Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனிதாவின் அப்பா 7 2

saroja

Well-known member
Member
அனிதா மீனா கஷ்டம் எல்லாம்
தீரும் காலம் வந்தாச்சு
மாமியார் படு சுறுசுறுப்பு
 
D Deepa

Well-known member
Member
விஸ்வமும் எவ்வளவோ சொல்லி பார்த்தார். ம்ம்..ம்ம் அவள் வாயே திறக்கவில்லை... “ஹரி கூட ஒரு தடவை காணோம்னு வீடு முழுக்க தேடினா.... கதவு பின்னலையே உட்கார்ந்திருக்கான். அன்னைக்கு எவ்வளவு பயந்திட்டேன்.” சூழ்நிலையை எளிதாக்க வைஷ்ணவி கூட என்னனவோ பேசி பார்த்தார்.அப்போதும் மீனா வாய்யே திறக்கவில்லை.... சிறிது நேரத்தில் வைஷ்ணவி அங்கிருந்து விடைபெற்று செல்ல... “நீ சமைக்க வேண்டாம். நானே உனக்கும் அணிக்கும் சாப்பாடு கொண்டு வரேன்.” என ரதியும் கிளம்பினாள்.விஸ்வம் வெளி கதவின் அருகே உட்கார்ந்திருக்க... மீனா சென்று கட்டிலில் படுத்து விட்டாள். படுத்தவளுக்கு ஒவ்வொன்றாக நினைக்க நினைக்க அழுகை பொங்கி கொண்டு வந்தது.மகள் எந்த வித உணர்ச்சியும் வெளிபடுத்தாமல் இருப்பது நல்லது இல்லையே என்று நினைத்து பயந்து கொண்டிருந்த விஸ்வத்திற்கு, மீனா அந்நேரம் அழுதது உண்மையில் ஆறுதலாகவே இருந்தது. இனி சரியாகி விடுவாள் என்று நினைத்தார்.அனி இதுவரை மீனாவின் பேச்சை மீறி நடந்ததே இல்லை.... ஆறு வருடமாக பெற்று வளர்த்த தன்னை விட... இப்போது ஆறு மாதத்திற்கு முன்பு பழக்கமான ஹரியை, அவள் முக்கியமாக நினைத்து தேடி சென்றதை... இன்னும் அவளால் நம்பமுடியவில்லை....அவளுக்கு நான் என்ன குறை வைத்தேன்? என் சக்திக்கு மீறி தானே அவளை பார்த்துக்கிறேன். அப்படி இருந்தும் அவள் ஹரியை தேடுவது ஏன் என்று புரியவில்லை...இந்த ஆகாஷ் மட்டும் ஒழுங்கா இருந்திருந்தா தனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா.... இன்று மகளுக்கு எதாவது ஆகி இருந்தால்... அதை பற்றி நினைத்து பார்க்கவே முடியவில்லை.... இப்படி என்னவெல்லாமோ நினைத்து மீனா தன்னையே வருத்தி கொண்டிருந்தாள்.தேவ்வும் சிறிது நேரத்தில் வந்து விட ஹரி அவனோடு பேசிக்கொண்டு இருந்தான். அப்போது தான் வைஷ்ணவி உள்ளே நுழைந்தார். அவர் முகம் தீவிரமாக இருந்தது. அவர் ஹரியிடம் எதுவும் பேசவில்லை.... அவர் நாத்தனாருடன் பேசிக்கொண்டு இருந்தார்.அந்நேரம் அவர் கணவர் வெங்கட் அழைக்க..... அப்போதுதான் தான் இன்று ஊருக்கு செல்வதாக இருந்ததே அவருக்கு நினைவு வந்தது.“இன்னைக்கு கிளம்ப முடியலைங்க.....” வைஷ்ணவி சொல்ல....“ஏன்? அப்படி என்ன பண்ற அங்க?” வெங்கட் சுள்ளென்று கேட்க....“நாளைக்கு சொல்றேன்....”மனைவியின் பதிலில் அவருக்கு உடம்புக்கு எதுவும் சரியில்லையோ என்று சற்று தணிந்த வெங்கட் “நீ நல்லா தானே இருக்க?” என்றதும்,“நான் நல்லா இருக்கேன். ஹரியும் நல்லா இருக்கான். உங்க தங்கச்சியும் நல்லா தான் இருக்காங்க.” அடுத்து கணவர் என்ன கேட்பார் என்று தெரிந்து, வைஷ்ணவியே எல்லோரின் நலத்தை பற்றி சொன்னார்.“அப்புறம் ஏன் இன்னைக்கு வரலை?”“அது ஹரிக்கு ஒரு வரன் முடியும் போல இருக்கு.... இருந்து என்னன்னு பார்த்திட்டு வரேன்.” வைஷ்ணவி மகனை பார்த்துக்கொண்டே சொல்ல.... ஹரியின் முகம் இறுகியது.