Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 7

Advertisement

Aarpita

Active member
Member
இவர்கள் வந்த கார் வாசலில் வந்து நிற்கும் போதே, விழா துவங்கி, சிலரின் பேச்சு ஒலித்து கொண்டு இருக்க,

"விழா ஆரம்பிச்சிட்டாங்க போலடா. வாங்க சீக்கிரம் போவோம்" எங்க அனைவரும் உள்ளே நுழைந்தனர்.

"டேய் சக்தி, ஷீலாக்கு வாங்குன கிஃப்ட் எங்க வெச்சி இருக்க? சீக்கிரம் கொண்டு வா" என்றான் தர்ஷன்.

"ஹையோ அது ஆபீஸ் ரூம்ல வேற இருக்கேடா. வந்ததும் அங்க வெச்சிட்டேன். அதை எடுத்துட்டு வரேன் இரு" என்று நகர போன சக்தியை.,

"சக்தி நீ வரு பக்கத்துல இரு. நான் போய் கொண்டு வரேன்" என்ற தாரிகா சென்று விட்டாள், அடுத்து யார் சொல்வதை கேட்காமலும் நிற்காமலும்.

"சரி வாங்கடா. நாம ஸ்டேஜ் கிட்ட போவோம். அந்த சைன் பண்ண பேப்பர்ஸ் ஒன்ஸ் வாங்கி சரி பார்த்துடுவோம். அதுக்கு அப்புறம் ஷீலா கிட்ட கிஃப்ட் கொடுத்துட்டா, வேலை முடிஞ்சிடும்" என்ற படி சக்தி சிஸ்டரிடம் நெருங்கி, அவர்கள் கையெழுதிட்ட பேப்பர் அனைத்தையும் இறுதியாய் சரி பார்த்து கொண்டு இருக்க, வர்ஷா அவ்விடம் இருந்த நாற்காலியில் அமர, ஸ்ரீஜாவும் அவளுடன் அமர்ந்து கொண்டாள்.

சக்தி தன் கவனத்தை அந்த பேப்பரில் வைத்த படியே சிஸ்டரிடம் பேசி கொண்டு இருக்க, தர்ஷனுக்கோ அவ்விடன் கவனம் சுத்தமாய் இல்லை.

கைகளை பிசைந்த படி, தவித்து நின்று கொண்டு இருந்த தர்ஷனின் கால்கள் கூட தரையில் அமைதியாய் நின்ற படி தெரியவில்லை. எங்கோ செல்லவே தவித்து கொண்டு இருப்பதை போல் கிடந்தவனின் திண்டாட்டத்தை ஒரு பார்வை பார்த்து கொண்டே சிஸ்டரிடம் பேசி கொண்டு இருந்த சக்திக்கு தான் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனாலும் எதையும் கண்டு கொள்ளாதவன் போல, தீவிராமாய் பேசி கொண்டு இருக்கும் அவனை கவனித்த தர்ஷன், மெதுவாய் ஒரங்கட்ட துவங்க, அதை கவனித்த சக்திக்கோ, அவனை மீறியும் சிரிப்பு வந்தது.

மறுபுறம், கிஃப்ட் எடுக்க சென்ற தாரிகா, அது ஏதோ ஒரு சிறு பெட்டி போல இருக்கும், இயல்பாய் கையில் தூக்கி கொண்டு வந்து விடலாம் என்று எண்ணி ஆபீஸ் அறை நுழைய, அங்கோ சற்று நீளமாய், சற்று எடையில் அதிகமாகவும் இருந்த அதனின் அமைப்பை வைத்தே, கிட்டாராக இருக்கும் என்பது விளங்கியது தாரிகாவிற்கு.

ஷீலாவிற்கு, கிட்டார் வாசிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். தனக்கென தனியாய் ஒரு கிட்டார் வேண்டும் என்ன பல நாள் அவள் கொண்ட ஆசையை வர்ஷா மூலம் தெரிந்து கொண்டவர்கள், ஷீலா பட்டம் வாங்கும் போது, தங்களின் கடமையையும் முடியும் போது, அவளுக்கு பரிசாய் ஒரு கிட்டார் கொடுக்கலாம் என்று முடிவெடுத்ததே தர்ஷனும், தாரிகாவும் தானே.

