Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனிதாவின் அப்பா 20 1

Advertisement

Admin

Admin
Member

பகுதி – 20

மறுநாள் கடற்கரையில் விளையாடிய சிறுவர்களின் சத்தத்தில் தான் மீனா கண் விழித்தாள் . அறையில் இருந்த வெளிச்சமே விடிந்து வெகு நேரம் ஆகிவிட்டது என்பதைத் தெளிவுபடுத்த... அடித்துப் பிடித்து எழுந்தவள் ஹரியை பார்க்க அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

அவன் கேசம் கோத எழுந்த ஆவலை அடக்கி குளியல் அறைக்குள் சென்றவள், மின்னல் வேகத்தில் தன் வேலைகளை முடித்துக் கொண்டு வெளியே வந்து ஹரியை எழுப்ப.... அவன் அசையக்கூட இல்லை.

“ஹரி, பிலீஸ் எழுந்துக்கோங்க விடிஞ்சு ரொம்ப நேரம் ஆச்சு.” அவனைப் பிடித்து மீனா உலுக்க... தலையணையில் முகத்தைப் புதைத்த அவன் இன்னும் சுகமாக உறங்கினான்.

மீனாவுக்குக் கோபமாக வந்தது. இவ்வளவு தாமதமாக எழுந்து சென்றால்... விக்ரமும் ஹரிணியும் என்ன நினைப்பார்கள்.

“இப்ப எழுந்துக்கப் போறீங்களா இல்லையா....” அவள் கத்த.... ஹரி சோம்பலாகக் கண் திறந்து பார்த்தான்.

“ஹாப்பா... இப்பவாவது எழுந்தீங்களா.... சீக்கிரம் எந்திருச்சு கிளம்புங்க கீழ போகலாம்.” என மீனா கட்டிலில் இருந்து எழுந்துகொள்ளச் செல்ல.... ஹரி அவள் கையைப் பிடித்து உட்கார வைத்தவன், எழுந்து அவள் தோளில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான்.

“ஏற்கனவே ரொம்ப நேரம் ஆச்சு. இப்ப இதெல்லாம் தேவையா ஹரி?”

“எனக்குத் தெரியும் நீ கொஞ்ச நேரம் பேசாம இரு....”

ஹரி சொன்னதும் மீனா முகம் மாற....

“இந்த மாதிரி இடத்துக்கு வர்றதே மனசை அமைதியா வச்சசுக்கத் தான். இங்க வந்தும் ஏன் டென்ஷன் ஆகுற?”

“வெளியே பாரு.... கடல் ! இங்க இருந்து பார்க்க எவ்வளவு அழகா இருக்கு. இதெல்லாம் ரசிக்கத்தான் இங்க வந்தோம்.”

ஹரி சொன்ன பிறகு தான் மீனா கவனித்தாள். பொங்கி வரும் கடல் அலையை அங்கிருந்து பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது. அந்தப் பெரிய ஜன்னலின் திரைசீலையை வெளிச்சத்திற்காக அவள் தான் விலக்கி இருந்தால்.... அப்போது கவனிக்கவில்லை.

“நான் இஞ்சினீயரிங் சென்னையில தான் படிச்சேன். அப்ப அடிக்கடி பீச் போவேன்.”

“கடல் எப்பவுமே அதிசயம் தான். அதைப் பார்த்திட்டு இருந்தா நேரம் போறதே தெரியாது.”

“ஆர்ப்பரிக்கும் கடலை பார்க்கும் போதே பிரம்மிப்பா இருக்கும். கடலுக்குள்ள எவ்வளவு விஷயம் இருக்கு. ஆனா.... மேலோட்டமா பார்த்தா நமக்கு அலை மட்டும் தான் தெரியும்.”

“எத்தனை அதிசயங்கள்.... எண்ணற்ற ஜீவராசிகலை தனக்குள்ள வச்சிருந்தாலும் வெளியே இருந்து பார்த்தா ஒண்ணுமே தெரியாது. அதோட இதை நம்பி எத்தனை பேரோட வாழ்வாதாரம் இருக்கு.”

“எனக்குக் கடலில் ரொம்பத் தூரம் பயணம் செய்யணும்னு ஆசை.”

ஹரி சொன்னதை இதுவரை ஸ்வாரஸ்யமாகக் கேட்ட மீனாவுக்கு, அவன் கடைசியாகச் சொன்னதைக் கேட்டதும் பயம் வந்து விட்டது.

“நான் உங்களோட வரமாட்டேன்.” என்றாள் வேகமாக.

அவள் சொன்ன விதம், அவளை வம்பிழுத்து பார்க்கும் ஆவலை ஹரிக்கு தூண்டி விட....

“உன்னை விட்டுட்டு நான் எப்படிப் போவேன்? நீயும் தான் வரணும்.” என்றான் சரசமாக....

கொஞ்ச தூரம் படகில் செல்லவே பயப்படும் அவளுக்குக் கப்பலில் செல்வதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. மீனா மிரண்டு போய் அவனைப் பார்க்க....

