செய்ய முடியாது” என்றவளிடம்,

“ஓஹ்ஹோ! நீங்க மட்டும் உங்களோட கல்யாணத்தப்போ என்னை மெஹந்தி போட்டுக்கச் சொன்னீங்க தானே? அப்போ நான் போட்டுக்கிட்டேன்ல? அதனால், நீங்க எனக்காக இப்போ மெஹந்தி போட்டுத் தான் ஆகனும்!” என்று தன் அண்ணியிடம் கறாராக உரைத்து விட்டாள் அவளது நாத்தனார்.

அதைக் கேட்டுப் புன்னகைத்த மஹாபத்ராவோ,”சரிம்மா” என்று சம்மதித்து விட்டாள்.

சந்திரதேவ்,“நீங்க உங்கப் பிள்ளைங்களைக் கூட்டிட்டு வரக் கிளம்பலையா?” என்க,

“இதோ போகனும் சார்” என்றார் வித்யாதரன்.

“சீக்கிரம் போய்க் கூட்டிட்டு வா ப்பா. மிருதுளாவுக்குக் கால் செஞ்சு வரச் சொல்லு” என்று அவருக்கு அறிவுறுத்தினார் சந்திரதேவ்.

“சரிங்க சார்” என்றவரோ,

ஸ்வரூபனுக்கு அழைப்பு விடுத்து,”மிருதுளாவை இங்கே கிளம்பி வரச் சொல்றியா? நாங்க ரெண்டு பேரும் எங்கப் பசங்களைக் கூட்டிட்டு வரப் போகனும்” என்று அவனிடம் கூறவும்,

“சரிங்க அண்ணா. நானும், அம்மாவும் அதைப் பத்தித் தான் சொல்லிட்டு இருந்தோம். நாங்களும் அவங்க கூடக் கிளம்பி அங்கே வர்றோம்” என்று அவனிடம் சொல்லி விட்டுத் தன்னுடைய தாய் மற்றும் மிருதுளாவுடன் இணைந்து அவர்களின் இருப்பிடத்திற்குச் சென்றான் ஸ்வரூபன்.

“வாங்க ம்மா, மாப்பிள்ளை!” என்று அவர்களை வரவேற்று அமர வைத்து விட்டு,

“ஹேய்‌ மிருதுளா ம்மா. உன்னோட புருஷன் கூடச் சீக்கிரம் கிளம்பிப் போய்ப் பிள்ளைங்களைக் கூட்டிட்டு வா” என்று அவரது கணவர் வித்யாதரனுடன் அனுப்பி வைத்தார் சந்திரதேவ்.

அந்தச் சமயத்தில், கார்ச் சத்தம் கேட்கவும்,”பியூட்டீசியன்ஸ் வந்துட்டாங்க போலவே” என்று கூறிக் கொண்டே வெளியே சென்று பார்த்தாள் மஹாபத்ரா.

அவளது கணிப்புச் சரியாகத் தான் இருந்தது.

அழகு நிலையப் பெண்கள் தான் காரிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

“வாங்க! வாங்க” என்று அவர்களை வரவேற்று வீட்டினுள் அனுமதித்தாள் மஹாபத்ரா.

அந்த மூன்று பெண்களையும் பார்த்து அனைவரும் புன்னகைத்து அவர்களை நலம் விசாரித்து முடித்தவுடன்,”இவங்கப் பசிக்குதுன்னு சொன்னாங்க. முதல்ல சாப்பிடட்டும்” என்று அவர்களை முதலில் உணவுண்ண வைத்தனர்.

“உங்களுக்குத் தங்குறதுக்குப் பக்கத்திலேயே வீடு இருக்கு ம்மா. அதில் ஏதாவது குறை இருந்தாலும் சொல்லுங்க” என்று அவர்களிடம் கூறினார் கவிபாரதி.

ருத்ராக்ஷிக்கு மெஹந்தி மற்றும் மற்ற அலங்காரங்களைச் செய்வதற்காக அவர்களைப்‌ பாதுகாப்புடன் வரவழைத்து இருந்தார்கள் காஷ்மீரன் மற்றும் மஹாபத்ரா.

ஏனென்றால், அவர்களுடைய அழகுநிலையம் நகரத்தில் இருக்கிறது. அங்கேயிருந்து மிகத் தொலைவில் இருக்கும் இந்த ஊருக்குப் பயணம் செய்து வருவது என்பது அவர்களைப் பொறுத்தவரைக்கும் பெரிய விஷயம். எனவே தான், அந்தப் பொறுப்பை ருத்ராக்ஷியின் அண்ணனும், அண்ணியும் ஏற்றுக் கொண்டனர்.

“மேடம்! நீங்க எல்லாரும் ரெஸ்ட் எடுங்க. நாளைக்கு ஈவ்னிங் எனக்கு மெஹந்தி போட்டு விடுங்க” என்று அந்த மூவரிடமும் வலியுறுத்தினாள் ருத்ராக்ஷி.