அதனால் அது இன்னதென கண்டு கொள்ள அதிக நேரம் எடுத்து கொள்ளாத போதும், இப்போது சங்கடத்தில் சிக்கி கொண்டது என்னவோ தாரிகா தான்.

"அப்போவே சக்தி போறேன்னு சொன்னான். நான் தான் வேணாம்னு சொல்லிட்டு, நானே எடுத்துட்டு வரேன்னு சொன்னேன். இப்போ பாரு, ஒரு கையில கட்டு போட்டு இருக்கு. அதோட வலியினால, மொத்த கையையும் தூக்க முடியல. இந்த கிட்டார் வேற வெயிட்டா இருக்கு. இதை எப்படி கொண்டு போகுறதுனு தெரியலயே" தன்னையே நொந்து கொண்டவள்,

"சரி முயற்சி பண்ணி பாப்போம். ஒருவேளை முடியலனா, சக்தியையே கூப்பிட்டு விடுவோம்" நினைத்தவள்,

ஒரு கையால் கிட்டாரின் ஒரு முனையை பிடித்து, அதை தூக்கி, மறுமுனையை, காயம் பட்ட தன் கை மீது வைத்து தாங்கியவள், பிடித்து இருந்த முனையை பத்திரமாய் பிடித்து, உடல் வைத்து அதை தாங்க முயற்சித்து, கிட்டாரை லேசாய் அசைத்த போதே, அதனின் வலுவான ஒரு முனை ஆட்டம் கண்டு, காயம் கொண்ட அவளின் கை அதை தாங்க முடியாமல் சரிந்து அவளை விட்டு நழுவி கீழே விழ போகும் போதே,

அந்த கிட்டாரை, அவளின் பின்னால் இருந்து பிடித்து, பின் அதை அவளின் இடையோடு ஒட்டி பிடித்தவனின் பலத்தில், தன் முதுகு அவனின் மார்பில் மோதி நிற்கும் போதே உணர்ந்து கொண்டாள், தன் பின்னால் நிற்பது தர்ஷன் என்று.

சுதாரித்து, அவனையும் கிட்டாரையும் விட்டு விலகியவள், தர்ஷனின் எதிரே அவனை பார்த்த படி நிற்க,

"அதான் கையில அடி பட்டு இருக்குன்னு தெரியும்ல. அப்புறம் என்ன அதிக பிரசாங்கி மாதிரி கிஃப்ட் எடுக்க ஓடி வர. போட்டு இருக்க தையல் பிரிஞ்சி போனா என்ன பண்ணுவ. அது இல்லாம இந்த கையை தூக்கவே கூடாதுனு டாக்டர் சொன்னாரு தானே. பின்ன அதுல போய் இவ்ளோ வெயிட் வெச்சி ஸ்டண்ட் பண்ணிட்டு இருக்க" என்றான் தர்ஷன், அவள் மேல் இருக்கும் அக்கறையில் சில நொடிகள் தன்னையே மறந்து.

அவனின் வார்த்தைக்கும் அக்கறைக்கும் இத்தனை நாள் ஏங்கி கிடந்தவளுக்கு, அவள் எதிர்பார்த்ததை விட அதிகம் கிடைக்க, அதில் திக்கு முக்காடி போனவள் கண் கொட்டவும் மறந்து தர்ஷனையே வெறித்து பார்த்து கொண்டு இருக்க, அவளின் விழி மொழி உணர்ந்தவன்.,

"இப்போ எதுக்கு முட்ட கண்ணை வெச்சிட்டு இப்டி முழிக்குற. உன்னை நீ பார்த்துக்கலனா வேற யார் பார்த்துப்பா. பார்த்துக்கணும்னு நெனச்சா கூட நீ தான் நெருங்க விட மாட்டியே. ஆனாலும் இன்னும் நீ விளையாட்டு தனமா தான் இருக்க" என்றான் அந்த கிட்டாரை பத்திரமாய் மேசை மேல் வைத்து பேசிய படி.