“உனக்குப் பிடிக்கலைன்னா விட்டுடலாம். அதுக்காக இப்படிப் பார்க்காத.” ஹரி சொன்னதும் மீனா அமைதியானாள்.

அவள் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு எழுந்த ஹரி நிதானமாகத் தன் வேலைகளைப் பார்க்க... அவனை ஒன்றும் சொல்ல முடியாமல் மீனா தவித்துக்கொண்டு இருந்தாள். அவளுக்கு விக்ரமும் ஹரிணியும் என்ன நினைப்பார்கள் என்ற கவலை.

ஹரி குளித்துவிட்டு வந்ததும், மீனா அவர்கள் இருவரும் இரவு உடுத்தி இருந்த உடைகளை அலசி காயப்போட.... ஹரி அதற்குள் கிளம்பி இருந்தான்.

இருவரும் கீழே சென்று பார்த்த போது… அங்கே அறை பூட்டி இருந்தது. கடைகரையில் தேடி பார்க்க அங்கேயும் அவர்கள் இல்லை. ஹரி தனது செல்லில் விக்ரமை அழைத்தான்.

“என்ன மாப்பிள்ளை பொழுது இப்ப தான் விடுஞ்சுதா?….இதுல என்கிட்டே காலையில சன் ரைஸ் பார்க்க வரேன்னு வேற சொல்லி இருந்தீங்க.” விக்ரம் கிண்டலாகக் கேட்க…

“நேத்துக் கார் ஒட்டினது அலுப்பு. அது தான் தூங்கிட்டேன்.” ஹரி சமாளிக்க….

“நம்பிட்டேன் மாப்பிள்ளை….” விக்ரம் சொன்னதும், ஹரி சிரித்து விட்டான்.

“இப்ப எங்க இருக்கீங்க?” ஹரி பேச்சை மாற்ற….

“பசங்க காலையிலேயே எழுந்து ஒரே தொந்தரவு…. அதுதான் மஹாபலிபுரம் வந்துட்டோம்.”

“ஓ... அப்படியா... காலையில சாப்பிட இங்க தான வருவீங்க.”

“இல்லை.... அங்க மெனு கேட்டேன் ரொம்பச் சுமார். அதனால வெளியேவே சாப்பிடலாம்னு நினைச்சேன். நீங்க எப்படி? இங்க வரீங்களா... இல்லை அங்கவே சாப்பிடுறீங்களா....”

“நீங்க வர ரொம்ப நேரம் ஆகுமா...”

“இல்லை.... எல்லா இடமும் பார்த்தாச்சு.... இனி சாப்பிட போகவேண்டியது தான்.”

“சரி அப்ப நாங்க இங்கவே இருக்கோம். அனிகிட்ட போன் குடுங்க.” ஹரி சொன்னதும் போன் கைமாறியது.

“அப்பா... நாங்க இங்க நிறைய இடம் பார்த்தோம். ரொம்பச் சூப்பரா இருந்தது. நீங்களும் வரீங்களா பா..” அனி ஆவலாகக் கேட்க....

“நீதான் அப்பாவை எழுப்பாம விட்டுட்டு போய்ட்ட இல்ல...”

ஹரி பொய்யாகக் கோபிக்க.... மகள் முகம் உடனே வாடிவிட்டது.

“நீங்க அப்புறம் வருவீங்கன்னு அத்தை சொன்னாங்க பா.... நீங்க வரலையா....”

“இப்ப நீங்க எல்லா இடமும் பார்த்துடீங்க இல்லையா.... அடுத்தத் தடவை வரும்போது... நாம திரும்பப் போய் எல்லாம் பாப்போம். நீ அத்தை மாமாவோட வந்திடு சரியா....” ஹரி சொல்ல அனி சரியென்றாள்.

அங்கே இருந்த உணவகத்திற்குச் செல்லும் வழியில் ஹரி விக்ரமுடன் பேசியதை மீனாவிடம் சொன்னான். இருவரும் காலை உணவை முடித்துவிட்டுக் கடற்கரையில் சென்று சிறிது நேரம் நின்றனர். வெயில் அதிகமாக இருந்ததால்.... அங்கே இருந்த பார்க்கில் சென்று உட்கார்ந்தனர்.

ஹரி மீனாவையே பார்க்க... அவளுக்கு ஒருமாதிரி இருந்தது.

“என்ன? ஏன் அப்படிப் பார்கறீங்க?” கேட்கும் போதே அவளுக்கு முகம் சிவந்துவிட்டது.

“என் மேல கோபமா... நேத்து உன் சம்மதத்தைக் கேட்கவே இல்லை....” அவன் கேட்டதும், மீனா இல்லை என்று தலையசைக்க....

“நான் கொஞ்ச நாள் போகட்டும்னு தான் நினைச்சேன் மீனா. ஆனா... இந்த ஹரிணி பண்ண வேலை.... என்னால கண்ட்ரோல் பண்ண முடியலை.....”

