Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 9

Advertisement

SHALU shalu

Well-known member
Member
அவளது தூய்மையான அகத்தினால் தான், ருத்ராக்ஷி செய்யும் மெழுகுவர்த்திகள் நறுமணம் வீசுகின்றனவோ? என்றெல்லாம் யோசித்தான் ஸ்வரூபன்.

அவை திக்கின்றி பயணித்துக் கொண்டிருக்க, அவனது தாயோ, நேராக ருத்ராக்ஷியிடம் சென்று,

“ருத்ராக்ஷி!” என்றவரைப் பார்த்ததும், மலர்ந்து முகத்துடன்,”ம்மா! என்ன இந்தப் பக்கம்?” என்றாள்.

“வீட்டுக்குப் பொருள் வாங்கிட்டுப் போகலாம்னு வந்தோம். இதோ இவன் தான் என் பையன். பேர் ஸ்வரூபன்” என்று அவளுக்குத் தன்னை அறிமுகப்படுத்தி வைக்கவும், சுதாரித்துக் கொண்டவன், ருத்ராக்ஷியைப் பார்த்து இயல்பானப் புன்னகையை சிந்தினான்.

அவளும், பரஸ்பரம் விசாரிக்கும் நோக்கத்துடன்,”ஓஹ், வணக்கம்” என்று ஸ்வரூபனிடம் தெரிவித்தாள்.

அவனோ,“ம்ம்” என்று தலையசைத்துக் கொண்டான்.

“நீயும் அதே பஸ்ஸில் தான் வந்த போலவே? கவனிக்கவே இல்லை பாரு”என்றார் கவிபாரதி.

“ஆமாம் மா. நானும் அதில் தான் வந்தேன்” என்று கூறினாள் ருத்ராக்ஷி.

“நீ என்ன வாங்க வந்த ம்மா?” என்று விசாரித்தார் ஸ்வரூபனின் அன்னை.

“எங்க அண்ணாவுக்குக் கூடிய சீக்கிரத்தில் கல்யாணம் நடக்கப் போகுது. நான் பொண்ணுக்குப் பூ வைக்கப் போகனும், அதனால், இங்கேயிருந்து, ரெண்டு பேருக்கும், ஏதாவது பரிசு வாங்கிட்டுப் போகலாம்னு வந்துருக்கேன் ம்மா” என்று அவரிடம் விவரித்தாள்.

“ஓஹோ! நல்ல விஷயம் தான் ம்மா. எல்லாரும் எந்த ஊரில் இருக்காங்க?” என்று வினவியவரிடம்,

அந்த ஊரின் பெயரைச் சொன்னதும்,”அப்படியா?” என்றவர், அவ்வளவு பெரிய ஊரை விட்டு இங்கு வந்து அவள் தங்கியிருக்கக் காரணம் என்ன? என்று ஆச்சரியமாக கேட்டார் கவிபாரதி.

அதற்கானப் பதிலை மறைக்காமல் உரைத்து விட்டாள் ருத்ராக்ஷி.

“அப்படியா? இந்தக் காலத்துல இப்மடி ஒரு பொண்ணா?!” என ஆச்சரிய மிகுதியில் கூறினார் ஸ்வரூபனின் தாய்.

அவள் எதுவும் கூறாமல் புன்னகைத்தாள் அவ்வளவே!

அவர் கேள்விகளைக் கேட்க, இவள் பதில் சொல்ல என்று தான், நேரம் போய்க் கொண்டு இருந்ததே தவிர, இவனிடமிருந்து, ஒரு வார்த்தை கூட வரவில்லை. ஆனால், அன்னையின் கேள்விகளுக்கு அவள் கூறும் பதில்களை மனதிற்குள் பதிய வைத்துக் கொண்டு இருந்தான் ஸ்வரூபன்.

“இங்கே இப்படி வந்து இருக்கிறதுக்கு, உங்க அப்பா, அம்மா, அப்பறம், கூடப் பிறந்தவங்க எதுவும் சொல்லலையா?” என்று முக்கியமான கட்டத்திற்கு வந்தார் கவிபாரதி.

காதுகளைத் தயாராக வைத்துக் கொண்டு, ருத்ராக்ஷி கூறப் போகும் பதிலுக்காக காத்திருந்தான் அவரது மகன்.

“எனக்கு அம்மா இல்லை. அப்பா, அண்ணா மட்டும் தான் இருக்காங்க ம்மா. அவங்களுக்கு நான் சொல்லிப் புரிய வச்சேன். எதுவாக இருந்தாலும், எனக்கு ஒன்னுன்னா வந்து நிற்பாங்க! பாதுகாப்பான இடத்தில் தான் இருக்கேன்னு அங்கே அவங்க நிம்மதியாக இருக்காங்க” என்று மென்னகை மாறாமல் கூறியவளைத் தாய்மையுடன் பார்த்தவர்,

“ஸ்ஸோ, கேட்டதுக்கு மன்னிச்சிரும்மா” என்று வருத்தம் தெரிவித்தார் கவிபாரதி.

“அச்சோ! பரவாயில்லை ம்மா” என்று பரந்த மனதுடன் கூறினாள் ருத்ராக்ஷி.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்வரூபனுக்கும், அவள் தனது அன்னையின் இழப்பைப் பற்றிக் கூறும் போது கண்களில் தெரிந்த வலி அவனது மனதையும் பிசைந்தது.

“ம்மா, இங்கே முடிச்சிட்டு, வீட்டுக்குப் போய் மெழுகுத்திரி செய்யனும். அப்போ நான் கிளம்பவா?” என அவரிடம் வினவினாள் ருத்ராக்ஷி.