“என்னது வரனா? யாரு? என்ன? ஹரி ஒத்துகிட்டானா....” வெங்கட் பரபரப்பாக...“அது தான் நாளைக்கு சொல்றேன்னு சொன்னேன் இல்ல.... நீங்க சாப்டிட்டு படுங்க. நாளைக்கு பேசலாம்.” என்ற வைஷ்ணவி தொடர்பை துண்டித்து விட்டு உள்ளே செல்ல.... தேவ் ஹரியை பார்த்து வந்த சிரிப்பை அடக்கினான்.இரவு உணவு முடிந்ததும், வாங்க அனியை அவங்க வீட்ல விட்டுட்டு வரலாம் என வைஷ்ணவி, அவரின் நாத்தனார் மற்றும் தேவ்வை பார்த்து சொல்ல... அங்கே அவர் எதோ பேசப்போகிறார் என்று அனைவருக்குமே நன்றாக புரிந்தது.இவர்கள் சென்ற போது அங்கே ரதியும் மனோஜும் இருந்தனர். அவர்கள் மீனாவை சாப்பிட சொல்லி வற்புறுத்திக்கொண்டு இருந்தனர். மீனா அப்படியே படுத்துக்கொண்டு தான் இருந்தாள்.இவர்கள் உள்ளே நுழைந்ததும் அவர்களை ரதி வரவேற்க... அந்த சத்தத்தில் தான் எழுந்து அமர்ந்தாள். அவள் அழுதிருக்கிறாள் என்று அவள் முகத்தில் இருந்தே நன்றாக தெரிந்தது.அனி தாயை கண்டதும் அவளிடம் செல்ல.... மனம் சற்று ஆறுதல் அடைந்திருந்ததால்.... மகளை தன்னோடு அணைத்துக் கொண்டாள்.வைஷ்ணவியும் ஹரியின் அத்தை விமலாவும் சென்று மீனாவின் அருகே கட்டிலில் உட்கார... ஹரியும் தேவ்வும் ஆளுக்கு ஒரு ஓரமாக நின்றனர்.திரும்ப அனி காணாமல் போன விஷயத்தை பற்றியே பேசாமல் வேறு விஷயங்களை பேசிக்கொண்டு இருந்தனர். சிறிது நேரத்திலேயே அனி உறங்கி விட்டாள். அவள் உறங்கியதும் வைஷ்ணவி தான் பேச வந்த விஷயத்தை சொன்னார்.“எங்க ஹரிக்கு உங்க மீனாவை கல்யாணம் பண்ணி தரீங்களா....” அவர் நேரடியாக விஸ்வத்தை பார்த்து கேட்க.... விஸ்வம் அதிர்ச்சியில் திகைத்து விட்டார்.அவருக்கு சம்மதம் தான். ஆனால் மகளின் விருப்பம் தெரியாமல்.... அவர் என்ன சொல்ல முடியும். அவர் மீனாவின் முகத்தை பார்க்க.... அவள் அமைதியாக இருந்தாள்.“அங்க என்ன பார்க்குறீங்க? உங்க சம்மதத்தை சொல்லுங்க போதும். உண்மையிலேயே அனி மீது அக்கறையும் பாசமும் இருந்தா.... மீனாவோ ஹரியோ இந்த கல்யாணத்துக்கு மறுப்பு சொல்ல மாட்டாங்க.”அவர் சொல்வது உண்மை தானே.... ஹரிக்கோ மீனாவுக்கோ இப்போது தங்கள் விருப்பத்தை விட அனி தான் முக்கியம். இன்று ஹரியை தேடி தனியாக வீட்டை விட்டு சென்றவள், நாளை இது மாதிரி வேறு எதாவது செய்து வைத்தால்.... அதனால் மறுத்து எதுவம் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தனர்.விஸ்வம் இப்போதும் தயங்க “நாங்க எப்படியும் எங்க ஹரிக்கு இன்னொரு கல்யாணம் பண்றதா தான் இருந்தோம். அந்த பொண்ணு மீனாவா இருக்றதுல எனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லை....”“இந்த கல்யாணத்துக்கு அனி தான் காரணம்னாலும், மீனாவை எனக்கு பிடிச்சிருக்கு. அதனால நீங்க எதை பத்தியும் யோசிக்க வேண்டாம். எங்க குடும்பத்தை பத்தி மட்டும் நல்லா விசரிச்சுக்கோங்க.” என்றார்.விஸ்வம் தன் மகனையும் மருமகளையும் பார்க்க... அவர்கள் முகத்தில் சம்மதம் வெளிப்படையாக தெரிந்தது.“நாங்க எங்க போய் விசாரிக்க போறோம்? எங்களுக்கு விமலா அம்மா சொன்னா சரி தான்.” என்று விஸ்வம் ஹரியின் அத்தையை பார்க்க....