ஹரி சொல்ல அவனை முறைத்த மீனா “இப்ப பேசுற விஷயமா இது....” என்றதும், “அப்ப இன்னைக்கு நைட் ஒகே வா...” ஹரி கண்சிமிட்டி கேட்க.... மீனா அவனை முறைத்து பார்க்க முயன்று முடியாமல் சிரித்து விட்டாள்.

அப்போது “அப்பா....” எனக் கத்திக்கொண்டே அனி ஓடி வர... ஹரி வேகமாக எழுந்து மகளை நோக்கி சென்றான். தன் மீது தாவியவளை தூக்கி இதமாக அணைத்தவன், அவள் கன்னத்தில் முத்தமிட்டு “அப்பாவை விட்டுட்டு எங்க டா போனீங்க?” எனக் கேட்டதும், அனி அவனிடம் எங்கே போனார்கள்? என்ன பார்த்தார்கள்? என ஒரு பெரிய கதையே சொல்ல ஆரம்பிக்க.... தந்தையும் மகளும் தனி உலகில் இருந்தனர்.

“அப்பாவும் பொண்ணும் பார்த்து வருஷ கணக்கான மாதிரி என்ன ஒரு பில்ட்அப் பார்த்தீங்களா?....” மீனா அங்கே வந்த ஹரிணியிடம் சொல்ல....

“அங்க வந்தும் ஒரே அப்பா புராணம் தான்.” என்ற ஹரிணி, ஹரியின் அருகில் சென்று அவன் தலையில் கொட்டியவள் “எதுக்கு அவகிட்ட அப்பாவை விட்டுட்டு போனேன்னு டயலாக் பேசின.... இப்பவே எங்க அப்பாகிட்ட போகணும்னு ஒரே அடம். அவளைச் சமாளிச்சு சாப்பிட வைக்கப் பெறும் பாடா போய்டுச்சு.....” என்றாள்.

“அப்படியா பண்ண?” மீனா மகளை அதட்ட.... அனி தந்தையின் பின் ஒளிந்தாள்.

அவளைத் தன் பக்கம் கொண்டு வந்த ஹரி “அத்தையும் மாமாவும் காலையிலேயே எழுந்து உன்னைச் சுத்தி பார்க்க கூடிட்டு போனாங்க இல்லையா.... அப்ப நீ எவ்வளவு சமத்தா இருக்கணும். அவங்களுக்குத் தொந்தரவு தரளாமா... சாரி சொல்லு...” என்றதும், அனி இருவரிடமும் உடனே சாரி சொன்னாள்.

“சரி இப்ப தேங்க்ஸ் சொல்லு... உன்னை எவ்வளவு நல்ல இடத்துக்குக் கூடிட்டுப் போய்க் காட்டி இருக்காங்க. அப்பாவுக்குத் தான் வரமுடியலை....” ஹரி சொல்ல....

“ஆமாம் உங்க அப்பாவுக்கு ரொம்ப வேலை இருந்திருக்கும்.” ஹரிணி கிண்டலாகச் சொல்ல.... ஹரிக்கு சிரிப்பாக வந்தது. சிரிப்பை அடக்கியபடி அனியிடம் “நீ சொல்லுடா...” என்றதும், அவள் இருவரிடமும் தேங்க்ஸ் என்றாள். விக்ரமும் ஹரிணியும் அவளைப் புன்னகையுடன் பார்த்து இருந்தனர்.
 
:love: :love: :love:

ஹரி கூட வாழக்கை முழுவதும் பயணம் செய்ய போற...
அப்புறம் ஏம்மா மீனா கடல்ல பயணம் செய்ய பயம்???
ஹரி இருக்க பயம் ஏன்???
 
Last edited:
:love::love::love:

விக்ரம் மட்டுமே போதும் ஹரியை டேமேஜ் பண்ண....... இப்போ ஹரிணியும் சேர்ந்துட்டா......
ஹரியை ரொம்ப வெட்கப்படவைக்கிறீங்கடா ரெண்டு பெரும்......

மீனா ஹரி இருக்கும் போது என்னமா பதட்டம் உனக்கு???
எல்லோரும் இந்த கேலி கிண்டல் எல்லாம் கடந்து வந்தவங்க தான்.......

கடல் எப்போவும் பிரம்மிப்பு தான்...... பார்க்க பார்க்க திகட்டாது.......
மொட்டை வெயிலில் கூட தண்ணீரில் கால் நனைச்சு நின்னோம்னா கூலா இருக்கும்........
 
ஈ. ஈ. ஈ.
 
ஆமாமாம்
நீ சொல்வது சரிதான், ஹரிணி
உங்க அண்ணனுக்கு ரொம்பவே வேலைதான்
அனிதாவுக்கு சீக்கிரமா தம்பியோ தங்கையோ வரணுமில்லே
 
Last edited:
Top