அத்தியாயம் - 20 தேன் சிந்துமோ மேகம் (இறுதி அத்தியாயம்)

Advertisement

வாவ்! மிக மிக எதார்த்தமான கதை ஆத்தரே!

கணவன் மனைவி மனச விட்டுப் பேசிக்கலேன்னா கடுகளவு பிரச்சனை கூட எவ்வளவு பெருசா மாறும்ன்றதுக்கு இவங்க சிறந்த எடுத்துக்காட்டு.

ஏட்டுக்கல்வியை மனசுல பதிய வைத்துக்கொண்ட அளவுக்கு வாழ்க்கைப் பாடத்தை ஏத்திக்கலன்னு சொல்ல வச்சிட்டாங்க.

வெளிஉலகமே தெரியாத நிலாவுக்கு இருபத்தோரு வயதில் திருமணம், குழந்தைன்னு பேக் டு பேக் பொறுப்புகள் கொஞ்சம் அதிகம்ன்றதுனால அவ சைட்ல புரிஞ்சுக்க முடிஞ்சுது.

ஆனால் இந்த எழிலன், இத்தனை நல்லவனா இருந்தும், most importantly பெண்களின் உணர்வுகளை மதிக்கத் தெரிஞ்ச இவன், ஆசை ஆசையா காதலிச்சு கல்யாணம் பண்ணிண்ட தன்னோட நிலாவை இத்தனை வருஷமா தவிக்க விட்டுட்டானேன்னு நினைக்கும் போது மனசே ஆறல.

‘வண்ணம்(கோபம்) கொண்ட வெண்ணிலவே வானம்(அண்ணன்) விட்டு வாராயோன்னு’ ஒரு முறை பாடி இருக்கலாமே. ஓடி வந்திருப்பாளே அவள். மஞ்சுகுட்டியும் டாடிஸ் லிட்டில் ப்ரின்சிஸ்; மாமாஸ் பெட்ன்னு இன்னும் சந்தோஷமா வளர்ந்திருப்பாளே!

ஆயிரம்தான் நிலவனுக்காக எழிலன் இரண்டு வருடங்களுக்கு சென்னை வாசியாக மாறி இருந்தாலும், முதலில் வாய்விட்டு சமரசம் செய்தது நிலவன் தான். அதே மாதிரி எத்தனை பிடிவாதக்காரனாக இருந்தாலும், அம்மாவின் ஒரு கண்ணசைவுக்குப அடிப்பணியும் அவன் குணம் வேற லெவல். சமத்துப் பையன் அவன்.

பக்குவமில்லாமல் சண்டைபோட்டு வருடக்கணக்காக பிரிந்து இருந்தபோதும், பொழுதுக்கும் கண்ணீர் சிந்தாமல் மேற்கொண்டு படித்து, தங்கள் லட்சியப் பாதையில் கவனம் செலுத்திய இருவரின் மனத்திடமும் அசத்தல்.

மேற்படிப்புக்கும் சரி; குழந்தை இவர்கள் பிரிவில் மனவுளைச்சலுக்கு ஆளாகாமல் வளர்ந்ததிலும் சரி: எல்லா பெருமையும் வீட்டின் பெரியவர்களையே சேரும்.

கணவன் மனைவி உறவு தாண்டி, திருமண வாழ்க்கை சிறக்க குடும்பத்தினரின் பங்கு எவ்வளவு இன்றியமையாதது என்று அழகாக வலியுறுத்திட்டீங்க.

இங்கேயும் நிலவனை பாராட்டியே ஆகவேண்டும். இத்தனை வருடங்களில் குழந்தை முன் எழிலனைப் பற்றி ஒரு வார்த்தை கூட தவறாக பேசியதே இல்லை. பாசத்தை மட்டுமே பொழிகிறான்.

குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்ன்னு செழியன் குடும்பத்தினர் மூலமா சொன்னது; கல்லூரியில் கல்வியைத் தாண்டி ஒழுக்கம்; ஆரோக்கியமான நட்பு; ஏற்கக்கூடிய கூடாத காதல்; பாதுகாப்பான சூழ்நிலை அப்படின்னு நிறைய நிறைய அற்புதமான விஷயங்களை கதையில் நுழைத்த உங்கள் பாங்கு சூப்பரோ சூப்பர்.

இங்கேயும் நிலவன் deserves special mention. செழியன் & co, பிரச்சனைகளைத் தீர்க்க மட்டுமே பார்க்க, நம்ம கோபக்காரன் நிலவன் தான் root cause கண்டுபிடிச்சு வேரோட கிள்ளி எறிய போராடுறான்.

மாமன் மச்சான் மனம் தெளிந்து உறவாடுவதை, மளிகை கடை வியாபாரத்தில் மறைமுகமாக உணர்த்திய உங்கள் திறமை அசாதாரணம் ஆத்தரே.

மொத்தத்தில் மனத்தில் ஆழப்பதிந்து விட்ட அருமையான கதை. இனி எங்கு S.P.B அவர்கள் பாட்டு கேட்டாலும், குறிப்பாக நிலா பாடல்கள் கேட்டாலும் இவர்கள் நியாபகம்தான் வரும்.

இந்தப் பிரிவில் கற்ற பாடத்தை எழிலன் & நிலா வாழ்க்கை முழுக்க மறக்காமல் நல்லபடியாக வாழவேண்டும் என்றும், இத்தனை அற்புதமான கதை தந்த நீங்கள் இப்போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறேன்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 

Advertisement

Advertisement

Back
Top