“ஆங்! நீ சொல்லவும் தான் ஞாபகம் வருது. எனக்கும், இவனுக்கும் உன்னோட மெழுகுத்திரி ரொம்ப பிடிச்சிருக்கு. உன் மனசு போல, அதுவும் அழகாக, நறுமணமாக இருக்கு! இன்னும் நிறைய வாங்கனும்னுப் பேசிக்கிட்டோம். நீ ஊருக்குப் போகிறதுக்கு முன்னாடி, அதை வாங்கிக்கிறோம் மா. எப்போன்னு நீயே சொல்லு” என்று அவளை உளமாரப் பாராட்டினார் கவிபாரதி.

அதில், விகசித்துப் போய்,”கண்டிப்பாக ம்மா. இப்போவே போய் உங்களுக்கும் சேர்த்து செஞ்சு வைக்கிறேன். நான் வர்றேன் ம்மா” என்றவள், மரியாதை நிமித்தமாக, அவரது மகனிடமும், விடைபெறுவதற்காக அவன்புறம் திரும்பிப் பார்த்தாள் ருத்ராக்ஷி.

ஆனால், அவனது வதனத்தைக் கண்டவுடன், ஸ்வரூபனுடைய கனிவு நிறைந்த விழிகளும், மெல்லிய இதழ்ப் புன்னகையும், இவளுக்குள் சில்லென்ற உணர்வைத் தருவித்தது.

அவனது தாய்மை ஊறிய கண்களைப் பார்த்தவளுக்கு, அதிலிருந்து தன்னை மீட்டெடுக்க முடியாமல் போய் விடும் போலவே! என்ற உணர்வு மேலோங்கி விட, அதில் சிக்கிக் கொள்ளக் கூடாது என,”வர்றேன் ங்க” என்று வேகமாக மற்றும் மெலிதாக கூறி முடித்துக் கொண்டு அங்கிருந்து துரிதமாக நகர்ந்து சென்று விட்டாள் ருத்ராக்ஷி.

“நல்ல தைரியமானப், பக்குவமானப் பொண்ணு” என்று அவளைப் பற்றிச் சிலாகித்தவாறே, மகனுடன் நடந்தார் கவிபாரதி.

அதை ஆமோதிக்கும் வகையில், அன்னையிடம்,”ம்ஹ்ம். ஆமாம் மா” எனப் பதிலளித்தான்.

அவர்களைக் கடந்து சென்ற போதும் கூட, ஸ்வரூபனின் பார்வையை மறக்க இயலவில்லை அவளால். அதையே எண்ணிக் கொண்டு இருந்தால், வந்த வேலை கெட்டு விடும் எனத் தனக்கு வேண்டிய பொருட்களை வாங்கச் சென்றாள் ருத்ராக்ஷி.

கவிபாரதி,“கரண்ட் அடுப்பு எங்கே இருக்குன்னுப் பாரு” என மகனிடம் கூறி, அவர்களும் பொருட்கள் விற்கும் கடைப் பக்கம் போய் விட்டனர்.

அவர்கள் தங்களுக்கான வீட்டுச் சாமான்களை வாங்கி விட, ருத்ராக்ஷியும் தன்னுடைய தேவைக்கேற்ப சில பொருட்களை வாங்கிக் கொள்ள, இந்த முறை, அவளுக்குத் தாமதமாகி விட்டதால், ஸ்வரூபன் மற்றும் கவிபாரதி சென்ற பேருந்தில் அவளால் செல்ல முடியவில்லை. அதற்கடுத்தப் பேருந்தில் தான் பயணம் செய்து ஊரை அடைந்தாள் ருத்ராக்ஷி.
____________________

“நீங்க இவ்ளோ லேட் ஆக ரிப்போர்ட்டைக் கொண்டு வரலாமா மேம்?” என ஸ்ரீகாந்த் என்ற மாணவனின் பெற்றோரிடம் வினவிக் கொண்டு இருந்தாள் மஹாபத்ரா.

அவனது ஆசிரியை சொல்லி விட்டுப் பிறகும், ஏன் இந்த தாமதம் நேர்ந்தது? என்பதைத் தான் விசாரிக்கிறார்கள் அவளும், அவளது குழுவும்.

“சாரி மேம். எங்கே போச்சுன்னு தெரியாமல், தேடி எடுத்துட்டு வர்ற மாதிரி ஆகிடுச்சு. அதான் லேட்!” என்று அவர்களிடம் மன்னிப்புக் கேட்டனர் ஸ்ரீகாந்த்தின் தந்தையும், தாயும்.

“சரி. உங்கப் பையனோட கவுன்சிலிங் மட்டும் தான், இன்னும் முடியலை. அதை முடிச்சு, உங்களைக் கூப்பிட்டு விடுவோம். மிஸ் பண்ணாமல் வந்து அட்டெண்ட் பண்ணிட்டுப் போங்க” என்று அவர்களுக்கு அறிவுறுத்தி விட்டு, அனுப்பி வைத்தாள் மஹாபத்ரா.

அவளுக்குப் பூ வைக்கும் சடங்கிற்கு முன்னதாக, மஹாபத்ரா பார்க்கப் போவது, ஸ்ரீகாந்த்திற்குக் கருத்துரை வழங்குவது தான்! அதை மட்டும் முடித்துக் கொடுத்து விட்டால் போதும். அவள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். அதனால் தான், இதைக் கொஞ்சம் தீவிரமாகப் பார்க்கிறாள்.

- தொடரும்
 
ருத்ரா மனசிலும் ஸ்வரூபன் மேல் சலனம் வந்திடுச்சு 🥰 🥰 🤪 🤪
 
Top