அவர்களை அருகிலிருந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கே தங்க வைத்து விட்டு வந்தார் கவிபாரதி.

அது வரைக்கும் தங்களுடைய பொறுப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்த ஸ்வரூபன் மற்றும் ருத்ராக்ஷியோ இப்போது தான் தங்களது இணையின் மீது கவனத்தைப் பதித்தனர்.

அடுத்த இரண்டு நாட்களில் நலங்கு வைபவம் மற்றும் அதன் பின்னர் தனது சரிபாதியாகப் போகும் பெண்ணவளைக் கண்ணாரக் காண நேரம் போதவில்லை ஸ்வரூபனுக்கு.

அதே போலான நிலையில் தான் ருத்ராக்ஷியும் இருந்தாள்.

சுற்றிலும் அனைவரும் இருக்கும் போது எப்படி ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வது, நலம் விசாரிப்பது என்ற தயக்கத்தில் இதுவரை இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை.

அவர்களை ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளக் கூடாது என்றெல்லாம் வீட்டினர் தடை விதித்து இருக்கவில்லை.

ஆனாலும், அவ்விருவரும் தயக்கத்துடன் தான் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

சில நேரங்களில், இருவரும் ஒரே இடத்தில் இருந்த போதும் கூடச் செல்பேசியில் புலனத்தில் தான் உரையாடிக் கொண்டு இருந்தார்கள்.

அது தங்களைத் திருமணம் செய்து கொள்ளும் நிலை வரையிலும் கொண்டு வந்து நிறுத்திய தங்கள் குடும்பத்திற்குக் கொடுக்கும் மரியாதையாக எண்ணினர் ஸ்வரூபன் மற்றும் ருத்ராக்ஷி.

தன்னவளின் கரங்களில் மருதாணி இடும் நேரத்தில் தான் நிச்சயம் அவளுக்கு அருகில் இருக்க வேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்தான் ஸ்வரூபன்.

அப்போது,”வித்யாதரனும், மிருதுளாவும் கொஞ்சம் முன்னாடியே அவங்கப் பிள்ளைங்களைக் கூட்டிட்டு வந்திருக்கலாம்” என்றார் கவிபாரதி.

“நானும் அவங்ககிட்ட அதைச் சொல்லிச் சொல்லியே சலிச்சிப் போய்ட்டேன் ம்மா. மண்டபத்தில் வேலை இருக்கு அதை மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க தானே பார்க்கனும்னு அண்ணே போகவே இல்லை” என்று தாயிடம் கூறினான் அவரது மகன்.

“ஒன்னும் சொல்றதுக்கு இல்லை” என்று சலித்துக் கொண்டார்கள் அனைவரும்.

அடுத்த நாள் மாலையில் தான் ருத்ராக்ஷிக்கு மெஹந்தி போட இருப்பதால் அப்போதைய நேரத்தில் வருமாறு ஸ்வரூபன் மற்றும் கவிபாரதிக்கு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

அனைவரும் தத்தமது அறைக்குச் சென்ற பிறகுத், தன்னுடைய செல்பேசியில்,”ஹாய் ருத்ரா ம்மா’ என்ற ஸ்வரூபனுடைய குறுஞ்செய்தி வந்ததைக் கண்ட ருத்ராக்ஷியோ,’ஹாய் ங்க! இவ்வளவு நேரம் இங்கே தானே இருந்தீங்க? அப்போ எல்லாம் எங்கிட்டே பேசாமல் இப்போ மெசேஜ் செஞ்சிட்டு இருக்கீங்களே?’ என்று அவனிடம் குறைபட்டுக் கொண்டாள்.

‘அப்போ எல்லாருமே இருந்தாங்கள்ல ம்மா? நான் அவங்களை எல்லாம் தாண்டி உங்கிட்டே எப்படி பேசுறது?’ என்று கூறி அவளைச் சமாதானம் செய்யவும்,

‘ஓஹ்! உங்களுக்கு எல்லாரையும் பார்த்துப் பயமா இருக்கா?’ என்றாள் ருத்ராக்ஷி.

‘பயம் இல்லை ம்மா. மரியாதைன்னு சொல்லலாம்’ என்று அவளுக்குப் புரிய வைத்தான் ஸ்வரூபன்.

‘ம்ம். எனக்குத் தெரியும் ங்க. நான் சும்மா கிண்டல் பண்ணேன்’ என்று அவனுக்குப் பதிலளித்தாள்.

அவர்கள் இருவரும் உறங்கும் நேரம் வரையிலும் அளவளாவிக் கொண்டிருந்து விட்டு உறங்கச் சென்றார்கள்.

அதே போலவே, தங்களது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு ஊருக்குத் திரும்பி விட்டிருந்தனர் வித்யாதரன் மற்றும் மிருதுளா.

- தொடரும்
 
Top