அவனின் ஒற்றை பார்வையை எதிர் பார்த்து இவள் காலங்கள் கடத்தி இருக்க, இன்றோ அடை மழையில் நினையும் பாக்கியம் கிடைக்கும் என்று அறியாத பேதையோ, அவனுக்கு பதில் சொல்லவா, இல்லை அவனையே வெறித்து, அவனை மொத்தமாய் தன்னுள் விழுங்கி விடுவதா என்ற போராட்டத்தில் மௌனமாய் நிற்க,

"இப்போவும் அமைதியா இருக்காத தாரு. ஏதாவது பேசு. எந்த பிரெச்சனையா இருந்தாலும் பேசு. எப்பவும் நான் இருக்கேன்" என்றான் கிட்டத்தட்ட கெஞ்சிய படி.

"பிரச்னையை பேசு" என்ற ஒற்றை வார்த்தை காதுக்குள் புகுந்ததில், மொத்த மூளையும் சலவை செய்தது போல் தெளிந்து,

"என்ன பண்றேன். எதை விட்டு, யாரை விட்டு விலகி போகணும்னு நெனச்சேனோ. அவன் கூடயே இப்டி மயங்கி நிக்குறேனே. இதோட விளைவு என்னனு தெரிஞ்சும் கூட என்னஇது!!!எனக்குள்ள இப்டி ஒரு மாற்றம்?" யோசித்து கொண்டு இருந்திவளை,

"தாரு. என்னனு சொல்லுமா" என்ற படி தன்னை நெருங்கியவனை கண்டவள் சுதாரித்து,

"என்ன சொல்லணும் உனக்கு. எத்தனை தடவை கேட்டாலும் ஒரே பதில் தான். நேரத்துக்கு ஒரு பதில் எல்லாம் என்னால சொல்ல முடியாது" என்றாள், இல்லாத கோவத்தை குரலில் காட்ட முயற்சித்த படி.

அவளின் இந்த திடீர் மாற்றத்தில் முதலில் குழம்பி பின் வெறுத்து, பின் தானும் கோவம் கொண்டவன், எதையோ பேச வாயெடுக்கும் போதே அங்கு வந்து விட்டான் சக்தி. வந்தவன்.,

"டேய் நீ இங்க என்ன பண்றே? உன்னை பேப்பர் பாக்க தானே சொன்னேன். நீ எப்போ இங்க வந்தே" தர்ஷன் செல்வது எதற்காக எங்கு என்பதை தெரிந்தே, அவனை பின் தொடர்ந்து வந்து விட்டு, இப்போது எதுவும் தெரியாதவன் போல கேட்டான் சக்தி.

"நான் இங்க நல்ல வேலை வந்தேன். இல்லனா உன்னோட தங்கச்சி இந்த கிஃப்ட்டை போட்டு உடைச்சி இருப்பா. தூக்க முடியாதவ எதுக்கு இங்க வரணும். தேவை இல்லாம அரை மனி நேரம் வேஸ்ட் ஆகி இருக்கும். சிலரை எல்லாம் தள்ளி நிக்க வெச்சா தான், நம்ப நிம்மதியா இருக்க முடியும் போல" தாரிகாவை பார்த்த படியே பேசியவன், அதே விரக்தியில் அவ்விடத்தை விட்டு சென்றும் விட்டான்.

"என்ன இவன். நான் எதையோ எதிர் பார்த்து வந்தா, இவன் அதுக்கு எதிர் மறையா பிஹவ் பண்ணிட்டு போறான். ரெண்டு நிமிஷம் தானே இதுங்களை தனியா விட்டோம். அதுக்குள்ள இவ்ளோ சண்டையா. இதுங்க எப்போ தான் பழைய படி மாறுவாங்களோ" மனதுக்குள் புலம்பி கொண்டு இருந்தவன்,

"வா தாரிகா நாம போவோம். ஸ்டேஜ்ல எல்லரையும் கூப்பிடுறாங்க" என்றவன் அந்த கிஃப்ட்டையும் கையில் எடுத்து கொண்டு முன்னே செல்ல, அவளை பின் தொடர்ந்த படி வந்தவளோ.,

"சாரி தர்ஷா, நான் உன் கூட இருக்க வரைக்கும், உனக்கு இதே மன கஷ்டமா இருந்துகிட்டே தான் இருக்கும். இந்த விழா முடிஞ்சதும், நான் போய்டுவேன். அதுக்கு அப்பறம் உன் கண் முன்னாடி எப்பவுமே வர மாட்டேன்" நினைத்த படி வந்தவளின் மன ஆசை நிறைவேறுமா?!!!
 
Top