“எனக்கு ஒரு பொண்ணு இருந்திருந்தா.... நான் ஹரிக்கு தான் கல்யாணம் செஞ்சிருப்பேன். நீங்க நம்பிக்கையா கொடுக்கலாம்.” என்றார் அவர்.“சரி அப்படின்னா... சுபஸ்ய சீக்கிரம்னு சொல்வாங்க. வர்ற ஞாயிற்றுக்கிழமையே கல்யாணத்தை வச்சுக்கலாம்.” என்ற வைஷ்ணவி தேவ்வவை பார்த்து,“தேவ், கல்யாணம் உன்னோட பொறுப்பு.... நீ எந்த கோவில் சொல்றியோ அங்க...” என்றதும், சொல்லவா வேண்டும் தேவ் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.“ரொம்ப சந்தோசம் மா.... நான் நாளைக்கே உங்களுக்கு எல்லா விவரமும் சொல்றேன் மா....” என்றான்.“சரி நாங்க அப்ப கிளம்புறோம். நான் நாளைக்கு வரேன். அப்ப மத்த விஷயங்களை பேசிக்கலாம்.” என்றவர், மீனாவின் அருகில் வந்து...“எப்ப நாம்மால ஒரு விஷயத்தை மாத்த முடியாதுன்னு தெரிஞ்சிடுச்சோ... அப்ப அதை நினைச்சு வருத்தபடுறதால ஒரு ப்ரோஜனமும் இல்லை... அதுல நமக்கு இருக்கிற சாதகத்தை மட்டும் தான் நினைக்கணும்.”“இந்த திருமணத்தால உங்க மூன்னு பேருக்குமே நல்லது தான் நடக்கும், நம்பு.” என்றவர், வெளியே வர.... அப்போது அவரின் செல் அழைக்க... எடுத்து பார்த்தவரின் முகத்தில் விரிந்த புன்னகை.“ஹரிணி, உங்க அப்பா அதுக்குள்ள உன்கிட்ட சொல்லிட்டாரா.... நீ ரொம்ப ஆவலா எதிர்பார்த்தது தான். உங்க அண்ணனுக்கு கல்யாணம்.”“....”“உங்க அண்ணன் ஒத்துக்காமையா.... அவன் சொன்ன பொண்ணு தானே....” வைஷ்ணவி சொன்னதும், ஹரி அவரை முறைத்து பார்க்க.... தேவ்விற்கு சிரிப்பாக வந்தது.“வர்ற ஞாயிற்றுக்கிழமையே கல்யாணம். நீ உங்க அப்பாகிட்ட ஒன்னும் சொல்ல வேண்டாம். நானே பார்த்து சொல்லிகிறேன்.”“.....”“உனக்கு மத்த விவரம் எல்லாம் நாளைக்கு சொல்றேன். நான் இப்ப வெளியில இருக்கேன். பாய்.” என்றவர், மகள் அந்த பக்கம் பேசிக்கொண்டு இருக்கும் போதே... தொடர்பை துண்டித்தார்.அவர்கள் சென்றதும் “நீங்க இங்க தனியா இருக்க வேண்டாம். அங்க வந்து இருங்க...” என்ற ரதி மனோஜை பார்க்க... அவன் சென்று அனியை தூக்கிகொள்ள.... கையில் பூட்டை எடுத்த ரதி மீனாவை தன்னுடன் அழைத்து சென்றாள்.தனியாக இருந்தால் அவள் கண்டதையும் நினைத்து குழப்பிக்கொள்வாள் என்று தெரியும். திருமணம் முடியும் வரை அவளை தனியே விடக்கூடாது என்று நினைத்தாள்.தங்கள் வீட்டிற்கு வந்த ஹரி “ஏன் மா இவ்வளவு அவசரப்படுறீங்க?” என்றான் ஆற்றமையாக....“அனி காமிச்சிட்டா உன் மேல எவ்வளவு பாசம் இருக்குன்னு.... இப்ப பதிலுக்கு நீ காமி....”“அதோட இன்னைக்கு அந்த தெருவே நின்னு நம்மை வேடிக்கை பார்த்தது. ஆளாளுக்கு ஒன்னு பேசுறாங்க. இதெல்லாம் உன்னால தான். அப்ப நீ தான் அதை சரி செய்யணும். எனக்கு இந்த வழி தான் தெரியுது. உனக்கு வேற எதுவும் தோணுதா....” என்றதற்கு ஹரியிடம் பதில் இல்லை....ஹரியை ஒரு அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்துவிட்டு, வைஷ்ணவி அவர் அறைக்கு சென்று விட.... ஹரி அங்கே ஹாலிலேயே அமர்ந்து விட்டான்.அவன் அறைக்குள் சென்று பிருந்தாவின் புகைபடத்தை பார்க்க கூட இப்போது அவனுக்கு தைரியம் இல்லை... தான் அவளுக்கு துரோகம் செய்வது போலவே நினைத்தான். இவனை என்ன செய்வது?
Nice epi
 
Top